ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது – சந்திரிக்கா: நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தமது தந்தையான முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க தனிச் சிங்கள சட்டத்தை நிறைவேற்றினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 1956ம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை தமது தந்தை நிறைவேற்றியமை ஓர் இனவாத செயற்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். 450 ஆண்டுகளாக வெளிநாட்டு ஆட்சியாளர்களின் பிடியிலிருந்த இலங்கையின் சுய அடையாளத்தை மீள நிறுவும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரம் பெற்றுக்கொண்டதன் 7…
-
- 26 replies
- 2k views
-
-
புலிகளின் வானோடிகள் குறித்து ஆராய்ந்து வரும் சிறிலங்கா புலனாய்வுத்துறை [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 07:37 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானோடிகளின் திறன் குறித்து அவற்றை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்த விரைந்த சிறிலங்கா வான் படையினரின் மூலம் தெரிந்து கொண்டுள்ள அரச புலனாய்வு வட்டாரங்கள், இவ்வளவுக்கு புலிகள் எவ்வாறு வானூர்தி ஓட்ட பயிற்சி பெற்றார்கள் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இது தொடர்பில் அறிய வருவதாவது: வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வானூர்திகளை கலைத்து சென்று தாக்குதவதற்கு கொழும்பிலிருந்து சென்ற சிறிலங்கா வான் படையின் எஃப்-7 வானூர்திகள் அந்த கும…
-
- 2 replies
- 2k views
-
-
ரவிராஜ் கொலையை கண்டித்த யுத்த விரோதிகள் கோதாபய மீதான கொலைமுயற்சியை ஏன் கண்டிக்கவில்லை அளுத்கமகே கேள்வி ரவிராஜின் படுகொலையை `வெட்கம் வெட்கமென' கண்டித்த யுத்த விரோதிகள், கோதாபய ராஜபக்ஷ மீதான கொலை முயற்சியை ஏன் கண்டிக்கவில்லையென பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு மற்றும் உட்துறை அமைச்சு மீதான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது; "தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லையென யாராவது கூறுவார்களானால் அதனை நான் ஏற்க மாட்டேன். தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு ஆனால், அதற்கு யுத்தம் தான் தீர்வில்லை. எனவே, புலிகள் சமாதான…
-
- 9 replies
- 2k views
-
-
புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க இரு முனைகளில் முயற்சி [04 - May - 2008] -விதுரன் - அரசும் படைத்தரப்பும் நினைத்ததற்கும் மாறாகவே வடக்கே களநிலையுள்ளது. விடுதலைப்புலிகள் பலமாகவேயுள்ளனர். புலிகளின் திட்டமிடலும் பதில் தாக்குதல்களும் படையினரின் தாக்குதல் திட்டங்களை தவிடுபொடியாக்குகின்றன. இதனால், புலிகளுக்கெதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டிய நிலையில் படைத்தரப்புள்ளது. வடக்கே புலிகளுக்கெதிரான படைநடவடிக்கை வெற்றிகரமாக நடப்பது போன்றும் அங்கு தினமும் புலிகள் பெருமளவில் கொல்லப்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதுடன் படையினருக்கு மிகமிகக் குறைந்தளவு இழப்புக்களே ஏற்படுவது போல் தென்பகுதி மக்களை நம்பவைக்க அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. எனி…
-
- 3 replies
- 2k views
-
-
நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தெரிந்து பல காரியங்களை செய்கிறார் என்றால், யாருக்கும் தெரியாமலும் பல உதவிகளை செய்து வருகிறார். தற்போது சென்னை நடிகர் சங்கத்தில்... இலங்கை தமிழர்களுக்காக நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அமைக்கப்பட்ட மேடை அலங்காரம்... சேர், ஒலி பெருக்கி என ஒட்டுமொத்த செலவையும் ரீத்தீஷே ஏற்றுள்ளார்.இதன் மொத்த செலவு மூன்று லட்சத்திற்கும் மேல். அதேபோல சென்னை சாலிகிராமத்தில் செந்தில் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்ற திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடத்திய உண்ணாவிரதப் பந்தல் மற்றும் மேடைக்கான மொத்த செலவையும் இவரே ஏற்றுள்ளார். இதுபற்றி மீடியாக்காரர்கள் கேட்க, அனைவரின் ஒத்துழைப்போடுதான் செய்தோம் என்றதோடு வெளியேயும் இதுபற்றி மூச்சு விடவில்லையாம். நன்றி : தமிழ்யாகூ(ம…
-
- 3 replies
- 2k views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க சிறிலங்கா இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக என்று சிறலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு றொக் ஹவுசில் நேற்று சிறிலங்கா இராணுவத்தின் கவசப்படைப் பிரிவின் 56வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா இராணுவம் பதில் அளிக்கவுள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியின் கிழக்கில் நிலைகொண்டிருந்த படைப்பிரிவுகள் பற்றிய தவறான தகவல்களை ஐ.…
-
- 0 replies
- 2k views
-
-
பிரபாகரன், பொட்டம்மான் தலைமறைவு - விசாரணையை இந்திய நீதிமன்றம் தள்ளிவைப்பு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் தலைமறைவாக உள்ளதால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை இந்திய நீதிமன்றம் மே மாத்திற்கு தள்ளி வைத்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. தற்போது இவர்கள் இருவரும் தலைமறைவானதை அடுத்து, இவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது…
-
- 8 replies
- 2k views
-
-
பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன் பாராளுமன்ற கலைப்பு மீதான உச்சநீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம் பாராளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிப்பது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 8 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. கடந்த பாராளுமன்றத்துக்கும், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவுக்குமிடையில் இடையில் எழுந்துள்ள அரசியலமைப்பு சட்ட இழுபறி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கையின் அரசியலில் பாரிய விளைவுகளைத் தோற்றலாம் என அவதானிகள் கருதுகின்றனர் இவ் வழக்கில் சட்டமா அதிபரை மேலதிக வழக்குரைஞர் நாயகம் இண்டிகா டெமுனி டிசில்வாவும், …
-
- 17 replies
- 2k views
-
-
வணக்கம், மிகப்பெரிய மனிதப்பேரவலம் சிறீ லங்கா பயங்கரவாத அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அகால நேரத்தில் தமிழ் ஜனநாயகம் பேசுகின்ற விளக்குமாறுகள் யாழ் குடாநாட்டில் தமது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தேவனந்தா அடிகளார் தமிழ் மக்கள்பால் தான் பேரன்பு கொண்டுள்ளதை நீரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவாமிகள் பொதுமக்களுடன் சாதாரண பேரூந்தில் ஒன்றாக பயணம் செய்ததாகவும் இதைக்கண்ணுற்ற பொதுமக்கள் (?) ஆனந்தக்கண்ணீர் வடித்ததாகவும் கூறப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பேரூந்தை ஓட்டிய சாரதி இரு கண்களிலும் கண்ணீர் ஆறாக ஓட தேவாந்தா சுவாமிகளை கட்டியணைத்து தனது அன்பை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது. வாழ்…
-
- 11 replies
- 2k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற் றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரிக்க அமெ ரிக்க சட்டத்துறை தீர்மானித்துள்ளது. தனிப்பட்ட விஜயமொன்றின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ச தற்போது அமெரிக்காவில் தங்கி யிருக்கிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர் அந்நாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத் தியே அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அதேநேரம் இலங்கையின் போர்க்குற் றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக நிபுணர் குழு அறிக் கையின் விடயங்கள் தொடர்பில் அவரிடம் விசாரணையயான்றை மேற்கொள்ள அமெ ரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக் களம்…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு டெல்லி: இந்தியாவுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடருவது என்பது இந்திய குடிமக்களின் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் பிரிவினைவாத குழுக்…
-
- 15 replies
- 2k views
-
-
பெரும் தாக்குதலுக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்: ரொய்ட்டர்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களில் கடுமையான பயிற்சிகள் நடந்து வருவதாகவும், இத்தாக்குதல் உத்திகள் விரைவில் சிறிலங்காப் படையினருக்கு எதிரான உண்மையான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என்று அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போராளி தெரிவித்ததாக அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சைமன் ஹார்ட்னர் எழுதிய ஆய்வுப்பத்தியின் விபரம்: முதலில் பெரும் வெளிச்சம் தோன்றியது அதன் பின்னர் இடிமுழக்கம் போன்ற ஒசை எழுந்தது. விடுதலைப் புலிகளின் போராளியான எஸ்.கடலரசன் தனது எறிகணை- உந்துகணை செலுத்தியை இறுகப் பற்றியிருந்தார் விடுதலைப் புலி போராளி கடலரச…
-
- 1 reply
- 2k views
-
-
மூதூர் மக்களின் நையப்புடைப்பிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார் விமல்வீரவன்ச இன்று காலை 11 மணியளவில் மூதூர் அல்ஹிலால் ஆண்கள் பாடசாலையில் ஜனாதிபதி செயலகத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் ஏற்பாடாகியிருந்தது. மாவிலாறு அணை மீட்புப் போரில் மூதூரில் பலியான 56 பேருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் முகமாக ஜனாதிபதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ச தலைமையில் அமைச்சர் பௌசி, மேல்மாகாண ஆளுநர் அலரி மௌலானா, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிறேம்லால், மற்றும் அமீர் அலி, கூட்டுறவு அமைச்சர் மஜீத் ஏ மஜீத் மற்றும் விமல் வீரவன்ச, வடகிழக்கு மாகாண ஆளுனர் றியரத்ன றொஹான் விக்கிரம மற்றும் திருமலை அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா ஆகியோர் சென்றிருந்தனர் அங்கு உரையாற்றிய விமல் …
-
- 2 replies
- 2k views
-
-
அன்ரன் பாலசிங்கத்தின் முன்னாள் பெயர் எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ் இந்த நாட்டில் பயங்கரவாதத்துடன் மிகவும் நெருங்கிய பிரபலமான பெயர் தான் அன்ரன் பாலசிங்கம் என்பது. அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்புக்குமிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் இயக்கத்தின் அரசியல் நியாயவாதி என்ற பெயரில் அறிமுகமான அன்ரன் பாலசிங்கம் தற்போது சுமார் 43 வருடங்களுக்கு முன் ஸ்ரீ லங்காவிலிருந்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்பாளராக சேர்ந்து பணி புரிந்தவர். அப்பொழுது இவருடைய பெயர் எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்பதாகும். பிற்காலத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இவர் இங்கிலாந்தில் குடியேறிய பின்னரே எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்ற தனது சொந்தப் பெயரை அன்ரன் பாலசிங்கம் என மாற்றி…
-
- 2 replies
- 2k views
-
-
தென் பகுதித் தமிழர்கள் நிம்மதி இல்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். கடந்த சில நாட்களாக நிலவும் அசாத்திய சூழல் அவர்களுடைய அமைதியைக் கெடுக்கின்றது. இராணுவ வாகனங்கள் தெருக்களில் இரவு பகலாகச் சுற்றுகின்றன. இப்படித் தான் 1983 இனக் கலவரம் தொடங்கியது. முதலில் இராணுவ வாகனங்கள் ஒடித்திரியும். அடுத்ததாகப் புத்த பிக்குகள் விகாரைகளில் அமர்ந்தவாறு மக்களுக்கு தர்ம உபதேம் செய்வார்கள். புத்த மதத்தினர் அல்லாதோரைப் படுகொலை செய்வது பாபச் செயல் அல்லவாம். இது மகாவம்ச இதிகாசத்தில் வழங்கப்பட்ட உத்தரவாதம் என்று பிக்குகள் உபதேசிக்கிறார்கள்.இரவில் தமிழர்கள் வாழும் வீட்டுச் சுவர்களில் இரகசிய அடையாளங்களைச் சிங்களக் காடையர்கள் வண்ணக் கட்டிகளால் போடுகிறார்கள். தமிழர்களின் இருப்பிடங்களையும் எண்ணிக்கைகளையும்…
-
- 20 replies
- 2k views
-
-
இறுதி யுத்த நாட்களில் 40,000 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டிருப்பதாக ஐநாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் விஸ் ஒத்துக் கொண்டிருக்கிறார். பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படவில்லை என்று மறுத்து வரும் சிறிலங்கா அரச வட்டாரங்களில் இந்தக் கூற்று பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். 14 ஆண்டு காலம் ஐநாவில் பணியாற்றிய கோர்டன் தற்போது பதவியை இராஜினமாச் செய்து விட்டு சொந்த இடமான அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பியிருக்கிறார். தான் இந்தத் தகவல்களைத் தமிழர்களிடமிருந்தோ விடுதலைப் புலிகளிடமிருந்தோ திரட்டவில்லை என…
-
- 19 replies
- 2k views
-
-
புதுச்சேரியிலிருந்து யாழிற்கு விரைவில் கப்பல் சேவை புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என இந்திய மத்திய …
-
- 9 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகளை சிறை வத்திருக்கும் வெலிகந்த முகாமில் இன்று கைகலப்பும் கலவரங்களும் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறை வைக்கப்பட்ட போராளிகளுக்கு இடைலேயே இரு குழுக்களாக இந்த மோதல் இடம்பெற்றதாக சிறைச்சாலைக்கு பொறுப்பான அபையகோன் என்பவர் தெரிவித்துள்ளார். ஒரு குழுவில் இருந்த உறுப்பினர் மற்ற குழுவில் இருந்தவருக்கு கல்லால் எறிந்ததாகவும் அதனை தொடர்ந்தே இந்த கை கலப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலதிக விபரங்களை தெரிவிக்க சிறைசாலை அலுவலர் மறுத்து விட்டார்.
-
- 8 replies
- 2k views
-
-
அமெரிக்க தூதரக அதிகாரியை கைது செய்யுமாறு சிறிலங்கா நீதிமன்றம் உத்தரவு [செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2008, 07:55 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] போலி அமெரிக்க விசா வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய அமெரிக்க தூதரக விசாரணை அதிகாரிக்கு எதிராக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. கடவுச்சீட்டுடன் போலி அமெரிக்க விசா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சிங்களவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் விசா விசாரணை அதிகாரியை நீதிமன்றில் முன்…
-
- 4 replies
- 2k views
-
-
வீரகேசரி இணையம் - மன்னார், மடு பிரதேசத்தின் மீது விமானப்படையினரின் குண்டுவீச்சு விமானங்கள் நேற்றுக்காலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இன்று 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது விடுதலைப்புலிகளின் மூன்று பிரதான முகாம்கள் முற்றாக அழிக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான பிரதான களங்களாக விளங்கும் மூன்று முகாம்கள் மீதே இக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாதகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தரைப்படையினரால் இலக்கு வைக்கப்பட்ட பிரதேசத்தின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன…
-
- 2 replies
- 2k views
-
-
இயக்குனர் சீமான் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் தவறானவை என எமது தமிழக செய்தியாளர் எமக்கு தெரிவித்தார்.இன்று மாலை 7.45 வரை சீமான் வீட்டிலே உள்ளாதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilseythi.com/
-
- 5 replies
- 2k views
-
-
21 AUG, 2023 | 10:37 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார். குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு …
-
- 45 replies
- 2k views
- 1 follower
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2ஆம் திகதி இலண்டனில் அமைந்துள்ள சிறிலங்காத் தூதரகத்தில் நடத்திய கூட்டத்தில் இடம்பெற்ற விவகாரங்கள் குறித்த செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந் நிலையில், பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் நிஹால் ஜெயசிங்க கம்போடியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வேளையில், சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ் விவகாரம் தொடர்பிலான விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ் விசாரணைகளை பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்ற படை உயரதிகாரி ஒருவர் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிய வருக…
-
- 5 replies
- 2k views
-
-
இலங்கை ஜனாதிபதி இன்று (16.01.2009) கண்டியில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவின் போது தமிழில் ஆற்றிய உரையின் சாரம்சம் கீழே தரப்படுகின்றது. இந்த விழாவின் போது பெருந்தொகையான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர் என இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தமிழ் மக்கள் சார்ந்த முதலாவது நிகழ்வு இதுவென்பதுடன் கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண தமிழ் மக்கள் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவின் போது மகிந்த சுமார் ஐந்து நிமிடங்கள் வரையில் தமிழில் சரளமாக உரையாற்றினார். அந்த உரை வருமாறு: கெளரவ மதகுருமார்களே அன்பர்களே பிள்ளைகளே. உங்கள் அனைவருக்கும் இனிய பொங்க…
-
- 3 replies
- 2k views
-
-
இந்தியா எங்களுக்கு நல்ல தீர்வைப்பெற்றுத்தரும் என்பது பகல்கனவே? மாறாக சிங்களம் எதை விரும்புகிறதோ அதைத்தவிர இவர்களால் ஒன்றும் செய்துவிடமுடியாது. காரணம் இலங்கையை தங்கள் செல்வாக்கில் வைத்திருக்கும் போட்டி இப்போது அமெரிக்கா சீனா பாகிஸ்தான் இந்தியா மற்றும் பல நாடுகளிடையே போட்டி நிலவுகிறது. இதனால் சிங்களவன் யார் பக்கம் செல்வான் என்று எதிர்பார்த்தால் சிங்களவன் எதை விரும்புகிறானோ அதை ஏற்றுக்கொண்டு ஆதரவுதரும் நாட்டுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அமையும். இந்தியாவின் நிலைப்பாடு என்றைக்கோ தெரிந்த விசயம் அவர்கள் இந்தியாவின் அங்கமான கச்சதீவைக்கூட தாரைவார்த்தவர்களாச்சே இவர்களுகு தமிழர்களின் அபிலாசைகள் ஒருபொருட்டாக மதிக்கமாட்டார்கள் மாறாக கட்டாயமாக ஒரு தீர்வை திணிப்பார்கள். தமிழ…
-
- 7 replies
- 2k views
-