ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு திருகோணமலை - சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் நேற்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது. காதுகளை மூடி பரீட்சை எழுதியமை பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல. இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவு படு…
-
-
- 9 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன ஆயுதங்கள்- அதிர்ச்சியில் சிறிலங்கா படை: "லக்பிம" வார ஏடு [ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007, 11:41 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சிறிலங்காப் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது என்று தென்னிலங்கை வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. "லக்பிம"வின் ஆங்கிலப் பதிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது: அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மிகப்பெரும் கேள்விகளை படை அதிகாரிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் மிகவும் நவீன ஆயுதங்…
-
- 9 replies
- 2.5k views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 28ம் திகதி இடம்பெறவுள்ளதாக அதன் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தம்புள்ளை பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தம்புள்ளை பிரச்சினையை தீர்த்து வைக்க அரசாங்கம் முன்வராத நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது தொடர்பில் இக்கூட்டத்தில் பெரும்பாலும் கேள்வி எழுப்பப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்புள்ளை பிரச்சினையை வைத்துக் கொண்டு சில அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுத்து வருவதாகவும் தங்களது அரசியல் இருப்புக்கு அதனை பயன்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நகரிலுள்ள ஒரு பள்ளிவாசலும் …
-
- 9 replies
- 904 views
-
-
இரு பிள்ளைகளும் எட்டிப் பார்க்கிறார்கள்… “நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…” மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது. இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டும் 2012ஆம் ஆண்டளவில் கிளிநொச்சியில் மீள்குடியேறியபோது இந்தக் கடிதத் துண்டு கிடைக்கப் பெற்றுள்ளது. “யுனிசெப்ல பொடியல் வந்திருக்கினம், அவங்கதான் இந்தத் துண்டு குடுத்திட்டு போயிருக்கினம். திருகோணமல ரெண்டாம் கட்டையிலதான் அவங்க இந்தத் துண்ட கண்டெடுத்திருக்கினம். அப்ப நாங்க இருந்தது வவுனியா முகாமுல.” லெட்டர் ஒன்டும் இல்ல, சின்ன துண்டுல, பென்சிலால எழுதியிருந்தவர். அது அவர்ட க…
-
- 9 replies
- 1k views
-
-
நிலம் உள்ளிறங்கி 60 அடி பள்ளம் திடீரென தோற்றம் திடீரென நிலம் உள்ளிறங்கி 60 அடிக்கும் மேலான பள்ளம் தோன்றியது. பெரிய மரங்கள் அதில் புதையுண்டன. மாத்தளை துங்கொலவத்தையிலுள்ள தொரகும்புர பகுதியிலேயே இந்த நில வெடிப்பு இடம் பெற்றுள்ளது. சுமார் 25 அடி விட்டமும் 60 அடி க்கும் மேலான ஆழமும் உடைய குழி அங்கு தோன்றியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த புவிச்சரிதவியல் திணைக்களத்தினர், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியிலேயே வெடிப்பு இடம்பெற்றதால் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. பலா, கித்துள் போன்ற உயரமான மரங்கள் புதையுண்டுள்ளன. 2005 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும், நிலத்தடியில் உள்ள சுண்ணக்கற்களின் கசிவே முன்னர் நடந்த வெடிப…
-
- 9 replies
- 1.1k views
-
-
தேர்தலில் தனித்து போட்டி; முஸ்லிம் காங்கிரசுக்கு தார்மீக ஆதரவு: தமிழர் கூட்டமைப்பு முடிவு [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2010, 23:55 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையையும் தனித்துவத்தையும் வெளிக்காட்டும் வகையில் தனித்துப் போட்டியிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தற்போது கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 812 views
-
-
விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழிகாட்டலில் இலங்கை தமிழரசு கட்சியின் திட்டமிடலில் இடம்பெறும் நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும் சிறப்பு பேருரை நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தலைமையில் இன்று மாலை ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்…
-
- 9 replies
- 836 views
-
-
மக்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவு வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடன் அதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினத்திற்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாளைய தினம் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நி…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
தன்னாட்சி, தட்சார்பு, தன்னிறைவு என்ற கோட்பாடுகளுக்கு ஏற்பவே தான் செயற்பட்டு வருவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் மயமாக்கல் தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரர் தனக்கு கூறியவற்றை அவர் இவ்வாறு விபரித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள், இஸ்லாத்திற்கு ம…
-
- 9 replies
- 2.1k views
- 1 follower
-
-
கல்முனை தமிழ் மக்களை சொந்த மக்கள் போன்று செயற்பட்டுவந்த மர்ஹூம் மன்சூருக்கு கெளரவம் செய்ய விரும்பினால் தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சேனராஜா சமரநாயக்க, ஏ.ஆர்.மன்சூர் மற்றும் வீ.கே. இந்திக்க ஆகியோர் மீதான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மர்ஹூம் மன்சூர் கல்முனையில் தமிழ் பிரதேசங்களும் தங்கள் பிரதேசம் என நினைத்து அவிருத்திசெய்து வந்தார். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கல்முனையில் தமிழ், பிரதேசம் என்றும் முஸ்லிம…
-
- 9 replies
- 861 views
-
-
நேற்று 25 ஆம் திகதி யூலை மாதம் 4 மணிக்கு இலண்டன் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் Trafalgar square எனும் இடத்தில் 50 வரையிலான இளையோர்கள் அகவணக்கத்துடன் தங்கள் 25 மணித்தியால உண்ணாவிரதபு போராட்டத்தை மகளிர் அமைப்புடன் இணைந்து ஆரம்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து சில இளையோர் மற்றும் மகளிர் அந்த வழியால் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கறுப்பு யூலை பற்றிய துண்டுபிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் போராட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள கூடாரத்தைச் சுற்றி கோசப் பதாதைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து தமிழ் இளையோர்களும் கறுப்பு யூலை என முன் பக்கத்திலும் 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் தமிழ் இன ஒழிப்பை நடாத்திக்கொண்டிருக்கின்றது என்று பின் பக்கத்திலும் ஆங்க…
-
- 9 replies
- 1.5k views
-
-
இந்தியாவுடனான வர்த்தக உடன்பாடுகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் திகதி: 26.05.2010 // தமிழீழம் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக உடன்பாடுகளை கைவிடுமாறு தென்னிலங்கை சிங்கள மக்கள் சிறீலங்கா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்தியாவுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் வர்த்தக நடவடிக்கைகளை கைவிடுமாறு நேற்று (25) செவ்வாய்க்கிழமை பல நூறு சிங்கள மக்கள் சிறீலங்காவின் தலைநகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை தனது அரச தலைவர் இல்லத்தில் சந்தித்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தான் இந்தியாவுடன் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளை கைவிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் சிறிலங…
-
- 9 replies
- 962 views
-
-
25 FEB, 2025 | 07:45 PM இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே, கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (25) வருகை தந்திருந்தார். அமைச்சர…
-
-
- 9 replies
- 487 views
- 1 follower
-
-
சாய்ந்தமருது நகரசபை 2022, மார்ச் மாதம் 20 ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியானது. 1987 ஆம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 உள்ளூராட்சி சபைகள் காணப்பட்டது. அந்த நான்கு சபைகளும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா கொண்டுவந்த பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. அதனை மீண்டும் பிரித்து சாய்ந்தமருது பகுதியை ஒரு நகர சபையாக உருவாக்கி தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் நவம்பர் எழுச்சி, டிசம்பர் புரட்சி என பல்வேறு போராட்டம் நடாத்தியதுடன், கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகரசபைக்க…
-
- 9 replies
- 944 views
-
-
Navy fires at high flying aircraft Navy had last night fired at a suspicious high flying aircraft over Mulativu. Defence sources added that LTTE is only in possession of low flying aircraft. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=38377
-
- 9 replies
- 4.6k views
-
-
இலங்கையின் அதியுயர்ந்த சேவையாகக் கருதப்படும் (SLAS) இலங்கை நிர்வாக சேவையின்(SLAS) மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தப் பட்டியலின் படி தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகள் எவரும் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையானது திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட இரு பிரிவுகளில் நடைபெறுகின்ற நிலையில் கடந்த வருடம்( 2020ஆம் ஆண்டு) தைமாதம் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. 203 திறந்த மற்றும் 53 மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிடங்ளுக்காக பரீட்சை நடைபெற்றிருந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர் பட்டியலை இலங்கை பொத…
-
- 9 replies
- 1.7k views
-
-
சீன கப்பல், இலங்கைக்கு: தீவிர கண்காணிப்பில்... இந்திய கடற்படை! ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் கப்பல் (யுவான் வாங் – 5) இம்மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் த…
-
- 9 replies
- 1k views
-
-
பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளோம்: பிரதமர் Colombo (News 1st) பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையமாக மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தற்போதுள்ள காணிகளில் பணிகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதேபோன்று, காங்கேசன்துறை அபிவிருத்தி செய்யப்பட்டு துறைமுகமாக விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அகற்றி, அந்த பகுதியில் சிறு கைத்தொழிலை விஸ்தரித்து, தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த எதிர்பார்த்…
-
- 9 replies
- 1.1k views
-
-
Sri Lanka shells kill civilians - BBC Eight civilians have been killed by mortar fire on villages in Batticaloa, eastern Sri Lanka. The Sri Lankan military blamed Tamil Tiger rebels for the attacks, saying two children were among the dead and 18 other people were wounded. The Tigers said the army fired the shells from a military camp. Despite a ceasefire in place on paper, Sri Lanka has been sliding back towards civil war, with more than 4,000 people killed in the past 15 months. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6509261.stm
-
- 9 replies
- 1.9k views
-
-
4be5578e15766291aa0a53591a4e6e4e
-
- 9 replies
- 886 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகள்… இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் கிளிநொச்சி இரணைமடுகுளத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று(05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில் ஆளுநர் றெஜினோல்ட் குரே விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்த…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டின் கூடங்குளத்திலிருந்து மின்சாரத்தை வழங்குகிறோம்: சிறிலங்காவுக்கு இந்தியா யோசனை கடும் மின்சார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்காவுக்கு மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. சிறிலங்காவின் மின்சார பிரச்சனைக்கு தீர்வாக தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுவரும் மின்விநியோக திட்டங்கள் பூர்த்தியாவதற்கு 2012 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஓராண்டினுள் சிறிலங்காவுக்குத் தேவையான முழுமையான மின்சாரத்தை வழங்க தயாராக இருப்பதாக இந்தியத் தரப்பிலிருந்து சிறிலங்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கூடங்குளம் அனல் மின்நிலையத்திலிருந்து தனுஷ்கோடி தலைமன்னார் ஊடாக இந்த மின்விநியோக மார…
-
- 9 replies
- 1.9k views
-
-
ஜெருசலத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த சந்தேகநபர், அங்கு வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்படி, சிறுமியின் வீட்டுக்கு சுத்தம் செய்யும் பணிகளுக்காக சென்ற வேளையே அவர் இந்த தீங்கை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, 46 வயதான குறித்த நபர் சுமார் மூன்று வருடங்கள் அந்த வீட்டில் பணிபுரிந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற போது, சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயிடம் சென்று சிறுமி இது குறித்து முறையிட்ட வேளை, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இவரைக் கைது செய்வதற்காக ஜெருசலம் பொலிஸார் நடவடிக்கைக…
-
- 9 replies
- 753 views
-
-
திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:33 IST) சோனியா, ராகுல் தமிழகத்துக்கு வரவேண்டாம்: உளவுத்துறை இலங்கை போரில் தப்பிய 400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நக்கீரன்
-
- 9 replies
- 1.8k views
-
-
மகிந்த ராஜபக்ஷ வடக்கு விஜயம் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில், ''அரசியல் மறுசீரமைப்பை விட அபிவிருத்திக்குத்தான் முதலிடம்'' என்ற தனது வழக்கமான செய்தியையே அங்கும் அவர் வலியுறுத்தினார். ஆனால், இந்த அரசியல் மறுசீரமைப்புத்தான் நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தரும் என்று சிலர் கருதுகின்றனர். யாழ்ப்பாணத்தில் அவரது கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ஆரவாரத்துடனான வரவேற்பை ஜனாதிபதி எதிர்கொண்டார…
-
- 9 replies
- 953 views
-