ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
கிருஷ்ணாவின் அறிக்கையை கிழித்தெறிந்து வெளிநடப்பு செய்த தமிழக எம்.பி.க்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை - இந்திய நட்புறவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று இந்திய நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்து அறிவித்தார். அவரது அறிவிப்பை அடுத்து, அறிக்கையின் பிரதிகளை கிழித்தெறிந்த தமிழக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் இன்றும் இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்த தமிழக எம்.பி.க்கள் சிலர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு, தி.மு.க. எம்.பி கன…
-
- 12 replies
- 1.7k views
-
-
இந்திய மீனவர்கள் விடுதலை! வெள்ளி, 18 பெப்ரவரி 2011 19:36 யாழ். கடல் பிரதேசத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டில் இவ்வாரம் கைது செய்யப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று மதியம் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டனர். இந்திய அரசுத் தரப்பிடம் இருந்து விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வேண்டுகோள், இலங்கை அரசின் ஆலோசனை ஆகியவற்றுக்கு அமைய விடுதலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 136 பேரையும், கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் 25 ஐயும் கடல் படையினர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர். மீனவர்கள் இன்று நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 112 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையும், 24 …
-
- 10 replies
- 1.7k views
-
-
-
தென்னிலங்கையின் யால பகுதியில் ஊடுருவியுள்ள 30 தமிழீழ விடுதலைப் புலிகளை சமாளிக்க 3,000 படையினரை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுப்பியதன் மூலம் அதன் அரசியல் தாக்கம் என்ன என்பதனை அறியக்கூடியதாக உள்ளது என்று சிறிலங்காவின் வார ஏடான "லக்பிம" தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
சுகாதார திணைக்களத்திற்குச் சொந்தமான லொறி வெடிப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளது 1/29/2008 10:57:27 AM வீரகேசரி இணையம் - வெடிப்பொருட்களை ஏற்றி சென்ற லொறியொன்றை வவுனியாவில் வைத்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர் நேற்று மாலை 5 மணியளவில் C4 ரக வெடிப்பொருட்கள் ஏற்றி சென்ற லொறியொன்றை பாதுகாப்பு படையினர் கைப்பயுள்ளனர். இன்று காலை லொறியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது மேலும் பல வெடிமருந்துகளும் மூன்று டெட்டனைற்றர்களும் மீட்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்ச்கம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட லொறி சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமானதும் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கான சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ் ல…
-
- 0 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சி இராணுவ முகாமில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியது தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் முகாமில் பணியாற்றி அவர், வெல்லவாய மொரவேவ பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாக கூறிய இராணுவ அதிகாரி சில நாட்களுக்கு பின்னர், மொரவேவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு மாணவியை அழைத்துள்ளார். பொது மக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் இருவரும் விடுதியில் இருந்த போது கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் குறித்த மாணவி 15 வயதுக்கு உட்பட்ட ஒருவர் எனவும், இராணுவ சிப்பாய் 22 வயதுடைய ஒருவர் எனவும் தெரியவந்துள…
-
- 9 replies
- 1.7k views
-
-
தரவைப் பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம் - சிவலிங்கம் விசனம் கல்முனை உப பிரதேச செயலக எல்லையாக உள்ள தரவை பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றப்பட்டமை குறித்து சிவலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கைக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிமின் ரண் மாவத்திட்டத்தின் கீழ் இவ்வீதிக்கு ஒரு கோடி 80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு காபட் இடும் வேலைத் திட்டம் புதன்கிழமை நே…
-
- 10 replies
- 1.7k views
-
-
வவுனியாவில் சிறீலங்காப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதல் ஒன்றின் போது சிறீலங்காப் படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மதியம் வவுனியா பிரதேசம் ஒன்றில் இனம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே எதிர்பாராத இம்மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இராணுவத்தினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/news/4032/54//d,view.aspx
-
- 9 replies
- 1.7k views
-
-
ஒரு கடிதம் : போர்முனை அன்புக்குரியவர்களே! முப்பது வருடங்களுக்கு முன்பு, பாலா அண்ணைக்கு அந்த அக்கறையும், சிந்தனையும் வந்தது. 'தான் தனது நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்' என்ற கேள்வியை தன்னைப் பார்த்தே கேட்கும் ஒர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் அப்போது அவரிடம் வந்தது. அவருக்கு முன்னால் பல வழிகள் இருந்தன - அதற்குள் சிறந்தது என்று அவருக்குப்பட்டதை அவர் தேர்ந்தெடுத்தார்.அந்த வழியில் அவர் - ஒரு கையில் அன்ரியையும் பிடித்துக்கொண்டு - நடந்துகொண்டே இருந்தார், எந்தச் சலசலப்பும் இல்லாமல். பாலா அண்ணை எம்மை விட்டுப் போய் இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.இப்படியெல்லாம் நடக்கும் என்று வாழும் காலத்தில் அவர் சொல்லியபடி…
-
- 1 reply
- 1.7k views
-
-
இதுதான் இன்றைய நிலை நாமெல்லாம் துடிக்க இவர்கள் குடிக்கின்றார்கள். ரசித்து ருசித்து
-
- 0 replies
- 1.7k views
-
-
Oct 24, 2010 / பகுதி: செய்தி / மீண்டும் சிங்கள கடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் நூலகம் ஏ9 சாலை திறக்கப்பட்டதில் இருந்து தென்பகுதி உல்லாசப் பயணிகள் யாழ்க் குடாநாடு வருவது அதிகரித்துள்ளது. இதனால் பல போக்குவரத்து நெரிசல், கலாச்சாரச் சீரழிகள் ஏற்படும் நிலையில் நேற்று அவர்கள் அடாவடியிலும் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலையில் யாழ். நூலகத்தை முற்றுகையிட்ட தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தாம் உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது. இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதனால் நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்ப…
-
- 10 replies
- 1.7k views
-
-
நேற்று இராணுவம் நடத்திய இறந்த உடல் முலம் குண்டு தாக்குதல் §¿üÚ Áð¼ì¸ÇôÀ¢ø ¿¼ó¾ ÌñÎ ¦ÅÊôÒ ÀüÈ¢ ´Õ Ó츢 ¾¸Åø ¿ýÀ÷¸û ÓÄõ ¸¢¨¼òÐ........ 2 þ¨Çஞர்களை சுட்ட பின் அவர்கள் உடலை ஆட்டொ ஒன்றில் பின்சீறில் இருத்திவிட்டு குண்டுகள் பொருத்திய ஆட்டோவை வேரு ஒருவர் ஒட்டிச்சென்று புலிகளின் நிலைகளுக்கு போக முன் இறங்கி ஒடி வந்து விட்டார் அதன் பின் ரிமோல்கொன்றோலால் இராணுவத்தால் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது
-
- 4 replies
- 1.7k views
-
-
சிங்களவாதம் கூட போர் தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற உண்மையை ஒளித்துக் கொண்டே போரிட வேண்டி இருக்கின்றது. எனவே இந்தியப் போக்குக்கு மட்டும் அந்த தேவை இல்லாமல் போகுமா? "புலிவேறு, மக்கள் வேறு" என்று சிங்களம் சொல்லும் போது அது காதுகுத்த விரும்புவது தமிழர்களயோ, சிங்களவர்களயோ அல்ல வெளி உலகத்தை மட்டுமே! "புலிகள்வேறு, மக்கள் வேறு" என்று ஜெயாவோ, பார்ப்பானியமோ சொல்லும் போது அவை காதுகுத்த முற்படுவது தமிழ்நாட்டு மக்களை மட்டுமே, மற்றவர்கள் உணர்வு அவர்கள் அரசியலுக்கு ஒரு மண்ணும் போடாது. தினமலர் என்ற பார்ப்பானிய நாளேடு ஈழத்தின் அழிவுக்கு தன்பங்குக்கு கனகச்சிதமாய் எண்ணை ஊற்றும் பணியில் ஒன்று தான் இதுவும். புதினத்தில் இருந்து...... இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செ…
-
- 1 reply
- 1.7k views
-
-
1987 ஆம் ஆண்டு இலங்கையில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவுத்தூபியை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலையீட்டில் பெலவத்தையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுத் தூபியை சார்க் மாநாடு நிறைவடைந்த பின்னர் இந்திய பிரதமரை அழைத்து திறந்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. திறப்பதற்கு முன்னர் இந்திய பிரதமருக்கான மரியாதை அணிவகுப்பை வழங்கும் பயிற்சிகளில் நேற்று படையினர் ஈடுபட்டிருந்தனர். எவ்வாறாயினும் இந்த நினைவுத்தூபியின் நிர்மாணப்பணிகளை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய அதிகாரிகள் எம்.கே. நாராயணன், உள்ளிட்டோர் பார்வையிட்டிருந்தனர். இலங்கையில் இந்திய தலையீடுகள்…
-
- 0 replies
- 1.7k views
-
-
விமானப்படை வீரர் பலாலியில் தற்கொலை [27 - February - 2008] பலாலி விமானப்படை முகாமைச் சேர்ந்த டில்சான் பிரதீப் குணசேகர என்ற (வயது 26) விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தையடுத்து மல்லாகம் நீதிவான் திருமதி சரோஜினி இளங்கோவனின் உத்தரவின்படி இவரது சடலம் விமான மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது. கொழும்பு நகர மரண விசாரணை அதிகாரி எட்வேர் அகங்கம செவ்வாய்க்கிழமை மரண விசாரணையை நடத்தினார். உயர் அதிகாரி ஒருவரின் பெயருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரியின் பெயரை இவர் கூறியது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அது தொடர்பாக எழுத்து மூலம் தருமாறு உயர் அதிகாரி ஒருவரால் பண…
-
- 1 reply
- 1.7k views
-
-
மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிஇ நாகைஇ கரூர்இ பெரம்பலூர்இ அரியலூர்இ தஞ்சாவூர்இ திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்இ எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கருத்துக் கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்ட அவர் இரவு கோவை புறப்பட்டுச் சென்றார். இந்தக் கூட்டம் ரகசியமான முறையில் காஜாமலை பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டது. இதில்இ செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சியுடன் கூட்டணி என முடிவு செய்யப்…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த கொழும்பு அரசின் நிலைப்பாட்டுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தி உள்ள நிலையில், அந்த நாடுகளுக்கு உண்மை நிலையை விளக்கும் வகையில் அவற்றுடன் பேசத்தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, நிபுணர் குழுவின் அறிக்கையையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் ஒரு ராஜதந்திர அணுகுமுறையாக இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றது என்று அதன் இணைச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். அந்த முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும்…
-
- 1 reply
- 1.7k views
-
-
(எம்.நியூட்டன் ) தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இல்லை என இலங்கை தமிழர கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். சுமந்திரனின் கருத்து தொடர்பில் மாவை வெளியிட்ட அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புலிகள் பற்றி சுமந்திரன் அளித்த பேட்டியில் சிங்கள மொழியில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக எம்மிடம் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவிக்கப்படுவதாலும் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித…
-
- 19 replies
- 1.7k views
-
-
மீளக் குடி அமர்த்தப்பட்ட மல்லாவியில் கணவன் மனைவி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்? 27 December 09 05:05 pm (BST) மக்கள் மீளக் குடி அமர்த்தப்பட்ட மல்லாவிப் பகுதியில் இளம் குடும்பஸ்த்தர்களான கணவன் மனைவி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்த சம்பவம் இந்தவார முற்பகுதியில் இடம்பெற்றதாக தெரியவருகிறது. மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதியின் அண்மையில் இருந்து இவர்கள் இராணுவமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இளம் தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து அனாதரவான அவர்களின் குழந்தைகள் மீண்டும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள…
-
- 3 replies
- 1.7k views
-
-
யாழ்.குடாநாட்டில் உள்ள விடுதிகளில் கலாசார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிவ்ரி தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. அதன்போது விடுதிகளில் நடைபெறும் கலாச்சார சீரழிவு தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதிகளில் கலாச்சார சீரழிவு மற்றும் விபச்சாரம் நடைபெறுவது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே விடுதிகள் முற்றுகையிடப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். …
-
- 14 replies
- 1.7k views
-
-
கோவை (ஏஜென்சி) புலிகள் ஊடுருவலை தடுக்க கடற்கரை பகுதிகளில் 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி ராஜேந்திரன் கூறினார். கோவையில் ரூ.2.90 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்துறையினர் குடியிருப்புகளை தமிழக டிஜிபி ராஜேந்திரன் திறந்துவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் நக்சல் அமைப்பினரின் ஊடுருவல் இல்லை. எனினும், ஊடுருவல்களை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்காக கடற்கரை பகுதிகளில் கூடுதலாக 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நக்சல் மிரட்டல்கள் உள்ள மாவட்டங்களில் சிறப்புப் பயிற்சி பெற்ற சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஜே.வி.பி.யின் 5ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிக் கொண்டிருந்த கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க திடீரென தமிழில் பேசத் தொடங்கினார். இதன்போது சிங்களவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களுடன் நட்புறவுடன் பழக வேண்டும். இதன்?லமே இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இனவாதத்தை இல்லாதொழிக்க முடியும் எனக் கூறினார். 5ஆவது தேசிய மாநாடு நடந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உங்களிடத்தில் தமிழ் மொழியில் ஒருசில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டே சோமவங்ச அமரசிங்க தமிழ் மொழியில் பேசத்தொடங்கினார். அவர் தொடர்ந்தும் தமிழில் பேசுகையில் கூறியதாவது: அன்பார்ந்த தோழர்களே இனவாதம் இல்லாத ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ஏனென…
-
- 4 replies
- 1.7k views
-
-
Posted on : Mon Jun 11 5:51:58 EEST 2007 சந்தனப்பொட்டு வைத்தால் ரணிலையும் பிடித்து வவுனியாவுக்கு பஸ்லில் அனுப்புவர் திருமண நிகழ்வில் அவரே எடுத்து விளக்கம் ""சந்தனம், குங்குமப் பொட்டுகள் எனக்கு நெற்றியில் வைக்கா தீர்கள். அப்படி வைத்தால் என்னையும் தமிழனாகக் கருதி பஸ் ஸில் ஏற்றி வவுனியாவுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்!'' இப்படி சிரிப்புடன் கூறியிருக்கின்றார் ரணில் விக்கிரம சிங்க. நேற்று கொழும்பு, கோல்பேஸ் ஹோட்டலில் வீரகேசரி நாளிதழின் செய்தியாசிரியர் ஸ்ரீகஜனின் திருமணம் நடைபெற் றது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் நிரம்பி வழிந்த அத் திருமணத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வும் வருகை தந்தார். திருமண மண்டப வாயிலில் ஏனையோரைப் போல ரணிலும் தமிழர் …
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை அரசியலிலும் உலக தரப்பிலும் தற்போது சனல் 4 ஊடகம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆவணப்பட தொகுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் பின்னணியில் இலங்கையின் பல முக்கிய அரசியல் வாதிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக அந்த ஆவணப்படத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. குறித்த ஆவணப்படத்தில் இலங்கையின் முக்கிய புலனாய்வு அதிகாரியாக இருந்த நிசாந்த டி சில்வாவினுடைய கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. . லசந்த விக்கிரமதுங்க படுகொலை கேள்வி ஏன் நீங்கள் இலங்கையில் இருக்காமல் இங்கு வந்திருக்கின்றீர்கள்? பதில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இராணுவ புலனாய்வு பிரிவினர், கடற்படை புலனாய்வு பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் மரண அச்சுறுத…
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பற்ற மேற்கத்தேய நாடுகள் முயன்றன-விக்கிலீக்ஸ் சனிக்கிழமை, 19 மார்ச் 2011 02:21 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை இலங்கை ராணுவம் சுற்றி வளைக்காமல் தடுப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் முயன்றதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. யுத்த இரகசியங்கள் தொடர்பாக விக்கிலீக்ஸினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இலங்கை இராணுவத்தினர் பிரபாகரன் மறைந்திருந்த பகுதி நோக்கி கடும் ஷெல் வீ்ச்சினை மேற்கொண்டு அவரை உயிருடன் கைது செய்ய முயன்ற போது, இரு தரப்புகளுக்கும் இடையிலான பகைமை தவிர்ப்பு முயற்சியொன்றை சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினர் முன்னெடுத்திர…
-
- 1 reply
- 1.7k views
-