ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி அளித்தால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுமாறு கோரியது தொடர்பாக கேட்டபோதே அவர்இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கிடைத்தில் இருந்து 71 ஆண்டுகள் கடந்த நிலையில் சிங்களத் தலைவர் தமிழ்த்தலைவர்களை ஏமாற்றியே வந்துள்ளார்கள்…
-
- 12 replies
- 1.6k views
-
-
வெளிநாடுகளில் இருந்து குடாநாட்டுக்கு வரும் உல்லாசப் பயணிகள் தொகை மிகவும் அதிகரித்துள்ளது. இந் நிலையில் அங்கு நவீன முறையில் காலைக் கடனைக் கழிக்கும் பயணிகள் இங்கு முழி பிதுங்குகிறார்கள். அவர்களுக்கான செய்முறை விளக்கப்பயிற்சி செய்வதற்காக இந்தியப் பேராசியர் ஓருவரை அழைத்து உங்களுக்காக தருகின்றோம். http://www.youtube.com/watch?v=x5pQWsu89Yc
-
- 1 reply
- 1.6k views
-
-
எமது போராட்டம் பற்றி குர்தீஸ் எழுத்தாளர் Shexmus Amed Observations on the LTTE from a Kurdish Nationalist Comrade May 27th, 2009 As readers would have noticed the piece last days of Thiruvengadam Velupillai Prabhakaran has attracted many readers and comments. Among these comments was one by A kurdish nationalist , Shexmus Amed. It was a detailed in depth comment and obviously heartfelt but well thought-out. I feel that these observations deserve to be read widely. So I’ve posted it on my blog this time and hope many will read and digest what is said. Regardless of whether one agrees or disagrees with some of the points it would be good for all of us…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஏறாவூர் தளவாய்யில் துணை இராணுவக்குழு மீது நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியனதுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நேற்று வெள்ளி இரவு 8.45 மணியளவில் தளவாயில் அமைந்துள்ள ஒட்டுக்குழுவினரின் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிலில் சென்ற ஆயுததாரியினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அலுவலக பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு உறுப்பினர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் 25 அகவையுடைய கோரகல்லிமடு கிரான் பகுதியைச் சேர்ந்த பி.உதயன், காயமடைந்தவர் 23 அகவையுடைய கிஸ்ணராசு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சடலம் செங்கலடி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. காயப்பட்டவர்கள மேலதி…
-
- 2 replies
- 1.6k views
-
-
வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் வைபவ வீடொன்றில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர், மேலதிக சிகிச்சைக்காக அவரது உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23 ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் குறித்த வீட்டுக்கு தீ வைத்ததில் 22 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்தார…
-
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
வாக்களிப்பு பற்றிய செய்திகளையும் கணக்கெடுப்பு விபரங்களையும் அறிய இங்கே அழுத்துங்கள்
-
- 6 replies
- 1.6k views
-
-
வடபகுதியில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களின்போது போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஏழு சிறிலங்கா படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று பாதுகாப்பான முறையில் விடுவிக்கப்பட்டு இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வெளியேறிய ஒரு தொகுதி மக்களுடன் மக்களாக வெளியேறிய இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய இந்த நான்கு கடற்படையினரும் மூன்று இராணுவத்தினரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து தம்…
-
- 6 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த 12 பேரை இலங்கைக்கு நாடு கடத்த கனடா ஏற்பாடு! கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்ட 12 தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட உலகத் தமிழர் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான 12 பேர் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்தப் 12 பேரையும் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை மேற்கொண்டு வருகிறது. இவர்கள் அ…
-
- 11 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளை ஒழிக்க ஆயுத உதவி, பயிற்சி அளித்த இந்தியா, பாக். - கூறுகிறார் நாணயக்காரா புதன்கிழமை, ஏப்ரல் 29, 2009, 12:36 [iST] கொழும்பு: இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்தியாவும், பாகிஸ்தானும் வழங்கிய தாராள பயிற்சி, உதவிகள், ஆயுதங்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் உதய நாணயக்காரா. இரு நாடுகளும் தனித் தனியாக தங்களுக்கு பெரும் உதவிகளைச் செய்ததாகவும், நீடித்த, நிலையான உதவிகளாக அவை இருப்பதாகவும் கூறியுள்ளார் நாணயக்காரா. இலங்கைக்கு இந்தியாதான் பெருமளவில் உதவிகள் செய்து வருவதாக ஆரம்பத்திலிருந்தே தமிழக அர…
-
- 9 replies
- 1.6k views
-
-
தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் இன்று சென்னையில் உள்ள சிங்களத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. தூதரகத்தை முற்றுகையிட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திருமாவளவன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மகனை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றதை கண்டித்தும், சிங்கள இனவாத தலைவர் ராஜபக்ச மீது போர் குற்றங்களுக்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் சென்னையில் இன்று சிங்களத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, வ…
-
- 19 replies
- 1.6k views
-
-
தேங்காய்க்குள் மறைத்து வைத்து வெடிபொருட்கள் கடத்தப்படுகின்றன - படைத்தரப்பு புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வெடிபொருட்கள் தேங்காய்க்குள் மறைத்து வைக்கபட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். வடக்கிலிருந்து தெற்கிற்கு வெடிபொருட்கள் தேங்காய்க்குள் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அண்மையில் வத்தளைப் பகுதியில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரை விசாரணை செய்த போது இத்தகவல் கிடைக்கப் பெற்றதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. தேங்காயை உடைத்து அதனுள் வெடிபொருட்களை நிரைப்பி பின்னர் அடைக்கப்படுவதாக படைத்தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.co…
-
- 4 replies
- 1.6k views
-
-
வர்த்தகக் கப்பலுடன் மோதியதில் நொருங்குண்டு போன இந்தியப் போர்க்கப்பல் கடந்த திங்களன்று ஸைப்பிரஸ்ஸில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தகக் கப்பலுடன் மும்பாய்த் துறைமுகத்தில் மோதுப்பட்டு விபத்துக்குள்ளாகித் தரைதட்டிய 3000 மெட்றிக் தொண் எடையுள்ள இந்திய கடற்படைக் கப்பலான விந்தியாகிரியை எப்படி மீன்டும் புணர்நிர்மானம் செய்யலாம் என்று இந்திய அதிகாரிகல் மூளையைப் போட்டுக் கசக்கிக்கொண்டு இருக்கிறார்களாம். மோதுப்பட்டதுடன் உடனேயே தீப்பற்றியும் கொண்ட இந்த யுத்தக்கப்பலின் இழப்பென்பது சமாதானக் காலத்தில் ஒரு கடற்படைக்கு ஏற்பட்ட மிகவும் வெட்கக்கேடான சம்பவம் என்று சர்வதேச இராணுவ வல்லுனர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விபத்து நடந்த வேளையில் சிப்பந்திகளுற்பட 400 பேரை வேறு கப்பல்களிலி…
-
- 5 replies
- 1.6k views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன 07 Jan, 2025 | 01:04 PM கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக மத்தல மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து பயணித்த UL-226 விமானமும் சீனாவிலிருந்து பயணித்த UL-881 விமானமும் இந்தியாவின் பெங்களூரிலிருந்து பயணித்த UL-174 …
-
-
- 39 replies
- 1.6k views
- 1 follower
-
-
கொட்டாஞ்சேனையில் சுடப்பட்ட இளைஞரின் தந்தை விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவத்தை ஒத்தவர்: காவற்துறைப் பேச்சாளர் திகதி: 28.05.2009 // தமிழீழம் கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிற்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியேட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல …
-
- 0 replies
- 1.6k views
-
-
14 வயதில் போராட்டத்தில் இணைந்தவன்.19 வயதில் களமொன்றில் தன்னிரு கண்களையும் இழந்துபோனான். கண்ணையிழந்தவன் தன்னை இசையோடு இணைத்து இசையால் தனது கடமைகளை வழங்கியதோடல்லாமல் எத்தனையோ பேருக்கு ஒளியாயிருந்தான். ஒளிதரும் கண்கள் இருளாகிப்போன பின்னும் தன்னால் இயன்ற யாவையும் இதயசுத்தியோடு ஊருக்கே வழங்கினான். எங்கள் விதியை மாற்றிய மே18 2009 வரையும் எந்த மண்ணை நேசித்தானோ எந்த மண்ணில் ஒரு இசைக்கலைஞனாய் செதுக்கப்பட்டானோ அந்த மண்ணோடு ஒட்டியிருந்தான். அந்த மண்ணோடு மண்ணாய் மாண்டுபோகும் முடிவோடிருந்தவனை அவன் மனையாளின் கண்ணீர் உயிரோடு காப்பாற்றியுள்ளது. கண்ணிரண்டையும் நாட்டுக்காய் இழந்ததில் இன்றும் பெருமைப்படும் இவனது வாழ்வு இன்று அன்றாடக் கஞ்சிக்கே ஆட்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கிற…
-
- 8 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/articles/files/100810_mullaitheevu_situation.mp3 நன்றி: ATBC
-
- 2 replies
- 1.6k views
-
-
ஈழத்தின் ஆயுதப் போராட்ட வரலாற்றினை உற்று நோக்கினால், காலதி காலமாக அராஜகத்திற்கும், இனவாதக் கொள்கைக்கும் பெயர் போனவர்களாக விளங்கும் ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்கள் மீது தமது முழுமையான பலத்தினைப் பிரயோகித்து அவர்களை அடக்கி, அம் மக்களின் முழுமையான உணர்வுகளை தம் வல்லாதிக்கப் பிடியினுள் நசுக்கி வாழ வேண்டும் எனும் வெளி உலகிற்குத் தெரியாத, எழுதப்படாத விதியினைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். சிறுபான்மை மக்கள் மீது நிழல் யுத்தம் ஒன்றினை ஆரம்பித்து, அம் மக்களின் உணர்வுகள் ஊடாகக் குளிர் காய்வது தான் இன்று ஆட்சியில் உள்ளோரின் பிரதான வேலையாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீதான அரச படையினரின் தாக்குதல்கள் தவிர்ந்த; இராணுவக் கட்…
-
- 0 replies
- 1.6k views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வழங்கியுள்ள தகவல்களின்படி விடுதலைப்புலிகள் அமைப்பில் மீதமுள்ள பிரதான தலைவர்களான விஸ்வநாதன் உருத்திரகுமார் மற்றும் இளயதம்பி ஆகியோரை சிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 'எஞ்சியவர்களையும் விரைவில் சிக்க வைக்க முடியும் என்பது உறுதி. இவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகள் அமைப்பு சார்வதேச ரீதியில் வீழ்ச்சியடையும். விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பான அறிவைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவொன்று கே.பி.யை கைதுசெய்வதற்காக பல நாட்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. அவர் கடநத்த வி…
-
- 4 replies
- 1.6k views
-
-
http://isooryavidz.blogspot.com/2008/10/gt...sri-lankas.html GTV Unmayin Tharisanam: Sri Lanka's Psychological Operations against the Tamils Part-2 GTV Unmayin Tharisanam: Sri Lanka's Psychological Operations against the Tamils Part-3
-
- 0 replies
- 1.6k views
-
-
நம்ம கடிதம் புகழ் சங்கதியார், தான் இந்த வருசத்தில வரைந்த மடல்களில்ல ஒன்னுமே உருப்படியாகல என நினைத்தாரோ என்னவோ..வருசம் முடியமுன்னம் ஒன்டை கிறுக்கித்தள்ளீட்டார் இராணுவ சாவடிகளுக்கு அருகே கட்சி அலுவலகங்கள்; அதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பு! - நிலைமையை விளக்கி ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம் யாழ்ப்பாணத்தில் இராணுவச் சோதனை சாவடிகளிற்கு அருகில் அரசியல் கட்சியொன்றின் அலுவலகங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் இவற்றைத் தீர்ப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கான ஆயுத விற்பனையை இவ்வருடம் நாற்பது மடங்காக அமெரிக்கா அதிகரித்துள்ளது இலங்கைக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா இவ்வருடம் நாற்பது மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனை தளமாகக் கொண்டியங்கும் சுயாதீன நிபுணர் குழுவான பாதுகாப்பு தகவல் நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்கா இலங்கைக்கு 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான போர்த் தளபாடங்களை விற்பனை செய்திருந்தது. இவ்வருடம் இந்த ஆயுத விற்பனை நாற்பது மடங்கால் அதிகரிக்கப்பட்டு இதுவரை 60.8 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆயுத விற்பனை இவ்வருடம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. இலங்கையில் போர்ச் சூழல் அதிகரித்து வருவதால் இலங்கைப் ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
5 ஆயிரம் மலையக இளைஞர்களை இணைக்கும் விடுதலைப் புலிகளின் திட்டம்: சிங்கள நாளேடு [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 17:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரிவுகளில் நிலவும் ஆட்பற்றாக்குறை காரணமாக மலையக இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ளும் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள நாளேடான 'தினமின' செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு, உளவுப் பிரிவு மற்றும் கடற்புலிகள் பிரிவு ஆகியவற்றில் ஆட்பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் மலையகப் பகுதிகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களை அனுப்பி அதன் ஊடாக உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள விடுதலைப் புலிகள் வகுத்துள்ள த…
-
- 6 replies
- 1.6k views
-
-
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது. வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கோசங்களை எழும்பியுள்ளனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே செனவிரத்ன எ.டி.தர்மபால மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்திலுள…
-
- 16 replies
- 1.6k views
-
-
மற்றுமொரு முள்ளிவாய்க்காலா இடிந்தகரை...?: கொளத்தூர் மணி [Photos] எல்லா மாநிலங்களிலும் விரட்டியடிக்கப்பட்டதால் அணுமின்நிலையத்தை தென்தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்தில் நிறுவ மத்திய அரசு முடிவெடுத்தது. அன்றிலிருந்து இந்த அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் மக்கள் 2011இல் புகுசிமாவில் நடந்த அணுஉலை பேரழிவிற்குப்பின் மேலும் உறுதியாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் உணர்வைப் புரிந்து செயல்படுவதாக “மக்களின் அச்சத்தைப் போக்காமல் மத்திய அரசு கூடங்குளம் அணுஉலையை திறக்கக்கூடாது” என்று முதல்வர் முன்மொழிந்து தமிழகசட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு நேரெதிராக இன்று மக்களை அச்சுறுத்தி அணுஉலையை திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கூடங்குளத…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கு எதிராக நியூயோர்க்கில் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக ஐ.நா தூதுவர் பிரிவின் அறிவிப்பு இலங்கை வெளிவிவவகார அமைச்சுக்கு இன்று கிடைக்கலாம் என அமைச்சின் அதிகாரி ஒருவர் எமது இணையத்துக்குத் தெரிவித்தார். சிறிலங்காவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராஜதந்திரி என்பதால், ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள வியன்னா ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகள், நியமங்கள் ஊடாக அவர் பாதுகாக்கப்படுவார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற…
-
- 0 replies
- 1.6k views
-