ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
''பன்னாட்டு விசாரணை தேவை'' இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் போது நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பற்றி இலங்கை அரசு உண்மையான ஒரு விசாரணையை நடத்த தயாராக இல்லாததால், அது குறித்து ஒரு பன்னாட்டு விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகள் குறித்த குழு, இண்டர்னேஷனல் க்ரைசிஸ் குரூப், என்ற அமைப்பு கோரியிருக்கிறது. போர் நடந்து முடிந்த ஓராண்டு நிறைவடையும் நிலையில், இன்று திங்களன்று, இந்த அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் இறுதி ஐந்து மாத கால கட்டத்தில் மட்டும் குழந்தைகள், பெண்கள் முதியோர் உட்பட பல்லாயிரக்கணக்கான சாதாரண தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருக்கிறது. …
-
- 1 reply
- 607 views
-
-
யாழ்ப்பாணத்தில் இராணுவத்துக்கு இளைஞர்களைத் திரட்டும் பணி சத்தம் சந்தடியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சியில் வரணியிலும் யாழ். நகரத்தில் கரையோர ஊர்களிலும் கடந்த சில நாள்களாக இந்த நடவ டிக்கை தீவிரமாக இடம் பெற்று வருகின்றது. இளைஞர்கள் தாமாக முன்வந்து இராணுவத்தில் இணைவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று வரணியில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட இராணுவத்தினர் தெரிவித்தனர். அதேநேரம் இராணுவத்தினர் கட்டாயப் படுத்தி அழைத்து அங்கிருந்த விண்ணப்பங்களில் தம்மி டம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர் என்று ஒருசிலர் குற்றஞ்சாட்டினர். தரைப்படையின் மகளிர் தொண்டர் படையணிக்கு ஆள்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விளம்பரம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் வன்னியில் இத்தகைய விளம்ப…
-
- 0 replies
- 425 views
-
-
வவுனியா உக்கிளாங்குளத்தின் அன்னை வேளாங்கன்னி மாதா சுருபம் தீ வைத்து எரிப்பு வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கன்னி மாதா சுருபம் இனந்தெரியாத விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் அமைந்திருந்த அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சுருபம் உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் விசமிகள் எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனால் மாதா சுருபம் சேதமடைந்துள்ளதுடன், கண்ணாடிப் பெட்டியும் சிதைவடைந்துள்ளது. குறித்த பகுதியில் இரவு 11.45 மணியளவில் எரிவதைக் கண்ட அயலவர்கள் அதனை தண்ணீர் ஊற்றி அணைத்ததாகவும், அப்பகுதியில் இருந்து மோட்டர் சைக்கிள்…
-
- 2 replies
- 878 views
-
-
மஹிந்த, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன்... உள்ளிட்ட, 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை உத்தரவு! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் பயணத் தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ மற்றும் சனத் நிஷாந்த உள்ளிட்ட 17 பேருக்கே இவ்வாறு…
-
- 0 replies
- 207 views
-
-
கொழும்பு விழா: பங்கேற்கும் நடிகர்கள் படங்களுக்கு தென் இந்தியாவில் தடை! சனிக்கிழமை, மே 29, 2010, 10:15[iST] சென்னை: கொழும்பு விழாவில் இந்திய திரை நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்போர் படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது, என தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு நிர்வாகிகள் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் இது தொடர்பாக இந்த விழாவை நடத்தும் முக்கிய அமைப்பான இந்திய ஐ.ஐ.எப்.ஏ. நிர்வாகிகளைச் சந்தித்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாகவும் தென்னிந்திய திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 4,5,6 ஆகிய தேதிகளில் இலங்கையில் இந்த…
-
- 6 replies
- 1.3k views
-
-
போர்க்குற்ற நீதிபதி மோட்டூ நுகுசி இலங்கைக்கு இரகசியப் பயணம் FacebookTwitterPinterestEmailGmailViber கம்போடியாவில் போர்க்குற்றங்களை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இடம்பெற்றிருந்த ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி, இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நீதிபதி மோட்டூ நுகுசி மூன்று பேர் கொண்ட ஜப்பானிய குழுவுக்குத் தலைமை ஏற்று இலங்கை வந்துள்ளார். இந்தக் குழுவினர் பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, வான்படைத் தளபதி கபில ஜெயம்பதி, …
-
- 0 replies
- 419 views
-
-
ஏழு, நாடாளுமன்ற உறுப்பினர்களை... விசாரிக்க, பொலிஸார் திட்டம் காலி முகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சபாநாயகருக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேர் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கட்டாயமாக வாக்குமூலம் பதிவு செ…
-
- 0 replies
- 133 views
-
-
கொழும்பு வெள்ளவத்தையில் தனது தாயிடம் 10 லட்சம் ரூபாவை கப்பமாக பெறமுயன்ற மகனும் அவரது நண்பர் 4 பேரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக வெள்ளவத்தை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மகனை இரண்டு நாட்களாக காணவில்லை எனவும் அவரை மீட்க 10 லட்சம்ரூபாவை பெற்றுத் தருமாறு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக அறிவித்தாக வெள்ளவத்தையை சேர்ந்த பெண்மணி ஒருவர் வெள்ளவத்தை காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட காவற்துறையின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் உப காவற்துறை பரிசோதகருமான நளின் பிரியந்த தலைமையிலான காவற்துறை குழுவினர், மீண்டும் தொலைபேசி அழைப்பு கிடைத்தால், கப்ப பணத்தை 5 லட்சமாக குறைக்குமாறு குறித்த பெண்மணிக்கு ஆலோசனை வழங்கியுள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடாவில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் தமிழக நடிகை திரிஷா கலந்த கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களின் படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கண்டிக்கும் விதமாக, இலங்கைக்கு தமிழக நடிகர் நடிகைகள் போவதில்லை என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளனர். அத்துடன் இலங்கையில் நடக்கும் இசை விழாக்களிலும் கலந்து கொள்ளாது பின்னணி பாடகர்கள் புறக்கணித்து வருகின்றனர். அதேபோலவே வெளிநாடுகளிலும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் நடத்தும் விழாக்களை தமிழ் திரையுலகினர் புறக்கணித்து வருகின்றனர். இதனை மீறி செல்வோருக்கு எதிராக கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக நடிகை திரிஷா தடையை மீறி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் கனடாவில் நடத்திய விழாவ…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதியினால் மாத்திரமே நாட்டைக் காப்பாற்ற முடியும்- மெதகொட அபயதிஸ்ஸ அனு 33 mins முன் செய்திகள் Leave a comment 2 Views தற்போதுள்ள கள நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் தகுதியான ஒரு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தான் என இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். எளிய அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். நாட்டில் பொது எதிர்க் கட்சியென்று உள்ளது. இருப்பினும், இதுவரையில் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த எந்தவொரு சட்ட மூலத்தையும் அதனால் தடுத்து…
-
- 0 replies
- 272 views
-
-
'நாட்டுக்குள் அரேபிய வசந்தம் வருவதாகக் கூறி பொதுமக்களை வீதிக்கு அழைக்கின்றனர். அரேபிய வசந்தம் போன்றவைகளுக்கு நாம் பயமில்லை. வீதியில் இறங்கியே நான் இந்த நிலைக்கு வந்தேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மத்திய வங்கியின் 2013ஆம் வருடத்துக்கான ஆண்டறிக்கை, மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இன்று (08) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இவ்வருடம் மார்ச் மாதத்தில் அரசாங்கம் கவிழும் என கடந்த 10 வருடங்களாக சிலர் கூறி வந்தனர். ஆனால், அப்படியொன்று நடக்கவில்லை. மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டியது அவசியம். ஆனால் பலவந்தமாக அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க…
-
- 0 replies
- 308 views
-
-
தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும் தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்கும் தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் – யாழ் நூலகக் கேட்போர் கூடத்தில் (2வது மாடி) – இணைத்தலைவர் உரை தமிழ் மக்கள் பேரவை தொடங்கி 2வது ஆண்டு விரைவில் பூர்த்தியடைய இருக்கின்றது. இந்த நேரத்தில் அரசியல் ரீதியாக நாடளாவிய ரீதியில் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் உள்ளராட்சிமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்திருக்கும் இந்தத் தறுவாயில் தேர்தல்கள் …
-
- 1 reply
- 240 views
-
-
ரஷ்யாவிடம் இருந்து... எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு, இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை! நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். எனவே தங்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விரைவில் சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆட்சியாளர்கள் பொறுப்பின்றி செயற்படுவதாகவும் 09 கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். h…
-
- 1 reply
- 161 views
-
-
போரில் ஒரு பெண் பாதிப்படைகின்ற போது, அதில் அவள் மட்டுமல்ல, அந்தக் குடும்பம், உறவுகள் சார்ந்த குடும்பங்கள், கிராமம், சமூகம் என்று அது பல தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், மறு உற்பத்தித் திறன் அவளிடம் இருப்பதேயாகும். ஒரு சமூக உற்பத்தி அவளூடாகத்தான் நிகழ்கிறது. இந்த நிலையில், சர்வதே மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்"பெண்கள் ஒரு சமூகத்தின் கௌரவத்தை உருவகப்படுத்தி நிற்பவர்களாகவும் எதிரியின் இனப்பெருக்க இயந்திரமாகவும் நோக்கப்படுவதன் காரணத்தினாலேயே அவர்கள் போரின் போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; பாலியல் ரீதியிலான சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியேற்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "ஒரு குறித்த சமூகத்தின் ஆண்களை வலுவிழக்கச…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாட்களாகஅழகி போட்டி நடை பெற்றன இதில் சுமார் 30 அழகிகள் பங்குபற்றினார்கள். யாழில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இப்பொழுது சகஜமாகி விட்டது எனினும் இவை மக்கள் மத்தியில் வேறுபட்ட இரு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாழின் கலாச்சாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதாக ஒரு தரப்பினரும் இப்படியான நிகழ்வுகளின் மூலம் எம் திறமைகள் வெளிக்கொண்டு வரப்படுவதாகவும் கூறிக் கொள்கின்றனர். எதுவாக இருப்பினும் நம் கலாச்சாரத்தில் கரிசனையுடன் இருப்பது முக்கியமானதொன்றாகும். அழகு போட்டி என்று மொடல் ஆடைகளில் இல்லாமல் எம் சமூக பண்பாட்டுடன் பட்டுப்புடவைகளில் பங்குபற்றியமை மகிழ்ச்சிக்குர…
-
- 10 replies
- 1.3k views
-
-
‘சாய்ந்தமருது அபிலாஷைக்கு சம்பந்தன் ஐயா உதவ வேண்டும்’ “சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தருவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா முன்வர வேண்டும்” என, சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா ஹாஜியார் வேண்டுகோள் விடுத்தார். சாய்ந்தமருது, கடற்கரை ஹுதா திடலில், மீனவ சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு (21) இடம்பெற்ற தனி உள்ளூராட்சி மன்றத்துக்கான மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மூன்று தசாப்த காலமாக சாய்ந்தமருது மக்கள் கோர…
-
- 1 reply
- 383 views
-
-
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் ஏ9 சாலையோரம் உட்பட முருகண்டிப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 5000 வீடுகளில் வருகின்ற ஓகஸ்ட் மாதத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன. இதுவரைக்கும் ஸ்கந்தபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதாக அழைத்துச் சென்றுள்ள அரசு, அவர்களை ஒரு பாடசாலைக் கட்டடத்தில் தற்காலிகமாக இருத்தியுள்ளது. சர்வதேச நிதியிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்காக வாங்கப்பட்ட வீடுகளின் பகுதிகள் கனரக வாகனங்களில் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, இராணுவக் குடியேற்றத்துக்காக அவை வீடுகளாக்கப்பட்டு வருவதாக அரசு சாரா நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி பகுதியில் 12,000 வீடுகளைக் கட்டி அங்கு இராண…
-
- 1 reply
- 1.4k views
-
-
நானாட்டான் பிரதேசசபையின் மாதாந்த பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை(24) இடம் பெற்ற போது சபை உறுப்பினர்கள் ஒருமித்து வெளிநடப்புச்செய்துள்ளதுடன், சபை புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் ஏகமனதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நானாட்டான் பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான மாதாந்த பொதுக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழக்கிழமை நடைபெறுவது வழமையாகும். இம்மாதம் மூன்றாவது வியாழக்கிழமை விடுமுறை நாள்கள் அதிகமாக இருந்ததால் நான்காவது வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு சபை அமர்வு இடம்பெறும் என்று தெரிவித்து செயலாளரினால் ஒப்பமிடப்பட்டு சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அறிவித்தலுக்கு அமைய வியாழக்கிழமை (24.04.2014) அமர்…
-
- 0 replies
- 382 views
-
-
நெசர்பே பிரபுவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கப்படும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபுவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தக் குற்றச் செயல் தொடர்பான குற்றச்சாட்டுக்ளுக்கு பதிலளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளநிலையில் இந்தக் குற்றறச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபுவின் கருத்துக்கு நன…
-
- 2 replies
- 291 views
-
-
http://www.yarl.com/articles/files/100803_vinthan_france .mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 714 views
-
-
மகிந்த அரசுக்கு கொண்டாட்டம் மக்களுக்கு திண்டாட்டமான காலம் என வவுனியாவில் வானைப்பிளக்கும் கோசங்கைள எழுப்பியவாறு மே தின ஊர்வலம் இடம்பெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியுடன் இணைந்து சுதேசிய சிறு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், வவனியா சிறு வியாபாரிகள் சங்கம், வவுனியா நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்கம் ஸ்ரீலங்கா ஜனரய சுகாதார சேவைகள் சங்கம், வீதிப் பராமரிப்புத் தொழிலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தொழிலார்கள், தேசிய கலை இலக்கியப் பேரவை, மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, என்பன ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலத்தில் அரசியல் கைதிகளை வாசாரணை செய் அல்லது விடுதலை செய், வடக்கு கிழக்கில் அவலப்படும் எண்பதனாயிரம் விதவைகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கு,…
-
- 1 reply
- 423 views
-
-
சுவிஸிலிருக்கும் ஆவா குழு தலைவரை கைது செய்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவோம்! யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை நடத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவின் தலைவர் சன்னாவை (பிரசன்னா) இன்டர்போலின் உதவியுடன் கைது செய்து சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவருவோம் என யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஹெமவிதாரன சூளுரைத்தார். யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட வாள்களை ஊடகங்களுக்கு நேற்றுக் காண்பிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது..... யாழ்ப்பாணத்தில்…
-
- 1 reply
- 353 views
-
-
ஜோசப்பின் இடத்திற்கு வேறொருவரை நியமிக்க நடவடிக்கை [புதன்கிழமை, 18 சனவரி 2006, 18:59 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையினால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக் கட்சியின் சார்பில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்ற வேட்பாளரைத் தெரிவு செய்து அனுப்புமாறு மட்டக்களப்பு மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரை தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் கோரியுள்ளார். நன்றி: புதினம்
-
- 6 replies
- 1.8k views
-
-
பட்டதாரிகளை விட எமக்கு பல்லாயிரம் சம்பளம் இராணுவத்தில் உள்ள தமிழ் பெண்களின் அசத்தல்
-
- 4 replies
- 1k views
-
-
ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு – ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு என கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். இன்று காலை கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்தினார். தமிழரசு கட்சியின் தலைவராக தற்போது ரணிலே உள்ளார். பதி்ல் தலைவரே சம்பந்தன் அவர்கள். கடந்த காலங்களில் பேரினவாத அரசுக்கு எதிராக நாம் போராடிவந்தோம். இன்று அவ்வாறில்லை. அதே பேரினவாத அரசே இன்று தமிழரசு கட்சியை பாதுகாத்து வருகின்றது. யாழில் தீர்க்க வேண்டி…
-
- 0 replies
- 346 views
-