ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
வடக்கு மாகாண ஆளுனராக பாலிஹக்கார நியமனம் JAN 15, 2015 | 12:16by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, வடக்கு மாகாண ஆளுனராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனராகப் பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு பதிலாக, இவரைப் புதிய அரசாங்கம் நியமித்துள்ளது. இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனரான மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்குப் பதிலாக புதிய ஆளுனர் ஒருவரை நியமிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப…
-
- 15 replies
- 1.6k views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்றைய தினம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரொபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தொடர்ந்து தாக்க…
-
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
இந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும்இ வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள். உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் ஹசுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவேஇ அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும…
-
- 2 replies
- 1.6k views
-
-
ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது சவுதியில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நஃபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தான் பணியாற்றிய சவுதி அரேபிய வீட்டில் ஒரு குழந்தையைக் கொன்றதாக 2005 ஆம் ஆண்டில் ரிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த 4 மாதக் குழந்தையை தான் கொன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை ரிசானா மறுத்திருந்தார். அந்த கொலை நடந்ததாகக் கூறப்பட்ட தருணத்தில் ரிசானாவுக்கு 17 வயது மாத்திரமே என்றும் அவர் சட்டபூர்வ வயதை எட்டாதவர் என்றும் அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் கூறியிருந்தனர். இந்தக் கூற்று உண்மையாகும் பட்சத்தில், ஒரு சிறுமிக்கு மரணதண்டனை விதித்ததற்காக சவுதி…
-
- 1 reply
- 1.6k views
-
-
சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டதுஎன நேற்றைய (05.09.2015) தினம் மாவை சேனாதிராசா தெரிவித்த நிலையில் இன்று(06.09.2015) ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கினை பெற்றவருமான சிறிதரன் அவர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தான் ஐ.நா செல்லவுள்ளதாக உறுதியாக தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தலுக்கு முன்னர் தாம் கூறியதுபோல மக்களுக்கு உறுதியளித்த கொள்கைக்காக தொடர்ந்தும் தனக்குரிய பணியை செவ்வனே செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.அமெரிக்காவால் தான் எந்த தீர்மானத்தையும் கொண்டுவரமுடியும் என்றும் அதற்காக அமெரிக்கா சொல்லும் எல்லாவற்றுக்கும் நாம் தலைஆட்டவேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நேற்று…
-
- 21 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்ப்பு தொடர்பாக சிறிலங்கா விளக்கம் [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:19 மு.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா படைகளில் சிறார்கள் சேர்க்கப்படுவது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது. சிறிலங்கா படைத்தரப்பு பேச்சாளர் உதய நாணயக்கர கூறியுள்ளதாவது: முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த மொகொட்டிக ரவி துஸ்மந்த (அடையாள அட்டை எண்: 911780313 V) என்பவரின் புகைப்படத்தை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளம் வெளியிட்டது. அந்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படமும் பெயரும் சரி. ஆனால் அடையாள அட்டை மட்டும் போலியாக விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டது. படைத்தரப்புக்கு எதிரான பரப்புரைக்காக அது உர…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
2019-11-01 11:39:34 சுமார் 800 ஆண்டுகள் பழைமையான சீனத்தயாரிப்பு மட்பாண்டமொன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி உறவுக்கு இந்த மட்பாண்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். சீன அகழ்வாராய்ச்சிக்குழுவினரால் அல்லைப்பிட்டி பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://valampurii.lk/valampurii/content.php?id=19702&ctype=news
-
- 12 replies
- 1.6k views
-
-
சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மகிந்த ஆட்சியில் இன்றும் சிறீலங்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு சிறீலங்கா உடவலவ, பணஹடுவ பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள்,ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு,இவர்களை சுட்டவர்கள் யார் என்பது தொடர்பாக சிறீலங்கா பொலீஸார் விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக அந்நாட்டு பொலீஸார் தெரிவித்துள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option
-
- 8 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது உரையை உலகத் தமிழினம் காத்திருந்து செவிமடுத்திருப்பதாக, பிரித்தானிய ரைம்ஸ் ஏடு இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. தேசியத் தலைவர் அவர்கள் உரை நிகழ்த்துவற்கு சில நிமிடங்கள் முன்பாக வன்னியிலுள்ள ஒலிபரப்புக் கோபுரங்கள் மீது சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியபோதிலும், தடையையும் மீறி தலைவரது உரையை அனைத்துலக சமூகம் செவிமடுத்துள்ளதாக இந்தப் பத்திரிக்கை கூறுகின்றது. லண்டனில் சிறீலங்கா தூதரகத்தின் நெருக்குவாரங்கள், பிரித்தானிய காவல்துறையினரது தடைகள் மத்தியிலும் கிழக்கு லண்டனிலுள்ள ஏ௯Cஎள் மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதாக நேரில் சென்று செய்தி சேகரித்துள்ள ரைம்ஸ் பத…
-
- 3 replies
- 1.6k views
-
-
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீலங்காவிலும் அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில், அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் அன்று மாலை பிரதமர் மகிந்தவுடன் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் மீண்டும் தனிமையில் சந்தித்துப் பேசியிருந்தனர். இதன்போது பேசப்பட்டது என்ன? கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு என்ன? வடக்கு கிழக்கில் கொரோனா தொற்றின் நிலவரம் என்ன? இராணுவத்தின் பிரசன்னம் எந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் இருக்கின்றன. இதுபோன்ற பல தகவல்களை ஐபிசி இணையத்தளத்தோடு பக…
-
- 18 replies
- 1.6k views
-
-
புலிகள்: பாதை திறந்தால் அமைதிப் பயணம் தொடரும்! ------------------------------------------------- இலங்கையில் முக்கியமான சாலைப் பகுதி ஒன்றை அரசாங்கம் திறந்தால் தான் அமைதிப் பேச்சுக்குக் கதவு திறக்கும் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அடிப்படை பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் தமிழ் மக்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் சென்றுவருவதற்கு ஏதுவாக ஏ9 நெடுஞ்சாலையை அரசாங்கம் திறக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இலங்கை அரசுக்கும் புலிகள் அமைப்புக்கும் இடையில் அமைதிப் பேச்சு இன்று தொடங்கும் வேளையில் இந்த மிரட்டல் இடம் பெற்று இருக்கிறது. இரு தரப்புகளுக்கும் இடையில் மோதல் அதிகமானதை …
-
- 3 replies
- 1.6k views
-
-
மன்னார் அடம்பனில் இலங்கை இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சி வெற்றிகரமாக முறியடிப்பு. வெள்ளிக்கிழமை காலை மன்னார் அடம்பன் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முற்னேற்ற முயற்சி விடுதலை புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பலத்த பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் ஆட்றலி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டிவாறு படையினர் முன்னேற முயற்சித்ததாகவும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை கடும் சமர் நடைபெற்றதாகவும் மன்னார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் போது ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தமிழ் நெற்.
-
- 0 replies
- 1.6k views
-
-
விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் ம.க. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உளவியல்ரீதியில் துன்புறுத்தியப்பட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஒலி வடிவில் கேட்க http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131228_tamilprabakaran.shtml
-
- 6 replies
- 1.6k views
-
-
குண்டுப் புரளி பரபரப்பின் மத்தியில் தமிழ்க்கூட்டமைப்பு - டக்ளஸ் சண்டை பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் ஏற்பட்ட தர்க்கத்தினால் சபை சிறிதுநேரம் அமளிதுமளிப்பட்டது. குண்டுப் புரளியினால் சபை ஒத்திவைக்கப்பட்டதனால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த தமிழ்க் கட்சிகள் ஏமாற்றத்துக்கும் கோபத்துக்குமுள்ளாகின. இந்நிலையில் சபையில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கூட்டமைப்பினை ஏளனம் செய்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்க் கூட்டமைப்பின் கஜேந்திரன், ஈழவேந்தன், ரவிராஜ் ஆகியோர் டக்ளஸ் தேவானந்தாவை நெருங்…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவில் கொல்லப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை இந்திய அரசாங்கமானது "மீண்டும் வெளிவிவகார அமைச்சராக்கிய" விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.6k views
-
-
There will be Debate in the House of Commons in London on Wednesday 16th June 2010 at 11am in Westminster Hall. This is initiated by Siobhain McDonagh MP and we should encourage all Party MPs to participate and speak. MPs will generally only act on behalf of their constituents, so please check you are contacting the MP who represents your constituency. Contact them at http://www.writetothem.com or Call 020 7219 3000 and ask for your MP by name ———— ——— ——— ——— ——— Sugestions: Write about Post war ethinic cleansing & Genocide !!!! Treat those 12,000 Tamil girls and boys tortured , raped and murdered secretly in the Vanni jungle camps. Please …
-
- 0 replies
- 1.6k views
-
-
யுத்தமும் அபிவிருத்தியும் சமநேரத்தில் முன்னெடுக்கப்படும்: மகிந்த ராஜபக்ச. யுத்த முன்னெடுப்புக்களும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் சமநேரத்தில் முன்னெடுக்கப்படும் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஊடகவியலாளரிடம் மகிந்த ராஜபக்ச இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக தமது அரசு ஒருபோதும் செயற்படமாட்டாது எனவம் எந்தவொரு வகையிலும் தமிழர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தினாலே அரசியல் தீர்வு சாத்தியம்: கோட்டபாய ராஜபக்ச. இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்தும் வரை நீண்ட …
-
- 4 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணத்தை தன்னுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவுக்கு தாரை வார்க்கத் திட்டமிட்டுச் செயற்படும் மஹிந்த அரசு, அதன் முதற்கட்டமாக உள்ளுராட்சித் தேர்தலை அவசர அவசரமாக அங்கு நடத்தத் திட்டமிட்டடுள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளது த.தே.கூட்டமைப்பு. அரசின் இந்தச் சதித்திட்டத்திற்கு எதிராக விரைவில் நீதிமன்றம் செல்லத் மதீர்மானித்திருக்கும் கூட்டமைப்பு, அது தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசகைனைகளை நடத்தி வருகின்றது என தெரிய வருகின்றது. 'மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் ஒத்திவைக்கப்ட்டுவந்த 9 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் வேட்பு மனுக்களை அரசு கோரியுள்ளது. 'கிழக்கில் அரச துணையுடன் ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் கேட்பாரற்று அரங்கேறிவரும் நிலையில் நீதியான - நியாய…
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? இல்லை அங்குள்ள கிரிக்கெட் வீரர்கள் புலிப் பயங்கரவாதிகளா? ஐ.நா.பிரதிநிதியின் கூற்று அரசியல் நாகரிகமற்ற ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கண்டித்துள்ளார். மல்லாகத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு அரங்குகளின் மூலம்தான் நல்லிணக்கம் ஏற்படும் என்ற சித்தாந்தத்தையே சிதைத்து விட்டார் ஐ.நாவின் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும். இந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் என யுத்த வெ…
-
- 17 replies
- 1.6k views
-
-
வெள்ளவத்தையில் தமிழர் வாழ்வதைப் போல யாழில் சிங்களவர்களும் வாழ வேண்டும் - ரவி குமார் [Tuesday, 2013-11-05 08:28:52] யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் போன்றே சிங்களவர்களும் வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென யாழ்ப்பாண தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ரவி குமார் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் தமிழர்களை யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறு சிங்கள மக்கள் கோரவில்லை. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் வாழ்வதனைப் போன்று, யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் வாழ ஏற்பாடு செய்யப்பட வேண்டும். போர் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் மீண்டும் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. சிங்கள தமிழ் மக…
-
- 15 replies
- 1.6k views
-
-
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான சன் டி.வி. செய்தியாளர்களின் தொலைத்தொடர்பு, செய்மதி உபகரணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ள இலங்கை அரசு, அவர்களை வெறுங்கையுடனேயே நாட்டுக்குள் அனுமதித்துள்ளது.இதனால் கொதிப்படைந்த சன் ரி.வி. செய்தியாளர்கள் விமானநிலைய சுங்க அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கை பயணம் குறித்தான செய்திகளையும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் தற்போதைய நிலைவரங்களை குறித்தும் இங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சன் டி.வியின் செய்தியாளர்கள் சிலர் இலங்கை வந்தனர். இவர்களை விமானநிலையத்தில் சோதனைக்குட்படுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த தொலைத்தொடர்புக் கருவிகள், செய்மதிகள், இலத்திரனி…
-
- 8 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசியலில் பண்டாரநாயக்க குடும்பம் எவ்வளவு துரம் ஊடுருவி இருந்தார்களோ அதைவிட பலமடங்கு ஊடுருவ இவர் முயற்சிக்கிறார் என்றே தென்படுகிறது. அது எவ்வளவு தூரம் பலிக்கும் என்பது புலிகளின் கைகளில்தான் உள்ளது.
-
- 3 replies
- 1.6k views
-
-
உலகில் வேகம் குறைந்த வீதிகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வீதிப்போக்குவரத்து வேகம் பொலிவியாவை போன்று மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் என்ற அளவிலேயே உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த வேகம் குறைந்த வீதிகளும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. எனினும் பங்களாதேஷ் மற்றும் நிக்கரகுவா ஆகிய நாடுகளை காட்டிலும் முன்னிலையில் உள்ளது. இந்த நாடுகளில் முறையே மணித்தியாலத்துக்கு 41 கிலோ மீற்றர் மற்றும் 46 கிலோமீற்றர் என்ற வேகமுறையே நடைமுறையில் உள்ளது. வேகம் குறைந்த வீதிகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது, இதன் சராசரி வீதி வேகம…
-
- 32 replies
- 1.6k views
- 1 follower
-
-
இது BTF நடத்தும் கருத்துக் கணிப்பு. உங்கள் கருத்துக்களை இங்கேயே பதிவு செய்து கொள்ளலாம். எல்லாரும் பார்க்க வசதியா இருக்கும். (எங்கிருந்தாலும் சபேசன் உடனடியாக மேடைக்கு வரவும்) 1. எதிர்காலத்தில் தமிழ்மக்களின் குரல் எவ்வாறு பலப்படுத்தப் படவேண்டும். 1.1 BTF தற்போது நடைமுறையில் உள்ளவாரே இதனைச் செய்யவேண்டும். 1.2 BTF விரிவாக்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் அனைத்து குரல்களையும் உள் வாங்கவேண்டும். 1.3 புதியதோர் அமைப்பை உருவாக்க வேண்டும் 1.4 BTF கலைக்கப்பட்டு கைவிடப்பட வேண்டும் 1.5 வேறு ஜோசனைகள். 2. BTF அல்லது புதியதோர் அமைப்பு எவ்வாறு மீள் அமைக்கப்படவேண்டும் 2.1 : அதிகாரமையப்படுத்தப்பட்ட அமைப்பாக 2.2 : அதிகாரம் பகிரப்பட்ட அ…
-
- 12 replies
- 1.6k views
-
-
யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும். தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன. யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம் திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த …
-
- 21 replies
- 1.6k views
-