Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது பொலிஸாரின் அலட்சியப்போக்கு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியூதின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பொலிஸார் அலட்சியமாக நடந்து கொண்டதற்கான பாதுகாப்பு கமரா காட்சி ஆதரம் அடங்கிய 'டிவிடி' இருவட்டு ஒன்றினையும் இணைத்து ரிசாத் பதியூதின் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார். 'பொலிஸார் மக்களை பாதுகாக்க தவறியதை கிரான்ட்பாஸ் மக்கள் நேரடியாக அவதானித்துள்ளனர். அத்துடன், தாக்குதல் நடத்த வந்தவர்களுடன் பொலிஸார் இணைந்து செயற்பட்டதாக முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். அரசாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் நான் இது குறித்து கவலை அடைகிறேன். பொலிஸாருக்கு எதிரான குற்றச…

  2. சனசமூக, ஆலய நிர்வாகங்களில் பெண்களை இணைக்க கோரி நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் January 11, 2022 சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 46ஆவது மாதாந்த சபை அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் சி.கௌசலா , ” சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும்” என சபையில் பிரேரணையை முன் வைத்தார். அதனை சபை உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து சபையில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. …

  3. இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு அரசாங்கம், அமெரிக்காவிடம் கோரியுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். மாறாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற மாற்று பொறிமுறைமை ஒன்றின் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை திரட்டி பழையவற்றை தோண்டி எடுப்பதனால் பிரிவினையே அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடு அதிகரிக்குமே தவிர, …

    • 6 replies
    • 727 views
  4. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு... 2.5 பில்லியன் டொலர், கலந்துரையாடலை பாதித்துள்ளது – சீனா குறிப்பிட்ட கட்சி அல்லது அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கவில்லை என சீன தூதுவர் தெரிவித்துள்ளார். எவர் ஆட்சியில் இருந்தாலும் இலங்கை மக்களுக்கே சீனாவின் ஆதரவு இருக்கும் என்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தற்போதைய பேச்சு, சீனாவுடனான 2.5 பில்லியன் டொலர் பெறுவதற்கான கலந்துரையாடல்களை பாதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். சீனா கடந்த ஆண்டு ஜூலை முதல் 2022 ஜனவரி வரை 500 மில்லியன் டொலர் மதிப்பில் 730,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். …

    • 6 replies
    • 497 views
  5. பாதிக்கப் பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... புதிய வீடுகள்! நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின்போது பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வன்முறைச் வம்பவங்களின்போது, 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்களுக்கு விரைவாக புதிய வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அவற்றை விரைவில் நிறைவு செய்து பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு …

  6. கடவுளையும் மதத்தலைவரையும் அவமதித்ததன் விளைவினை இராணுவத்தளபதி அனுபவித்துக் கொண்டிருக்கிறார் -தேரர் http://www.nitharsanam.com/?art=17923

    • 6 replies
    • 2.3k views
  7. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் தொண்டமான் பெருந்தோட்ட சமூகத்திற்கு ஜனாதிபதி அளித்த உதவிக்காக நன்றி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி, வீடமைப்பு, உள்சார் கட்டமைப்பு பிரச்சினைகளை பெருந்தோட்ட சமூகம் எதிர்கொண்டிருந்தது. அவற்றிற்கு ஜனாதிபதி தீர்வைக் கண்டுள்ளார் என அமைச்சர் தொண்டமான் கூறியுள்ளார். இதேவேளை செந்தில் தொண்டமான் ஊவா மாகாண சபை அமைச்சராக நேற்று பதவியேற்றுள்ளார். http://thinakkural.lk/article.php?local/xq3muubexo3222687fd5c7e012176zddqu142dfb2da70e5083b3c6a7lwpcd#sthash.eVajUEQR.dpuf

  8. இராணுவ ஆக்கிரமிப்பை மக்கள் பலத்துடன் தோற்கடித்து இறுதி இலக்கை எட்டுவோம்: தமிழ்ச்செல்வன். எங்களின் பெரிய சக்தி மக்கள்தான். முழு மக்களும் எங்கள் பின்னால் திரண்டு நிற்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பைத் தோற்கடிக்கும் திறனும், வலுவும் எம்மிடம் உண்டு. நாங்கள் எங்கள் இலக்கை விரைவில் அடைவோம். இப்படி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். இந்தியாவின் "தெல்கா டொட்கொம்' இணையச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஒரு செவ்வியிலேயே தமிழ்ச்செல்வன் இப்படிக் கூறியிருக்கிறார். சமகால இராணுவ, அரசியல் சூழ்நிலை தொடர்பாக அச்செவ்வியில் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்திருக்கிறார். அந்தச் செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு: கேள்வி…

    • 6 replies
    • 2.4k views
  9. சிறிலங்காவிலிருந்து கருணா தப்பி ஓட்டம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றின் பொறுப்பாளரான கருணா, சிறிலங்காவிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கருணாவின் குழுவுக்குள் உள்மோதல்களானவை படுகொலைகளாக வெடித்துள்ளன. இதனையடுத்து கருணாவை சிறிலங்காவை விட்டு தப்பி ஓடுமாறு சிறிலங்கா புலனாய்வுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி விவரம்: கிழக்கில் வலுத்துள்ள கருணா மற்றும் பிள்ளையான தரப்புக்களுக்கு இடையிலான மோதல் வெளிப்படையான மோதல்களாக வெடித்துள்ளதுடன் கடந்த இரு வாரங்களில் பலர் பலியாகியும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் கருணாவை அவரது சகாக்களுடன் நாட்டை…

  10. இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐ.நாவின் மேற்பார்வையுடன் இரு அரசு தீர்வுதான் யதார்த்தமாக அமையுமென சுவீடிஸ் பேராசிரியர் பீற்றர் சோக் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இலண்டனில் இடம்பெற்ற இன நெருக்கடி தொடர்பான கலந்துறையாடலில் ‘அமெரிக்காவுடன் தொடர்புபட்டவை,ஐரோப்பிய ஒன்றியம்,தமிழ் எதிர்ப்பு இயக்கம் என்ற கருப்பொருளில் ஆய்வறிக்கையொன்றை சமர்ப்பித்து பேராசிரியர் பீற்றர் சோக் உரையாற்றினர். துன்பப்படும் சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவேண்டிய என்பதோடு அவர்களின் நீண்டகால நலன்களுக்காகவும் குரல் கொடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்., தமிழ் எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புபட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஆவணமானது சமஷ்டி புலனாய்வு பிரிவின…

    • 6 replies
    • 2.2k views
  11. அரசின் திட்டமிட்ட நில அபகரிப்பினை எதிர்த்தும் மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்யக் கோரியும் வலி. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காவற்றுறையினரால் தடுக்கப்பட்ட போதிலும் இறுதியில் குறிப்பிட்ட அளவு மக்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் சென்று மகஜர் கையளித்தனர். வலி. வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இருநூற்றைம்பது பேர் வரையான மக்கள் கலந்து கொண்டனர். தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொண்ட பினனர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கச் சென்ற மக்களைத் தடுத்த காவற்றுறையினர் ஆலய வாசலில் மறித்து மேலும் செல்லவிடாது தடுத்தனர். இதனையடுத்து, ஆப்பாட்டக்காரர…

  12. தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போலி ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் சொத்து வாங்குகின்றனர் எனத் தகவல்கள் வருகின்றன. இதை அனுமதிகக் கூடாது என்று கலலெக்டர் மற்றும் பொலிஸாருக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கலெக்டர்கள் மற்றும் எஸ்.பிக்கள் மாநாட்டில் இது குறித்து, கருணாநிதி பேசியவை வாருமாறு : தமிழ்நாட்டிலுள்ள 117 இலங்கை அகதி முகாம்களில் 73,433 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் பல்வேறு ஆவணங்களைத் தவறான வழிகளில் பெற்று, தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியக் குடிமகனாக அல்லாதவர் இந்த உரிமை அனுபவிக்க வழியில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத் வேண்டும். நாட்டின்; இறையான்மைக்கு ஊறு விளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது. …

  13. அர்ப்பணிப்பு இல்லாமல் ஒருபோதும் தமிழர் உரிமையை பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். பொத்துவில் சொந்தக் காணியில் அமைக்கப்படும் செங்காமம் ஆலயத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்களால் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து அப் பிரதேசத்தின் றொட்டைக் கிராமத்திற்கு புதன்கிழமை(13) மாலை சென்றிருந்தார். இதன்போதே, இவ்வாறு தெரிவித்தார். இதன் போது விநாயகமூர்த்தி முரளிதரன் அங்குள்ள பொதுமக்களை நேரில் சென்று சந்தித்ததுடன் அங்கு பல வருட காலமாக அக்கிராமத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் ஒன்றான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில்…

  14. புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக பருத்தித்துறையிலிருந்து ஆரம்பித்த 670 கி.மீ. Trail 2016 பாதயாத்திரை தேவேந்திரமுனையில் இன்று நிறைவடைகிறது காலி, கரா­பிட்­டி­யவில் புதிய புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லை­யொன்றை அமைப்­பற்­காக நிதி சேக­ரிக்கும் Trail 201 பாத­யாத்­தி­ரையின் இறு­திநாள் இன்­றாகும். 750 மில்­லியன் ரூபா நிதி சேக­ரிக்கும் இலக்­குடன் யாழ். பருத்­தித்­து­றை­யி­லி­ருந்து மாத்­தறை தேவேந்­தி­ர­முனை வரை 670 கிலோ­மீற்றர் தூரம் Trail பாத­யாத்­திரை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. கடந்த 6 ஆம் திகதி பருத்­தித்­து­றையில் ஆரம்­பித்த பாத யாத்­தி­ரையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வர்­க­ளான …

    • 6 replies
    • 385 views
  15. கந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.! சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழ…

  16. கூட்டுப் படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்த போதிலும், அதனை சரத் பொன்சேகா நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியி

  17. இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது வாக்குமூலம் தேவைப்படமாட்டாது. அவருக்கு எதிரான சாட்சியங்களின் வாக்குமூலங்களே அதற்கு போதுமானவை என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இதேவேளை குற்றப்பத்திரத்தில் சாட்சிய தொகுப்பு பதிவு செய்யப்படும் போது அங்கு சமுகமளிக்கும் உரிமை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உண்டு. அத்துடன் அவருக்கு எதிரான சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையானது தற்போது இரா…

    • 6 replies
    • 788 views
  18. யாழ்ப்பாண மாம்பழத்தைக் காதலித்த சந்திரிகா! ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு யாழ்ப்பாண மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்ற சாரப்பட வடக்கு மாகாண விவ்சாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். தன்னுடன் சந்திரிகா ஒருமுறை பேசியிருந்தபோதே இந்த விடயத்தினைத் தெரிவித்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி இன்று காலை 09.30 மணியளவில், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தலைமையில் யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தக…

  19. ரணில் விக்ரமசிங்கவையும், அரசாங்கத்தையும்... ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை! பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281642

    • 6 replies
    • 468 views
  20. புலிகளின் குரலின் செய்மதி ஒலிபரப்பு தொடங்கியது 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் 69 ஆவது பிறந்த நாளான இன்று 'புலிகளின் குரல்' வானொலி தனது செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 'புலிகளின் குரல்' அமலன் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடக்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார். 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்…

  21. உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு மிகப்பெரும் கவனயீர்ப்பை செய்த மயுரன் அவர்கள் தனது நண்பர்களான அனு, சர்வா, கண்ணன், அஜந்தன், ஆதி, மாலன், ஜே, ஆகியோருடன் குழுவாக கனேடியத்தலைநகர் ஒட்டாவாவை நோக்கி நடைப்பயணம் ஒன்றை கடந்த மே மாதம் 22ம் திகதி ஆரம்பித்து இன்று 15 வது நாளாக 300 கிமீ தூரம் சென்றடைந்துள்ளனர். ரொரன்ரோ நாதன் பிலிப் சதுக்கத்தில் ஆரம்பித்து பிக்கரிங், ஏஜாக்ஸ், விற்பி, ஒசாவா, போமன்வில், நியுகாசில், போர்ற்கோப், கோபேர்க், ருரான்ரன், பெல்வில், கிங்ஸ்ரன், ஆகிய நகரங்களைக் கடந்து தற்போது புரோக்வில் நகரை அண்மித்துள்ளனர். நடந்து கடந்து வரும் நகரங்களில், நகரபிதாக்கள், காவல்துறை அதிகாரிகள், பழங்குடிமக்கள், மாணவர்கள், பல்லின மக்கள், அரசி…

  22. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயலாளர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்றவகையில் டி.எம்.வி.பி கட்சியை வழி நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செயலாளரின் வழி நடத்தலில் சில சந்தர்ப்பங்களில் பிள்ளையான் அரசாங்கத்திற்கு எதிராக கூறிய உள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறி;த்து கருணா, பிள்ளையானிடம் கருத்துக் கேட்டதை அடுத்து இந்தப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. சிவநேசத்துரை சந்திரகாந்தன், செயலாளரின் ஆலோசனைகள…

  23. அமைச்சர் ரிசாத் பதியூதீன் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு எந்தவித அறிவிப்பினையும் வழங்காது, ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அமைச்சர் பதியூதீன் செஷ் வரியை விதித்துள்ளார். அதன்படி எந்த அடிப்படையில் ரிசாத் செஷ் வரியை அறவீடு செய்தார் என ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டில் தற்போது ஏற்றுமதியினைக் கண்டு வரும் தேயிலை கைத்தொழிலை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினால் சிறு தேயிலை ஏற்றுமதியாளர்க அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். எமது நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமான வழிகளில் ஒன்றான தேயிலை ஏற்றுமதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்…

  24. கொழும்பு: பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் வரம்பு நிர்ணயித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இந்தியா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இலங்கையிடம் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.