ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
கோட்டாபய அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன்? அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன? 58 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNURPHOTO இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். அநுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விஹாரை வளாகத்த…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
[size=4]வெலிக்கடைச் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால், படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறிப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். கடைசிக் கைதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறைச்சாலை பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். “சனிக்கிழமை அதிகாலை 2 – 3 மணியளவில் கலவரத்தை சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அதையடுத்து கைதிகள் தமது கூண்டுகளுக்குள் சென்றனர். அதன்பின்னர், சிறப்பு…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஜெர்மனியில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரையால் இலங்கைத் தூதரகம் மீண்டும் ஓடி அலைகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கனடா மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் போல் ஜெர்மனியிலும் கடந்த வாரம் கேணல் கிட்டு மற்றும் தியாகி முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது. தமிழர்கள் தமது தேசிய முத்திரைகளை வெளியிடுகிறார்கள் என்பதால் ஜெர்மனியில் மணிக்கற்கள் வியாபார நிறுவனம் ( Carl Faller Institute ) ஒன்று சிறிலங்காவின் மணிக்கற்கள் படங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிட்டு இலங்கை தபால் அமைச்சரிடமும் அன்பளித்தது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
பேராசிரியர் ரவீந்திரநாத் குடும்பம் மீண்டும் விடுக்கும் வேண்டுகோள் [15 - January - 2007] [Font Size - A - A - A] (தினக்குரல்) கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் தலைநகர் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு இன்றுடன் சரியாக ஒருமாதம் கடந்து விட்டது. பேராசிரியரின் நிலை குறித்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்களும் அவரின் நலன்களிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்ட கல்விச் சமூகமும் மனித உரிமைகள் அமைப்புகளும் அவர் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோள்களுக்கு இதுவரை எந்தப்பயனும் கிடைக்கவில்லை. அவரின் கடத்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை.…
-
- 4 replies
- 1.5k views
-
-
வி.நவரத்தினம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் விருது ஞாயிற்றுக்கிழமை 24 டிசெம்பர் 2006 (யோகராஜன்) தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி.நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். தனது மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், படைப்பாற்றல், செயலாற்ற…
-
- 3 replies
- 1.5k views
-
-
தென்னிந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்குவதாக இந்தியா புதிய புரளி! By: seiyyon தென்னிந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கி வருவதாக புதிய புரளி ஒன்றை இந்திய மத்திய அரசாங்கம் கிளப்பியுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும் இந்திய மத்திய அரசாங்கம், தமது முடிவுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் தென்னிந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்குவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழீழ தேசியத் தலைவரின் தாயாரான பார்வதி அம்மாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு பணிப்புரை வழங்குமாறு தொடரப்பட்ட வழக்கை ஏற்றுக் கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் மறுப்புத…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று திமுக இளைஞர் அணி சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டியில் ஹால்டா ஜங்சனில் மனித சங்கிலி ஊர்வலத்தின் போது திமுக தொண்டர் சிவப்பிரகாசம் தீக்குளித்தார்.இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் சிவப்பிரகாசம் திமுகவின் முன்னாள் சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவப்பிரகாசம் திமுகவின் தீவிர தொண்டர். http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php
-
- 6 replies
- 1.5k views
-
-
மல்லாவி, யோகபுரம் 02 ம் யுனிற்றை சேர்ந்த சந்திரமோகன் - வினோதன் (இயக்க பெயர்- இமையவன் .வயது 20 ) என்பவராவார் 2007 / 03ம் மாத மளவில் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் கிளிநொச்சி மருத்துவ மனை,,புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஆகிய வைத்தியசாலைகளில் மருத்துவ போராளியாக காயமடைந்து வரும் பொது மக்களுக்கான பணியினை மேற்கொண்டிருந்தார். போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் மாத்தளன் மற்றும்,,முள்ளிவாய்க்கால் பகுதி தற்காலிக வைத்தியசாலைகளில் தனது கடமைகளை மேற்கொண்டிருந்த வேளை காயமடைந்த பொது மக்கள்,, போராளிகளுடன் இராணுவத்தால் 2009 / 05 /18 கைது செய்யபட்டுள்ளார்.. மேலும் இவரது சகோதரனான சந்திரசேனன் -விருந்தன் வயது 18 என்பவரும் படுகாயமடைந்த நிலையில் இராணுவத்தால் கைது செய்ய பட்டு காணமல் போய்யுள்ளார். எ…
-
- 0 replies
- 1.5k views
-
-
நீர்கொழும்புச் சிறையில் தமிழ் யுவதி மரணம் அதிகாரிகள் அசமந்தம்; அதனால் பரிதாபம்! குடிவரவு, குடியகல்வு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலை யில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளம் தமிழ்ப் பெண் ஒருவர், ஆஸ்த்துமா நோயினால் அவ திப்பட்டு, பலபேர் பார்த்திருக்க துடிதுடித்து இறந்தார். நேற்று அதிகாலை நீர்கொழும்பு சிறைச் சாலையின் சிறைக்கூடத்திற்குள் இந்தப் பரி தாப சம்பவம் இடம் பெற்றது. வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்று குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறினார்க ளென்று குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப் பட்ட 35 தமிழ்ப் பெண்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக் கின்றனர். இவர்களில் யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த சுகந்தினி (வயது 26) என்ற யுவ…
-
- 3 replies
- 1.5k views
-
-
யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் கைது! திகதி: 28.05.2010 // தமிழீழம் யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் சிலாபம் பகுதியை பிறப்பிடமாகவும், யேர்மனி பிராங்போர்ட் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஐம்பது அகவையுடைய இவர், யேர்மனியில் இருந்து கடந்த புதன்கிழமை கொழும்பை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. யேர்மனியில் கடந்த ஆண்டு தமது அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்ட தொடருந்து மறியல் போராட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள், பிராங்போர்ட்டில் உள்ள இந்திய உப தூதரக…
-
- 2 replies
- 1.5k views
-
-
LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர்களின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அல்லது வழக்குகளை விசார…
-
- 31 replies
- 1.5k views
-
-
கறுப்புப் பூனைகளுடன் சிறிலங்கா செல்லும் இந்தியப் பிரதமர் [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:30 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு கறுப்புப் பூனைப் படையை அழைத்துச் செல்லவுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: சார்க் மாநாட்டை முன்னிட்டு சிறிலங்காவுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு என சிறப்பாக அமைக்கப்பட்ட கறுப்புப் பூனை படையினரை அழைத்துச் செல்லவுள்ளார். சிறிலங்காவில் மன்மோகன் சிங் தங்கியிருக்கும் காலப்பக…
-
- 19 replies
- 1.5k views
-
-
புலம் பெயர்ந்தோரை கோதபாயவிற்கு அறிமுகம் செய்த கே.பி – அரசியல் மாற்றத்தின் அழிவு சக்தி : அஜித் கே.பி என்ற குமரன் பத்மநாதன் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை சென்றவர்களை கோதாபய ராஜபக்சவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பதினைந்து பேரளவிலான அரச ஆதரவாளர்கள் இலங்கை சென்று கே.பி யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். அதன் பின்னராக நடத்தப்பட்ட கோதபாய ராஜபக்ச , கே.பியின் மூன்று கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகச் செய்தி வெளியிடப்ப்பட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் அலுவலகம் கோதபாய அரச கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்ட மறுதினம் கே.பி குழுவின் இந்த நாடகம் அரங்கேறியுள்ளது. இலங்கை இந்திய அரசுகளின் கே.பி ஊடான கிரிமினல் வலைப்பின்னலை புலம் பெயர் நாடுகளில்…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர் பூமி இலங்கை என மத்திய இணை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, இலங்கை தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை, தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். தமிழீழக் கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இஸ்ரேல் ,பாலஸ்தீனம் போன்று இலங்கையில், தமிழர் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். என்றார். http://www.seithy.com/breifNews.php?newsID=92435&category=IndianNews&language=tamil
-
- 22 replies
- 1.5k views
-
-
மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 6, 2011 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு 40 கோடி இந்திய ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி இருப்பதாக வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்திய சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ் நாட்டிலுள்ள இலங்கை தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசால் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ.30 கோடிக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இரண்டாம் கட்டத்திற்கான பணிகளைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கும் ஓர் நடவடிக்கையாக இதுவரை காலமும் வான்படையினருக்கு இரவு நேரத்தில் வழங்கப்பட்டு வந்த தேனீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. வான்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின் போது இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு செலவீனங்களை குறைக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வான்படையினருக்கு வழங்கப்பட்டு வந்த தேனீர் கோப்பைக்கு பதிலாக மல்லித் தண்ணீர் வழங்குவதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். படை சிப்பாய் ஒருவரின் உணவு செலவீனத்திற்காக நாளொன்றுக்கு 280 ரூபா செலவிடப்படுவதாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படைச் …
-
- 11 replies
- 1.5k views
-
-
தேர்தல் முடிவுகள் குறித்து நான் துவண்டு போகவில்லை! கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள்: டக்ளஸ் தேவானந்தா. [sunday, 2011-07-24 21:17:24] நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த எவ்விதமான பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெ…
-
- 13 replies
- 1.5k views
-
-
சென்னை: மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே அழைப்பதை தவிர்ப்பது குறித்து இரவுக்குள் பாஜக தரப்பு முடிவெடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கெடு விதித்துள்ளார். எதிர்ப்பை மீறி ராஜபக்சேவை வரவழைத்தால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ சூசகமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார். வரும் 26-ந் தேதி டெல்லியில் மோடி பதவியேற்க இருக்கிறார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைப்பதைத் தவிர்க்க மதிமுக பொதுச்செயலர் வைகோ டெல்லியில் முகாமிட்டு போராடிக் கொண்டிருக்கிறார். பாஜகவுக்கு 'கெடு'- ராஜபக்சேவை அழைத்தால் டெல்லியில் போராட்டம்: வைகோ சூசக எச்சரிக்கை!! இந்த நிலையில் டெல்லியில் இன்று பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தும் இது தொடர்பாக வைகோ வலியு…
-
- 12 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தளம் மீது தாக்குதல் மேற்கொள்ள வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியிலிருந்து மூவர், தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோ
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ நேற்று திடீரென கண்டி தலைமையக காவற்துறை பணியகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர்களின் கடமை குறித்து ஆலோசனை வழங்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் திடீர் வருகையை அடுத்து குழப்பமடைந்த காவற்துறை அதிகாரிகள், அவர் முறைப்பாடு எதனையும் பதிவுசெய்யச் சென்றிருக்கலாம் எனக் கருதி பதிவேடுகளுடன் முறைப்பாட்டைப் பதிவு செய்ய தயாராகியுள்ளனர். அதனைத் தடுத்த நாமால் ராஜபக்ஸ, காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும் எனவும் நியாயமாகவும் திறமையாகவும் செயற்படுவதன் மூலம் நாட்டில் குற்றச்செயல்களை தடுக்க முடியும் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்களின் கவிதைப் பேராட்டம்--புகைப்படம் இணைப்பு http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 2 replies
- 1.5k views
-
-
காங்கேசன் துறை சீமெந்து ஆலையை பார்வையிடுவதற்காக இந்தியாவிலிருந்து 'ஆதித்தியா பிர்லா' என்ற நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். கட்டுமான மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ரஜித இதனைத் தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்குச் செல்வதற்கான பாதுகாப்பு அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க காங்கேசன் துறை சீமேந்து ஆலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான திட்டமொன்றை ஏற்கனவே இந்த நிறுவனம் அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனத்துடன் சேர்ந்து காங்கேசன் சீமெந்து ஆலையை மீண்டும் இயக்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். சீமேந்திற்கு ஏற்பட்டுள்ள தட்டு…
-
- 3 replies
- 1.5k views
-
-
ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது Editorial / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 07:48 - 0 - 0 முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளையடுத்து, இவர் இன்று (14) புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ரஷட-பதயதனன-சகதரர-கத/175-248544
-
- 7 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா "தப்பான யுத்த கதாநாயகன்" எனவும் அவர் "இராணுவ மேதாவி" என்று உரிமை கோர முடியாதென்றும் ஏனென்றால் கடந்த காலத்தில் அவர் பல தடவைகள் தோல்வி கண்டவர் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அவரின் தலைமையின் கீழ் அதிகளவு தோல்விகள் ஏற்பட்டன. உண்மையிலேயே 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து படையினரை வாபஸ் பெறும்படி உத்தரவிட்டவர்களில் இவர் ஒருவர் என்று ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கோதாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள்-3 தாக்குதலை நடத்திய போது யாழ்ப்பாணத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் அகப்பட்டிருந்தனர். பட…
-
- 5 replies
- 1.5k views
-
-
[Thursday August 16 2007 06:10:08 AM GMT] அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோச்சிப்பட்டிக் கிராமத்தில் குடும்ப பெண்மணி ஒருவரும், அவருடைய இரண்டு வயது பாலகனும் இனந்தெரியாதோர்களால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்பரிதாப சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மர்ழியா (வயது 26), இவரது மகன் துஹைஸ் அகமட் (வயது 02) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டவர்களாவர். இக்கொலை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் இப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்தபோதே மேற்படி கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். -நன்றி தமிழ்வின்.
-
- 1 reply
- 1.5k views
-