ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143582 topics in this forum
-
வேலுடன் முருகன் இருக்கையில் அரச மரத்துடன் புத்தர் எதற்கு? - சீ.யோகேஸ்வரன் அம்பாறை - உகந்தை முருகன் ஆலயத்தில் கட்டப்படவுள்ள பௌத்த விகாரையை உடன் நிறுத்துமாறு கோரி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அம்பாறை மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவசர கடிதமொன்றை தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,, இலங்கை இந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக பல ஆயிரம் ஆண்டு காலமாக விளங்கும் அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் உள்ள உகந்தை முருகன் ஆலய சூழலில் சில பௌத்த துறவிகளினது ஆலோசனையில் திட்டமிட்ட வகையில் தாபிக்க திட்டமிட்டுள்ள பௌத்த விகா…
-
- 5 replies
- 1.5k views
-
-
அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவி நடத்தக் கூடிய தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, களநிலைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இவ்வாறான தாக்குதல்களை எதிர்கோள்வதற்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இராணுவத் தளபதி பணிப்புரை வழங்கியிருப்பதாக இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. “பயங்கரவாதம் இறுதிக் கட்டத்தில் இருப்பதுடன், சக்திவாய்ந்த படையினரால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்” என இராணுவத் தளபதி கூறியுள்ளார். வன்னி களமுனைத் தளபதிகளைச் சந்திக்கும் நோக்கில் இராணுவத் தளபதி வன்னிக் கட்டளைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். க…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிரிச்சு சிரிச்சு உன்னை சிறையில் வைப்பேன்....... கன்னம் பழுக்கப் பழுக்க ................. கள்ளிகளே!!!! கள்ளர்களே!!! காணொளியைப் பாருங்கள்!!! எதுக்கடி நகைகளைப் போட்டு எங்களைச் சித்திரவதை பண்ணுறீங்கள் thx http://newjaffna.com/index.php
-
- 4 replies
- 1.5k views
-
-
போருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்! முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்!! வடக்கில் 2009 போருக்குப் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகிறார். பௌத்தர்கள் வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், மு…
-
- 9 replies
- 1.5k views
-
-
மேற்கு நாடுகளில் இருக்கும் சில விடுதலைப்புலிகள் அந்நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது அழுத்தங்களை கொண்டுவந்து இலங்கைக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர் என இந்தியாவிலிருந்து வெளிவரும் டெக்கான் குரோனிக்கல் ஆங்கில பத்திரிகைக்கு மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் எப்போதும் காஷ்மீரையும் இலங்கை நிலவரத்தையும் பற்றி அந்நாடுகளின் பாராளுமன்றத்தில் ஆட்சேபக் குரல் எழுப்புகின்ற போதிலும், அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் மேற்கத்திய வல்லரசு நாடுகளினால் மேற்கொள்ளப்படும் அக்கிரமங்கள் பற்றி வாய்திறந்து பேசாமல், மெளனம் சாதிக்கின்றனவென்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு …
-
- 8 replies
- 1.5k views
-
-
பெண்கள் நலன்புரி நிறுவனத்தின் தகவலின்படி சனிக்கிழமை காலை வடமராட்ச்சியில் இமையாணனுக்கு அருகில் யாழ்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு சென்ற ஆயுதக்குழு அங்கிருந்த பெண்ணை அவரது வீட்டுக்கு அருகில் இருந்த பற்றைக்குள் இழுத்துச்சென்று குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியாக தெரியவருகிறது. இதனையடுத்து மயக்கமுற்றநிலையில் இருந்த குறிப்பிட்ட பெண்ணை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் யாழ்பாண வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. ஊடகங்களுக்கு தெரியப்படுத்திய பெண்கள் நலன்புரி நிறுவனம் பெண்ணினது பெயரை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்கள்
-
- 0 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு ரெபார்னா பகுதியில் இளங்கோ புரம் கிராமத்தில் இரவு வேளை வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அந்த வீட்டில் இருந்த இரண்டு குடும்ப தாய்மார் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இரு பிள்ளைகளின் தாய்மார்களான இந்த பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் திங்கள் கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்களாம். செவ்வாய் கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்து வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார். பாதிக்கப்பட்ட தாய்மார்கள் இருவ…
-
- 14 replies
- 1.5k views
-
-
தமிழர் மீதான சிங்களவரின் அடக்குமுறை -- ஒரு பார்வை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.5k views
-
-
"அல் ஜசிரா" தொலைக்காட்சி செய்தியாளர் பேர்ட்லி அண்மையில் வன்னி யுத்தகளத்திற்குச் சென்று சேகரித்த தகவலின்படி இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியை அடைவதற்கு இன்னும் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் படையினரின் எந்த முனையில் இருந்து இந்த தூரம் என்ற விடயத்தை அவர் குறிப்பிடவில்லை. எனினும் இராணுவ பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல படையினர் கிளிநொச்சியை கைப்பற்ற இன்னமும் ஒன்றரை கிலோமீற்றரே இருப்பதாக குறிப்பிட்டுள்ளதை சண்டே டைம்ஸின் பாதுகாப்பு களத்தி;ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் யுத்தக்களம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பு தகவலை தம்மால் பெறமுடியவில்லை என பேர்ட்லி குறிப்பிட்டுள்ளார். அமை…
-
- 0 replies
- 1.5k views
-
-
நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது வீரவணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
நன்றி: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35309
-
- 13 replies
- 1.5k views
-
-
[saturday, 2011-05-28 04:47:53] காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவிற்கு 1993ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி காணப்பட்ட கிரக நிலை அதே விதத்தில் தனது ஜாதகத்திலும் கூறப்பட்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன அண்மையில் தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறியுள்ளார். இலங்கையின் தென்பகுதியிலுள்ள பிரபல சோதிடர் ஒருவரே தனக்கு இந்த கிரக பலன் குறித்து கூறியதாகவும், அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக தான் தனது ஜாதகத்தை இந்தியாவிலுள்ள பிரபல சோதிடர் ஒருவரிடம் காட்டியதாகவும் இந்த சாதகத்தின் பலாபலன்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் தனக்கு நற்பலன்களைக் கொடுக்கும் என பிரதமர் தனக்கு நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். source:seiyhy.
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கை: புதிய அரசியல் திட்டம் மே 1ல் வெளியீடு ஏப்ரல் 06, 2007 கொழும்பு: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புதிய அரசியல் திட்டத்தை இலங்கை அரசு அடுத்த மாதம் வெளியிடுகிறது. மே 1ம் தேதி இந்த புதிய அரசியல் திட்டத்தை அதிபர் ராஜபக்ஷே வெளியிடுகிறார். இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, அதிபருக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பிரதமர் பதவி, நாட்டின் செயல் தலைவர் பதவியாக மாற்றப்படவுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் தலைமைச் செயலாளற் மைத்ரிபாலா சிரிசேனா கூறுகையில், மே 1ம் தேதி புதிய அரசியல் திட்டம் வெளியிடப்படவுள்ளது. இதில் முக்கிய அம்சமாக நாட்டின் செயல் தலைவர் பதவியாக பிரதமர் பதவி மீண்டும் மாற்றப்படவுள்ளது. அவரே இனி நாடாளுமன்றத்திற்குப் பதில் அளிக்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம். இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான். எனவே, ஆபத்து என்பது இந்தியாவிற்கு வடதிசையிலிருந்துதான் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. இனி அந்த ஆபத்து தென் திசையிலிருந்தும் கடல் கடந்தும் வரும் என்ற அச்சம் ஏற்பட்டது. ராணுவ தளங்களை அமெரிக்கா தனது எல்லைக் காவல் சாவடிகளாகக் கருதுகிறது. ஆகவே உலகம் முழுமையும், குறிப்பாக ரஷ்யா, சீனம் ஆகிய நாடுகளைச் சுற்றி அத்தகைய தளங்களை அமைத்த அந்த நாடு, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நமது தலைக்கு மேலே பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைத்தது. நமது காலடியில் இ…
-
- 0 replies
- 1.5k views
-
-
யதார்த்தமாகச் சிந்திக்கக்கூடாதா? 22.01.2008 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ்ஆர்பர் அம்மையாருக்கு எதிராகக் கொழும்பில் நாளை ஆர்ப் பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஜாதிக விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) ஏற்பாடு செய்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை முன்னின்று நடத்தவிருப்பவர் ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ. ஆவேச மாகப் பேசுவதிலும், தமது ""கோணங்கி'' நியாயங் களை முன்னிலைப்படுத்தி மக்கள் ஆதரவைத் திரட்டுவதிலும் ""கெட்டிக்காரர்'' என்ற பெயரும், மதிப் பீடும் அவருக்கு உண்டு. இது பரவலாகவும் பொது வாகவும் பேசப்படுவதும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இனவாதத்தைக் கொட்டுவதிலும் அவர் பலே பேர்வழி. இலங்கையில் தொடரும் வன்முறைகளால் பொது மக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து 20.05.2023 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்ட நபரின் புகைப்படத்தை பொலிஸ் தலைமையகம் அனுப்பிவைத்துள்ளது. இந்தப் படுகொலைக்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ளது. படத்தில் உள்ள மேற்படி நபர், தான் வசிக்கும் இடத்தில் இருந்து தலைமறைவாகி விட்டார். அவர் தொடர்பிலான தகவல் கிடைத்தால், 0718591733, 0718591735 அல்லது 0718596503 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு தலைமை…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக்-27 ரக வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்ததில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச பெருந்தொகையான மில்லியன் டொலரை கொள்ளையடித்தது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆய்வு அறிக்கையை கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏடு வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம்: கடந்த வருடம் ஒவ்வொன்றும் 2.462 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை பாதுகாப்பு அமைச்சு கொள்வனவு செய்திருந்தது. எனினும் இந்த கொள்வனவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா மில்லியன் டொலர் பணத்தை ஊழல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூர…
-
- 1 reply
- 1.5k views
-
-
கொழும்பு: உலகெங்கும் உள்ள தமிழர்களின் தொடர் கோரிக்கைகள், போராட்டங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு நகரில் நாளை தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்வதில்லை என்று இந்தித் திரையுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களும், நடிகைகளும் முடிவு செய்துள்ளதால், கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது. கொழும்பில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு இஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட வட இந்திய திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாம் தமிழர் இயக்கம் களத்தில் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து ரத்தக்கறையுடன் உள்ள ராஜபக்சே அரசு, தனது சுய லாபத்துக்…
-
- 15 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் விரிசல் விழுந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
போர்முகம் திகதி: 12.12.2008 // தமிழீழம் // [] - அ.லோகீசன். "விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின்…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிளேக் குழுவினர் மீது அரசு கடும் அதிருப்தி நாளை கொழும்பு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச்செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகி யோர் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சந்திப்பதற்குத் தீர்மானித் துள்ளனர். இது அரசுக்குப் பெரும் அதிருப்தியைத் தந்துள்ளதாக ஆளும்கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. முன்னதாக, இராஜாங்கத் திணைக்கள பூகோளக் குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்ரீபன் ராப்பும் கொழும்பு வந்த கையோடு முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சந்தித்திருந்தார். “ஐக்கிய நாடுகள் சபை யினால் ஏற்றுக்கொள்ளப் பட்ட இறையாண்மையுள்ள ஒரு நாட்டிற்கு உயர் மட்ட இராஜதந்திரிகள் வரும் போது அவர்கள் முதலில் இராஜதந்திரக…
-
- 5 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவு தொடர்ந்து நீடிக்கப்படும் என பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவை நீடிப்பது தொடர்பிலான உறுதிமொழி இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹய்ஸினால் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு வழங்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் டி.எம்.ஜயரட்னவை சந்தித்த பீற்றர் ஹய்ஸ், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவை வளர்த்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2851
-
- 15 replies
- 1.5k views
-
-
பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள் அரசினால் வழங்கப்படும் வீடமைப்பு விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டம் ஒன்றினை யாழ் மாவட்ட செயலக வாயிலில் நடாத்தினர். யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் இன்று(26) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணிவரை இவ்வடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு பல்வேறு காரணங்களை காட்டி இறுக்கமான நிபந்தனைகளை அரச இயந்திரங்கள் மேற்கொள்வதாக தெரிவித்தே இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பின்வருமாறு தமது கருத்துக்களை முன்வைத்தனர். அதாவது மீள்குடியேற்ற செயலணியின் மூலம் 200 வீடு…
-
- 17 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு? மன்மோகன் சிங் கலைஞரை கேட்டுள்ளார்!!!!! முக்கிய-செய்திஉப-கண்டம்இணைய-பதிப்புமலேசிய நிருபர் வெள்ளிக்கிழமை, யூலை 16, 2010 இலங்கையில் உள்ள தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கருணா நிதியினை ஆலோசனை வழங்குமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். கருணா நிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு தேவை. அவர்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும் வாழ ஓர் தீர்வு கிடைக்க நாம் விரும்புகின்றோம் இது தொடர்பாக உங்கள் ஆலோசனையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் மன்மோகன் சிங். கடந்த மூன்றாம் திகதி கலைஞருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. . Eelana…
-
- 11 replies
- 1.5k views
-
-
தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் பிரச்சினை முதல்வரின் முன்னுக்குப்பின் முரணான அணுகுமுறை தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள். நமது கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து நமது மீனவர்களை சிங்கள வெறியர்கள் படுகொலை செய்யும் போக்கு அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இது குறித்து மீனவர்களும் மற்றும் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் கடும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் இந்தியப் பிரதமருக்கு கவலைதோய்ந்த கடிதம் எழுதியிருப்பதாக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பின் மூலம் தமிழர்களின் கொதிப்புணர்வு அடங்கிவிடும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அது மேலும் மேலும் அதிகமானதே தவிர குறையவில…
-
- 5 replies
- 1.5k views
-