ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
சரத் பொன்சேகா மீது தாக்குதல்: உயிருடன் இருக்கிறார் தற்கொலைதாரி என அறிவிக்கப்பட்ட "மஞ்சுளாதேவி" [வெள்ளிக்கிழமை, 14 யூலை 2006, 17:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டிருந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என்பவர் உயிருடன் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று சிறிலங்காவின் இரகசியப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. முதலில் ரம்புக்கனையிலும் பின்னர் வெலிவேரியவிலும் வசித்து வந்த தற்கொலைதாரி மஞ்சுளாதேவி என அடையாளம் காணப்பட்டதுடன் அவரின் அடையாள அட்டையையும் இரகசியப் பிரிவினர் கண்டுபிடித்திருந்ததாக கூறப்பட்டது. பின்னர் மஞ்சுளாதேவி சிறு வயதில் தங்கிய…
-
- 3 replies
- 1.5k views
-
-
போருக்குத் தயாராகும் நாடு! மூடப்பட்டு விட்ட பேச்சுக்கான கதவு நிழல் யுத்தத்தின் அடுத்த கட்டம் என்ன? முழு அளவிலான யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கில் தினமும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இராணுவத்தினரின் பதில் நடவடிக்கைகள் அப்பாவிப் பொது மக்களையே இலக்கு வைப்பதாயிருப்பதால் அரசுக்கும் படையினருக்குமெதிரான உணர்வு மக்கள் மத்தியில் உச்சமடைந்துள்ளது. போர்நிறுத்தம் அமுலிலுள்ள போதிலும் மோதல்கள் நடைபெறுகின்றன. நிழல்யுத்தத்தின் தொடர்ச்சியே இந்த மோதல்களாகும். நிழல் யுத்தத்தை அரசு தூண்டியதன் விளைவை முழுநாடும் விரைவில் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. கிழக்கில் கடந்த இரு வருடங்களாக நிலவிய நிழல் யுத்தம் வடக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்ற ஆதாரங்களை அனுப்பி வைப்போம் தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்! இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் நிபுணர் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இக்குழுவுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வையுங்கள். இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். http://www.…
-
- 1 reply
- 1.5k views
-
-
Wednesday, June 15, 2011, 21:22சிறீலங்கா, தமிழீழம் போர்குற்றங்கள் குறித்தான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீது சில போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐநா நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு தொடர்சியாக மறுத்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறவும் விசாரணைகளுக்கு தயாரெனவும் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர் றெஜி அவர்கள் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படையாக தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக றெஜி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு தெரிவிக்கப்பட்ட இக்கூற்று சிறிலங்கா அரசுக்கு கடும் ந…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஈழத்தமிழருக்கு உணவு மற்றும மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக அனுப்ப அனுமதி மறுப்பதன் மூலம் இந்திய மத்திய அரசு மன்னிக்க முடியாத துரோகமிழைத்து வருகின்றன".இவ்வாறு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயளாலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டட இடத்திலிருந்து ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று வழங்கி நேர் காணலிலேயே இதனைத் தெரிவித்தார். இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர் சொல்லொணாத் துயரங்களுக்குள்ளகியுள்ளனர். உணவின்றி - நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளின்றி வாடி வதங்கி மடியும் துயரம் மிகுந்திருக்கின்ற வேளையில், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை காலை வெளிநாட்டிலிருந்து கொழும்பு திரும்பிய மேலக மக்கள் முன்னணியின், தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்றிரவே மீண்டும் வெளிநாடு பயணமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர்.இவர்களால் இலங்கைக்கு அச்_றுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டெழுவதைத் தடுப்பதற்கு நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்கா பவுண்டேசனில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற “தேசிய பாதுகாப்புக்கான எதிர்காலச் சவால்கள்” என்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை அரசு நாட்டை இராணுவப் மயப்படுத்தி வருவதாகச் சில குழுக்கள் கூறிவரும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அவர், நிலையான சமாதானத்தை…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பிலிருந்து சென்ற தொடரூந்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக சூரியன் எப் எம் தெரிவிக்கிறது மேலதிக செய்திகள் வெகுவிரைவில்
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழர்குரல் வானொலி முடக்கம்: ஊடகங்களின் மீதான சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதல் ஆரம்பம்...? தாயகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் உரிமைப்போராட்ட செய்தியினை எவ்வித குழப்பமும் இல்லாமல் உலகமெங்கும் ஒலிக்கச்செய்து வந்த தமிழர்குரல் வானொலி இணையத்தின் மீது இணைய தொழிற்நுட்ப தாக்குதல் நடைபெற்றுள்ளது. தமிழர் குரல் வானொலியின் domain: tamilarkural.fm, skype id: tamilarkural ஆகியவற்றினை எதிரிகள் கைப்பற்றியுள்ளனர்(hacking). tamilarkural@hotmail.com அயும் கைப்பற்றும் வேலை நடந்துள்ளது. புலிகளின் குரல் வானொலிக்கு போட்டியாக புதியதாக புலிகளின் குரல் வானொலி ஒன்றிணை ஆரம்பிக்கும் வேலையிலும் சிறீலங்கா கைக்கூலிகள் ஈடுபட்டுவந்ததாக புலிகளி…
-
- 5 replies
- 1.5k views
-
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் போராயுதங்கள் மவுனமாக்கப்பட்டுவிட்ட பின்னர், இன்றுவரை தொடர்ந்தும் தமிழ் மக்கள் அவமானப்படுத்தப்பட்டே வருகின்றார்கள். அவர்களது தன்மானத்தின் மீதான சிங்களத் தாக்குதல் தொடர்ந்தே வருகின்றது. அதன் உச்ச வெளிப்பாடே மாவீரர் துயிலும் இல்லங்களின் சிதைப்பும், தியாகி திலீபன் அவர்களது நினைவுத் தூபி அழிப்பும் ஆகும். மனித நாகரிகத்தின் நிழல் கொஞ்சமும் படியாத வக்கிர மனங்களுடன் சிங்கள தேசம் மேற்கொள்ளும் இத்தகைய ஈனத் தனங்கள் நிச்சயம் எதிர் விளைவுகளைப் பிரதிபலிக்கக் கூடியவை. தமிழ் மக்கள் மீதான இன வன்முறைத் தாக்குதல் காரணமாக உருவான ஆயுதப் போராட்டம் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டதுடன், இலங்கைத் தீவின் பொருளாதாரக் கட்டமைப்பையும் சிதைத்துவிட்டுள்ளது.…
-
- 2 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு லேக் வீதியில் அமைந்திருக்கும் விசேட அதிரடிப்படை முகாமிலுள்ள கரன் என்ற விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரே மட்டக்களப்பில் கடந்த 4,5 வருடங்களாக இடம்பெற்று வரும் கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் பிரதான காரணமாக இருப்பதாக புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவை சேர்ந்த சில்வெஸ்டர் என்பவரும் இவருடன் இணைந்து படுகொலை வேட்டையில் இறங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் கோத்தபாயா மற்றும் பஸில் ராஜபக்ஸவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவருவதாகவும் துணை ஆயுதக் குழுவினரை மேற்கோள் காட்டிய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. மக்ஸ்டா ரக வெள்ளை நிற வானொன்றையே இவர்கள் கடத்தலுக்காக பயன்படுத்துகின்ற…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையான எமது மனநிலையை எடுத்துக்காட்ட முடியவில்லை என வடக்கு முதல்வர் க.வி விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் பாதுகாப்பு பிரிவினரால் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இதனால் எங்களுடைய உண்மையான மனநிலையை கூட வெளிப்படுத்த முடியவில்லை என முதல்வர் கவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரின் வருகை குறித்து இந்திய தூதரகமே எமக்கு அறிவித்திருந்தது. எனினும் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் குறித்து டெல்லியே தீர…
-
- 28 replies
- 1.5k views
-
-
இனத்துரோகி ”கருணா”ஸின் குற்றச்சாட்டு - நாம் தமிழர் சட்டப்படி சந்திக்கும். தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆகவே, இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும். சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக்கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னி…
-
- 1 reply
- 1.5k views
-
-
வன்னி மக்களை மீட்பது குறித்து அமெரிக்கா வாசிங்டனில் இன்று சிவ்சங்கர் மேனனுடன் பேச்சு; அமெ. திட்டத்திற்கு இல.அரசு தயக்கம் வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களை அமெரிக்காவின் இராணுவத்தைப் பயன்படுத்தி மீட்கும் திட்டம் குறித்து, இப்போது வாஷிங்டன் வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் மூத்த அதிகாரிகள் இன்று முக்கிய பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளனர். வாஷிங்னில் நடைபெறவுள்ள இன்றைய சந்திப்பின் போது வன்னியில் மோதலில் சிக்கியுள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கான இந்தியாவின் ஆதரவு கோரப்படும் எனச் சொல்லப்படுகிறது. அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படையினரின் உதவியுடன் பசுபிக்கின் அமெரிக்க கட்டளை பீடத்தைச் சேர்ந்த "…
-
- 6 replies
- 1.5k views
-
-
'புலிகள்': பிரணாப் பேச்சு-தமிழக எம்.பிக்கள் கொந்தளிப்பு; லோக்சபா ஸ்தம்பிப்பு! புதன்கிழமை, பிப்ரவரி 18, 2009, 14:01 [iST] டெல்லி: இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார். இதையடுத்து கோபமடைந்த பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்…
-
- 5 replies
- 1.5k views
-
-
வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) வெற்றி பெற்றுள்ளது ILLANKAI TAMIL ARASU KADCHI 4,279 DEMOCRATIC PEOPLE'S LIBERATION FRONT 4,136 UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 3,045 SRI LANKA MUSLIM CONGRESS 587 UNITED NATIONAL PARTY 228 SRI LANKA PROGRESSIVE FRONT 10 INDEPENDENT GROUP 1 6 INDEPENDENT GROUP 3 1 INDEPENDENT GROUP 2 - ஆள்பலம் ஆயுத பலம் இராணுவ பலம் அரச பலம் என்று அத்தனையையும் பயன்படு;ததி தில்லுமுல்லுகள் செய்தும் அச்சுறுத்தியும் கூட மகிந்தவிற்கும் அவரது பரிவாரங்களுக்கும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
-
- 10 replies
- 1.5k views
-
-
இல்லாத ஒரு முகவரியில் (50 Lothian Road, Festival Square, Edinburgh EH3 9WJ) பொய்யாக ஒரு டிரஸ்ட் இருபதாக சொல்லி பொய் கணக்கு காட்டி மாட்டி கொண்டுள்ளார் இந்த ராஜபக்சே கூட்டாளி. இந்த காசில் இலங்கைக்கு அடிக்கடி விடுமுறையில் போய் உல்லாசமாக இருந்தவருக்கு வெகு விரைவில் வைக்கப்படும் ஆப்பு. விசாரணை தொடர்கிறது. BBC New (Summary): http://www.bbc.co.uk...1013_fund.shtml பி.கு.: இது மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளிலும் சிக்கியுள்ளார் இவர். இந்த பின்னணியில் இலங்கை பிரச்சினையும் ஒன்று. Daily Mail (Detail): http://www.dailymail...s-Grayling.html
-
- 5 replies
- 1.5k views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தினரை மீள திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே தமிழீழ மக்கள் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
பாலித கோகன்ன மீது மகிந்த அதிருப்தி [திங்கட்கிழமை, 7 மே 2007, 14:23 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா வெளிவிவகார உறவுகள் குறித்து சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளரும், சமாதான செயலகப் பணிப்பாளருமான பாலித கோகன்ன தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமைகள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் நடத்தப்பட்டது குறித்து அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பாலித கோகன்ன கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்துகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச அதிருப்தியடைந்துள்ளதாக அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஊடாக பாலித கோகன்னவுக்கு அறிவுறுத்தல் சுற்றறிக்கை வ…
-
- 1 reply
- 1.5k views
-
-
Views - 13 இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயற்பாடுகள் மீண்டும் இரத்தக்களரியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதத்தை, வன்முறைகளை விரும்பவில்லை என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை மிகப் பெரிய சான்றாகும். இந்த நாட்டிலுள்ள தம…
-
- 11 replies
- 1.5k views
-
-
13.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....35d7baf04342e1c
-
- 0 replies
- 1.5k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கமல் குணரத்ன இறுதிப்போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியடையும் குறிப்பிடத்தக்கது. கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் மேற்கொண்டதையடுத்து வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும். https://www.virakesari.lk/article/69188
-
- 7 replies
- 1.5k views
-
-
"வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது" என தேச நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்குத் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் அமைச்சர் …
-
- 5 replies
- 1.5k views
-
-
லிபியா மீதான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் நடவடிக்கை மற்றும் மேற்கு நாடுகளின் தாக்குதலால் அத்திரமுற்ற லிபிய ஆதரவாளர்கள் பான்கிமூனை தாக்கியுள்ளனர். அரபு லீக் கூட்டத்தில் கலந்துகொண்டு வெளியேறுகையில் நூற்றுக்கனக்கான மக்கள் பான்கிமூனை நோக்கி கற்களை வீசினர். வரலாற்று முக்கியத்தும் மிக்க தாகிர் சதுக்கத்தில் கூடிய மக்களே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாகீர் சதுக்கத்திலேயே அண்மையில் மக்கள் புரட்சி ஒன்ரை ஏற்படுத்தி ஆட்சியினை கவிழ்த்தனர். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழகத்தில் சுபநிகழ்வுகளில் நீங்காது இடம்பெற்றுவிட்ட தேசியத் தலைவர் பிரபாகரன். முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பின்னர் தூங்கிக் கொண்டு இருந்த தமிழனத்தை விழிப்படையவைத்திருக்கின்றது. ராசீவ்காந்தி என்ற ஒற்றை உயிரிழப்பினை வைத்து தாய்த் தமிழகத்தை தொப்புள்கொடி உறவுகளிடம் இருந்து பிரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் எல்லாம் மே-18 2009 ற்கு பின்னர் தோல்வியடைந்துவிட்டதன் வெளிப்பாடுதான் இந்த விளம்பரப் பதாதைகள். தமிழகத்தில் தற்போது எங்கு எந்த சுபநிகழ்வுகள் நடந்தாலம் தலைவரது படம் தவறாது இடம்பெற்றுவிடுகின்றது. காதுகுத்து நிகழ்வு பிறந்தநாள் நிகழ்வு திருமண விழா கடைதிறப்பு விழா புதுமனை குடிபுகு விழா என்று மங்களகரமாக நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் வரவேற்பு பதாதைகள் வைத்து…
-
- 1 reply
- 1.5k views
-