ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
கேப்பப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரி, கடந்த சனிக்கிழமை உயிரிழந்த நிலையில் அவரது உடல் நேற்று அக்கினியுடன் சங்கமமானது. ஈழ விடுதலைக்காக ஒரு கண்ணை இழந்த செல்வகுமாரி அதன் பாதிப்பால் மறுகண் பார்வையையும் இழந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இவர் மண்ணெண்ணை ஊற்றி விறகை தீமூட்டியுள்ளார். அதன்போது அவர் உடுத்தியிருந்த சேலையிலும் தீப்பிடித்துள்ளது. கண்பார்வையற்ற அவர் திடீரென எற்பட்ட தீ விபத்தால் உடனடியாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார், சிகிச்சை பயனளிக்காது கடந்த சனிக்கிழமை மதியம் உயிரிழந்துள்ளார். …
-
- 6 replies
- 662 views
-
-
Published By: Vishnu 03 Nov, 2025 | 07:19 PM வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் திங்கட்கிழமை (03) தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் மாணவர்களின் மது விருந்து நீண்ட நேரம் இடம்பெற்ற நிலையில் சனிக்கிழமை காலை வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மரணமடைந்த நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஆவார். குறித்த மாணவனுக்கு பகிடிவதையின் போது வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்க…
-
-
- 6 replies
- 453 views
-
-
நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர் Feb 6, 2026 - 04:10 PM நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 05 ஆம் திகதி குறித்த பாடசாலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை மாணவி நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். எனினும், இன்று (06) மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் மற்றும் உடல் வலி அதிகரித்துள்ள நிலையி…
-
-
- 6 replies
- 436 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மையில் சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி தனது கட்சிப் பத்திரிகையான தினமுரசு பத்திரிகையை விற்பனையை செய்யும் நடவடிக்கையில் ஈ.பி.டி.பி ஈடுபட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயற்படக்கூடாது என்று சிறிலங்காவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதில் போட்டியிடவுள்ள ஈ.பி.டி.பி கட்சி தமது பிரச்சாரப் பத்திரிகையை மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தர்களைக் கொண்டு எவ்வாறு விற்பனை செய்ய முடியும் என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்தச் செயற்பாடானது தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடாகவே கருதப்பட வேண்டும். அரசில் அங்கம் வகிக்கும் தேசவிரோத கட்சியாகிய ஈ.பி.டி.பி இந்…
-
- 6 replies
- 1.6k views
-
-
மோடியின் இலங்கை வருகை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது பொதுபல சேனாவின் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவிப்பு (க.கமலநாதன்) இந்தியாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற போது இந்திய பிரதமர் இலங்கை வருகின்றார். எனவே அவரின் வருகை தேசப்பற்றுள்ளவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரி…
-
- 6 replies
- 518 views
-
-
அடுத்தமாதம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், சிறிலங்கா அரசாங்கத்திடம் மூன்று நிபந்தனைகளை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் நொவம்பர் மாதம், கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பதற்கு, சிறிலங்காவிடம் மூன்று நிபந்தனைகள் குறித்து அழுத்தம் கொடுக்க புதுடெல்லி தயாராகி வருகிறது. அடுத்தமாத முற்பகுதியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான, உயர்மட்டக் குழு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தப் பயணத்தின்போது, சிறிலங்கா அரசாங்கத்திடம், சல்மான் குர்ஷித் இந்த மூன்று நிபந்தனைகளையும் வாய்மொழியாகத் தெரிவிப்பார் என்று …
-
- 6 replies
- 1.4k views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் புதிய காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தையின் கடற்கரைப் பகுதியில நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய பள்ளிவாயல் திங்கட்கிழமை(23) திறந்துவைக்கப்பட்டது. எஸ்.எப்.ஆர்.டி எனும் நிறுவனத்தினால் குவைத் நாட்டின் தனவந்தர் ஒருவரின் உதவியுடன்; நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய பள்ளிவாயலை காத்தான்குடி ஜாமித்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் மௌலானா மௌலவி எம்ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஹசரத் திறந்து வைத்தார். இந்த வைபவத்தில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவரும் காததான்குடி காதிநீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம்.ஐ.சுபைர், உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது அஸர் தொழுகை நடத்தப்பட்டு பள்ளிவாயலில் தொழுகைகள்…
-
- 6 replies
- 599 views
-
-
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கிடையில் குரங்கம்மை நோய் அதிகமாக பரவும் அபாயம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கிடையில் குரங்கம்மை நோய் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதன் ஊடாக குரங்கம்மை பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் 95 சதவீதமானோர்…
-
- 6 replies
- 604 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான மண் அகழ்வால் பாரிய சூழலியல் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன் ஆறு 7 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து குடமுருட்டி ஆற்றுடன் இணைகின்றது. இந்த ஆற்றுப்பகுதியில் நாள்தோறும் நடைபெறும் மண் அகழ்வால் ஆற்றுப் பகுதியிலுள்ள அக்கராயன் மத்தியப்பகுதி, அக்கராயன் கிழக்குப்பகுதி, ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களின் நிலத்தடிநீர் பெரும் ஆபத்;தை எதிர்நோக்கியுள்ளது. அக்கராயன்மத்தி என்பது கடல் மட்டத்திலிருந்து 115 அடிக்கு மேலான உயர்வான பகுதியாகும். மேற்படி பகுதிகளில் நிலத்தடி நீரை தக்கவைப்பதில் அக்கராயன் ஆறு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தற்போது அக்கராயன் ஆற…
-
- 6 replies
- 681 views
-
-
பாடசாலைக் கல்வித் தரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு! பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சபை முதல்வாரன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு பிள்ளையும், 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை ம…
-
- 6 replies
- 531 views
-
-
மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான பிரேரணையை மீளாய்வு செய்து சமர்ப்பிக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட பிரேரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இடம்பெற்ற மக்கள் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்போது, சுமார் 40 பேர் தமது யோசனைகளை சமர்ப்பித்த நிலையில், இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட கட்டணக் குறைப்பு வீதத்தை விடவும் அதிக வீதத்தில் கட்டணக் குறைப்பை மேற்கொள்ள வேண்ட…
-
- 6 replies
- 479 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 OCT, 2024 | 01:57 AM சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு என்பன கனிசமானளவு தமிழ் மக்களை அணி திரட்டுவதில் முன்நகர்ந்துள்ளமை தமிழ் அரசியற்பரப்பில் புதிய திருப்பம். கடும்போக்கு சிங்கள – பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தி தெற்கில் வெல்லக் கூடியவராக கணிக்கப்படும் பேரினவாதத்தின் முகவர் வென்றுவிடக் கூடாதென்ற அச்ச நிலையானது பிறிதொரு பேரினவாதத்தின் முகவரிற்கு வாக்களிப்பதற்கு மக்களை வழிநடத்தியிருப்பதும் வெள்ளிடைமலை. …
-
-
- 6 replies
- 634 views
- 1 follower
-
-
மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா Nov 19, 2019 | 1:59by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார். வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “தமது ஜனநாயக தேர்தலை எதிர்கொண்ட சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது. பாதுகாப்புத்து…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 12:32 PM யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் : அதற்கான பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை(நேற்று) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் என குறிப்பி…
-
-
- 6 replies
- 529 views
- 2 followers
-
-
பல கட்சிகளைப் பிரித்த இந்த அரசு, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிரிக்கச் சதி செய்கின்றது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே எமது இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: பா.அரியநேந்திரன் "தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் உடைப்பதற்காகச் சில சக்திகள் கட்சியினுள்ளும் ஊடுருவியுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றது. பல கட்சிகளை உடைத்த இந்த அரசு எங்களையும் பிரிக்க முயல்கிறது. நாங்கள் தமிழர்…
-
- 6 replies
- 619 views
-
-
தந்தையை திருத்த முயன்ற மகள் : தந்தையின் கொடூரத்தால் மகள் பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம், அளவெட்டி மத்தியில் பெற்ற மகளை தீ மூட்டி எரித்துக் கொன்ற தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ் அளவெட்டி மத்திப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் திருவளங்கன் ஜனனி என்ற 27 வயது யுவதி பரிதாபகரமாக உயிரிழந்தாள். குறித்த யுவதி கடந்த ஒருவார காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தொல்லை த…
-
- 6 replies
- 1.2k views
-
-
அரசியல் யாப்பு மாற்றத்திற்கு எதிராக ஜேவிபி யினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். கொழும்பு நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிந்த நிலையில் இவ்ஜனவெள்ளம் ஒன்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கொழும்பு ஆயுர்வேத சந்தியில் ஆரம்பமான இவ்வார்பாட்டம் , பாராளுமன்ற முன்றலை சென்றடைந்துள்ளது. Dailymirror.lk
-
- 6 replies
- 2.5k views
-
-
விக்கிக்கு விரைவில் சம்பந்தன் பதிலடி! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையை கடுமையாகச் சாடி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே பதிலடி கொடுக்கத் தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகின்றது. பதிலடி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையைக் கடுமையாகச் சாடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். தான் எந்தவொரு கட்சி சார்ந்தவன் அல்ல என்றும், கட்சித் தலை…
-
- 6 replies
- 708 views
-
-
சிறுமி கொலை; யாழில் வீதிமறியல் போராட்டம் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து காரை நகர் செல்லும் வீதியை மறித்து சுழிபுரம் காளுவன் சந்தியில் பொதுமக்கள், பெற்றோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீதி மறியில் போராட்டமானது இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/35657
-
- 6 replies
- 1.6k views
-
-
Published By: VISHNU 27 APR, 2023 | 09:12 PM (எம்.மனோசித்ரா) விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் அழைப்பிற்கமைய இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உள்ளிட்ட நால்வரடங்கிய தூதுக்குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். 1982இல் போர் விமானத்தின் விமானியாக இந்திய விமானப்படையில் இணைந்த தற்போதைய விமானப்படை தளபதி அந்நாட்டின் பல்வேறு போர் விமானங்களில் விமானியாக செயற்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த அவர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி இந்திய விமானப்படையின் 30ஆவது தளபதியாகப் பதவியேற்றார்.…
-
- 6 replies
- 782 views
- 1 follower
-
-
ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011 15:35 | சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் தேதி 'மே 17 இயக்கம்' அழைப்பு விடுத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்களின் வருகையுடன் உணர்வுபூர்வமாக நடந்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் உணர்வுள்ள கட்ச்சிகளும்,அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்ததோடு மட்டுமல்லாது இந்த நிகழ்வுக்கும் கட்சி பேதமின்றி ஒரு குடையின் கீழ் இந்த நிகழ்வை நடத்திமுடித்துள்ளமை சிறப்பே. http://youtu.be/AIicQFW8Pcc http://youtu.be/Sry8EpKXUKU http…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
சென்னையில் ஹில்லரி கிளின்ரன் http://www.youtube.com/watch?v=NUD02Duv_II&feature=feedu
-
- 6 replies
- 557 views
-
-
17.03.2008 நிருபர் எல்லாளன் யாழ் குடாநாட்டில் தொடர்ந்துகொண்டுள்ள படுகொலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட மரணங்களினால் கணவனை இழந்து வாழும் .விதவைகளின் எண்ணிக்கை சுமார் 29 ஆயிரம் எனக்கூறப்படுகின்றது. இந்த விதவைகளுள் 40 வயதிற்குட்பட்டவர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் எனவும் யாழ் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. இவர்களுள் சுமார் 23 ஆயிரம் பேர் மாத வருமானமாக ஆயிரம் ரூபாவையோ அல்லது அதற்கு குறைவான தொகையினையோ மாத வருமானமாகப்பெறுகின்றனர். இவர்களில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் எவருடைய தயவுமின்றி தம் வாழ்க்கையினை நடாத்துகின்றார்கள். கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தற்போது வரையில் 700 பேர் வரையில் விதவைகளாகியுள்ளார்கள். அதில் பெருவாரியானோர் படுகொலைகளின…
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான யுத்தம் சரியானதே - இராணுவம்:- 24 ஜனவரி 2013 தெற்கைப் போன்றே வடக்கிலும் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர் –கோதபாய தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான யுத்தம் சரியானதே என இராணுவம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இராணுவம் நடத்திய விசாரணை அறிக்iகையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் இராணுவ உயர் அதிகாரிகளினால் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டது. சர்வதேச சமூகத்தின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மேற்க…
-
- 6 replies
- 735 views
-
-
ஆம். தமிழ் தான் முதல்மொழி மகாவம்சத்தில் சொல்லப்படுபவை நிரூபிக்கக்கூடியவை அல்ல. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டனர். பிரபாகரனுக்கு மக்களை பலிக்கடாக்களாக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இவ்வாறு பல்வேறு துணிச்சலான பதில்களை ‘டெரன’ செய்தியாளருடனான நேர்காணலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் அளித்துள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு: ஊடகவியாளர் : பாராளுமன்றத்தில் கன்னி உரையிலேயே உங்களுக்கு என்ன நடந்தது? விக்னேஸ்வரன் : எம்.பிக்கள் அதனை கேட்டு குழப்பமடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தெளிவொன்று இ…
-
- 6 replies
- 596 views
-