Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானியாவில் ஹரோ மேற்கை வதிவிடமாகக் கொண்ட சிவபாதம் சிவசொரூபன் எனும் வர்த்தகர், கடந்த ஒரு மாதங்களுக்கு முன் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்துக் இலக்கத்தகடற்ற வெள்ளை வானில் வந்த சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கும் கருணா ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டு, பின் சிங்கள விசேட அதிரடிப்படையால் பொறுப்பேற்கப்பட்டு, காணாமல் போன சம்பவமானது, பிரித்தானியா அரசின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், பிரித்தானிய அரசின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், ஹரோ மேற்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் மாண்புமிகு திரு கரத் தோமஸ் அவர்களுக்கு சவால் விடும் வகையில் நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. ......... http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

  2. இலங்கை மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனம் http://www.tamilsweet.com/Tamils/page.php?73 இலங்கை இராணுவம் அப்பாவிச் தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார். பாரிய மனிதப் பேரவலம் இடம்பெற்று வருவதாகவும், இலங்கை நிலவரம் மற்றுமொரு காஸா அவலம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவதற்கான முழுப் பொறுப்பையும் அரச படையினர் ஏற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு வெற்றிகள் குறித்து இலங்கை அரசாங்கம் பெருமிதம் அடைந்த போதிலும், சொந்த மண்ணின் மைந்தர்கள் பலர் பேரவலத்தை எதிர்நோக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரொபர்ட் ஏவன்ஸ், ஐரோப…

    • 3 replies
    • 1.5k views
  3. உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றது உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகின் எந்தவொரு இராணுவத்துடனும் ஒப்பீடு செய்ய முடியாத அளவிற்கு இலங்கைப் படைவீரர்கள் திறமையானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். படையினரின் இராணுவ வெற்றிகள் போற்றத் தக்க விதத்தில் அமைந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்த சிங்க ரெஜிமண்ட் வீரர்களை நினைவு கூறும் வகையில் அம்பேபுஸ்ஸவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை இராணு…

  4. யாழில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள 6க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சொரூபங்களை இன்று இனம் தெரியாத கும்பலொன்று சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2 இடங்களில் முழுமையாகவும், இரண்டு இடங்களில் பகுதியளவிலும் ஏனைய இடங்களில் சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1342158

  5. இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்தப் பகுதியில் 21 தீவுக் கூட்டங்கள் உள்ளன. கடல் வாழ் பல்லுயிர் உயிர்கோளமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன. இந்தப் பவளப்பாறைகள் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கு முக்கியமான வாழ்விடமாக அமைந்துள்ளன. இங்கு 4 ஆயிரத்து 223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் உயிரினங்கள், அழிந்துவரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வக…

  6. முக்கியப் பிரமுகர்களின் பயணங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை அதனை மீண்டும் ஒரு தடவை துல்லியமாக அறிந்த விட்டதனையே நேற்று முன்நாள் பலாலி கூட்டுப்படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எடுத்துக்காட்டியுள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  7. இலங்கை தொடர்பான தேசியக்கொள்கையை ஜெயலலிதா தலைமையிலான அரசு மீறினால், தமிழகத்தில் ஆட்சிக்கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டியில்,"இலங்கை அரசுடனான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடுவதை நிறுத்துமாறு மத்திய அரசு,அரசியல் சாசனத்தின் 256 வது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழகம் வரும் சிங்களர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இந்த உத்தரவை பின்பற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தவறி, இந்திய தேசியக்கொள்கையை எதிர்காலத்தில் மீறினால்,தமிழகத்தின் …

  8. வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள் இலங்கை அரசாங்கம் அனுப்பிய உயர்நிலைப்பிரதிநிதிகள் குழு ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூனை சந்தித்துவிட்டு ஜெனிவாகிளம்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் உச்சக்கட்டசர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கின்றநிலையில்தான்- எதிர்பாராத இந்தச்சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச்சந்திப்புஎதற்காகநடந்தது? இதில் பேசப்பட்டவிடயங்கள் என்ன எடுக்கப்பட்ட முடிவுகள் என்னஎல்லாமே மர்மமாகத்தான் உள்ளது. அதற்குக்காரணம் இது அதிஉச்ச இரகசியம் பேணப்பட்ட ஒரு சந்திப்பு என்பதுதான். இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் றொமேஷ் ஜெயசிங்கவும் சட்டமா அதிபர் மொகான்பீரிஸும் கொழும்பில் இருந்துபுறப்பட்டுச் சென்று நியுயோர்க்கை அடைந்தவரை இதுபற்றி வெளியே மூச்சுக்கூடவிடவில்லை. பி…

    • 1 reply
    • 1.5k views
  9. (இராஜதுரை ஹஷான்) மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசுமடையாக்குவற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். களனி ரஜமஹா இன்று விகாரையில் வெசாக் தின வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலினால் தேசிய வெசாக் பண்டிகையினை கொண்டாடாமல் இருக்க முடியாது. அனைவரும் தைரியமாக செயற்பட வேண்டும். நிலைமைகளை வெற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி…

    • 7 replies
    • 1.5k views
  10. விசேட பாதுகாப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு விசேட பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதனையடுத்து, வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள…

  11. ஐந்து பேர் கொண்ட ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் குழு இன்று இலங்கை வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் அடங்கிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் குழு இன்று இலங்கை வரவுள்ளது. கொழும்பில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட ரவிராஜ் தொடர்பான விசாரணைகளுக்காக ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வெளிநாட்டு அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை அடுத்தே ஐந்து பேர் அடங்கிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் இன்று இலங்கை வரவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது த…

    • 5 replies
    • 1.5k views
  12. யாழ்.சாவகச்சேரி முருகன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று படைவீரர்கள் பலியாகியதை தொடர்ந்து அந்த பிரதேசத்தில் பதற்றநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள படை முகாமைச் சூழ படையினர் குவிக்கப்பட்டு இருப்பதோடு முகாமிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் எனக் கருதியே இந்த இடத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறிவருகின்றனர். இதேவேளை படைமுகாமில் உள்ள இராணுவப் பரிவினரை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பில் இராணுவத்தினருக்கிடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக இராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.. மேலதிக தகவல்கள் விரைவில்.... http://akkinikkunchu.com/new/index…

  13. அரியநேந்திரனிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் 4ம் மாடியில் தீவிர விசாரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேந்திரனிடம் இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் நான்காம் மாடியில் சுமார் நான்கரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டமொன்றில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை அரியநேந்திரன் வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் பிரிவினைவாத கருத்துக்களை அரிய…

  14. தமிழகத்தில் ஈழ ஆதரவும், இந்திய உளவுத்துறையினரின் திட்டமிட்ட சதிகளும் நேற்று 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாருக்கு வீரவணக்கமும் நாட்டுப்பற்றாளர் தினமும் சிட்னியில் நடைபெற்ற போது பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் 'புரட்சி பெரியார் முழக்கம்' ஏட்டின் ஆசிரியருமான 'விடுதலை' க.இராசேந்திரன் அவர்களின் உரையில் இருந்து தமிழகத்தில் இன உணர்வு இன்னும் மங்கிவிடவில்லை என்று எடுத்துக் கூறியதுடன், அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் அதன் பின்னணி விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உணர்வினை சுட்டிக்காட்டியதுடன் அண்மையில் இந்தியா - சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு உடன்பட்ட முதல்வரை அ…

    • 4 replies
    • 1.5k views
  15. பாலித ஆரியவன்ச கலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுமாறு சுமந்திரன் எம்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார். பதுளை ஹாலி-எலயில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து, வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட…

  16. [size=2][/size] தமிழ்க் கடவுள் நல்லூர்க் கந்தனுக்கு இன்று தீர்த்தத் திருவிழா.தன்னை வழிபட்டோருக்கு அருளை வாரி வழங்கும் பெருநாள். இந்நாளில் நமக்கு அவன் தரவேண்டியது எது என்று சிந்திப்பது அவசியம். உலகெல்லாம் வாழும் இனங்களின் தலை மைகள் மனிதர்களிடம் இருந்தபோது, தமிழ் இனம் மட்டும் தமிழ்த் தலைவனாக- தமிழ்க் கடவுளாக முருகனைக் கண்டனர். முருகனும் தமிழ் மீது கொண்ட காதலால் நாவற் கனியினூடு ஔவையோடு தர்க்கம் புரிந் ததும் அருணகிரிநாதர் சுவாமிகளுக்கு சந்தத் துடன் திருப்புகழ் பாட அடியயடுத்துக் கொடுத்த தும் நடந்தேறியது. இஃது வேறு எந்தமொழி யிலும் இனத்திலும் இல்லாச் சிறப்புமாகும். இவ்வண்ணம் தமிழ்க் கடவுளாக இருக்கும் கந்தப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உண்டு. முருகன் சூரனை சங்காரம் செய்த வீர…

  17. உண்மையின் தரிசனம் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்... மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை எமது இறப்பின் மூலம் பெற்றுத்தரும். இதனை வானத்திலிருந்து வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுடன் சேர்ந்து நானும் பார்த்து மகிழ்வேன். தியாகி லெப்.கேணல். திலீபன்

  18. பதிந்தவர்: ADMIN திங்கள், 22 ஆகஸ்ட், 2011 பிரித்தானிய தமிழர் விளையாட்டுத்துறை 16வது தடவையாக நடத்திய மாபெரும் தமிழர் விளையாட்டு விழா, மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டு நிகழ்வாக நேற்று (21-08-2011) மிக சிறப்பாக இடம்பெற்றது. தென்மேற்கு லண்டனிலுள்ள றொஹாம்ரன் வேல் (Roehampton Vale) றிச்சர்ட்சன் ஈவான்ஸ் மெமோறியல் பிளேயிங் ஃபீல்ட்டில் (Richardson Evans Memorial Playing Fields) நடைபெற்ற இந்தப் போட்டிகள் அக வணக்கம் மற்றும் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பித்திருந்தது. தமிழீழத் தேசியக் கொடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தியும், பிரித்தானிய தேசியக் கொடியை பாவலர் இராஜ…

  19. இலங்கையின் நன்மதிப்பை சீர்குலைக்க ரொபர்ட் ஏவன்ஸ் சூழ்ச்சி - இலங்கை குற்றம் சாட்டு: ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படும் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஏவன்ஸ் செயற்பட்டு வருவதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது. ரொபர்ட் ஏவன்ஸ் தலைமையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பாராளுமன்றக் குழுவினர் உண்மைக்குப் புறம்பான தவகல்களை வெளியிட்டிருப்பதாக ஒன்றிய பாராளுமன்றக் குழுவின் இலங்கைப் பிரதிநிதி ரவிந்த ஆசிரியசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சாதகமான விடயங்கள் மூடிமறைக்கப்பட்டும், பாதகமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவ

  20. நாசகார தாக்குதல்களை முறியடித்து பொங்குதமிழ் மீண்டும் புத்துயிர்ப்புடன் இயங்கும் பொங்குதமிழ் இணையத்தளம் (www.ponguthamil.com) தற்போது செயலிழந்த நிலையில் இருப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை (25.03.11) இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பாரிய சைபர் தாக்குதலே (cyber attack) காரணமாக அமைந்துள்ளது என்பதனை உலகத் தமிழ் மக்களுக்கு அறியத் தருகிறோம். இத் தாக்குதல் சீனாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எமது ஆரம்ப விசாரணகளிலிருந்து தெரியவந்துள்ளது. மீண்டும் தளத்தை இயங்க வைப்பதற்கான வேலைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் பொங்குதமிழ் புத்துயிர்ப்புடன் இயங்கும் என்பதை அறியத் தருகிறோம். தமிழ் இணையத்தளங்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரச…

    • 0 replies
    • 1.5k views
  21. கல்லாறு, கரடிக்குளம், மாங்கேணி முகாம்களில் இருந்து ஒரேதடவையில் வாகரைக்கிராமங்களை நோக்கி சிறீலங்கா படையினர் பாரிய ஆட்டிலறி தாக்குதலை 8 மணிநேரத்திற்கு மேலாக மேற்கொண்டுள்ளனர். வாகரை வைத்தியசாலைக்கு மிக அண்மையாகவும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. வாகரையை சிறீலங்கா படையினர் கிறீஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக இருநாட்களுக்குள் கைப்பற்றிவிடுவோம் என்று ஊடகத்தினர் மத்தியில் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப்.nஐனரல் சரத்பொன்சேகா சூளுரைத்திருந்தமை தெரிந்ததே.

  22. கடத்தல் சம்பவங்கள்: வான் படை அதிகாரி கைது சிறிலங்காவில் நடைபெறும் கடத்தல் சம்பவங்களில் தொடர்பிருப்பதாகக் கூறி சிறிலங்கா வான்படையின் முன்னாள் அதிகாரி நிசாந்த கஜநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். "கடத்தல்கள், கப்பம் அறவிடுதல், படுகொலைகள் ஆகியவற்றுக்கு மூளையாக இருந்து செயற்பட்டதாக கஜநாயக்கவை கைது செய்திருக்கிறோம்" என்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கஜநாயக்கவுக்கு இச்சம்பவத்தில் தொடர்புள்ளமைக்கான போதுமான ஆதாரங்களைத் திரட்டிய பின்னரே அவரைக் கைது செய்ததாகவும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பில் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் நேரடி சாட்சிகள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் நாள் கஜநாயக்கவிட…

  23. அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு, இலங்கையை முற்றாக மூட வேண்டும் – துஷார ஹிந்துனில் நாட்டின் பாரத்தூரத்தன்மையை உணர்ந்துக் கொண்டு, அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு இலங்கையை முற்றாக மூட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார ஹிந்துனில் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று அதிகளவான கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க இராணுவ முகாமும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முப்படையினர், பொலிஸார், வைத்தியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் இன்று கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள…

  24. லங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார். கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதனை நான் தமிழகத்திலும் சொல்வேன் என அவர் மேலும் கூறினார். பேராசிரியர் அவர்களே * வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றும் போது அதற்கு ஆதரவாக பேசியவர்கள் என்ன கூறி தனிநாட்டிற்கு ஆதரவு…

    • 7 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.