ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சியினரின் இன்றைய பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ''நந்தி ஒழிக, நீதி வாழ்க” என எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்து மதத்தை முன்னிறுத்தி வெளிவரும் விமர்சனங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் விளக்கமளித்துள்ளனர். இந்து மதத்தை இழிவுபடுதும் எந்தவொரு நோக்கத்திலும் இவை முன்னெடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சி தமிழ் உறுப்பினர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர். கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணிக்கு பொலிஸாரினால் ஏற்படுத்தபட்ட இடையூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள…
-
- 5 replies
- 475 views
-
-
எதற்காக... அவசரகால நிலைப் பிரகடனம்? கனேடிய உயர் ஸ்தானிகர் கேள்வி ! எதற்காக அவசரகால நிலைப் பிரகடனம் செய்யப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களாக அதிகளவிலான மக்கள் பங்காற்றுதலுடன் நாடு முழுவதும் இடம்பெற்ற அமைதியான போராட்டங்கள் இடம்பெற்றுவதாக கூறினார். இந்த போராட்டங்கள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமை என டேவிட் மெக்கின்னன் கூறியுள்ளார். இவ்வாறு அமைதியாக போராட்டங்கள் நடக்கும் போது, அவசரகாலநிலைப் பிரகடனம் ஏன் செய்யப்பட்டது என்பதை புரிந்து கொள்வது கடினம் என அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1280556
-
- 5 replies
- 300 views
-
-
29,30 ஆம் திகதிகளில் காலியில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு 1.5 பில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்குமென அரசு நம்பிக்கை வீரகேசரி நாளேடு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் 29,30 ஆம் திகதிகளில் காலி மாநகரில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா,ஜப்பான், நோர்வே,ஜரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர். "மகிந்த சிந்தனை புதிய இலங்கைக்கான இலக்கு' என்னும் தொனிப்பொருளிலில் இந்த மாநாடு நடைபெறுக…
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவின் ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என அக்கட்சி தேட்டுள்ளது. இந்த நிபுணர் குழுவில் யாஸின் சூகா என்ற முன்னணி தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் இடம்பெற்றுள்ளார். இலங்கையில் இடம்பெற்றுள்ள சட்டமீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் அமையக்கூடியவை என்றும் அந்த நிபு…
-
- 5 replies
- 1.4k views
-
-
யாரும் காலை வாரிவிடக் கூடாது : மனோ கணேசன்! அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் நிலைப்பாட்டில் உள்ளவர் என்று பிரசன்ன ரணதுங்க கூறினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, நாங்கள் உங்களை சந்தித்தபோது, அதிகாரத்தை பரவலாக்கி அரசியல் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணுமாறு வலியுறுத்தினோம். ஆனால், அவர் செய்யவில்லை. இப்போது மீண்டும் ஒரு சந்தர…
-
- 5 replies
- 332 views
-
-
இலங்கையில் கடந்த இரு தசாப்தகாலமாக நடைபெற்றுவந்த உள்நாட்டுப்போரில் வெற்றிகொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு இப்போது சமாதானத்தை வெல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியிருக்கிறார் நோர்வே சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான முன்னாள் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம். இலங்கை அமைதி முயற்சிகள் குறித்துச் செய்யப்பட்ட மீளாய்வு அறிக்கை நேற்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. நோராட் அமைப்பு இந்த அறிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மைக்கல்ஸன் கல்வி நிறுவகத்தின் தலைவர் குன்னர் சேர்போ மற்றும் ஆபிரிக்கக் கற்கைகளுக்கான லண்டன் பாடசாலையின் தலைவர் ஜோன் தன் குட்ஹேன்ட் ஆகியோரால் நீண்ட ஆராய்வுகளுக்குப் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண நகரம், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா வழிகாட்டி Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது. இந்த அங்கீகாரம் 2025 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்ட “Best in Travel 2026” என்ற பதிப்பின் ஒரு பகுதியாகும். இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை, Lonely Planet அதன் பண்பாடு, உணவு வகைகள் மற்றும் தீவு சாகசங்களுக்காக சிறப்பாக விளக்குகிறது. யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம் செய்வது மிதிவண்டி, டுக்-டுக், பேருந்து அல்லது பேருந்து படகு மூலம் எளிதாக செய்யலாம். மேலும், ரயில்கள் மற்றும் பேருந்துகள் யாழ்ப்பாணத்தை இலங்கை தலைநகரான கொழும்புடன் இணைக்கின்றன, சென்னையிலிருந்து நேரட…
-
-
- 5 replies
- 426 views
- 1 follower
-
-
பான் கீ மூன் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்- நியுசிலாந்து தமிழர் செயலணி Published on November 16, 2012-10:53 am · No Comments ஐரோப்பா, ஒஸ்ரேலியா, நியுசிலாந்து, கனடா, அமெரிக்கா உட்பட ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரின் பிரதம ஆலோசகர் விஜய் நம்பியார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என நியுசிலாந்து தமிழர் செயலணி இணைப்பாளர் ஆ.தேவராஜன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுநலவாய அமைப்பின் உச்சிமகாநாட்டை கொழும்பில் நடத்தக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். அண்மையில் நடந்த உலக தமிழர் மகாநா…
-
- 5 replies
- 680 views
-
-
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போகலே தனது சான்றுகளை இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றார். கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார். இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என இரா. சம்பந்தன் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார். https://www.ibctamil.com/srilanka/80/143241
-
- 5 replies
- 863 views
-
-
இளைஞர் படுகொலை : நெல்லியடி முதல் கொடிகாமம்வரை பலத்த பாதுகாப்பு யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்து, பின்னர் பதற்றம் நிலவியபோதும், எந்தவோர் அரசியல்வாதிகளும் தமது பகுதிக்குள் வரவில்லை என்று தெரிவித்த, இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தில் உள்ள இளைஞர்கள், வரும் தேர்தல் காலத்தில், எந்தவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பகுதியில் காலடி எடுத்து வைக்கமுடியாதென்று கூறி…
-
- 5 replies
- 798 views
-
-
புத்தாண்டில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் என்ன ? - ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ள என்கிறார் தயான் (ஆர்.ராம்) புத்தாண்டில் இலங்கை அரசியல், மற்றும் கட்டமைப்புக்களில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகத்திற்கான ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன என்று கலாநிதி தயான் ஜயத்திலக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 1931 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக நாடாக அடையாப்படுத்தி வரும் இலங்கையில் இராணுவம் வெளிப்படுத்தியுள்ள சமிக்ஞைகள் 2022ஆம் ஆண்டு ஆபத்தான நிலைமைகளை நோக்கியதாக அமைந்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தினது நாட்காட்டியும், நாட்குறிப்பும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுக்கு பகிரப்பட்டது. இதில் இராணுவத்தளபதி ஜெ…
-
- 5 replies
- 504 views
- 1 follower
-
-
2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது, தமிழ் மக்களுக்காக ஒஸ்லோவுக்குச் சென்று அப்போதிருந்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவ்வாறு பல பேச்சுவார்தைகள் நடத்தியபோதிலும், இறுதியில் எதுவும் நடைபெற்றதாக இல்லை. இந்த நிலையில், நானே உணர்ந்து யுத்தத்தை நிறுத்தினேன். நான் அப்போது யுத்தத்தினை நிறுத்தாமல் விட்டிருந்தால் இப்போது இருக்கும் எமது தமிழ் இளைஞர் யுவதிகள், இல்லாமல் போயிருப்பார்கள். இப்போதுள்ள அரசாங்கத்தை பலப்படுத்தி நாங்கள் அனைவரும் நன்மை அடையவேண்டும். இந்த விடயத்தில் எமது தமிழ் மக்கள் மிக கவனமாக சிந்தித்துச் செயற்படவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், ஆளும் கட்சியில் 25 நாடாளுமன்ற உறுப…
-
- 5 replies
- 779 views
-
-
தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி கட்டுரைகள் | DECEMBER 27, 2014 5:53 AM மைத்திரிபால – தமிழரசுக் கட்சி இரகசிய உடன்பாடு பற்றி கசிகின்ற உண்மைகள் தமிழ் தேசியக் சுட்டமைப்பினருக்கும், 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குழுவினருக்கிடையிலான இரகசியச் சந்திப்பு ஒன்று கொழும்பில் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றுள்ளது. பொது எதிரணி தரப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்கா, சந்திரிகா பண்டாரநாயகா குமாரணதுங்க, மைத்திரிபால சிறிசேன, மங்கள சமரவீர, ஜெயம்பதி விக்ரமரட்ன முதலானோர் பங்கேற்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பிலிருந்து தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் ச…
-
- 5 replies
- 808 views
-
-
யாழ். குடாநாட்டில் மீண்டும் பதிவு நடவடிக்கை உக்கிரம் _ வீரகேசரி இணையம் 6/19/2011 8:05:52 AM யாழ். குடாநாட்டில் மீண்டும் படைத்தரப்பு பதிவு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இப்பதிவுகள் எதற்காக முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றிய குழப்பம் மக்களிடையே தொடர்கின்றது. கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக, பொலிஸார் கிராம சேவையாளர்களுடன் இணைந்து, குடும்பங் களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததை குடும்பப் பதிவு தொடர்பான கணனிப்பதிவுகளை, மேம்படுத்தவே பொலிஸ் பதிவென பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார். எனினும் பொலிஸார் இப்போது குடும்பப் பதிவுகளை பூரணப்படுத்தியுள்ள நிலையில் பொது மக்களது வாகனங்கள் தொடர்பான விபரங்களைப்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். கிராம சேவையாளர…
-
- 5 replies
- 492 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்துள்ளதாக ஊடகமொன்றுக்கு பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டு ஆத்திரமுற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினால், அவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு அரசியல் சாசனமோ அல்லது நீதியோ அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதியாவதற்கு தேவை என்மீது ஒர் துப்பாக்கிச் சூடு நடத்துவது மட்டுமே என்பதனை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன்.' 'அரசியல் சாசனத்தின் ஊடாகவும் நாட்டின் சட்டத்தின் ஊடாகவும் செய்ய முடியாதவற்றை துப்பாக்கித் தோட்டா ஊடாக செய…
-
- 5 replies
- 1k views
-
-
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கா விட்டால், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்றும் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. வெள்ளைக்கொடி வழக்கு முடிந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட அமைச்சர் ஒருவருடனான சந்திப்பின் போது அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அதிகார…
-
- 5 replies
- 1.4k views
-
-
யாழ் நகர்பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று போர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகர் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் நாவாந்துறையினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eeladhesa...lle-nachrichten
-
- 5 replies
- 921 views
-
-
மகிந்தவின் பாதுகாப்பை உடனடியாக மாற்ற முடிவு 09.03.2008 / நிருபர் வானதி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புகள் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலரி மாளிகையிலிருந்து செயலகம் மற்றும் மாளிகைக்கு மகிந்த பயணம் செய்யும் போதும் திரும்பி வரும்போதும் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டவர்களில் அஜ்மீர் என்ற சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. நிசாந்தன் என்ற கரும்புலி உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபரை பணி நேரங்களிலும் அவர் தமது சகோதரர் எனக் கூறி மகிந்த பயணித்த பாதைகளில் நிறுத்தியதாகவும் அஜ்மீர…
-
- 5 replies
- 2.3k views
-
-
போரின் திசைகளை மாற்றப்போகும் தாக்குதல்கள் வீரகேசரி வாரவெளியீடு 3/30/2008 10:42:13 AM - விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு தளபதி கேணல் சூசை தொடர்பாக கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வதந்தி தென்னிலங்கையில் பரவியிருந்தது. முல்லைத்தீவு கடற்பகுதியில் நடைபெற்ற விபத்தில் சூசை காயமடைந்ததை தொடர்ந்தே இந்த வதந்தி பரவியது. எனினும் பின்னர் அது வழமை போலவே விரைவில் மழுங்கிப்போய்விட்டது. ஆனால் அன்று பரீட்சித்து பார்க்கப்பட்ட உத்திகள் தற் போது கடற்படையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெற்ற அந்த விபத்தின் போது கடற்புலிகள் நவீன கலங்களைத் தகர்ப் பதற்கான நவீன ஆயுதங்களையும், அதற்கான உத்திகளையுமே பரீட்சித்து பார்த்துக்…
-
- 5 replies
- 2.7k views
-
-
வன்னிக் களமுனை மாறுமா? இறுகிப் போயுள்ள வன்னிக் களமுனையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படப் போவதான அறிகுறிகள் தென்படுகின்றன. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் தளபதிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் ஆற்றிவரும் உரைகள் அதனைக் கோடி காட்டுகின்றன. தாங்கள் களமுனையில் என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி பொதுவாக விடுதலைப் புலிகள் கதைப்பது குறைவு. ஆனால், அண்மைக் காலங்களாக பொறி பறக்கும் மேடைப் பேச்சுக்கள், செவ்விகள் என அடிக்கடி வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் போர் தொடர்பான, அடுத்த கட்ட நகர்வு தொடர்பான பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. யுத்தத்தில் சோர்வடைந்துள்ள சிங்களப் படையினரின் உளவுரணை மேலும் குலைத்து விடவோ அன்றி தமிழ் மக்களின் மனங்களில் தோன்றியுள்ள சலிப்பு நிலையைப் போக்கடி…
-
- 5 replies
- 2.3k views
-
-
-
துரோகி கருணாவின் ஒருபக்கம்! வியாழன், 15 ஜனவரி 2009, 19:44 மணி தமிழீழம் [] தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்குமே காரணம் தானே என உண்மைக்கு புறம்பாக அண்மையில் சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியின் செவ்வி ஒன்றிலே கருணா குறிபிட்டுள்ளார் தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்குமே காரணம் தானே என்றும் தற்போதைய நிலையில் விடுதலைபு புலிகள் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பத்திற்கு வித்திடவர் தான் என்றும், இப்படி பலவாறாக உண்மைக்கு புறம்பாக அண்மையில் சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியின் செவ்வி ஒன்றிலே கருணா குறிபிட்டுள்ளார். இந்த வேளையிலே கருணா கூறும் பொய்யான பல தகவல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்க…
-
- 5 replies
- 3.7k views
- 1 follower
-
-
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை புத்த பிக்குகள் கைவிட வேண்டும் என திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மார் மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள வன்முறைகளுக்கு பௌத்தர்களும் புத்த பிக்குகளுமே காரணம். மதத்தின் பெயரில் நடந்துள்ள இந்த வன்முறை, நினைத்து பார்க்க முடியாத வருத்தத்தை தருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளதுடன், புத்த மத்தினர் இந்த வன்முறையில் இணைத்து பேசப்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்கள் புத்தரின் அகிம்சை வழியை கடைபிடிக்க வேண்டும். உலக முழுமைக்கும் ஒரே மனித குலம் படைக்கும் பொறுப்பு இளைஞர்களிடத்தில் இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள…
-
- 5 replies
- 455 views
-
-
எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் – யாழ் மாநகர முதல்வர் எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று இடம்பெற்ற அப்துல் கலாமின் 90 வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் நமக்கு துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்விடுகின்றேன். ஒருபோதும் பாரத தேசத்தினுடைய நலன்களுக்கு முரணாக நா…
-
- 5 replies
- 545 views
-
-
வடக்கில் இடம்பெற்ற, இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களிற்கான சிரேஷ்ட அதிகாரி மண்ணகழ்வு தொடர்பான தகவல்களை பெற்றுச் சென்றார் என இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் "வடக்கில் கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளினால் தான்தோன்றித்தனமாக எந்த அனுமதியும் இல்லாமல் மண்ணகழ்வில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் இலாபமீட்டினர். எனினும் மண் அகழ்வுக்குள்ளான பிரதேசங்கள் மிக மோசமான முறையில் சூழல் அழிவை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பாக நாகர்கோவில்…
-
- 5 replies
- 758 views
-