ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.66 ரூபாவாக பதிவாகியுள்ளது.(ஸ) http://www.dailyceylon.com/172616
-
- 3 replies
- 1.3k views
-
-
சோபா உடனபடிக்கையில் கைச்சாத்திடுவதனூடாக, 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர், எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாமம் என, ஜனாதிபதியின் சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கை சட்டத்தரணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, சோபா, அக்சா, மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டபோதே, மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். அரசாங்கம் இந்த சோபா உடன்பாட்டில் கைச்சாத்திட்டால், அமெரிக்க இராணுவம், சீருடை தரித்து ஆயுதத்துடன் நடமாடும் நிலைமை உருவாகும் என்றும் பயங்கரவாதிகளும் எந்ததொரு தடைகளும் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்…
-
- 6 replies
- 1.3k views
-
-
வியாழன் 24-01-2008 15:59 மணி தமிழீழம் [மதுசன்] சிறிலங்கா விமானசேவைகளில் பயணித்து இரத்தக்காசு வழங்காதீர் -பிரித்தானிய தமிழர் பேரவை.சிறிலங்கா விமானசேவைகளில் பயணித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு இரத்தக்காசு வழங்காதீர் என பிரித்தானியாவாழ் மற்றும் ஐரோப்பா வாழ் மக்களிற்கு பிரித்தானியா தமிழர் பேரவை வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்கா விமானசேவையில் கொழும்புக்கும் மற்றைய இடங்களுக்கும் பயணம் செய்வதைப் புறக்கணிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை தமிழர்களிடை பரப்புரை ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது. பிரித்தானியத் தமிழர் பேரவை 85 தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும். பிரித்தானியாவில் 3…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஈழப்பிரச்சனை: தேமுதிக பிரமுகர் தீக்குளிப்பு இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி தேமுதிக பிரமுகர் சீனிவாசன் என்பவர் தீக்குளித்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம், வானிணம்பாடியை அடுமுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன். இவருக்கு வயது 36. இவர் சிறுவயது முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகர். விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது, வள்ளிப்பட்டு கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளராக உள்ளார். இவர் 26ஆம் தேதி மாலை வாணியம்பாடி நகருக்கு சென்றுள்ளார். அப்போது பேருந்துநிலையத்தில் இலங்கையில் நடக்கும் போரில் பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்களை காக்கக் கோரி சென்னையில் தீக்குளி…
-
- 5 replies
- 1.3k views
-
-
வியாழக்கிழமை, நவம்பர் 24, 2011 உஷாதேவி இவர் தனது மகனைத்தேடி வெற்றிபெறாத பயணத்தில் சோர்ந்துபோயுள்ளார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இருந்து படகில் தப்பி சென்ற மக்களுடன் தனது மகனையும் அனுப்பி வைத்தார். . மகன் செல்லும்போது சில உடுப்புக்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் சென்றான். ஆனால் அதன் பின்பு என்ன ஆனான் என தெரியவில்லை போர் முடிந்து இரண்டரை ஆண்டாகியும் மகனைக்காணாது சோகத்துடன் காணப்படுகின்றார். . யாழ்ப்பானம் நோக்கி சென்றவர்கள் தனது மகனையும் அழைத்துக்கொண்டு கரை இறங்கினர். அதன் பின்னர் இராணுவத்தினர் எனது மகனை அழைத்துச் சென்றதாக கூறினார்கள். என் மகன் உயிருடன் இருக்கின்றான் எனக்கூறும் உஷாதேவி அப்படி இல்லை என்றால் என் மகன் இல்லை என்பதற்கான ஆ…
-
- 1 reply
- 1.3k views
-
-
18 மணிநேர ரயில் பயண களைப்புக்கு மத்தியில் தளராது மனவுறுதியுடன் போட்டியிட்டு 2 தங்கங்களை வென்றெடுத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் 18 மணித்தியாலங்கள் ஓய்வின்றி விழித்திருந்து ரயில் வண்டியில் பயணம் செய்து கொழும்பை வந்தடைந்த சில மணிநேரங்களில் மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றெடுப்பது ஓர் அரிய சாதனை என்றே கூறவேண்டும் இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் 26 ஆவது மகளிர் மெய்வல்லுநர் போட்டிகளில் மனவுறுதியுடன் கலந்துகொண்டு இரண்டு நாட்களில் இரண்டு தங்கப்பதக்கங்களை சுவீகரித்த பெருமை வவுனியா சைவப் பிரகாசர் மகளிர் வித்தியாலய மாணவி தனபாலசிங்கம் அனுஷாவைச் சாருகின்றது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இப்போட்டிகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
மயிலிட்டி கடலில் விபத்து 6 கடற்படையினர் படுகாயம் யாழ். மயிலிட்டி கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. இதன்போது படகில் இருந்த 6 கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயிலிட்டிக் கடற்பரப்பில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட சமயத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. -தினக்குரல்
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெனிவாவிலும், நியூயோர்க்கிலும் அரசு எதிர்கொள்ளும் நெருக்கடி கடந்த வாரம் நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது தலைமையிலான அரசுடன் மேற்குலக நாடுகள் சுமுகமான உறவைப் பேணு கின்றன என்றும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத் தைக் கையாளும் விடயம் தொடர்பாக இலங்கை அரச நிர்வாகத்தின் மீது மேற்குலகுக்கு பெரிய அதிருப்தி ஏதும் இல்லை என்ற சாரப்படவும் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்தின் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் பரிசீல னைக்கும் உரியது. எது, எப்படியென்றாலும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி, அரசு தனது படைகளையும் அவற்றின் கீழ் ஒட்டுக்குழுக்களாகச் செயற்படும் துணைப் படைகளையும் இயக்கும் விதம் குறித்த விடயம் சர்வதேச மட்டத்தில் பெரும் சிரத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கு நடவடிக்கை எளிதானது அல்ல- சிறிலங்காவுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்: கேணல் ஹரிகரன் சிறிலங்கா அரசாங்கம் கிழக்கைப் போல் வடக்கில் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது என்றும் பேச்சுவார்த்தைக்குப் போங்கள் என்று கூறுவதோடு மேலதிகமாகவும் சிறிலங்காவுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாத அமைப்பு எதுவும் இல்லை. ஆகையால் தோற்கடிக்க முடியாது என்பது தொடர்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் யார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர்கள் …
-
- 3 replies
- 1.3k views
-
-
நா.உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பொதுசன ஐக்கிய முன்னணியில்.. தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பொதுத் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். சனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசின் ஊடாகத்தான் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திகளையும் மக்களுடைய தேவைகளையும் நிவர்த்தி செய்ய முடியும், எனவேதான் ஆளும் கட்சியில் இணைந்துதான் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறினார். இன்று செவ்வாய் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான புதியவகுப்பறைகளை தொடங்கிவைக்கும் வைபவத்திலும் திரு கனகரட்ணம் கலந்து கொண்டார். இந்த வைபவத்தின் பின்னர…
-
- 1 reply
- 1.3k views
-
-
மன்னார் தோட்டவெளி கிராமத்தில் பொலிஸாரின் துணையுடன் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் பொலிஸ் அதிகாரிக்கும் மத குரு உட்பட பொதுமக்களுக்கும் இடையே இன்று ஏற்பட்ட முறுகல் நிலையால் அவ் பகுதி சில மணி நேரம் அமைதியற்ற நிலையில் காணப்பட்டது. மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ் சம்பவம்பற்றி தெரிய வருவதாவது, மன்னார் வேதசாட்சிகளின் ஆலயம் அமைந்துள்ள தோட்டவெளி பகுதியில் தென் பகுதியிலிருந்து மீன் வளர்ப்புக்கு என கொண்டு வரப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு இங்கு மீன் வளப்புக்கென எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படாத…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கையில் கொரோனாவை எதிர்த்து போராட களமிறங்கும் இந்திய இராணுவம் Report us Murali 51 minutes ago இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உதவும் வகையில் இந்திய இராணுவம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நாடுகளுக்கு தனி அணிகளை அனுப்பி உதவுவதற்கு இந்திய இராணுவம் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதற்கான திறன்களை அதிகரிக்க அந்த நாடுகளுக்கு உதவுவதற்கு இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்கவும், உள்ளூர் மருத்துவ நிபுண…
-
- 17 replies
- 1.3k views
-
-
மணலாற்றின் புலிகளின் இலங்குகள் மீது பீரங்கி தாக்குதல் வீரகேசரி இணையத்தளப்பிரிவு மணலாறு பகுதியில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீது இராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளனர் . விடுதலைப் புலிகள் ஒன்று கூடும் இடங்களிஅ இலக்கு வைத்தே நேற்று மாலை இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது எனினும் இத்தாக்குதல் போது ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் தெரிய வரவில்லை
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் காந்தலிங்கம் பிரேமரெஜியைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி அளித்ததாக அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கொழும்பில் இயங்கியபோது, வர்த்தகர்கள் பலரிடமிருந்து இவர் நிதி சேகரித்தமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக அரசாங்க தொலைக்காட்சி தெரிவித்தது. இவ்வாறு நிதி உதவியளித்த வர்த்தகர்களின் பெயர்ப் பட்டியல் மட்டக்களப்பிலிருந்து பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டதாகவும் அரசாங்க தொலைக்காட்சி மேலும் குறிப்பிட்டது. www.tamil.dailymirror.lk எமக்காக முள்முடி சுமந்தவர்களையே காப்பதற்கு எம்மா…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொடவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படவில்லை எனில் வன்னியில் பாடசாலைச் சிறுமிகளை சிறிலங்கா இராணுவம் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்ததை அனைத்துலகம் கண்டித்திருக்குமா? என்று நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான அவசர கூட்டம் நியூயோர்க்கில்..! Posted by admin On May 8th, 2011 at 10:32 am / ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழு, வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் புரியப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த விடயத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வளாகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் கையெழுத்து வேட்டையும் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், அந்த அறிக்கையின் …
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ் பண்ணையில் அமைகிறது அரசாங்கத்தின் பாரிய ஓய்வு விடுதி! யாழில் மக்களின் நலன்கருதி பாரிய அரச ஓய்வு விடுதியொன்று அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜி.கே. குணதிலக தெரிவித்துள்ளார். குறித்த விடுதி யாழ்ப்பாணம்-காரைநகர் வீதியில் பண்ணை கடற்கரைப் பகுதியை அண்டி யாழ்.சிறைச்சாலைக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த விடுதி 40 அறைகளைக் கொண்ட சகல நவீன வசதிகளுடன் மக்கள் பயன்படுத்தும் விதமாக அமையவுள்ளதோடு தற்போது முதற்கட்ட கட்டுமானங்கள் குறித்த கடற்கரை பகுதியில் மண் நிரப்பப்பட்டு 60 மில்லியன் ரூபாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …
-
- 10 replies
- 1.3k views
-
-
கிளி முன்னாள் அதிபரும் தற்போதைய வடமாகாண ஆளுனர் சந்திரசிறியின் பதில் செயலாருமான இராச நாயகம் சமூக சேவை அமைச்சின் கீழ்; கிளியில் உள்ள பொதுக்காணிகளை எடுத்து பண்ணைத்திட்டம் செய்யப்போவதாக அங்கிருப்போரை விரட்டி வருகின்றார். கிளி மாவட்டத்தில் காணிகள் இல்லாதோர் மற்றும் ஊனமுற்ற போராளிகுடும்பங்களிற்கு பொதுக்காணிகளை விடுதலைப்புலிகளின் அப்போதைய நிர்வாகப்பிரிவு கேட்டதற்கு அமைய இவரே வழங்கி இருந்தார். 05 வருடத்தின் பின்னர் பேர்மிற் தருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போ அங்கு மீழ் குடியேறியுள்ள மக்களை விரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு கிளியில் வந்து தனக்கு வழங்கப்பட்ட காணியில் குடியேறியுள்ள ஒரு கால் இல்லாத போராளி குடும்பத்திற்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்; குடாநட்டில் இருந்து மக்கள் பாதுகாப்புகருதி அவசரமாக வெளியேறி வன்னிக்கு செல்வும் - தி.மகேஸ்வரன். யாழ்; குடாநாட்டில் வாழ்ந்துவரும் இளைஞர் யுவதிகள் உட்பட அனைவரையும் உடனடியாக தற்காலிகமாக யாழ் குடாநாட்டில் இருந்து வெளியேறி வன்னி பெருநிலப்பரப்பிற்கு செல்லுமாறு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் அவசர கோரிக்கை ஒண்றினை விடுத்தள்ளார். யாழ் குடாநாடு உட்பட வடக்கு கிழக்கில் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு புூரன அதிகாரித்தை இரகசியமாக வழங்கியுள்ளது. தினமுதும் 15 பொதுமக்கள் யாழ் குடாநாட்டில் இலங்கை அரச படையினரால் கொல்லப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது பலருடைய உடல்கள் எங்கு மறைக்கபடுகிறது என்றுகூட எவருக்கும் தெரியாது …
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை மீட்க உதவுங்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸிக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என நம்புகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும்…
-
-
- 19 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கைக்கு வழங்கப்படுகின்ற தண்டனை ஏனைய நாடுகளுக்கும் பாடமாக இருக்க வேண்டும்!பாக்.பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற தண்டனை ஏனைய நாடுகளுக்கும் பாடமாக இருக்க வேண்டும்!பாக்.பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் வியாழன், 15 ஜூலை 2010 19:43 இலங்கைக்கு வழங்கப்படுகின்ற தண்டனை ஏனைய யுத்தக் குற்றவாளிகளுக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும் என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் என்று 'Dawan' இன்று ஆசிரியர் தலையங்கம் எழுதி உள்ளது. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நியமித்துள்ளது. அந்நிபுணர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையிலேயே இப்பாகிஸ்தானிய பத்திர…
-
- 2 replies
- 1.3k views
-
-
By D.B.S. Jeyaraj Journalists James Harding and Ben Macintyre of the UK “Times” were about to leave the Dorchester Hotel in London on December 1st 2010 when an aide of Sri Lankan President Mahinda Rajapaksa came down hastily to the lobby and contacted them. “President Rajapaksa wants to see you urgently. Can you come please?” asked the Presidential emissary. Both journalists had just completed an hour long interview with the Sri Lankan President at his suite in the Hotel and taken their leave. Now they were being summoned again. When the obliging British scribes from “Times” went up again they found an impatient Rajapaksa waiting for them in the corridor. In strik…
-
- 6 replies
- 1.3k views
-
-
அம்பாறையில் கண்திறந்த பிள்ளையார் சிலை! - காணக்குவியும் மக்கள். [Wednesday 2014-12-10 07:00] அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ் கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார் சிலையின் கண்கள் திறந்துள்ளதாக, பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மல்வத்தை முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பழம்பெரும் பிள்ளையார் சிலையின் இரு கண்களே இவ்வாறு திறந்துள்ளன. இந்த ஆலயம் வேடர்களால் வழிபாடு செய்யப்பட்ட தொன்மையானது என ஆலய வரலாறு கூறுகிறது. அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ் கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார் சிலையின் கண்கள் திறந்துள்ளதாக, பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மல்வத்தை முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி பிள்ளை…
-
- 3 replies
- 1.3k views
-
-
அரசாங்கத்தின் யுத்தத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுப்பு. சிறீலங்கா அரசாங்கத்தின் யுதத்தின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் அங்கீகரிக்க மறுத்துள்ளது. இன்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வினை மேற்குலக நாடுகளின் முக்கிய தூதுவர்கள் எவரும் கலந்து கொள்ளாதமை இதனை தெளிவு படுத்தியுள்தாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா நோர்வே போன்ற மேற்குலக நாடுகளின் முக்கிய தூதவர்கள் எவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. தூதரகத்தின் சார்பில் பாதுகாப்பு அதிகாரிக…
-
- 4 replies
- 1.3k views
-
-
கைதடி வடக்கு, மாவடி மூலையில் இருவரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன. 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமும் 22 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமுமே மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பதில் நீதிவான் எஸ். கணபதிப்பிள்ளை சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார். சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும் அடையாளம் காண்பதற்காகவும் யாழ். ஆஸ்பத்திரிக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார். சடலங்களில் ஒன்று தலையில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்டது. மற்றைய சடலம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சடலங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் யாழ். ஆஸ்பத்திரியில் நேற்றுப் பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன. --Uthayan---
-
- 1 reply
- 1.3k views
-