ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
இந்தியாவின் கரங்களில் தங்கியிருக்கும் இலங்கையின் சமாதானம் [13 - November - 2007] நீதி.செங்கோட்டையன் இலங்கை மண்ணில் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை. அங்கு அமைதி தொலைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எந்நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற அச்ச உணர்வைத்தான் நீண்டகாலமாக இலங்கை மக்களின் கண்களில் காணமுடிகிறது. இலங்கை மண்ணில் பிறக்கும் குழந்தைகளை சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதை தவிர வேறுவழியில்லை. குண்டு மழையால் உருவாகும் நெஞ்சை பிளக்கும் சத்தம்தான் அவர்களுக்கு தாலாட்டுப்பாடல் என்ற அவல நிலை. இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முனைகளில் இருந்து புறப்படும் குண்டுகளுக்கு அப்பாவி ஈழத்தமிழர்களும் சிங்கள மக்களும் இரையாகி…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஊடகப்பிரிவு - தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவை…
-
- 10 replies
- 1.3k views
-
-
ஊடக தர்மமும் உதயன் ஆசிரியர் வித்தியாதரனும்! ‘ஊடகங்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது கண்’ என்றே போற்றப்பட்டு வருகின்றது. நீதியின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் நீதித் துறை, சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றம் என்ற ஜனநாயகத்தின் இரு கண்களுக்கும் அடுத்து ஊடகத் துறை நோக்கப்படுகின்றது. எங்கே தவறு நேர்ந்தாலும், எங்கே மக்களுக்குப் பாதிப்புக்கள் நேர்ந்தாலும், எங்கே நீதி தவறினாலும் அவற்றையெல்லாம் தட்டிக் கேட்கவும், அந்தத் தகவல்களையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்களுக்கான நீதியைக் கோரவுமான ஊடகங்களின் தளங்கள் விரிந்தே செல்கின்றன. இந்த ஊடக தர்மத்தை நிலைநாட்டும் கடமையில் இன்று வரை எண்ணற்ற ஊடகவியலாளர்கள் தமது உயிரையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். சிங்கள தேசத்தின் இனவாதத்திற் கெத…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு அமெரிக்கா புதிய நெருக்கடி இலங்கையின் உள்நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்ந்து வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது. இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் இதைத் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ராஜதந்திர கோரிக்கை கடிதம் ஒன்றை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. எனினும் வெளிநாட்டு அமைச்சகம் இதற்கான பதிலை இதுவரை அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 19 வது அமர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது கற்றுக்கொண்ட ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாவற்குழியில் மீள்குடியேறச் சென்ற பூர்வீகதமிழ்க் குடும்பங்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர் 11 November 10 06:28 am (BST) சர்ச்சைக்குரிய நாவற்குழிப் பகுதியில் குடியேறச் சென்ற தமிழ்க் குடும்பங்கள் இன்று படையினர் காற்துறையினர் மற்றும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றவாசிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 1995 வரையான காலப்பகுதியில் இங்கு குடியிருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள் அருகிலிருந்த உறவினர்களின் வீடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். குறித்த அரச காணி ஏற்கனவே அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில் அவர்கள் ஏற்கனவே குடியமர முற்பட்ட போதும் அப்பகுதி கிராம அதிகாரி அதற்கான அனுமதியை மறுத்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சி…
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழினத் துரோகி ராஜபக்ஸ அல்ல... 28 ஏப்ரல் 2011 இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது. இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இராஜீவ் கொலைவழக்கு - சித்திரவதைகளில் புதைந்த நீதி காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க இயலாதபோது அப்பாவிகளை அடித்து, துன்புறுத்தி குற்றத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வார்கள் என்பது 'சுதந்திர இந்தியா'வில் காலம் காலமாக தொடரும் அவலமாக இருந்து வருகிறது. இந்த சீருடை ரௌடிகளின் சித்திரவதைக் கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும் தோழர் தியாகு, 'சோளகர் தொட்டி' ச.பாலமுருகன் உள்ளிட்டோர் புத்தகங்களாக எழுதி வெளிக்கொணர்ந்தபோது, மானுட விழுமியங்களின் மீது அக்கறை கொண்டோர் எல்லாம் அதிர்ச்சி அடைந்தனர். அத்தகைய புத்தகங்களில் ஒன்றுதான் தோழர் பூங்குழலி எழுதிய 'தொடரும் தவிப்பு'. அடித்துத் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல்கள், மனரீதியான சித்திரவதைகள் இவைகளைப் பயன்படுத்தியே உலகப் புகழ்…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களின் தலையாய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைப்பதற்கான சதித்திட்டங்களிற்கு ஆளாகாமல் எமது மக்களின் விடிவிற்காகவும் நலன்களுக்காகவும் உழைக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும், என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சுமந்திரன் குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாகவே இவ்வறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம், நேற்றைய தினம் வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்த அறிக்கையில் பொதுத்தேர்தல் நேரத்தின் போது கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்கின்ற குற்றச்சாட்டிற்கு தன்னுடைய நீண்ட விளக்கத்தை கொடுத்திருக்…
-
- 11 replies
- 1.3k views
-
-
Posted on : Mon May 28 6:16:28 EEST 2007 கொழும்பில் வெடித்த குண்டின் உண்மையான இலக்கு என்ன? ஆங்கில இதழின் ஆய்வில் வெவ்வேறு தகவல்கள் ""கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுதாக்குதல், கொழும்பு துறைமுகத் தில் தரித்து நிற்கும் ஆயுதக்கப்பலில் இறக் கப்படும் ஆயுதங்களுக்கு வைக்கப்பட்ட குறியா என படைத்தரப்பில் இருந்து பலத்த சந்தேகம் எழும்பியுள்ளது.'' இவ்வாறு "த சண்டே ரைம்ஸ்' வார வெளியிட்டில் வெளிவந்த பாதுகாப்பு ஆய்வுக் கட்டுரையை ஆதாரம் காட்டி இணையத்தளங்கள் செய்தி வெளியிட் டுள்ளன. அதில் மேலும் தெரிவிக்கப்படுவதா வது: நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல் நடந்த சில மணிநேரங் களுக்குள் கொழும்பு துறைமுகத்திற்கு அண் டிய பகுதியில் குண்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மக்களினால் தோற்கடிக்கப்பட்ட நபர் மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்ற முயற்சிக்கும் சதித்திட்டம் இடம்பெறுகின்றது. இழந்த உரிமைகளை வென்றெடுக்கவே நாம் போராட வேண்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டிற்கு ஏற்ற மிகச் சரியான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தாய்மாரை கெளரவிக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதானது. இலங்கையில் இன்று ஒற்றுமைய…
-
- 3 replies
- 1.3k views
-
-
முச்சக்கர வண்டிச் சாரதிகளின் துணையுடன் ஒரு புதிய புலனாய்வுப் பிரிவு உருவாக்கம் புதன், 12 நவம்பர் 2008, 19:29 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] நகரங்கள் மற்றும் கிராமங்கள் என்ற அடிப்படையில் முச்சக்கர வண்டிச் சாரதிகளின் துணையுடன் ஒரு புலனாய்வுப் பிரிவை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்களி பிரிவின் நிறுவுனர் மங்கள சமரவீர தெரிவிக்கையில்:- நகரங்கள் மற்றும் கிராமங்கள் என்ற அடிப்படையில் முச்சக்கர வண்டிச் சாரதிகளின் துணையுடன் ஒரு புலனாய்வுப் பிரிவை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளனர். உலகத்தில் இவ்வாறான ஒரு பிரிவு ஒன்று சீனா ஏற்படுத்தியுள்ளது. இப் புலனாய்வு வலைப் பின்னலை அமைப்பதற்காக அண்மையில் சிறீலங்கா பாதுகாப்ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி, நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக விளங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அரச சேவையில் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை இருப்பது போல், அரசியலுக்கும் அது நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “என்றாவது ஒரு நாள் என் கண் பார்வை குறையும், ஒரு நாள் என் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் நிதர்சனம். அரசுப் பணியில் இருந்து 60 வயதில் ஓய்வு பெறுவது ஏன்? நீதிபதியும் 65 ஆண்டுகள் பணியாற்றலாம். கடந்த கால …
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று முன்னெடுக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதேவேளை, ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகுமெனவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர் உரையாற்றும் பேதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார். நரேந்திர மோடி மேலும் தெரிவிக்கையில், கோத்தாபய ராஜபக்ஷ இந்தி…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழில் பட்டினியையும் மனிதஅவலத்தையும் பார்த்துக்கொள்ள முடியாதுள்ளது: - ஐ.நா.பிரதிநிதி கவலை. யாழில் இடம்பெறும் மனிதஅவலத்தையும் மக்களின் பட்டினிநிலையையும் தொடர்ந்து சகித்துக் கொண்டிருக்க முடியாமல் இருப்பதாக ருNர்ஊசு நிறுவனத்தின் யாழ்ப்பாணத்திற்கான பிரதிநிதி தெரிவித்துள்ளார். மக்கள் உணவுப்பொருட்களிற்கு நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் ஆனால் அவர்களின் தேவைகள் நிறையவே இருக்கின்றன. மக்களின் தேவைகள் நிறைவேற வேண்டுமாயின் ஏ-9நெடுஞ்சாலையை அரசாங்கம் முழுமையாக திறக்கவேண்டும் இதற்கு விடுதலைப்புலிகளும் ஒத்துழைக்க வேண்டும் யாழ் நிலைமைகள் நாளிற்கு நாள் மோசமடைந்து வருகின்றமை கவலை அளிக்கின்றது. நிலமை இவ்வாறு தொடர்ந்தால்நாங்களும் இருக்கமுடியாத நிலைமையே ஏற்படும் மக்களின் அவலத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
மகிந்த ராஜபக்சவுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நாளை திங்கட்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அண்மையில் ஆங்கில சினிமாவின் அதியுயர் விருதான 'ஓஸ்கார்' விருதினை பெற்றுக்கொண்ட இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
Print | E-mail : Email this Article திங்கட்கிழமை, 2, நவம்பர் 2009 (12:3 IST) இலங்கை போரில் மனித உரிமை மீறல்;கோத்தபாய ராஜபக்சே மீது விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு இலங்கையில் போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவம் மற்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து 68 பக்க அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ளது. அதில் அத்துமீறல்கள் குறித்து 170 நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை நாடாளுமன்றத்திடம் அமெரிக்க வெளியுறவுத்துறை சமர்ப்பித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் அதிபர் ராஜபச்சேவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபச்சேவுக்கு உள்ள பங்கு குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளதாக வாஷிங்டனில் உள்ள இலங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
அரச படையினரால் 10 வருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணம் கைப்பற்றபட்டிருந்த போதிலும் அந்த பிரதேசத்தில் இதுவரை சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்க்கையோ இன்னும் வழமைக்கு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கள் கடத்திச் செல்லப்படுதல் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளை தொடர்ந்தும் கேட்க முடிகிறது என அங்கு சென்றிருந்த சிங்கள இணையத்தளம் ஒன்றின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலைகள், நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லையென்ற போதிலும் சீமெந்து ஒரு மூடை 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏனைய பயன்பாட்டு பொருட்களின் தட்டுப்பாடு, நியாயமற்ற விலை அதிகரிப்பு தொடர்பான …
-
- 0 replies
- 1.3k views
-
-
நீரின்றி விக்டோரியா நீர்த்தேக்கம் By Ranjan 2012-09-04 12:27:00 மலையகத்தின் நீரேந்துப் பகுதிகளுக்கு குறித்த காலத்தில் மழை கிடைக்காததால் மின் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை சேமித்து வைத்து விநியோகிக்கும் பல நீர்த்தேக்கங்கள் நீரின்றிக் காணப்படுகின்றன. மகாவலி கங்கையில் அமைக்கப்பட்டுள்ள விக்டோரியா நீர்த்தேக்கமும் நீரின்றிக் காணப்படுகின்றது. நீரின்றிக் காணப்படும் தரையில் வளர்ந்துள்ள சிறு புற்களை உண்பதற்காக அதிகளவிலான கால்நடைகள் இங்கு சுற்றித் திரிகின்றன. இந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தினுள் அமிழ்ந்து போன பழைய கட்டிடங்களின் இடிபாடுகள், பாலங்கள் என்பவற்றைக் காண்பதற்காக அதிகளவிலான உல்லாசப் பிரயாணிகள் மற்றும் கண்டி …
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியா சிறிலங்காவின் போருக்கு உதவி செய்தது என்பது வெள்ளிடைமலை. அதேபோல சிறிலங்காவில் தமிழர்க்கு எதிரான போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த நிலையில் சர்வதேச விசாரனை ஒன்று வருமாக இருந்தால் நிச்சயமாக இந்தியாவின் போர்க்குற்றத்திற்கான பங்களிப்பினை சர்வதேச விசாரணை குழு கண்டறிந்து அதனை சுட்டிக்காட்டும். ஆகவேதான் இந்தியா சிறிலங்காவை போர்க்குற்றம் தொடர்பில் தொடர்ந்தும் பாதுகாக்க முற்படுகின்றது. . சரி இந்தியாவை போர்க்குற்றத்தில் தொடர்பு படுத்தினால் என்ன பாதிப்பு? இது இந்தியாவிற்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலைதான். இந்தியா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவந்து தன்னையும் ஒரு நிரந்தர நாடாக இணைக்க மிகப்பெரும் முஸ்தீபுகளை மேற்கொண்டு வரு…
-
- 2 replies
- 1.3k views
-
-
12 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழுவை மனிதஉரிமை ஆணையாளர் நியமித்தார்! [Friday, 2014-06-13 08:07:28] ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார். இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிருவர் இந்தக் குழ…
-
- 4 replies
- 1.3k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வேளையில் யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை அவசியம் என பிரித்தானியா நேற்றைய தினம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனிதநேய சட்டத்தின் கீழ் யுத்தகாலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பிக்ககையுடன் கூடிய சுதந்திரமான விசாரணை அறிக்கை அவசியம் என பிரித்தானிய வெளிவிவகார காரிய ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட காட்சிகளைப்பார்த்த வெளியுறவு துறை அதிகாரிகள் மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகள் அதன் மூல வடிவத்தினையும் பார்த்துள்ளனர். பெரும்பாலான இராஜதந்திரிகளும் பணியாளர்களும் அதிர்ச்சியுடன் காணப்பட்டன…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்தும் இந்தத் தேர்தல் முடிவுகள் சிறுபான்மை இனத்தினருக்கு சொல்வது என்ன, இந்திய - இலங்கை உறவில் மாற்றம் ஏற்படுமா என்பதெல்லாம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தி இந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். பேட்டியிலிருந்து: கே. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்த தேர்தல் முடிவு சொல்வதென்ன? ப. ஒரு கணிசமான வாக்குகளைப் பெற்றுத்தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அங்கே வெற்றிபெற ஐம்பது சதவீத…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழ் மக்களிற்கு நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 13வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். சிவந்தன் நடந்து செல்லும் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக இன்று காலை தாமதமாகவே அவரது நடை பயணம் ஆரம்பித்திருந்தது. இன்று காலை முதல் நண்பகல்வரை 10 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் இன்று 11 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர். எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அனுமதி பெறப்பட்டதும் அது பற்றி அறிவிக்கப்படும் என சுவிஸ், மற்றும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள…
-
- 16 replies
- 1.3k views
-
-
தமிழ் பெண்ணை பிணையில் விடுவிக்க பொலிஸார் இணங்கியபோதும் அனுமதி வழங்க மறுப்பு [20 - May - 2007] த.தர்மேந்திரா பொலிஸ் பதிவை மேற்கொண்டிருக்கவில்லையென கைதான பெண்ணை பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸார் சம்மதம் தெரிவித்த போதிலும் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட பாலசுப்பிரமணியம் விமலா இந்திரா என்பவர் ஜேர்மனி செல்வதற்காக வந்திருந்த போது வெள்ளவத்தையிலுள்ள உறவினரின் இல்லத்தில் வைத்து 28 நாட்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் பொலிஸ் பதிவு இல்லையென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மறுநாள் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவர் மீதான வழக்கு கடந்த வியாழக்கிழமை கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில…
-
- 0 replies
- 1.3k views
-