Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் ஏற்படுத்த மீண்டும் பிரபாகரன்தான் வர வேண்டுமா என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் …

    • 4 replies
    • 959 views
  2. யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311299

  3. இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க மற்றும் ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளுக்காக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நிர்வாகம் முன்வைத்துள்ளது. இவ்வருடம் ஒக்டோபர் மாதத்துடன் ஆரம்பமாகும் ஒருவருட காலப்பகுதிக்கான நிதியுதவி குறித்த யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்கிரசிற்கு அனுப்பிவைத்துள்ள வரவுசெவுதிட்ட யோசனையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிதேர்தல் மற்றும் பொதுத்தேர்தலிற்கு பின்னர் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் …

  4. image: dailymirror.lk இலங்கையில் இருந்து தமிழினத்தை அழிக்க வேண்டும் அல்லது அதனை அடக்கி ஆள வேண்டும் என்பதுடன், இலங்கையை பெளத்த சிங்கள சிறீலங்காவாக கட்டி எழுப்ப வேண்டும் என்பதில்.. எல்லா சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகளும் கொள்கை வேறுபாடுகள் கடந்து ஒன்றித்துப் பயணிப்பதை.. இப்படம் தத்துரூபமாக இனங்காட்டி நிற்கிறது. ஆனால் சிங்களவனால் அழிக்கப்படும் தமிழனோ.. பிச்சைக் காசுக்கும்.. பதவிக்கும் அடிபணிந்து.. தமது மக்களின் குருதியால்.. உயிரால் கட்டி வளர்க்கப்பட்ட உரிமைப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் துரோகத்தை எவ்வித தயக்கமும் இன்றிச் செய்ய மட்டும் துணிகின்றானே.. எப்படி தமிழனுக்குள் மட்டும் இப்படி ஓர் இழிசிந்தனை...??! சுதந்திரக் கட்சியும்.. ஐக்கிய தேசியக்…

  5. அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க தொண்டமான் மறுத்தார் – ஜனாதிபதி! அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினையடுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மறை…

    • 4 replies
    • 562 views
  6. உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் கருத்து உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் தொடர்பில் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார் காணொளியில் காண்க… Share This http://newsfirst.lk/tamil/2016/09/உடுவில்-மகளிர்-கல்லூரி-வ-2/

  7. Global எனும் பெயரில் சில சமூக விரோதிகள் அப்பாவி மக்களை இத் திட்டத்தால் ஏமாற்றி வருகின்றார்கள். பிரமிட் திட்டத்துக்கு மாற்று பெயர்கள் வைத்து நடத்துகிறார்கள் ….. தயவு செய்து மக்கள் இவற்றுக்கு ஏமாற வேண்டாம் … கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் பிரமிட் வியாபாரம் / வலையமைப்பு வியாபாரம் (Network Business) அல்லது GLOBAL LIFE STYLE எனும் பெயர்களில் பொது மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பல அமைப்புக்களை கானக் கூடியதாக இருக்கின்றது. இவ் அமைப்புகள் பொது மக்களை மூலைச் சலவை செய்து அவர்களது வியாபாரமானது நன்மை பயக்கக் கூடியது என்று பொது மக்களை ஏமாற்றுகின்றார்கள். இவ் வியாபாரத்தில் அதிகம் எமது தமிழ் சமூகம் ஏமற்றப்பட்டிறுப்பதை அறிந்ததனால் பதிவேற்றம் செய்கிறோம் பிரமி…

  8. அரசாங்கத்தை கவிழ்ப்பதனை விடவும், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது மிகவும் சவால் மிக்கது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 40 - 45 லட்சம் ஆதரவாளர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியொன்று இருந்தது. அந்த எண்ணிக்கை 50 வீதமாக குறைவடைந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடையும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் நிலவி வரும் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் கட்சியில் ஒற்றுமை கிடையாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தயார், ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுப்போம். நாம் அனைவரும் ஒன்றிணைந்த…

  9. 'என் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்' திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 18:08 -நவரத்தினம் கபில்நாத் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் எனக் கூறியவர்கள் இன்று அவர்களின் ஏக பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர். எனது அரசியல் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியா, ஓமந்தையில் வைத்து ஊடகவியலார்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்;. நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து நுழைந்துள்ளதாகவும் தகுதியில்லாதவன் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். எனக்கு அவ்வாறான நிலைமை தேவை…

  10. கொழும்பு துறைமுக நகரதிற்கு நுழைவதற்கான சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை!! கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்ய கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டங்களைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாளை (வியாழக்கிழமை) கள விஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், சீனாவின் தூதரகம் ஏற்பாடு செய்த குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சொந்தமான சொத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்வதற்கான சீனா தூதரகத்தின் அதிகாரம்…

    • 4 replies
    • 988 views
  11. ஊடகவியலாளர் திச நாயகம் அவர்களுக்கு 20 வருட கடூழியச்சிறைத்தண்டனை யை சிங்கள நீதிமன்றம் இன்று தீர்ப்பாக கூறியுள்ளது.

  12. நெருக்கடிக்கு தீர்வாக... மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை, நாட அரசாங்கம் தீர்மானம்! மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். தற்போதைய நாணயமாற்று நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். https://athavannews.com/2022/1269261

    • 4 replies
    • 505 views
  13. வன்னியில் இடம் பெற்ற இறுதியுத்தத்தில் உயிர்தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் சிலர் காணமற் போயுள்ளதாகத் தெரியவருகிறது. தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைக்கபட்டுள்ள, அகதிகள் முகாமிலிருந்தே மர்மமான முறையில் இவர்கள் காணமல் போயுள்ளதாக மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்து வைத்தியர் ஒருவர் அண்மையில் இவ்வாறு மர்மமான முறையில் காணமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல விவரங்கள் இவருக்கு தெரிந்திருந்தது எனவும், அதன் காரணமாகவே இவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.…

  14. மஹிந்த அரசு வெளியில் சிங்கள மக்களிடம் தம்மை ஓர் அனைத்துலகத்திற்கு அடிபணியாத தலைமைத்துவம் என்று காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சர்வதேச சக்திகளை உள்வாங்கி தமிழர்களது போராட்டத்தினை ஒடுக்கியது போன்று தற்போது சர்வதேச நெருக்கடிகளையும் எதிர்கொள்ளலாம் என்று மஹிந்த அரசு நினைத்தது. உள்ளூரில் விடுதலைப்புலிகளை வென்று சிங்கள இனத்தை காப்பாற்றிய மன்னன் போன்றும் வெளியுலகிற்கு பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியினை நிலை நாட்டியவர் போன்றும் காண்பிக்கும் தோற்றம் நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்பதனை மஹிந்த அரசு கட்டம் கட்டமாக உணரும் காலம் நெருங்குகின்றது. சர்வதேச போர்க்குற…

    • 4 replies
    • 1.6k views
  15. அன்புக்குரிய சங்கதி வாசகர்களே.. சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக வாகரையிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள எம் தமிழ் உறவுகளுக்காக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு உங்கள் ஒவ்வொருவரின் கையெழுத்துக்களும் வலுச்சேர்க்குமென எண்ணுவதால் அன்பான வாசகர்களே இவ்மனிதாபிமான உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மதிப்பக்குரிய கோபி அனான் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்; அவர்களுக்கு சமாதானத்திலும் நீதியிலும் நம்பிக்கைகொண்ட தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்வது இலங்கையில் உள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களான யாழ்ப்பாணம், வாகரை ஆகிய ப…

    • 4 replies
    • 2.2k views
  16. தீர்வுகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம -க.வே.பாலகுமாரன்- பெரும் இரத்தக் களரிகளுக்குப் பின் சர்வதேசம் தலையிட்டுத் தீர்வினைத் தானே முன்வைக்குமொரு செயற்றிட்டத்தின் மிகப் பிந்திய வெளிப்;பாடு கொசோவிற்கான தீர்வுத் திட்டமாகும். இம்மாதம் 2 ஆம் திகதியன்று இது சேர்பிய சனாதிபதி போரிஸ் ராடிக்கிடமும் (டீழசளை வுயனiஉ) கோசோவோவின் மாகாணத் தலைநகர் பிரிஸ்ரினாவில் வைத்து அதன் சனாதிபதி பாத்திமிர் செய்துவிடமும் (குயவஅசை ளநதனரை) கையளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமும் அதைக் கையளித்த ஐ.நா செயலரின் சிறப்புத் தூதரும் வேறு யாருமில்லை. முன்னாள் பின்லாந்து பிரதமர் மார்ட்டி அதிசாரியே அவர். (ஆயசவவi யாவளையயசi) தீர்வின் முழு விபரமும் வெளியாகாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கால ஐ.…

  17. "தேர்தலை பகிஷ்கரிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்" ஜனாதிபதித் தேர்தலில் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் அவர்களாகவே தீர்மானிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒவ்வொரு தமிழரும் மிகக் கவனமாக பரிசீலித்து, வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு ஆராய்ந்து யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் விட்ட தவறை மீண்டும் மேற்கொள்ளாது, தேர்தலை பகிஷ்கரிக்கும் எண்ணத்தையும் கைவிட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியின் கையொப்பத்துடன் வெள…

  18. மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக போட்டியிடமாட்டேன்! - புதிய ஜனாதிபதி மைத்திரி உறுதி. [Friday 2015-01-09 18:00] மீண்டுமொருமுறை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று மாலை பதவியேற்ற பின்னர் உரையாற்றிய அவர், அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுடன் உரிமைகள் பேணப்படும் வகையில் இந்த தாய் நாடு அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லப்படும். என்னை வேட்பாளராகத் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த தருணத்தில் ந…

  19. தமிழர்களின் காவலர் என்ற அடையாளத்தை ஜெயிடம் ஒப்படைத்தார் கருணாநிதி! - அவுட்லுக் சஞ்சிகை வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது காத்தரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாதிருந்த தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தனது முதலமைச்சர் பதவியுடன், தமிழர்களின் காவலர் என்ற தனது அடையாளச் சின்னத்தையும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான  ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிவரும் அவுட்லுக் சஞ்கையின் இம்மாதப் பதிப்பில், ஈழத்தமிழ் மக்களை கருணாநிதி கைவிட்டுவிட்டார் என்ற பரவலான கருத்தை ஜெயலலிதா மூலதனமாக்கிக் கொண்டிருக்கிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடய…

  20. யாழில் விசேட நடவடிக்கை:70 பேர் கைது! யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன் போது , போதைப்பொருள் பாவனையாளர்கள் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்…

  21. கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் (வே.தங்கவேலு) எழுதியுள்ள சோதிடப் புரட்டின் நூல் வெளியீட்டு விழா கனடாவில் கடந்த சனிக்கிழமை (08.09.07) எழுச்சியோடு நடைபெற்றது. மேலும் வாசிக்க

  22. இலங்கையின் மீது கனடா பொருளாதாரத் தடையைக் கொண்டுவரவேண்டும் -சொக் கொன்கெல் வீரகேசரி இணையம் 4ஃ20ஃ2008 12:49:25 Pஆ - மனித உரிமை மீறல்கள் காரணமாக இலங்கையின் மீது கனடா பொருளாதாரத் தடையைக் கொண்டுவரவேண்டும் என கனடாவின் கன்ஸவேட்டிவ் கட்சி நிதிச்சேகரிப்பாளர்கள் சொக் கொன்கெல் கோரியுள்ளனர். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை வம்சாவளிகளும் ஒன்றாரியோ சட்டத்தரணிகளும் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் இலங்கை அரசாங்கமே பொறுப்பாக உள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மீது பொருளாதார மற்றும் ராஜதந்திரத் தடைகளைக் கொண்டுவருவது தொடர்பாக கனேடிய அரசாங்கம் ஆராயவேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது …

    • 4 replies
    • 1.5k views
  23. நீதிமன்றங்களில் 1,131,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், மேல் நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும்,மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 262,665 வழக்குகளும், சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1260 வழக்குகளுமாக ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய 1,131,818 வழக்க…

  24. பாதுகாப்புத்துறைப் பேச்சாளாரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெலவின் மகன் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் என்பவை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளார். எனினும் இந்தக் குற்றத்தை கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொள்ளும் வகையில் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல பாடசாலை அதிபரை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டைக் கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைவிரல் அடையாளங்களின் அடிப்படையில் இந்தக் குற்றங்களுக்காக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித்திற்கும் ஏனைய நான்கு மாணவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஏனைய மாணவர்கள் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்…

    • 4 replies
    • 2k views
  25. குவைத்தில் நடைபெற்ற முதலாவது ஆசிய ஒத்துழைப்புக் கலந்துரையாடல் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனது இரண்டுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை குவைத்தில் சந்திப்பதற்கு ஜனாதிபதி சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்த போதிலும், அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை. மகிந்த ராஜபக்‌ஷ குவைத்தில் தங்கியிருந்தபோது, பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஸ்ரப், தாய்லாந்துப் பிரதமர் ஜிங்லக் சினவத்ரா, ஈரானிய அதிபர் மொகமட் அகமடிநிஜாட் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேசக்கூடும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. …

    • 4 replies
    • 677 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.