Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொறுப்பற்ற முறையில் பேசுவதுதான் அரசியலோ? [18 - June - 2007] இலங்கையின் தற்போதைய படுமோசமான மனித உரிமை மீறல்கள் நிலைவரம் தொடர்பாக சர்வதேச சமூகம் கடுமையான விசனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தரப்பினர் அவ்வப்போது தெரிவித்து வருகின்ற கருத்துகள் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்திருக்கின்றன. அரசாங்கத்தின் அமைச்சர்களில் சிலர் நாட்டின் இன்றைய விபரீதமான நிகழ்வுப் போக்குகளின் பாரதூரத்தன்மையை புரிந்துகொள்ள மறுக்கின்றார்கள். உண்மையில் நித்திரை செய்பவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடலாம். ஆனால், நித்திரை செய்வதைப்போன்று பாசாங்கு செய்பவர்களை எழுப்பமுடியாது. நித்திரை செய்வதாக பாசாங்கு செய்பவ…

  2. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில், விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலரும் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. (மலரும்) http://www.tamilmirror.lk/137270

  3. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் நகல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேரணையின் வரைவு வியாழக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் ஜெனீவா இராஜதந்திரக் களம் சூடுபிடித்திருக்கின்றது. வெள்ளிக்கிழமை மாலை வரைவு உத்தியோகபூர்வமாக ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபின் இறுதி வடிவம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இராஜதந்திரக் களத்தில் சூடான நகர்வுகள் திரைமறைவில் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் இந்தப் பிரேரணையின் அம்சங்கள் மேலும் பலவீனப்படுத்தப்படுமா அல்லது இப்போதுள்ள நிலையிலேயே சமர்ப்பிக்கப்படுமா என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி! மனித உரிமைகள் பேரவையிலுள்ள ஒவ்வொரு நாடு…

  4. (செ.தேன்மொழி) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றது. இதன் எச்சரிக்கை கருத்திற் கொள்ளமல் வினோதமடைய முயற்சிக்காதீர்கள், இராணுவத்தினர் ஒருவர் உங்கள் வீட்டின் கதவையும் தட்டுவதற்காக வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரால் சுமேந்ர பெரேராவை விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார். இராணுவத்தினரிடம் எவ்வகை ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவின்றி செய…

  5. போர் நிறுத்தம் செய்ய இலங்கையை வற்புறுத்துங்கள்: பிரதமருக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் சென்னை, மார்ச்.30&: போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:& வேதனை மிகுந்த உள்ளத்துடன் நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இலங்கை தீவில் வாழும், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளுமான, அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது உடனடித் தேவை என்பதே இக்கடிதத்தின் நோக்கம். இரக்கமற்ற இலங்கை அரசின் கொடுங்கரங்களில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறா…

  6. சாத்தியமான தீர்வுத் திட்டத்தை ஐ.நாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-03 09:49:26| யாழ்ப்பாணம்] இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வுத் திட்ட வரைவு அரசிடம் மட்டுமல்ல; தமிழ்த் தரப்புகளிடமும் இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. காலத்திற்குக் காலம் தீர்வுத் திட்டங்கள் முன் வைக்கப்பட்ட போதிலும் அவை அரங்கேறவில்லை. 1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை அடிப்படை யாகக் கொண்ட தீர்வுத்திட்டம் முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தயாரித்த தீர்வுத்திட்டம் மற்றும் இலங்கை அரசுடன் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் விடுத லைப்புலிகளால் முன்மொழியப்பட்ட திட்டம் வரை…

    • 4 replies
    • 1.2k views
  7. சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை ஏப். 30 இல் மக்களுக்கு சமர்ப்பிப்பு தேசிய பிரச்சினைக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மே தினக் கொண்டாட்டத்தின்போது சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுவிட்டத

  8. தமிழீழ விடுதலைப் போரில் இதுவரை 20,251 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பை தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது. இதில் 31-01-2008ம் ஆண்டு வரை வீரச்வாடைந்த மாவீரர்கள் எண்ணிக்கை உள்ளடக்கப்படுகின்றது. வீரச்சாவடைந்த மாவீரகளின் எண்ணிக்கை 20251 ஆண் மாவீரர்கள் 15959 பெண் மாவீரர்கள் 4292 தரைக்கரும்புலி மாவீரர்கள் 102 கடற்கரும்புலி மாவீரர்கள் 246 எல்லைப்படை மாவீரர்கள் 279 காவல்துறை மாவீரர்கள் 38 மாமனிதர்கள் 18 நாட்டுப்பற்றாளர்கள் 466 http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 2 replies
    • 1.2k views
  9. 'என்மீது போர்க் குற்றமா?'- மகிந்த கேள்வி விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை எவ்வாறு போர்க்குற்றமாகும் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். தன்னை மின்சார நாற்காலிக்கு அனுப்ப சிலர் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தலைநகர் கொழும்பில் மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்தின் மேதின நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். தற்கொலை செய்துகொள்ள தயாராக இருந்த ஒரு சந்ததிக்கு வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்தமை மனித உரிமை மீறலாகுமா என்றும் மகிந்த ராஜபக்ஷ மேதின உரையில் கேள்வியெழுப்பினார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை தயாரிப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற…

  10. இந்தக் கட்டுரையின் தலைப்போ அல்லது இதில் கூறப்பட்டுள்ள விடயங்களோ புனைவு கிடையாது. வெளியிலிருந்து ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, உண்மைநிலை வெளியே தெரியாதவாறு, தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் நின்று, அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இறுதிக்குரலை பதிவு செய்து, உலகின் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே உயிரைத் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் களநிலைச் செய்தியாளர்கள் தருகின்ற பதிவுகள் இவை. ஆகவேதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை வெளியிட எமக்குத் தயக்கமாக இருந்தபோதும், எந்தவிதமாற்றமும் செய்யாமல் அப்படியே தருகின்றோம். இந்தக் கட்டுரை பதிவு செய்கின்ற வலியை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அதற்கும் ம…

  11. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்மாதிரியை பின்பற்ற ஜனாதிபதி ராஜபக்ஷ முன்வருவாரா? [28 - April - 2007] உலகக் கிண்ணத்திற்கான ஒன்பதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று பாபடோசில் நடைபெற இருக்கின்றது. இதில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் களத்தில் இறங்குகின்றன. இலங்கை அணியை உற்சாகப்படுத்தி வெற்றி பெறச் செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே நேரில் அங்கு சென்றுள்ளார். அத்துடன் பல அமைச்சர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள், விளையாட்டுத் துறை அமைச்சின் செலவில் அங்கு ரசிகர்களாகச் சென்றுள்ளனர். இலங்கையின் அரசியல் ஆடுகளம், பிரச்சினைகள் நிறைந்து எதிர்விளைவுகள் மேலோங்கி சாதகமற்ற நிலையில் இருந்து வரும் வேளை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் ஆடுகளம் இலங்கைக்குச் சாதகமான…

  12. வடக்கு கிழக்கில் நடைபெறும் இராணுவத்தின நடவடிக்கைகள் மற்றும் வலிந்த தாக்குதல்களை கொழும்பிலிருந்து ஒருங்கிணைத்து வழிநடத்தும் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெனான்டோ சிறீலங்கா படைத்துறைச் செயலகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  13. அடுத்து பதட்டம் -குளோபல் தமிழ்ச்செய்தியாளர் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளெங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களிடையே மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டிப்பதில் மூர்க்கமான மன நிலையொன்று இம்முறை பெரும்பாலும் காணப்பட்டது.யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதியின் ஜந்து மாடி கட்டிட உச்சியில் அமைந்துள்ள குடிநீர் தாங்கி மீது மாணவர்களால் ஏற்றப்பட்டதென நம்பப்படும் ஈகை சுடரின் ஒளி நீண்ட தூரத்திற்கு பரவியே காணப்பட்டது.ஒரு புறம் கொட்டும் மழை மறுபுறம் மாணவர் விடுதியினை சூழ படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் எதனையும் பொருட்படுத்தாது சுடரேற்றும் நிகழ்வினை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். இந்நி…

  14. ஆட்களின்றிச் செல்லும் உளவு விமானம் இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு Wednesday, 16 July 2008 விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உளவு பார்ப்பதற்காக யு.ஏ.வி. எனப்படும் ஆட்களின்றிச் செல்லக்கூடிய கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறிலங்கா விமானப்படை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் அநுராதபுரம் விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானத்துக்குப் பதிலாகவே இது கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள உளவு விமானம் வடபகுதி யுத்த முனையில் புலிகளின் நடமாட்டம் மற்றும் படையினருக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை கண…

  15. 9/15/2008 2:53:14 PM கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டி பிரதேசத்தில் இன்று அதிகாலை முதல் கடும் மோதல்கள் இடம் பெற்று வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறிகண்டி நகரில் இருந்து மேற்குத் திசையில் சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் இந்த எறிகணை தாக்'குதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது, இராணுவத்தின் கடும் எறிகணை தாக்குதல்களையடுத்து, அந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும் அந்தப் பகுதியில் தொடர்ந்து கடும் சண்டைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எறிகணை தாக்குதல்கள் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்துக்கள் இன்று நடைபெறவில்லை என்றும் கிளிநொச்சியில் இருந்து இன்று வவுனியாவுக்கு வரவேண்டிய கிளிநொச்…

  16. தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா புலனாய்வுத்துறை திகதி: 28.02.2010 // தமிழீழம் சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பு குழு மோதல்களால் பலம் இழந்துள்ளது. ஆனால் புலனாய்வுத்துறை மாத்திரம் விடாப்பிடியாக செயற்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியம் நன்றாக வேர்விட்டு ஒங்கி வளர்வதைக் கண்டு சிறிலங்கா அரசு அச்சம் அடைந்துள்ளது. எதுவிதப்பட்டாயினும் தமிழீழத்தில் தேசிய எழுச்சி மீண்டும் தோன்றாமல் தடுப்பது அரசின் அண்மைக்காலத் திட்டமாக இருக்கிறது. இதற்க்காக அது பெருமளவு பணத்ததை புலானாய்வுத்துறைக்கு வழங்கி ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சிறிலங்கா புலனாய்வுத்துறை வகுத்துள்ள செயற் திட்டங்களை மூன்று தலைப்பின் கீழ் கொண்டு வரலாம் - 1) தமிழீழத் தா…

    • 7 replies
    • 1.2k views
  17. அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, ஜப்பான் ஆகிய பல்வேறு நாடுகளின் கூட்டோடு, குறிப்பாக இந்தியாவின் துணையோடும் ஆசீர்வாதத்தோடும் படைக்கல உதவிகளோடும் இந்தப்பெரும் வல்லரசுகள் இணைந்து நடத்திய மிகப்பெரிய போருக்கு எதிராக தமிழர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய போரை, இனியும் நடத்தப் போகின்ற போரை வரலாறு மிகப்பெரிய அருஞ்செயலாகவே பதிவு செய்யும். மிகப்பெரும் வீரஞ்செறிந்த வரலாறாகவே பதிவு செய்யும். " என விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி அவர்கள் 'புலிகளின் குரல்' வானொலிக்கு வழங்கிய கருத்துகளின் போது தெரிவித்துள்ளார். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  18. பலரையும் சிக்கல்படுத்தியுள்ள லலித் வீரதுங்கவின் தகவல்! நடந்து முடிந்த இந்திய பொதுத்தேர்தலில் இந்தியக் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காகவே வன்னி யுத்தத்தில் கனரக ஆயுதங்களை பயன் படுத்துவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்ததாக அவரின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் செயலாளர் லலித் வீரதுங்க மேற்படி தகவலை வெளியிட்டது எதற்காக என்ற கேள்வி நியாயமானதாயினும், லலித் வீரதுங்கவை பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ­ அதிக வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்குடனேயே அவர் அவ்வாறு கூறினார் என்பது தெளிவு. ஆனால் இந்தியக் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக வன்னிப் போரில் கனரக ஆயுதங்களைப்…

  19. படை அணிவகுப்பைப் பார்வைவயிடச் சென்றபோது வீதி விபத்து - 11 பேர் காயம் திங்கள், 15 டிசம்பர் 2008, 17:25 மணி தமிழீழம் [தாயகன்] புத்தளம் - அநுராதபுரம் வீதியில் இன்று காலை இடம்பெற்ற ஊர்தி விபத்தில் பொதுமக்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறீலங்கா புதிய படையணியின் அணிவகுப்பைப் பார்வையிடச்சென்றபோது இன்று காலை 8:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. காயமமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் படை உறுப்பினர்களா, அல்லது உறவினர்களா என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இவர்கள் பயணித்த சிற்றூந்து கருவலகஸ்வேவ பகுதியில் பாரவூர்தியுடன் மோதியுள்ளது. pathivu

  20. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வன்னியில் இருந்து - துவாரகா கலைக்கண்ணன் - 'நந்திக் கடலோரம் எங்கள் தமிழ் வீரம் வந்து நின்று ஆடியது நேற்று......' இது கவிஞர் புதுவையின் பாடல் வரிகள். அதே நந்திக்கரையில் நாதியற்று நடைபிணமாய் போனது தமிழ் இனம். விடுதலைப் போராளிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு மக்கள் தமது ஊரை இழந்து, உறவுகளை பிரிந்து, உணவின்றி, உடல் காயங்களுடன் இராணுவத்தின் ரவை மழையினுள் பாலஸ்தீனத்தின் நீண்ட பயணம் போல் பயணித்துக் கொண்டிருந்தனர். கரையோரங்களில் பல போராளிகள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றிருந்தனர். ஆனால் அந்த வீரன் மிகத்தெளிவாக தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்கான ஆயத்தங்களுடன் நின்றிருந்தான். 'சரணாகதி' என்பது சரித்திரத்தில் இல்லை என்பதே அவனது நிலையாக…

  21. நோர்வே தூதுவர் ஊடாக அரசு புலிகளுக்கு விசேட தகவல் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமரச பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான இடம் குறித்து அரசாங்கம் விஷேட தகவல் ஒன்றை புலிகள் இயக்கத்திற்கு நோர்வே தூதுவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளது. அரசாங்கத்தின் விசேட தகவலை வன்னி சென்ற இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிரஸ்கர் புலிகளுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதியை பொறுத்தவரையில் சமரச பேச்சுவார்த்தையை ஐரோப்பிய நாடு ஒன்றில் அல்லது புலிகள் இயக்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நோர்வே நாட்டில் நடத்த விருப்பம் கொண்டுள்ளார். அதனை நோர்வே தூதுவர் ஊடாக புலிகளுக்கு தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் கொலை…

  22. கொழும்பு: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தமிழ் திரையுலகத்தினருக்குப் போட்டியாக, சிங்கள நடிகர்கள் நாளை கொழும்புவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இலங்கையில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, கடந்த மாதம் 19 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் தமிழ் திரையுலக இயக்குநர்கள் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். இதனையடுத்து, தென்இந்திய நடிகர் சங்க வளாகத்தில், நடிகர், நடிகையர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். இதேபோல, சின்னத்திரை கலைஞர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தமிழ் திரையுலகத்தினருக்குப் போட்டியாக, இலங்கையில், அந்நாட்டு நடிகர், நடிகையர் போட்டி போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். கொழும்பு நகரில் உள்ள சுதந்திர தின மைதாணத்தில் இந்தப்…

  23. அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். நேற்று (13.12.13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும…

    • 16 replies
    • 1.2k views
  24. சென்னையில் வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாரிய கண்டனப் பேரணி [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 07:41 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுலமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டனப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ம.தி.மு.க.சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சென்னை மன்றோ சிலையில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது. பேரணிக்கு தலைமை தாங்கி ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நடந்தே சென்றார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.தொண்டர்கள் கையில் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கறுப்புச் சேலை அணிந்த பட…

  25. வெளி நாட்டு தமிழர்களின் நாடி பார்க்கும் "றோ" வெளி நாடுகளில் இந்தியாவிலிருந்து படையெடுக்கும் ஜோதிடர்களில் ஒரு பகுதியினர் றோ அமைப்பினரின் ஏஜன்டாக உள்ளனர்.அண்மையில் இந்தியாவுக்கு காசு அனுப்பும் போது ஜோதிடர் ஒருவர் உயரதிகாரிகளுக்கான கடவுச்சீட்டு(Diplomatic passport) வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.இவர் கனடாவின் மிசிஸாகா பகுதியிலுள்ள கடையொன்றில் பணம் அனுப்பும் போது இவ்விடயம் தெரிய வந்துள்ளது.இவர் பற்றி விசாரித்தபோது கிழமைக்கு $3000-5000 வரை இந்தியாவுக்கு பணம் அனுப்புவதாகவும் தெரிய வந்துள்ளது.இதைவிட முக்கிய விடயம்:-இந்து சமய முறைப்படி ஆலயம் போன்ற இடங்களில் தான் தகடுகளை வைத்து பூஜிக்க வேண்டும்.இதை வீடுகளில் வைப்பதால் குடும்பங்களில் பிரச்சனைகள் தலை தூக்கும் என்பது மரபு.இதைவிட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.