ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
வவுனியா பாலமோட்டைப் பகுதியில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் கைப்பற்றப்பட்ட படைக்கலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
தடுப்பில் இருக்கும் அரசியல் கைதிகளை அனைவரையும் எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் ஏன் விடுதலை செய்ய முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இத்தருணத்தில் எந்த விதமான எதிர்ப்பும் உருவாகப் போவதில்லை. அரசியல் காரணங்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு, இன்று அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ள சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். அந்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த ஒகஸ்ட் மாதம் 19ம் திகதி என்னால் அனுப்பபட்ட கடிதத்தில் அரச…
-
- 6 replies
- 1.2k views
-
-
(நா.தனுஜா) நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக 1300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம், நான்கில் ஒருபகுதியினர் அரச சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனைத் துரிதப்படுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாகக் கூறியிருக்கும் அதேவேளை அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையின் 9 மாகாணங்களையும் ஒருங்கிணைத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18–80 வயது வரையான 1300 பிரஜைகளிடம் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால்…
-
- 6 replies
- 1.2k views
-
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கொடுவாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றின் போது விழுப்புண்ணடைந்து 30.11.1991 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தளபதி லெப்.கேணல் ஜோய் அவர்களின் 19ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 6 replies
- 1.2k views
-
-
புலிகள் மீதான தடையை நீக்கி பேச்சை ஆரம்பிக்குமாறு யாழ். ஆயர் கோரிக்கை திகதி: 14.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] விடுதலைப் புலிகள் மீதான தடையை அரசாங்கம் உடனடியாக நீக்கி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென யாழ் ஆயர் தேமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை சிறிலங்கா சனாதிபதி மகிந்தராஐபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பேச்சின் மூலம் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் யுத்தத்தின் மூலம் மக்களின் உயிர்களே வீணாக பறிக்கப்படும் எனவும் ஆயர் தெரிவித்துள்ளார். சங்கதி
-
- 8 replies
- 1.2k views
-
-
-
பிரபாகரனே என் தலைவர் -டாக்டர் பி. இராமசாமி உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார். இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் உறுதுணையாக இருந்தவர்கள்.இந்திய அரசாங்கமுமஇ தமிழ்நாட்டு அரசாங்கமும் தான் இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது என்று அவர் சொன்னார். இலங்கை நாட்டு அதிபர் இராஜபக்சே இந்தியாவிற்கு துணிச்சலாக வருவதற்கு இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் கொடுத்த ஆதரவினால் அந்த இன படுகொலையாளி இந்தியாவிற்க்கு துணிச்சலாக வருகிறார் இலங்கை தமிழர்களை அநியாயமாக படுகொலை செய்ய உதவியாக இருந்த இந்தியாவை குறை சொன்ன எனக்கு தடை விதித்தாலு…
-
- 6 replies
- 1.2k views
-
-
சீ.ஐ.டி ஒருவர் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தார். மறுத்தால் குடும்பத்தை அழித்து விடுவேன் என பயமுறுத்தியதால் சம்மதித்தேன் என்று கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய பெண் ஒருவர் நிகழ்ச்சித் திட்ட உதவியாளரிடம் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். அருணாசலம் தடுப்பு முகாமைச் சேர்ந்த இந்தப் பெண் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றுக்கும் அறிவித்திருக்கிறார். கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் 20 வயதுடைய கிளிநொச்சி கணேசபுரத்தை நிரந்தர வதிவிதடமாகக் கொண்ட திருமணமாகாத இளம் பெண்ணொருவர் பெண் குழந்தையொன்றை பிரவசித்துள்ளார். இதன் பின்னர் குறித்த பெண் பிள்ளையை தனக்கு வளர்க்க விருப்பமில்லை எனவும் அந்தக் குழந்தையை அரச சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விருப்புவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் பிரதிநிதிகள் சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை! நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானது தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நான்கு சுற்…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்த ஆட்சி ஒன்றை கிழக்கில் ஏற்படுத்த முடிவு எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளும், முஸ்லிம் மக்களும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பீடத்தை தந்தி மூலமும், தொலைநகல் மூலமும் கோரியுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி ஆகியோருக்கு இந்தத் தந்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தந்திகளில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் அரசுக்கு எதிரான கோரிக்கையையே வெளிப்படுத்தியுள்ளனர் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் எமது அபிலாசைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்…
-
- 3 replies
- 1.2k views
-
-
சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
செவ்வாய், 31 மே 2011 15:47 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசு பெற்ற யுத்த வெற்றி அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் கருத்தரங்கு இன்று கொழும்பில் ஆரம்பமாகியபோது நோர்வே பாராளுமன்றத்தில் இலங்கை அரசிற்கு எதிரான கண்டத் தீர்மானமும் வாதப்பிரதிவாதமும் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜரோப்பிய ஆதரவாளர்களுக்கு எதிராகவும் இலங்கை அரசிற்கு எதிராகவும் அண்மையில் வெளிவந்த ஜ.நா அறிக்கையினை அடிப்படையாக வைத்து வாதப்பிரதிவாதங்கள் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்றன. நோர்வேயின் கென்சர்வேரிவ் கட்சியின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகார குழு தலைவர் பீரர் கெட்மாக் தலைமையில் தொடக்கி வைக்கபட்ட வாதத்திற்கு நோர்வேயின் வெளிநாட்டு அமைச்சர் ஜோன் கோர…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் லண்டனில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அழைக்கப்பட்டிருந்த பெரும் பாலானவர்களும் பிரயாணங்கள் பற்றி கட்டுரை எழுதுபவர்கள். அமைச்சர் உல்லாசப் பயணம் பற்றியே அங்கு பெரிதாகப்பேசினார். 1.சுமார் மூவாயிரம் தமிழ்ப் புலி சந்தேகநபர்கள் குற்றஞ் சாட்டப்படாமல் இன்னமும் காவலில் இருந்து வருகின்றார்கள் என்று அவர் ஒப்புக்கொண்டார். 2.பிளேக்கின் வரவை நிராகரித்தது பாதிப்பை ஏற்படுத்துமா? 3.கே.பி.,பத்மனாதனை இன்ரபோலிடம் ஒப்படைக்குமா இலங்கை? இலண்டனில் பீரிஸ் நடாத்திய பத்திரிகையாளர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் பி.பி.சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் சிங்களப் பிரிவின் சந்தேசிய நிருபர் மற்றவர் தமிழ் சேவையில் தமிழோசை நிருபர். லண்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமைச்சர் பீரிஸின் இரகசிய செயல்திட்டம் கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகப் பெரிய அசட்டுத் தனமான ராஜதந்திர தவறை இழைத்தார். நேற்று 22.04.2012 அன்று சண்டேரைம்ஸ் எழுதியிருந்த அரசியல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகப் பெரிய அசட்டுத் தனமான ராஜதந்திர தவறை இழைத்தார். வெளியுறவு அமைச்சினால் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டின் போது இந்தத் தவறு இழைக்கப்பட்டது. அந…
-
- 0 replies
- 1.2k views
-
-
விவசாயம்,அபிவிருத்திக்கு இலங்கைக்கு உதவ தயார் - உலக வங்கி தெரிவிப்பு வீரகேசரி இணையம் 5/28/2008 11:37:12 PM - விவசாயம் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களுக்காக இலங்கைக்கு உதவ உலக வங்கி தயாராக உள்ளது. அணைக்கட்டுகளை பாதுகாத்தல் மற்றும் நீர் முகாமைத்துவ திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் நாக்கோ இஷி தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாக்கோ இஷி மேலும் கூறியதாவது: 350 நடுத்தர மற்றும் பாரிய அணைகளிலேயே இலங்கையின் விவசாயம் தங்கியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் …
-
- 3 replies
- 1.2k views
-
-
தெற்கு சிங்கள இளைஞன் என்றவகையில் தேசத்துரோகியாக மரணிக்க விரும்பவில்லைஆளும் தரப்புக்கு மாறிய மஹிந்த ரட்ணதிலக எம்.பி. கூறுகிறார் தெற்கில் பிறந்த சிங்கள இளைஞன் என்றவகையில் தேசத்துரோகியாக மரணிக்க நான் விரும்பவில்லை. வரவு செலவு திட்டம் 18 மேலதிக வாக்குகளால் வெற்றிபெறும் என அரசு தரப்புக்கு மாறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரட்ணதிலக தெரிவித்தார்.புலிகளின் 20 தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்குள் ஊடுருவியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 10 அமைச்சர்களை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலைசெய்வதற்கும் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் "நீலங்களின் சமர்" என்ற மாபெரும் பாடசாலை துடுப்பாட்டப் போட்டி இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
அகதி படகுகளில் பயங்கரவாதிகள் எவரும் இல்லை என கோபாவேசத்துடன் மறுத்துள்ளார் அவுஸ்ரேலிய பிரதமர் கெவின் ரட் அவர்கள். நேற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விக்கு விடையளித்த கெவின் ரட் அவர்கள் எதிரணியினர் அல்லது சில பத்திரிகைகள் கூறுவது போன்று அகதி படகுகளில் வந்தவர்களிற்குள் யாரும் பயங்கரவாதிகள் இல்லையென் திட்ட வட்டமாக மறுத்துள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 1.2k views
-
-
மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு மன்னாரில் ஆரம்பம் வீரகேசரி நாளேடு மன்னாரில் மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் செயற்றிட்டம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும். 2010ஆம் ஆண்டளவில் நமது நாட்டிலேயே மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ளமுடியும் என்று பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: மன்னார் கடற்பரப்பில் மசகு எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் செயற்றிட்டம் அடுத்த ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேள்விப்பத்திரங்கள் கோருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசுத் தலைவர் பதவிக்கான ஆளும் கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுக்கான பரப்புரைக் கூட்டம் ஒன்று சிலாபம் நகரில் நேற்று நடைபெறவிருந்த நிலையில், நகரிலுள்ள தமிழர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறை உத்தரவிட்டதால் அங்கு பெரும் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது. சிலாபம் நகரிலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு நேற்று திங்கட்கிழமை காலை சென்ற காவல்துறை அதிகாரிகள் சிலரே இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்ததையடுத்து அங்கு பெரும் அச்சநிலை உருவாகியது. அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் ஒன்று நகரில் நடைபெறவிருப்பதால் தமிழர்கள் அனைவரும் தமது வீடுகளையும், வியாபார நிலையங்களையும் மூடிவிட்டு உடனடியாக நகரைவிட்டு வெளியேற வேண…
-
- 3 replies
- 1.2k views
-
-
பொய்களின் வடிவங்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் யுத்த நிறுத்தம் நெருங்குகிறதா ? சர்வதேச காய் நகர்த்தல்கள் சொல்லும் செய்தி என்ன ? இலங்கையில் ஒரு யுத்த நிறுத்தம் வருவதற்கான மறைமுகப் பேச்சுக்கள் இடம் பெறுவதை தற்போது வெளிவரும் செய்திகளின் அதிர்வலைகள் உணர்த்துவதாக உள்ளன. அடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை உணர்த்துவதற்கான அதிர்வுகளை சகல தரப்புக்களின் குரல்களில் இருந்தும் அவதானிக்க முடிகிறது. முதலில் சகல கருத்துக்களையும் வகைப்படுத்துவோம். சிங்களத் தரப்புக்கு மகிழ்வு தரும் நிகழ்வுகள். 01. பிரிட்டன், பிரான்ஸ் இரு நாடுகளும் விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கும் மக்களை வெளியே விட வேண்டும். கடந்த 25 வருடங்களாக நடைபெறும் இனப் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த அவர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும். இது நேற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலனாய்வுத் தகவல்களை பின்னரே தூதுவர்களையும் நாட்டுக்குள் அனுமதிப்போம் - சிறிலங்கா அரசாங்கம். ஆயுத பிணக்குகளில் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் சிறி லங்காவுக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் அலன் றொக் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்பட்டமையினால் இனிமேல் இத்தகையவர்கள் சிறி லங்கா வரும் முன்னர் அவர்கள் குறித்து புலனாய்வுத்தகவல்களை பெறவுள்ளோம். இதன் பின்னரே நாட்டுக்குள் அவர்களை அனுமதிப்பது குறித்து தீர்மானிப்போம் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இ…
-
- 1 reply
- 1.2k views
-
-
Written by thavam on Jun-19-11 7:06am From: oneislandtwonations.blogspot.com (Lanka-e-News 15.June.2011,2.00PM) Speaking after the transmission of Channel 4’s documentary ‘Sri Lanka’s Killing Fields’, Foreign Office Minister for South Asia Alistair Burt said: “I was shocked by the horrific scenes I saw in the documentary that was broadcast on 14 June. The recent UN Panel of Experts’ report, this documentary and previously authenticated Channel 4 footage, constitutes convincing evidence of violations of international humanitarian and human rights law. The whole of the international community will expect the Sri Lankans to give a serious and full respon…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-