வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
இன்று (4.8.2006) 5வது பிறந்தநாளை கொண்டாடும் யாழ்.கொம் பொறுப்பாளர் திரு மோகன் அவர்களின் மூத்த புதல்வி வைதேகி பல்கலையும் கற்று, சீரும் சிறப்புமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் களிப்புடன் வாழ வாழ்த்துக்கள்!!
-
-
- 11k replies
- 1.3m views
- 9 followers
-
-
சகல உறவுகளுக்கும் , கிறிஸ் மஸ் வாழ்த்துக்களும் பிறக்க இருக்கும் புதுவருடம் வளமானதாகவும், மகிழ்வானதாகவும், எண்ணங்கள் ஈடேறவும் வேண்டுமென என் பிரார்த்தனையில் உங்கள்அனைவரையும் நினைக்கிறேன். நட்புடன் நிலாமதி
-
- 21 replies
- 2.9k views
-
-
" தீபம் " தொலைக்காட்சியின் 10 வயதிற்கு வாழ்த்துக்கள் . பத்து வருடம் என்பது சாதாரனமானதல்ல , எத்தனையோ ...... இன்ப , துன்பங்களையும் , விமர்சனங்களையும் தாண்டி 11 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் , தீபத்தின் நிர்வாகத்திற்கு தலை வணங்குகின்றேன் . எனக்கு தீபத்தில் பிடித்தது ....... செய்தியாளர் அனஸின் பேட்டிகள் , பிரதி ஞாயிற்றுக் கிழமை வரும் ஜோதிடர் வித்தியாதரன் அவர்களின் " இவ்வார ஜோதிடம் " இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நடக்கும் போது வீட்டில் ஒரு ஊசி கூட விழாமல் பார்த்துக்கொள்வோம் . மீண்டும் வாழ்த்துகின்றேன் " தீபம் " நீ , பல்லாண்டு வாழியவே .
-
- 32 replies
- 4.2k views
-
-
இன்று தனது "58"வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் மான்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு புலம் பெயர் ஈழத்தமிழர்களின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நாளில் சீரும், சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறோம். எமது வாழ்விற்கான போராட்டத்தில் கடந்த காலங்களை மறந்து, அரசியலுக்கு அப்பால், உங்கள் காத்திரமான ஆதரவுகளை வழங்க வேண்டும். அது காலத்தின் தேவையும் கூட. கடந்த காலங்களில் பெருந்தலைவன் எம்.ஜி.ஆர், இன்று விருட்சமாகியுள்ள எமது தேசிய போராட்டத்தை வளர்ப்பதில் ஆற்றிய பங்கை ஞாபகமூட்டும் அதேவேளை தாங்களும் ஒரு உறுதியான பங்களிப்பை வழங்குவீர்களென நம்புகின்றோம்.
-
- 5 replies
- 2.3k views
-
-
திருமண பதிவு செய்து கொண்ட.... Surveyor க்கு வாழ்த்துக்கள். அண்மையில்.... இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்க, முதல் படியாக... பதிவு திருமணம் செய்து கொண்ட சேர்வயருக்கும், அவரின் துணைவியாருக்கும்... இதயம் கனிந்த... வாழ்த்துக்கள்.
-
- 31 replies
- 3.6k views
-
-
புனித வெள்ளி வாழ்த்துக்கள்.... இக்களதோழர்கள் அனைவருக்கும் புனிதவெள்ளி வாழ்த்துக்கள்....
-
- 3 replies
- 2k views
-
-
:P Žì¸õ À¢û¨ÇÂû «Êì¸Ê ¸ÇòÐìÌ Åà ÓÊÂÅ¢ø¨Ä «¾½¡ø §Ä𼡠º¢Ä Å¢¼Âí¸û ¦ºö§ÅñÊÔûÇÐ õ õ 5000 ¾¡ñÊÅ¢ð¼Ð õ ¡¦ÃýÎ ¿¢¨Éì¸È¢Âû ¿õÁ¼ ¸É¼¡ò ¾õÀ¢ ¸Å¢¾ý ÁðÎÚò¾¢Éá ÁðÎÁøÄ¡Ð º¸ ¯ÚôÀ¢É§Ã¡Î §º÷óÐÐ ¸ÇÁ¡Îõ ¾õÀ¢ ¸Å¢¾ÛìÌ Å¡úòÐì¸û À¢û¨ÇÂû Å¡úòÐí§¸¡ À¢:Ì ¾õÀ¢ þÕì¸ðÎõ ¯í¸ ¸É¼¡ ¦À¡Ä¢ÍìÌ ¬û ±Î츢ȡí¸Ç¡õ ¯ñ¨Á§Â¡ :wink: :wink: :wink: :wink:
-
- 47 replies
- 9.2k views
-
-
இன்று தன் 10,000 ஆவது பதிவை எட்டிய கிருபனுக்கு வாழ்த்துக்கள். கிருபனின் இணைப்புகள் பல பரந்த வாசிப்புக்குட்பட்டவையாகவும் பதில்கள் பல ஆழமானதாகவும் இருப்பன. ஆளும் கொஞ்சம் ஆழமான ஆள் தான். வாழ்த்துக்கள் கிரு
-
- 29 replies
- 2.3k views
- 1 follower
-
-
பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள்........!
-
- 88 replies
- 8.9k views
-
-
பத்தாயிரம் பதிவுகளை.... நிறைவு செய்த, வாத்தியாருக்கு... வாழ்த்துக்கள். தமிழ் மக்கள் மீதும், அந்த மண்ணின் மீதும்.... மிகுந்த நேசத்தை கொண்டவர். இவரின்... அரசியல் கருத்துக்களை, மீண்டும் வாசிக்கத் தூண்டும் அளவில்... சிறந்த கருத்துடன் காணப்படும். இவர் யாழ் களத்தில் ஆரம்பித்த... "தமிழ் படிப்போம்." மற்றும் "உதைபந்தாட்டம் சம்பந்தமான, சட்ட திட்டங்கள் " பலரையும் கவர்ந்து... இன்றும் அதனை நினைவு கூரும் அளவிற்கு, பிரபல்யமானது. வாத்தியார் இன்னும் பல பதிவுகளை, பதிய வாழ்த்துகின்றேன்.
-
- 21 replies
- 1.7k views
- 1 follower
-
-
1000 கருத்துகள் பதிந்த விடியலுக்கு வாழ்த்துகள். யாழ்களத்தில் 1000 கருத்துகள் பதிந்த எம் யாழ்கள உறவு விடியலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு மேலும் தொடர வாழ்த்துகள். யாழ்களத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
-
- 2 replies
- 998 views
-
-
1000 பச்சை புள்ளிகளை நெருங்கும் நெடுக்ஸுக்கு வாழ்த்துக்கள்.விஞ்ஞானத்தில் இருந்து அரசியல் வரை பல விவாதங்களில் பல சிந்திக்க வைக்கக்கூடிய கருத்த்துக்களை வைத்தவர்.மேலும் பல பச்சை புள்ளிகளை பெற வாழ்த்துக்கள்.யாழுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள், நெடுக்ஸ்.
-
- 33 replies
- 2.3k views
- 1 follower
-
-
யாழ்களத்தில் இணைந்த ஒருவருடத்தில்.... 1000 பதிவுகளை இட்ட "விவசாயி விக்"கிற்கு வாழ்த்துக்கள். இவர் தாயகப்பற்று மிக்கவர் என்பதுடன், கனடாவில்... பலருடன் இணைந்து நம்மூர் மரக்கறிகளை பயிரிடும் அரியபணியைச் செய்து வருவதில்... உயர்ந்து நிற்கின்றார். நான் இங்கு வந்த ஆரம்பத்தில்... கத்தரிக்காயை சிலகுறிப்பிட்ட கடைகளில் தான்...வாங்க முடியும். ஆனால்.. இப்போ எல்லாக் கடைகளிலும் கிடைப்தற்குக் காரணம்.... ஒல்லாந்தில்... கண்ணாடி அறைகளில் பயிரிட்டு அதனை... ஐரோப்பா எங்கும் அனுப்பி வருகின்றார்கள். வருங்காலத்தில் "விவசாயி விக்"கும் இதே... முறையைப் பின்பற்றி நம்மூர் மரக்கறிகளை, பயிரிட வேண்டும் என்பதே... என் ஆசை. விவசாய வேலை எவ்வளவு கடினம் என்பது எமக்குத் தெரியும்.... அப்படியிருக்கவும், தனத…
-
- 50 replies
- 4.7k views
-
-
அறிவித்தல் (வெட்டுக்குத்து) & ஆலோசனை கருத்துகள் 1000 பதித்த நியானிக்கு வாழ்த்துகள் (301 பச்சை புள்ளிகள் ~ 1/3) இன்னும் பல அறிவித்தல் & ஆலோசனை கருத்துகள் பதிய வாழ்த்துகள்.
-
- 25 replies
- 2.5k views
-
-
10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் அரிய கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.
-
- 42 replies
- 3.1k views
-
-
10000 கருத்துக்களை அண்மிக்கும் இசைக்கலைஞனை வாழ்த்துவோம். களத்தில் பொறுமையாகவும் சிரிப்புடனான பல முகக்குறிகளுடன் நகைச்சுவையாக கருத்துக்களை கூறுவதில் வல்லவர்.முன்பு நகைச்சுவை கவிதைகளை எழுதியவர்.தொடர்ந்தும் எழுதுவார் என யாழ் களம் எதிர்பார்க்கிறது.யாழ் களத்தில் களேபரம் போன்ற பிரபல்யமான பதிவுகளுக்கு சொந்தக்காரரான இசை தொடர்ந்து நகைச்சுவை பதிவுகளையும் பதிவார் என எதிர்பார்க்கிறோம்.
-
- 29 replies
- 2.7k views
-
-
யாழ் களம் கண்ட மன்னவனே..எங்களின் எதிர்கால சூரியனே..உன்னை வாழ்த்த தமிழில் வார்தை இன்றி தவிக்கிறோம்..நீ யாழில் போடப் போறாய் 10000 ஆயிரம் நீயோ போடுவாய் 20000 ஆயிரம்.. சுவிஸ்சுக்கு நீ வாழ்ந்து காட்டு எதிரியை போட்டு தாக்கு உன் வாழ்க்கையில் நீ உயந்து காட்டு...நீ நீடுழி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்
-
- 30 replies
- 2.4k views
-
-
10000 கருத்துக்களை நெருங்கும் சகோதரன் தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் கருத்துக்களை பதிய மனதார வாழ்த்துகிறேன்.
-
- 31 replies
- 2.6k views
-
-
அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் 10000 கருத்துக்களையும் இணைப்புக்களையும் யாழிற்கு வழங்கிய கந்தப்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
-
- 35 replies
- 2.5k views
-
-
10000 க்கு மேலான கருத்துக்களை யாழுக்கு வழங்கிய தயா அண்ணா மேலும் பல அரிய கருத்துக்களை வழங்க வாழ்த்துகிறேன்.
-
- 5 replies
- 982 views
-
-
10000ஆயிரம் பதிவை நெருங்கி இருக்கும் தயா அண்ணாக்கு வாழ்த்துக்கள்
-
- 26 replies
- 2.3k views
-
-
144 வது கனடா தினம் (வாழ்த்துக்கள்) யூலை முதலாம் திகதி கனடா 144 வது தினத்தை கொண்டாடுகிறது புலம் பெயர்ந்து வந்த எம்மையும் எம்மைபோல பலரையும் வரவேற்று வாழ்வளித்து வரும் கனடா தேசத்தை இன்முகத்துடன் வாழ்த்துவோம் கனடா இன்றுபோல் என்றும் திகழ வாழ்த்துக்கள் வாழ்க கனடா வாழியவே
-
- 4 replies
- 802 views
-
-
யாழ் களத்தில் பல துறை சார்ந்தும் அநேகமாக எல்லா விடயங்களையும் எழுதும் ஆற்றல் மிக்க அதிலும் தாயக போராட்ட மற்றும் அவர்களது தியாக வரலாறு பற்றி அதிகமான பற்றுடன் எழுதும் தம்பி நெடுக்குக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும் அதே நேரம் அவரது கனவுகள் பலிக்கவும் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக.
-
- 65 replies
- 4.3k views
-
-
15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் யாழ் களத்திற்கு இருக்கும் பண்பும் சிறப்பும் நோக்கமும் போல விசுகு அண்ணாவிற்கும் இலட்சியமும் கொள்கைப்பிடிப்பும் ஈழப்பற்றும் இருப்பது என்றும் அவர் எழுதும் கருத்துக்களில் தெரியும். களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து உறவுகளைத் தட்டிக் கொடுத்தும் தட்டிக் கேட்டும் களத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும் உறவுகளில் விசுகு அண்ணாவும் ஒருவர். மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புடன் வலம் வர வாழ்த்துக்கள் விசுகு அண்ணா
-
- 63 replies
- 6.2k views
-
-
வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா யாழ்களத்தில் இவரைக்கண்டாலே உறவுகளுக்கு ஒரு புத்துணர்வு பிறக்கும். யாரையும் எளிதில் மனம் நோக வைக்காமல் தன் கருத்துக்களைக் கூறுவார். அவர் இணைக்கும் கருத்துக்களில் ஒட்டி வரும் முகக்குறிகள் அவரின் கருத்துக்களுக்கு வலுவூட்டும். புதியவர்களை வரவேற்பதில் என்றும் முன்னிற்பவர் 15000 கருத்துக்களை எமக்கு அள்ளி வழங்கும் தமிழ் சிறி அண்ணா அவர்களுக்கு எமது வாழ்த்துகள். இன்றுபோல் இன்னும் பல பல நகைச்சுவையான கருத்துக்களை உணர்வுபூர்வமாக எமக்கு அளிக்க வேண்டும் என்பதே எமது ஆசை. வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா
-
- 42 replies
- 8k views
-