நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 1 பூண்டு - 30 புளி - ஒரு நடுத்தரமான எலுமிச்சை அளவு நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு அரைக்க: மிளகு - 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் - சிறிதளவு கல் உப்பு - தேவையான அளவு செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் நீக்கி கழுவி வைக்கவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். மேலே அரைக்கக்கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை…
-
- 7 replies
- 6.4k views
-
-
-
தேவையான பொருட்கள் 1. இறாத்தல் (lb) மெக்சிக்கன் தேசிக்காய்/ எலுமிச்சம் காய் (ஊரில் உள்ள தேசிக்காய்களிலும் சிறிது, கனடாவில் Key lime என்ற பெயரில் ஒரு இறத்தல் பைகளில் கிடைக்கும், இது கிடைக்காவிட்டால் பெரிய தேசிகாயை பாவிக்கலாம்) Key lime image from : http://pintsizebaker.com/key-lime-pie 2 . மேசை உப்பு - 1 1 /2 கப் 3 . மஞ்சள் போடி - 3 மேசை கரண்டி 4 . 600 மில்லி லிட்டர்/ 1 லிட்டர் கொள்ளளவு உள்ள வாய் அகன்ற, இறுக்கமான மூடி உடைய கண்ணாடி போத்தல் (pasta souse போத்தல் பொருத்தமாக இருக்கும்) 5 . பேக்கிங் தட்டு (Baking tray) , மெழுகு கடதாசி (Parchment paper) 6 . 20 - 25 சாதாரண/பெரிய தேசிகாய் ( இது 3 கிழமைகளின் பின் தான் தேவைப்படும் ) …
-
- 7 replies
- 6.3k views
-
-
வணக்கம், நல்ல சலாட் செய்வது எப்படி? எவ்வளவு தான் முயன்றாலும் சரிவருகின்றது இல்லை. வெறும் இலைகளை வெட்டிப் போடுவதாலும் என்ன source போட வேண்டும் என்று சரியாகத் தெரியாததாலும் சரியாகவே வருகின்றது இல்லை. 1. மரக்கறி சலாட் 2. கோழி சலாட் (Checken Salad) 3.. சமன் மீன் சலாட் போன்றவற்றை எப்படி செய்வது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லித் தாருங்கள். நன்றி
-
- 16 replies
- 6.3k views
-
-
-
- 32 replies
- 6.3k views
-
-
பெரு நெல்லிக்காய் குழம்பு.. தேவையானவை: பெரு நெல்லி- கால் கிலோ, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 1/4 கப் புளி - கோலிக்குண்டு அளவு மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு நல்லெண்ணய் - 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு. கறி வேப்பிலை + கொத்துமல்லி சிறிதளவு.. செய்முறை: வாணலில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து அந்த கலவையுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்சியில் விட்டு அரைக்கவும். வாணலில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் நன்கு பாதி பாதியாக கீறி பிளந்த நெல்லிகா…
-
- 7 replies
- 6.3k views
-
-
சமையல் நுட்பங்கள்! பிரியாணி செய்யும்போது உதிர் உதிராக வராமல், எப்போதும் குழைந்தே போய்விடுகிறது என்பதுதான் பலருடைய ஞாயிற்றுக் கிழமை ஆதங்கமாக இருக்கும். பிரியாணி உதிர் உதிராக வர என்ன செய்ய வேண்டும்? பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும்? எவ்வளவு தண்ணீர் வைக்கவேண்டும்? இதோ சில சமையல் நுட்பங்கள்… பாஸ்மதி அரிசியை வறுத்துத்தான் பிரியாணி செய்யவேண்டும் என்பதில்லை. தண்ணீரின் அளவு, சரியாக இருந்தால்தான் எப்போதுமே பிரியாணி உதிர் உதிராக வரும். பாஸ்மதி அரிசி ஒரு கப் என்றால் தண்ணீரின் அளவு ஒன்றரை கப் இருந்தால் போதும். அரிசியை வறுத்தாலும் வறுக்கவில்லை என்றாலும் இதே அளவு தண்ணீர்தான். குக்கரில் வைப்பதாக இருந்தால், மேற்சொன்ன அளவில் தண்ணீர் வைத்து, ஒரு விசில் வந்ததும் தீயை…
-
- 2 replies
- 6.3k views
-
-
தேவையான பொருட்கள்: 2 கப் கோதுமை மாவு. 2 கப் சமொலினா தானிய மாவு. கொழுப்பற்ர மாஜரின். ஒலிவ் ஒயில். சோயா ருபூ. கத்தரிக்காய். கீரை. பெரிய மிளகாய். காளான். உப்பு. உள்ளி. அரைத்த செத்தல் மிளகாய் . http://www.youtube.com/watch?v=vDQeFX_FyV0
-
- 21 replies
- 6.3k views
-
-
சிக்கன் புரியாணி தேவையான பொருட்கள்: பக் ப்க் - 1 கிலோ பசுமதி அரிசி - 1 கிலோ வெங்காயம் - 2 தயிர் - 1 கப் இஞ்சி+உள்ளி(வெள்ளைபூண்டு)) விழுது - 1 தே.க மஞ்சள் தூள் - 1 தே.க மிளகாய் தூள் - 1 மே.க கஸு நட்ஸ் - 15 தேங்காய் பால் - 1 கப் தேங்காய் தூள் - 1 மே.க சின்ன சீரகம் -- 1 தே.க ஏலக்காய் - 3 கராம்பு - கொஞ்சம் கராம் மசாலா தூள் - 1 தே.க பே இலைகள் - 5 (அது பேய் அல்ல) மல்லி தளை - 1 கப் எண்ணெய்/ வெண்ணெய் (யாரையும் குறிப்பிடவில்லை) உப்பு தேவைக்கேற்ப(வெட்கம், ரோசம் குறைந்தவர்கள், அதிகமாக சேர்க்கலாம், தப்பில்லை) செய்முறை: * இறைச்சியை சுத்தம் செய்து, தயிர், உப்பு, தூள்கள் போட்டு கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும். 1. …
-
- 24 replies
- 6.3k views
-
-
யாழ்ப்பாணத்து முறையில் நண்டுக்கறி நண்டுக்கறி சமைப்பதற்கு தேவையான பொருட்கள்: நண்டு 1kg பெரிய வெங்காயம் 1 தக்காளி 1(பேஸ்ட்) வெள்ளைப்பூடு 1 இஞ்சி 25g கடுகு 1தே.க சின்னசீரகம் 1தே.க வெந்தயம் 1தே.க கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு
-
- 41 replies
- 6.2k views
-
-
உருளைக்கிழங்கு போண்டா தேவையானவை: கடலை மாவு - 1 கப் ஆப்ப சோடா - 1 சிட்டிகை ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) - 1 சிட்டிகை உப்பு - ருசிக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு - கால் கிலோ பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி - 1 துண்டு கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: * உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். * வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். * எண்ணெயைக் காயவைத்து …
-
- 30 replies
- 6.2k views
-
-
பிரட் கட்லட் தேவையான பொருள்கள்:- சால்ட் பிரட் பெரிய சைஸ் - 6 உருளை கிழங்கு வேகவைத்து உதிர்த்தது - 3 கப் கேரட், பீட்ரூட் துருவியது - 2 கப் மஞ்சள் பொடி, காரட் பொடி, கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு தயிர் (புளிப்பில்லாதது) - 3 கப் சர்க்கரை - 2 டீஸ்பூன் கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 1/2 கப் žரகப்பொடி - 1ஸ்பூன் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் செய்முறை:- முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, žரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பட்டாணி, கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்து மிதமான தீயில் வதக்கி சிறிது நேரம் மூடிவைக்கவும். பின்பு கரம் மசாலா, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு இவைகளை சேர்த்து நன்றாக வதக…
-
- 16 replies
- 6.2k views
-
-
மீன் சொதி தேவையான பொருட்கள்: மீன் -500கிராம் பச்சைமிளகாய் -5எண்ணம் பெரியவெங்காயம் -50 கிராம் கறிவேப்பிலை -சிறிது வெந்தயம் -1 மேஜைக்கரண்டி பெரும்சீரகம் -2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி தேங்காய்பால் -1 கப் உப்பு -தேவையான அளவு செய்முறை: 1. பச்சைமிளகாய், வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரைக் கொதிக்க வைத்து அதில் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும். 3. இந்தக் கலவையில் துண்டுகளாக்கிய மீனைச் சேர்த்து தேவையான அளவு வேகவைக்கவும். 4. மீன் ஓரளவு வெந்ததும் அதில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து, தேவையான உப்பு போட்…
-
- 39 replies
- 6.2k views
-
-
இலைகஞ்சி பற்றி பலருக்கும் தெரிந்து இருக்கும் ஆனால் இன்று இதை காதால் கேட்ககூடாமல் இருக்கிறது நாங்கள் ஊரில் இருக்கும் போது பல இலை கஞ்சிகள் குடித்திருப்போம் என்ன அப்படித்தானே நீங்கள் சுவைத்த இலை கஞ்சிகள் பற்றி குறிப்பை தாருங்கள் எனக்கு தெரிந்தது முல்லை இலை கஞ்சி ஆனால் செய்முறை தெரியாது இலைகஞ்சி பற்றி தெரிந்தவர்கள் செய்முறை தரவும்
-
- 7 replies
- 6.2k views
-
-
பிட்சா தேவையானப் பொருட்கள் அடி பாகம் செய்ய: ------------------- மைதா மாவு - 2 கப் உப்பு - தேவையான அளவு சக்கரை - 1 மேஜைகரண்டி ஈஸ்ட் - 1 சிட்டிகை அலங்காரம் செய்: ------------------ தக்காளி பேஸ்ட் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை குடமிளகாய் - 1/2 சிவப்பு குடமிளகாய் - 1/2 காளான் - 6 அன்னாசிபழம்( நறுக்கியது) - 1 கப் சிஸ் ( துறுவியது) - 1 கப் செய்முறை ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட், சக்கரை, உப்பு ஆகியவற்றை கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். 5 நிமிடம் தனியே வைக்கவும். அதில் bubbles வந்தால் பிட்சா நன்றாக வரும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா மாவில் ஈஸ்ட் கலவையை கொட்டி 10 நிமிடம் போல் நன்றாக பிசையவும். பிசைந்த மாவு உள…
-
- 4 replies
- 6.2k views
-
-
அறுசுவையுடைய அச்சாறுகள் இலையில் ஒரு சுண்டல், தேங்காய்ச் சம்பல், பருப்புக் கறி, மரக்கறி அச்சாறுடன் ஒரு சமவிகித உணவு விபரம்: பவானி பாலா படங்கள்: தமித் விக்கிரமசிங்க சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும் புளிப்பும் காரமும் நிறைந்த வித விதமான அச்சாறுகள்! காய்கறிகளில்...பழங்களில்... பலவித நிறங்களில்...! பார்க்கும்பொழுதே நாவில் நீர் ஊறும். ஊறுகாயைப் போன்றே அச்சாறும் ஒருவகை உணவு பதனிடும் முறை. செய்முறைகளில் சற்றே வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் தயாரிக்கப்படும் அச்சாறு தனித்துவமானது. மரக்கறி வகைகள் மட்டுமன்றி முற்றிய பழ வகைகளிலும் அச்சாறு செய்யும் வழமை இலங்கையில் மட்டுமே உள்ளது. மாங்காய் அச்சாறு, அம்பரெல்லா அச்சாறு, அன்னாசி அச்சாறு, …
-
- 9 replies
- 6.2k views
-
-
வீடுகளில் வாழை பழம் வாங்கி அதிகம் பழுத்து, சாப்பிட முடியாது போய்விட்டால் அப்படியான வாழை பழங்களை பயன்படுத்த இலகுவான வாழை பழ கேக் செய்முறை தேவையான பொருட்கள் 1 . நன்கு பழுத்த பெரிய வாழை பழங்கள் - 2 2 . சாதாரண கோதுமை மா - 2 கப் (500 ml) 3 . சீனி - 1 கப் ( 250 ml அளவு கரண்டி) 4 . பட்டர் அல்லது மாஜரீன் அல்லது கனோலா எண்ணெய் . -1 /3 கப் ( 80 ml) 5 . தயிர் (3 % கொழுப்பு yogurt ) - 1 /3 கப் ( 80 ml) 6 . முட்டை - 2 7 . உப்பு -1 /2 தே. கரண்டி 8 . பேக்கிங் பவுடர்…
-
- 13 replies
- 6.1k views
-
-
"மீன் கட்லட்" செய்முறை தேவை. கன நாட்களின் பின், மீன் கட்லட் சாப்பிட வேண்டும் என்று... ஆசை வந்து விட்டது. ஆனால்... அதன் செய்முறை அரைகுறையாகத் தான் ஞாபகம் உள்ளது. முழுமையான செய்முறையையும், எந்த ரின் மீன் (சார்டினன் / தூண் பிஷ்) போடலாம் என்பதையும் அறியத் தாருங்களேன்.
-
- 15 replies
- 6.1k views
-
-
பரவை முனியம்மாவின் ...... கிராமத்து விருந்து , பிலாக்கொட்டை பொரியல் . நீங்களும் செய்து பார்க்க கீழே உள்ள சுட்டியை அழுத்தவும். http://www.tubetamil.com/view_video.php?viewkey=9b072b3a5e6f1f3d4c72&page=1&viewtype=&category=
-
- 7 replies
- 6.1k views
-
-
தேவையான பொருட்கள் : கோதுமை மா - 500 g வெங்காயம் - 2 பச்சைமிளகாய் - 4 உப்பு - அளவானது தண்ணீர் - அளவானது எண்ணெய் - அளவானது செய்முறை : வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் சிறிதாக அரிந்து மாவுடன் உப்பும் சேர்த்து கையால் பிசைந்து பின் சிறிது சிறிதாக நீர் விட்டு ரொட்டி சுடும் பதத்திற்கு குழைத்துக்கொள்ள வேண்டும். தாச்சிச் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சாடையாகத் தட்டி நடுவே துளை போட்டு, அடுப்பை அளவாக எரியவிட்டு வடையைப் போட்டு சிறிது நேரத்தில் அகப்பையால் பிரட்டி வேகவிட்டு பொன்னிறம் வந்ததும் எடுக்கவேண்டும். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கூட்டிக் குறைக்கலாம். சுடச் சுட உண்ணவும் ஆற…
-
- 12 replies
- 6.1k views
-
-
பருத்தித்துறை வடை. உழுந்து – 1/2 சுண்டு, அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு செ.மிள. பொடி – 2 தே. க பெருஞ்சீரகம் – 1 மே.க உப்பு – தே.அளவு கறிவேப்பிலை – சிறிது ( பொடியாக வெட்டி) எண்ணெய் – தே.அளவு செய்முறை :- * உழுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். * உழுந்து ஊறியதும் அத்துடன் மற்றைய பொருட்களை சேர்த்து 3 மே.கரண்டி எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும். * சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி வட்டமாக்கி ( மெல்லியதாக) கொள்ளவும். * அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். ** (அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்க்கவும்)
-
- 9 replies
- 6.1k views
-
-
சுவையருவியின் முதல் வணக்கம் யாழில் இன்னுமொரு புதிய அங்கம் இன்றுடன் ஆரம்பமாகின்றது. ஈழத்தமிழர்களின் சமையல் பாரம்பரியம் என்பது ஒரு விசேடமான, அதே சமயத்தில் நம் கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓர் விடயம். எமது பாட்டன் பூட்டன் காலத்து உணவுவகைகளை புலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு எடுத்து செல்லும் பணிக்காகவே "சுவையருவி" உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் ஆலோசனைகளையும், யோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இது ஓர் கன்னி முயற்சி. குறை நிறைகளை சுட்டிக்காட்டி சுவையருவியின் முன்னேற்றத்தில் பங்கெடுங்கள். தற்சமயம் சில செய்முறைகளையே கொண்டிருக்கும் சுவையருவியில் உங்கள் செய்முறைகளையும் இணையுங்கள். தளத்தை உருவாக்கியது யார் என சொல்லி தெரிய வேண்டியதில்லை தானே…
-
- 31 replies
- 6k views
-
-
காரமான மசாலா மீன் வறுவல் தேவையான பொருட்கள்: மீன் - 250 கிராம் (முள் இல்லாதது) தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு அரைப்பதற்கு... சின்ன வெங்காயம் - 3 இஞ்சி - 2 இன்ச் பூண்டு - 6 பற்கள் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் மீன் துண்டுகளை நீரில் நன்கு கழுவி, அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பி…
-
- 22 replies
- 6k views
-
-
தேவையான பொருட்கள் எள்ளு 500 கிராம் சீனி உங்கள் விருப்புக்கு ஏற்றவாறு (500 கிராம்) உழுத்தம்மா 200 கிராம் வரையில் முதலில் ஒரு மிக்சியில் பாதி எள்ளை இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள் நன்றாக அரைபட்டபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு மீதி எள்ளையும் முன்பு அரைத்தது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .பின் உழுத்தம்மாவு சீனி அரைத்த எள்ளு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளுங்கள். மீண்டும் மிக்சியில் நீங்கள் கலந்த கலவையை நன்ற…
-
- 4 replies
- 6k views
-
-
மாங்காய்+கத்திரிக்காய்+முருங்காய் சாம்பார்.. தேவையான பொருட்கள்: மாங்காய் - 1 முருங்கைக்காய் - 1 கத்திரிக்காய் - 1/4 கிலோ. தேங்காய் - 1/2 முடி பூண்டு – 3 பல் துவரம் பருப்பு- 1 டம்ளர் மல்லி தூள் – 1 தேக்கரண்டி சாம்பார் தூள் – 1 /2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி தாளிப்பதற்குத் தேவையானவை கடலை எண்ணை - 100. நல்லெண்ணை - 100 கடுகு - 1 டீஸ்பூன் உ.பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பில்லை - 15 இலைகள். கொத்தமல்லி - ஒரு கீற்று. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி ஊற்றி அதில் துவரம் பருப்பை இட்டு அதில் சிறிதளவு தண்ணிர் இட்டு வேகவைத்து…
-
- 0 replies
- 6k views
-