நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இறால் B.B.Q தேவையானவை: இறால் - 30 ஒலிவ் ஒயில் - 1/2 கப் உள்ளி - 4 எலுமிச்சம் பழ சாறு - 1 பழத்து சாறு ஒரேஞ் பழ சாறு - 1 உப்பு போட மறந்திடாதிங்க ;) 1. ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களை போட்டு கலக்கவும். (இறாலை தவிர) 2. இப்ப அக்கலவையில் இறாலை போட்டு கலக்குங்க. 3. 1 மணித்தியாலத்திற்கு அப்படியே வைத்துவிடுங்கள். 3. B.B.Q Grill சூடாகி இறாலை 3 - 5 நிமிடத்துக்கு போட்டு (ஒரு தரம் திருப்ப வேண்டும்) எடுக்கவும். 4. சுட சுட சாப்பிட்டு வாயை புண்ணாக்காமல். கொஞ்சம் சூடு ஆறியதும் சாப்பிடுங்கள். பின்விளைவுகளுக்கு நானோ அல்லது நிர்வாகமோ பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதை இப்பவே சொல்லிடிறம். நன்றி
-
- 17 replies
- 4.9k views
-
-
சல்மன் மீன் கறி தேவையான பொருட்கள் சல்மன் மீன் - 500 கிராம் வெங்காயம் - 30 கிராம் கறி பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி கறித்தூள் - 3 தேக்கரண்டி உப்பு - 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தேசிக்காய் - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி செய்முறை மீனை சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன் தேசிக்காய், இஞ்சி பூண்டு விழுது, 1 1/2 தேக்கரண்டி கறித்தூள், ஒரு தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை போட்டு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய மீன் துண்டுகளை அவண் ட்ரேயில் க்ரில் கம்பியில் அடுக்கி மீடியம் ஹீட்ட…
-
- 17 replies
- 3.3k views
-
-
-
மட்டன் கொழுப்புக் கறி தேவையானவை: மட்டன் கொழுப்பு - 100 கிராம் சின்னவெங்காயம் - 5 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, மட்டன் கொழுப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் அல்லது கொழுப்பு வேகும்வரை வேகவிட்டு இறக்கவும். கொழுப்பு மட்டுமே சேர்த்து செய்யும் இந்தக் கறி, சுவையாக, பூப்போல இருக்கும். இட்லியுடன் பரிமாறவும். குறிப்பு: கொழுப்பில் இருந்து …
-
- 17 replies
- 2.3k views
-
-
இன்டைக்கு எனக்கு வீட்டை பொழுது போகேல்ல. என்ன செய்வம் என்டு யோசிச்சன். அம்மாவும் தனக்கு ஏலாமல் இருக்கு நீ சமை என்டுட்டா சரி புதுசா ஏதாவது செய்வம் என்டு போட்டு களத்துல இறங்கிட்டன். இதோ எனது வீரதீர செயலை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். தேவையானப் பொருட்கள்:- வறுத்த உழுத்தம் மா - 1 சுண்டு வறுத்த சிவப்பு அரிசிமா - 1/4 சுண்டு சீனி அல்லது சக்கரை - 50 கிராம் ( சீனி விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க தேவையில்லை) உப்பு - 1 சிட்டிகை தேங்காய்ப்பால் - 4 கப் செய்முறை:- ஒரு பாத்திரத்தில் பால் விட்டு அதில் அரிசிமா, உழுத்தம் மா, உப்பை போட்டு கட்டியில்லாமல் கரைக்கவும். பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும். மா அடியில் ஒட்ட விடாது கிளறிக் கொண்டே இருக்கவும். …
-
- 17 replies
- 11.5k views
-
-
Please subscribe to my channel. Thanks https://youtu.be/ACiUE5groIM
-
- 17 replies
- 1.7k views
-
-
வெங்காய தோசை சமையல் பிரபலமான பகுதி : தமிழ்நாடு சமையல் வகை / ரெசிபி வகை : தோசை வகைகள் சாப்பிடும் நேரம் : காலை உணவு சுவையான வெங்காய தோசை, எளிய வெங்காய தோசை, வெங்காய தோசை செய்யும் முறை, பிரபலமான வெங்காய தோசை, வெங்காய தோசை செய்முறை, வெங்காய தோசை சமையல் குறிப்புகள், வெங்காய தோசை செய்வது எப்படி. உங்கள் சுவையை தூண்டும் வெங்காய தோசை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வெங்காய தோசை ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! சமைக்க தேவையானவை புழுங்கல் அரிசி – 3 கப் உளுத்தம்பருப்பு – அரை கப் பச்சரிசி – ஒரு கப் பச்சை மிளகாய் – 4 வெங்காய…
-
- 16 replies
- 3.3k views
-
-
லண்டன் வற்றல் குழம்பு தேவையானப் பொருட்கள் பீன்ஸ் - 8 சின்ன கத்தரிக்காய் - 5 பெரிய வெங்காயம் - 3 வாழைக்காய் - 1 செளசெள - ஒன்று வெந்தயம் - ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி புளி தண்ணீர் - 2 கப் கசகசா - 3 தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - அளவாக உப்பு - அளவாக எண்ணெய் - 2 மேசைக்கரண்டி பால் - ஒரு கப் கடுகு - ஒரு தேக்கரண்டி இந்தக் குழம்பிற்கு கத்தரிக்காய், வாழைக்காய், சௌசௌ போன்றவை பொருத்தமாக இருக்கும். கூடவே தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சில காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம் கத்தரிக்காய், பீன்ஸை, வாழைக்காய், செளசெள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெர…
-
- 16 replies
- 4.4k views
-
-
தேவைப்படும் பொருட்கள்: (முதலில் பிஷ் மசாலா தயாரிக்க வேண்டும்) * கெட்டியான மீன்- 500 கிராம். * மிளகாய்த்தூள்- ஒரு மேஜைக்கரண்டி. * மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி. * இஞ்சி, பூண்டு அரைப்பு- ஒரு மேஜைக்கரண்டி. * எலுமிச்சை சாறு- ஒரு தேக்கரண்டி. * வெஜிடபிள் ஆயில்- வறுப்பதற்கு. (அனைத்து பொருட்களையும் ஒன்றாக்கி, மீனில் பூசி எண்ணையில் அதிகம் வெந்து போகாத அளவிற்கு வறுத்து வையுங்கள்) * பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- இரண்டு கப். * இஞ்சி, பூண்டு நறுக்கியது- ஒரு மேஜைக் கரண்டி. * கேரட் சிறியதாக நறுக்கியது- இரண்டு கப். * குடை மிளகாய் சிறிதாக நறுக்கியது- இரண்டு மேஜைக்கரண்டி. * ப.மிளகாய் வட்டமாக நறுக்கியது- இரண்டு தேக்கரண்டி…
-
- 16 replies
- 4.2k views
-
-
-
-
கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் : சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் – 150 கிராம் தக்காளி – 2 மிளகுதூள் – 4 டீஸ்பூன் சீரகத்தூள் – 2 டீஸ்பூன் வரமிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் தயிர் – 3 டீஸ்பூன் தேங்காய்பால் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லித்தழை சிறிதளவு எண்ணெய் – 3 டீஸ்பூன் செய்முறை : * …
-
- 16 replies
- 2k views
-
-
பணம் / சந்தா கொடுத்து படிக்க வேண்டிய சஞ்சிகைகளை, பதிவுகளை யாழில் இலவசமாக தருவது அவர்களது வருமானத்தை பாதிக்கும் செயல் எனக் கருதுவதால் பொதுவாக நான் அவற்றை அவசியம் இல்லாவிடின் பகிர்வதில்லை. ஆனால் இந்த தொடரின் இந்த கட்டுரை இலங்கையில் இருந்து போன ஒரு தமிழ் பெண்ணின் கடை என்பதால் பகிர்கின்றேன் (இது வெளியாகி இரு வாரம் ஆகிட்டு) --------------------------------------------- மதுரையின் புதிய அடையாளங்களில் ஒன்று `ஆப்பம் ஹாப்பர்ஸ்.’ தேங்காயால் ஆசீர்வதிக்கப்பட்ட அசல் இலங்கை உணவுகளை மதுரை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் இருக்கிற `ஆப்பம் ஹாப்பர்ஸ்’ உணவகத்தில் ருசிக்கலாம். இலங்கையின் பாரம…
-
- 16 replies
- 3.7k views
-
-
-
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வல்லாரை கீரையை சாப்பாட்டில் வாரத்திற்கு ஒருமுறையாச்சும் சேர்க்காத நாள் இல்லை எனலாம். வல்லாரை நிறைய சாப்பிட்டா நிறைய ஞாபக சக்தி வரும் என அப்பப்பா சொன்னதை அப்படியே நம்பிட்டேன். [அது நிஜம் என்பது பின்னர் தானே தெரிய வந்தது]. அதிலும் வல்லாரை சாப்பிட்டா தேர்வில நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என என் அண்ணா சொன்னதில இருந்து, வல்லாரை எனக்கு ஆருயிர் தோழன் ஆகிவிட்டது. [மதிப்பெண் பற்றி கேட்கப்படாது]. என்னதான் ஒஸ்திரேலியாவில் வல்லாரை நன்றாக வளரும் என்றாலும், எங்களுக்கு தெரிந்த யாரிடமும் வல்லாரை செடி இருக்கவில்லை. அப்பாவின் நண்பரிடம் இருக்கு என அறிந்து, இதுக்காக நானும் அப்பாவும் 3 மணித்தியாலங்கள் காரில் போய் செடி வாங்கி வந்து வீட்டில் நட்டோம். இப்பொழுது வ…
-
- 16 replies
- 4.7k views
-
-
கத்தரிக்காய் சம்பல் . http://thamizhcooking.blogspot.fr/2008/07/1_26.html இது ஒரு ரைப்பான சம்பல் . சாதரணமாய் என்ரை அம்மா சின்னனில மட்டுவில் கத்தரிக்காய் சுட்டு சம்பல் செய்யிறவா . எனக்கு இந்தச் சம்பலில சரியான கெலிப்பு . ஆனால் போனவரியம் என்ரை மாமி பருத்தித்துறையிலை சாம்பல் மொந்தன் வாழக்காயையும் சேத்து மண் அடுப்பில சுட்டு செய்து தந்தா . இங்கை அடுப்பு இல்லாததாலை வெதுப்பியை உங்களுக்கு பரிந்துரை செய்யிறன் . தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் 2 வாழைக்காய் 2 சின்னவெங்காயம் 8 - 10 பச்சைமிளகாய் 7 - 8 உப்பு தேவையான அளவு கொத்தமல்லிக் கீரை 4 - 5 கிறாம் ஃபெறெக்ஷ் (créme fresh ) ( Fresh creme ) 3 -4 தேக…
-
- 16 replies
- 3.7k views
-
-
வெஜிடபிள் குருமா பட்டாணி 200 கிராம் பீன்ஸ் 200 கிராம் காலிஃப்ளவர் 100 கிராம் உருளைக் கிழங்கு 200 கிராம் காரட் 200 கிராம் பூண்டு 5 பல் இஞ்சி ஒரு சிறு துண்டு பெரிய வெங்காயம் 2 பச்சைமிளகாய் 6 கசகசா அரைத் தேக்கரண்டி முந்திரிப்பருப்பு 6 பொட்டுக்கடலை ஒரு மேசைக்கரண்டி தேங்காய் அரை மூடி பட்டை ஒரு அங்குல துண்டு கிராம்பு 4 எண்ணெய் 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம் 1 உப்பு தேவையான அளவு 1)பட்டாணியை 5 அல்லது 6 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். 2)பீன்ஸ்இ உருளைக்கிழங்குஇ காரட்இ காலிஃப்ளவர் ஆகியவற்றை அலசிஇ பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3)பூண்டுஇ இஞ்சிஇ பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாய் அம்மியில் அல்லது மிக்…
-
- 16 replies
- 3.9k views
-
-
வணக்கம், நல்ல சலாட் செய்வது எப்படி? எவ்வளவு தான் முயன்றாலும் சரிவருகின்றது இல்லை. வெறும் இலைகளை வெட்டிப் போடுவதாலும் என்ன source போட வேண்டும் என்று சரியாகத் தெரியாததாலும் சரியாகவே வருகின்றது இல்லை. 1. மரக்கறி சலாட் 2. கோழி சலாட் (Checken Salad) 3.. சமன் மீன் சலாட் போன்றவற்றை எப்படி செய்வது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லித் தாருங்கள். நன்றி
-
- 16 replies
- 6.3k views
-
-
கரட் கேக் தேவையான பொருட்கள் துருவிய கரட் 200 கிராம் அரைத்த பாதாம் பருப்பு 200 கிராம் சீனி 180 கிராம் மா 50 கிராம் அரை சின்ன கரண்டி பேக்கிங் பவுடர் 2 சின்ன கரண்டி கறுவா பவுடர் 3 பெரிய முட்டை ஐசிங்சுகர் அலங்கரிக்க செய்முறை முதலில் முட்டை சீனி இரண்டையும் கலக்கவும் பின்மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்க்கவும் பின் துருவிய கரட் பாதாம் பருப்பு கறுவா பவுடர் என்பவற்றை சேர்க்கவும். அதன் பின் 20 நிமிடம் வெதுப்பியில் வெதுப்பவும். ஆறியதும் ஐசிங் சுகர் தூவி பிமாறவும் மிக மிக சுவையான இனிப்புப் பண்டம் (இனிப்பான பண்டங்களை இடை இடை உண்டு எங்கள் வார்த்தைகளை இனிமையானவை ஆக்குவோம்!!!!!!) சர்கரை நோய் உள்ளவர்கள் கொஞ்சமாய் சாப்பிடுங்கோ.....!!!!!
-
- 16 replies
- 5.4k views
-
-
மாமிச கூழ் தேவையான பொருட்கள்: ஒடியல் மா அல்லது உருளைக்கிழங்கு மா அல்லது கோதுமை மா மரக்கறி - மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய், பச்சைமிளகாய், பலாக்கொட்டை, பலாசுளை மாமிசம்: நண்டு, மீன், இறால், கணவாய் செய்முறை: முதலில் காய்கறிகளை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவேண்டும். இதேபோல் நண்டு, இறால், கணவாயை சிறு துண்டுகளாக வெட்டி கழுவ வேண்டும். பின் அனைத்தையும் ஒரு பெரிய சட்டியில் போட்டு நான்கு கோப்பை தண்ணீர் விட்டு, தேவையானளவு உப்பும் இட்டு அவியவிடவேண்டும். மீன் பாவிக்க விரும்பினால் அதை சிறுதுண்டுகளாக வெட்டி கழுவியபின் இன்னொரு சட்டியில் அவிக்க வேண்டும். அவிந்த மீனை செதில், முட்களை அகற்றி சுத்தம் செய்யவேண்டும். இதன்பின் இதை மரக்கறிகள் உள்ள பாத்திரத்தில் …
-
- 16 replies
- 7.3k views
-
-
மட்டன் 1/2 கிலோ தனியா பொடி மிளகுப் பொடி மஞ்சள் பொடி தயிர் 1 கப் முந்திரி 150 கிராம் மல்லி இலை 1 கட்டு வெஙகாயம் 1 உப்பு இஞ்சி.பூண்டு விழுது ஜீரகப் பொடி மட்டன்,உப்பு,தயிர்,இஞ்சி.பூண்
-
- 16 replies
- 5.6k views
-
-
-
என் மகளும் நானும் இணைந்து இன்று செய்த உணவு இது தேவையானவை: பாரை மீன் (முழு மீன், அல்லது தலை மட்டும் அகற்றப்பட்ட முக்கால் மீன்) வெங்காயத்தூள் - Onion powder மிளகுத் தூள் உள்ளித் தூள் - Garlic powder மஞ்சள் தூள் சோழ மாவு மிளகாய்த் தூள் (ஊர் முறைப்படி தயாரிக்கப்பட்டது) உப்பு ஒலிவ் ஒயில் லெமன் சமைக்கும் முறை 1. மீனை நன்கு குளிப்பாட்டி (சோப் போடக் கூடாது) கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும். 2. மீன் மீது கத்தியால் சிறு கீறல்கள் போடவும் 3. மிளகுத்தூள், மிளகாய்த் தூள், உள்ளித் தூள், வெங்காயத்தூள், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் தேவையான அளவு இட்டு, சற்று சூடான தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலக்கவும். 4. ஒன்றாக கலக்கிய பின் கலவை க…
-
- 16 replies
- 2.7k views
-
-
பிரட் கட்லட் தேவையான பொருள்கள்:- சால்ட் பிரட் பெரிய சைஸ் - 6 உருளை கிழங்கு வேகவைத்து உதிர்த்தது - 3 கப் கேரட், பீட்ரூட் துருவியது - 2 கப் மஞ்சள் பொடி, காரட் பொடி, கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு தயிர் (புளிப்பில்லாதது) - 3 கப் சர்க்கரை - 2 டீஸ்பூன் கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 1/2 கப் žரகப்பொடி - 1ஸ்பூன் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் செய்முறை:- முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, žரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பட்டாணி, கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்து மிதமான தீயில் வதக்கி சிறிது நேரம் மூடிவைக்கவும். பின்பு கரம் மசாலா, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு இவைகளை சேர்த்து நன்றாக வதக…
-
- 16 replies
- 6.2k views
-
-
30 வகை பூரி சாப்பாட்டுக்கு ‘டிமிக்கி’ கொடுக்கும் குழந்தைகள்கூட, ‘இன்னிக்கி பூரி பண்ணப் போறேன்’ என்று சொன்னால், ‘ரெடியா?’ என்று உடனே பரபரப்பார்கள். அப்படி குட்டீஸ் முதல், சீனியர் சிட்டிசன்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் 30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி, ”எண்ணெய் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதால், பூரி வகைகளை அளவோடு செய்து கொடுத்து ஆரோக்கியத்தோடு வாழுங்கள்” என்று வாழ்த்துகிறார். அத்தனை பூரியையும் அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. பூரி தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், சர்க்கரை, ரவை – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ரவையையும்…
-
- 16 replies
- 8.1k views
- 1 follower
-