நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஒடியற்கூழ் ஒடியற்கூழ் இலங்கையின் வடபுலத்தில் மிகவும் பிரபலமான உணவு ஆகும். ஒடியற்கூழைப் பற்றி பல நாட்டார் பாடல்களும் அங்குள்ளது. தேவையானப் பொருட்கள் ஒடியல்மா - 1/4 கப் வெட்டிய பயத்தங்காய் - 1/4 கப் வெட்டிய பலாக்காய் - 1/4 கப் வெட்டிய பலாக்கொட்டை - 1/4 கப் வெட்டிய உள்ளி - 1 மேசைக்கரண்டி கீரை - 1/4 கப் வேறு வெட்டிய மரக்கறிகள் - 1/4 கப் (கரட், மரவள்ளி, கோஸ், பூசணி) கறித்தூள் - 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி புளி - நெல்லிக்காயளவு தேங்காய்ச்சொட்டு - 3 மேசைக்கரண்டி வறுத்த பயத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி உப்பு தண்ணீர் செய்முறை புளியை கரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 - 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்…
-
- 18 replies
- 5.2k views
-
-
இது நீங்கள் அனைவரும் மிக இலகுவில் தயாரிக்கக்கூடியது ஒன்று. 12 பேருக்கு பரிமாற.... தயாரிப்பு நேரம்: 5 நிமிடங்கள் சமையல் நேரம்: 10 நிமிடங்கள் தேவையான பொருட்கள்.... தோல் உரிக்கப்பட்ட ஒரு அங்குலத் தடிப்புள்ள துண்டுகளாக வெட்டப்பட்ட அன்னாசிப்பழத்துண்டுகள். 1/4 தேக்கரண்டித் தேன் 3 தேக்கரண்டி உருகிய பட்டர் 1 தேக்கரண்டி Hot pepper sauce சுவைக்கேற்றளவு உப்பு தயாரிக்கும் முறை.... அன்னாசிப்பழத்துண்டுகளை ஒரு பொலித்தீன் பையினுள் இட்டு பட்டர், தேன், Hot pepper sauce, மற்றும் உப்பும் கலந்து பையின் வாய்ப்பகுதியை அடைத்தபடி நன்றாக குலுக்கிய பின் ஒரு இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள். மறுநாட்காலை அதை எடுத்து Grill இல…
-
- 21 replies
- 5.2k views
-
-
யாருக்காவது கட்லட் பண்ணத்தெரியுமா? தெரிந்தால் செய்முறையை இந்த திரியில் இணைத்து விட முடியுமோ..? மரக்கறி கட்லட் செய்முறைதான் வேண்டும் :(
-
- 10 replies
- 5.2k views
-
-
மிளகாய் சட்னி இட்லி, தோசை எல்லாம் நாம மறக்கறதுக்கு முன்னாடி =;) அதுக்கு ஏத்த ஒரு சைட் டிஷ் இன்னிக்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள், செய்முறை எல்லாமே ரொம்ப எளிது. சிறுவயதில் இந்த சட்னி வீட்டில் வைத்தால், இட்லி, தோசை எல்லாம் கணக்கில் அடங்காமல் உள்ளே இறங்கும். இப்பவும் ஒன்றும் குறைவில்லை ) ஒரு சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இந்த அவசர யுகத்தில் ஒரு நாலைந்து நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையானவை: வரமிளகாய் - 10 - 12 பூண்டு - 4 பல் சின்ன வெங்காயம் - 10 - 15 தக்காளி - 2 புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். வானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ண…
-
- 4 replies
- 5.2k views
-
-
மொருமொரு வாழைப்பழம் மொருமொரு வாழைப்பழம் தேவையான பொருட்கள் :- வாழைப்பழம் 6 முட்டை 1 உலர்ந்த ரொட்டித் தூள் 1 கப் நெய் 1/2 கப் சர்க்கரைத் தூள் 1 மேஜைக் கரண்டி செய்முறை 1. வாழைப்பழத்தை நான்காக வெட்டிக் கொள்ளவும். 2. ரொட்டித் தூளில் சர்க்கரை தூளை கலந்து கொள்ளவும். 3. அடித்த முட்டையில் வாழைப்பழத்தை தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி வைக்கவும். 4. நெய் சூடானவுடன் அதில் வாழைப்பழத்தைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 5. சூடாக பரிமாறவும்.
-
- 28 replies
- 5.2k views
-
-
சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - அரை கிலோ முட்டை - ஆறு வெங்காயம் - இரண்டு பச்சைமிளகாய் - நான்கு துருவிய காரட் – ½ கப் குடைமிளகாய் - ½ கப் இஞ்சி, பூண்டு நசுக்கியது – 2 டீ ஸ்பூன் மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன் முந்திரிப் பருப்பு – 10 உப்புத்தூள் – 2 டீ ஸ்பூன் கொத்தமல்லி - அரை கட்டு எண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன் முட்டை ப்ரைடு ரைஸ் செய்முறை : முதல் பாசுமதி அரிசியை உப்பை சேர்த்து வேகவைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் அகலாமான வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்கு சூடுப்படுத்தவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும…
-
- 2 replies
- 5.2k views
-
-
கிழக்கில் சமையல் ஒன்று நாங்கள் அடிக்கடி குளிக்கச்செ செல்லும் உன்னிச்சைக்குளம் அருகே இப்படியொரு சமையல் நடந்திருக்கிறது அந்த வான் கதவின் அருகே இருந்து குளிப்போம் இப்படியான சமையலுக்கு எங்கிருந்துதான் ருசி வருகின்றது என்பது இதுவரை தெரியவில்லை யாராவது தெரிந்தால் சொல்லலாம்
-
- 21 replies
- 5.2k views
-
-
பச்சரிசி பால் பொங்கல் பொங்கல் திருநாளன்று சர்க்கரை பொங்கல் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சர்க்கரை பொங்கலடன், கார பொங்கலும் செய்யலாம். அதிலும் பச்சரிசி கொண்டு பால் பொங்கல் செய்து, பொங்கல் புளிக்குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு பால் பொங்கல் எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். சரி, இப்போது பச்சரிசி பால் பொங்கலை எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பொங்கலன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் பாசிப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி - சிற…
-
- 15 replies
- 5.2k views
-
-
நீங்கள் தேடும் சமையல் குறிப்பினை பார்ப்பதற்கு அறுசுவை டாட் கோம் செல்லுங்கள். என்ன தேவையோ முழுவதும் பார்த்து பயனடையலாம்.
-
- 0 replies
- 5.2k views
-
-
பருத்தித்துறை வடை . இந்தப் பக்குவத்துக்குச் சொந்தக்காறி என்ரை மாமி தான் . நான் போனவருடம் பருத்தித்துறையில் நின்றபோது மாமியுடன் கதைத்து சுட்ட பக்குவம் . தேவையான பொருட்கள்: கோதுமை மா 1 கிலோ . *****உளுத்தம்பருப்பு 500 கிறாம் . உப்பு 2 மேசைக்கறண்டி . பெருஞ்சீரகம் 2 மேசைக்கறண்டி . மிளகாய்தூள் ( தேவைக்கு ஏற்ப ) . கறிவேப்பமிலை 30 - 35 இலை . எண்ணை ஒரு போத்தில் . பக்குவம் : உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ளுங்கோ. கோதுமை மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேருங்கோ. கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கோ. கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன…
-
- 42 replies
- 5.2k views
-
-
:P :P :P :P :P :P :P பனங்கிழங்கு சாப்பிடும் முறை எப்படி என்று தெரியவில்லை சொல்லங்கோ பாப்பம் தம்பி டே எங்கயப்பு நிக்கிறாய் கொக்காள் தேடுறாள் காலமை புல்லா பனங்கிழங்கை அவிச்சு வைச்சிட்டு எப்பிடி சாப்பிடுறது எண்டு தெரியாமல் அலையிறாள் வந்து சொல்லிக்குடப்பு :P :P :P :P :P :P
-
- 26 replies
- 5.1k views
-
-
தேவையான பொருட்கள்: 1 & 1/2 கப் - கொண்டைக்கடலை(இரவில் ஊறவைத்த கடலையை மென்மையாகும் வரை வேகவைக்கவும்) 2 - சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு, தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும் 2 - சிறிய தக்காளி, நறுக்கியது 2 தேக்கரண்டி - கொத்தமல்லி இலை நறுக்கியது 1 - பச்சை மிளகாய், நறுக்கியது 2-3 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு 1/4 தேக்கரண்டி - ஹிமாலயன்/பிங்க உப்பு 2 தேக்கரண்டி - Chaat மசாலா செய்முறை: ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, மற்றும் சாட் மசாலாவை ஒன்றாக கலந்தால் சலாட் தயார் சலாட்டை கலந்த உடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்…
-
- 33 replies
- 5.1k views
-
-
இது காரமும் இனிப்பும் கலந்த சிற்றுண்டி. பனங்கிழங்கு கிடைக்கும் காலங்களில் வீட்டில் செய்வார்கள். தேவையான பொருட்கள். 1. அவித்த பனங்கிழங்கு -- 4 2. செத்தல் மிளகாய் - 2 (நடுத்தரம்) 3. மிளகு - 8-10 4. தேங்காய் பூ - 1/2 கப் (125 மி. லி. அளவு கரண்டி) 5. உப்பு - சுவைக்கு ஏற்ப 6. சீனி/சர்க்கரை - 2 மேசை கரண்டி/ சுவைக்கு ஏற்ப. 7. உள்ளி - ஒரு பல்லு, (நடுத்தரம்) செய்முறை 1. அவித்த பனங்கிழங்கை குந்து எடுத்து/ வார்ந்து , சிறிய துண்டுகளாக முறித்து/ வெட்டி கொள்ளவும். சிறிய உரலில் இடிப்பதாயின் 2. செத்தல் மிளகாய், உப்பு, மிளகு என்பவற்றை உரலில் போட்டு நன்கு பொடியாக்கவும். 3. உள்ளியை சேர்த்து இடிக்கவும். 4. முறித்து வைத்த கிழங்கை பகுத…
-
- 23 replies
- 5.1k views
-
-
[size=5]தேவையான பொருட்கள்:[/size] [size=5]நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று சிறிய வெங்காயம் - 5 பச்சை மிளகாய் - 5 பூண்டு - 5 பல் கறிவேப்பிலை – 1 இறகு புளி – சிறிய தேசிக்காயளவு இஞ்சி - சிறிது சரக்கு மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (உறைப்பு தேவைக்கேற்ப) மஞ்சள்தூள் - சிறிதளவு பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி கடுகு - சிறிதளவு மிளகு - சிறிதளவு வெந்தயம் - சிதளவு தேங்காய் - பாதி எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை:[/size] [size=5]1.நண்டைச் சுத்தம் செய்து, பெரிய நண்டாக இருந்தால் 4 துண்டுகளாக உடைக்கவும் சிறிய நண்டாயின் இரண்டாக உடைக்கவும். பெரிய கால்களை இரண்டாக முறிக்கவும். அவற்றை சிறிது மஞ்சள் த…
-
- 29 replies
- 5.1k views
-
-
யாழ்ப்பாணத்து புளி கஞ்சி...... .தேவையான பொருள்... குத்தரிசி...1கப் றால்..100கிராம்...பைத்தங்காய் நறுக்கியது 1 கப் முருங்கை இலை.... 1 கப்....வெங்காயம்...5 உள்ளி....ஒரு முளு பூண்டு.. மஞ்சள் 2 ஸ்பூன் மிளகு 2ஸ்பூன் சின்ன சிரகம்2ஸ்பூன் தேங்காய் பாதி....உப்பு தேவையான அளவு ஒரு எலுமிச்சை பழம்
-
- 7 replies
- 5.1k views
-
-
-
ஜ... மாம்பழம் அல்வா செய்து பாருங்கள் மாம்பழமே அதிக ருசியானதுதான். அதனை அல்வா செய்து சாப்பிட்டால்... என்ன சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதா... செய்து பாருங்கள். எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை பழுத்த சுவையான மாம்பழம் - 2 சர்க்கரை - 1 கப் பால் - 2 கப் ஏலக்காய் - 2 நெய் - 1 தேக்கரண்டி செய்யும் முறை மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாகப் போட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். சுத்தமான வாய் அகண்ட பாத்திரத்தில் மசித்த மாம்பழத்துடன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள். கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சேர்க்கவும். ஏ…
-
- 21 replies
- 5k views
-
-
தேவையான பொருட்கள் உருண்டை செய்ய சிந்தாமணி கடலை - 1/2 கப் கடலை பருப்பு - 1 /4 கப் சிவப்பு வெங்காயம் - 1 /2 பெருஞ்சீரகம் - சிறிதளவு உப்பு - சுவைக்கு எண்ணெய் - பொரிக்க கறிக்கு சிவப்பு வெங்காயம் - 1 - 1 /2 பச்சை மிளகாய் - 2 தக்காளி பழம் - 1 சிறியது தேங்காய் பால் / 2 % பால் - 1 கப் கறி துள் - சுவைக்கு ஏற்ப கடுகு - சிறிதளவு சீரகம் - சிறிதளவு கறிவேப்பிலை - 1 நெட்டு உள்ளி - 1 - 2 பல்லு இஞ்சி - சிறிதளவு பழப்புளி - சுவைக்கு ஏற்ப உப்பு - சுவைக்கு ஏற்ப எண்ணெய் - தாளிக்க செய்முறை உருண்டை - சிந்தாமணி கடலை, கடலை பருப்பு இரண்டையும் 6 - 8 மணி நேரம் ஊற வைத்து கடலை வடைக்கு அ…
-
- 22 replies
- 5k views
-
-
[size=4]தேவையானவை : [/size] [size=4]கோழி துண்டுகள்- 300கிராம்[/size] [size=4]பெரிய வெங்காயம்- 1[/size] [size=4]சின்ன வெங்காயம்- 12[/size] [size=4]தக்காளி- 1[/size] [size=4]பச்சை மிளகாய்- 4[/size] [size=4]இஞ்சி- ஒன்றரை இன்ச் துண்டு[/size] [size=4]பூண்டு- 6பல்[/size] [size=4]மிளகாய் தூள்- 2மேசைக்கரண்டி[/size] [size=4]தனியா தூள்- 3 மேசைக்கரண்டி[/size] [size=4]மஞ்சள் தூள் 1தேக்கரண்டி[/size] [size=4]கறிவேப்பிலை- 2இனுக்கு[/size] [size=4]பாண்டான் இலை-பாதி[/size] [size=4]மல்லிக் கீரை- சிறிதளவு[/size] [size=4]உப்பு- தேவையான அளவு[/size] [size=4]கரம் மசாலா பொடி- 1/2தேக்கரண்டி (பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து அரைத்த …
-
- 6 replies
- 5k views
-
-
30 வகை கோடை உணவுகள் ‘இந்த முறை எப்படி வாட்டி எடுக்கப் போகுதோ...' கோடை தொடங்கும்போதே மக்கள் மனதில் இந்த பீதியும் தொடங்கிவிடும். ”மற்ற சீஸன்களைப் போலவே கோடையும் என்ஜாய் பண்ண வேண்டிய ஒன்றுதான். நீண்ட விடுமுறை, புது இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு, நெருங்கிய உறவினர்களைச் சந்தித்து மகிழ்தல் என கோடை பல சந்தோஷத் தருணங்களை உங்கள் வாசற்படிக்கு கொண்டுவந்து சேர்க்கும். இந்த பருவத்துக்கேற்ப நம் பழக்கவழக்கங்கள், உணவு முறையை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் போதும். அதிக சிரமமின்றி எளிதில் கடந்துவிடலாம்'' என்று கூறும் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், உடலுக்குக் குளிர்ச்சி தரும் பொருட்களைக் கொண்டு 30 வகை கோடை உணவுகளை இங்கே வழங்குகிறார். ஹேவ் எ நைஸ் சம்மர்…
-
- 1 reply
- 5k views
-
-
.......... இது நம்ம ஊரு ஸ்பெஷல் .... ... அழகான ஊர் .. ஊரை சுற்றி தோட்டங்கள் .... தோட்டங்களில் ஆங்காங்கே பூவரசு ஆடுகாற்களுடன் கிணறுகள் ..... அதன் அருகருகே தென்னோலையால் வேயப்பட்ட சிறு குடில்கள்..... தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுபவர்கள் களைப்பாற, வேலை செய்பவர்கள் இளைப்பாற, நீர் இறைக்கும் இயந்திரங்களை சிலவேளை இரவுகளில் விட்டுச் செல்லவும் இக்குடில்கள் ..... அதனை விட பாடசாலையை கட் அடித்து விட்டோ, மதில் ஏறிப் பாய்ந்து சென்று நாலு போத்தல் கள்ளுகளுடன் ஒதுங்கவும் அருமையான இடம் ... நன்றிகள் குடில்களே!! ... அது என்ன கோழிப்புக்கை????? .... கள்ளுடன் தோட்ட குடிளுக்குள் ஒதுங்கியாச்சு! ... போட்டால் பசிக்கும் ... சாப்பிட??? .. வீடுகளுக்கு போக முடியாது, முறியும் மட்டும்!! ...…
-
- 12 replies
- 5k views
-
-
இன்று கடைப்பக்கம் போன போது... இந்தப் பழத்தைக் கண்டு, ஆசையில் வாங்கி விட்டேன். இதனை எப்படிச் சாப்பிடுவது என்று, யாருக்காவது தெரியுமா?
-
- 13 replies
- 5k views
-
-
பூரி நான் 2010ல் இந்தியாவில் நிற்கும்பொழுது எனது மச்சினிச்சி சொல்லித் தந்தது . உண்மையில் இது எமது பாரம்பரிய சமையல் இல்லை . ஆனாலும் எனக்கு இது வித்தியாசமாக இருந்தது . தேவையான சாமான்கள் : கோதுமை மா 2 சுண்டு ************* . ஆட்டா மா 1 சுண்டு . ரவை கால் சுண்டு . உப்பு ( தேவையான அளவு ) . வெண்ணை அல்லது மாஜரின் 100 கிறாம் . எண்ணை 1 லீற்ரர் . பக்குவம் : கோதுமை மா , ஆட்டாமா , ரவை , உப்பு , வெண்ணை ஆகியவற்றை தண்ணி விட்டு இறுக்கமாக கையில் ஒட்டாதவாறு பிசைஞ்சு சிறிய உருண்டைகளாக உருட்டி வையுங்கள் . உருட்டிய உருண்டைகளை தட்டையாகத் தட்டி பூரிக்கட்டையால் வட்டமாகவோ , சதுரமாகவோ விரும்பிய வடிவங்களில் உருட்டி வையுங்கள் . தாச்சியில் எண்ணையை விட்டு நன்றாக …
-
- 21 replies
- 5k views
-
-
கிறிஸ்துமஸ் ரெசிப்பி கிறிஸ்துமஸ் ரெசிப்பி * கருப்பட்டி முட்டை புடிங் * எக்லெஸ் டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ் * கேரள ப்ளம் கேக் * பிஸ்தா பாயசம் * வான்கோழி பிரியாணி * ப்ரான் பாப்ஸ் * செர்ரி மஃபின்ஸ் * செர்ரி அண்ட் ஃப்ரூட் ஜெல்லி * கிரில்டு சிக்கன் * ஸ்பைஸ்டு குக்கீஸ் விளக்குகளும், பரிசுகளும், கேக் வாசமும் மணக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை தன் ரெசிப்பி மூலம் கூடுதல் சிறப்பாக்கியிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா. கருப்பட்டி முட்டை புடிங் தேவையானவை: கருப்பட்டி - 100 கிராம் தண்ணீர் - 5 டேபிள்ஸ்பூன் முட்டை - 2 (90 -100 கிராம் இருக்க வேண்டும்) வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன் வெண்ணெய்/எண்ணெய் - தேவைக்கேற்ப செய்ம…
-
- 15 replies
- 4.9k views
-
-
[size=4]வாங்கின உழுந்தம் மா காலாவதியாகப் போகின்றது இன்னும் இரண்டு மாதத்தில் (கவனிக்காமல் வாங்கிவிட்டேன் ) என்னடா செய்யலாமென்ற போது கிடைத்தது இது, நாளை செய்து பார்க்கனும்.[/size] [size=4]2kg உழுந்த மா இருக்கு வேறு என்ன செய்யலாமென்று கூறுங்கள்[/size][size=4] ??[/size] உழுந்துமா பிடி கொழுக்கட்டை உழுந்துமா பிடிககொழுக்கட்டை கொழுக்கட்டைகள் பலவிதம். இது சிறுவர்கள் தாங்களும் கூடவே வந்து பிடித்துத் தயாரிப்பதில் பங்களித்து மகிழக் கூடியது. இடியப்ப மற்றும் புட்டு மா மிஞ்சினால் அவற்றை வீணாக்காது கொழுக்கட்டையாகப் பிடிப்பதுண்டு. பலரும் அரிசி மாவில் செய்வர். உள்ளே பருப்பு வைத்துச் செய்வது மற்றொரு வகை. இது அரிசி மாவுடன் உழுந்து மா கலந்து செய…
-
- 14 replies
- 4.9k views
-