நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் கோடைக்காலத்தில் சிக்கன் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்துவிடும் என்ற பொதுவான எச்சரிக்கை நம் வீடுகளில் பரவலாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன? படக்குறிப்பு,உணவு உண்ட பிறகு உடலில் நடக்கும் வெப்ப விளைவு தொடர்பாகக் கடந்த 2013ஆம் ஆண்டில், எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சிக்கன் சாப்பிடும்போது வெப்பநிலை ஓரளவுக்கு அதிகரிப்பது உணரப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8rped1v8gjo
-
- 0 replies
- 77 views
- 1 follower
-
-
அப்படித்தான் முதன் முதல் கேள்விப்பட்ட போது எனக்கு தோன்றியது. உங்களில் எத்தனை பேருக்கு இந்த இனிப்பு பற்றி தெரிந்திருக்கும் என தெரியவில்லை. இது இந்திய இனிப்பு என்பதால் தமிழ்நாட்டு உறவுகள் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஈழத்து உறவுகளுக்கு? இறுதியாக அறிந்து கொண்டது நானாக கூட இருக்கலாம். தற்போதைய பிரச்சனை அது அல்ல. பெயரே சரியாக தெரியாத இனிப்பை நான் செய்தது தான் பெரும் பிரச்சனை. இந்தியாவில் எந்த ஊரில் இருந்து வந்தது என அறிந்து கொள்ள முயன்ற போது கிடைத்த தகவலையும் செய்முறை எனும் சோதனைக்குள் செல்ல மென்னர் பார்க்கலாம். இந்த பதிவை எனது நெடுங்கால யாழ் நண்பர், சகோதரர் திரு.கந்தப்பு அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் கந்தப்பு…
-
- 12 replies
- 3.1k views
-
-
தீபாவளிக்கு என்ன மட்டனா? இதை ட்ரை பண்ணலாமே! எப்பவும் செய்யும் உணவுகளை விட கொஞ்சம் ஸ்பெசலாய் செய்தால்தான் அது தீபாவளி. இந்த தீபாவளிக்கு அசைவ ப்ரியர்கள் கண்டிப்பாக மட்டனை மிஸ் செய்யமாட்டார்கள் என்பதால் அவர்களுக்கான "காரைக்குடி ஸ்பெசல் மட்டன் நெய் பிரட்டல்" செய்முறை. மட்டன் பிரட்டல் வகையில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் ரெசிப்பி இது. முதலில் தேவையானவை - (செய்முறை 1 கிலோ மட்டனுக்கு ) மட்டன் - 1 கிலோ நெய் 100 கிராம் 10 - வரமிளகாய் 1 தேக்கரண்டி மல்லி 1 தேக்கரண்டி சீரகம் 1 தேக்கரண்டி சோம்பு 2 தேக்கரண்டி மிளகு 15 முந்திரி பருப்புகள் 1 மேஜைக்கரண்டி பூண்டு இஞ்சி பேஸ்ட் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் பட்டை இரண்டு விரல…
-
- 4 replies
- 1.4k views
-
-
இந்த பிட்டு பற்றிய சமையல் குறிப்பை முன்னர் யாழில் இணைத்தெனா தெரியவில்லை?? இந்த செய்முறை 2 பேருக்கு போதுமானது. 250 கிராம் Couscous ஐ எடுத்து எடுத்து உங்கள் சுவைக்கேற்ப உப்பை கலந்து பின் மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் பரவிவிடுங்கள். நன்கு கொதித்த சுடு நீரை பாத்திரத்தில் Couscous இனை மூடி, ஒரு சென்ரி மீற்றர் உயரத்திற்கு சேருங்கள். பாத்திரத்தை இறுக்கமாக மூடி 5 - 6 நிமிடங்கள் வையுங்கள். இப்போது Couscous சுடு நீரில் வெந்து நீங்கள் இட்டதை போல் 3 மடங்கிற்கு வந்திருக்கும். அவிந்த Couscous இற்கு துருவிய தேங்காய்/ உலர்ந்த தேங்காய் துருவலை கலந்து அப்படியே கறி/ கூட்டு/ பொரியல் போன்றவற்றுடன் உண்ணலாம். அல்லது புட்டு அவிக்கும் க…
-
- 4 replies
- 4.2k views
-
-
-
சித்திரைக்கஞ்சி சித்திரா பவுர்னமி அன்று அம்மனுக்கு சித்திரைக் கஞ்சி வார்ப்பார்கள். அன்று சித்திர குப்த நாயனார் திருமண நாளுமாகும். இலண்டன் ஈலிங் அம்மன் கோவிலில் ஒருமுறை எதிர்பாராவிதமாக ஒரு சித்திரா பவுர்னமி அன்று சென்றிருந்தேன். சித்திரைக்கஞ்சி வார்த்தார்கள். அப்படி ஒரு சுவை, அமிர்தமாக இருந்தது. அதை செய்தவர், அதில் ஒரு பெரும் கில்லாடி என்றும் வருடாவருடம் செய்பவர் என்றும் சொன்னார்கள். அவரிடம் செய்முறை கேட்கலாம் என்றால், பிசியாக இருந்தார், மேலும் அது கேட்க கூடிய இடமும் இல்லை தானே. பிறகும் அவரை சந்திக்க முடியவில்லை. அதன் பின்னர் அதே சித்திரா பவுர்னமி நாளில் செல்லும் வாய்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த செய்முறை பலமாதிரியாக செ…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
ரைஸ் புடிங் தேவையானவை: அரிசி முக்கால் கப் பால் இரண்டு கப் சர்க்கரை இரண்டே கால் கப் உப்பு கால் டீஸ்பூன் முட்டை ஒன்று நன்றாக அடித்தது உலர்ந்த திராட்சை முக்கால் கப் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் வனிலா எசன்ஸ் அரை டீஸ்பூன் செய்முறை: கடாயில் ஒரு கப் தண்ணீரை விட்டுக் கொதிக்க வைக்கவும். பிறகு அரிசியைப் போட்டு நன்றாகக் கலக்கி விட்டு மூடி, மிதமான தீயில் இருபது நிமிடம் வேக வைக்கவும். சாதம் நன்றாகக் குழைய வேண்டும். இதனுடன் ஒன்றரை கப்…
-
- 1 reply
- 780 views
-
-
முட்டையில்லாத கேக் தேவையான பொருட்கள் 400 கிராம் றவை 100 கிராம் மா 500 கிராம் பேரிச்சம் பழம் 1 கப் கடும் தேயிலை சாயம் 2 ரின் மில்க் 500 கிராம் பட்டர் 1 பேக்கிங் பவுடர் கருவா தூள் அல்லது ஏலக்காய் தூள் (தேவைக்கு ஏற்ப) செய்முறை பேரிச்சம் பழத்தை சிறிய தூளாக வெட்டி தேயிலை சாயத்தில் பேக்கிங் பவுடரையும் கலந்து முதல் நாளே ஊறப்போட்டு வைக்கோணும். பட்டர் சீனி இரண்டையும் நன்றாக அடித்து கலந்து அதனுடன் மா றவை இவைகளை போட்டு கலந்து பழக் கலவை ரின் மில்க் சிம்ற் பவுடர் இவைகளையும் கலந்து முன்பே சூடாக்க பட்ட பேக் ஓவனில் பட்டர் தடவிய கேக் தட்டில் ஊற்றி பேக் பண்ணவும்.
-
- 14 replies
- 13.4k views
-
-
பப்பாளிக்காய் பொரியல் என்னென்ன தேவை? பப்பாளிக்காய் (துருவியது) - 1 கப் குடமிளகாய் 3 ( பச்சை, சிவப்பு, மஞ்சள்) நறுக்கிய பச்சை மிளகாய் 2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் 2 தேங்காய்த் துருவல் - அரை மூடி கடலைப் பருப்பு 2 டீஸ்பூன் கடுகு, உளுந்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு எப்படிச் செய்வது? பப்பாளிக்காயை சேமியாபோல் துருவிக் கொள்ளவும். மூன்று நிற குடமிளகாயையும் நீளவாக்கில் துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்கவும். அதில் கடலை பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய வெங்கா…
-
- 1 reply
- 806 views
-
-
-
- 2 replies
- 678 views
-
-
தேங்காய் பால் பட்டாணி பிரியாணி மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள். இது மிகவும் எளிமையான மற்றும் சுவையான ஓர் ரெசிபி. வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த தேங்காய் பால் பட்டாணி பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கப் பட்டாணி - 1/2 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கெட்டியான தேங்காய் பால் - 1 கப் தண்ணீர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... புதினா - 1/2 கப் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 மிளகாய் - 2 துருவி…
-
- 0 replies
- 417 views
-
-
சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல் தேவையான பொருட்கள் ஒன்று/ இரண்டு பேருக்கு 4 - மேசைக்கரண்டி தயிர் 1 - பெரிய கத்தரிக்காய் * சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும். * வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன். நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய வெள்ளை/ ஊதா கத்தரிக்காயும் பாவிக்கலாம். நான் சிறிய கத்தரிக்காயை தான் பாவித்து செய்தேன். 5-6 - சிறிய வெங்காயம் 2 - பச்சை மிளகாய் 1/2- தே. கரண்டி மிளகு சுவைக்கு- உப்பு அலுமினியத் தாள் செய்முறை 1. போறணை/ Oven ஐ 230 பாகை செல்சியல்ல…
-
- 31 replies
- 8.7k views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்குளிக்குமா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது கட்டுரை தகவல் தீபக் மண்டல் பிபிசி செய்தியாளர் 28 ஜூலை 2025, 03:22 GMT இந்தியா முழுவதும் சந்தைகளில் ஏ1, ஏ2 என்ற பெயருடன் பால், நெய் மற்றும் வெண்ணெய் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான உள்ளூர் நெய்யைவிட ஏ2 நெய் ஆரோக்கியமானது என்ற முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றன. சாதாரண உள்ளூர் நெய் சந்தையில் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டால், ஏ2 நெய் ஒரு கிலோ ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. பால் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஏ2 நெய் நாட்டு மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கூடுதல் பலனளிப்பதாகக் கூறுகின்றன. இதில், இயற்கையாக கிடைக்கும் A2 …
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
[size=5]1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம்[/size] [size=5]1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர்[/size] [size=5]1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண்[/size] [size=5]குவித்து ஒரு தேக்கரண்டி சீனி[/size] [size=5]பெரிய பாதித் தேங்காய்[/size] [size=5]1 தே.க. உப்புத்தூள்[/size] [size=5]1/3 தே.க. அப்பச்சோடா[/size] [size=5]பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட…
-
- 11 replies
- 1.5k views
-
-
வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை வெண்டைக்காய் – 1/4 கிலோ, மிளகு – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, பூண்டு – 3 பல், கடுகு – தாளிக்க. வெண்டைக்காயை நீளவாக்கில் அரியவும். கடாயில் எண்ணெயை காய விட்டு, கடுகு தாளித்து வெண்டைக்காயை நன்கு வதக்கவும். மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு அரைக்கவும். பிறகு வதங்கிய வெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும். நன்கு சுருள வந்தபின் பரிமாறவும். http://vijaytamil.net/
-
- 0 replies
- 514 views
-
-
ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தரமான பாஸ்மதி அரிசி - அரை கிலோ மட்டன் எலும்புடன் - 400 கிராம் பழுத்த தக்காளி - நான்கு வெங்காயம் - நான்கு பச்சை மிளகாய் - நான்கு மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு தூள் - 2 1/2 தேக்கரண்டி தயிர் - கால் கப் கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி புதினா இலை - கால் கைப்பிடி …
-
- 0 replies
- 1k views
-
-
Mexican-Style Pork Tacos (Tacos Al Pastor) via Bien Tasty FULL RECIPE: http://bzfd.it/2dN6Ib4
-
- 0 replies
- 709 views
-
-
https://youtu.be/0-5Ahv4kjfE
-
- 3 replies
- 626 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க வீட்ட காய்த்த ஒரு பலாக்காய் புடுங்கி அதுல ஒரு சுவையான பிரட்டல் கறி வைப்பம். இது செய்து ஒரு அப்பிடியே சாப்பிடலாம், அவ்வளவு நல்லா இருக்கும், இல்லாட்டி சோறுடன் சேர்த்து சாப்பிடவும் நல்லா இருக்கும், நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 350 views
-
-
சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல் பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த சிக்கன் சுக்கா வறுவல். இன்று இந்த சிக்கன் சுக்கா வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ வெங்காயம் - 1 பட்டை - 1 துண்டு மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - 1 துண்டு பூண்டு - 10 பல் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்…
-
- 1 reply
- 1.2k views
-
-
குளுக்கோறச தேவயான பொருட்கள் சீனி : 1/4 கி. கிராம் ஜெலற்றீன் : 3 மே.கரண்டி / 20 கிராம் தேசிப்புளி: 3 மே. கரண்டி கொதிநீர் : 6 மே. கரண்டி தண்ணீர் : 10 மே. கரண்டி / 1/2 தம்ளர் கலரிங்: 1 தே. கரண்டி விரும்பியது கேசரி கலரும் பயன்படுத்தலாம் பெரிய சீனி : 4 மே. கரண்டி மாஜரின் : 1 தே. கரண்டி செய்முறை -ஜெலற்றீனைத் தம்ளரில் எடுத்து அதனுள் 6 மே.கரண்டி நன்கு கொத்தித்த நீரை விட்டு இத்தம்ளரைப் பிறிதொரு கொதி நீருள்ள பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்துக்கொண்டு ஜெலற்றீன் முற்றாக கரையும் வரை நன்கு கரைத்து அப்படியே கொதிநீருள்ள பாத்திரத்தினுள்ளேயே வைத்துக் கொள்க. - தாச்சியில் சீனியைப்போட்டு, 10 மே.கரண்டி தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சுக. …
-
- 14 replies
- 4k views
-
-
அறுசுவையுடைய அச்சாறுகள் இலையில் ஒரு சுண்டல், தேங்காய்ச் சம்பல், பருப்புக் கறி, மரக்கறி அச்சாறுடன் ஒரு சமவிகித உணவு விபரம்: பவானி பாலா படங்கள்: தமித் விக்கிரமசிங்க சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும் புளிப்பும் காரமும் நிறைந்த வித விதமான அச்சாறுகள்! காய்கறிகளில்...பழங்களில்... பலவித நிறங்களில்...! பார்க்கும்பொழுதே நாவில் நீர் ஊறும். ஊறுகாயைப் போன்றே அச்சாறும் ஒருவகை உணவு பதனிடும் முறை. செய்முறைகளில் சற்றே வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் தயாரிக்கப்படும் அச்சாறு தனித்துவமானது. மரக்கறி வகைகள் மட்டுமன்றி முற்றிய பழ வகைகளிலும் அச்சாறு செய்யும் வழமை இலங்கையில் மட்டுமே உள்ளது. மாங்காய் அச்சாறு, அம்பரெல்லா அச்சாறு, அன்னாசி அச்சாறு, …
-
- 9 replies
- 6.1k views
-
-
தேவையானப் பொருட்கள்: பச்சரிசி - ஒரு கப் பாசிப் பருப்பு - கால் கப் நெய் - 2 மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு - 15 தூளாக்கிய வெல்லம் - ஒரு கப் ஏலக்காய் - 5 தேங்காய்ப்பால் - 1 கப் செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பினை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் - 5 கப் தண்ர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும். பருப்பு முக்கால் பதம் வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக் கழுவி, களைந்துப் போடவேண்டும். அரிசியும் பருப்பும் நன்கு வெந்து குழைந்தபின் தூள் செய்த வெல்லத்தினைப் போடவும். தீயை சற்று குறைத்து, வெல்லம் கரைந்து நன்கு சேரும் வரை கிளறி, பாதி நெய்யினை ஊற்றி மீண்டு…
-
- 11 replies
- 3.4k views
-
-
வணக்கம், தலைப்பை பார்த்து விட்டு, இதென்ன பெரிய சமையல் என நினைச்சிங்க என்றால் அது தப்பு, பெரிய தப்பு. தேவையான பொருட்களில் தான் இந்த கறியின் சுவை உள்ளது. முதலில் அதைப் பார்ப்போம். மிக முக்கியமான தேவையான பொருட்கள்: (1) அடம் பிடித்து, அப்பாவிடம் திட்டு வாங்கி வீட்டில் நீங்களே வைத்த தக்காளி செடியில் இருந்து வந்த தக்காளிக்காய்கள். (குறிப்பாக அந்த செடிக்கு நீங்கள் ஒரு தடவை கூட நீர் ஊற்றியிருக்க கூடாது. வைத்த சில நாட்களிலேயே வேலை என சொல்லி வேறு ஊரிற்கோ/ நாட்டிற்கோ சென்றுவிட வேண்டும்) (2) பக்கத்து வீட்டில் கொடுத்த கருவாட்டு துண்டு (கருவாடு தரும் பக்கத்து வீட்டுக்காரரா என பொறாமை வேண்டாம்..அந்த பக்கத்து வீடு என் அண்ணன் வீடு) கருவாடு நிச்சயமாக ஊரில் இருந்து வந்திர…
-
- 32 replies
- 5.9k views
-