நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தேவையான பொருட்கள்: நண்டு 2 சிவப்பு மிளகாய் 3-4 தக்காளி கூழ் [Tomato Paste] உள்ளி+இஞ்சி விழுது சீனி சிக்கன் ஸ்டொக் [Chicken Stock] சோளமா லெமன் க்ராஸ் [Lemon Grass] உப்பு செய்முறை: நண்டை சுத்தமாக்கி, நீரினால் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் நண்டை பேப்பர் டவலில் போட்டு நீரை ஒற்றியெடுங்கள். சிறிதளவு சோளமாவில் போட்டு பிரட்டி எடுங்கள். ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி நண்டு துண்டுகளை போட்டு வறுக்கவும். பின்னர் மிளகாய் & லெமன் கிராஸை நன்றாக அரைத்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வேறு ஒரு சட்டியில் எண்ணெய் போட்டு சூடாக்கி அதில் உள்ளி, இஞ்சி விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை கிளறவும். [2 நிமிடங்கள்] அதில் அரைத்த விழுதை சேர்…
-
- 10 replies
- 4.2k views
-
-
தேவையான பொருட்கள்: ------------------------------- கோழி 1 கி பெரிய வெங்காயம் 6 மிளகாய் வற்றல் 7 தக்காளி 5 இஞ்சி, பூண்டு சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி கரம் மசாலா டால்டா அல்லது நெய் வினிகர் எலுமிச்சை சாறு வெள்ளரிக்காய் செய்முறை: ------------- முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும். இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறு…
-
- 14 replies
- 4.2k views
-
-
தேவைப்படும் பொருட்கள்: (முதலில் பிஷ் மசாலா தயாரிக்க வேண்டும்) * கெட்டியான மீன்- 500 கிராம். * மிளகாய்த்தூள்- ஒரு மேஜைக்கரண்டி. * மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி. * இஞ்சி, பூண்டு அரைப்பு- ஒரு மேஜைக்கரண்டி. * எலுமிச்சை சாறு- ஒரு தேக்கரண்டி. * வெஜிடபிள் ஆயில்- வறுப்பதற்கு. (அனைத்து பொருட்களையும் ஒன்றாக்கி, மீனில் பூசி எண்ணையில் அதிகம் வெந்து போகாத அளவிற்கு வறுத்து வையுங்கள்) * பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- இரண்டு கப். * இஞ்சி, பூண்டு நறுக்கியது- ஒரு மேஜைக் கரண்டி. * கேரட் சிறியதாக நறுக்கியது- இரண்டு கப். * குடை மிளகாய் சிறிதாக நறுக்கியது- இரண்டு மேஜைக்கரண்டி. * ப.மிளகாய் வட்டமாக நறுக்கியது- இரண்டு தேக்கரண்டி…
-
- 16 replies
- 4.2k views
-
-
சிம்பிளான பாகற்காய் குழம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே பாகற்காய் இயற்கை தந்த மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான உணவுப்பொருள். பாகற்காய் கசப்பாக இருப்பதாலேயே பலர் அதனை சாப்பிடுவதில்லை. ஆனால் இதனை சாப்பிட்டால் பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். அதிலும் அந்த பாகற்காயை குழம்பு செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும். இங்கு பாகற்காய் குழம்பை எப்படி கசப்பின்றி செய்வதென்று எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்களேன்... தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (பெரியது, நறுக்கியது) பாகற்காய் - 1 (பொடியாக நறுக்கியது) துவரம் பருப்பு - 1/2 கப் எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு…
-
- 7 replies
- 4.2k views
-
-
கோதுமை அரிசிப் புட்டு அல்லது ஓட்ஸ் புட்டு . என்ன தேவை : கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் 2 கப் . ரவை வறுத்தது 1 / 2 கப் . தேங்காய் பூ 1 / 2 கப். உப்பு ( தேவையான அளவு ). கூட்டல்: ஒரு சட்டியிலை கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் உடன் உப்பு கலந்து சுடு தண்ணியை கோதுமை அரிசி அல்லது ஓட்ஸ் மட்டத்துக்கு விடுங்கோ. பின்பு ரவையை சுடுதண்ணிக்கு மேலை தூவி ஒரு மணித்தியாலம் ஊறவிடுங்கோ. பின்பு பூட்புரோசஸசரில் போட்டு அடியுங்கோ. பின்பு ஸ் ரீமரிலை வேகவைத்து திருவிய தேங்காய் பூவை கலவுங்கோ. மாற்றர் ஓவர். பி கு : கோதுமை அரிசி அரை அவியலில் புழுக்கியது (grains de blé précuit or wheat grain parboiled) எல்லா கடைகளிலும் விக்கின்றது .கண்டுபிடிப்பது சுலபமானது . எனக்கு தெரிஞ்ச பு…
-
- 19 replies
- 4.2k views
-
-
-
தேவையான பொருட்கள் அரிசி - 200 கிராம் பால் - 1 லிட்டர் சர்க்கரை - 250 கிராம் பாதாம், முந்திரி - 15 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) திராட்சை - 15 நெய் - 50 கிராம் செய்முறை 1. பெரிய பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும். கொதித்த பின் பாதி பாலை தனியே எடுத்து வைத்து விடவும். 2. மீதியுள்ள பாதி கொதித்த பாலில் கழுவிய அரிசியைச் சேர்த்து (ஊற விட வேண்டாம்) 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இடையிடையே கிளறி விடவும். 3. பிறகு தனியே எடுத்து வைத்த பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராக கலந்து விடவும். 4. அரிசி குழைய வெந்தவுடன் லேசாக மசித்து சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலந்து விடவும். 5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். …
-
- 12 replies
- 4.1k views
-
-
இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? காலை உணவுக்கு ஏற்றது இட்லி மற்றும் சட்னிதான். தயாரிக்கவும் எளிது. ஆனால் எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாக வரும், சில நாட்கள் கல் போன்று சுவையற்று இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்யவேண்டும்? தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - 4 தம்ளர் உளுந்து - 1 டம்ளர் வெந்தயம் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அர…
-
- 1 reply
- 4.1k views
-
-
செய்முறையை பார்க்க: http://www.yarl.com/weblog/suvaiaruvi/
-
- 18 replies
- 4.1k views
-
-
நவராத்திரியில் கடலைக்கு [சுண்டல்] எத்தனை முக்கியம் இருக்கோ; அவலுக்கும் உண்டு. 'அவல் கடலை' என்று சேர்த்தே அழைப்பது ஈழத்தில் உள்ள வழக்கம். நவராத்திரி தினங்களில் அவல் நிச்சயம் இருக்கும். ஈழத்தில் காலை நேர உணவாகவும் அவல் ஆவதுண்டு. ஊருக்கு போகும் நேரத்தில் பெரியத்தையின் அவலுக்காகவே காலையில் அவர் வீட்டுக்கு அண்ணன்களுடன் போய்விடுவேன். அத்தனை அற்புதமான சுவை. அப்படி வேறு யாருக்குமே சமைக்க தெரியாது என்பது என் கருத்து. புதிதாக துருவிய தேங்காய் பூவையும், சர்க்கரையையும் சேர்த்தால்...என்ன சுவை..என்ன சுவை... அவல் செய்வது ஒன்றும் பெரிய வேலையே இல்லை. ஆனாலும் கைப்பக்குவம் என சொல்வார்களே; அது அடிக்கடி வேலையை காட்ட தான் செய்கின்றது. அவல் - 250 கிராம் துருவிய தேங்காய் பூ - 50 கிரா…
-
- 19 replies
- 4.1k views
-
-
என்னென்ன தேவை? சின்ன வெங்காயம் - 1 கப், தக்காளி - 1, பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 6 முதல் 8, புளி - 1 சிறு துண்டு, உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க... கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? வெங்காயம் முதல் உப்பு வரையிலான அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தாளித்து, அதை சட்னியின் மேல் கொட்டவும். தாளிப்பின் மேல் சட்னியை விட்டுக் கொதிக்க விடக்கூடாது. http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=1546&Cat=502
-
- 8 replies
- 4.1k views
-
-
நமக்கு மிகவும் பிடிச்ச ஐட்டம். இருந்திட்டு சாப்பிடலாம். நல்லாயிருக்கும். தேவையானப் பொருட்கள்: அரிசி - 2 கப் கறிவேப்பிலை - 1 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 மிளகு - 1 டீஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிறு துண்டு நெய் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 10 உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை: அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் (pan) எண்ணை விட்டு, பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகாய் அகியவற்றை சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகு சேர்த்து, சிறிது வறுத்து, அதில் கறிவே…
-
- 30 replies
- 4.1k views
-
-
அசைவ உணவுகளிலேயே மட்டன் தான் உடலுக்கு குளிர்ச்சியை தருவது. அதிலும் இந்த மட்டனை எந்த மாதிரியான வகையில் சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவையே அருமையாக இருக்கும். மேலும் அசைவ உணவுகளில் தமிழ்நாட்டில் செய்யப்படும் செட்டிநாடு ஸ்டைல் உணவு தான் பிரபலமானது. இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைலில் எப்படி மட்டனை வறுவல் செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மட்டன் கலவைக்கு...[/size] [size=4]மட்டன் - 500 கிராம் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செட்டிநாடு மசாலாவிற்கு...[/size] [size=4]பேபி வெங்காய…
-
- 7 replies
- 4.1k views
-
-
வெள்ளை, தமிழ் பாட்டு, கொழும்பு தெரு உணவு
-
- 15 replies
- 4.1k views
-
-
சங்கரா மீன் குழம்பு சங்காரா மீன் செந்நிறமுடையது. இந்த மீன் குழம்பின் சுவை நாவில் நீர் ஊறச் செய்யும். எளிதில் செய்யலாம். தேவையான பொருட்கள் சங்கரா மீன் – 5 கனிந்த தக்காளி சிறியது – 3 புளி - சிறிய எலுமிச்சை அளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் சின்ன வெங்காயம் – 100 கிராம் மிளகாய்த்தூள் - 3 டீ ஸ்பூன் மல்லித்தூள் – 2 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் நல்லெண்எண்ணெய் – 4 டீ ஸ்பூன் கடுகு - 1/2 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டீ ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன் பெருங்காயம் – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை சங்கரா மீனில் உள்ள செதில்களை உப்பு, கோதுமை …
-
- 4 replies
- 4.1k views
-
-
பூந்தி லட்டு கடலை மாவு - 1 1/2 கப் சீனி - ஒரு கப் பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி நெய் - ஒரு மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - 10 ஏலக்காய் - 6 கிஸ்மிஸ் - 10 மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை தண்ணீர் - 1/2 கப் எண்ணெய் - அரை லிட்டர் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சீனியைக் கொட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். கடலை மாவில் மஞ்சள் வண்ணப் பொடி, பேக்கிங் பவுடர், தண்ணீர் சேர்த்து விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சாதாரண கண் கரண்டியை வாணலியில் ந…
-
- 2 replies
- 4.1k views
-
-
புதினா சட்னி புதினாகீரை(மின்ட்) இரண்டு பிடி செத்தல் மிளகாய் 2 அல்லது 3 உழுந்து ஓரு மேசைக்கரண்டி தேங்காய்ப்பூ இரண்டு கைபிடி உப்பு புளி மிளகு வெங்காயம் புதினா இலையைக்கிள்ளி எடுத்து கழுவி வைக்கவும். சிறிது எண்ணெயில் மிளகாயயைப்பொரித்து தனியாக வைத்துவிட்டு புதினா இலையை வதக்கி எடுக்கவும். பின் வெறும் கடாயில் உழுந்தை பொன்னிறமாக வறுக்கவும். பின் எல்லாவற்றையும் ஒன்றாகபோட்டு ஒன்றாக அரைக்கவும். சுடச்சுட சோற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். தயிருடன் சாப்பிடும்போது புதினாம் சேர்த்து சாப்பிட்ட சுவையாக இருக்கும். இதைச் சொல்லித்தந்த எனது அன்னைக்கு நன்றி.
-
- 5 replies
- 4.1k views
-
-
-
வாழைப்பூ வடை தேவையானவை : வாழைப்பூ - சிறியது ஒன்று கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு இஞ்சி - ஒரு சிறுத் துண்டு பூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி தழை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரித்தெடுக கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி கடலை பருப்பை தனியே எடுத்து வைத்து விட்டு, மீதி பருப்பை இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும். அரைத்த கடலைப்பருப்பு, முழு கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந…
-
- 25 replies
- 4.1k views
-
-
30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி வீட்டில் பிள்ளைகள் அதிக நேரம் தங்கும் விடுமுறை சீஸன் இது. வித்தியாசமான, சுவையான உணவை எதிர்பார்த்து, ‘’இன்றைய ஸ்பெஷல் என்னம்மா..?’’ என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன செய்து கொடுத்தால் குஷி அடைவார்கள் என்று அக்கறையுடன் யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கிண்டர் கார்டன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் `30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி’க்களை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் அனுப்ரியா ஆனந்த். இவர் இணையத்திலும் சமையல்கலையில் அசத்தி வருபவர். நூடுல்ஸ் சூப் தேவையானவை: நூடுல்ஸ் - கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் - தலா ஒன்று, சோள…
-
- 2 replies
- 4.1k views
-
-
கேக் `Schwarzwalder Kirschtorte’ என்று சொன்னால் சத்தியமாக யாருக்கும் புரியாது. `Black Forest Cake’ என்றால் போதும்... நாக்கில் எச்சில் ஊறும். எல்லோருக்கும் விருப்பமான இந்த கேக் அழகியின் வரலாறு என்ன? அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக கேக்கின் வரலாற்றில் இருந்தே ஆரம்பிக்கலாம். கேக் சரித்திரம் உலகின் ஆதி கேக்குக்கும் இன்று நாம் சுவைத்துக்கொண்டிருக்கும் கேக் வகைகளுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் கிடையாது. பண்டைய எகிப்தியர்கள் மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சுட்டுச் சாப்பிட்டதில் ரொட்டி பிறந்தது. அவர்களே கேக்கையும் உருவாக்கியிருக்க வேண்டும். சுவை இல்லாத ரொட்டியைச் சாப்பிட்டுச்சாப்பிட்டு அவர்களுக்கு அலுப்புதட்டியபொழுதில், மாவில் சுவை கூட்டக் கூடுதலாக என்ன சே…
-
- 0 replies
- 4k views
-
-
குறைந்தவிலையில் தசை ஏறுவதற்கான உணவுபாணம். 1 வாழைப்பழம், 1 முட்டை, 1 கப் முளை விட்ட கொண்டல், 500மில் கின்னஸ் அல்லது சுப்பர் மோல்ட். இவையனைத்தயும் மிக்ஸியில் நன்றாக அடித்து மூக்கை பொத்திக்கொண்டு காலையில் குடிக்கவும். ஒரு மாதத்தில் பெரிய வித்தியாசம் தெரியும். குறிப்பு... கண்டபாட்டுக்கு தசை வைக்கும்... இரவில் சோற்றை சுத்தமாக் தவிர்க்கவும் (நைட் வேலை எண்டா ஓகே!) வயிற்றுக்கான கடின எஸ்ஸர்ஸைஸ் மிக முக்கியம். (செய்யாவிட்டால் ஸிக்ஸ் பக்ஸுக்கு பதிலா ஸிங்கில் அப்ரைட் பக் வரும் பாத்து............... ) (முளை விட்ட கொண்டல்) ----- ஓர்கானிக் கொண்டலை இரண்டு நாள் ஊறவைத்தால் முளைவிடும். குட்லக்குங்கோ!
-
- 15 replies
- 4k views
-
-
"சிவப்பு வெங்காய சலாட்" செய்வது எப்படி யாருக்காவது தெரியுமா? சில இடங்களில்... ஓரிரு முறை சாப்பிட்டுள்ளேன். மிக அருமையான சுவையாக இருந்தது. இப்போ... இங்கு.... சிவப்பு வெங்காயம், அறுவடை செய்யும் காலம் என்பதால்.... கடையெல்லாம்.... சிவப்பு வெங்காயம் அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளது. அதனைப் பார்த்து... ஆசையுடன்... 500 கிராம் வெங்காயம் வாங்கி வந்து விட்டேன். ஆனால்... அதனை, எப்படி செய்வது என்று தெரியவில்லை. அந்த வெங்காயம்.... வாடி, வதங்க முன்னம்... ஆராவது அதன் செய்முறையை... தாருங்களேன்.
-
- 20 replies
- 4k views
-
-
பற்றிஸ் கறி செய்யத் தேவையான பொருட்கள். 1. எலும்பில்லாத மட்டன் – ¼ கிலோ 2. வெங்காயம் – 1 3. மிளகாயத் தூள் – 1 ரீ ஸ்பூன் 4. தனியாத் தூள் – ½ ரீ ஸ்பூன் 5. சீரகத்தூள் – ½ ரீ ஸ்பூன் 6. மஞ்சள் தூள் – சிறிதளவு 7. மட்டன் மசாலா – 1 ரீ ஸ்பூன் 8. இஞ்சி உள்ளி பேஸ்ட் 2 ரீ ஸ்பூன் 9. உப்பு தேவையானளவு 10. கறிவேற்பிலை – சிறிதளவு 11. எலுமிச்சைச் சாறு – சில துளிகள் 12. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்யும் முறை இறைச்சியை அரைத்து எடுத்து அதனுடன் உப்பு, தனியாத் தூள், மிளகாய்த்தூள், மட்டன் மசாலாத் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி உள்ளி பேஸ்ட் பிரட்டி, 15 நிமிடம் ஊறவிடுங்கள். பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, கறிவேற்பிலை போட்டு, இறைச்…
-
- 2 replies
- 4k views
-
-
குளுக்கோறச தேவயான பொருட்கள் சீனி : 1/4 கி. கிராம் ஜெலற்றீன் : 3 மே.கரண்டி / 20 கிராம் தேசிப்புளி: 3 மே. கரண்டி கொதிநீர் : 6 மே. கரண்டி தண்ணீர் : 10 மே. கரண்டி / 1/2 தம்ளர் கலரிங்: 1 தே. கரண்டி விரும்பியது கேசரி கலரும் பயன்படுத்தலாம் பெரிய சீனி : 4 மே. கரண்டி மாஜரின் : 1 தே. கரண்டி செய்முறை -ஜெலற்றீனைத் தம்ளரில் எடுத்து அதனுள் 6 மே.கரண்டி நன்கு கொத்தித்த நீரை விட்டு இத்தம்ளரைப் பிறிதொரு கொதி நீருள்ள பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்துக்கொண்டு ஜெலற்றீன் முற்றாக கரையும் வரை நன்கு கரைத்து அப்படியே கொதிநீருள்ள பாத்திரத்தினுள்ளேயே வைத்துக் கொள்க. - தாச்சியில் சீனியைப்போட்டு, 10 மே.கரண்டி தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சுக. …
-
- 14 replies
- 4k views
-