நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
மட்டன் நவாபி : செய்முறைகளுடன்...! A......... இறைச்சி - 1 கிலோ பப்பாளி பேஸ்ட் - 3 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி வெங்காயம் – 1 பொடிதாக நறுக்கிக்கொள்ளவும் உப்பு - தேவையான அளவு இவை அனைத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து பின் 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். B......... வெங்காயம் – 4 பொடிதாக நறுக்கவும் தக்காளி - 2 பொடிதாக நறுக்கவும் இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி மல்லி தூள் – 1 மேசைக்கரண்டி மிளகாய்தூள் – 1 மேசைக்கரண்டி சீரகத்தூள் – 1/2 மேசைக்கரண்டி மஞ்சத்தூள் – 1 தேக்கரண்டி …
-
- 11 replies
- 1.3k views
-
-
-
பீர்க்கங்காய் கொத்சு Posted By: ShanthiniPosted date: December 15, 2015in: அறுசுவை தேவையானவை பீர்க்கங்காய் – அரை கிலோ புளி – நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் – 3 சின்ன வெங்காயம் – 10 கடுகு – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் – அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள்,…
-
- 11 replies
- 2.9k views
-
-
சமையலில், திறமைசாலிகள் பெண்கள் தான் என்று தானே எண்ணுகிறீர்கள்; அது உண்மையல்ல... ஆண்கள் தான் தான் "சூப்பர் குக்!' சமீபத்தில் , பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சர்வேயில் கூறியிருப்பதாவது: சமையல் அறைக்கு சொந்தக்காரர்கள் பெண்கள் தான் என்று, ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது, பல நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேக் கள் உறுதி செய்துள்ளன. எந்த ஒரு உணவையும் சுவையாக சமைப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள் தான்; பெண்கள் அல்ல. அதற்காக, பெண்களை, ஆண்கள் மட்டம் தட்டுவதில்லை.சமையல் மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்திலும், தனக்கு சமமான அந்தஸ்த்தை மனைவிக்கு தருகிறனர் கணவர்கள். அதனால் தான் , ஷாப்பிங் போகும் போதும்,பொறுமையாக மனைவியின் பின்னால் காத்திருக்கின…
-
- 11 replies
- 3.1k views
-
-
இது வரைக்கும் நீக்க பல்வேறு வைகையான ஐஸ் கிரீம் சாப்பிடு இருப்பீங்க, ஆனா யாழ்ப்பாணத்தில மாவிட்டபுறம் கோயிலுக்கு பக்கத்தில ஒரு சின்ன கடையில மண் சட்டில நல்ல ருசியான ஐஸ்கிரீம் விக்கிறாங்க, நான் இதுவரைக்கும் இப்பிடி ஐஸ்கிரீம் குடிச்சதில்லை அதனால என் அனுபவங்களை ஒரு சின்ன காணொளியா எடுத்து இருக்கன் பாருங்க, வேற எங்காச்சும் இப்பிடி மண் சட்டிக்குள வச்சு ஐஸ்கிரீம் குடுக்கிற கண்டு இருக்கீங்களோ, அப்பிடி என்க கண்டீங்க வேண்டும் சொல்லுங்க. அதோட இந்த கடையில வித்தியாசமான சுவைகளுள குல்வி ஐஸ் கிரீமும் இருக்கு,
-
- 11 replies
- 1.2k views
-
-
கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? இதுவரை கருவாட்டு குழம்பு தான் செய்து சுவைத்திருக்கிறீர்களா? கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு செய்யத் தெரியுமா? தேவையான பொருட்கள்: கருவாடு - 10 துண்டுகள் பூண்டு - 6 பற்கள் (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி தனியாக வைத்துக…
-
- 11 replies
- 4.4k views
-
-
இது நான் வாசித்த ஒரு சமையல். விரியும் சிறகுகள் என்ற இணையத்தில் வி.ஜெ. சந்திரன் (canada)அவர்கள் படத்துடன் தந்த செய்முறை.நன்றி சந்திரன் நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள். சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல் தேவையான பொருட்கள் ஒன்று/ இரண்டு பேருக்கு 4 - மேசைக்கரண்டி தயிர் 1 - பெரிய கத்தரிக்காய் * சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும். * வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன். நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய …
-
- 11 replies
- 7.1k views
-
-
வரகு போண்டா வாய்க்கு ருசியைத் தரும் வரகில், வற்றாத சத்துகள் உள்ளன. வரகின் தோலில் ஏழு அடுக்குகள் உள்ளன. கிராமங்களில் உரலில் போட்டு, வெகு நேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது. பலன்கள் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சீக்கிரத்தில் செரிக்கக்கூடியது. அரிசிக்குப் பதிலாக வரகில் இட்லி, தோசை செய்யலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். வரகு போண்டா 300 கிராம் வரகு அரிசி மாவு, 200 கிராம் கடலை மாவு, 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூ…
-
- 11 replies
- 2.7k views
-
-
நேற்று சனவரி முதலாம் திகதி வழக்கம் போன்று சமைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து வீட்டில் சாப்பிடுவம் என்று நினைத்து சமைத்து ருசித்த உணவு இது. Singapore Chilly crab curry என்பது உலகப் பிரசித்தமான ஒரு நண்டுக் கறி. சிங்கபூர் செல்லும் அசைவ பிரியர்கள் தவறாமல் உண்ணும் உணவு இது. அதைச் செய்யும் முறையை கூகிளின் உதவியுடன் பின் வரும் இணையத்தளத்தில் பார்த்து விட்டு அதில் உள்ளது போன்றே செய்யாமல் சின்ன சின்ன வித்தியாசங்களுடன் செய்து பார்த்தது. http://www.sbs.com.au/food/recipes/singapore-chilli-crab?cid=trending தேவையானவை: நண்டுகள்: 04 (நண்டுக் கறிக்கு நண்டு போடாமல் செய்ய முடியாது) பெரிய வெங்காயம்: 02 செத்த மிளகாய்: 15 (உறைப்பு கூடவாக இருக்க நான் 15 போட்டேன்) எண்ணெய்:…
-
- 11 replies
- 3.6k views
-
-
காடை முட்டை குழம்பு கோழி முட்டையை விட காடை முட்டை மிகவும் ஆரோக்கியமானது என்பது தெரியுமா? ஆம், இதுவரை நீங்கள் காடை முட்டையை பச்சையாக குடித்திருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு குழம்பு செய்து சுவைத்ததுண்டா? இங்கு அந்த காடை முட்டையைக் கொண்டு குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: காடை முட்டை - 20 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 2 (அரைத்தது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் …
-
- 11 replies
- 4.4k views
-
-
https://youtu.be/hO_PBuf7iCs video வை திரும்பவும் என்னால் இணைக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
-
- 11 replies
- 1.4k views
-
-
-
- 11 replies
- 1.2k views
-
-
குஞ்சு மீன் சொதி. சொதி என்றால்... எல்லோருக்கும் பிடித்தது. இதனை... எந்த உணவுடனும், கலந்து சாப்பிடலாம் என்பது, இதன் சிறப்பு. அதிலும் குஞ்சு மீனில் வைக்கும் சொதியின், ருசியே... வாயில் நீரூற வைக்கும். சரி.... குஞ்சு மீன் சொதியை, எப்படி வைப்பது என்று பார்ப்போமா. தேவையானவை: 500 கிராம் சிறிய மீன்.(Anchovi என்ற மீன், தமிழ்க் கடைகளில் வாங்கலாம்) (இதில் முள்ளை சுலபமாக அகற்றலாம்.) 2 வெங்காயம். 7 பச்சை மிளகாய். 1 கப் தேங்காய்ப்பால் அல்லது 2 கப் பசுப்பால். 3 கப் தண்ணீர். 1 தேக்கரண்டி மஞ்சள். 4 நெட்டு கருவேப்பிலை. உப்பு தேவையான அளவு. தாளிக்க: கடுகு, சீரகம், வெந்தயம், மூன்று செத்தல் மிளகாய், எண்ணை. செய்முறை: வெங்காயத்தை தோலுரித்து... கழுவி, நீளப் பாட்டாக, மெல்லி…
-
- 11 replies
- 1.7k views
-
-
தேவையான பொருட்கள் எள் 1/4 கிலோகிராம் சீனி 1/4 கிலோகிராம் மாஜரின் 2 தே.க அப்ப சோடா 2 சிட்டிகை செய்முறை: 1. எள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். 2. எள் ஆறி கொண்டிருக்கும் வேளையில் ஒரு தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்ள வேண்டும். [தட்டில் கொட்டி வெட்டுவதாக இருந்தால்.] 3. அடுத்து ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுக்க ஆரம்பியுங்கள். 4. சிறிது நேரத்தில் சீனி முழுவதும் இளகி பாகாக வரும். அப்போது அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 5. பின்பு சீனி பாகில் எள்ளை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். சீனி பாகு சமனாக போட்ட எள்ளில் இருக்க வேண்டும். 6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி,…
-
- 11 replies
- 5.6k views
-
-
சுவையான முட்டை கொத்து பரோட்டா செய்ய...! தேவையான பொருட்கள்: பரோட்டா - 2 முட்டை - 1 வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 உப்பு - தேவைக்கு எண்ணெய் - 4 ஸ்பூன் கெட்டிச்சால்னா - 1 1/2 குழிக்கரண்டி பூண்டு - 8 பல் கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத…
-
- 11 replies
- 2.8k views
-
-
முட்டை பொரியல் செய்வது எப்படி ? முட்டை - 2 அல்லது 1 சிறிய வெங்காயம் - 50 கிராம் நைசாக நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நைசாக நறுக்கியது சாம்பார் மசாலா - 1 டீஷ்பூன் உப்பு - தேவையான அளவு மேற்கண்டவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கிண்டவும். வானலியில் எண்ணை சேர்த்து இந்த கலவையும் சேர்த்து கிளரிகொண்டே இருக்கவும். ஒரு அருமயான வாசம் வரும் அப்போது இறக்கி விடவும். எண்ணை கொஞ்சம் கூட சேர்த்தால் சுவையோ சுவைதான். :P
-
- 11 replies
- 5.3k views
-
-
corn flakesஇல் வடை செய்யும் முறை http://www.youtube.com/watch?v=5pD7MtRStgU
-
- 11 replies
- 1.9k views
-
-
பனீர் பட்டர் மசாலா தேவையான பொருட்கள்: பனீர் - கால் கிலோ பச்சை பட்டாணி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி - 2 விழுது பூண்டு - 2 விழுது சீரகம் - அரை தேக்கரண்டி மல்லித்தழை - கால் கட்டு வெண்ணெய் - 100 கிராம் எண்ணெய் - ஒரு குழி கரண்டி மல்லி தூள் - 3 தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி முந்திரி - 100 கிராம் உப்பு தேவையான அளவு செய்முறை: முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட வேண்டும். அது வெடித்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதங்கியதும் தக்காளி போட்டு வதக்க வேண்டும…
-
- 11 replies
- 5.3k views
-
-
குரக்கன் புட்டு. வேட்டை இறைச்சி . தாளிச்ச பருப்பு.. எழுபதுக்கள் வரைக்கும் முல்லை, வன்னிக்காடுகளில் வேட்டைக்கு போய்வந்து சோமபாண பார்ட்டி வைத்து சுட்ட இறைச்சியை சமைத்து சாப்பிடும் பழக்கம் எமது முதலியார் குடும்பத்தில் உண்டு. கனகாலமா இதை சமைத்துபார்த்துவிடவேண்டும் எண்டு இருந்து நேற்று சமைச்சு பார்த்தாச்சு.. இது எனது அப்பரின்ட சமையல் முறை.. சமைத்த முறையை இங்கு பகிர்கிறேன் ( செய்முறைமட்டும்! ).. குரக்கன்புட்டு. அரக்கரைவாசி குரக்கனும்கோதுமையும் கலந்து வறுத்து விட்டு சுடுதண்ணியும் உப்பும் கலந்து பினஞ்சு தேங்காய்ப்பூவூம் போட்டு வழக்கம்போல் புட்டு அவித்து கொள்ளவும்.. வேட்டை இறைச்சி.. நான் தேர்வு செய்த்தது காட்டுப்பண்டி வயிரு.. இறைச்சியை ஒரு…
-
- 11 replies
- 2.3k views
-
-
புதினா வடை தேவையானப்பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் புதினா (பொடியாக நறுக்கியது) - 1/2 கப் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: உளுத்தம் பருப்பை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவில், மிளகு, சீரகப் பொடி, நறுக்கியப் புதினா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசையவும். எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி காய வைக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை வடையாகத் தட்டி நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு பொன்னிறம…
-
- 11 replies
- 2k views
-
-
https://youtu.be/3NOH_eEYjhc
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
தேவையான பொருட்கள் சுத்தப்படுத்திய நண்டு - 500 கிராம் வெட்டிய வெங்காயம் - 100 கிராம் வெட்டிய பச்சைமிளகாய் - 25 கிராம் கருவேப்பிலை - தேவையான அளவு சிறிதாக வெட்டிய உள்ளி - தேவையான அளவு வெந்தயம் - தேவையான அளவு தேங்காய்ப் பால் - தேவையான அளவு பழப்புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை 1. தாச்சியை சூடாக்கி அதில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் சிறிதாக வெட்டிய உள்ளி, வெட்டிய வெங்காயம், வெட்டிய பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். 2. தாளிதம் பொன்னிறமாக வரும்போது அதில் சுத்தப்படுத்திய நண்டை சேர்த்து வதங்க விடுங்கள். 3. பின்னர்தேங்காய…
-
- 11 replies
- 3k views
-
-
செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது. தேவையான பொருட்கள் அரிசி – 1 /2 கிலோ சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ கொத்தமல்லி – 1 /2 கட்டு புதினா – 1 கட்டு பச்சை மிளகாய் – 4 வெங்காயம் – 250 கிராம் தக்காளி – 250 கிராம் இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம் தயிர் – 1 /2 ஆழாக்கு எண்ணெய் – 1 குழிக்கரண்டி ஏலக்காய் – 2 கடற்பாசி – 1 /2 தேக்கரண்டி பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2 மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி தனியாத்தூள் – 4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல…
-
- 11 replies
- 7.2k views
-
-
புடலங்பழ பிரட்டல் வீட்டில் இந்த முறைதான் புடலங்காய் கன்று நட்டனான். விதை எடுப்பதற்காக ஒரு புடலங்காயை முற்றவிட, அது இன்று பழமாகியிருந்து. விதையை எடுத்தபின் மிகுதியை எறிய மனமில்லை, என்ன செய்யலாமென்று யோசித்துவிட்டு, தாழித்து பிரட்டல் ஆக்கி இப்பதான் சாப்பிட்டேன், சுவை பரவாயில்லை. என் கேள்வி - நீங்கள் யாராவது புடலங்பழத்தில் கறி வைத்திருக்கின்றீர்களா, அப்படியாயின் செய்முறையை தரமுடியுமா? இன்னும் ஒன்று விட்டுள்ளேன், அடுத்த கிழமை பழுத்துவிடும். இதுமாதிரிதான் என் வீட்டுத்தோட்ட கன்று
-
- 11 replies
- 1.8k views
-
-
இங்கு ஓரு சுவையான சிக்கன் கொத்து ரொட்டி எப்படி சுவையாக வீட்டில் செய்யலாம் என்று காட்டி இருக்கிறேன் .செய்து பாருனகல் கருத்துக்களை சொல்லுங்கள் ....தாமரை
-
- 11 replies
- 1.7k views
-