நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வீடுகளில் வாழை பழம் வாங்கி அதிகம் பழுத்து, சாப்பிட முடியாது போய்விட்டால் அப்படியான வாழை பழங்களை பயன்படுத்த இலகுவான வாழை பழ கேக் செய்முறை தேவையான பொருட்கள் 1 . நன்கு பழுத்த பெரிய வாழை பழங்கள் - 2 2 . சாதாரண கோதுமை மா - 2 கப் (500 ml) 3 . சீனி - 1 கப் ( 250 ml அளவு கரண்டி) 4 . பட்டர் அல்லது மாஜரீன் அல்லது கனோலா எண்ணெய் . -1 /3 கப் ( 80 ml) 5 . தயிர் (3 % கொழுப்பு yogurt ) - 1 /3 கப் ( 80 ml) 6 . முட்டை - 2 7 . உப்பு -1 /2 தே. கரண்டி 8 . பேக்கிங் பவுடர்…
-
- 13 replies
- 6.1k views
-
-
மஸ்ரூம் ரெசிபி மதியம் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று சற்று வித்தியாசமாக காளானை தவாவில் செய்து சுவையுங்கள். இது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் (நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் உலர்ந்த வெந்தய கீரை - 1/2 டீஸ்…
-
- 0 replies
- 534 views
-
-
பழைய சாதமும் பழைய மீன் குழம்பும் சாப்பிடுற சுகம் வேறு எதற்கு வரும் என்ற வரிகள் அடிக்கடி என் காதில் விழும். அட அப்படி அதில் என்ன தான் இருக்கு என முயற்சித்து பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது, சுவையோ சுவைதான் போங்க. (இருக்காத பின்ன, மீனை வெட்டி,சுத்தம் பண்ணுறது நாங்க தானே என வீட்டில் மாமா முணுமுணுப்பதையெல்லாம் சொல்லிட்டா இருக்க முடியும்) என்னுடைய நெடுநாள் வலைப்பூ நண்பர் தீபக் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். சமையலில் என் ஆர்வம் பார்த்து, கேரள சமையல் குறிப்புகள் பலவற்றை தந்துள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை முயற்சித்து பார்த்து வருகின்றேன். (இந்த மாதம், கேரளா உணவு மாதம்) அதில் முதல் முயற்சி தான் இந்த கேரள மீன் குழம்பு. எங்களுடைய மீன் குழம்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது, சுவை கொ…
-
- 28 replies
- 8.8k views
-
-
இலங்கையின் பாரம்பரிய மீன்கறி சமைக்கும் முறை What we need: 1. மீன் துண்டுகள் - Sail fish (thalapath)/ Halibut/ Tuna (1lb) curry size pieces 2. கொறுக்காய்- Gambooge (Goraka) 5 pieces (50g) 3. மிளகு- Black pepper (1/2 table spoons)4. கறித்தூள் - Curry powder (3 table spoons)5. மஞ்சள் தூள்- Turmeric (optional) (1 tea spoon)6. உள்ளி- 5 Garlic cloves7. இஞ்சி- Small piece of ginger8. கறுவாப்பட்டை - 1 inch cinnamon stick9. வெந்தயம் Fenugreek 1 tea spoon 10. கறிவேப்பிலை- Curry leaves11. பண்டான் அல்லது றம்பை இலை-A small piece of pandan leaf12. உப்பு- 2 Tsp. Salt12. பச்சை…
-
- 5 replies
- 1.6k views
-
-
சுவையான முறுக்கு... செய் முறை: 2 சுண்டு அவித்த ஆட்டா மா/ வெள்ளை மா 1 சுண்டு கடலை மா சிறு துண்டு இஞ்சி 1 உள்ளிப் பல்லு சிறிதளவு நச்சீரகம் சிறிதளவு வெள்ளை எள்ளு சிறிதளவு உப்பு. துருவலான செத்தல் மிளகாய்த் தூள் சிறிதளவு முதலில் இஞ்சியையும் உள்ளிப் பல்லையும் நன்றாக நசியும் வரை இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுள் ஒரு கப் கொதி நீரை ஊற்றி 5 - 10 நிமிடம் வரை விடவும். பின்னர் 5 - 10 நிமிடத்துக்குள் அந்த தண்ணீர் ஆறி விட்டிருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு மாவையும் போட்டு அதனுடன் நச்சீரகம், தேவையான அளவு உப்பு, வெள்ளை எள்ளு, துருவலான செத்தல் மிளகாய்த் தூள் அனைத்தையும் போட்டு இஞ்சி, உள்ளி போட்டு வைத்திருந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை மாத்…
-
- 4 replies
- 8k views
-
-
-
- 2 replies
- 725 views
-
-
. கருவாட்டுக் குழம்பு. தேவையான பொருட்கள்: சதையுள்ள கருவாடு 700 கிராம், கத்தரிக்காய் 300 கிராம், பச்சை மிளகாய் 6, வெங்காயம் 2, கடுகு 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, மிளகாய்த் தூள் 2 - 3 மேசைக்கரண்டி, தாழிக்க எண்ணை, பழப்புளி கொஞ்சம், விரும்பினால் தக்காளிப் பழம் போடலாம். செய்முறை: கருவாட்டை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு சுடு தண்ணீர் ஊற்றி, ஒரு மணித்தியாலம் ஊற விடவும். பின் அதன் தோலை நீக்கி வடிவாக இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவினால் அதில் உள்ள உப்பு போய் விடும். கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும். இனி.... நீளமாக அரிந்த வெங்காயத்தை பாத்திரத்தில்…
-
- 58 replies
- 12.5k views
-
-
http://www.keetru.com/recipes/index.html பார்க்கவும். உடுப்பி ஹோட்டல் உணவுகள் கத்தரிக்காய் துவையல் தேங்காய் துவையல் புளித் துவையல் வத்தக்குழம்பு தேங்காய் அப்பம் பனீர் வாழைக்காய் கட்லெட் அடை வெண்டைக்காய் வறுவல் காலிஃப்ளவர் குருமா உருளைக்கிழங்கு குழம்பு புடலங்காய்ப் பொரியல் முட்டைகோசுப் பொரியல் உருளைக்கிழங்கு பொரியல் இனிப்பு கோதுமை அடை எள்ளுருண்டை உருளைக்கிழங்கு குருமா பனீர் பட்டர் மசாலா போண்டா ரவா இட்லி பானி பூரி பேல் பூரி இடியாப்பம் உப்புமா ஆப்பம் ரவா தோசை தோசை கேசரி மசால் வடை மெதுவடை கீரை வடை ஆமை வடை பூண்ட…
-
- 6 replies
- 6.8k views
-
-
தண்ணீரில் முதலை இருந்தால் அதன் கால்கள் தண்ணீருக்குள்தான் இருக்கும். ஆனால் சூப்புக்குள் இருக்கும் போது முதலையின் கால் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றது. சூப்புக்குள் முதலை எப்படி வந்தது என்று பார்க்கிறீர்களா? தைவானில் அது சாத்தியமாயிற்று. மூங்கில் தளிர், பன்றி இறைச்சி, பேபி சோளம், கரட், காடை முட்டை, கறுப்புக் காளான், எலிமிச்சை எல்லாவற்றுடனும் முதலைக்காலும் சேர்த்துத் தரப்படும் ஒரு சூப் தைவானில் இப்பொழுது கிடைக்கிறது. அருவருப்பாக இருக்கிறதா? அப்படி ஒன்றும் இல்லை. வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் உணவாக அது இருக்கிறது என இந்தச் சூப்பை தயாரிக்கும் விடுதி உரிமையாளர் சொல்கிறார். “முதலை இறைச்சி கொஞ்சம் இறப்பர் தன்மை உடையது ஆனால் கோழி இறைச்சியை விட மென்மையானது.…
-
- 6 replies
- 1k views
-
-
-
- 11 replies
- 1.6k views
-
-
தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் 250கிராம் சோயா 100கிராம் க்ரட் 1 பெரியது பீன்ஸ் 100கிராம் கோவா/முட்டைக்கோஸ் 100கிராம் லீக்ஸ் 100கிராம் வெங்காயம் 1 அரைத்த பூண்டு விழுது 1/2 மேசைக்கரண்டி அரைத்த காய்ந்தமிளகாய் / செத்தல் தூள் - 1/2 மேசைக்கரண்டி மிளகாய் தூள் 1/2 மேசைக்கரண்டி உப்பு தேவையான அளவு எண்ணெய் சிறிதளவு செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். நீர் கொதித்து வரும் போது நூடுல்ஸ், சிறிதளவு உப்பு மற்றும் 1/2 மேசைக்கரண்டி எண்ணெயை போடுங்கள். நூடுல்ஸ் வெந்ததும், கொதி நீரை வடித்து, பின்னர் மீண்டும் சாதாரண நீர் சேர்த்து மறுபடியும் நீரை வடித்து எடுங்கள். (இப்படி செய்தால் நூடுல்ஸ் குளையாமல் வரும்) 2. தேவையான பொ…
-
- 18 replies
- 4.5k views
-
-
சங்கரா மீன் குழம்பு சங்காரா மீன் செந்நிறமுடையது. இந்த மீன் குழம்பின் சுவை நாவில் நீர் ஊறச் செய்யும். எளிதில் செய்யலாம். தேவையான பொருட்கள் சங்கரா மீன் – 5 கனிந்த தக்காளி சிறியது – 3 புளி - சிறிய எலுமிச்சை அளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் சின்ன வெங்காயம் – 100 கிராம் மிளகாய்த்தூள் - 3 டீ ஸ்பூன் மல்லித்தூள் – 2 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் நல்லெண்எண்ணெய் – 4 டீ ஸ்பூன் கடுகு - 1/2 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டீ ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன் பெருங்காயம் – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை சங்கரா மீனில் உள்ள செதில்களை உப்பு, கோதுமை …
-
- 4 replies
- 4.1k views
-
-
குழம்பு வகைகள் மணத்தக்காளி வற்றல் குழம்பு தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
தேங்காய் சாப்பாடு & ஆட்டு தலை கறி குழம்பு இந்த இரண்டுக்கும் உள்ள காம்பினேஷனை வெறும் வார்த்தையில் சொன்னா புரியாது. சமைத்து விட்டு உங்கள் வீட்டில் ஒரு ஃப்புல் கட்டு கட்டிவிட்டு பின்னர் கமன்ட் போடுங்கள். தேவையான பொருட்கள் : அரிசி - 1 கப் தேங்காய் (துருவியது) - 1/2 கப் தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன் கடுகு - 1/2 ஸ்பூன் கடலை பருப்பு - 1 ஸ்பூன் உளுந்த பருப்பு - 1 ஸ்பூன் பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்க்கும் குறைவாக பச்சை மிளகாய் - 2 மிளகாய் - 3 கருவேப்பிலை - 6 முந்திரி பருப்பு - 6 உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.அரிசியை மூணு முறை நல்லா கழுவிக்குங்க , ஒரு கப் அருசிக்கு 2 கப் தண்ணீர்க்கு மேல் ஊத…
-
- 5 replies
- 2.3k views
-
-
குமுட்டில் அல்லது குமிட்டில் கீரை என்பது பொதுவாக பயிர்செய்கை மூலம் பெறப்படுவதில்லை. மாரி காலத்தில் வெற்று காணிகளில் தானே விதை பரப்பி முளைத்து வரும். காணிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்து நிற்கும் கீரை செடிகளை தேடி தேடி பிடுங்க வேண்டும். விதைகளை சேர்த்து சேமித்து வைத்து பயிரிட்டால் மற்றைய கீரை போல் பயன் பெறலாம் என நினைக்கிறன். ஆனால் பெரிதாக விவசாயிகள் முயற்சிப்பதில்லை. எனக்கு கீரை சம்பல் வகைகள் என்றால் நல்ல விருப்பம். குமிட்டில் கீரையை இரண்டு முறைகளில் சமைக்கலாம். 1. பாரம்பரிய முறைப்படி அகப்பை மூலம் மசிப்பது 2. நவீன முறையில், கிரைண்டரில் போட்டு அரைப்பது. தேவையான் பொருட்கள் 1. குமிட்டில் கிரை பிடி --- …
-
- 15 replies
- 5.3k views
-
-
காலிப்பிளவர் சூப் செய்ய...! தேவையான பொருட்கள்: காலிப்பிளவர் - 1 பாசிப்பருப்பு - 200 கிராம் வெங்காயம் - 250 கிராம் தக்காளி - 250 கிராம் பச்சை மிளகாய் - 10 சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன் மஞ்சத்தூள் - 1/4 ஸ்பூன் சீரகம் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவைக்கு …
-
- 0 replies
- 729 views
-
-
தேவையானவை: போன்லெஸ் சிக்கன் - 200 கிராம் எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பூண்டு - ஒன்றரை டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன் (இடித்தும் சேர்க்கலாம்) நீளமாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம் கேரட் - 1 (ம…
-
- 0 replies
- 697 views
-
-
அன்னாசிப்பழ பானகம் தேவையானப்பொருட்கள்: அன்னாசிப்பழம் - பாதி இஞ்சி - ஒரு சிறு துண்டு புதினா - சிறிது பச்சை கொத்துமல்லி - சிறிது வெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை: அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இரண்டு, மூன்று துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியை மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, புதினா, கொத்துமல்லி, வெல்லம், சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தெடுக்கவும். அதை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்றாக வடிகட்டவும். பின்னர் அதில் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். எடுத்து வைத்திருக்கும் அன்னாசிப…
-
- 0 replies
- 951 views
-
-
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை முடித்த பின்னரோ, நடுநடுவே சிறு இடைவேளையின்போது அல்லது இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்னரோ என உலகின் பெரும்பாலானோருக்கு எப்போதும் பிடிக்கும் ஒரு பானமாக காபி உள்ளது. சர்வதேச காபி கழகத்தின் கணக்கீட்டின்படி, கடந்த 1991ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 90 மில்லியன் 60 கிலோ காபி பைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக இந்தாண்டின் காபி பயன்பாடு 160 மில்லியன் பைகளை தாண்டுமென்றும் தெரிகிறது. நேற்று (திங்கட்கிழமை) உலக காபி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், காபியை பற்றி உங்களுக்கு தெரியாத 10 ஆச்சர்யமளிக்கும் தகவல்களை தெரிந்துகொள்வோம். 1. காபியும் ஒரு பழம்தான்! பழுப்பு நிறத்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
செய்ய தேவையான பொருட்கள்; 1)அவித்த கோதுமை மா[அரிசி மா விரும்புவர்கள் அரிசி மா சேர்க்கலாம்] நான் வெள்ளை மாவில் தான் செய்யுறனான் அப்பத் தான் சுவை அதிகமாய் இருக்கும் 2)தண்ணீர் 3)ஸ்பினாச் கீரை[லண்டனில் கழுவி பைக்கற்றினுள் இருக்கும்] இந்த கீரை தான் சுவையாக இருக்கும் என்பது என் கருத்து. 4)சின்ன வெங்காயம் அல்லது காரமான சிவப்பு வெங்காயம் 5)பச்சைமிளகாய் செய்முறை; வெங்காயம்,ப.மிளகாய்,கீரை ஆகியவற்றை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். புட்டுக்கு மாவை குழைக்கவும்[தண்ணீர் அளவாக விட்டுக் குழைக்கவும் தண்ணீர் கூடினால் களியாகப் போய் விடும் ஏனென்டால் கீரையிலும் தண்ணீர் உண்டு] புட்டு மா பதமாக குழைத்த பின் வெங்காயம்,ப.மிளகாய்,கீரை போன்றவற்றை போட்டு குழைக்…
-
- 44 replies
- 11.8k views
-
-
வனிலா ஐஸ்கிறீம் தேவையானப் பொருட்கள் கட்டிப்பால் - 1/4 கப் பால்மா - 1/2 கப் தண்ணீர் - 3/4 கப் வனிலா எஸன்ஸ் - 1/4 தேக்கரண்டி செய்முறை கட்டிப்பாலினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைக்கவும். பால்மாவை மீதி 1/2 கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும். இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் 1/2 மணித்தியாலம் வைத்து எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து பீட்டரால் அல்லது கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும். பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். அடிக்க வேண்டாம். பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் 1 - 11/2 மணித்தியாலங்கள் வைத்து எடுக…
-
- 5 replies
- 4.4k views
-
-
பலாக்கொட்டை பூண்டு மசாலா தேவையானவை: பலாக்கொட்டை - 10 - 15 வெள்ளை பூண்டு - ஒன்று சின்ன வெங்காயம் - 10 சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி தக்காளி - ஒன்று தாளிக்க: எண்ணெய் - 3 தேக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு மிளகாய் வற்றல் - ஒன்று கறிவேப்பிலை - சிறிது செய்முறை: 1.சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். 2.பலாக்கொட்டையை தோல் நீக்கி நறுக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும். 3.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அதில் மிளகாய் வற்றல் சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். 4.வெங்காயம் வதங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
பன்னீர் கிரேவி குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. அதிலும் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்திக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்: பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது) குடைமிளகாய் - 1 கப் (நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) …
-
- 0 replies
- 1.2k views
-
-
கொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல்(வறை) தேவையானப் பொருள்கள்: வெள்ளைக் கொண்டைக்கடலை_1/2 கப் புரோக்கலி_1 சின்ன வெங்காயம்_2 பூண்டு_2 பற்கள் மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்து சீரகம் பெருஞ்சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை செய்முறை: கடலையை முதல் நாளிரவே ஊற வை.அடுத்த நாள் கழுவிவிட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்து விடவும் புரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும் வெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்ற…
-
- 23 replies
- 3k views
-
-
தேவையான பொருட்கள் 10 லீற்றர் தண்ணீர் 6 சித்திரோன்(மஞ்சள் எலுமிச்சை) 6 லெமன் ( பச்சை எலுமிச்சை) 6 ஒறேன்ஞ்( சாத்துக்குடி/ஒறேன்ஞ் தோடம்பழம்) சிறிதளவு மின்ஸ் இலை 10 லீற்றர் தண்ணீருக்கு தேள்வையான அளவு தேயிலை தூள். 500 g சீனி/சர்கரை. செய்முறை முதலில் சித்திரோன்,லெமன்,ஒறேன்ஞ் மூண்றினது தோலையும் சீவி, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்று கசக்கவும். இத்தோடு மின்ஸ் இலையையும் துண்டாக நறுக்கி கசக்கவும். தண்ணீரை அடுப்பில் வைத்து நன்று கொதிக்கவைக்கவும், கொதித்தவுடன் தேயிலை தூளை போட்டு, சீனியுடன் கலக்கவும், சாயம் இறங்கியபின்னர் வடித்து, பழங்களை கசக்கிவைத்த பத்தித்திரத்துக்குள் கொதிக்க கொதிக்க ஊற்றவும், சிறிது நேரத்தின் பின் அதனை மீண்டும் வடித்து…
-
- 6 replies
- 2.8k views
-