நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்பாணத்துல செய்யிற ஒரு சுவையான வறை செய்வம், இது வெங்காய தாளில செய்யிற ஒரு வறை, சோறு கறியோட சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க,
-
- 4 replies
- 778 views
- 1 follower
-
-
தலைப்பைக்கண்டுட்டு ஏதோ சொல்லப்போறன் எண்டு நினைக்காதேங்கோ உங்களுக்கு தொிஞ்சா சொல்லுங்கோ :P :P :P :P :P
-
- 32 replies
- 5.8k views
-
-
மதுரை நாட்டுக்கோழி வறுவல் பிராய்லர் கோழியை விட நாட்டுக் கோழி தான் உடலுக்கு நல்லது. எனவே முடிந்த வரை பிராய்லர் வாங்கி சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள். அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து விடுமுறை நாட்களில் சுவைக்க அற்புதமாக இருக்கும். இங்கு மதுரை நாட்டுக்கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 …
-
- 0 replies
- 1.2k views
-
-
இப்படி மீன் சமைத்து சாப்பிட்டு பாருங்கள்!!!
-
- 0 replies
- 818 views
-
-
தேவையான பொருட்கள் ரவை - 2 கப் தயிர் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 1 இஞ்சி - 1 துண்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க உப்பு - சிறிது பெருங்காயம் - 1 சிட்டிகை எண்ணை - சிறிது செய்யும் முறை ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையைக் கொட்டி அதில் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணைய் ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும். இதனை ரவையில் கொட்டவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கரைத்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். ஊ…
-
- 24 replies
- 3.9k views
-
-
முட்டை பப்ஸ் வீட்டிலேயே செய்யலாம் முட்டை பப்ஸ் தேவையான பொருட்கள்: முட்டை 2 பஃப்ஸ் ஷீட்ஸ் - 4 (ரெடிமேடாகவே கிடைக்கிறது) இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள் - தலா 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1 கப் வெங்காயம் - 5 தக்காளி - 1 கறிவேப்பிலை, கரம்மசாலா தூள் - சிறிது செய்முறை: முட்டையை வேக வைத்து தோல் உரித்து இரண்டு பாகமாக வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து வத…
-
- 2 replies
- 2.6k views
-
-
அடை கேக் தேவையான பொருட்கள் : சீனி - 500 கிராம் மா - 250 கிராம் ரவை - 250 கிராம் மாஜரீன் - 250 கிராம் வனிலா - 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி கஜூ பிளம்ஸ் - 50 கிராம் முட்டை - 6 உப்பு தேவையான அளவு செய்முறை : மாவையும் பேக்கிங் பவுடரையும் மூன்று தடவை அரித்துக் கொள்ளவும். ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் மாஜரீன், சீனி இரண்டையும் இட்டு நன்கு கரைத்துக் கொண்டு முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து அடிக்கவும். பின் மா, ரவை, முட்டை வெண்கரு, வனிலா, உப்பு ஆகியவற்றை அடித்து கலவையில் இட்டு 5 நிமிடம் கலந்து பிளம்ஸ், கஜூ சேர்த்து பேக் பண்ணவும். அல்லது எண்ணெய் பூசிய தாச்சியில் ஊற்றி நெருப்ப…
-
- 9 replies
- 3.2k views
-
-
தேவையானவை சுறா மீன் –அரை கிலோ வெங்காயம் –கால் கிலோ பூண்டு – 150 கிராம் பச்சை மிளகாய் – 5 இஞ்சி – 1 துண்டு கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு - செய்முறை வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பொடியாக நறு்க்கி கொள்ளவும். சுறா மீனை மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து முள், தோல், எடுத்து விட்டு உதிரியாக்கி கொள்ளவும். அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் சுறா மீனை போட்டு கிளறி பச்சை வாச…
-
- 10 replies
- 3.7k views
-
-
பொதுவாகவே சமையல் என்பது மிகவும் இலகுவான வேலை போலவும், சமைப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் போன்றதொரு மாயையும் உலாவுகின்றது. இதை சமையல் செய்யும் ஒருவரால் ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு வீட்டில்,கிராமத்தில்,நகரத்தி ன்,நாட்டின் பாரம்பரியத்தையோ/கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள சிறந்த இடம் சமையல் தான் என்பது என் கருத்து. இப்படிப்பட்ட சமையல் என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. ஒரு உணவை சமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் ஒரு தற்கொலையோ,பல கொலைகளோ நிகழ வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பதிவில் எப்படி தற்கொலையை தவிர்க்கலாம் என பார்ப்போம். கொலைகள் பற்றி பின்னர் யோசிக்கலாம்.கிகிகிகி * சமைக்கும் போது சமையலை மட்டும் பார்க்கவும். கவனம் இல்லா…
-
- 5 replies
- 2.1k views
-
-
-
இதுவரை செய்து பார்த்ததில்லை, இதுவும் அவ்வளவு கடினமானது இருக்கவில்லை, எமது தோசை வார்க்கும் கல்லிலேயே செய்து விடலாம் என்று போட்டிருந்தார்கள், எனவே இறங்கி விட்டேன். சுவை சரியாக வந்தது, இன்னும் கொஞ்சம் மாவை பொங்க விட்டிருக்கலாம் என்று மனைவி சொன்னார். 4 மணி நேரம் விட்டேன், அப்பச்சோடா அல்லது தயிர் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம் என்று நினைக்கிறன். இங்கு யாரவது முன்னமே விலாவரியாக செய்து போட்டிருந்தால் மன்னிக்கவும். இப்பொழுது அநேகமான நேரம் சும்மா இருப்பதால், நீங்கள் கொஞ்ச நாளைக்கு சாமாளித்து போக வேண்டி இருக்கும். ரெசிபி கீழே உள்ள வீடியோக்களில் உள்ளது. இரண்டாவது வீடியோவில் உள்ள ரெசிப்பியில் பாலும் சேர்த்திருந்தார்கள், நான் சேர்க்கவில்லை
-
- 2 replies
- 576 views
- 1 follower
-
-
நவராத்திரி நல்விருந்து! - நெய் அப்பம் நவராத்திரி நெருங்கிவிட்டது. கொலு வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்றால் அப்பம் லட்சியம், சுண்டல் நிச்சயம். ஆனால் எல்லாருடைய வீட்டிலும் ஒரே மாதிரி படையல் இருந்தால் அலுத்துப்போகாதா? நம் வீட்டுக்குக் கொலு பார்க்க வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வித்தியாசமான பலகாரத்தைக் கொடுத்து அசத்த வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க வந்திருக்கிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். எல்லோருக்கும் தெரிந்த பலகாரங்களைக் கூடுதல் சுவையுடனும் எளிதாகவும் செய்யக் கற்றுத்தருகிறார் இவர். என்னென்ன தேவை? அரிசி - ஒரு கப் வெல்லம…
-
- 0 replies
- 671 views
-
-
இது காரமும் இனிப்பும் கலந்த சிற்றுண்டி. பனங்கிழங்கு கிடைக்கும் காலங்களில் வீட்டில் செய்வார்கள். தேவையான பொருட்கள். 1. அவித்த பனங்கிழங்கு -- 4 2. செத்தல் மிளகாய் - 2 (நடுத்தரம்) 3. மிளகு - 8-10 4. தேங்காய் பூ - 1/2 கப் (125 மி. லி. அளவு கரண்டி) 5. உப்பு - சுவைக்கு ஏற்ப 6. சீனி/சர்க்கரை - 2 மேசை கரண்டி/ சுவைக்கு ஏற்ப. 7. உள்ளி - ஒரு பல்லு, (நடுத்தரம்) செய்முறை 1. அவித்த பனங்கிழங்கை குந்து எடுத்து/ வார்ந்து , சிறிய துண்டுகளாக முறித்து/ வெட்டி கொள்ளவும். சிறிய உரலில் இடிப்பதாயின் 2. செத்தல் மிளகாய், உப்பு, மிளகு என்பவற்றை உரலில் போட்டு நன்கு பொடியாக்கவும். 3. உள்ளியை சேர்த்து இடிக்கவும். 4. முறித்து வைத்த கிழங்கை பகுத…
-
- 23 replies
- 5.1k views
-
-
மொறுமொறுப்பான... ரவை வடை. மாலை வேளை வந்தாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். அதிலும் குழந்தைகளுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள், மாலையில் அம்மா வீட்டில் ஸ்நாக்ஸ் கொடுப்பார்கள் என்று ஆவலோடு இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா! அப்படியெனில் அதற்கு ரவை வடை சரியானதாக இருக்கும். அந்த ரவை வடையை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் செய்து குழந்தைகளை அசத்துங்கள். தேவையான பொருட்கள்: ரவை - 1/2 கிலோ வெங்கயாம் - 3-4 (பொடியாக நறுக்கியது) தயிர் - 1/2 கப் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) பேக்கிங் …
-
- 3 replies
- 1.5k views
-
-
பல்சுவை புடலை: புடலங்காய் காரக்கறி சிலர் குறிப்பிட்ட சில காய்கறிகளை மட்டுமே தொடர்ந்து சமைப்பார்கள். மற்ற காய்கறிகளில் சுவை இருக்காது என்பது பலரது நினைப்பு. இன்னும் சிலர் புடலை, பீர்க்கு போன்றவற்றைத் தங்கள் சமையலில் ஒதுக்கிவிடுவார்கள். கூட்டு தவிர, இவற்றில் சுவையாக வேறெதுவும் செய்ய முடியாது என்று காரணமும் சொல்வார்கள். “நம் மண்ணில் விளைகிற காய்கறிகளைச் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. புடலங்காயில் நீர்ச்சத்து நிறைந்து இருப்பதால் வெயில் காலத்துக்கு உகந்ததும்கூட” என்று சொல்கிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. புடலங்காயில் விதவிதமாகச் சமைக்கக் கற்றுத் தருகிறார் இவர். புடலங்காய் க…
-
- 0 replies
- 554 views
-
-
வாங்க இந்த தீபாவளிக்கு செய்ய கூடிய ஒரு இலகுவான, சுவையான இனிப்பு பலகாரம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம்.
-
- 0 replies
- 541 views
-
-
. மொறு மொறுப்பான உழுந்து தோசை. தேவையான பொருட்கள். இரண்டு சுண்டு உழுந்து. இரண்டு சுண்டு வெள்ளை பச்சை அரிசி. இரண்டு மேசைக்கரண்டி வெந்தயம். இரண்டு பெரிய வெங்காயம் அல்லது பன்னிரெண்டு சின்ன வெங்காயம். ஆறு கெட்டு கருவேப்பிலை. வெண்ணெய் (Butter அல்லது Margarine) ஆறு செத்தல் மிளகாய் சிறிது உப்பு கொஞ்சம் மஞ்சள் தூள். அப்பச்சோடாத் தூள் அல்லது ஈஸ்ட் செய்முறை. உழுந்தையும், அரிசியையும், வெந்தயத்தையும் ஒரு நீர் ஊற்றிய பாத்திரத்தில் 5 மணித்தியாலங்கள் ஊற விடவும். ஊறிய பொருட்களை கிறைண்டரில் பசை போல் அரைக்கவும். அரைத்த மாவை பெரிய பாத்திரத்தில் இட்டு அப்பச்சோடாவையும், மஞ்சள் தூளையும் கலந்து 10 மணித்தியாலம் மூடி வைக்கவும். புளி…
-
- 22 replies
- 16.5k views
-
-
வடை கறி தேவையானவை: கடலைபருப்பு 1 கப் துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன் தக்காளி 3 வெங்காயம் 2 பூண்டு 4 பல் இஞ்சி 1 துண்டு மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன் உப்பு,எண்ணைய் தேவையானது கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது) செய்முறை: கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன் தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும். அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும். ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.அதனுடன் மசாலாபொடி,உப்பு,இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவேண்டும். பின்னர் அரைத்து வேகவைத்த மாவை கலந்து …
-
- 4 replies
- 2.2k views
-
-
செய்முறையை வாசிக்க..: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...ml#more
-
- 5 replies
- 6.6k views
-
-
Chicken Devil தேவையானவை: சிக்கன்.குடைமிளகாய்,வெங்காயம்,கறிமிளகாய்,தக்காளி சோஸ், சில்லி சோஸ், நல்ல எண்ணை,உப்பு, மஞ்சள்,சில்லிபவுடர், தேவையனாளவு: சிக்கென் 1/4kg வெங்காயம் 2 குடைமிளகாய் 2 கறிமிளகாய் 4 தக்காளி சோஸ் 5 table spoon சில்லி சோஸ், 3 table spoon நல்ல எண்ணை 4 table spoon சில்லிபவுடர், 2 table spoon மஞ்சள் பவுடர் 2 table spoon உப்பு தேவைக்கேற்ப செய்முறை: சிக்கன், மஞ்சள்,சில்லிபவுடர்,உப்பு ஆகியவற்ரை நீரில் அவித்து எடுக்கவும்,பின்பு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்,அதன்பின் ஒரு சட்டியில் எண்ணையை விட்டு மெல்லிய சூட்டில் பிரட்டி எடுக்கவும் அதன் பின் சிக்கனுடன் தக்காளி சோஸ், சில்லி சோஸ், வெட்டிய குடைமிளகாய்,கறிமிளகாய்,வெங்காயம்,சேர்த்…
-
- 0 replies
- 1.3k views
-
-
" roasted lamb leg with rice “ mendi “
-
- 0 replies
- 557 views
-
-
தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு, மிளகாய் (அரைத்த பொடி) - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும். http://tamil.webdunia.com/article/…
-
- 1 reply
- 834 views
-
-
என் மகளும் நானும் இணைந்து இன்று செய்த உணவு இது தேவையானவை: பாரை மீன் (முழு மீன், அல்லது தலை மட்டும் அகற்றப்பட்ட முக்கால் மீன்) வெங்காயத்தூள் - Onion powder மிளகுத் தூள் உள்ளித் தூள் - Garlic powder மஞ்சள் தூள் சோழ மாவு மிளகாய்த் தூள் (ஊர் முறைப்படி தயாரிக்கப்பட்டது) உப்பு ஒலிவ் ஒயில் லெமன் சமைக்கும் முறை 1. மீனை நன்கு குளிப்பாட்டி (சோப் போடக் கூடாது) கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும். 2. மீன் மீது கத்தியால் சிறு கீறல்கள் போடவும் 3. மிளகுத்தூள், மிளகாய்த் தூள், உள்ளித் தூள், வெங்காயத்தூள், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் தேவையான அளவு இட்டு, சற்று சூடான தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலக்கவும். 4. ஒன்றாக கலக்கிய பின் கலவை க…
-
- 16 replies
- 2.7k views
-
-
"பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்" மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக 7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாச…
-
- 0 replies
- 384 views
-
-
ஈரல் வறுவல் தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் - 500 கிராம் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 வர மிளகாய் - 4 இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன் மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டீ ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - இரண்டு கொத்து எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன் பட்டை, இலை - தாளிக்க செய்முறை: ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் …
-
- 22 replies
- 8.2k views
-