நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வெந்தயக்கீரை மீன் குழம்பு வெந்தயக்கீரையின் கசப்புத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்! தேவையான பொருட்கள்: வஞ்சிரமீன் - 1/2 கிலோ வெங்காயம் 200 கிராம் தக்காளி - 350 கிராம் தக்காளி பேஸ்ட் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன் தனியாத்தூள் 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன் உப்பு - ருசிக்கு தேவையான அளவு வெந்தயம் -…
-
- 15 replies
- 3.7k views
-
-
தேவையான பொருட்கள்: வெந்தயம் - 4 டேபிள் ஸ்பூன் வற்றல் மிளகாய் - 6 உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன் பெருங்காயம் - 1 ஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு வெல்லம் - விருப்பப்பட்டால் நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொள்ளவும். பொன்னிறமாக வறுத்த வெந்தயம், வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சிறிது வெல்லத்தை பொடி செய்து துவையலில் சேர்க்கவும். வெந்தயத்தை அதி…
-
- 0 replies
- 2.4k views
-
-
இப்போ அடிக்கிற இந்த வெயிலுக்கு கடைகளில குளிர்பானங்கள் வாங்கி குடிக்காம இப்பிடி தயிர் வாங்கி வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் வெட்டி போட்டு மோர் குடிச்சா அப்பிடி இருக்கும், உடம்புக்கும் ரொம்ப நல்லம், நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ
-
- 6 replies
- 811 views
-
-
வெள்ளரி பயத்தம்பருப்பு கோசம்பரி சாலட் தேவையான பொருட்கள் ஊற வைத்த பயத்தம் பருப்பு – 1௦௦ கிராம் (பாதிவேகாடு வேகவைத்தது) வெள்ளரிக்காய் – கால் கப் (நறுக்கியது) துருவிய தேங்காய் – இரண்டு டீஸ்பூன் கேரட் - 1 எலுமிச்சை சாறு – சிறிதளவு தாளிக்க: பச்சை மிளகாய் – ஒன்று பெருங்காயம் – ஒரு சிட்டிகை கடுகு – கால் டீஸ்பூன் நெய் – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை ஊற வைத்த பருப்பை தண்ணிர் வடியவிட்டு, வெள்ளரிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து ஆகியவற்ற…
-
- 0 replies
- 795 views
-
-
வெள்ளரிக்காய் தால் தற்போது வெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே வெள்ளரிக்காயும் விற்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு வெள்ளரிக்காய் பிடிக்குமானால், அதனை அப்படியே பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, மதிய வேளையில் சாதத்தோடு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தால் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இங்கு வெள்ளரிக்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் - 1 துவரம் பருப்பு - 100 கிராம் வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 4 (நறுக்கியது) மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் எண்ணெ…
-
- 10 replies
- 1.3k views
-
-
இந்த பசங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுத்தாலே கஸ்டம் தாங்க. தெரியாத்தனமா எங்கண்ணாக்கு கல்யாணம் பண்ணி குடுத்திட்டம். இப்ப கஸ்டபடுறம்…பின்ன என்ன….நானே இந்த கீரைக்காக 1 ½ மணித்தியாலம் காரில போய் வாங்கி வந்தேன். என்னோட பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரிடம் பெரிய தோட்டம் இருக்கு. ரொம்ப நாளாவே கீரை வளர்க்கணும் என்று ஆசை..ஆசிரியர் கீரை முளைக்க போட விதைகள் தருவதாக சொல்லவும்..உடனே சென்று வாங்கி வந்தேன். வந்த உடனே கீரைக்கு பாத்தி கட்டியாச்சு…அடுத்த நாள் போடலாம் என வைச்சிருந்த விதைகளை எனக்கு தெரியாம எடுத்து கொண்டு போய் தன்ட வீட்டில போட்டுட்டார் அண்ணா... இதில எங்க மாமா வேற "அண்ணா பாவம், கல்யாணம் பண்ணினதும் ஏதோ ஆசை பட்டு கீரையெல்லாம் வைக்கிறார்...சண்டையெல்லாம் போடாதேம்மா" நீங்களோ சொல…
-
- 9 replies
- 4.2k views
-
-
வெள்ளை அரிசி நூடில்ஸ் & தந்தூரிக் கோழிப் பொரியல் & குழம்பு வெள்ளை அரிசி நூடில்ஸ் (பல கடைகளில் ஊறவைத்து உடனே சமைப்பதற்குரிய ரைஸ் நூடில்ஸும் விற்பனை செய்கிறார்கள்) 1/4 பச்சை இலைக் கோவா (மெல்லிதாக அரிந்தது) 3-4 தண்டு செலரி(மிகச் சிறிய துண்டுகளாக வெட்டியது) 100 கிராம் பீன்ஸ் முளை 3 கரட் (மெல்லிதாக வெட்டியது சமையல் ஒலிவொயில் (தேவையான அளவு) 3 4 மேசைக் கரண்டி- சோயா சோஸ் உப்பு (தேவையான அளவு) ஒரு பாத்திரத்தில் குளிர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். none stick பாத்திரத்தில் சமையல் ஒலிவொயில் தேவையான அளவு விட்டு எண்ணெய் நன்றாகக் சூடேறும் போது வெட்டியா மரக்கறிகளை சட்டியில் போட்டு, மரக் கரண்டியால் கிளறிய படியே பொரியவிட வேண்டும். அரைவாசி பொரிந்து வர…
-
- 13 replies
- 2.5k views
-
-
-
- 12 replies
- 1.8k views
-
-
இரத்த சர்க்கரை அளவு சீரகா இருக்கும். சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். மேலம் அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். மலச்சிக்கல் தினமும் அளவுக்கு அதிகமாக சாதத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தும். நீரிழிவு வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சாதம் சாப்பிட ஆசைப்பட்டால், கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்த…
-
- 4 replies
- 1.7k views
-
-
முக்கிய குறிப்பு: இது என்னால் இணைக்கப்படுகிறதே தவிர இந்தச் சமையல் முறைக்கு நான் பொறுப்பல்ல!! தேவையன பொருட்கள் வெள்ளை ரவை - 500 கிராம் பெரிய வெங்காயம் - 3 கேரட் - 1 இஞ்சி - சிறிதளவு பச்சைமிளகாய் - 4 கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டு எண்ணெய் – தேவையான அளவு நெய் - 3 தேக்கரண்டி தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை தாச்சியில் சிறிது நெய் விட்டு ரவையை குறைந்த சூட்டில் சாதுவாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளப்பாடாக வெட்டிக் கொள்ளவும். கரட்டை தூள்களாக வெட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளப்பாடாக இரண்டாக வெட்டி அதனை 2 – 3 துண்டுகளா வெட்டிக்…
-
- 0 replies
- 851 views
-
-
எமது உணவு வகைகள் மற்றும் சிற்றுன்டி வகைகளுக்கு வெள்ளைகள் மத்தியில் வரவேற்ப்பு எப்படி குறிப்பாக எவை எவை பிடிக்கும் என்று யாராவது அனுபவம் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.உதவியாக இருக்கும்.
-
- 20 replies
- 2.7k views
-
-
வேப்பம் பூ ரசம் தேவையான பொருட்கள் புளி - எலுமிச்சங்காய் அளவு உப்பு -தேவைக்கேற்ப மிளகாய்-8 ( கிள்ளி வைத்துக் கொள்ளவும் ) மஞ்சள் பொடி-2 சிட்டிகை பெருங்காயம்-தேவையான அளவு நெய்-1 டீஸ்பூன் கடுகு-1 டீஸ்பூன் செய்முறை வாணலியில் 1 டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு, கிள்ளிய மிளகாய், பெருங்காயம், வேப்பம்பூ முதலியவைகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். 2 டம்ளர் தண்ணீர் விட்டு, புளியை நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, வறுத்த பொருட்களையும் போட்டு நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து சுண்ட ஆரம்பித்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவி இறக்கவும். http://tamil.webdunia.com/miscellaneous/cookery/ve…
-
- 6 replies
- 2.1k views
-
-
வேப்பம் பூ வடகம் இதுவரை செய்து பார்க்கவில்லை, இப்பதான் கஷ்டப்பட்டு ஒரு கன்று வளர்த்துவிட்டேன். பூ பூக்க தொடங்கிவிட்டது, செய்முறை தேடி பார்த்தபோது கிடைத்த து, உங்களுக்கு பாவற்றகாய், ..இப்படி ஏதாவதில் செய்யும் முறை இருந்தால் தரவும் யாழ்ப்பாண மக்களின் உணவு வகைகளில் வேம்புக்கு முக்கியமான இடம் உண்டு. பொதுவாக இலையுதிர் காலத்தில் வேம்பின் இலைகள் முற்றாக உதிர்ந்துவிடும். இலை தளிர் காலத்தில் சிறிய சிறிய புதிய வேப்பம் இலைகளோடு கொஞ்சம்.. கொஞ்சமாக வேம்பம் பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது வேப்ப மரங்களைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். வேப்பங் காற்று உடலுக்கும் மனதுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மருத்துவ ரீதியாக சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது என தற்கா…
-
- 11 replies
- 5.4k views
-
-
வேர்கடலை சட்னி வேர்க்கடலை சட்னியை விரைவாகவும் ருசியாகவும் செய்து இட்லி, தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.. தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் உரித்தது) தேங்காய் - 4 பத்தைகள் காய்ந்தமிளகாய் - 4 எண்கள் உப்பு - தேவைக்கேற்ப புளி - பட்டாணி அளவு தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - 3 டீஸ்பூன் செய்முறை: ஒரு கடாய் வைத்து அதில் சில சொட்டு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய்களைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை பல்பல்லாக நறுக்கி மிக்சி ஜாரில் போடவும். அத்துடன் வேர்க்கடலை, வறுத்த மிளகாய், உப்பு, புளி அனைத்தை…
-
- 8 replies
- 8.2k views
-
-
வேர்க்கடலை சுண்டல்.. செய்வது எப்படி?? தேவையானவை: பச்சை வேர்க்கடலை ஒரு கப், காய்ந்த மிளகாய் 2, பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 3 டீஸ்பூன், கறிவேப்பிலை 10 இலைகள், எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: வேர்க்கடலையை முதல் நாளே ஊறவைக்கவும். மறுநாள் காலை குக்கரில் சிறிதளவு நீர் விட்டு, வேர்க்கடலை, உப்பு சேர்த்து வேகவைக்கவும். காய்ந்த மிளகாய், மல்லியை (தனியா) வெறும் வாணலியில் வறுத்து, பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை …
-
- 2 replies
- 3.3k views
-
-
அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் வேர்க்கடலை. பொதுவாக வேர்க்கடலையை வறுத்து அப்படியே தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதில் சில மசாலாக்களை சேர்த்து பக்கோடா போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி. முக்கியமாக வேர்க்கடலை பக்கோடாவானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இங்கு வேர்க்கடலை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – 1 1/2 கப் கடலை மாவு – 1/2 கப் …
-
- 1 reply
- 750 views
-
-
வேர்க்கடலை பிஸ்கட் தேவையான பொருட்கள் : வேர்க்கடலை 1 கப் கோதுமை மாவு 1 கப் சர்க்கரை 1 கப் உப்பு 1 டீஸ்பூன் சமையல் சோடா 1 டீஸ்பூன் எசன்ஸ் 1/2 டீஸ்பூன் நெய் 2 டீஸ்பூன் செய்முறை : 1. வேர்க்கடலை தோலை எடுக்க சிறிதளவு வறுக்க வேண்டும். 2. பின்பு உடைத்து தோலை புடைத்து விட வேண்டும். 3. அதில் உள்ள முளையை எடுத்து விட வேண்டும். 4. பின் கடலையை ஒன்றும் இரண்டுமாக பொடி செய்ய வேண்டும். 5. ஒரு சர்க்கரையை எடுத்து தனியாக இடித்துக் கொள்ள வேண்டும். 6. வேர்க்கடலை, கோதுமை மாவு இரண்டையும் தனியாக இடித்துக் கொள்ள வேண்டும். 7. இவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பும், சமையல் சோடாவும் போட வேண்டும். 8. பின் அதில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி-கெட…
-
- 0 replies
- 1.4k views
-
-
வேர்க்கடலை வெண் சுண்டல் என்னென்ன தேவை? வேர்க்கடலை - அரை கப் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் உளுந்து - ஒரு டீஸ்பூன் பெருங்காயம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கேரட், குடை மிளகாய்- தலா ஒன்று இஞ்சி - சிறு துண்டு தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? வேர்க்கடலையை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். இதனுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேகவையுங்கள். ஆறியதும் திறந்து தண்ணீரை வடிகட்டுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளியுங்கள். கடுகு போட்டு வறுபட்டதும் உளுந்து, பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுங்கள். கறிவேப்பிலை, கேரட் துண்டுகள்…
-
- 2 replies
- 599 views
-
-
அருமையான வேலூர் மட்டன் பிரியாணி தம் பிரியாணியில் நிறைய வகைகள் உள்ளன. இன்று வேலூர் மட்டன் பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 10 மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி தயிர் - 200 மிலி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கொத்தமல்லித் …
-
- 1 reply
- 820 views
-
-
வைன்கோழிச்சாதம் தேவையான பொருட்கள். அரிசி கோழி ஸ்டொக் பட்டர் கோழி துடை 6 டபுள் கிரீம் அரை லீடர் வெள்ளை வைன் காப்போத்தில் பிரன்டி சின்ன குப்பி வெங்காயம் மூண்டு பெரிசு காட்டுக்காளான் 250 கிராம் செய்முறை. அரிசியை கோழி ஸ்டொக்குடன் பினைஞ்சு பட்டரில் லேசா வறுத்து, பின்னர் வழக்கம்போல் அவித்து வைத்துகொள்ளுங்கள். ரெண்டரை வெங்கயத்தை வட்டமை வெட்டி களானுடன் சேர்த்து பொண்ணிறமாய் பட்டரில் பொரித்து வைத்து கொள்ளவும். கோழியை பட்டரில் வேகும் வரை பொரித்துவிட்டு, அரைவாசி வெங்காயத்தை போட்டு லேசா கருக்கவும் அடுப்பை நூத்துவிட்டு குப்பி பிரன்டியை பக்குண்டு ஊத்தி குப்பெண்டு பத்தவைக்கவும்.( கவனம் பிள்ளைகாள் ) நெருப்பு அணைந்ததும் வைனை ஊத்தி அடுப்பில் வைத்து 5…
-
- 3 replies
- 838 views
-
-
தேவையானப் பொருட்கள் வௌவால் மீன் - 2 புளி எண்ணெய் - 150 மி.லி. கடுகு - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - அரை கப் இஞ்சி - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது) பூண்டு - 3 மேசைக்கரண்டி (நறுக்கியது) மஞ்சள் - அரைத் தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி கிராம்பு - 2 ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி தேங்காய் - ஒன்று வினிகர் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். நடுத்தரமான சைஸில் சுமார் 12 துண்டுகள் வருமாறு வெட்டிக் கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு மற்றும் மீன் த…
-
- 10 replies
- 3.5k views
-
-
-
- 0 replies
- 678 views
-
-
ரம்ஜான் வரப் போகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று அனைத்து இஸ்லாமியர்களின் வீடுகளிலும் மட்டன் ரெசிபிக்கள் தான் செய்வார்கள். அந்நாளன்று பலர் வித்தியாசமான மட்டன் ரெசிபிக்களை செய்ய ஆசைப்படுவார்கள். ஆனால் என்ன செய்வதென்று தான் தெரியாது. ஆகவே தமிழ் போல்டு ஸ்கை, உங்களுக்காக இந்த வருட ரம்ஜான் பண்டிகையன்று வித்தியாசமான சுவையில் ஒரு மட்டன் ரெசிபியைக் கொடுத்துள்ளது. அந்த ரெசிபிக்கு ஷாஹி மட்டன் குருமா என்று பெயர். இந்த ரெசிபி மிகவும் அருமையான சுவையில் இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்யும் போதே, பசி எடுக்கும். அந்த அளவில் இதன் நறுமணம் அனைவரையும் கவரும். சரி, இப்போது அந்த ஷாஹி மட்டன் குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் - 500 கிராம் (எலும்பில்லாதது)…
-
- 3 replies
- 803 views
-
-
ஸ்டப்டு பாகற்காய் எப்படி செய்வது....? செய்முறை: மீடியம் சைஸ் பாகற்காய் - 5 பெரிய வெங்காயம் - 1 சீரகம் - 1 டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து பூண்டு - 6 பல் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் புளி - சிறிய துண்டு கடலைமாவு - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால…
-
- 1 reply
- 646 views
-
-
ஸ்பானிஷ் உருளைகிழங்கு முட்டை பொரியல் இன்று காலை உணவாக செய்து பிள்ளைகளுக்கு கொடுத்தேன், மிகவும் சுவையாக இருந்தது என்று அவர்களின் திருவாய் மலர்ந்து சொன்னார்கள் பல நாட்களின் பின் 😀😄. (அவர்களிடம் பாரட்டு வாங்குவதற்கு தவமிருக்கனும்) இதுதான் முதல் தடவையென்றபடியால் உருளைகிழங்கு கொஞ்சம் கூடிவிட்டது சொய்முறை
-
- 8 replies
- 1.2k views
-