கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
மனதில் தோன்றிய எண்ணங்கள் சரியான இடத்தில் ஆரம்பிக்கவில்லையென்றால் பயணம் எளிதாக இல்லாமல் போகலாம். வாழ்கையில் அந்த சரியான இடம் எது என்றே தோன்றாமல் குழம்பிக் கொண்டிருக்க, மிகச் சரியான இடத்தில் ஆரம்பித்திருந்தும், தொடர்ந்த பயணங்கள் திருப்தியை அளிக்காமல் திசை மாறி நீர்த்துப் போகலாம். அந்த மாதிரியான நிலைமை நிஜவாழ்கையில் பலருக்கு நடக்குது. சிலரோட வெற்றியும் தோல்வியும் சுற்றியுள்ள மனிதர்களால் மட்டுமில்லை, சூழ்ந்து வரும் நிலைமைகளாலும் ஏற்படலாம். சின்னக்காவின் உண்மையான பெயர் யாருக்கும் ஊருக்குள்ள அவா உசிரோடு இருந்த காலத்தில் தெரியாது, அது என்ன என்று , இந்தக் கதையின் முடிவில் நடந்த சம்பவத்தில் ஒரு நாள் அவா உயிர் இல்லாமால்ப் போன அந்த நா…
-
- 0 replies
- 1k views
-
-
உஷ்… ! இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது : கவிதா லட்சுமி – கருவறைக்கு வெளியே – நூலிலிருந்து-கவிதா லட்சுமி இந்த கண்ணாடி முன் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். தினமும் இப்படித்தான் பல நேரங்களில் நான் என்னைப் இப்படி நின்று நிதானமாக எந்த சலனமுமற்றுப் பார்ப்பதுண்டு. கண்ணாடியுள் விரியும் பெருவெளியின் வாடை, விறைத்த காற்று, மௌனத்தின் அலறல் என அனைத்தும் என்னால் மட்டுமே உணரக்கூடியது. வேண்டாம்! கண்ணாடியில் முகங்களை மட்டும் பார்க்கின்றவர்களுக்கான விம்பம் இல்லை இங்கு நான் காண்பது. அறையின் சாளரக் கண்ணாடி வழியே சூரியகதிர்கள் முகக்கண்ணாடியில் தெறித்து விழுந்துடைகின்றன. இந்தக் கண்ணாடி இருக்கும் அறையில் ஒரு கட்டிலும் பக்கத்தில் ஒரு மேசையும் இருக்கின்றது. அவை தவி…
-
- 0 replies
- 1.7k views
-
-
நான் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில படிச்சனான். பல்கலைக்கழ விதியின் படி முதல்,இறுதி வருட மாணவர்களுக்குத்தான் விடுதி தருவினம்.ஏனைய மாணவர்கள் வெளியில் உள்ள தனியார் விடுதிகளில தான் தங்குறவை. சமாதான காலத்தில 2003 என நினைக்கிறேன், தமிழ் மாணவர்கள் ஒரு 15 பேர் சேர்ந்து சிரேஷ்ட கனிஷ்ட மாணவர்களாக ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தனாங்கள்..அந்த வீட்டிற்கு ''mini hostel'' என்று ஒரு செல்லப்பேரும் வைத்தனாங்கள்.... தமிழ் மாணவர்கள் என்றால் தெரியும் தானே.. தமிழ் பெற்றோர்..பெடியன் படிக்கிறான் என்றால்,தாங்கள் சாப்பிடுகினமோ இல்லையோ பிள்ளையள் படிப்புக்கு தேவையெண்டு கேட்டா தலயை அடமானம் வைத்தாவது வாங்கி குடுப்பினம்... இப்பிடி எங்கட வீட்டில 8 கணணிகள் இருந்தது எண்டு நினைக்கிறன்..இப்பிடி கடும் வசதியள…
-
- 23 replies
- 6.6k views
-
-
அவன் தான் மனிதன் ............ நாற்புறமும் கடலால் சூழபட்ட அந்த தீவினிலே .ஒரு ஒதுக்கு புறமான ,சிறு கிராமம் .காலத்தின் கோலம் , அரக்கர் ஆட்சியில் ,அக்கிராமத்தில் இருந்தவர் எல்லோரும் வெளியேறி விட்டார்கள் , ஒரு விறகு வெட்டியும் குடும்பத்தினரும் , வாழ்ந்தார்கள் .கிராமத்தவர் எல்லாம் போய்விட ,அவனுக்கு போகிடமும் இல்லை ,அருகிலிருந்த சிறு கொட்டிலில் அமைக்க பட்ட வைரவர் சிலைக்கு தினமும் பூசை செய்து வருவதால் அதை விட்டு போகவும் மனமில்லை , கடவுள் காப்பாறுவார் என்ற அசைக்காத நம்பிக்கை .அவன் எங்கும் போகவில்லை . காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,ஒருநாள் அவர்கள் வீட்டு நாய் ,சிறுசல சலப்பு கண்டு குரைக்க தொடங்கியது .இரவானதால்..... அவன் இரு சிறு குழந்தைகளுடன் ,வெளியில் செல்ல…
-
- 11 replies
- 2.6k views
-
-
வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும். அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்ற…
-
- 6 replies
- 1.3k views
-
-
அதிகாலை டொன்வலியில் பனிமழைக்குள் எனது வாகனம் மெதுவாக ஊர்ந்துகொண்டிருக்க ஏதும் தமிழ்பாட்டு கேட்பம் என்று CMR ஐ தட்டினால் ஒரு பெண் ஒலிபரப்பாளர் நீங்களும் போய் CMR முகபுத்தகத்தில் இந்த வருட ஆஸ்காரில் சிறந்த படம் எது என்பதை வாக்கிடுங்கள் என அறிவிக்கின்றார். ஆஸ்கார் ? ACADAMY AWARDS . எனது கார் சயிக்கிளாகி யாழ் ரீகல் தியேட்டரை சுற்ற ஆரம்பித்துவிடுகின்றது . ரீகல் தியேட்டர் அமைந்திருக்கும் இடம் தான் யாழ்பாணத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒருபகுதி.யாழ் கோட்டை,முனியப்பர் கோவில்,துரையப்பா விளையாட்டு அரங்கு ,யாழ் நூலகம்,மணிக்கூட்டு கோபுரம் என்று ஓ/எல் பாஸ் பண்ணிவிட்டு படிப்பு ,டியுஷன் என்று பெல்போட்டத்துடன் அலைந்த இடங்கள்.வீட்டிற்கு தெரியாமல் கள்ளமாக பார்க்க ஆங்கிலப்…
-
- 3 replies
- 724 views
-
-
அற்புதம் by மஹாத்மன் அந்த மூன்றுநாள் கூட்டத்தை ‘குருசெட்’ கூட்டமென்று அழைப்பார்கள். தமிழில் நற்செய்திக் கூட்டமென்றும் சுவிசேஷக் கூட்டமென்றும் சுகமளிக்கும் கூட்டமென்றும் பெயர் பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் தொடங்கி முன்னிரவில் முடிவடையும். இந்த விசேஷக் கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் செய்யப்படும். மூப்பர் பிரிவில் உள்ளவர்கள்தான் வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பர். சபை காரியங்களில் உற்சாகமாக ஈடுபடுத்திக் கொள்வோரிடம் விசேஷக் கூட்டத்தைக் குறித்தான கைப்பிரதிகள் கட்டுக்கட்டாக கொடுக்கப்படும். இவர்கள் சுற்று வட்டாரத்திலுள்ள எல்லாத் தோட்டங்களுக்கும் கம்பங்களுக்கும் பக்கத்துப் பட்டணங்கள் வரையிலும் வீடு வீடாகச்சென்று கொடுத்துவிட்டு வரு…
-
- 0 replies
- 817 views
-
-
காற்றில் கரையாத நினைவுகள்: பண்பாட்டின் கடைசிக் காட்சிகள்! நாம் வசிக்கும் உலகம் விடிந்துவிட்டதை என் அறையின் சாளரம் வழியே விரல்களை நீட்டிக்கொண்டு வந்த வெளிச்சக் கதிர்கள் உணர்த்தின. வெளியே எட்டிப் பார்த்தபோது எப்போதும் கேட் கும் பறவைகளின் இசை காணாமல் போயிருந்தது. அவற்றைத் தாங்கி நிற்கும் மழைமரம் வீழ்த்தப்பட்டிருந்தது. வாழ்விடம் பறிக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவை காலி செய்திருந்தன. வெற்றிடங்கள் எல்லாம் கட்டிடங்களாக உருவாகிக் கொண்டிருக்கும் மூச்சுத் திணறும் சூழலில், எனக்குள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வெறுமை உறுத்திக் கொண்டே இருக்கிறது. நினைவு த…
-
- 23 replies
- 9.2k views
-
-
உளவுத்துறையும் நானும் -அ.முத்துலிங்கம் இஸ்லாமாபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலை நகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்படடேன். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். சல்வார் கமிஸ் அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருவர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய வண்டியிலே ஏறியதும் எந்த ஹோட்டல் என்று கேட்டார். நான் பயண முகவர் தந்த பேர்ல் கொன்றினென்ரல் என்ற பெயரைச் சொன்னேன். அவர் ரேடியோவில் ஓர் உருதுப் பாடலை உரக்க வைத்தபடி புறப்பட்டார். எந்த நாட்டுக்குப் போனாலும் முதல் ஓரு அதிர்ச்சி நடப்பது வழக்கம். இங்கே நான் பார்த்த அதிர்ச்சி மூன்று சக்க…
-
- 1 reply
- 999 views
-
-
கே.பி , கருணான்ரை ஆளை கலியாணம் கட்டாதை…! அவன் ஒரு நாத்திகன். கடவுளை நம்பாதவன். இயல்பிலேயே சம்பிரதாயம் , சாத்திரம் , சாதி , வேற்றுமை எல்லாவற்றிற்கும் எதிரானவன். வீட்டில் வணங்கும் சாமிகளின் உருவங்களை இவன் கண்ணிலிருந்து மறைத்து வைத்தது ஒருகாலம். 9பிள்ளைகளிலும் அம்மா அப்பாவிற்கும் அண்ணன் அக்காக்களுக்கும் வில்லங்கம் பிடித்த இளைய பிள்ளையவன். இயல்பிலேயே அவன் வாசிப்புப்பழக்கம் மொழிகளைக் கற்றுக்கொள்தல் அவனுக்குக் கொடையாயிருந்தது. பைபிள் , பகவத்கீதை , குரான் அடங்கலாக இராமாயணம் முதல் உலகப்புரட்சியாளர்கள் வரை படித்திருக்கிறான். எல்லாவற்றிற்கும் அவனிடம் மாற்றுக்கருத்து இருந்து கொண்டேயிருக்கும். வீட்டில் எல்லாரும் சொல்வார்கள் “அவன் ஒரு கலகக்காரன்“ என்று. 1984ம் …
-
- 12 replies
- 3.9k views
-
-
ஜம்பது என்றால் அரை சதம் என கிரிக்கட் விளையாட்டில் சொல்லுவார்கள்.வாழ்க்கையில் 50 வயசை தாண்டினால் அரை கிழடுதான் ஆனால் மனம் ஒத்துக்கொள்ளாது.உண்மையிலயே அரைகிழடு என்று சொல்வதைவிட முக்கால் கிழடு என்றுதான் சொல்ல வேண்டும்.மனித வாழ்க்கையில் முழுசதம் போட்டவர்கள் மிக குறைவு.சராசரி மனித வாழ்க்கை 75 அல்லது 80 என்றுதான் சொல்லாம்.அதன் பின்பும் மனிதன் வாழ்ந்து முழுசதம் போட்டால் அது அவர்களுக்கு கிடைத்த போனஸ் அல்லது ஆறுதல் பரிசே ஆகும்.. நான் சிறுவனாக இருக்கும் பொழுது 40 வயதுக்கு மேற்பட்டோரை கண்டால் முதியவர்கள் என்ற எண்ணம் தான் தோ ன் றும்,அதே வயதை நான் அடைந்த பொழுது அன்று நான் நினைத்த வயதானோர்(கிழடுகள்)என்ற எண்ணம் வரவில்லை,அன்று இருந்த ஆசைகளும் எண்ணன்களும்தான் மனதில் வருகின்றது.உடலி…
-
- 40 replies
- 4.6k views
-
-
காணாமற்போனவர்கள்- பொ.கருணாகரமூர்த்தி நேற்று முழுவதும் வந்திருந்து முற்றத்தைத் தேய்த்து ஒராறு கண்ணீர் ஊற்றிவிட்டுப்போன அந்த நடுவயதுத் தம்பதி இன்றும் வந்திருந்து அரற்றினர். “ ஐயோ ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். யாரோ நாதாரியள் எங்கட பிள்ளை பார்த்தனன்தான் செம்மியனைப் போட்டவன் என்று கொடுத்த அநியாயத்தகவலால்………. அவனை உங்கட தாசந்தான் பிடிச்சு வைச்சிருக்கிறாராம். அந்த அப்பாவிக்குழந்தையை எங்களிட்ட மீட்டுத்தந்திடுங்கோ ஐயா…………” என்றபடி அவரின் கால்களில் விழுந்தனர். செம்மியன் பார்த்தனனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி அவனது ஐந்து இலட்சத்தை வாங்கி ஏப்பம் விட்டதால அவன்மீது கோபத்தில இருந்தவன்தான், ஆனாலும் அருளல் மறைத்தல் போன்ற சாங்கியங்களில் இறங…
-
- 0 replies
- 600 views
-
-
பல வருடங்களாக ஆயத்தப்படுத்தி ஆவலுடன் நாட்களை எண்ணிக் காத்திருந்த பயணம் அது. போவதென்று முடிவெடுத்து வேலைத்தளத்திலும் அனுமதிபெற்று, பிள்ளைகளை உசுப்பேத்தி, அவர்கள் நாள்தோறும் அந்த நாமத்தை உச்சரிக்க (எதுவென்று கேட்கிறீர்களா? அட நம்ம கண்டாவைத்தான் சொல்கிறேன்!) வைத்து விட்ட பயணம். பயணிக்கும் தேதியும் முற்றாகிவிட, சுமார் 4 மாதங்களுக்கு முன்னதாகவே விமானச் சீட்டுக்களையும் வாங்கிவிட்டோம். தென்கொரியாவின் தலைநகர் சியோலினூடாகப் பயணிக்கும் பயணம் அது. அதுவும் பயணச் சிட்டுக்களை மிகவும் குறைந்த செலவில் வாங்கிக் கொண்டதால், இரட்டிப்பு மகிழ்ச்சி. பயணச் சீட்டுக்கள் வாங்கிய நாளிலிருந்து அனைவரையும் கணடாக் "காய்ச்சல்" பற்றிக்கொள்ள அதுவே எங்கள் எல்லோருக்கும் தியானம் என்று ஆகிவிட்டது. பயணிக்…
-
- 69 replies
- 8.6k views
-
-
ஒரு பசுவின் கண்ணீர் கதை ”என் சோக கதையை கேளு மனிதகுலமே” என்று ஒரு பசு என் கனவில் நேற்று வந்து கண்ணீர் விட்டது. ”என்ன பசு?, என்ன பிரச்சனை உனக்கு?” இது நான். ”என்ன பிரச்சனையா?, பிரச்சனையே நீங்க தானே!” “என்னது..நானா?, நான் என்ன செஞ்சேன்” ”நீங்கன்னா...மனிதர்களை சொன்னேன்” ”என்னது மனிதர்களா?, நாங்களாம் எவ்வளவு நல்லவங்க, எப்படி உங்க குலத்தை கோமாதா எங்கள் குல மாதான்னு கும்பிடுறோம், மாட்டுப்பொங்கல்ன்னு ஒரு விழாவே உங்களை வச்சு கொண்டாடுறோம், நீ என்னடான்னா ரொம்ப தான் சலிச்சுகிறியே..இவ்வளவும் செய்யிற எங்களை போயி பிரச்சனைன்னு சொல்லுறியே” “அடா, அடா..உங்க மக்கள் செய்யிற செயலை நீ தான் மெச்சிக்கணும்., எப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்த முட…
-
- 7 replies
- 2.4k views
-
-
இனியாவின் தவிப்பு பாகம் 1 செவ்வானம் சிவந்து! கதிரவன் வரும்போது இவள் ..... யாருக்காக காத்திருந்தாள்?.....அப்படி என்னதான் நோக்கிறாள் ! காலை முதல் மாலை வரை, யார் இந்த பெண் ! இவள்தான் ..... இனியா. இவள் ஏக்கம் எல்லாம் ஒரே ஒரு ஓசைக்காக அதுதான் தொலைபேசியின் ஓசை ...... அது அவளுக்கு இதயத்தை மெல்ல மெல்ல தட்டி வருடி எழுப்பும் இனிய சுவாசக்காற்று காற்று மட்டும் தானா உலகில் உள்ள அத்தனை வாசமலர்கள் எல்லாவற்றையும் ஒன்றாய் வருடகூட்டினால் எப்படி வாசம் வீசுமோ அவ்வளவு ஒரு புன்சிரிப்பின் உதடுகள் ...... உதடுகள் மட்டும்தானா ! .....? வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் கண்கள் கூட அவள் கண்ணின்மேல் காதல் கொள்ளும் அவளின் அழகு இவளின் மனதோ சமுத்திரம் போல் பரந்து வழைந…
-
- 35 replies
- 8.8k views
-
-
பாம்பும் ஏணியும் கே.எஸ்.சுதாகர் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2018 இல் முதற் பரிசு பெற்ற சிறுகதை கே.எஸ்.சுதாகரின் 'பாம்பும் ஏணியும்'. நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது. - பதிவுகள் - சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கட…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]அன்றைக்குச் சனிக்கிழமை![/size] [size=4]ஆச்சிக்குக் கொஞ்சநாளா மனம் சரியில்லாமல் இருந்தது![/size] [size=4]மாமா, ஆச்சிக்கு ஒரே மகன். அவரும் கொழும்பில இருந்து வந்திருந்தார். அவர் வரப் போறது, என்டாலே ஆச்சிக்கு, ஒரு பத்து வயது குறைஞ்சு போயிரும்! இவ்வளவுக்கும் மாமா, ஒரு ஆம்பிளை என்டதைத் தவிர வேற ஒன்டுமே பெரிசா, வெட்டி விழுத்தினதா, எனக்கு நினைவில் இல்லை,[/size] [size=4]மாமாவும், ஆச்சி வெங்காயக் கூடையும், பாயும் இழைச்சுச் சேர்த்த காசுக்கு ஒரு வழி பண்ணும் வரையும் கொழும்புக்குத் திரும்பிப் போக மாட்டார்![/size] [size=4]மாமா செய்த பெரிய காரியங்கள் பற்றி ஆச்சிக்கு எப்போதும் பெருமை![/size] [size=4]அதில் ஒன்றை, மட்டும் சொல்லிக் கதையைத் தொடர்கிறேன்![/size] [si…
-
- 22 replies
- 3k views
-
-
தெய்வானை-சிறுகதை-கோமகன் February 8, 2020 நான்கு புறமும் அமைந்திருந்த சுற்று மதிலின் பின்னே நிரை கட்டியிருந்த கமுகம் பிள்ளைகளும் பாளை தள்ளிய தென்னை மரங்களும் ஆங்காங்கே இருந்த பப்பா மரங்களும் முற்றத்தின் மத்தியிலே சடைத்து நின்ற அம்பலவி மரமும் அதிலே துள்ளி விளையாடிய அணில் பிள்ளைகளும் என்று ஐந்து பரப்பில் அமைந்திருந்த அந்த நாற்சாரவீட்டில் சிங்கராயர் குடும்பத்தின் பவிசுகளைச் சொல்லி நின்றன. அந்தக்காலத்தில் ஊரில் நாற்சார வீடுகள் வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையில் மால் ஒன்று இருந்தது. அந்த மாலின் அகன்ற சுவர்கள் மண்ணினால் கட்டப்பட்டு, இடையில் வெளிச்சமும் காற்றும் வருவதற்காகப் பனை மட்டை வரிச்சுக்களால் கிராதி அடித்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
வசந்திக்கு மனசெல்லாம் ஒரே படபடப்பு. இந்த இரவுக்குள்ள, இருட்டுக்குள்ள என்ன நடக்கப் போகுதோ என்ற ஏக்கமும் பீதியும் அவளிடம் குடி கொண்டிருந்ததே படபடப்புக்கு காரணமாயிருந்தது. "வசந்தி.. ரெடியா இரும்மா.. துணிவோட இரு.. அப்பதான் இந்த உலகத்தில பெண்கள் நாங்கள் நினைச்சதைச் சாதிக்கலாம்." சக தோழியின் வார்தைகள் தெம்பாய் காதில் இறங்கினும் படபடப்புத் தீரவே இல்லை. அதற்குள்.. அவனிடமிருந்து சிக்னல் வந்தது. இஞ்ச வாங்கோ என்று வாயசைக்காது கைகளால் சைகை செய்து வசந்தியை அழைத்தான். ஆரம்பத்தில் தயங்கியவளாய் பின் துணிவை வரவழைத்துக் கொண்டு அவனை நோக்கி நகர்ந்து சென்றாள். அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாய், என்ன பயப்பிடுறீங்கள் போல... முதல் அனுபவம் எல்லோ.. ஆரம்பத்தில கொஞ்சம் படபடப்பும…
-
- 52 replies
- 17.4k views
-
-
இது என் வாழ்வில் நான் எழுதும் இரண்டாவது கதை என்று சொல்லப்படக் கூடிய ஒரு பதிவு. முதலாவது சரிநிகரில் 21 வயதில் வெளியானதன் பின் மீண்டும் இரண்டாவதை 37 ஆவது வயதில் எழுத முயல்கின்றேன். கதை எழுதுவதற்குரிய எழுத்து ஆற்றல் இல்லை என்பதே கதை எழுதாமல் விட்டதன் காரணம். இது சர்வநிச்சயமாக இலக்கிய தரமாக இருக்கவே இருக்காது. ஒரு மர்ம நாவல் எழுதும் மனதையே என்றும் கொண்டிருந்தேன் என்பதும் நான் கதை எழுதாமல் விட்டதற்கான முக்கிய காரணம். இதுவும் ஒரு மர்ம கதை அல்லது நாவல் தான். ஆனால் எல்லாமே கற்பனை என்று சொன்னால் எவரும் நம்பப்போவதில்லை.... ------------------------------------------------------------------------------------------------------------- தோற்ற(ம்) விம்பங்கள்: …
-
- 35 replies
- 3.1k views
-
-
எலிப்பொறி - சிறுகதை வாஸந்தி - ஓவியங்கள்: ஸ்யாம் ஷீலுவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. கடகடவென்று சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இந்த அடுக்குமாடி வளாகத்தில் வசிக்கும் மேடம்கள் சரியான தொடைநடுங்கிகள் என அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. உண்மையில் அவர்களை முதன்முதலில் பார்த்தபோது, அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவர்களது குட்டை முடியும் கால்சராயும் அங்ரேஜி மொழியும்... அவர்கள் ஏதோ வேற்றுக் கிரகக்காரர்கள் எனத் தோன்றும். அவர்கள் வீட்டு ஆண்கள் வெளியில் கிளம்புவதற்கு முன்னர், இவர்கள் தங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ‘நா கிளம்புறதுக்குள்ள வேலையை முடிச்சுடணும்’ எனக் கண்டிப்புடன் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறுவது தெய்வக் குற்றம்போல்…
-
- 1 reply
- 2.7k views
-
-
குறையொன்றுமில்லை! பாலகிருஷ்ணன் குட்டி போட்ட பூனை போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். ஆயிற்று கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஓட்டமாய் ஓடிவிட்டது. ரிடையர்டு ஆன பிறகு பென்ஷன் பணம் அருகில் உள்ள வங்கிக் கணக்கில் சேர்வதற்கான என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடித்தாகிவிட்டது. இனி ஒரு வேலையும் கிடையாது. காலையில் எழுந்தவுடன் காப்பி சாப்பிட வேண்டியது, தினசரிகளைப் படிக்க வேண்டியது, குளிக்க வேண்டியது. சில ஸ்தோத்திரங்களையும் சொல்ல வேண்டியது. பிறகு சாப்பிட வேண்டியது. மீண்டும் சாப்பிட வேண்டியது. தூங்க வேண்டியது. மாலையில் நடைப்பயிற்சி, பிறகு வீடு, சாப்பாடு, தூக்கம்....மூன்…
-
- 2 replies
- 682 views
-
-
-
டேய் தம்பி எப்படியிருக்கிறாய் என்று என்னுடைய முதுகை தட்டினார் ஒருத்தர். திரும்பி பார்த்தேன். எங்கன்ட கந்தர் அண்ணே எப்படி சுகம். கனகாலம் கடைப்பக்கம் காணவில்லை, எங்கே போனயிர்ந்தனீங்கள்?நான் ஊருக்கு போய்விட்டு வந்தனான் உனக்கு சொல்லி போட்டு போகலாம் என்றுதான் இருந்தனான் ஆனால் டிரவல்ஸ்காரன் மலிவாக ஒரு டிக்கட் போட்டுத்தாரன் உடனே வெளிக்கிடுங்கோ என்றான் அதுதான் உனக்கு சொல்லாமல் வெளிகிட்டனான் கோபிக்காதையடா.... எப்படி யாழ்ப்பாணம் இருக்கு என்றதுதான் தாமதம் ,மனுசன் சிட்னியிலிருந்து வெளிக்கிட்டு திரும்பி சிட்னிக்கு வந்த கதை முழுவதும் ஒன்றும்விடாமல் சொன்னார்.அண்ணே நே ரம் போகுது பிறகு கதைப்போம் என்று இடைக்கிடை நான் சொன்னாலும் மனுசன் என்னை விடவில்லை,முழுக்கதையும் சொல்லி முடித்துவிட்டா…
-
- 13 replies
- 2.7k views
-
-
மம்மி..... கதைப்புத்தகத்தில் கலந்திருந்த சுஜாதா நிமிர்ந்தாள் மம்மி நான் ஜெயிச்சுட்டேன் மம்மி கையில் கப்போடு கட்டிப்பிடித்த பாலாவை வாரியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். கண்கள் கலங்கின. என் செல்லக்குட்டி நீ எப்போதும் ஜெயிக்கணும்டா. படிப்பிலும் எந்த போட்டியாகினும் நீ வெற்றி பெறணும் என் செல்லத்தங்கம் என வாரியணைத்தாள். நான் பெரிய சம்பியனாகினால் என்ன மம்மி தருவீங்க என கண்கள் அகல விரித்து பாலா தாயை அன்போடு கேட்டான். எதுவானாலும் தருவேன்டா எனதன்பு செல்லமே என சுஜாதா வாஞ்சையுடன் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தாள் என்ன மம்மியோடு கொஞ்சல் என கேட்டுக்கொண்டே வந்த ரமேஷை கண்டதும் செல்லப்பைய்யன் பாலா தனது வெற்றியை தந்தயோடும் தாயோடும் சேர்த்து களித்தான். இருவரும் அவனை மாறி…
-
- 18 replies
- 2.9k views
-