கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
கடைசி கடுதாசி அன்புள்ள அமுதினிக்கு, அன்றைய திகதி நினைவில்லை. அன்று ஏன் எனக்கு மட்டும் புது பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து காலையிலேயே எனக்குப் பிடித்த பருப்புக் குழம்பு செய்திருந்தாய்? “ஆறு வயசாயிட்டது…. இனியெங்கிலும் அவளை ‘அம்மா’ எண்டுதான் விளிக்க வேணும். சரி தன்னே?’ என்று மாமி என்னைப் பார்த்துக் கூறவும், “பரவாயில்லை ! அவளுக்கு எப்படி இஸ்டமோ அப்படியே விளிக்கட்டும்” என்றாயே? நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்ததை அவ்வளவு ரசித்தாயா? நாம் நட்டு வைத்த செடியில் கொத்துக் கொத்தாய்ப் பூக்கள் பூத்தது, அண்ணன் (அவனது பெயர் ஏன் எனது நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது?) ஒரு கொத்தைப் பறித்து அதில் ஒரு பூவின் நடுவில் இருந்த மெல்லிய நார் போன்ற ஏதோ ஒன்ற…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
சீனாவில் எப்படி பாட்டி வடை சுட்ட கதை! - பேரா.பர்வீன் சுல்தானா https://www.facebook.com/video/video.php?v=10202785308383005
-
- 2 replies
- 3k views
-
-
அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனியாக ஊருக்கு சென்று வந்து விடுவேன். தேர்வு சமயத்தில் என் தாத்தா இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்கு கிளம்பி விட்டார்கள். நானும் என் தம்பியும் தேர்வு எழுத வேண்டுமென்பதால் மதியத்திற்கு மேல் ஆள் விட்டு அழைத்து கொள்வதாக முடிவு. ஆனால் நாங்கள் முன்னரே தேர்வு எழுதி முடித்து விட்டு ஊருக்கு தனியாக கிளம்பி சென்று விட்டோம். அன்று முதல் நான் தனியாக ஊருக்கு செல்ல அனுமதி கிடைத்தது. அப்படி தான் ஒரு நாள் நான் ஊருக்கு புறப்பட்டேன். பேருந்திலிருந்து இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும…
-
- 0 replies
- 1.7k views
-
-
சத்தியவானுக்கு ஒரு சாவித்திரி இந்த சத்திய பாமாவிற்கோ தினம் சாவே ராத்திரி விரைவில் யாழ் இணையத்திற்காய் .. . . . ஈழத்துக் கருவாச்சி நேற்று கருவறையில் நாளை கல்லறையில் இன்றைய வாழ்க்கையை இனிதே வாழ்ந்திடு என்ற வாசகத்தை பொய்யாக்கி கருவறை தொடக்கம் கல்லறை வரை கந்தையாய் கசங்கியவளின் உண்மைக்கதை. . . விரைவில் . . . . அன்று காதலுடன் எங்கிருந்தாய் மண்ணில் பிறக்கையிலே என்று வந்தேன்.. . . இன்று ஈழத்துக் கருவாச்சியுடன் வருகின்றேன். . . . கரவையில் தோன்றி நீர்வேலியில் மறைந்த கருவாச்சிதான் இவள். . .ஆம் ஈழத்துக் கருவாச்சி. . . இழப்புகளையே எருவாக்கி விருட்சமாக எழ நினைத்தவள். . . வேரறுந்த போது விசமருந்தி மாண்டு விட்டாள்.. . .
-
- 8 replies
- 2.4k views
-
-
சென்ற ஞாயிற்றுக்கிழமை நண்பர் ஒருவரை சந்திக்க சென்று கொண்டிருந்தேன். Clichy sous Bois கடந்து (இந்த இடம் எல்லோக்கும் தெரிந்ததே) ஒரு 3 கிலோமீற்றர் தான் போயிருப்பேன். காடுகளும் சோலைகளுமாக அதிசயமாக இருந்தது. பிரதான நகரிலிருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் இவ்வளவு தூய்மையாகவும் இயற்கையை பாதுகாத்தும் பராமரித்தும் வைத்திருக்கிறார்களே என. அதிசயத்தபடி கொஞ்சம் காரை நிறுத்தி காற்று வாங்குவோமா என முயன்றபோது இப்படியொரு கார் எரிந்தநிலை தெரிந்தது. அரசு நல்லது தான் மக்கள் தான்.......????
-
- 0 replies
- 1.6k views
-
-
"அண்ணே எங்க போகவேணும்" பஸ்வண்டியை விட்டு கீழே இறங்கியவுடன் அந்த குரலை கேட்க மனதில் என்னை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ,"மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் ஜக்கியமானது போன்ற ஒர் உணர்வு உண்டானது.கையில் இருந்த ஒரே ஒரு பையையும் தூக்கிக் கொண்டு "தம்பி மானிப்பாய் போகவேணும் ஒட்டோவில மீற்றர் இருக்கோ,மீற்றர் போடுவீரோ" "அண்ணே இங்க மீற்றர் இல்லை மானிப்பாய்க்கு போக 400 ரூபா வரும்" "என்ன வழமையாக 300 ரூபா தானே கொடுக்கிறனான் ,நீங்கள் என்ன நானூறு கேட்கிறீங்கள்". . யாழ்நகரில் ஒட்டோ ஒடத்தொடங்கிய பின்பு கொழும்பில் இருந்து வந்த பஸில் இறங்கி இப்பதான் முதல் முதலாக ஒட்டோவில ஏறி ஊருக்கு போறன் என்ட விசயம் ஒட்டோக்காரனுக்கு தெரியாது என்ற எண்…
-
- 25 replies
- 3k views
-
-
காதுள்ள கடவுள் நா ச்சியார் தனியே வந்திருந்தாள். இருக்கன்குடி ஆறு வெயிலோடிக்கிடந்தது. பனைகளில் அமர்ந்திருந்த குருவி மட்டும் யாரோ தெரிந்தவரை அழைப்பது போல கூப்பிட்டுக்கொண்டு இருந்தது. தொலைவில், ஆற்று மணலில் உறை தோண்டி, தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தார்கள். ஒதுங்குவதற்குக்கூட நிழலே இல்லாத வெம்பரப்பின் கீழாக, அவள் வேகவேகமாக நடந்துகொண்டு இருந்தாள். பிடறியில் கை வைத்துத் தள்ளுவது போல, சூரியன் கூடவே வந்துகொண்டு இருந்தது. …
-
- 1 reply
- 2.2k views
-
-
பாகம் - 1 2009 மே திங்கள் 18ம் நாள்.. தமிழீழத்தின்.. இறுதிப் போர் முனையான முள்ளிவாய்க்காலின் இறுதி மூச்சடக்க எதிரிகளின் போர்க்கலங்கள் தீவிரமாக முழங்கிக் கொண்டிருந்தன. இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர்களும் டோராக்களும் சீனத் தயாரிப்பு F-7 களும் ரஸ்சிய தயாரிப்பு உலங்குவானூர்திகளும் குண்டுகளைக் கொட்டிக் கொண்டிருக்க அமெரிக்க தயாரிப்பு செய்மதிகள் முள்ளிவாய்க்காலில் புலிப் போராளிகளின் நகர்வுகளை துல்லியமாகக் கண்காணித்து குண்டுகளுக்கு இலக்குகளைக் காட்டிக் கொண்டிருந்தன. கூடவே இந்திய ராங்கிகளும் பாகிஸ்தானிய பல்குழல் எறிகணைகளும் பள்ளிகள்.. வைத்தியசாலைகள்.. மக்கள் கூடாரங்கள் என்று எங்கும் குண்டுகளைக் கொட்டி அப்பாவித் தமிழ் மக்களை வேட்டையாடிக் கொண்டிருந்தன. இத்தனை அவலங…
-
- 71 replies
- 14.3k views
-
-
காக்கா! பெரியவர் அண்ணாமலையின், 60ம் கல்யாணத்தை, மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர், அவரது குடும்பத்தினர். அதற்கு காரணமில்லாமல் இல்லை. ஊரின் பெரும்புள்ளி, அண்ணாமலை; அவரது மகள் அமெரிக்காவிலும், மகன் கனடாவிலும் இருந்தனர். பிள்ளைகள் பக்கத்தில் இல்லாதது, உள்ளூர அவருக்கு கவலை தான். ஆனாலும், அதை வெளிக்காட்டி, தன் கம்பீரத்தை குறைத்துக் கொள்ள மாட்டார். ஆனால், அவர் மனைவியோ, மனதில் பட்டதை சொல்லி, 'அந்த நாள்ல, எங்கய்யா, ஆயிரம், ரெண்டாயிரம் ஏக்கர்ன்னு சொத்தை சேர்த்து வச்சாரு... ஆனா, என்னைய படிக்க வைக்கல. அது, என் மனசுக்குள்ள பெரிய கொறையா மண்டிக் கிடந்ததால, புள்ளைங்கள பெரிய படிப்பா படிக்க வச்சேன்; என்ன பிரயோஜனம்...' என, …
-
- 0 replies
- 676 views
-
-
மறதி என்பது பெரிய வரம் என்று சிலர் சொல்வதுண்டு. அதிலும் குறிப்பாக தேவையில்லாத குப்பைகளை மனச்சிறையில் பூட்டி வைத்துக்கொண்டு கவலைப்படுவதை விட மறப்பது மேல். வெகு சிலருக்கு மட்டுமே இந்த மறதி என்பது ஒரு வரமாக அமைகிறது. எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டு குழப்புவதை விட மறந்து விடுவது மேல் தானே. ஆனால் அது அத்தனை சுலபம் அல்ல. தேவையான விஷயங்கள் மறந்து விடுவதும் தேவையற்ற விஷயங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடுவதும் இயல்பு தானே. படம்: இணையத்திலிருந்து…. நண்பரின் தாயார்: நாங்கள் எப்போது நண்பரின் வீட்டிற்குச் சென்றாலும் அவரது தாயார் எங்களையும் அவரது மகன் போலவே பாவித்து, "சாப்பிட்டு போடா கோந்தே" என்று ச…
-
- 3 replies
- 897 views
- 1 follower
-
-
சங்கடம் யோ.கர்ணன் அண்மையில் எனது முகப் புத்தகத்திற்கு ஒரு நட்பு வேண்டுகோள் வந்திருந்தது. அவருக்கு மொத்தம் ஐந்து நண்பர்கள். அவரது பிறப்பிடமாக கிளிநொச்சியை குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு அனாமதேய நபராக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன்தான் அவரை நண்பராக எற்றுக் கொண்டேன். எனக்கு சந்தேகம் வர காரணம் ஓரிரண்டு கிளிநொச்சி ‘பொடியள்’ இப்படி பல அனாமதேய கணக்கில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள் (ஆண்,பெண் பெயர்களில்). நான் நினைத்தது சரியாகவேயிருந்தது. அவர் மிக நாகரிகமாக ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அதனை ஒரு வரியில் சொன்னால் ‘நீயெல்லாம் உருப்படுவியா’ என்று வரும். உண்மைதான். எனக்கு கூட இந்த சந்தேகம் பல காலமாக இருந்து வருவதுதான். அதுவும் குறிப்பாக கடந்த ஓரிரண்டு வருடமாக அதி…
-
- 26 replies
- 2.6k views
-
-
கோத்தபாயவும் நானும் விமானத்தில் இருந்து இறங்கிப் பதட்டத்துடன் பயணிகளுடன் பயணிகளாக விமான நிலையத்தின் உள்ளே காலடி வைத்தேன் .அடுத்த வருவது பயணிகளைச் சோதிக்கும் இடமென்பதால் பதட்டம் இன்னும் அதிகரித்தது. எதற்காக இந்த்தப் பதட்டம் "நீ என்ன கொள்ளையடித்தாயா கொலை செய்தாயா எதற்காகப்பயப்படுகின்றாய் " என் உள்மனம் சொல்லிக் கொண்டாலும் பதட்டம் தீர்ந்த பாடில்லை. ஒருமாதிரி சிங்கள அதிகாரி கேட்ட கேள்விகளுக்கும் முறைத்த முறைப்புகளுக்கும் பதில் அளித்துவிட்டு வெளிவாசலை நோக்கி என் கால்கள் விரைகின்றன. வெளி வாசலை அடைந்ததும் என் கண்கள் வாடகை வண்டிகள் நிற்கும் இடத்தைத் தேடின. தூரத்தில் அவைகள் நிறுத்தப் பட்டிருந்ததை அடையாளம் கண்டுகொண்டு நடந்து கொண்டிருந்தேன் திடீரெனப் பல இரு…
-
- 27 replies
- 3.8k views
-
-
சில நாட்களுக்கு முன் Bridges Of Madison County என்னும் திரைப்படத்தை நண்பர் ஒருவர் பரிந்துரை செய்தார். கட்டாயம் பார் என்றும் படத்தை கையிலும் திணித்தனுப்பினார். வீடு வந்து Mac னுள் இறுவெட்டை திணித்துவிட்டு தேனிருடன் அமர்ந்தது தான் ஞாபகம் இருக்கிறது. படம் முடியும்வரை வெறொரு உலகில் சஞ்சரித்திருந்தேன். கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு என்று படம் மனதை கொள்ளை கொண்டு போனது. படத்தின் கருவானது Robert James Waller என்னும் எழுத்தாளரின் Bridges Of Madison County என்னும் புத்தகத்தினை அடிப்படையாகக் கொண்டு திருமணமான வயதான ஒரு குடும்பத்தாய்க்கும், விவாகரத்தான ஒரு வயதானவருக்கும் இடையில் ஏற்படும் காதல் பற்றிக் கூறுகிறது. மிகவும் உணர்வு பூர்வமான முறையில் சிறிது கூட விரசமற்ற முறையி…
-
- 8 replies
- 3k views
-
-
கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திர…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடக்கு வீதி அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் அலமேலுவின் நடை என்றால் மத்து கடைவது போன்ற ஓர் அழகு. இடைக்கு கீழே நேராக இருக்க மேலுக்கு மாத்திரம் இடமும் வலமும் அசைந்து கொடிபோல வருவாள். அந்த நேரங்களில் சோதிநாதன் மாஸ்ரர் மனசை என்னவோ செய்யும். மனசை தொடுவது ஒன்று; ஆனால் துளைப்பது என்பது வேறு. இப்ப கொஞ்சக் காலமாக இந்த எண்ணம் அவர் மனசைத் துளைத்து வேதனை செய்தது. தலையிடி வந்து போதுபோல இதுவும் விரைவில் போய்விடும் என்றுதான் எதிர்பார்த்தார். போவதற்கு பதிலாக …
-
- 3 replies
- 876 views
-
-
ரிங்.. ரிங்.. என்று ரெலிபோன் மணியடிக்க எதிர்பார்ப்போடு ஓடிச் சென்று ரிசீவரை தூக்கி காதில் வைத்தார் பார்வதியம்மா. மறுமுனையில்.. யார் மாமியே.. இது நான் சிவானி கனடாவில் இருந்து பேசுறன். உங்கட மிஸ் கோல் வந்திருந்திச்சு அதுதான் அடிக்கிறன் மாமி. ஏதும் அவசரமே..??! அதற்கு பார்வதியம்மா.. இல்லைப் பிள்ளை.. உவன் சங்கரின்ர அலுவலா தம்பியோட கதைப்பம் என்றுதான் எடுத்தனான். தம்பி நிற்கிறானே பிள்ள ? அவர் இப்பதான் உந்தக் குளிருக்க.. இரவு வேலை முடிச்சிட்டு வந்து குளிக்கிறார். ஊரில பிரச்சனை கூடிப்போச்சுது என்றும்.. சங்கரை இஞ்சால கனடாப் பக்கம் எடுக்கிறது பற்றியும் நேற்றுக் கதைச்சவர் மாமி. இப்ப அவருக்கும் கஸ்டம் மாமி. வேலையெல்லாம் திடீர் திடீர் என்று பறிக்கிறாங்கள். எனி நாங்க…
-
- 23 replies
- 5.7k views
-
-
லொறி- க.கலாமோகன் சில வாரங்களாகவே நான் அவளை எனது வீட்டின் அருகில் உள்ள மதுச்சாலையில் கண்டு வருகின்றேன். அங்கு சில வேளைகளில்தான் போயிருந்தாலும் , அவள் மீண்டும் அங்கு போக என்னைத் தூண்டினாள். நிச்சயமாக எனக்கு அவள் மீது காதல் தொடங்கியது என நினைக்கவேண்டாம். ஆனால் அவள் என்னைக் கவர்ந்தாள். அவளது முகம் வட்டம். விழிகள் பச்சை. உடல் மிகவும் மெலிவு. நீல டவுசர். அவளின் முன் ஓர் பியர்க் கிளாஸ்…. அவளது அருகிலோ சிரித்தபடியும் ஆடியபடியும் சிலர்… நான் அதிகாலையில் தொழிலுக்குச் செல்லும் வேளையில் மதுச்சாலை மூடிக் கிடக்கும். ஆழமாக அதன் கதவுகளைப் பார்ப்பேன். அந்தக் கதவுகளில் உள்ள சித்திரங்கள் எனக்கு மகிழ்வைத் தருவன. ஓர் வயோதிபர் தனது கண்களைச் சிமிட்டிச் சிரித்துக் கொண…
-
- 1 reply
- 668 views
-
-
ஒரு நிமிடக் கதை: நாணயம் காலை நேர நெரிசலில் குமார் பஸ்ஸில் ஏறினான். தினமும் பைக்கில் அலு வலகம் சென்று வருபவன், அன்று வண்டியை சர்வீஸுக்கு விட்டதால் வேறு வழி இல்லாமல் பேருந்து பயணம். அன்று நல்ல முகூர்த்த நாள் வேறு. பேருந்தில் உட்காரக் கூட இடம் இல்லாமல் நின்று கொண்டே வந்தான். ‘டிக்கெட், டிக்கெட்’ என்றபடி நடத்துநர் வந்தார். குமார் பத்து ரூபாய் தாளை கொடுத்து “முனிசிபல் ஆபீஸ் ஸ்டாப் கொடுங்க” என்றான் . நடத்துநர் டிக்கெட்டையும் , மீதி சில்லறை யும் கொடுத்தவாறு கூட்டத்தில் முன்னே நகர்ந்து விட்டார். குமார் சில்லறையை எண்ணி பார்த்த போது, ஒரு பத்து ரூபாய் தாளும், இரண்டு ரூபாய் நாணயமும் இருந்தது…
-
- 0 replies
- 774 views
-
-
அவன் அரை மயக்கத்தில் கட்டிலில் கட்டுண்டு கிடந்தான். அவனக்கு முன்னால் அவள் கையில் குழவிக்கல்லோடு நின்றாள். ................................... அவளுக்கு காதலிக்கும் உரிமை இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். அவளுக்கு அவளுடைய கணவனை தேர்ந்தெடுக்கும் பக்குவம் இல்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். அவர்களே அவளுக்கான காளையை தேடினார்கள். கட்டியும் வைத்தார்கள். அவளும் அவனும் முதன் முறையாக எத்தனை மணிக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களே சொன்னார்கள். இதுவரை அறிமுகம் இல்லாது அவனுடன் வாழ்ந்து, இதுவரை அறிமுகம் இல்லாத அவனுடைய சொந்தங்களையும் அனுசரித்து, பிள்ளைகள் பெற்று, வரவு செலவுக்குள் வாழ்க்கையை நடத்தி, சண்டை சச்சரவுகளை சமாளித்து, குழந்தைகளை படிக்க வைத்து, வாழ்க்கையில்…
-
- 20 replies
- 10.3k views
-
-
சகோதரர்கள் செய்த கொடூரம்! பார்வதி ஷா வழக்கு! | பாண்டிச்சேரி வைர வியாபாரி மனைவி பார்வதி ஷா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா? தொடரும்...
-
- 1 reply
- 3.6k views
-
-
மனசெல்லாம் மலர்விழி - சுப்ரஜா கிராமமே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. காரணம் வேறு ஒன்றும் இல்லை பக்கத்து டவுனில் புதியதாய் தொழில் தொடங்கியிருக்கும் பலசரக்கு மையம் ஒன்று கிராமத்தில் பொங்கல் கோலப் போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தது. லோக்கல் தொலைக்காட்சி, பத்திரிகைச் செய்திகள், துண்டு பிரசுரங்கள் போன்றவை பெண்கள் அனைவரையும் அதில் கலந்துகொள்ள அழைத்துக் கொண்டிருந்தது. பொங்கல் அன்று மாலை ஏழு மணிக்கு வரும் கலெக்டர் அவற்றை பார்த்து சிறந்த கோலங்களை தெரிவு செய்வார். ரொக்கப் பரிசுகளும், பல மாதங்களுக்கான இலவச மளிகை சாமான் கூப்பன்களும் உண்டு. புதுமையான போட்டி. கிராமத்து பெண்களுக்கு கேட்கவா வேண்டும். ஆளாளுக்கு வீட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மனக்கோலம் தமிழ்நதி விலங்கொன்று ஊளையிடுவது போலவேயிருந்தது அந்த ஓசை. கனவு காண்கிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்து கண்டுகொண்டிருக்கும் கனவொன்றிலிருந்து அவ்வோசை மிதந்து வருவதாக முதலில் சாந்தன் எண்ணினான். மது அவனை மெதுவாகத் தொட்டு ‘என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லை’என்றதும்தான், அந்த ஓசை அக்காவின் அறையிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தான். மது எழுந்து அமர்ந்து, “என்னாலை முடியேல்லை”என்று முனகியபடி மேடிட்டிருந்த வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். வயிற்றினுள்ளிருந்து பதட்டப்படும் குழந்தையை ஆசுவாசப்படுத்துமாப் போலிருந்தது அந்தத் தடவல். உயிரின் மூலத்தைத் தேடி உருக்கும் விசித்திரமான ஓசையை சற்றைக்கு நிறுத்திய ராசாத்தி இப்போது அனுங்கத் தொடங்கியிருந்தாள். தாங்கொணாத வேத…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெந்து தணிந்தது காலம்...- சிறுகதை வெந்துதணிந்ததுகாலம்...- மு.சிவலிங்கம் அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம். இப்போது வெய்யிற் காலமாகியும் புழுதி பறக்காமல் ஈர நிலம் எங்கும் வியாபித்திருந்தது. மரத்தில் புதிய தளிர்கள் துளிர்த்து¸ பச்சைப் பசேலெனச் செழித்திருந்தன. காற்றில் சலசலக்கும் இலைகளும்¸ கிளைகளும் குளிர்ந்தக் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அந்த மரமே அங்கு தவித்திருக்கும் அகதிக் குடும்பங்களுக்கு கூரையாக¸ வீடாக¸ ஊராக¸ பாதுகாப்பாகக் குஞ்சுகளை இறக்கைக்குள் அணைத்து வைத்திருக்கும் பேடாக ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. நெருப்பாய் எரிக்கும் வெய்யிற் காலங்களில் சுகமான நிழலைக் கொடுக்கின்றது.…
-
- 0 replies
- 1.2k views
-
-
புறவழிச்சாலைப் புண்ணியங்கள் காலை மணி ஒன்பதரை. காசி விஸ்வநாதனுக்கு அன்றைய காலைக் கடமைகள் முடிந்தன. ஐந்தரை மணிக்கு எழுதல். பயோரியா பற்பொடியில் பல் துலக்குதல். மனைவி கற்பகம் கையால் தரப்படும் காபியை ருசித்துக் குடித்தல். அரை கிலோ மீட்டர் தொலைவு வியர்வை அரும்ப நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடித்து வந்து குளிர்ந்த நீரில் குளித்தல். அடுத்து தமது குடும்பத்திற்குச் சொந்தமான விநாயகர் கோயில் பூஜை. பூஜை முடிந்து கற்பகத்துடன் சேர்ந்து காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விட்டு கடிகாரம் பார்த்தால்... அது மணி ஒன்பதரையைக் காட்டும். அதன் பிறகு அன்றையச் செய்தித் தாளை வரி விடாமல் வாசிக்கத் தொடங்குவார் காசி விஸ்வநாதன். வேலையில்…
-
- 0 replies
- 704 views
-
-
ஹேமா அக்கா -இளங்கோ 'ஐயோ, ஹேமா அக்கா கிணத்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று கத்திக்கொண்டு நாங்கள் கிணற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம். பின்னேரம் நான்கு மணியிருக்கும். வெயிலில் குளித்தபடி விளையாடிக்கொண்டிருந்தபோதுதான் ஹேமா அக்கா கிணற்றுக்குள்ளை குதிப்பதைப் பார்த்தோம். மலைகளும் நதிகளுமில்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தான் நீர் சார்ந்த தேவைகளுக்கு அமுதசுரபி. இந்தியன் ஆமி வந்தகாலத்தில் கூட, இப்படி அள்ள அள்ளக்குறையாத நல்ல தண்ணியும், தாரளமாய் லக்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன சனியனுக்கு நீங்கள் சண்டை பிடிக்கிறியள் என்றொரு ஆமிக்காரன் சனத்தை செக்பொயின்றில் வைத்து பரிசோதித்துப் பார்க்கும்போது கேட்டதாயும் ஒரு கதையிருந்த…
-
- 5 replies
- 4.5k views
-