கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
-
மண்டைக்காய் “என்னட்ட இருக்கிற கெட்டித்தனத்துக்கு நானெல்லாம் அமெரிக்காவுல பிறந்திருந்தா நிலைமையே வேற. போயும் போயும் யாழ்ப்பாணத்தில் போய் பிறந்தனே” என்று அனேகமாக எங்களில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்திருக்கலாம். அதையெல்லாம் மீறி அடுத்தகணமே “தமிழனாய் பிறப்பது பெருமை” என்று உட்டலாக்கடி அடித்தாலும், இவ்வளவு காலத்தில் ஒரு கணம் கூட அந்தவகை சிந்தனை தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு வராமல் போயிருக்காது. “முக்கி முக்கி தமிழில எழுதிறாய், ஏதாவது ரெஸ்போன்ஸ் இருக்கிறதா?” என்று நேற்று பீட்டர் லஞ்ச் டைமில் கேட்டபோதும் இதே அமெரிக்க ஸ்டேட்மெண்டை விரக்தியாய் விட்டேன். சத்தம் போடாமல் ஜோக்கட்டை வழிச்சு முடிச்சுவிட்டு அவன் சொன்னான், “உனக்கு அமெரிக்காவின் அதிபுத்திசாலி யாரு? அவ…
-
- 0 replies
- 631 views
-
-
சுரேஸ் அவனது சினேகிதருடன் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவான்.சுரேஸும் அவனது சினேகிதர்களும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவனது பக்கத்து வீடு,முன்வீடு ,பின் வீடுகளில் இருந்த அவனது வயதை ஒத்த பெடியள்தான் அவனது கூட்டாளிமார்.ஐந்தாம் வகுப்பு மட்டும் அயலில் உள்ள பெட்டை பெடி எல்லாம் ஒன்றாக தான் அந்த புளிய மரத்தடியில் விளையாடினதுகள்.பிறகு பெட்டைகள் வாரதில்லை பெடியள் மட்டும் அந்த மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவாங்கள். புலத்தில இப்ப எங்கன்ட பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கின்ற பிராண்டட் கிரிக்கட் மட்டையோ அல்லது பந்து போன்றவை அந்த காலத்தில் சுரேஸுக்கோ அல்லது அவனது சினேகிதருக்கோ கிடைக்கவில்லை.விளையாட வேணும் என்ற ஆசை ஆனால் அதற்குறிய பொருட்கள்…
-
- 18 replies
- 1.6k views
-
-
குறை சொல்ல முடியாத குற்றங்கள்! இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன். அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி ஒலித்தவுடன் பக்கத்தில் படுத்திருந்த கோமதி சாத்திரம் பார்த்தது போல சரியாகச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போனாள். இங்கே வாருமப்பா! அவர்களை நிக்கச் சொல்லும், உடுப்பு மாத்திக் கொண்டு வாறன். அவங்கள் மனுசிமாரையும் வேலைக்கு விடாமல் ஐந்தாறு அறைகளிலே வீடும் வாங்கிக் கொண்டு புதுப் புதுக் கார்களிலே திரியட்டும். நீங்கள் வீட்டிலே நிற்க நேரமில்லாமல் ஒன்றுக்கு மூன்று வேலை செய்து அவையளுக்கு அறுத்துக் கொண்டு இருங்கோ. போங்கோ என்னவாச்சும் செய்யுங்கோ. கோமதி திரும்பி வந்து முகத்தை மூடிக்கொண்…
-
- 21 replies
- 4k views
-
-
லட்டு - ஜி.கார்ல் மார்க்ஸ் ஓவியங்கள் : செந்தில் இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்குமுன்பு, நீங்கள் இந்த ‘லட்டு’ எனும் வார்த்தையை எவ்வாறு உச்சரித்தீர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ‘ட்’ அப்புறம் ‘டு’ என்கிற வார்த்தைகளுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்து அதை உதிரச்செய்து விடாமல் ‘Latdu’ என மென்மையாக, அதேசமயம் Laddu என்று நீர்த்துப் போனதாகவும் அல்லாமல், வாஞ்சையாக அதை உச்சரிக்க முடிந்தால், இந்தக் கதை உங்களுக்குப் பிடித்துவிடும். “மென்மை, வாஞ்சை போன்ற வார்த்தைகள் ரொம்பவும் க்ளிஷேவானவை ஆயிற்றே... எதற்காக ஒரு கதையை இப்படித் தொடங்குகிறான்...” என்று உள்ளுக்குள் எழுந்துவரும் எரிச்சலை மறைத்துக்கொண்டு, “சரி சரி... மேலே சொல்...” என்று வாசிப்பதைத் தொடர்…
-
- 0 replies
- 1.9k views
-
-
தம்பி சுறுக்கென்று சிப்டை( shift)மாத்து ராசா. .அவனை அவசர படுத்தினார். இன்றைக்கு என்னவோ வழமைக்கு மாறா பிசியாய் இருக்கு ..இவங்கள் துலைவாங்கள் எங்கிருந்து தான் வாறங்களோ தெரியாது வந்து கொண்டிருக்கிறாங்கள்.அவருடையதை தொடங்க முன்னரே அவரே இப்பவே வேலை செய்து கடினமாக கஸ்டபடுவர் போல வார்த்தைகளை கொட்டி கொண்டிருப்பதை கேட்ட அவன் , கொஞ்சம் பொறண்ணை இந்த கியூவை கிளியர் பண்ணி போட்டு தாறன் அது உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. அவர் நடுத்தர வயதை கடந்தவர் . இதே வேலையை இங்கு கன காலமாக செய்யிறார் அதிலை ஒரு பிடிப்பில்லாமால் அவருக்கு மட்டுமல்ல அந்த மூலையில் கடந்த வார தமிழ் பேப்பரோடு மல்லாடி கொண்டிருக்கும் இவரின் நண்பர் சண்முகமும் அப்படித்தான் .அவர்கள் இரண்டு பேரும் என்ன …
-
- 11 replies
- 1.9k views
-
-
மனைவி சூரியன் இன்னும் விழிக்கவில்லை. இன்னும் சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்திருக்கலாம் என நினைத்து மேகப் போர்வைக்குள் நுழைந்தது சூரியன். கட்டிலில் படுத்திருந்த நான் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை தட்டி, மணி பார்த்தேன். 5 ஆக 5 நிமிடங்கள் இருந்தன. பக்கத்தில் படுத்திருந்த மனைவி எப்போதோ எழுந்து போயிருந்தாள். தனித்தனி போர்வைக்குள் படுத்திருந்த பிள்ளைகள் இரண்டும் இப்போது ஒரே போர்வைக்குள் படுத்திருந்தனர். அண்ணனின் வயிற்றின் மீது காலைப் போட்டு வசதியாக படுத்திருந்தாள் எனது மகள். இதெல்லாம் காலை நேரத்து ஆச்சரியங்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரைக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் இரண்டும் இப்போது அமைதியா…
-
- 0 replies
- 1.3k views
-
-
அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக…… பதிவுகள் விசாரணைகள் என்று அவள் ஏறாத படிகளில்லை. இன்று கடைசி முயற்சியாக இதையும் செய்து முடிப்பதென்ற முடிவோடு காத்திருக்கிறாள். அம்மா அப்பா வருவாரோ ? அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்த மகனை….ஓமய்யா பேசாம இருங்கோ என அடக்கினாள். ஒன்றரை வருடங்கள் போய்விட்டது அவன் எங்காவது இருப்பானென்ற நம்பிக்கை வலுத்துக் கொண்டேயிருக்கிறது. அது அவளது முறை. நீதி மன்றத்தில் இருப்பது போலிருந்தது. அவர்கள் முன் சாட்சியம் கொடுத்தவர்களின் துயரங்களால் நிறைந்தது அந்த மண்டபம். உள்ளே சென்று வெளிவருகிற ஒவ்வொருவரும் அழுது சிவந்த கண்களுடனே வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். நிச்சயம் அவனைக் கொண்டு வந…
-
- 5 replies
- 1.5k views
-
-
பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்... 300-ரூபாய் 200-ரூபாய்க்கு வருமா ? சற்று யோசித்த ஆட்டோ டிரைவர் சரி 250-ரூபாய் கொடுங்க... பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது. அண்ணே இந்த வழியா போனா நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...? ரோட்டுக்கடைதான் சார் அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே, நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு விட்டு போகலாம். இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது. ஒரு நடுத்தரவயது அம்மா, …
-
- 2 replies
- 1.5k views
-
-
கடைசிச் சடலம் யோ.கர்ணன் ஓவியங்கள் : ஸ்யாம் எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளதுஇ ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்! எனக்கு அப்போது ஆறு வயது. இலங்கை ராணுவத்தின் வாகன ரோந்து அணியினரால் சுடப்பட்டுஇ வீதியில் கிடந்த அம்பி மாமாவை அப்பாவும் இன்னும் சிலருமாக வீட்டுக்குக் கொண்டுவந்தனர். அவரது வயிறு பிளந்து இருந்தது. பெரிய உடம்புக்காரரான அவர்இ ஒரு விலங்கைப்போலத் துடித்துக்கொண்டு இருந்தார். வாகனம் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுபோகும்போது வழியிலேயே இறந்துபோனார். அம்பி மாமாவின் முகம் மங்கலாகவே நினைவில் உள்ளது. எப்போதும் எனக்கு இனிப்பு வாங்கித் தருவதுஇ பிளந்த வயிறுஇ மரண ஓலம்இ அவரில் இருந்து பெருகிய ரத்தம் தவிரஇ வேறு எதுவும் நினைவில் இல்லை. நா…
-
- 6 replies
- 3.2k views
- 1 follower
-
-
அன்பார்ந்த யாழ்கள உறவுகளே! ஒரு பேப்பரில் தொடராக வெளிவரத் தொடங்கியிருக்கின்ற எனது இந்த பதிவை (ஒரு வகையில் இதுவும் ஒரு வித அனுபவப் பதிவுதான்) யாழ்கள நண்பர்களுக்கு தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வாசித்து குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுமாறும் வேண்டிக்கொள்கிறேன். சாய்ந்த கோபுரங்கள் சிறு வயதில் நம்மில் பலருக்கு பல விதமான கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் மனிதில் உருப் பெறுகின்றன. நாளடைவில் அந்தக் கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் எங்களின் மனங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி பலமான கோட்டைகளாகவும் கோபுரங்களாகவும் வலுப்பெற்று விடுகின்றன. அதே வாழ்க்கைப் பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிக்கும் போது நம்மில் சிலரின் தேடலும் அந்த தேடலின் விளைவாக நாம் அறிந்த…
-
- 77 replies
- 21.5k views
-
-
கதை சொல்லவா? 10/ தியா காண்டீபன் - பவா செல்லத்துரை அவர்கள் எழுதிய "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" சிறுகதை.
-
- 2 replies
- 922 views
-
-
காமாட்சி .......கனகசுந்தரம் தம்பதிகளுக்கு இரு பெண பிள்ளைகள். மூத்தவள் படிப்பு முடிந்ததும் , கனகர் வேலைக்கு விட மறுத்து விடார். இளையவள் தந்தையுடன் போராடி மேற்படிப்புக்காக் யுனிவேர்சிட்டியில் படித்து கொண்டு இருந்தாள். கனகர் அந்த ஊரிலே பெரும் அரிசி ஆலைக்கு சொந்தக் காரர். முப்பது மேற்பட்ட் பணியாளர்களை கொண்டு தொழிலை நடத்தி வந்தார். மாலையில் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க தங்கை மகன் , வாகீசனை துணைக்கு அழைத்தார் . அவனும் மாமன் மீதுள்ள் மரியதையால் ஏற்றுக்கொண்டான். . முன்பு அவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை பார்த்தவன். அவனது கம்பனி , ஒப்பந்தம் முடிந்ததால் , ஊருக்கு வந்து வேறு நிறுவனத்தில் இணைய காத்திருப்பவன். கனகரின் தங்கை விசாலம் , கணவனை இழந்த பின் ஒரே மகன…
-
- 8 replies
- 1.1k views
-
-
என்ன அங்கிள் ஜிம்மியோட வாக்கிங் போறீங்கள் போல.... ஓமடா தம்பி. இந்தப் பார்க்கை யும் ஜிம்மியையும் விட்டா எனக்கு என்ன கதி.. சொல்லு பார்ப்பம். ஏன் அங்கிள் அப்படிச் சொல்லுறீங்க. ஊரில நீங்கள் டொக்டரா இருந்தனீங்கள் தானே. அந்த அனுபவத்தை வைச்சு.. இங்க சரிற்றி வேலை செய்தால் சனத்துக்கு நாலு நல்லது செய்ததாகவும் இருக்கும் உங்களுக்கும் ஓய்வு காலத்தில் நாலு பேரோட பழகின நட்பும் மனத் திருப்தியும் கிடைக்குமே..! நீ சொல்லுறது சரி தான் தம்பி. இப்ப பார் நான் லண்டன் வந்து 6 வருசம் ஆகிட்டுது. ஊரில உள்ள பென்சனைக் கூட எடுக்கப் போக முடியல்ல. மகனட்ட வந்ததோட அவன் கூடவே இருக்கிறன். அவனுக்கும் ஊருக்குப் போற நினைப்பில்ல. அட பென்சன் வருகுது வா ஒருக்கா போய் எடுத்துக் கொண்டு வரும் எண்டால்.…
-
- 11 replies
- 2.1k views
-
-
சிமிக்கி மனோகரா தியேட்டர் முதலாவது வகுப்பு இருக்கையில் நாதனும் சாவித்திரியும் படத்தில் மூழ்கிப்போருந்தனர்.மடமடக்கும் பட்டுச்சேலையில் அவளும் . வெள்ளைச் சட்டை வெள்ளைக்காற்சட்டையில் அவனும்.அவர்களை பார்த்ததுமே புதிதாய் கலியாணமானவர்கள் என்று சொல்லிவிடலாம்.வெள்ளி விழா படத்தில் ஜெமினிகணேசனை ஒட்டி உரசியபடி ஜெயந்தி காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான்நான் பேசுவேன் என்கிற பாடலை பாடிக்கொண்டிருந்தார். எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் அனைவருமே சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். நாதனின் விரல்கள் சாவித்திரியின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொள்ள திரை வெளிச்சத்தில் நாணத்துடன் நாதனை திரும்பிபிப்பார்தாள். நீரும் அசல் அந்த கீரோயின் மாதிரித்தான் இருக்கிறீர் யாரோ புது ஆள். …
-
- 54 replies
- 9.5k views
-
-
யப்பானில் சில நாட்கள் (1) - நடேசன் - - நடேசன் - பயணங்கள் 06 ஜூன் 2025 * Photo by David Edelstein on Unsplash இரவில் டோக்கியோ போய் சேர்ந்ததும் நாங்கள் தங்க வேண்டிய ஹொட்டேலை அண்ணாந்து பார்த்தேன். இத்தனை உயரமான மாடிக்கட்டிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர் தப்புவோமா என்ற வினா மனத்தில் எழுந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது இடத்தில் நடுங்கியபடி இருக்கும் நாடு யப்பான். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி பிரார்த்திப்பார்கள். படைப்பில் நம்பிக்கையற்ற, பரிணாமத்தை நம்பும் நான் என்ன செய்ய முடியும் ? அரைநூற்றாண்டு தாம்பத்தியம் எங்களிடையே இருப்பதால் எனக்கும் சேர்த்து சியாமளாவே பிரார்த்திக்கலாம்! இலகுவான வழி? எப்படி இந்த நாட்டில் இவ்வளவு உயரமான கட்டிடங்கள் நி…
-
- 1 reply
- 531 views
-
-
[size=3] பெண்களை விளங்கிக் கொள்ள முடியாது என்பார்கள். எனாக்கு சின்ன விடயங்களையே விளங்கிக் கொள்ள முடிவதில்லை, இந்த லட்சணத்தில் பெண்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கூடத்தில் வாத்திமார்கள் உனக்கு படிப்பை தவிர மிச்சம் எல்லாம் ஏறும் என்று அடிக்கடி அன்பாக ஆசிர்வாதங்களை வாரி வழங்குவார்கள்.[/size][size=3] எங்களது கல்லூரி ஆண்களால், ஆண்களிற்கு, ஆண்களிற்காக நடத்தப்பட்ட ஒரு காய்ஞ்சு போன பூமி. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரு ஆசிரியையோ, ஒரு பெண் ஊழியரோ கிடையாது. கல்லூரி விடுதியில் கூட பெரியபண்டா, சின்னபண்டா என்று சிங்கள தொழிலாளிகள் தான் வேலை செய்தார்கள்.[/size][size=3] இது இப்படி என்றால் ஊரிலே இருந்த பெட்டைகள் ரொம்ப விவரமா இருந்தாளுகள். முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பா…
-
- 2 replies
- 1.4k views
-
-
Posted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி Posted byBookday04/11/2025No CommentsPosted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவர்கள் காசிருப்போர் படையெடுத்து வந்தனர் சவ்வு மிட்டாய் வாங்கிட. ராமண்ணாவின் சவ்வு மிட்டாய்க்கு பெரியவர் முதல் சிறியவர் வரை அடிமை. அவரின் ஊதல் சப்தம் கேட்டாலே பலர் அவர் முன் குவிந்திடுவர் காரணம் அவரது சவ்வு மிட்டாய் மட்டுமல்ல. அந்த சவ்வு மிட்டாயை சுற்றி இருக்கும் மூங்கில் மேலே இருக்கும்…
-
-
- 6 replies
- 637 views
-
-
தெளிவு ---------- துடியாய்த் துடிக்கிறார். இந்திய அமைதிப் படையின் ஷசெல்| தாக்குதலால் உடம்பெல்லாம் கிழிந்து போய் ஒரு கிழட்டு உயிர் சாவோடு போராடுகிறது. உரும்பிராயில் எல்லோருடனும் 'நல்ல மனிதராய்' வாழ்ந்துவிட்ட ஒருவர். செல்வா காலம் - சிவகுமாரன் காலம் - பிரபாகரன் காலம் மூன்றையும் தன் நீண்ட நெடிய வாழ்வில் நேரில் கண்டு, வீறு மிக்க விடுதலைப் போரில் தன்னையும் எங்கோ சேர்த்துக் கொண்ட பெருமை. நல்ல விடுதலை உணர்வாளர். அதிகம் பேசாத வாய். இத்தனை காலமும் சாவுக்குத் தப்பிய அந்த நல்லவர் இந்திய வெறிப்படையின் ஷ செல் | அடித்து இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். கண்களில் நீர் பொங்கப் பக்கத்து வீடுகளின் சிறுவர்கள் - இளம…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜனனம்! “பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். ‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார். http://www.eegarai.net
-
- 0 replies
- 627 views
-
-
அது ஒரு மிளாகாலம் நம்ம பெரிய மாமா, அம்மாவுக்கு அண்ணன், ராணுவ அதிகாரியாயிருந்தவர். மாமியின் அநியாயமான அகால மரணத்துக்குப் பின்னால் மாமா எல்லையை விட்டுவிட்டு சென்னைக்குக் குடிவந்து என்ஸிஸி அதிகாரியாய்ப் பதவி வகித்தார். கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் ஏரியாவில் மேஜர் ரஹீம் என்றால் ரொம்பப் பிரபலம். மேஜர் ரஹீம் மட்டுமல்லாமல், அவருடைய டீன் ஏஜ் மகள்கள் ரெண்டு பேரும் கூடப் பிரபலம். மேஜர் ரஹீம் லெஃப்ட்டினன்ட் கர்னல் ரஹீமாய் உயர்ந்துவிட்டிருந்த காலத்தில், ஒரு கோடை விடுமுறையில், பாளையங்கோட்டை அசோக் டாக்கீஸ் பஸ் ஸ்டாப்பில் மூணாம் நம்பர் பஸ் ஏறி, திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலேறி, சென்னை எழும்பூரில் வந்து இறங்கியபோது தன்னுடைய லாம்பரெட்டா ஸ்கூட்டரோடு மாமா என்னை வரவேற்க வந்திரு…
-
- 1 reply
- 998 views
-
-
அந்த சிறு கிராமத்துக்கு ஆசிரியப்பணி நிமித்தம் மாற்றலாகி வந்து ஒரு வாரம் இருக்கும். வசுமதி தன் கைக் குழந்தை சுதாகரனோடு தன் தாயார் வீடு நோக்கி பட்டணத்துக்கான பஸ் வண்டியில் ஏறினாள். அது ஒரு இரு மணி நேர பயணம் சற்று கூடலாம் அல்லது நேரத்துக்கு போய் சேரலாம். சரியான் ஜன நெரிசல். ஒருவாறு இருக்க இடம் கிடைத்து டிக்கட் எடுத்து குழந்தையை மடியில் வைத்து நித்திரையாக்கி னாள். ஒரு மணி நேரத்துக்குபின பஸ் வண்டியின் தாலாட்டில் உறங்கிய நம் சின்ன வாண்டுபயல் எழுந்து விடான். அவள் புட்டியில் இருந்த கொதித்தாறிய நீரை பருக கொடுத்தார் அதை சப்பி குடித்தவனுக்கு அடங்க வில்லை. தாயின் அணைப்பு வேறு அவன் தாகத்தை தூண்டவே ..அடம்பிடித்து அழுதான். வண்டியில் இருந்தவர்கள் .... கொஞ்சம்காற்று வர…
-
- 7 replies
- 2.8k views
-
-
இயற்கையின் சீற்றத்தினால் நிலம் அதிர்ந்தது, கடல் ஊருக்குள் புகுந்தது,.ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அழிவு, பெரும் சொத்து நாசம் இதுவெல்லாம் அண்மைக்கால செய்திகள் .அதன் உச்சகட்டமாக ஜப்பானில் நடந்த அண்மையில் நடந்த அழிவினால் ஒரு முறை அணுகுண்டால் அழிந்த அந்த நாட்டில் இன்னுமொரு அணு கதிர் கசிவு ஏற்பட போகுது என்ற செய்திகள்.அந்த நாட்டை கடந்து தங்கள் நாட்டுக்கு வந்துடுமோ என்று அஞ்சு நாடுகள். தங்களுக்கு இந்த பிரச்சனையால் ஒரு ஆபத்து இல்லை என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்தும் நாடுகள் . இவையை பற்றித்தான் இந்த டிவி பத்திரிகை மற்றும் எல்லா தொடர்புசாதனங்களில் எல்லாம் பேச்சு ஆராய்ச்சி விளக்கம் கட்டுரைகள் .என்ன என்ன எல்லாம் விளக்கத்துடன் படங்களுடன் காரணங்களும் தீர்வுகளும் சொன்னாலும் அனுபவம் வ…
-
- 1 reply
- 1.6k views
-
-
புலத்தில் மட்டும் அகதியாக இடம் பெயர்ந்து அதன் வலியை உணர்ந்த நான் , என் தாய் மண்ணில் அகதியாக இடம்பெயர்ந்த வலியை உணரத்தவறி விட்டேன் .அவை எனக்கு வெறும் செவிவழிச்செய்திகளே . நெருடியநெருஞ்சியில் , எனது பால்ய சினேகிதி பாமினி மூலம் இடப்பெயர்வின் வலியைத் தொடமுயற்சித்தாலும், அதுவும் எனக்கு ஓர் அனுபவப் பகிர்வில் வந்த வலியே . அண்மையில் என்னை மிகவும் பாதித்த ஓர் பதிவை உங்களுடன் பகிர்கின்றேன்.................................... அந்த நாட்களை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. என் பாட்டியின் வீட்டிற்கு எப்போதாவது பின்னேரங்களில் சென்று வருவேன்.அப்படித்தான் அந்த 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் திகதியும் கொழும்புத்துறையில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து வரச் சென்றேன்.ஆமி முன்னேறி வருவதாகச் ச…
-
- 4 replies
- 1.3k views
-
-
அவள் மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்.. கைகள் தறியில் லயித்திருந்தாலும், மனம் முழுதும் மாறனே வியாபித்திருந்தான். உள்ளத்தில் அவன் நினைப்பு வர உதட்டில் புன்னகை அரும்பியது! பால்யவயதுத் தோழன் தான், எனினும் பருவ வயது வந்தவுடன் தான் அந்த மாற்றம் புரிந்தது! அவனைப் பார்த்ததும் எங்கிருந்தோ அவளுக்கு வெட்கம் வந்துவிடும், சொற்கள் இடம்மாறும்! கால்கள் தடுமாறும்!! பக்கத்து வீட்டு வள்ளி சொல்லித்தான் தெரிந்தது இது "அது" தான் என்று... கிட்டத்தட்ட 10 வருடங்கள்... 10 இன்பமயமான வருடங்கள்... அவனுக்காக காத்திருப்பதிலும், கதை பேசுவதிலும் அத்தனை இன்பம் அவளுக்கு...! இடையிடையே கைபிடிப்புகள், கட்டியணைப்புகளும் இடம்பெறத் தவறுவதில்லை. அரசகுமாரி அவள்.. அரண்மனை தோட்ட…
-
- 4 replies
- 1.7k views
-