கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3083 topics in this forum
-
"பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!" *************************************** குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்... நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சம…
-
- 25 replies
- 4.5k views
- 1 follower
-
-
டொரன்டோவில் இருந்து மூன்று மணி நேரப்பயணத்தில் உள்ளது ஸ்ட்ராட்போர்ட், பிரிட்டீஷ்காரர்கள் அதிகம் வசிக்கும் அழகிய சிறிய நகரம், இங்கே ஆண்டு முழுவதும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதற்காக ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே பிரத்யேகமான குளோப் தியேட்டர் எனும் விஷேச அரங்கினை உருவாக்கியிருக்கிறார்கள், இந்தக் கோளவடிவ அரங்கில் ஒரு நேரத்தில் 1800 பேர் உட்கார்ந்து நாடகம் பார்க்க முடியும் இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகப்பிரதிகள் நவீனகால ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் மூலவடிவத்திலே நிகழ்த்தப்படுகின்றன, ஒரு நாடகம் மூன்று மணி நேரம் நடைபெறக்கூடியது, ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மரபான தயாரிப்பில் காண்பது ஒரு தனித்துவமான அனுபவம், ஸ்ட்ராட்போர்ட்டில் ஆண்டு முழுவதும் …
-
- 1 reply
- 806 views
-
-
தேவ இரகசியம் - படித்ததில் பிடித்த கதை ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருந்தாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான். எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி “அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு” என்றான். இந்த எமதூதன் “ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக் கொண்டு போய்விட்டால் இந்தக் குழந்தைக்கு யார் கதி” என்று தாயின் உயிரைக் கவராமல் திரும்பி விட்டான். நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை, அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள். எமதூதன…
-
- 1 reply
- 832 views
-
-
ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் 1. மீண்டும் சிவகாமியின் சபதம் கே.என்.சிவராமன் இந்த இடம்தான். இங்குதான் தன்னைச் சந்திக்க ஒரு நபர் வருவார் என்றும் அவர் சொற்படி நடக்கும்படியும் புலவர் தண்டி கட்டளையிட்டிருந்தார். அதை ஏற்றே மல்லை கடற்கரைக்கு கரிகாலனும் நடந்து வந்திருந்தான். ஆனால், எப்போதும் மனதை ஆற்றுப்படுத்தும் அந்த இடம் அன்று ஏனோ அலைக்கழித்தது. நிச்சயம் சந்திக்கப்போகும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வியின் அழுத்தத்தால் இந்த உணர்வு விளையவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கையே அது. என்னவாக இருக்கும்? மேடான பகுதியில் அழுத்தமாகக் கால்களை ஊன்றியபடி புருவங்கள் முடிச்சிட சுற்றும்முற்றும் அலசத் தொடங்கினான். வைகாசி மாத சுக்கில ப…
-
- 171 replies
- 62.4k views
- 1 follower
-
-
என்ன ஆதங்காக்கா ...? இண்டைக்கு இரண்டு போத்தல் தயிர் எடுக்கலாமா, சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த எருமைகளை தா ...தா என்று தள்ளிக்கொண்டு வந்த ஆதமிற்கு இடது காது ஸ்பீக்கர் கொஞ்சம் அவுட், ஆதமும் ங்கே என்று முழுச.. இரண்டு போத்தல் தயிர் ....தயிர் என்று பலங்கொண்டமட்டும் கத்தினார் கணேஸ், கணேசின் கதறலை கேட்டு பக்கத்துவீட்டு ராஜன் தெருவிற்கு வேடிக்கை பார்க்க ஓடிவர, கணேசின் குரல் ரகசியம் பேசுவதை போல் ஆதமிற்கு கேட்டது, எப்படியோ கணேஸ் சொல்லவந்ததை விளங்கிக்கொண்ட ஆதம், ஓவ் ...ஓவ்வ் ...கொண்டாரன்...ஹா என்று விட்டு பட்டியை விட்டு விலக எத்தனித்த எருமை கன்று ஒன்றை கையிலிருந்த இப்பில் கம்பைவைத்து தட்டி மீண்டும் பட்டியை மேய்த்துக்கொண்டு தெரு முனை சந்தியை நோக்கி முழு எருமை பட்டியையும் …
-
- 1 reply
- 1.1k views
-
-
ராணி மஹால் - ஷோபாசக்தி அப்போது நேரம் அதிகாலை அய்ந்து மணியாகிவிட்டது. வசந்தகாலம் பிறந்திருந்தது என்றாலும், ‘செய்ன்’ நதியிலிருந்து எழுந்துவந்த ஈரலிப்பான காற்றில் குளிரிருந்தது. நதிக்கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் அன்னராணி நடந்துவந்தார். கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல், அவர் இந்தப் பாதையில் நடக்கிறார். அன்னராணி ஒற்றையடிப் பாதையின் முடிவிலிருந்த சிறிய தார் வீதியில் ஏறி, உயரமான முன் ‘கேட்’டைத் திறந்துகொண்டு சிறிய புல்வெளியைத் தாண்டி நடந்தார். புல்வெளியில் அலங்கார மின் விளக்குகள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அவரின் எதிரே கம்பீரமாக ராணி மஹால் நின்றிருந்தது. ‘மந்த் லா ஜொலி’ என்ற இந்தச் சிற்றூர் புகழான வரலாற்றுப் பின்னணிகொண்டது. பிரஞ்சு அரசன் இரண்டாம் பில…
-
- 7 replies
- 1.3k views
-
-
மாபெரும் தாய் –அகரமுதல்வன் 01 வானிலை அற்புதமாக இருந்தது. குளிரில் குழையும் காற்று புன்முறுவல் பொங்கி வீசியது. அந்தியின் வாசனை உறக்கத்திலிருக்கும் ஆச்சியின் கனிந்த உடல் மீது எறும்புகளாய் ஊரத்தொடங்கியது. ஒதிய மரத்தின் பழுத்த இலைகள் உதிர்ந்து ஆச்சியைத் தீண்டின. உறக்கம் அந்தரங்கத்தின் பெருமழை. மின்னல் ஒளியும் பேய் இடியும் பிறந்து கொண்டேயிருக்கும் இந்த உறக்கம் ஆச்சியின் உடலை அத்துணை துல்லியமாக வந்தடைந்திருந்தது. புராதனக் கலத்தைப்போல அசைவின்றியிருந்த ஆச்சி கீர்த்திமிக்க வரலாற்றைப் போல சாந்தம் வழிய புரண்டு படுத்தாள். கிளித்தட்டு விளையாடி முடித்து வீடுகளுக்குத் திரும்பும் இக்கிராமத்தின் இளந்தாரிகள் ஒதியமரத்தைக் கடந்து போகையில் “ஆச்சி எழும்பன,உன்ர மந்திரக்கத்தியை எடுத்த…
-
- 0 replies
- 568 views
-
-
கலந்துரையாடல் - சுரேஷ்குமார இந்திரஜித் என் பெரியப்பா தா. ச. மயில்வாகனன் தீவிர சைவர். ‘நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க’ என்று தொடங்கும் பாடலை ராகத்தோடு அடிக்கடி பாடிக்கொண்டிருப்பார். “ராமன் வழிபட்ட தெய்வம் அவன்” என்பார். “சிவன் தப்பு செய்துவிட்டு முழிக்கும்போது பெருமாள்தானே அவரைக் காப்பாற்றினார்” என்பார் பெரியம்மா. பெரியப்பா என்றால் என் தாயாரின் உடன்பிறந்த அக்காவின் கணவர். தாயாரின் குடும்பம் சைவ சமய இலக்கியங்களில் பரிச்சயம் உடைய சிவவழிபாட்டுக் குடும்பம். வைணவக் கடவுள் படங்கள் எதையும் நான் அவர்கள் வீடுகளில் பார்த்ததில் லை. தந்தையின் குடும்பம் நாத்திகக் குடும்பம். சாமி படங்களே கிடையாது. பழந்தமிழ் இலக்கியங்களிலும், ஓரளவு நவீன இலக்கியங்களிலும் பரிச்சயம் உட…
-
- 4 replies
- 801 views
-
-
திண்ணை வீட்டுப் பிச்சாயி பாட்டி - ஒரு தலைமுறையின் அடையாளம்! - சிறுகதை #MyVikatan விகடன் வாசகர் பாட்டி ( Representational Image | Pixabay ) வைக்கோலில் வேய்ந்த இந்தத் திண்ணை வீடுதான் இக்கிராமத்தில் தன் அடையாளத்தை இழக்காமல் இன்னும் இருக்கிறது. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! பிச்சாயி பாட்டி வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தாள். சுகமாய் காற்று அடித்துக்கொண்டிருந்தது. …
-
- 1 reply
- 1.2k views
-
-
எச்சரிக்கை!!! பயந்த சுபாவம் உள்ளவர்கள், தயவு செய்து... இதை படிக்க வேண்டாம். கிளிநொச்சி நகரில் உள்ள ஒரு கிராமம்... தென்னந்தோப்புகளும் பாக்கு தோட்டங்களும், மாமர தோட்டங்களும் நிறைந்தபகுதி அது! நிலத்தை ஒட்டிய பகுதியில் வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்துகொண்டு இருந்தது! நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி, அவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை! ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடு களுக்கு புல் அறுப்பதற்காக தென்னந்தோப்புக்கு செல்கிறாள்! அவள்…
-
- 24 replies
- 2.6k views
-
-
உறக்கமில்லாக் குருதி - ப.தெய்வீகன் [1] திரவத்தகடுகள் போல மினுங்கியபடி புரளும் யாரா நதியின் அசைவுகளைப் பார்த்தவாறு கார்த்திகேசு புற்தரையில் அமர்ந்திருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் ரயிலேறி மெல்பேர்ன் நகருக்கு வந்துவிடுகின்ற கார்த்திகேசுவுக்கு, இந்தப் புற்தரை சிநேகமாகி மூன்று மாதங்களாகின்றன. பூப்பையைத் தன் பக்கத்திலேயே பத்திரமாய் வைத்திருந்தார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னரே நீர் தெளித்து கவனமாக எடுத்துவந்த பூக்கள். வீட்டில் பூக்கள் கிடைப்பது கடினம் என்று, மெல்பேர்ன் சிவா விஷ்ணு கோவிலில் சொல்லி எடுத்த பூக்கள் இவை. வெயில் ஏறிக்கொண்டுபோக, நீள் காற்சட்டையைக் கொஞ்சம் மேல்பக்கமாக உருவிப் பார்த்தார். பொருக்கு பரந்திருந்த கால்களுக்குக் கனகாலமாகக் களிம்ப…
-
- 0 replies
- 565 views
-
-
மதூரி கதிர்வேல்பிள்ளை - அனோஜன் பாலகிருஷ்ணன் [1] “ஓயா பஹின தான மெதன” என்றார் ஓட்டுனர். டாக்ஸி குலுங்கி நின்றபோது மதூரி தூக்கத்திலிருந்து விழித்தாள். இடப்பக்கக் கழுத்து வலித்தது. பயணம் முழுவதும் அவளை அறியாமல் துயில்கொண்டிருந்தாள். உதட்டைக் கர்சீப்பால் அழுத்தித் துடைத்து, சரிந்திருந்த ஆடைகளைச் சீர்செய்தாள். இரண்டு சூட்கேஸை சில்லுகள் தரையில் உருள இழுத்துக்கொண்டு லிப்டுக்குள் நுழையும்போது அருகேயிருந்த கடலின் இரைச்சல் அள்ளிவந்து காதில் அறைந்தது. சின்ன வயதிலிருந்து கேட்ட அந்த இரைச்சல் அவளை வருடித் தழுவி, கடலைப் பார்க்கவேண்டும் என்ற உவகைக்குள் தள்ளியது. அந்த நான்கு மாடிக் குடியிருப்பில் அவளுக்குச் சொந்தமான தனி பிளாட் மூன்றாவது அடுக்கில் இருந்தது. அப்பா, அவளின்…
-
- 1 reply
- 713 views
-
-
மண்வெட்டி- கோமகன் சம்பவத்தில் இவர்கள் : பெயர் : லூக்காஸ் யாகோப்பு தொழில் : விவசாயம் உப தொழில் : தேவாலயத்தில் மணியடித்தல் மற்றும் சேமக்காலையில் குழி வெட்டல் அம்மா பெயர் : எலிசபெத் யாகோப்பு மகள் பெயர் : ஜெனிஃபர் 0000000000000000000000 பிருந்தாஜினி பிரபாகரன் “இந்தா……. காலங்காத்தாலை அடக்க ஒடுக்கமாய் வீட்டிலை வேலைவெட்டியளை செய்வமெண்டில்லை பூசி மினுக்கி வெளிக்கிட்டுட்டாள் வே*********. பெத்த கொப்பன் கோத்தைக்கும் ஒரு அறிவில்லாமல் கிடக்கு. எக்கணம் இனி என்ன வில்லங்கத்தை வாங்கப்போறாளோ என்ரை ஏசப்பா ……..” என்ற எலிசபெத்து கிழவியின் குரல் அந்தக் காலைவேளையை மாசுப்படுத்தியதுமில்லாமல், அழகாக வெளிக்கிட்டு வெளியே வந்த ஜெனிஃபரை ஒரு நிமிடம் நிறு…
-
- 1 reply
- 974 views
-
-
Thu, 10 Sept. at 16:41 நெஞ்சில் பதிந்த நிலவு – சித்தி கருணானந்தராஜா டியர் கண்ணன், உங்கள் மெயில் கிடைத்தது. நான் தடுமாறிப்போய் நிற்கிறேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் எப்போது வருவீர்கள்? வீட்டில் ஏதோ கசமுசாவென்று அம்மாவும் அப்பாவும் பேசுகிறார்கள். எனக்குக் கலியாணம் பேசுகிறார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் இதுபற்றி யாரும் இதுவரை பேசவில்லை. கடைசியாகத்தான் என்னிடம் வருவார்கள் என்று நினைக்கிறேன். அதற்கிடையில் நான் என்ன ஏது என்று சரியாகத் தெரியாமல் குறுக்கே விழுந்து எதையாவது கேட்டால் வெட…
-
- 2 replies
- 912 views
-
-
அரம்பை - ஷோபாசக்தி நான் மாலையில் வீடு திரும்பும்போது, என்னுடைய குதிரை வண்டிக்குக் குறுக்கே சென்ற குடிகாரர்கள் இருவரை வண்டிச் சாரதி சவுக்கால் அடித்துவிட்டான். “இறைவனால் கட்டப்பட்ட இலண்டன் நகரம் இப்போது குடிகாரர்களதும் போக்கிரிகளதும் சத்திரமாகிவிட்டது” எனச் சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, இரட்டைக் குதிரைகளை அவன் விரட்டினான். விடிந்தால் 26-ம் தேதி ஜூலை 1833. பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாள். எங்களது காலனிய நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான மூன்றாவது சட்டவாக்க வரைவு நாடாளுமன்றக் கீழவையான பொதுச்சபையில் விவாதத்திற்கு வரயிருக்கிறது. இம்முறை இந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் ஒப்புதலோடு நிறைவேறுவதற்கு எல்லா வாய்ப்புகளுமுள்ளன. ஆனால், இல…
-
- 1 reply
- 1.1k views
-
-
அளவோடு ஆசைப்படு ! ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? எ…
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஒரு கிராமத்திலே சிறந்த கல்விமான் இருந்தார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவரை பேச அழைப்பது வழக்கம் .இப்படியாக ஒரு நாள் மாலை ஒரு கூட்ட்துக்கு அழைப்பு வந்தது அவரும் சென்று தனதுநேரம் வரும் போது உரையாற்ற தொடங்கினார்.உரையின் இடையே வாழ்க்கையிலே உண்மை நேர்மையாக இருக்க வேண்டும் . பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது . என் பல வாறு பேசினார். ஆகா என் கணவர் நேர்மையானவர். தெரியாமல் அற்ப ஆசையில் பக்கத்து வீட்டு சேவலை பிடித்து அடைத்து வைத்து விட்டார் என்று எண்ணி இந்தக் கூட்ட்த்துக்கு அவர்மனைவியும் இவருக்கு தெரியாமல் என்ன நடக்கிறது என் விடுப்புபார்க்க போயிருந்தார். அவர் வீடு வருவதற்கு முன்பே இவர் வந்து கூடைக்குள் ஒழித்து வைத்த பக்கத்து வீட்டு சேவலை திறந்து விட்டு விட…
-
- 0 replies
- 1.2k views
-
-
Operation mongoose: சக்கரவர்த்தி Al combate, corred, bayameses! Que la patria os contempla orgullosa; No temáis una muerte gloriosa, Que morir por la patria es vivir. En cadenas vivir es vivir En afrenta y oprobio sumidos. Del clarín escuchad el sonido: A las armas, valientes, corred! தோழர் வீரக்குட்டியின் உடலெங்கும் ஜிவ்வென்று விறுவிறுத்து ஏறியது இரத்தம். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பாய்ந்த அதே ரத்தம். உரக்க குரல் எழுப்புகின்றார். “பயோமோ மக்களே! போருக்கு ஓடி வாருங்கள்… பயோமோ மக்களே போருக்கு ஓடி வாருங்கள்..!” தோழர் வீரக்குட்டிக்கு ‘ஓலா’ என்கிற ஒற்றை வார்த்தையை தவிர, ஸ்பானிய மொழியில் வேறு எதுவுமே தெரியாது. ஆனால…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
இருள்களி - தெய்வீகன் நல்லதண்ணி கிணற்றடிப்பக்கத்திலிருந்து பாய்ந்து வந்து அவள் எனது சைக்கிளை மறித்தாள். மறித்தாள் என்பது மரியாதைக்குரியதாக செயலாக கருதப்படலாம். உண்மையைச் சொல்வதானால், சைக்கிளின் கைப்பிடி நடுஇரும்பின் மீது தனது ஒரேகையை அதிகாரத்தோடு அழுத்தி நிறுத்தினாள். அதற்கு நான்கைந்து விநாடிகளுக்கு முன்னர் “அண்ணா, அண்ணா…” – என்று இரண்டொரு தடவைகள் அவள் அழைத்த குரலுக்கு திரும்பிப்பார்த்து, நானாகவே அவள் பக்கத்துக்கு சைக்கிளைத் திருப்பியிருந்தால், எனது மரியாதைக்கு இவ்வளவு கேடு ஏற்பட்டிருக்காது. கிணற்றடிக்கு அருகாக உள்ள நெல்லிமரத்துக்குக்கீழிருந்து கச்சான் விற்கின்ற அந்தக்கிழவி அன்றில்லை. பாடசாலைவிட்டு வரும்வழியில் தாமரை பிடுங்குவதற்காக குளத்துக்குள் இறங்கும்ப…
-
- 0 replies
- 967 views
-
-
கடவு திலீப்குமார் குறைவாகவே எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதக் கூடாதா என்று நினைக்க வைப்பவர்களில் ஒருவர். அவருடைய கடிதம், மூங்கில் குருத்து சிறுகதைகள்தான் எப்போதும் பேசப்படுகின்றன. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை இதுதான். அடுத்தபடியாக தீர்வு. பிறகுதான் மிச்சம் எல்லாம். விவரிக்க விருப்பமில்லை, படித்துக் கொள்ளுங்கள்! - ஆர்வி திலீப் குமார் சிறுகதைகள் தொகுப்பிலிருந்து: •••••••••••••••••••••••••••••••••••• இந்த முறை கங்குப் பாட்டி யாரையும் ஏமாற்றாமல் செத்துத்தான் போவாள் என்று தோன்றியது. ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எப்போதும் போல அன்றும் நள்ளிரவுக்கு மேல் மூன்றாம் ஜாமத்தில்தான் கங்குப் பாட்டிக்கு மூச்சு முட்டியது. வழக்கம் போல கால்களை நீட்டி…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் க…
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
லொறி- க.கலாமோகன் சில வாரங்களாகவே நான் அவளை எனது வீட்டின் அருகில் உள்ள மதுச்சாலையில் கண்டு வருகின்றேன். அங்கு சில வேளைகளில்தான் போயிருந்தாலும் , அவள் மீண்டும் அங்கு போக என்னைத் தூண்டினாள். நிச்சயமாக எனக்கு அவள் மீது காதல் தொடங்கியது என நினைக்கவேண்டாம். ஆனால் அவள் என்னைக் கவர்ந்தாள். அவளது முகம் வட்டம். விழிகள் பச்சை. உடல் மிகவும் மெலிவு. நீல டவுசர். அவளின் முன் ஓர் பியர்க் கிளாஸ்…. அவளது அருகிலோ சிரித்தபடியும் ஆடியபடியும் சிலர்… நான் அதிகாலையில் தொழிலுக்குச் செல்லும் வேளையில் மதுச்சாலை மூடிக் கிடக்கும். ஆழமாக அதன் கதவுகளைப் பார்ப்பேன். அந்தக் கதவுகளில் உள்ள சித்திரங்கள் எனக்கு மகிழ்வைத் தருவன. ஓர் வயோதிபர் தனது கண்களைச் சிமிட்டிச் சிரித்துக் கொண…
-
- 1 reply
- 676 views
-
-
குகைவாய் கழுகு - ப.தெய்வீகன் சுபத்ரா நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறாள். முடிவெடுக்கும் திசை தெரியாமல் குழம்பியிருக்கிறாள். ஆனால், ஒருபோதும் வாழ்வை நினைத்து அச்சப்பட்டதில்லை. அடுத்த கணத்தை எண்ணி பீதியடைந்ததில்லை. இன்று மிருதுளா விடயத்தில்தான் பாம்பொன்றின் தொண்டைக்குள் அகப்பட்டிருப்பதுபோல அவள் உணர்ந்தாள். வருணின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்குள், உருட்டிச்செல்லும் வேகத்தில் வாகனத்தை மெதுவாக ஓட்டியபடியிருந்தாள். தரிப்பிடமொன்றினைத் தனது பதற்றம் மிகுந்த விழிகளினால் துழாவித் தேடினாள். வசதியான இடத்தைக் கண்டுபிடித்து, அதில் வாகனத்தை நிறுத்தும்போது, மெல்பேர்ன் “ரோஹினி ஸ்பைஸஸ்” உரிமையாளரும் மனைவியும் சுபத்ராவுக்கு கை காட்டியடி, மண்டபத்தை நோக்கி…
-
- 1 reply
- 741 views
-
-
உங்கள் வாழ்க்கையில் இறைவனை உணர்ந்து உள்ளீர்களா? சிறு கதைதான் பேருண்மையை உணரவைக்கிறது. அன்றைக்கும் வழக்கம் போல் பாட புத்தகங்களை எடுத்து வைத்து கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன்.உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஆங்காங்கே உடலில் அரிப்பு ஏற்படுவதை போன்ற உணர்வு.பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவசரத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் பள்ளிக்கு சென்று விட்டேன். சரியாக ஒரு மணி நேரம் கழித்து உடலில் மீண்டும் அரிப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் பொறுக்க மு…
-
- 1 reply
- 872 views
-
-
விக்டர்ஹியூகோ சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன் | கனலி http://kanali.in/wp-content/uploads/2021/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B-1-1300x769.jpg “ரஷோந்தி மூசு” என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை நடத்திக் கொண்டிருப்பவர். நிமிர்ந்த உருவம். பழுப்பு நிறம். கல்லூரிக்கால குத்துச்சண்டை சாம்பியன். நடக்கும்போது ஒரு துள்ளல் எப்போதும் இருக்கும். சிரிக்கும்போது கண்களிலொன்று இறுக மூடியும், மற்றையது அரைவா…
-
- 2 replies
- 710 views
-