கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
“சும்மா போ அன …இனி வெறுங்கல்லு .. என்னால தோண்ட ஏலாது” “என்ற அச்சா குஞ்சல்லோ, இன்னும் ரெண்டு அடி தான் .. தோண்டினா .. குத்தி போட்டு மண்மூடை அடுக்கலாம்” “அப்ப பின்னேரம் லலித்தொட கிரிக்கட் விளையாட விடுவியா?” “சரி என்னத்தையும் போய் விளையாடு .. இப்ப இத கிண்டு” அம்மா கிரிக்கட் விளையாட பெர்மிஷன் தந்த சந்தோசத்தில் போட்ட பிக்கான் கொஞ்சம் ஆழமாகவே விழ, யாழ்ப்பாணத்து கல்லு “நங்” என்று சத்தம் போட்டது. கொஞ்சம் கையால் மண்ணை கிளறி, கல்லை க்ளீன் பண்ணிவிட்டு, மீண்டும் சரியான கொட்டு பார்த்து பிக்கான் போட்டேன். சர்க்கென்று பிக்கான் இறங்க, நான் பிடியை ஒரு எம்பு எம்ப சர்ர்க்க்க்க் என்று இன்னொரு சத்தம். பிக்கான் மரப்பிடி முறிந்துவிட்டது! என்னடா இது சிறுகதை போலே ஆரம்பிக்கிறே…
-
- 26 replies
- 5.4k views
-
-
சில்லென்ற மழைத்தூறல் முகத்தில் பட சுய நினைவுக்கு வந்தாள் விது. அன்பான அம்மா கண்டிப்பையே முகத்தில் வைத்திருந்தாலும் பாசத்தை மழையாக பொழியும் அப்பா. குட்டி என்று செல்லமாக நுள்ளியும் கிள்ளியும் விளையாடும் மூன்று அண்ணாமார்கள். பூத்துக்குலுங்கும் மல்லிகை பந்தலின் கீழ் நாற்காலியை இழுத்து போட்டு விட்டு நிலா ஒளியிலே ஆயிரம் ஆயிரம் செல்லங்கள் பொழிந்தவள் இந்த விது. அப்பா சாப்பிடும்போது ஓரு வாய் அம்மா சாப்பிடும்போது இன்னொரு வாய் சோறு அம்மம்மா சாப்பிடும்போது இன்னொரு முறை. ஏன் நாய்க்கு சாப்பாடு போடும் போதும் ஓரு முறை சாப்பிடவேண்டியது தானே? என்ற அண்ணான்மார்களின் நக்கல். இப்படியாக இன்பத்தையே கண்டு பழகியவளுக்கு வாழ்க்கையின் மறு பகுதியில் துன்பம் என்று ஒன்று இருக்கு என்பது அப்போது தெரியவில்…
-
- 26 replies
- 5k views
-
-
ரேணுகா எழும்பு பிள்ளை வேலைக்கு போக நேரமாகி விட்டதல்லவா எழும்பு என்று அவளின் அம்மா சாந்தி அவளை எழுப்ப அவளோ அம்மா எனக்கு இன்று உடம்பு சரியில்லை யென்று மீண்டும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விட்டாள் அவள் அம்மாவோ விட வில்லை என்னடி சொல்கிறாய் உடம்பு சரியில்லையா இல்லை அங்க ஏதாவது பிரச்சினையா எனகேட்க அப்படி ஒன்றும் இல்லை சொல்கிறாள் இல்லை நீ எதையோ மறைக்கிராய் என்று அம்மா சொல்ல ஓம் அம்மா என்கிறாள் ரேணுகா..அவளின் அண்ணனோ குறுக்கால வந்து இவா வேலைக்கு போய்த்தான் நாங்கள் சோறு தின்ன வேணுமாக்கும் என்று சொல்ல அந்த வேலையை விடு என்றான் அவள் அண்ணன் ஆனால் அவள் அம்மாவோ நீ சும்மா இரடா என்று பொம்பிளை பிள்ளை வேலைக்கு போனால் உனக்கு என்ன என்று கேட்க அவனோ உனக்கு என்ன அம்மா தெரியும் …
-
- 26 replies
- 8.2k views
-
-
நான் அப்போது அகதியாய் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில கொக்குவிலில இருந்தன். அது போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்த காலம். அன்று ஒரு நாள் பிரவுன் வீதியால யாழ்நகர் நோக்கி துவிச்சக்கரவண்டியில போய்க்கொண்டு இருக்கேக்க எதிராக இன்னுமோர் துவிச்சக்கரவண்டியில சென்ற ஒருத்தன் திடீரெண்டு என்ர பெயரைச் சொல்லி கூப்பிட்டான். நானும் ஆச்சரியப்பட்டு யார் என்று திரும்பிப் பார்த்தன். அது எனது பழைய நண்பன். முந்தி பாடசாலைக்கு நாங்கள் இரண்டுபேரும் ஒன்றாய் போவம். வகுப்பிலையும் பக்கத்தில பக்கத்திலதான் இருக்கிறது. ஆரம்பத்தில அவன் எனக்கு உயிர் நண்பன் மாதிரி. ஆனால்.. நாங்கள் நாலாம் வகுப்பு படிக்கேக்க இரண்டுபேருக்கும் ஒரு சண்டை. அவன் எனக்கு அடிச்சுப்போட்டான். அதுக்கு பிறகு நாங்கள் ஆளோட ஆள் இரண்ட…
-
- 26 replies
- 7.5k views
-
-
ஸ்டாக்ஹோல்ம் செல்வதற்கான விமானம் 86 வது நுழைவாயிலில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், மெதுவாக நானும் என் மனைவி அம்முவும் கைக்கோர்த்துக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று. என ஒவ்வொன்றாக , கடந்தபடி 70 வது நுழைவாயில் வரை வந்தாகிவிட்டது. கண்ணாடி சுவர்களின் வழியாக குழந்தைகளும் , இளைஞர்களும் , நடுத்தர வயது மக்களும், விமானம் வந்து நிற்பதை அது புறப்படுதை வியப்பாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விமானங்களில் எத்தனை முறை பறந்தாலும், விமானங்கள் தரையில் ஓடும்பொழுதும் தலைக்கு மேலேப் பறக்கும் பொழுதும் தலைசாய்த்து பார்ப்பதும் ஒரு சுவாரசியந்தான். அவர்களுடன் அம்முவும் சேர்ந்து கொண்டது மனநிலையை மேலும் ரம்மியமாக்கியது. குட்டிநகரமே இந்த ஜூரிச் விமானநிலையத்தில் இருப்பதை…
-
- 26 replies
- 2.7k views
-
-
நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கஜனின் மனதிலும் ஒரு வித பதட்டம் அதிகரித்தது. வழமைக்கு மாறாக இதயம் விரைந்து அடித்துக் கொண்டது. இதயத் துடிப்பின் சத்தத்தை காதுகள் கூட உணர முடிந்தது. கால்களில் ஒரு வித நடுக்கம் பற்றிக் கொண்டிருந்தன. நெற்றியால் வியர்த்து ஊர்த்திக் கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் மத்தியில் கண்களைக் கூர்மையாக்கி அவள் மிக நெருங்கி வரும் வரை காத்திருந்தான். வெள்ளை வெளீர் என்ற பள்ளி உடையில் உயர்தர மாணவிக்குரிய மிடுக்குடன் பாவனா தோழிகள் சகிதம் நடந்து வந்து கொண்டிருந்தாள். வழமையாக காணும் பாவனாவாக அன்றி அன்று அவளின் முகத்தில் அழகு ஒளிவீசிக் கொண்டிருந்தது. நேற்றிரவு முகத்தை பசைகள் தடவி வெளிர்க்க வைத்திருப்பாளோ என்ற எண்ணத்தை மனதில் பறக்க விட்டபடி.. எக்ஸ்கியூஸ் மி.. …
-
- 26 replies
- 3.5k views
-
-
முகவரி தொலைத்த முகங்கள். மலைகள் இதளிற்காக.. சாத்திரி..பிரான்ஸ் ஸ்பெயின் நாட்டின் கலிலா என்கிற கடற்கரை நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்களில் ஒன்றில்தான் வரதனின் வீடும் இருந்தது.அவரிற்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் வரதனைப் போலவே கப்பல் மாலுமி ஆனால் ஒரு உல்லாசப் படகின் மாலுமியாக இருக்கின்றான். மகள் பாசிலோனா நகரில் தங்கியிருந்து உயர் கல்வி பயில்கிறாள்.மனைவி இரண்டு வருடங்களிற்கு முன்னர் தான் நோய்வாய்ப் பட்டு இறந்து போயிருந்தாள். இப்போ இந்த வீட்டில் வரதனும் அவரது வளர்ப்பு நாயான புலி மட்டுமே. மகள் ஆசைப் பட்டு கேட்டதற்காக அந்த நாய்க்குட்டியை வரதன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதற்கு என்ன பெயர் வைக்கலாமென அனைவரும் ஆலோசித்தபொழுது மகள் ரைகர் என்று வைப்போம் என…
-
- 26 replies
- 3.4k views
-
-
வாங்கோ அண்ணா.. அழைக்கும் குரலைக் கேட்டு ஓர் அதிர்ச்சி.. என்ன அழகா தமிழ் கதைக்கிறான்.. தமிழ் ஸ்கூல் போறவரோ.. வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த தந்தையை பார்த்து எனது வினவல் எழுந்தது.. தமிழ் பள்ளிக்கூடம் போறனான்... ஞாயிற்றுக்கிழமைகளில. கேம்பிரிஷ் ஜீ சி ஈ தமிழ் சோதனை எடுத்து "ஏ" சித்தி வைச்சிருக்கிறன்..... தந்தையை பார்த்துக் கேட்ட கேள்விக்கு மகன் பதில் தந்தான். அப்ப.. வீட்டில தமிழ் தான் மகனோட கதைக்கிறனீங்களோ.. அப்பவும் அவனே குறுக்கிட்டு.. அப்பா அம்மாவோட தமிழ் தான். தங்கச்சிகளோட தான் ஆங்கிலம் கதைக்கிறனான். நான் லண்டனில பிறந்திருந்தாலும் வாழ்ந்தாலும்.. சின்னனில இருந்தே தமிழ் படிக்கிறன். அவனின் பதில்களை செவிகளூடே வாங்கிக் கொண்டு.. தந்தையை நோக்கியே எனது அடுத…
-
- 26 replies
- 2.9k views
-
-
பூமாதேவி சிரிக்கிறாள் பூமாதேவி சிரிக்கிறாளா அப்பிடியெண்டால் என்னவெண்டு யோசிக்கிறவைக்கு இப்ப உலகத்திலை நடக்கிற இயற்கை அழிவுகளைத்தான் பூமாதேவி சிரிக்கிறாள் எண்டு எழுதினனான்.சீனாவிலை பூகம்பம் பல்லாயிரம்பேர் மரணம். பர்மாவிலை சூறாவளி இரண்டுலச்சம்பேர் மரணம். அமெரிக்கா கலிபோர்ணியாவிலை காட்டுத்தீ பலநூறுபேர் கருகிக்போச்சினம் எண்டு இந்தமாதம் முழுக்க எல்லா செய்திகளிலையும் பாத்து பாத்து பாதிவாழ்க்கை வெறுத்துப்போச்சுது. அப்ப இன்னமும் பாதி இருக்கிதுதானே எண்டு கேக்கக்கூடாது. அது எங்கடை இனத்தின்ரை இழப்பை பாத்து அந்தப் பாதியும் ஏற்கனவே வெறுத்துப் போச்சுது. அதுதான் மொத்தமாய் வெறுத்துப்போச்சுதே பிறகேன் எங்களை வெறுப்பேத்திறாயெண்டு கேக்கிறவைக்கு......அதுதான் என்ரை நோக்கமே யான்பெற்ற இன்…
-
- 26 replies
- 5k views
-
-
எங்கள் ஊர் நதியாவும் எனது நினைவுகளும் - அங்கம் - 1 12வருடங்களின் பின் ஊரை மிதித்த போது உண்டான மகிழ்வும் நாங்கள் படித்த அந்த ரியூசன் வளவும் அது தந்த ஞாபகங்கள் எத்தனையோ. அந்த மாமரமும் பலாமரமும் சொன்ன சோகங்கள் இதயத்தை இறுக்கிப் பிழிந்து மனசை வதைத்த கணங்கள் ஒவ்வொன்றும் நினைவுகளை விட்டுப் போகாமல் மனசுக்குள் மழைத் தூறலாய் நனைத்துக் கொள்கிறது. அது 'பிறெய்ன் கல்வி நிலையம்" 6ம்வகுப்பு முதல் 9ம்வகுப்பு வரை கல்வி தந்த அந்த வளவும் சிவாமாஸ்ரரின் உழைப்பில் குப்பிளானிலேயே முதல்தர கல்வி நிலையமாக உருவாகியது மட்டுமின்றி ஊரிலே உருவாகிய அனேகமான இளம் கெட்டிக்காரர்களின் உருவாக்கத்திலெல்லாம் ஊக்கு சக்தியாய் நின்ற அந்த மனிதரின் உழைப்பெல்லாம் இன்று உருக்குலைந்து உருமாறி..... அந்த …
-
- 26 replies
- 5.4k views
-
-
சங்கடம் யோ.கர்ணன் அண்மையில் எனது முகப் புத்தகத்திற்கு ஒரு நட்பு வேண்டுகோள் வந்திருந்தது. அவருக்கு மொத்தம் ஐந்து நண்பர்கள். அவரது பிறப்பிடமாக கிளிநொச்சியை குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு அனாமதேய நபராக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன்தான் அவரை நண்பராக எற்றுக் கொண்டேன். எனக்கு சந்தேகம் வர காரணம் ஓரிரண்டு கிளிநொச்சி ‘பொடியள்’ இப்படி பல அனாமதேய கணக்கில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள் (ஆண்,பெண் பெயர்களில்). நான் நினைத்தது சரியாகவேயிருந்தது. அவர் மிக நாகரிகமாக ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அதனை ஒரு வரியில் சொன்னால் ‘நீயெல்லாம் உருப்படுவியா’ என்று வரும். உண்மைதான். எனக்கு கூட இந்த சந்தேகம் பல காலமாக இருந்து வருவதுதான். அதுவும் குறிப்பாக கடந்த ஓரிரண்டு வருடமாக அதி…
-
- 26 replies
- 2.6k views
-
-
அம்மாவுடன் கோவிலுக்கு போவது என்றால் எனக்கு சின்ன வயசில் விருப்பமில்ல,அவர் மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில் கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்." தம்பி ஒருதரம் சுற்றினால் பலன் கிடையாது கடவுளின் அருள் கிடைக்க வேணும் என்றால் மூன்றுதரம் சுற்ற வேண்டும், அத்துடன் கோவிலுக்கு போகும் பொழுது நடந்து போனால் இன்னும் அதிக வரம் கிடைக்கும்"என சொல்லுவார். சின்ன வயசு தாய் சொல்லை தட்டாதே என்பது நன்றாகவே மனதில் பதிந்து விட்டத…
-
- 26 replies
- 2.8k views
-
-
விம்பம் இதமான காலை நேரம். இளவேனிற் காலத்தின் ஆரம்பம். ஆங்காங்கு புள்ளினங்களின் கீச் ;கீச்’ ஒலி. ஐன்னல் திரைச்சீலை இடைவெளிகளினூடாககதிரவனின் ஒளிக்கீற்று கட்டிலில் விழ ஆரம்பித்தது. ராதி மெதுவாகப் புரண்டு படுத்தாள். மெல்லிய திரும்பலிலேயே வயிற்றுக்குள் குழந்தை உதைத்தது.‘’அம்மா’’ என்ற வார்த்தை அவளையறியாமலேயே தன்னிச்சையாய் உதிர்ந்தது. ரமேஸ் அதிகாலையிலேயே எழுந்து வேலைக்குப் போய்விட்டதால் பக்கத்துப் படுக்கை வெறுமையாய்க் கிடந்தது. ரமேஸ் அவன்தான் எவ்வளவு நல்ல கணவன். மெல்ல எழுந்து திரைச்சீலைகளை நீக்கி விட்டாள். கண்ணாடி ஐன்னலூடாக வீதியில் அவசரம் அவசரமாக அசையும் மக்கள் கூட்டம். அவளது நினைவுகள் தான் பிறந்து வளர்ந்த அந்த அழகிய கிராமத்தை அச…
-
- 26 replies
- 5k views
-
-
அன்று கடும் வெக்கையாக இருந்ததால் மாலைக் காற்றின் ஈரலிப்பில் களித்திருக்க வீட்டுத்தோட்டத்துக்கு வந்த நந்தினி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கூலா ஒரு கோலா குடிக்க ஆரம்பித்திருந்தாள். அப்போது அவள் அருகே இருந்த செவ்வரத்தையில் இரண்டு சிட்டுக்குருவிகள் அருகருகே இருந்து அலகுகளால் ஒன்றை ஒன்று கோதியபடி காதல் மொழி பேசிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து வியந்து கொண்டே ஆகாயத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டாள். அப்போது வீட்டு கேற்றடியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஓ.. சங்கர் வந்திட்டார் போல. அவருக்கும் ஒரு கோலா எடுத்துக் கொண்டு வந்து வைப்பம்.. களைச்சு விழுந்து வந்திருப்பார் என்று எழுந்து நடக்க முயன்றவளுக்கு சங்கரின் அவசரத்துடன் கூடிய அதட்டல் காதில் விழுந்தது. நந்தின…
-
- 26 replies
- 2.3k views
-
-
அன்புள்ள கறுப்பி நாயே இந்தவார ஒரு பேப்பரிற்காக தொடர்ந்து என்ரை கதையையே எழுதிக் கொண்டு வாறதாலை இந்தமுறை ஒரு நாய்க்கதை எழுதப்போறன்.எல்லாம் ஒண்டுதான் எண்டு முணுமுணுக்காமல் படியுங்கோ ஏணெண்டால் இது 80 களிலை ஊரிலை நான் வளர்த்த நாயின்ரை கதைதான். நாங்கள் வளர்த்த நாய் வயசு போய் செத்துப்போயிருந்த நேரம் என்ரை நண்பன் இருள்அழகனின்ரை வீட்டு நாய் நாலைஞ்சு குட்டிபோட்டிருந்தது.நான் அதிலை ஒரு நரைநிற கடுவன் ஒண்டையும் கறுப்பு பெட்டைக்குட்டி ஒண்டையும் தூக்கிக் கொண்டு வந்திட்டன்.இப்ப அதுகளுக்கு பேர் வைக்க வேணுமெல்லோ??.வீட்டிலை ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை சொல்லிச்சினம். அதே நேரம் என்ரை தங்கச்சி நாயளின்ரை நிறத்தையே பெயராவைப்பம் எண்டிட்டு நரையனுக்கு பிறவ்ணி எண்டும் கறுப்பு கு…
-
- 26 replies
- 5.8k views
-
-
அந்த சன சந்தடியற்ற வெளியில நீண்ட றோட் நீண்டு கொண்டே போகிறது இவர்களும் றோட் முழு வதையும் சொந்தம் ஆக்கியபடி அடைத்த படி சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார்கள் ஏதோ தங்களுக்குள் கதைத்து கதைத்தவற்றில் ஏதோ கண்டு சிரித்து சிரிக்க அதில் நகைச்சுவை இல்லா விட்டாலும் சும்மா சிரித்து அந்த முழு பிரதேசத்தை அதிரவைத்தபடி போகிறார்கள் http://sinnakuddy.blogspot.com/2007/09/blog-post.html
-
- 26 replies
- 5.5k views
-
-
ஊரில் இருந்து இப்ப தான் ஸ்ருடன் என்று லண்டனுக்கு வந்தவள்.. லண்டனில்.. எங்கட ஆக்கள்.. அகதி என்று வந்து வாழுற ஆடம்பர வாழ்க்கையை பார்த்திட்டு.. ஸ்ருடன்ரா இருந்து.. சீரழிவு தான்.. நானும் அகதி ஆவம் என்று.. லோயர் சொல்லிக் கொடுத்த பொய்களோடு அகதி அந்தஸ்துக்கோரி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் (ஹோம் ஆபிசில்) ஒப்புவித்த பொய்கள் வெற்றி பெறும் என்ற ஒரே நம்பிக்கையில்... பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் ஜீவிதா. அப்போது... ஐபோன் சிணுங்குவதை கேட்டு.. அவசரஅவசரமாக கைப்பைக்குள் கையை விட்டு கிண்டி.. ஒருவாறு போனை வெளியே எடுத்தவள்.. வந்திருந்த மெசேச்சை பார்த்ததுமே.. அட இந்த நாயா.. இவன் தொல்லை தாங்க முடியல்லையே.. இவனை எப்படி கட் பண்ணுறது.. ஊரில இருக்கேக்க தான் இவன் தொல்லைன்னா.. இங்க வந்து…
-
- 25 replies
- 3k views
-
-
ஊருக்கு சென்று திரும்பி வரும்போது கொழும்பில் சில நாட்கள் தான் தங்கியிருந்தேன் .அந்த சில நாட்களில் உறவினர்களின் அழைப்பை ஏற்றுகொள்ளுவதில் அதிகமாக கழிந்தது. அதை மீறி இருக்கும் நேரங்களில் இவர் இவரை சந்திக்க வேணும் என்று நினைத்து கொண்டாலும். ,அதற்கு இடம் கொடுக்காமால் என்னை விரைவில் புகலிடத்துக்கு துரத்துவதில் தான் நேரமும் கண்ணாயிருந்தது. கொழும்பு எனக்கு புதிதான ஊரில்லை .கோழி மேய்த்தாலும் கொர்ணமேந்து உத்தியாகம் பார்க்கவேணும் என்று அந்த காலத்து நியதியின் காரணமாக எனது தகப்பானர் நான் பிறக்கும் முன்பிருந்தே பல காலமாக அங்கு ஜீவனம் நடத்தியிருந்தார்.அதனால் நான் பிறந்த பின்னும் சிறுவயது காலங்கள் அங்கு வசிக்க நேர்ந்து இருக்கிறது மேலை உள்ள புகைப்படம் எனது இரண்டு வயதி…
-
- 25 replies
- 4k views
-
-
அப்பொழுது அஞ்சலி லண்டனிலுள்ள அவளது ஒன்றுவிட்ட அக்காவின் வீட்டில் தங்கியிருந்தாள். Kingston College இல் தனது கல்வியினைத் தொடர்ந்து கொண்டிருந்தவளுக்கு அப்பகுதியிலிருந்த KFC இல் பகுதி நேர வேலை. அந்த KFC வேலைக்கு அவள் சென்றிருந்த ஆரம்பத்தில் ஒரு சம்பவம் நடந்திருந்தது. அஞ்சலியிடமிருந்து அழைப்பு வர அதை எடுத்தவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. மறுமுனையில் அஞ்சலி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். இவனுக்கோ என்ன ஏதென்று ஒன்றுமே புரியவில்லை. "அஞ்சு என்னாச்சுமா? ஏன் அழுகிறாய்?" எனக் கலக்கத்தோடு கேட்டான். ஆனால் அவளோ அழுகையை நிறுத்தியபாடில்லை. "அஞ்சு...!" எனக் கொஞ்சம் அழுத்தமாக அழைத்தவன்... "என்ன நடந்தது அஞ்சு..?" என அழுத்தத்தைக் குறைத்து.... கொஞ்சம் வாஞ்சையுடன் கேட்க, "சொறிட…
-
- 25 replies
- 3k views
-
-
ரயிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான். அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்று…
-
- 25 replies
- 19.5k views
-
-
லண்டனிலை நடந்த ஆர்ப்பாட்ட பேரணியிலை கலந்து கொள்ளவும் வேறை பல சந்திப்புக்களிற்காகவும்.லண்
-
- 25 replies
- 4.3k views
-
-
இது வெறும் நகைச்சுவைக்காகவே என்னால் எழுதப்பட்டது . உள்நோக்கங்கள் எதுவும் இதில் இல்லை . நேசமுடன் கோமகன் ************************************************************************************************************************* நேற்று இரவைக்கே என்ரை மனிசி சொல்லிப்போட்டா , நாளைக்கு வேலையால வரேக்கே வோட் பண்ணவேணும் எண்டு . நான் போவம் எண்டு சொல்லிப் போட்டு யாழ் இணையத்தை நோண்டிக் கொண்டிருந்தன் . விடிய எழும்பி ரெண்டு பேரும் வேலைக்கு போகேக்கை என்ரை வாக்காளர் அட்டையை மறக்காமல் மனிசி தந்தா . நான் வேலை செய்யேக்கை என்ரை மண்டையுக்கை சுருள் சுருளாய் வட்டம் போச்சுது . அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருக்கறன் . எங்கடை கோப்பாய் தொகுதிக்கு கதிரவேற்ப்பிள்ளை ஐய்யா தான…
-
- 25 replies
- 4.8k views
-
-
மலர்ந்தும் மலராத காலை பொழுது. வேகமாக நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். கையின் உயர்த்தி கடிகாரதினைப் பார்த்தார். பரவாயில்லை, நேற்று இதே இடத்தில் வந்த நேரத்திலும் பார்க்க இரு நிமிடம் முன்னதாக வந்தது விட்டோமே என்று நினைத்துக் கொண்டார், காலை நடைப் பயிற்ச்சியில் இருந்த அந்த மனிதர். அவரை, மிக விரைவாக ஆபத்து நெருங்கிக் கொண்டிருகின்றது என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. ஆனால் தான் தற்போது மறைந்து இருக்கும் லண்டன் மாநகரில், தனக்கு ஆபத்து வர வாய்ப்பு இல்லை என நம்பிக் கொண்டிருந்தார் அவர். அவர் தனது நாட்டின் அமைச்சராக இருந்த போது, ஒரு பில்லியன் டொலர் பணத்தினை ஆட்டையைப் போட்டு விட்டு ஓடி வந்து விட்டார் என அவரது நாட்டின் அரசு குற்றம் சுமத்தி இருந்தது. அவரோ அதை மறுத்து இருந்தார். பிர…
-
- 25 replies
- 17k views
-
-
தர்மஅடி இந்த வார ஒரு பேப்பரிற்காக தர்மஅடி என்பது அனேகமாக ஊர்விட்டு வேறை ஊருக்குபோய் ஏதாவது பிரச்னை வந்தால் தான் அனேகமாக இந்த தர்மஅடி கிடைக்கசந்தர்ப்பம் உண்டு. உங்களிலும் சிலபேர் இந்த தர்ம அடி எங்கையாவது வாங்கியிருக்கலாம் அல்லது தர்ம அடிகிடைக்க இருந்த நேரத்தில் தப்பியிருக்கலாம்.அதையெல்லாம
-
- 25 replies
- 5.7k views
-
-
ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து சொந்த ஊரான குரும்பசிட்டியில் என்னுடைய பாதம் படுகிறது. அது ஒரு பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பான நிகழ்வு. வீடுகளும், தெருக்களும், கோவில்களும், கடைகளும், மனிதர்களும் இன்னபிறவும் நிறைந்த அந்த அழகிய கிராமம் அழிவுண்டு போய் கிடந்தது. இருபது ஆண்டுகளாக குரும்பசிட்டி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. மனிதர்களின் நடமாட்டமே இல்லாத பேய்களின் ஊராக அது இருந்தது. குரும்பசிட்டிக்கு திரும்புவது அந்த கிராமத்து மக்களின் மிக முக்கிய கனவுகளில் ஒன்று. இந்தக் கனவு ஈடேறாமலேயே இறந்து போனவர்கள் பலர். எனக்கும் அந்தக் கனவு என்றைக்கும் இருந்தது. விடுதலைப் புலிகள் யாழ் குடாவை கைப்பற்றிய பின்புதான் அந்தக் கனவு கைகூடும் என்று உறுதியாக நம்பிய…
-
- 25 replies
- 2.6k views
-