கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அவன் வெற்றிமனையை அடைந்த போது நேரம் பதினோரு மணியை தாண்டி இருந்தது. கொளுத்தும் வெய்யிலின் வெம்மையினால் வழிந்த வியர்வையினை துடைத்து கொண்டு அந்த கட்டட முனையை தாண்டும் போது தான் அவளைக் கண்டான். எங்கிருந்து வந்தாள் என்று தெரியவில்லை. அவன் எதிர் பார்க்கவும் இல்லை. அவனை கட்டி அணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள். "சிவா நேற்று அல்லவா வாறதாக சொன்னீர்கள். ஏன் இவ்வளவு தாமதம். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்ற எண்ணம் கூட இல்லாத அளவுக்கு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்". இவனை அவள் பேசவே விடவில்லை. "நாளைக்கு கல்யாணம் என்றீர்கள் ..இப்படியா தாமதமாக வாறது. நான் பயந்தே போய்விட்டேன் தெரியுமா" அவள் பேசி கொண்டே இருந்தாள். என்ன செய்வது என்றே புரியாமல் விழித்தான் கார்த்த…
-
- 15 replies
- 4.9k views
-
-
இன்றுடன் ஆறாவது நாள் நான் கடைசியாக சாப்பிட்டு. பச்சைபுல்மோட்டையின் அக்கரையில் காவலரணில் காத்திருக்கும் போராளிகளுள் ஒருவன் நான். வயிறு மூன்றாவது நாளாக என்னுடன் பேசுகிறது. வாயில் ஏதோ ஒரு கசப்புணர்வு. பற்களின் ஈறுகளில் இருந்து வடியும் குருதியை என் நாக்கும் இலையான்களும் போட்டி போட்டுகொண்டு உறிஞ்சுகின்றன. கண்களில் இமைகளுக்கு மேலே ஆயிரம் குண்டுசிகளால் குற்றுவது போன்ற ஒரு வலி. ஒற்றை தலைவலி.மூன்று ஆடிலேறி குண்டுகள் தலைக்குள் இறங்குவது போல ஒரு வலி. வயிற்றின் ஓசையை அடக்க இருந்த ஒரே நீல நிற சாரத்தினை முன்னால் ஓடும் நீரிலே நனைத்து கட்டியிருந்தேன். அதையும் மீறி வயிறு பேசியது. இனி அந்த சரத்தை இறுக்க வயிற்றிலே இடமே இல்லை. T-56 சுடுகருவியின் காட்டியினூடு எதிரி…
-
- 9 replies
- 4.9k views
-
-
MSN இல் சாத்திரியும் சோழியனும் ... இந்தவார ஒரு பேப்பரில் வெளிவந்தது யெர்மனியில் வசிக்கும் எழுத்தாளர் நாடகநடிகர் வில்லிசை கலைஞர் இப்படி பல கலைத்துறையிலும் காலடி பதித்திருக்கும் சோழியன் என்கிற ராஜன் முருகவேல் அவர்களுடன் எம்.எஸ்.என். மெசஞ்சரில் நடந்த ஒரு உரையாடல் அதனை பதிந்துஉங்களிற்கும்போட்டி
-
- 33 replies
- 4.9k views
-
-
சாத்தானின் குழந்தை. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தியேழாம் ஆண்டு . தை மாதம். யாழ்குடாநாடு எங்கும் இரவும் பகலும் இடைவிடாத புயலுடன் கூடிய பெருமழை.மழை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த கிராமங்களில் ஒன்றுதான் மானிப்பாய் கிராமமும். அன்று பத்தாம் திகதி அதிகாலை நான்கு மணி நாற்பத்தியொரு நிமிடம். இருபது வினாடிகள். வானைக்கிழித்ததொரு பெரு மின்னல் தோன்றி மானிப்பாய் வைத்தியசாலையின் பின்னே மண்ணைத்தொட்டது. அங்கு காணியொன்றில் மழையில் நனைந்தபடி தலையை தொங்கப் போட்டுகொண்டுக்கொண்டிருந்த மாடு ஒன்று ம்மா...........என்ற சத்தத்துடன் கருகி இறந்து போனதோடு மின்கம்பிகளும் அறுந்து விழ எங்கும் கும்மிருட்டு.ஒருசில வினாடிகளில் பெருத்த இடியோசை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்த அனைவரையுமே திடுக்கிட்டு எழவைக…
-
- 30 replies
- 4.9k views
-
-
என் மனைவி என்னை பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் பல்லி அடிக்க என்று அர்த்தம். சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம். கல்யாண வீட்டில் ”என்னங்க” என்றால் தெரிந்தவர் வந்திருக்கிறார் வா என்று அர்த்தம். துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம். வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால் பூவாங்க வேண்டும் என்று அர்த்தம். மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால் மருத்துவரிடம் என்ன பேசவேண்டும் என்று அர்த்தம். வெளியே பார்த்து ”என்னங்க” என்றால் அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம். …
-
- 30 replies
- 4.9k views
- 1 follower
-
-
அருணா அழகிய பெண்..அருணாவுக்கு ஒரு அண்ணன் றாஜ்..அம்மா சுந்தரி அப்பா தவம்.. அழகிய குடும்பத்தில் இனிமாயாய் வாழ்ந்தாள்... அருணா நீ தையல் படிக்க போக வில்லையா? ஐயோ அம்மா போகணும்.. அப்பாவை கூட்டி கொண்டு போவன் அம்மா நான் என்ன சின்ன பிள்ளையா? எனக்கு போக தெரியாதா? இல்லடி தெருவில் நம்ம பெடியங்கள் நிப்பார்கள்..பகுடி விடுவாங்கள் எதுக்கு தனியாய் போறாய்? என்னம்மா நீ அவங்கள் என்னை கடித்து தின்னவா போறாங்கள்.. இல்லடி பிள்ளை அப்பா என்றால் உனக்கு துணை இல்லை அதுதான்.. ஐயோ அம்மாஆஆஆஆ? சரி சரி பிள்ளை நீ கிழம்பு பாத்துடி சைக்கில் ஒட்டுறது சரிம்மா நான் வாறேன்... என்னங்க நம்ம பொண்ணை சிக்கிராமாய் கல்யாணம் பண்ணி குடுக்கணும்.. சரி சர…
-
- 8 replies
- 4.9k views
-
-
அன்றொரு நாள்... சண்டிலிப்பாயில் இருந்த காலம்... கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில படிச்சனான் ..ஆறு தலை முறை வீடு..வீட்டில இருந்து பள்ளிக்கூடம் 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும்...இடையில வயல் வெளி.. வீட்டில இருந்து பள்ளிக்கூடம் வெளிக்கிட்டம் என்றால்... அப்பிடியே பின்னால பையைக் கொழுவிக்கொன்டு சைக்கிள்ளை கந்தரோடை வயல் வெளியைத் தாண்டி காற்று தள்ள தள்ள ஓடுறது ஒரு சுகம்தான்...வீட்டில இருந்து வரேக்கை.... வலப்புறவயலில கண்ணகை அம்மன் கோவில்.. இடப்புற வயலில அளவெட்டி மாரி அம்மன் கோவில், நடுவில தவறனை ஒண்டு வேறை... கார்த்திகை, மார்கழியில.. வழுக்கை ஆற்றின் படுக்கயில இரண்டு பக்கமும் வயல் பச்சைப்பசேல் எண்டு இருக்கும்.. மார்கழி,தை மாதம் எண்டா அதால நடந்து வரும் எங்கடை மட்டங்களுக்க…
-
- 26 replies
- 4.9k views
-
-
நம்ம யாழ் கள சாத்திரியின் மாந்தீரிக யதார்த்தப் பாணியில் எழுதப்பட்ட சிறுகதை. டுபுக்கு டொட் கொம்முக்காக எழுதப்பட்டு, அவர்கள் அனுமதிக்காததால் எதுவரை நெற்றில் வெளிவந்தது. அகதிக்கொடி - சாத்திரி கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிரான்சில் இருந்து வந்த விமானம் இறங்கி ஓடு பாதையில் ஓடத் தொடங்கியிருந்தது ………………..மற்றைய பயணிகள் கவனத்தை இவர்கள் மீது திருப்பி விடாதபடி கடைசி வரிசையில் இருத்தப்பட்டிருந்த இருவர்களினதும் கைகளிலும் விலங்கிடப்பட்டு போர்வையால் மறைக்கப்பட்டிருந்தது.பத்து மணி நேரப் பயணம் இருவருமே ஒருவரோடொருவர் எதுவும் கதைக்கவில்லை ரமணனுக்கு அருகில் இருந்தவன் மீது வெறுப்பும் கோபமுமாக வந்தது . தனது திட்டம் தோற்றுப் போக அவனும் ஒரு காரணம் என்று நினைத்தான் . …
-
- 21 replies
- 4.9k views
-
-
நான் நீ மற்றும் கடல்! - சிறுகதை அனுராதா ஆனந்த் - ஓவியங்கள்: ஸ்யாம் நித்யா காரைத் திறந்து உள்ளே ஏற எத்தனிக்கும் போதுதான் சட்டெனக் கவனித்தாள். வேப்ப மரமெங்கும் மல்லிகைப் பூ மொட்டுகள் தெறித்துவிட்டதுபோல் கிடந்தன. நெற்றி சுருங்க ஆச்சர்ய மாய்ப் பார்த்தாள். அருகிலிருக்கும் பந்தலையும் தாண்டி மரத்திலேறி அதன் கிளையெங்கிலும் பெரிய பச்சைப்பாம்பைப் போல் சுற்றிக் கொண்டு மல்லிக்கொடி படர்ந்திருக் கிறது . அந்தக் காலை நேரத்தில் அது அவ்வளவு வாசனையை அந்தத் தெருவுக்கு வழங்கிக்கொண்டிருந்தது. அருகில் போய் கைக்கெட்டும் கொஞ்சம் மொட்டுகளைப் பறித்து மூக்கின் அருகில் வைத்து மனசு கொள்ளுமளவுக்கு அதன் வாசத்தை நுகர்ந்துகொண்டாள். பின் காருக்குள் நுழைந்து அந்த மொட…
-
- 0 replies
- 4.8k views
-
-
எகேலுவின் கதை - சிறுகதை ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் சம்பவம் நடந்தது. சிறையில், வளர்ந்த தாடியை மழிக்கக் கூடாது என்பது அதிகாரிகள் தரும் கூடுதல் தண்டனை. ஆகவே, அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் ஃபிரெடரிக். ஏழை மக்களுக்கு மலிவு வீடுகள் கட்டித் தரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தார். ஜேர்மன்காரர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள். ஒன்று, அன்றாடம் செலவுக்கணக்கு எழுதி வைப்பது. இரண்டு, பீர் குடிப்பது. இரண்டாவது குறிக்கோள்தான் அவருடைய சிறைவாசத்துக்குக் காரணம். ஃபிரெடரிக் வேலைசெய்தது சோமாலிலாண்ட் எனும் நாட்டில். இது சோமாலியாவில் இருந்து தனியாகப் பிரிந்து, உலகத்தில் வேறு எந்த ந…
-
- 0 replies
- 4.8k views
-
-
சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று நான் சொன்னால் அவர் சிகரெட்டை பெட்டியாகவே வைத்திருக்கிறார் என்றும் மணிக்கொரு தடவை ஊதித்தள்ளுகிறார் என்றும் அர்த்தம். அவரிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பன போலவே கட்டுமரம், கரைவலை, மீன்பிடி வள்ளம், ரோலர் என்ற சாமான்களும் மாறி மாறி வந்து போயின. எப்பவாவது சமாதானம் வாறநேரம் அவர் அங்கையிங்கை கடன்பட்டு நல்ல மீன்பிடிப் படகாக வாங்குவார். பிறகு எல்லாம் முடிந்து வழமைபோல நேவி கடலுக்கை அடிக்கத்தொடங்க ஆழக்கடல் போகாட்டில் வள்ளமெதுக…
-
- 23 replies
- 4.8k views
-
-
கலியாண ஆசை எனக்கு கலியாண ஆசை வந்துவிட்டது. என்ன செய்வது? யாரிடம் போய் இதைச் சொல்வது? எப்படி பெண் தேடுவது என்று யோசிச்சுக் கொண்டிருந்த பொழுதுகளில், ஒருமுறை ஈஸ்ட்ஹாம் தமிழ் கடையில் சாமான் வாங்க சென்றிருந்த சமயம் ஒரு பெரியவர் கேட்டார். தம்பி நீர் உந்த பெற்றேல் ஷட் ல் வேலை செய்யிற ரூபன் தானே எண்டார். ஓம் ஓம் என்றேன். ஆளே சுத்தமா மாறிப் போயிட்டிர் சக்கை பிளாக்காய் கணக்குக்கு உடம்பை வளர்த்து விட்டிருக்கு என்று சொன்னவர் இப்படிப்போனா எங்கே எப்ப கலியாணம் நடக்கிறது என்றபடியே நகர்ந்தார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பெரியவர் மீது கோபம் கோபமாய் வந்தது. Punching bag ல் என் ஆத்திரம் தீருமட்டும அடிக்கனும் போல இருந்தது. சும்மா சொல…
-
- 37 replies
- 4.8k views
-
-
எப்போதும்செம்பாட்டுமண்ணின்வாசமும்-அதை மூடிவளர்ந்த பயிர்களின்பசுமையும் -நிறைந்த ஒரு சிறுகிராமமது.காசுவசதிகொண்ண்டவர்களை கொண்டிராத போதிலும் பாசவளர்ச்சிகொண்டிருந்தவர்களை தன்னகத்தே கொண்டிருந்தது அக் கிராமம் .சின்னச்சின்ன ஒழுங்கைகள் அறிமுகமிலாதவர்களுக்கு முழு கிராமத்தையும் அறிமுகம் செய்துவைக்கும். அழகானசிறுகோவில்அதனருகே சிறுபடிப்பகம்.கோவில்திருவிழாக்காலங்களில் விதவிதமானபுத்தாடைகளுடன் உலகஅழகிகளின் செருக்குடன் உள்ளூர்அழகிகள்சுற்றிவருவர். துவிச்சக்கரவண்டிகளின் சக்கரங்கள்தேயத்தேய கன்னிகளைச்சுற்றும்காளையர்கள்.உள்ளூர்பேட்டைகளை கண் வைக்கவரும் அயலூர் பெடியன்களுடன்புழுதிகிளம்ப நடக்கும்போரென ஊரேரணகளமாய் மாறியிருக்கும்.அந்த ஊரில்தான் இவனும்இருந்தான்.வீதியில்ஊற்றிவிட்…
-
- 27 replies
- 4.8k views
-
-
இது வெறும் நகைச்சுவைக்காகவே என்னால் எழுதப்பட்டது . உள்நோக்கங்கள் எதுவும் இதில் இல்லை . நேசமுடன் கோமகன் ************************************************************************************************************************* நேற்று இரவைக்கே என்ரை மனிசி சொல்லிப்போட்டா , நாளைக்கு வேலையால வரேக்கே வோட் பண்ணவேணும் எண்டு . நான் போவம் எண்டு சொல்லிப் போட்டு யாழ் இணையத்தை நோண்டிக் கொண்டிருந்தன் . விடிய எழும்பி ரெண்டு பேரும் வேலைக்கு போகேக்கை என்ரை வாக்காளர் அட்டையை மறக்காமல் மனிசி தந்தா . நான் வேலை செய்யேக்கை என்ரை மண்டையுக்கை சுருள் சுருளாய் வட்டம் போச்சுது . அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருக்கறன் . எங்கடை கோப்பாய் தொகுதிக்கு கதிரவேற்ப்பிள்ளை ஐய்யா தான…
-
- 25 replies
- 4.8k views
-
-
காதலர் தினத்தை முன்னிட்டு டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "இதய காவியம்" ஜம்மு பேபியின் "காதல்"...(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது).... *கதாநாயகன் - "காதல் இளவரசன்" கலைஞன் திரைபடத்தில் மதன் *கதாநாயகி - "காதல் இளவரசி" வெண்ணிலா திரைபடத்தில் லாவணியா *இவர்களுடன் டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன் "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் சுரேஷ் அறிமுகம் சிரிபழகி அனுஷா (சிட்னி வருகை) அறிமுகம் இனிய இசை இன்னிசை (பிரிஸ்பன் வருகை) *கெளரவ வேடத்தில் அட்டகாசமான குணசித்திர நடிகர் நெடுக்ஸ் தாத்தா (திரைபடத்தில் கனகசுந்தரம்) கலக்கல் மன்னன் சுவி.. (தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்களத்திள் காண்பிக்கபடுகிறது)…
-
- 29 replies
- 4.8k views
-
-
தபால்பெட்டியை அடிக்கடி திறந்து பார்த்தாள் சுமதி. வேலைக்கும் நேரம் ஆகின்றது... அட எதிர்பார்த்தால் தான் எப்பவும் லேட்டாகத்தான் வருவான் இந்த தபால் காரன் என்று நினைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டாள். அதே நினைப்பில் இருந்தவளுக்கு வேலையிலும் நிம்மதியாக இருக்க முடியலை. வந்திருக்குமோ வந்திருக்குமோ என்று நினைத்துக்கொண்டிருதாள். வரவில் போடவேண்டியதை செலவில் இட்டு மனேஐரிடம் திட்டும் வாங்கிகொண்டாள். தலையிடி என்று சாட்டு சொல்லி விட்டு அவசரமாக வீடு திரும்பிளாள். பாதையிலும் பல நினைவுகள் அவளுக்கு.... வந்திருக்குமா என்று. அம்மாவிற்கு போன் பண்ணி கேட்டுவிடலாமோ என நினைத்து கைத்தொலைபேசியை எடுத்தாள். "சீ அம்மாவை இனியும் போன் பண்ணி கேட்டால் போனிலே அடித்து விடுவா" என்று நினைத்து …
-
- 28 replies
- 4.8k views
-
-
வட்டியும் முதலும் - ராஜுமுருகன். ராஜுமுருகனின், "வட்டியும் முதலும்" என்னும்... கட்டுரை சிலமாதங்களுக்கு முன்பு ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது எழுத்துக்கள் ஒவ்வொரு கிழமையும்... வித்தியான சமூகப் பிரச்சினைகளை, முக்கிய கருவாக எடுத்துக் கொண்டு எழுதுவதில் மிகவும் சிறந்த எழுத்தாளர். பல லட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப் பட்ட அவரது எழுத்துக்களை... நீங்களும் வாசித்துப் பாருங்களேன். -------------- நம்பிக்கைக்கும் நம்பிக்கை இன்மைக்கும் நடுவில் கிழிகின்றன நாட்கள்! புதிய கீர்த்தனா ஒருத்தி, நம்பிக்கையின் இசையால் என் இரவுகளை நிறைக்கிறாள் இப்போது. இவள் என் வாழ்க்கைக்குள் வருவாள் என நான் நம்பியதே இல்லை. 10 வருடங்கள் பழகிய பிறகு எங்கோ தூர தேசம் போய்விட்டவள் இப்போது திரும்பக் …
-
- 9 replies
- 4.8k views
-
-
வசந்த் அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். வதனியிடம் காதலைச் சொல்லிவிட்ட பின் நடக்க இருக்கும் முதல் சந்திப்பை எண்ணி எண்ணி அவன் மனம் பூரித்துப் போயிருந்தான். இருக்கத்தானே செய்யும்.. இந்தக் காதலைச் சொல்ல அவன் பட்ட பாடு. அவளை பின் தொடர்ந்த நாட்கள்.. நாளிகைகளுக்கு கணக்கே இல்லையே. அவளைக் காண..கோவில்கள்.. தெருக்கள். பள்ளிக்கூடங்கள் என்று அவன் அலையாத இடங்களும் இல்லை. சிங்கள இராணுவத்தின் அந்த பொம்பர் அடிக்குள்ளும்.. ஷெல் அடிக்குள்ளும் அவன் அவளைத் தேடிப் போன நாளிகைகள்.. அந்த நாளிகைகளில் மனம் கொண்டிருந்த அசாத்திய துணிச்சல்களை அவன் கண்டு வியந்திருக்கிறான். புலிப் போராளிகளுக்கும் இப்படித்தான் மண்ணின் மீது காதல் இருக்குமோ. அதனால் தான் சாவை எண்ணாது.. எதிரியைத் தேடிச் சென்றனரோ.. எ…
-
- 32 replies
- 4.8k views
-
-
அசோகன் மாமாவை உங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்று நீண்ட நேரமாக கீ போர்ட்டுக்கு முன்னால் இருந்து சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்,இப்படி அறிமுகப்படுத்துவது தான் மிகச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்,"ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பம் ஆதர்சனமாக , முன்னோடியாக , வழிகாட்டியாக இருக்கும் அப்படி எங்களின் குடும்பத்துக்கு இருந்தவர்கள் தான் "நடராஜா" மாமா குடும்பம்,மாமா என்றால் எனக்கு மாமா அல்ல,எனது அப்பாவிற்கு மாமா,சரியாகச் சொன்னால் எனது அப்பம்மாவின் கூடப் பிறந்த தம்பி தான் நடராஜா,எங்களுடைய குடும்பம் நடராஜா மாமா குடும்பத்தை முன்னோடியாக , ரோல் மாடல் ஆக எடுத்து முன்னேறியவர்கள் என்பதில் எந்த விதமான மிகைப் படுத்தல்களும் இல்லை,நடராஜா மாமாவின் மூத்த மகன் தான் இந்தக் கதையின் …
-
- 12 replies
- 4.7k views
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு அங்கங்கள் 1 தொடக்கம் 5 வரை வாசிக்க இங்கே சொடுக்கவும் நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 06 சங்கரசிவத்தின் கால்கள் சைக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டிருந்த போதிலும் அவனின் மனம் கணேசனையே சுற்றிக்கொண்டிருந்தது. அவன் இன்னும் உயிராபத்தான நிலைமையைத் தாண்டாவிட்டாலும் போராளிகளுக்கு இயல்பாகவே உள்ள மனவலிமை அவனைக் காப்பாற்றிவிடும் என சிவம் முழுமையாக நம்பினான். அவன் மடுக்கோவிலைத்தாண்டியபோது வீதிக்கரையில் அமைந்திருந்த அந்தப் பெரிய கட்டுக்கிணற்றில் ஏராளமான ஆண்களும் பெண்களும் இருபுறமும் நின்று குளித்துக்கொண்டிருந்தனர். அந்த அகதி வாழ்வு பகிரங்கமான இடங்களில் குமர்ப்பிள்ளைகள் கூட நின்று குளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டதை நினைத்த போது நெஞ்சில் ஏதோ…
-
- 29 replies
- 4.7k views
-
-
இந்த பக்கத்தில் இன்னது என்று இல்லாமல், நாளாந்தம் நடக்கும், மனசுக்குள் எழும், கேட்கும் விடயங்களை எழுதலாம் என்று ஆரம்பிக்கின்றேன். தினசரி குறிப்புகள் போல்..... வழக்கம் போல இடையில் விட்டு விடுவேனோ என்றும் தெரியாது *********************** என் மகள் தன் தொட்டிலில் இருந்து (crib) பால் குடிப்பதற்காக தாயிடம் வந்தவள், பாலைக் குடித்த பின் சும்மா இருக்காமல் பக்கத்தில் படுத்து கொண்டு குறட்டை விட்டு இருந்த என் மூக்கின் இரு துவாரங்களிலும் தன் பிஞ்சு விரல்களை நுழைத்த போது வந்த தும்மலில் தான் என் காலை விடிந்தது. மிகவும் வித்தியாசமாக விடிந்த போதே இன்றைய நாள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அவளை முத்தமிட்ட பின் (வாய் கழுவாமல் தான்) எழும்பி குளித்து TTC b…
-
- 44 replies
- 4.7k views
-
-
டைகர் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்.................உலக புகழ் ஜம்மு பேபியின் மற்றுமொரு திரை காவியம் "மடல்கள்" கதாநாயர்களாக *அல்டிமேட் ஸ்டார் பிரசாந்தன் (புனைபெயர் :சிநேகன்) அவுஸ்ரெலியா *அறிமுக நாயகன் இளையதிலகம் சுரேஷ் கதாநாயகிகள் *அறிமுக நாயகி கவர்ச்சி கன்னி லக்சிகா (புனைபெயர் :தாமரை) இலங்கை *இளம்புயல் உமா இவர்களுடன் *மக்கள்திலகம் கந்தப்பு *சனதிரள் நடிகர் கலைஞன் *அழகுதாரகை நிலா வில்லன் நடிகர் தொடர்ந்து பல விருதுகளை பெற்று வரும் வலைஞன் அண்ணா........... இவர்களுடன் சூப்பர்ஸ்டார் ஜம்மு கதை,திரைகதை,வசனம் ,பாடல்கள்,இசை அமைத்து வெளியிடும் திரைகாவியம் "மடல்கள்" சுறுசுறுப்பாக நகரமே இயங்கி கொண்டிருகிறது …
-
- 31 replies
- 4.7k views
-
-
அப்போ எனக்கு பதினாலு வயசு தான் இருக்கும். வயசுக்கு ஏத்த மிடுக்கும், பருவ வளர்ச்சியும் என்னையும் ஒரு சினிமா கதாநாயகியுடன் ஒப்பிடும் அளவு மனபக்குவத்தை எனக்குள் வளர்த்து இருந்தது. பூப்படைதலுக்கு பின்னான பெண்களின் உணர்வுகளை எளிதில் மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது. என்ர முகவெட்டு கொஞ்சம் நடிகை கௌசல்யாவை ஒத்திருந்தமையால் நானும் அவவை போல முடி வெட்டை மாற்றி கொண்டேன். ரோட்டாலே போகும்போது பெடியங்கள் என்னை கௌசல்யா என்று கூப்பிடும்போது, அவங்களை பார்த்து முறைச்சாலும், மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோசம். வீட்டை வந்தவுடனே ஓடி சென்று கண்ணாடிக்கு முன்னாலே நிண்டு தலையை ஒரு கோணலாய் சாய்ச்சு, இடுப்பை வளைச்சு, கண்ணை சிமிட்டி, உதட்டை கடிச்சு எல்லாம் போஸ் குடுத்து பாப்பன். பெடியள் ரோட…
-
- 39 replies
- 4.7k views
-
-
என்ன பிள்ள சுமங்களா.. கொலிடேக்கே ஊருக்குப் போறியே. பவளம் அன்ரி லண்டன் முருகன் கோவிலில் கண்டு விசாரிக்க.. ஓம் அன்ரி. இவரும் வந்து அசைலம் கேட்டு இப்ப 12 வருசம் ஆகுது. இப்ப ஒரு வருசமாத்தானே எங்கள் எல்லோரும் பாஸ்போட் தந்திருக்கிறாங்கள். நானும் கனடாவில உள்ள அண்ணா அண்ணிட்ட கூடப் போக முடியாமல் இவ்வளவு காலமும் இந்த லண்டனுக்கையே சிக்குப்பட்டு கிடக்கிறன். அதுதான் இந்தக் கொலிடேக்கு என்றாலும் ஒருக்கா ஊருக்கும் கனடாவுக்கும் போகத்தான் இருக்கிறம். ஏன் அன்ரி.. ஏதேனும் விசயமே... இல்லப் பிள்ள.. ஊருக்குப் போறதுக்கு எனக்கும் விருப்பமா இருக்குது. ஒரு மாதமாவது போய் நின்றிட்டு வருவம் என்றிருக்கிறன். அதுதான் நீங்கள் போறதெண்டால் உங்களோட சேர்ந்து வந்தால் உதவியா இருக்கும் தானே.. என்று தான…
-
- 23 replies
- 4.7k views
-
-
அன்றுதான் அண்ணா வீட்டில் இருந்து எங்கள் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன் வழியில் செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டது எல்லோரையும் சோதனையிட்டார்கள் நானும் கொஞ்சம் கறுப்பாக இருப்பதால் என்னையும் கீழ் இறக்கு சோதனையிட்டார்கள் நீ மட்டக்களப்பை சேர்ந்தவன் உனக்கு என்னடா இங்கு வேலை என்று கேட்டு கேட்டு விசாரித்தார்கள் நானும் என் அண்ணனை பார்க்கதான் திருகோணமலை வந்திருக்கிறேன் என்று சொன்னேன் வாடா உன்னை விசாரிக்க வேணும் என்று சொல்லி முகாமுக்குள் கூட்டி சென்றனர் .அங்கு சென்ற எனக்கு கை கால்கள் எல்லாம் உதறியது .யாரோ ஒருவர் முன்னால் நான் நிறுத்தப்பட்டேன் அவருக்கு கண்கள் தெரிய முகங்கள் மறைக்கப்பட்டிருந்தது. என்னை முன் நிறுத்தி இவனா என்றார்கள் அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை அண்ணனுக்…
-
- 22 replies
- 4.7k views
- 1 follower
-