கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அலுவலக வேலையெல்லாம் ஒருவழியாக முடித்துவிட்டு மிகவும் களைப்புடன் வீடு திரும்பிய தனா என விளிக்கப்படும்..தனசேகரனுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். அவனால் நம்பவே முடியவில்லை..இன்முகங்கொண்டு வாசலிலே காத்திருப்பது வேறு யாருமல்ல..அவனுடைய அழகு மனைவி அருந்ததியேதான். "ஏன்பா இவ்வளவு நேரம்.." கேட்டுக்கொண்டே அவன் கையிலிருந்த சூட்கேசை வாங்கிக்கொண்டு..உரசி உரசி நடக்க தனாக்கு சோர்வெல்லாம் பஞ்சுபஞ்சாய் பறந்து போனது. வீட்டினுள் வந்து.. இராமயணம் படித்துக்கொண்டிருந்த தாயி;டம் குசலம் விசாரித்து..அவரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு மாடிப்படி ஏறினான். அருந்ததி அவனுக்கு முன்னால் படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள்.இவ்வளவு அழகானவள்... அவன் மாமா மகள் என்பதால்தான் திருமண…
-
- 28 replies
- 4.7k views
-
-
ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட தொடங்கியது. இன்றைக்கு பதின்மூன்றாவது நாள். ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் படி கரண்ட் தந்தாலாவது மோட்டர் போடலாம். ஒரு கையால் எக்கி எக்கி தண்ணி அள்ள சீவன் போகிறது. யோசித்துக்கொண்டே மனைவி குணாட்டி தந்த தேனிர் கோப்பையை இடக்கையால் வாங்கிக்கொண்டே ரேடியோவை திருகினான். “ஒலி 96.6, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குரு எப்.எம்மின் குருஷேத்திரம் சிறப்பு செய்திகள். போர் ஆரம்பித்து பதின்மூன்றாவது நாளான இன்று தந்திரோபாய பின்னகர்வில் சிக்குண்டு, சக்ரவியூகத்துள் புகுந்த பாண்டவரின் சிரேஷ்ட படைத்தளபதி அபிமன்யுவும் அவனோடு சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்…
-
- 3 replies
- 4.7k views
-
-
கண்ணோடு காண்பதெல்லாம் ..... வினாயகம் வேகமாக வீதியோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தார். குளிர்கால ஆரம்பத்தின் அறிகுறியாய் மெல்லிய குளிர்காற்று சில் என்று முகத்தில் மோதியது. பாடசாலை ஆரம்பித்து விட்டதால் வீதியின் இருமருங்கும் பாடசாலை மாணவரின் அவசர ஓட்டமும், தம்மைக் காப்பகத்தில் விடுவதற்காக அழைத்துச் செல்லும் பெற்றவரின் கையை இறுகப் பற்றியபடி விழிகளில் வழியும் ஏக்கப் பார்வையுடன் செல்லும் மழலைகள் மறுபுறமும், எதையும் பார்க்கவோ ரசிக்கவோ நேரமின்றி கையில் கோப்பிக் கோப்கைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்குச் செல்வோரின் அவசரமும், வீதியில் வரிவரியாகச் செல்லும் வாகன வரிசைகளும் ரொறன்ரோவின் காலைநேரக் காட்சிகளாக கண்முன் விரிந்திருந்தன. வினாயகம் ஒருவினாடி தன…
-
- 22 replies
- 4.7k views
-
-
அத்தை - சிறுகதை சிறுகதை: அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு செப்டம்பர் 1, 1939-ம் ஆண்டு, நாங்கள் சின்னக் கிராமம் போய்ச் சேர்ந்தோம். எனக்கு வயது எட்டு. அப்போது தான், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியிருந்தது. 5-ம் தேதி, எங்கள் அத்தையின் கணவர் சுப்பைய்யருக்கு, சஷ்டியப்தபூர்த்தி. அத்தை, என் அப்பாவின் மூன்று அக்காக்களில் மூத்தவள். அவளுடைய இரண்டு தங்கைகளும் விதவைகள். `மெயின் லைன்' எனச் சொல்லப்படும் ரயில் மார்க்கமாகச் சென்றால், மாயவரம் தாண்டி அடுத்த ரயில் நிலையம் மல்லியம். அங்கு இருந்து ஒரு கட்டைவண்டியைப் பிடித்து எட்டு மைல் சென்றால், சின்னக் கிராமம் என்றொரு கிராமம் வரும். அங்குதான் எங்கள் அத்தை இருந்தாள். சின்னக்…
-
- 0 replies
- 4.7k views
-
-
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் -சினேகிதி- அன்பான தன் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்தவள் ஆதிரை.சின்ன வயது முதலே படிப்படியாக பல வெற்றிகளைக் கல்வியில் அடைந்து மிகுந்த புகழுடன் இருந்தாள்.இனப்பிரச்சனையால் சொந்த ஊரை விட்டு நீங்கும் துன்பத்தை ஆதிரை குடும்பமும் ஏற்க வேண்டியதாயிற்று.கொழும்புக்க
-
- 30 replies
- 4.7k views
-
-
ஒரு தனித்துவமான பண்பாட்டின் நல்ல அடையாளம் அதன் தனித்துவமான இசை. தனித்துவமான பண்பாடு இல்லாமல் இனமோ, தேசியமோ இருக்க முடியாது. தனித்துவம் மிக்க தூய்மையான இசையை தருபவன் அந்த இனத்தின், தேசியத்தின் பெரும் சொத்து. இளையராஜா எங்களின் சொத்து ஒரு நாள் என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். „உங்களுக்கு இளையராஜாவை நேரில் சந்தித்து பேச விருப்பமா?'. உடனடியாகவே என்னுடய பதில் 'இல்லை' என்பதாகவே இருந்தது. அந்த மனிதன் தன்னுடைய இசை மூலம் எங்களுடன் தினமும் பேசிக் கொண்டிருக்கிறான். அவனுடைய புல்லாங்குழல் எங்களுடன் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் துள்ளிக் குதிக்கும் போது அவன் இசை எங்களோடு சேர்ந்து துள்ளுகிறது. சோர்ந்து வாடி இருக்கும் போது அவன் இசை தலை கோதிச் செல்கிறது. என…
-
- 43 replies
- 4.6k views
-
-
வேலி - கோமகன் அதிகாலை மூன்று மணிக்கு வேலையால் வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த தொலைபேசி அழைப்பு, வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான் . “உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது . நீ நாளையிண்டைக்கு ஊருக்கு போறாய் தானே அதுதான் உனக்கு ஞாபகப்படுத்த எடுத்தனான்” என்றான் நரேன் .நித்திரை கலைந்த கோபத்தில் தூசணத்தால் நரேனை பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு இன்னும் கோபம் அடங்கியபாடாகத் தெரியவில்லை .நட்பு என்ற போர்வையில் நாகரீகம் தெரியாத மனிதர்களாக இருக்கின்றார்களே என்று மீண்டும் தலையணையைக் கட்டிப்பிடித்தேன் .…
-
- 5 replies
- 4.6k views
-
-
என்ன இப்பதான் 8 மணியா..?! உங்களுக்காக 1 மணித்தியாலமா காத்திருக்கிறன். ஆடிப்பாடி வாறீங்கள். கெதியா வாறதுக்கு என்ன.. என்று ஜெகனோடு சினந்து கொண்டாள் ஜனனி. இஞ்ச பாருங்கோ ஜனனி.. உங்களைக் காக்க வைக்கனும் என்றது என்ர விருப்பமில்ல. நீங்க எனக்காக தனிய காத்திருப்பீங்கள் என்று நினைச்சிட்டுத்தான் கெதியாப் புறப்பட்டு வந்தன். வாற வழியில நான் வந்த பஸ் பழுதாகி நின்றிட்டுது. பிறகு அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்து அதில வாறன். அதுதான் நேரம் எடுத்திட்டுது. மன்னிச்சுக்கோங்கோ தாயே... என்று பணிந்தான் அவள் கோபத்தின் முன். சரி சரி.. வாங்க ரீ குடிப்பம். களைப்பா இருக்கிறீங்க.. முகமெல்லாம் வாடிப்போயிருக்கு என்று கோபந்தணிந்து பணிவோடு கேட்டாள் ஜனனி. ஜனனி தாதியாக வைத்தியசாலை ஒன்றில் …
-
- 34 replies
- 4.6k views
-
-
ஆசான் 1988..... இதுதான் அந்த ஆண்டு. சரியாக இருக்கும். என் வாழ்நாளில் நான் சந்தித்த இன்னொரு ஆளுமையின் கதை இது. யாழ்ப்பாணத்து நரக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டு மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள். புதிய இடம், புதிய மனிதர்கள், இவை எல்லாவற்றிற்கும் புதியவனாக நான் என்று என்னை நான் நிலைபெறச்செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்திகொண்டிருந்த நாட்கள் அவை. சித்தியின் தயவில் அநாதைகள் விடுதியில் சேர்க்கப்பட்டு, மறுநாளே மிக்கேல் கல்லூரி வாசலில் கட்டைக் காற்சட்டை அணிந்துகொண்டு கமலா டீச்சரின் வரவிற்காக காத்திருந்த அந்தக் காலை இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. விசாலமான பாடசாலை, இரைச்சலான மாணவர் கூட்டம், உயர்ந்த இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் தெரிந்த …
-
- 35 replies
- 4.6k views
- 1 follower
-
-
அம்மாவின் காதல் சிறுகதை: விநாயகமுருகன் நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரே இருந்த சுவரில் மாட்டியிருந்த நாள்காட்டி, ஜன்னலுக்கு வெளியே இருந்து வீசிய கடல்காற்று மோத படபடத்துக் கொண்டிருந்தது. நாள்காட்டியில் இருந்த கன்னிமேரி, கையில் இருக்கும் தனது குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தார். பிரபஞ்சத்தின் முழு கருணையும் மேரியின் கண்களில் தெரிந்தது. நான் கையில் இருந்த அலைபேசியைப் பார்த்தேன். `இன்று காலை அம்மா இறந்துவிட்டார். உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை. உடனே நீங்கள் கிளம்பி வரவும்’ என இருந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து எத்தனை முறை இந்த வாட்ஸ்அப் தகவலைப் படித்திருப்பேன் எனத் தெரியவில்லை. அவளுக்கு நான் செய்திருக்கவேண்டிய நியாயமான இறுதிக் கட…
-
- 1 reply
- 4.6k views
-
-
நியூ யார்க் பயணக் கட்டுரை - 1 மெமோரியல் டே மே 26 அமெரிக்காவில் கொண்டாட படுவதால் அந்நாள் விடுமுறை. ஒரு வருடத்தில் மிக குறைந்த நாட்களே தேசிய விடுமுறையாக US ல் அனுசரிக்க படுகிறது. அதனால் இந்த விடுமுறையை வீணடிக்காமல் நியூ யார்க் நகரம் செல்ல முன்கூட்டியே நானும் மனைவியும் திட்டமிட்டுவிட்டோம். மே 21 கிளம்பி வழியில் ஓர் இரவு தங்கி விட்டு மொத்தம் ஐந்து நாட்களும் நியூ யார்க்கில் கழிக்க திட்டம். நியூ யார்க் நகரத்தில் தாங்கும் விடுதிகளின் வாடகை அதிகம் இருந்ததால் நியூ யார்க் நகர எல்லையில் இருக்கும் நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ஆரஞ்சு என்னும் இடத்தில் விடுதி முன்பதிவு செய்து விட்டோம். மே 21 2 மணி அளவில் அலுவகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பி வந்துவிட்டேன். மதியம் 2:30 மணிக்கு…
-
- 15 replies
- 4.6k views
-
-
படம் காட்டுறம் வாங்கோ கடந்த ஒரு பேப்பரில் எனக்கு ASIA வேணும் என்கிற எனது அனுபவ கதை பலரும்விரும்பி படித்ததால் இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய இன்னொரு அனுபவக்கதை இதுவும் 80களின்ரை ஆரம்ப காலகட்ட கதைதான் இந்த காலகட்டம்தான் தொலைகாட்சி பெட்டியும் இலங்கையிலை பரவலா அறிமுகமாக தொடங்கின கால கட்டம். அந்த கால கட்டத்திலை கோயில் திருவிழா. கலியாணவீடு .சாமத்தியவீடு எண்டு எல்லா மங்கல விழாவிலையும் ரிவியிலை விடிய விடிய அஞ்சு . ஆறு படம் ஓடுறகாலம்.ஆரம்பத்தில் இந்த ரிவி டெக் ஆகியவற்றை சில வீடியொ கடையளும் வாடைகைக்கு விடுவினம் அவையளிட்டை போய் சொன்னா சரி. ரிவி டெக் ஆகியவற்றை ஒரு வானில் கொண்டு வந்து இறக்கி படத்தை போட்டு செற்பண்ணி விட்டிட்டு படங்களை மாத்துறதுக்காகவே ஒருத…
-
- 24 replies
- 4.6k views
-
-
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - எம்.ரிஷான் ஷெரீப் (சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை) _______________________________________________ காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவ…
-
- 2 replies
- 4.6k views
-
-
காவல் நாய்... முருகனின் வீட்டைக் கடக்கும்போது டாம்போவின் இடிபோன்ற குரல் அந்த வீதியே அதிரும்படி கேட்டது.என்னடா சத்தம் பசிக்கிறதா என்று வீட்டுக்குள் இருந்து டாம்போவை அதட்டிக் கொண்டு முருகன் வேகமாக வெளியில் வந்தான். டாம்போ இபொழுது நன்றாக வளர்ந்து ஒரு பெரிய நாயாகி விட்டிருக்கிறது. டாம்போ முருகன் வீட்டிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கவேண்டும். முருகன் வீட்டுச் சாப்பாடோ இல்லை டாம்போவின் பரம்பரை ஜீனோ தெரியவில்லை ஒன்றரை வருடங்களுக்குள் அது புசு புசுவென்று வளர்ந்து அந்த ஏரியாவிலேயே பெரிய அடிக் கடியன் நாயாக நெடுத்திருந்தது. அதன் கரிய மூஞ்சையும் நெடிய கால்களும் பார்ப்பதற்கு ஊர் நாயொன்றிற்கு ஓநாய்க் கால்களும் மூஞ்சையும் முளைத்தது போலிருந்தது. முருகன் தகப்பன…
-
- 9 replies
- 4.6k views
-
-
தீவாளி ஒரு பேப்பரிற்காக தீபாவளியை தீவாளி என்றுதான் பேச்சு வழக்கில் ஊரில் சொல்லுவோம்.வருசா வருசம் தீபாவளி வரும்போதெல்லாம் இப்பொழுது தீபாவளி தமிழருடையதா??தீபாவளியை கொண்டாடலாமா? கூடாதா??என்று சர்ச்சைகளும் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பிக்கும். தீபாவளி ஏன் கொண்டாட வேணும் எண்டு எப்பவோ யாரோ சொல்லிவிட்டு போன நரகாசுரன் கதையிலை கொலைசெய்யப்பட்ட நரகாசுரனுக்கு வாழ்த்து சொல்லுற அளவுக்கு இப்ப நிலைமை வந்திட்டிது. ஏன் எதுக்கு எண்டு சரியான விபரம் தெரியாமலேயோ தமிழர் கொண்டாடுற பல பெருநாளிலை இதுவும் ஒண்டு. அதையெல்லாம் ஒரு கரையிலை வைச்சிட்டு ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். தீபாவளியை பலபேர் பல மாதிரி கெ…
-
- 20 replies
- 4.6k views
-
-
ஜம்பது என்றால் அரை சதம் என கிரிக்கட் விளையாட்டில் சொல்லுவார்கள்.வாழ்க்கையில் 50 வயசை தாண்டினால் அரை கிழடுதான் ஆனால் மனம் ஒத்துக்கொள்ளாது.உண்மையிலயே அரைகிழடு என்று சொல்வதைவிட முக்கால் கிழடு என்றுதான் சொல்ல வேண்டும்.மனித வாழ்க்கையில் முழுசதம் போட்டவர்கள் மிக குறைவு.சராசரி மனித வாழ்க்கை 75 அல்லது 80 என்றுதான் சொல்லாம்.அதன் பின்பும் மனிதன் வாழ்ந்து முழுசதம் போட்டால் அது அவர்களுக்கு கிடைத்த போனஸ் அல்லது ஆறுதல் பரிசே ஆகும்.. நான் சிறுவனாக இருக்கும் பொழுது 40 வயதுக்கு மேற்பட்டோரை கண்டால் முதியவர்கள் என்ற எண்ணம் தான் தோ ன் றும்,அதே வயதை நான் அடைந்த பொழுது அன்று நான் நினைத்த வயதானோர்(கிழடுகள்)என்ற எண்ணம் வரவில்லை,அன்று இருந்த ஆசைகளும் எண்ணன்களும்தான் மனதில் வருகின்றது.உடலி…
-
- 40 replies
- 4.6k views
-
-
கால்கள் பேசினால்..!! கதிரவன் மெத்த மெத்தாக சினத்தை தணிக்கும் அந்த பொழுதினில்..பல காலடி சப்தங்கள்..ஒவ்வொரு கால்களும் ஏதோவோர் எதிர்பார்பில் சென்று கொண்டிருக்க..ஒவ்வொரு கால்களை போலவே இந்த கால்களும் பயணிக்கிறது அந்த பொழுதினில்.. அன்றைய பொழுதின் சுமையை இறக்கிய சந்தோசத்தில் அந்த கால்கள் சற்று அதிகமாகவே ஆரவாரமிட்ட வண்ணம் சென்று கொண்டிருக்க..எதிர்பாராத விதமாக இன்னொரு கால் இந்த காலுடன் எதிர்பாராத தருணத்தில் மோதி விடுகிறது ..மனங்கள் மட்டுமா ஊடல் கொள்ள வேண்டும் ஏன் கால்கள் கொள்ள கூடாதா.? ம்ம்..மோதிய கால் கன்னி(யின்) கால்கள் இந்த கால் பட்டவுடனே அந்த முரட்டுகால் மிதுவானது..கன்னி காலின் நாணம் தனை புரிந்த முரட்டுகால் மெதுவாக புன்னகைத்தது..கன்னி கால் மெதுவாக…
-
- 38 replies
- 4.6k views
-
-
கனடாவில் அறிவகம் எனும் அமைப்பு நகரம் தோறும் தமிழ்பாடசாலைகளை அமைத்து அங்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான புள்ளிகளையும் புலமைப்பரிசில்களையும் வழங்குகிறது. சென்ற சனிக்கிழமை அவர்களால் நடத்தபடும் பாரதியார் வளாகத்துக்கு செல்லும் வாய்பு எனக்கு கிடைத்தது.அன்று அவர்களால் வருடம் தோறும் நடத்தப்படும் நிகழ்வு நாற்றுமேடை.அன் நிகழ்வில் மாணவர்களின் திறைமை அடிப்படையில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.அங்கு எனது கண்ணில் மூன்று ஆக்கங்கள் கண்ணில் பட்டன.அதை பன்னிரெண்டாம் தரத்தில் பயிலும் மாணவர்கள் ஆய்வு செய்திருந்தார்கள். 1,எனது குடும்பம் 2,செம்மொழியாம் தமிழ்மொழி 3,தமிழர்களின் வரலாறு அதில் என்னை கவர்ந்த ஆக…
-
- 10 replies
- 4.5k views
-
-
இப்போதெல்லாம் எம்மில் பலர் அதிகம் சொல்லும் வார்த்தையாகிவிட்டது 'கிளிநொச்சி'. இந்த பெயருக்குரிய இடத்திற்கு நான் பல தடவைகள் சென்றுள்ளேன். சில மாதங்கள் வாழ்ந்த்துள்ளேன். உலகத்தில் நான் சென்ற அத்தனை இடங்களிலும் பார்க்க எனக்கு அந்த வன்னி மண் தான் பிடித்திருந்தது. ஒரு தடவை சென்ற போது அதிகம் மக்கள் இல்லாத அமைதியை கண்டேன். பின்னர் சென்ற போது இடம்பெயர்ந்த மக்களையும், அவர்களை துரத்தும் மலேரியா காய்ச்சலையும், மரத்தடியே அவர்கள் தங்குவதையும் கண்டேன். பின்னொரு தரம் சென்ற போது வன்னிமண் அம்மக்களை ஒழுக்கமாய் வாழ வைப்பதை கண்டேன். இறுதியாக சென்ற போது ஒரு நேர்மையான அரசாங்கள் ஒழுக்கமாக நடப்பதை கண்டேன். இன்று அம்மண்ணில் எதிரியின் கால்கள் எனும் போது மனசு துடிக்கின்றது, கோபம் வருகின்றது. க…
-
- 10 replies
- 4.5k views
-
-
எதை மாற்ற முடிந்தாலும் அவரவர் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான சம்பவங்களை சுருக்கமாக எழுத நினைக்கின்றேன். 80 களில் யாழ் இந்துவில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் ஓரளவான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டேன்.அப்போது அடுத்து என்ன துறையில் படிப்பைத் தொடர்வது என்று வீட்டில் எல்லோரிடமும் ஒரு ஆதங்கம். காரணம் ஏற்கனவே எனது மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உயர்தரம் கற்றவர்கள் அல்லது கற்றுக் கொண்டு இருப்பவர்கள். மூத்த அக்கா அதிகம் படித்து வைத்தியராக வர நினத்து எல்லாத்தையும் கோட்டை விட்டு விட்டார். 24 மணி நேரமும் புத்தகமும் கையுமாக அலைந்து கடைசியில் நாலு பாடத்திலும் சித்தி அடையவில்லை. சின்னக்கா கலைத்துறையிலும் இரு சகோதரர்கள் வர்த்தகத் த…
-
- 25 replies
- 4.5k views
-
-
ஆளுமை லலிதா மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது பன்னாட்டு வங்கியின் அலுவலகம். நீண்டு கிடந்த அந்த அறை முழுவதும் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆண்களும் பெண்களுமாக அலுவலக ஊழியர்களும் பணி மும்முரத்தில் தம்மை மறந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். மதியநேரம் வருவதற்குள்ளாகவே பரபரப்பு மெல்ல அடங்கி மாலை நேரம் நெருங்கிய போது அலுவலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தது. அவ்வலுவல் அறையில் தனக்குண்டான இருக்கையில் அமர்ந்து பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த இளங்கோ அலுவலகம் வெறுமையாவதை உணர்ந்து, நேரத்தை அறிந்து கொள்ள இடது கையின் மணிக்கட்டினைப் பார்க்க அந்த இடம் வெறுமையாக இருந்தது. கைக்கடிகாரம் என்னவாயிற்று? அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. நேற்றிரவு…
-
- 19 replies
- 4.5k views
-
-
சில நாட்கள் இருக்கும், ஒரு சனி காலை, எனது இளையவளைக் கூட்டிக்கொண்டு ஆங்கிலப் பாடல் வகுப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். வகுப்பு ஆரம்பமாவதற்கு இன்னும் சிறிது நேரம் இருந்ததனால், அங்கிருந்த சொகுசு நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு அப்பகுதியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். இடையிடையே மகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிக்கொண்டிருந்தாலும் கூட, அங்கே வருபவர்கள் யாரென்று பார்ப்பதிலேயே எனது கவனம் சென்றிருந்தது. அநேகமானவர்கள் வெள்ளையர்கள். அவ்வப்போது சீனர்கள்....இப்படியே வந்துபோய்க்கொண்டிருந்த முகங்களினூடு ஒரு மண்ணிற முகம். எங்களைப் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். இந்தியராகக் கூட இருக்கலாம். ஆகவே அவரையும் அவரது பிள்ளையையும் அவதானிக்கத் தொடங்கினேன். வரிசையில் நின்றிருந்த ப…
-
- 27 replies
- 4.5k views
-
-
நடுவிலை நாலு நாளைக்காணோம் செந்தக் கதை சோகக்கதை. ஒரு பேப்பரிற்காக சாத்திரி.. :( :( 17 .08.13 ந்திகதி செவ்வாய்க்கிழைமை வழைமைபோல வேலை முடிந்து மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வருகிறேன் அன்று சரியான வெய்யிலும் அடித்தக் கொண்டிருந்தது. மனிசி வீட்டிற்கு பின்னால் உள்ள சிறிய பூந்தோட்டத்தில் வேண்டாத செடி புற்களை வெட்டித் துப்பரவாக்கி முடித்தவர் சாப்பிடும்போது லேசாய் தலை வலியோடு தலை சுற்றுவதாய் சென்னார். சரியான வெய்யில் வெய்யிலுககை நின்று வேலை செய்ததால் தலை சுத்தலாம் ஒரு குளிசையை போட்டுவிட்டு படு என்றுவிட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்குப் போய் விட்டேன்.இரவு பதினொரு மணி வீடு திரும்பியிருந்தேன் படுக்கையிலேயே இருந்தவர் தலைச்சுற்றல் நிற்கவில்லையென்கிறார். வைத்த…
-
- 37 replies
- 4.5k views
-
-
"தி இராவணன் கோட்" (The Ravana Code) - சிறுகதை அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவ…
-
- 9 replies
- 4.5k views
-
-
"இன்று செவ்வாய்க்கிழமை. வேலைவிட்டு நேரத்திற்கே கிளம்பி வந்துவிட்டது வசதியாகி விட்டது. இன்றும் அவள் வருவாள். கடந்த இரண்டரை வருடங்களாகக் கண்களாலேயே மட்டும் பேசிக்கொள்ளும் எமது உணர்வுகள் மாற்றங்கள் ஏதுமின்றி இன்றைக்கும் தொடரும்" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே காரிற்குள் காத்திருந்தேன். பிண்னனியில் இலளையாராஜாவின் பாடல்கள் மெதுவாக மனதைத் தாலாட்டிக்கொண்டிருக்க அவள் வரும் வழி பார்த்துக் காத்திருந்தேன். நேரம் நெருங்க நெருங்க மனது துடிப்பது எனக்கு வெளியே கேட்டது. என்னைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்த காரெல்லாவற்றையும் மனம் அங்கலாய்ப்புடன் பர்த்துக்கொண்டது. அவளில்லை. சரி, 3 மணியாகிறது, இனிக் கிளம்பலாம் என்று நான் நினைத்திருக்க அவளது சாம்பல் நிறக் கார் வீதியின் ஆரம்பத்தில் திரும்…
-
- 45 replies
- 4.5k views
-