கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
நீ அங்கே நான் இங்கே -சினேகிதி- அம்மா அப்பான்ர கடிதம் வந்திருக்கு இந்தாங்கோ. கொண்டா கொண்டா என்னடா இன்னும் இந்த மாசம் கடிதம் வரேல்ல எண்டு பார்த்தன்.சுஜி கவி இங்க பாருங்கோ அப்பா கவிக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருக்கிறார். அம்மா முதல் என்னட்டதான் தரோணும். இன்னொரு சந்தோசமான செய்தி என்னெண்டால் அப்பா வாற மாசம் ஸ்பெயின்ல இருந்து இங்க வாறாராம்ம்ம்ம். ஐ ஜாலி. சின்னவா கவி அப்பாட்ட என்னத்துக்கெல்லாம் சொல்லிவிடலாம் என்று அம்மாட்ட நச்சரிக்க மூத்தவ சுஜி 10ம் வகுப்புக்குப் பரீட்சைக்குப் படிக்கப் போட்டா.அப்பா வரப்போறார் என்று தெருவால போற வாற எல்லாருக்கும் சொல்றதுதான் கவின்ர வேலை. அப்பா வந்தவுடனே அம்மா ஓடிப்போய் அப்பாவைக் கட்டிப்புடிச்சிட்டா.சுஜி …
-
- 27 replies
- 4.5k views
-
-
ஹேமா அக்கா -இளங்கோ 'ஐயோ, ஹேமா அக்கா கிணத்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று கத்திக்கொண்டு நாங்கள் கிணற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம். பின்னேரம் நான்கு மணியிருக்கும். வெயிலில் குளித்தபடி விளையாடிக்கொண்டிருந்தபோதுதான் ஹேமா அக்கா கிணற்றுக்குள்ளை குதிப்பதைப் பார்த்தோம். மலைகளும் நதிகளுமில்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தான் நீர் சார்ந்த தேவைகளுக்கு அமுதசுரபி. இந்தியன் ஆமி வந்தகாலத்தில் கூட, இப்படி அள்ள அள்ளக்குறையாத நல்ல தண்ணியும், தாரளமாய் லக்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன சனியனுக்கு நீங்கள் சண்டை பிடிக்கிறியள் என்றொரு ஆமிக்காரன் சனத்தை செக்பொயின்றில் வைத்து பரிசோதித்துப் பார்க்கும்போது கேட்டதாயும் ஒரு கதையிருந்த…
-
- 5 replies
- 4.5k views
-
-
பசுமை எழில் கொஞ்சும் வயல் வெளிகளையும்,ஆறுகளையும் தன்னகத்தே கொண்டு,ஆலய மணியின் இனிய ஒலி செவியில் இன்னிசையாக காதில் தேன் போல பாய,கால்நடைகளின் சத்தங்கள் ஒரு வித புத்துணர்ச்சியை ஊட்ட,ஒரு புறம் குமரி பெண்களின் சிரிப்பு சலங்கை ஒலி போல சலசலக்க வார்த்தைகளாள் வர்ணிக்கமுடியாதய் இருந்தது அந்த பசுமை நிரம்பபெற்ற கிரமாம்................. அந்த கிராமத்தில் வைத்தியர் கனகவேலை தெரியாதவர்கள் யாருமில்லை என்றே சொல்லலாம் அந்தளவிற்கு அந்த கிராமத்தில் அவரை விட்டால் வேறோரு வைத்தியர் இல்லை என்றே சொல்லலாம்....அவரும் எல்லோரிடத்திலும் அன்பாகம் பணிவாகமும் இருப்பது தான் அவரை எல்லாருகும் பிடித்து போய் இருந்தது.கனகர் வீட்டை தான் கார் இருக்குது என்று அந்த ஊரே பேசி கொள…
-
- 28 replies
- 4.5k views
-
-
ருசி - சிறுகதை ஷங்கர்பாபு, ஓவியங்கள்: ஸ்யாம் “செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... அது உண்மையா?” என்றாள் மாலினி. இப்படிக் கேட்கும்போது அவள் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை. வெட்கமோ தயக்கமோ கொண்டிருந்தாலும் அதைத் தப்பாகக் கருத இடமில்லை. காரணம், அவளுக்கு 43 வயது ஆகியிருந்தது; கல்யாணமாகிக் குழந்தைகளும் இருந்தன. மேலும் தமிழ்ப்பண்பாடு, தமிழ்ப்பெண்கள்... குறிப்பாக, செக்ஸ் பற்றிப் பேசக்கூடாது என்று தடுத்துவைத்துள்ளது என்று பொதுவாக நம்பப்படுவதாலும், அச்சம், மடம், பயிர்ப்பு வகையறாக்களுக்குள்தான் அவள் புழங்கியாக வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாலும், அவள் வெட்கப்பட்டிருந்தால் அது சரியான காரணமாகவே கருதப்பட்டிருக்கும்.எல்லாவற்றையும்விட, கணவ…
-
- 5 replies
- 4.4k views
-
-
தோணி! … ( சிறுகதை ) … வ.அ.இராசரத்தினம். June 21, 2018 சிறப்புச் சிறுகதைகள் (3) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – வ.அ.இராசரத்தினம் எழுதிய ‘தோணி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஓரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் ப…
-
- 0 replies
- 4.4k views
-
-
ஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட் உங்களுக்கு தெரிந்ததுதான் ஆனால் இதை நீங்களும் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏகலைவன் யார் தெரியுமல்லவா? மகாபாரதத்தில் வருகிற குரு. வில் வித்தையில் தேர்ந்தவர். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அர்ஜுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். ஒருநாள் ஏகலைவன் அவரிடம் வந்து, தனக்கும் வில் வித்தை கற்றுத்தர வேண்டுகிறான். ஆனால் ஏகலைவன் வேடகுலத்தவன். சத்திரியன் அல்ல. எனவே அவனுக்குக் கற்றுத்தர முடியாது என்று அனுப்பி விடுகிறார் துரோணர். ஏகலைவன், துரோணரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, துரோண…
-
- 0 replies
- 4.4k views
- 1 follower
-
-
அன்பின் நிழல் - சிறுகதை செந்தில் ஜெகன்நாதன் - ஓவியங்கள்: ஸ்யாம் மனம் மிகவும் சோர்ந்துபோய் உட்கார்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் முதன்முறையாக மது குடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதோ இந்த ஐந்தாவது மாடியிலிருந்து அப்படியே குதித்துவிடலாமா என்றிருக்கிறது. சற்று முன்னர் சுவரில் மோதிக்கொண்டதால் தாங்க முடியாத தலைவலி இருந்துகொண்டேயிருக்கிறது. இதயத்துடிப்பு இப்போது என்ன வேகத்தில் இருக்கிறது என்றெல்லாம் தெரியவில்லை. அது துடிக்கவில்லை என்றாலும் பிரச்னையில்லை. ஏன் இப்படி மனக்கிலேசத்துடன் அல்லாடுகிறேன்? ஏன் இப்படிப் புலம்புகிறேன்? காரணம், என் அப்பாவை இப்போதுதான் கட்டிப்போட்டுவிட்டு வந்திருக்கிறேன். ஆம், என்னைப் பெற்ற தந்தையைத்தான்! அவரின்…
-
- 0 replies
- 4.4k views
-
-
மொட்டை மொட்டையடித்துக்கொண்டிருந்தேன். என் தலையை நானே. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துச் சென்றனர். பெரிதாய் அது குறித்து எனக்கு ஏதும் அக்கறையில்லை. எப்பவுமே அவர்களை மதிப்பதில்லை. தெருவில் நுழைந்ததுமே படைநோய் கண்டவனின் கைகளாய் மூளை சொறியத்துவங்கும். அநியாயத்திற்கு சுயநலமிகள். ஒரு குடம் தண்ணியைக் கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காதவன் (ஆனால் இவன் காவேரி பங்கீடு குறித்து நியாயவாதியாக பேசிக்கொண்டே இருப்பான்.) ஒருவன் சோற்றுக்கையால் காக்காவைக்கூட துரத்தாதவன். காக்கா எங்கு இருக்கென கேட்காதீங்க. ரொம்ப காலமாக சொல்லப்பட்டிருப்பதால் அவன் குறித்து இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. இன்னொருவன் இருக்கான். ஏதாவது நன்கொடை பொதுவிஷயம் என போனால் வீட்டினுள்ளே இருந்…
-
- 1 reply
- 4.4k views
-
-
வெக்ரர் எண்டா திசையும் பருமனும் இருக்கும். நாங்கள் திரும்பிப் பார்க்கிறனாங்கள் தான். பின்னையென்ன? இஞ்சை கவனிங்கோடா தம்பியவை என்று ஒரு குரல் சொல்லேக்கை கழுத்தை திருப்பி பார்க்காட்டா அவன் மனிசன் இல்லை கண்டியளோ! அனேகமாய் அது எங்கடை பக்கத்து வகுப்புத்தான். நாங்கள் உயிரியல். அந்த வகுப்பு மற்ஸ் காரரின்ரை. ஏல் ரியுசனெண்டா அப்பிடித்தான். ஒரு சின்னத்தட்டியாலைதான் வகுப்பு பிரிபட்டிருக்கும். அதாலைதான் எங்கடை காலத்திலை ரியுசனுக்கு கொட்டில்கள் என்ற பெயரும் இருந்தது. பழையாக்கள் சிலவேளை குழம்பிப் போவினம். அவையளுக்கு கொட்டில் என்றா கள்ளுக் கொட்டில்தான் விளங்கும். வேலாயுதம் எண்ட பெயர் கொமனோ தெரியாது. மணி ரியுசன் வேலாயுதம் மாஸ்டர் ( கனபேருக்கு அவரை கிளி மூக்கு எண்டாத் தான் தெரி…
-
- 32 replies
- 4.4k views
-
-
இடைவெளி.......................... நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்குது வாழ்க்கை. 25 வயதில் திருமணம். 2 வருடங்கள் சந்தோசமான திருமணவாழ்க்கை. அதைத்தொடர்ந்து 2 பிள்ளைகள் ஒருவருட இடைவெளியில். பின்னர் 4 வருடத்தால் இன்னொரு ஆண் பிள்ளை. இப்படியே நன்றாகத்தான் போகுது வாழ்க்கை. மூத்த பெண் பிள்ளை கேட்டாள் அவர்கள் இருவரும் ஆண் பிள்ளைகள் சேர்ந்து விளையாடுகிறார்கள் நான் தனியே ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கு துணையாக ஒரு தங்கச்சி வேண்டும். ஒருவாறு பெத்தாச்சு. அதுவும் பெண்ணாக. சரி பிரச்சினை முடிந்தது. அந்த பிள்ளைக்கு 3 வருடமாகும் வரை நிம்மதியாக இருந்தது. அதன் பின் தான் சிக்கல் வரத்தொடங்கியது. தங்கச்சி தங்கச்சி என தோழிலும் மார்பிலும் போட்டு தாலா…
-
- 49 replies
- 4.4k views
-
-
லண்டனிலை நடந்த ஆர்ப்பாட்ட பேரணியிலை கலந்து கொள்ளவும் வேறை பல சந்திப்புக்களிற்காகவும்.லண்
-
- 25 replies
- 4.3k views
-
-
"அடோ என்ன ரோட்டில நிக்குது ஒடு ஒடு வீட்டுக்கு"என்று பொலிஸ்க்காரன் அரை குறை தமிழில் திட்டி பொல்லால் அடிப்பது போல கிட்ட வர எடுத்தோம் ஒட்டம்.அவன் போனபிறகு மீண்டும் ஒன்று கூடினோம்.இவன் சிங்களவன் எங்கன்ட இடத்தில வந்து சண்டித்தனம் காட்டுறான் ,உவங்களுக்கு வெடி வச்சாத்தான் சரி என்று வீரவசனம் பேச கூட நின்ற எனையவர்களும் சேர்ந்து சம்மதிப்பது போல உசார் ஏத்தினார்கள். நாங்கள் ஒன்றுகூடுவதும் பொலிஸ் ஜீப்பை கண்டால் ஒடி ஒழிப்பதுமாக காலங்கள் சென்றன.சிவாவை சில நாட்களாக காணவில்லை,என்ன நடந்தது என்று புரியாமல் இருந்தோம்,அவன் இயக்கத்தில சேர்திட்டானாம் என்று குமார் சொன்னான் ,ஆனால் நணபர்களால் நம்பமுடியவில்லை. ஒருநாள் இரவு 9 மணியளவில் வீட்டை வந்தான்,உந்த சிங்களவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வே…
-
- 27 replies
- 4.3k views
-
-
இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் இன்று பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசுக்கு திருமணமாம்.இன்று நடைபெறும் இதே தேவாலயத்தில் தான் கொஞ்ச காலங்கள் முன்னதாக இந்த வாரிசு தாயாரின் உடலை வைத்திருத்த போது செய்வதறியமால் கண்ணீர் விட்ட காட்சி என் கண் முன் நிற்கிறது. பிரான்சில் கார் விபத்தில் தாய் இறந்ததாக கூறினாலும் ஏதோ சதியோ என் கேள்வி குறியாக இருந்தமை தான் காரணம்.இந்த அரச குடும்பத்தின் திருமணத்தை தங்கள் திருமணம் போல குதுகாலிக்கும் அரச குடும்ப விசுவாசிகளும் இதற்க்காக கோடிக்கணக்கான பணச் செலவு செய்வது வேறு காரணங்களுக்காகவும் எதிர்க்கும் ஒரு பகுதியினருமாக இத்திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்…
-
- 17 replies
- 4.3k views
- 1 follower
-
-
உடைந்த போத்தல்கள் ஏனோ அவள் மனம் மீண்டும் மீண்டும் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பொன் கிரகணங்களை மெதுவாக வீசி வந்த சூரியன் தன் கைகளை தென்னம் கீற்றுகளுக்கிடையில் விட்டு அவள் கன்னத்தை தொட்டதைகூட அவளால் உணர முடியாமல் இருந்தது. அருகே கொட்டிலில் கட்டியிருந்த ஆடு கட்டையில் சுற்றி சுற்றி வர அதன் சின்னஞ்சிறு குட்டிகள் இரண்டும் " ம்...மே... ம்...மே..." என்று தங்கள் கிச்சுகுரலில் தாயை கூப்பிட்டபடி பின்னே ஓடின. இவளைக் கண்டதும் ஏதாவது தீனி போடுவாளோ என்ற நினைப்பில் தன் புதிய குஞ்சுகளை "கொக்... கொக்..." என அழைத்துக்கொண்டு ஓடி வந்த அடைக்கோழி (அதுதான் அதற்கு அவள் வைத்த பேர்)அவள், அதனைக் கவனிக்காத ஏமாற்றத்துடன் அவளை தலையை சரித்து ஒரு பார்வை பார்த்த பின்னர் தன் குஞ்சுகளுடன் மீண்ட…
-
- 6 replies
- 4.3k views
-
-
-
- 46 replies
- 4.3k views
-
-
பச்சைக்கிளி - சிறுகதை கண்மணிகுணசேகரன், ஓவியங்கள்: ஸ்யாம் அந்திவெயில், நடையைத் தாண்டி அருகால் படியின்மேல் ஏறிக்கொண்டிருந்தது. கதவுக்கும் தெற்காலப் பக்கமாக மேற்கில் தலைவைத்து பச்சைக்கிளியைக் கிடத்தி, சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள். நூலாக நொடிந்துபோன தேகம், நைட்டிக்குள் ஒடுங்கிக்கிடந்தது. மக்கியக் கொழுக்கொம்பை வளைத்திருக்கும் காய்ந்த அவரைக்கொடிபோல், மெலிந்த கைகளில் லேசாகப் புடைத்தபடி நரம்புகள் ஓடியிருந்தன. வெளுத்த முடிகள், அழுக்கேறிய தலையணையில் பாவி இருந்தன. குடவுகொண்ட கண்களில் கோடாகத் தெரிந்த இடைவெளியில் மிகவும் பரிதாபமாக அவளின் விழிகள், பக்கத்தில் அமர்ந்திருந்த கொஞ்சிக் குப்பத்தார் இளைய பெருமாளைப் பார்த்து, திரும்பத் திரும்பக் கெஞ்சிக்கொண்டிருந்தன. …
-
- 1 reply
- 4.3k views
-
-
ஒருநிமிடக் கதை : தலையைச் சுத்தி ஒரு மொட்டை! உடல் தேறி, ஆபீசுக்குப்போகப்போவதாகச் சொன்னதும் மகிழ்ந்த மீனாட்சி, மகன் கால்களில் செருப்புடன் தலை முடி வெட்டக் கிளம்பியதும் திடுக்கிட்டாள். இப்போதுதான் செந்தில் உடல் நலம் தேறி நடமாடத்தொடங்கி இருந்தான். அவன் பார்த்துப்பான் என்று கை விரித்து டாக்டர் சொன்னபோது ஒருநிமிடம் மூச்சு நின்றுபோய்தான் வந்தது அவளுக்கு. டாக்டர்…டாக்டர் என்று பின்னால் ஓடிப்போயும் கிடைக்காத பதிலால் சிறிது நேரம் திகைத்து , ஒரு... ஒருரூபாய் காயினை மஞ்சள் துணியில் முடிந்து “அப்பா, வெங்கடாசலபதி பெருமானே, நீதான் துணை. நல்ல படியா புள்ள ப…
-
- 1 reply
- 4.3k views
-
-
இனிய காலை வணக்கம் தொடர்ந்து கேட்க இருப்பது ஆத்மீக ஆராதனை என இந்திய தமிழ் பெண்குரல் வானோலியில் தவழ்ந்து வந்து என்னை எழுப்பியது. ஒவ்வொரு நாளும் என்னை எழுப்புவது இந்த ஆத்மீக ஆராதனைதான்.டி.எம்.எஸ்.இனிய குரலில் ஒரு இந்து பாடலும்,ஜோனி எபிரகாமின் குரலில் கிறிஸ்தவப்பாடலும்,இ. எம்.கானிபாவின் குரலில் இஸ்லாமிய பாடலையும் பாடி ,தங்களது மத கருத்துக்களை திணித்தார்கள்.நானும் கருத்துக்களை கச்சிதமாக உள்வாங்கிக் கொண்டு காலைக்கடன்களை முடித்து பூஜை அறைக்குள் சென்றேன். பூஜை அறையில் சமஸ்கிருத ஒம்,பக்கத்தில் இந்திய சாமியார் சாய்பாபா கையை உயர்த்தி பிடித்து ஆசிர்வாதம் வழங்கும் போஸ் கொடுக்க ஏனைய பழைய சாமி பிள்ளையார்,முருகன்,சிவன் எல்லோரும் ஓவ்வொரு மூலையில் இருந்து என்னை பார்த்துகொண்டிருந்தன…
-
- 27 replies
- 4.3k views
-
-
வீட்டில் லீவுவில் நிற்பதால் காலை எழுந்து கணணியில் செய்திகளை மேய்ந்துகொண்டும் அரட்டையில் வந்தவர்களுடன் அரட்டையடித்தபடியும் இருந்தேன் கைத்தொலைபேசி உதறியது எடுத்துப்பார்த்தேன் எனது தம்பியின் பெயர் காட்டியது.ஒரு கணத்தில் எனக்குப் புரிந்து விட்டது ஏதோ வில்லங்கமான செய்திதான். தொலைபேசியை எடுத்தேன். அண்ணை..குருவண்ணா செத்திட்டார்.நான் கொஸ்பிற்றல்லைதான் நிக்கிறன்.பொடியை அவையின்ரை வீட்டை கொண்டு போயிட்டு போனடிக்கிறன்.அம்மாக்கு இப்ப சொல்லவேண்டாம்.நான் நேரிலை போய் சொல்லுறன். தொலைபேசி துண்டித்தது.மனைவியும் மகளும் வெளியே போயிருந்தனர்.வீட்டிலும் எவரும் இல்லை அவசரமாக எனது மூத்த அண்ணணிற்கு கனடாவிற்கு தொலைபேசியடித்து செய்தியை தெரிவித்துவிட்டு நான் சில நிமிடங்கள் கணணிய…
-
- 43 replies
- 4.3k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் இந்த வயசுக்கு மேல... “ஏகப்பட்ட செலவு செய்து கம்பெனியை கம்ப்யூட்டரைஸ் பண்ணியிருக்கு தெரியுமில்லே! இப்பப் போய் ‘கம்ப்யூட்…
-
- 1 reply
- 4.3k views
-
-
நாகராஜின் மகனுக்கும், செல்லையாவின் மகளுக்கும் திருமணப்பேச்சு. நாகராஜ் குடும்பம் அவுஸ்திரேலியாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். நாகராஜ் தம்பதியருக்கு ஒரே செல்ல மகன் நிமலன். செல்லையா குடும்பத்தினர் 1995 ல் இடப்பெயர்விலிருந்து கொழும்பில் வசிக்கிறார்கள். செல்லையாவுக்கு 2 பெண்பிள்ளைகள். மூத்தவளுடைய திருமணப்பேச்சு தான் இப்போது நடைபெறுகிறது. அதற்காக நாகராஜ் கொழும்பு வந்திருக்கிறார். பேச்சுவார்த்தை நன்றாக தான் நடைபெற்றது, சீதனப்பேச்சை செல்லையர் ஆரம்பிக்கும் வரை. 'எங்களிடமிருந்து என்னதை எதிர்பார்க்கிறீர்கள்?' என்ற செல்லையரின் கேள்விக்கு, கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நாகராஜ் சொன்னார். 'மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் வீடு வாங்கிற எண்ணம் இருக்கு. அதற்கு கொஞ்ச தொகை உங்களிடமிருந…
-
- 24 replies
- 4.3k views
-
-
ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய் சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்... எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, 'குளிருதே... குளிருதே... உடம்பெல்லாம் உதறுதே...’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் (அப்போதுதான் அரவிந்த் மறுநாள், 'நெஞ்செல்லாம் சிதறுதே... நீ வேணும்னு கதறுதே...’ என்ற பாடலை எனக்கு டெடிகேட் செய்வான்). நீங்கள் நினைப்பது சரிதான். நான் படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறேன். ஓர் ஆண், வேலை இல்லாமல் இருப்பது …
-
- 4 replies
- 4.3k views
-
-
முன் குறிப்பு: கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டு தொடரை படித்துப்பாருங்கள். http://www.ijigg.com/songs/V2AC4A0EP0 சிறு வயது முதல் ஈழத்தை விட்டு பிரிந்திருக்கும் என் தந்தை, தன் பிள்ளைகள் ஈழத்தையும்,தமிழையும் நேசிக்க வேண்டும் என்பதே தன் ஆசை என அடிக்கடி சொல்வார். அதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் மாவீரர்தின மாதத்தில் இருந்து தை வரை ஈழத்திற்கு அழைத்து சென்றுவிடுவார். மூன்று அண்ணன்களுடன் இங்கு வசிக்கும் எனக்கு, அங்கு சென்றால் எண்ணிலடங்கா அண்ணன்கள் கிடைப்பார்கள். அப்படியான என் ஈழத்தை நோக்கிய பயணத்தில் அழுகைகளும், சோகங்களும், வீரமரணங்களும், அவலச்சாவுகளும், வெடிகளும், இரத்தமும், இடம்பெயர்வுகளும் சற்றும் குறைவில்லாமலே இருந்தது. ஆனாலும் அத்தனை இழப்புக்களையும் தாங்கும் சக்தி அ…
-
- 18 replies
- 4.3k views
-
-
சொல்லியழுதிட்டன். - சாந்தி ரமேஸ் வவுனியன் - சிலநேரம் செத்துப்போக வேணுமெண்டு கூட நினைக்கிறனான்...ஆனால் பிள்ளையளையும் வீட்டுக்காறரையும் நினைச்சுப்போட்டு விட்டிடுவன்...அடிச்சாக்கூடப் பறவாயில்ல அவனென்னை அடிச்சதைவிட வாயாலை காயப்படுத்தின காயங்கள்தான் அதிகம்....சற்று மூச்சை உள்ளிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஏனப்ப அவனோடை இருக்கிறியள் ? பிடிக்காட்டி விட வேண்டியதுதானே ? இது நான். அதுவும் ஏலாமலிருக்கு....என்னை வெளிநாட்டுக்கு கூப்பிட்டுவிட்டவன் என்ரை குடும்பத்துக்கு காசனுப்ப விட்டவன் இப்பிடி சிலதுகள் அவனை விட்டிட்டுப்போகவோ இல்லாட்டி போடாவெண்டு தூக்கியெறியவோ முடியேல்ல... சொல்லிக் கொண்டு அழுதாள்;. ஊரிலை நானும் அவனும் ஓரே ஊர். …
-
- 28 replies
- 4.3k views
-
-
சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த ஓணான். சரேலெனத் திரும்பினார் சந்திரோதயத்தார். கண்களைக் கசக்கி மறுபடியும் பார்த்தார்இ சந்தேகமே இல்லை... வழவழப்பான தோற்றம்இ ஒவ்வொரு வளைவிலும் வெயில் பட்டுத் தெறிக்கும் மெர்க்குரி வெளிச்சம்.... அழகு ஜெகத்ஜோதியாக மின்னியது. ஜில் ! ஜில் ! ஜிக்குமாலா ! இ எல்லோருக்கும் புரியும்படியாக நல்ல தமிழில் பேசிக் கொண்டார். அழகில் மயங்கி எவ்வளவு நேரம் நின்றாரோ தெரியவில்லை... இப்படி மயங்கினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்... வேலிக்கட்டை ஓணான் போல சரக் சரக்கென தலையை ஆட்டினார். சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த குற்றத்திற்காக அவர் ஊரில் எத்தனையோ ஓணான்களைக் கொன்றிருக்கிறார். ஓணான்கள் போலவே தலையை சொடக் சொடக்கென ஆட்டியபடி க…
-
- 10 replies
- 4.2k views
-