கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
மூன்றாவது பாகத்தை எழுத முதல், என்னை எழுத ஊக்குவிப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. புலத்தில் தமிழ் கற்ற எனக்கு ஆரம்பத்தில் இருந்த தயக்கத்தை தூக்கி எறிய வைத்து, தொடர்ந்து "நீங்க எழுதுங்க பபா" என சொல்லும் உறவுகளுக்கு என் அன்பு எப்பொழுதும் உண்டு. முதல் இரண்டு தொடரும் எழுதும் போது, நினைவுகள் பல மனதில் வர கண்ணீருடன் தான் எழுதினேன். இந்த பாகத்தில் எமை காக்க களத்தில் நிற்கும் போராளிகளை பற்றியதாக இருக்கும். அவர்களுடான என் உறவு, அவர்களை பற்றி என் மனதில் இருப்பவை. ஊரில் எங்கட வீட்டுக்கு முன்னால போராளிகளின் வீடு. எங்கள் வீடு அவர்கள் வீடு என பிரிப்பது பாவம் என்பேன். காலையில் கண் முழித்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை "அண்ணாக்கள்" என்று அவர்கள் பின்னாலே…
-
- 16 replies
- 2.7k views
-
-
இப்பவென்றாற் போல.... அழுகையாய் வந்தது. யாரிடமும் கதைக்கவோ சிரிக்கவோ முடியாத நிலையில் உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டது. காடுகள் மலைகள் தண்ணீர் நிரம்பிய கடல் கிணறுகள் என நிறையவே என்னை அங்குமிங்குமாய் அலைத்து இழுத்துக் கொண்டு ஓடுமாப்போல அலைகளும் கடல்களும் என்னை உள்ளிழுப்பது போலிருந்தது. கண்களுக்குள் எட்டிய பிள்ளைகளின் கைகள் என்னைவிட்டுத் தொலைவாகின.....நான் தனியனாய் எல்லாவற்றையும் எல்லோரையும் தொலைத்து.... கோழியின் கூவலும் மெல்லிய இசையுமாக மணிக்கூடு தனது இருப்பை உறுதிப்படுத்தி எழுப்புகிறது. நேரம் அதிகாலை 4.20. வேலைக்குப் போகும் அவசரத்தில் என்னவன் எழுந்து போகிறான். அட இதுவரையும் கண்டது கனவா ? பிள்ளைகள் உறக்கம் கலையாமல் தங்கள் படுக்கைகளில்....கதவு இடுக்குகளால் …
-
- 16 replies
- 2.9k views
-
-
-
ரமணன் அன்று தான் ஊருக்கு வருகிறான் வந்து தான் வைத்திருந்த பணத்தை வைப்பிலிடுவதற்க்காக வங்கிக்கு செல்கிறான் அன்று அவன் கண்டது ஒரு வேதனையான காட்சி அந்த காட்சியை பார்த்ததும் அவனது மனதுக்குள் ஆயிரம் கேள்வி அலைகள் அவனுள் எள மொனமாகி முகாமையாளரான அவனது நண்பன் ரவி சந்திரனை அணுகி அங்கே எதற்க்காக வரிசையில் நிற்கிறார்கள் என கேட்க அவனும் அடகு வைப்பதற்க்காக வரிசையில் நிற்கிறார்கள் என்று கூற அவனை அறியாமலேயே கண்ணீர் துளிகள் அவனது சட்டையை நனைக்கிறது . அங்கு பார்த்தது அவனுடன் கல்வி பயின்ற கலை பிரிவு மாணவி லோஜினியை தன்னுடன் சில வார்த்தைகள் பேசியதால் அவள் வாழ்க்கையில் இன்று இந்த நிலைமையா ? என்று அங்கிருந்து வெளியே வந்து தனது ஊர்மைதானத்தில் இருக்கும் ஆல மரத்தின் நிழலில் இருந்து பழ…
-
- 16 replies
- 3k views
-
-
ஊ..ஊ..ஊ... டிங்..டாங்.. ஊ... சங்கு சத்தம், கிலு..கிலு னு உண்டியல் குலுக்குற சத்தம் வேறை வாசல் கதவிலை கனகம்மா வீட்டு நாய் வேறை வாள்..வாள் என்ற நித்திரை முறிச்ச அம்மா சனியனுகள் வந்திட்டிதுகள் விடியக்காலமையே என்ற அம்மான்ரை அர்ச்சனையோடை, ம்ம்ம்ம்... வரச்சொன்னதே நான் தானே அப்பத்தானே விடுவிங்கள் என்று மனசுக்குள்ளையே நினைச்சுக்கொண்டு அம்மா நான் கோயிலுக்கு போட்டுவாறேன் என்றதும் இந்த விடியக்காலமையே வேலை வெட்டி இல்லாம வாய்பார்த்ததுகள்... இதுக்குமேலை நின்றா தாங்க முடியாது ஜீவா எஸ்கேப்புடா என்று அம்மான்ர புறு புறுப்பிலை இருந்து தப்பி ஓடிவந்து பொடியளோடை சேர்ந்து திருவெம்பா பாட்டுக்குள்ளை செந்தமிழும் கலந்து ஜக்கியமாயிட்டம். ஏற்கனவே போட்ட பிளான் இண்டைக்கு மத்தியானம் கோழிப்புக்கை போ…
-
- 16 replies
- 1.1k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் புதினம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற "போலிகள் " என்ற கதையை இத்துடன் இணைத்துள்ளேன். கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன். அன்புடன் மணிவாசகன் போலிகள் காலையில் தன்னுடைய பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு வந்ததிலிருந்தே சதாசிவத்தின் கால்கள் நிலத்தில் நிற்க மறுக்கின்றன. பரபரப்பும் அவசரமும் கலந்த வேகத்துடன் அவர் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார். லண்டன் மாநகரின் அந்தப் பிரபல்யமான கோயில் திருவிழாவின் இன்றைய உபயகாரர் அவர்தான். பரபரப்பு இருக்காதா என்ன? அதுவும் அவருடைய பரம எதிரி குலசேகரத்தின் திருவிழாவைப் புகழ்ந்து சனமெல்லாம் வாய்நிறையப் பேசிக் கொள்வதைக் கேட்கக் கேட்க தன்னுடைய திருவிழாவை எப்பாடு பட்டாவது குலசேகரத்தின் திருவி…
-
- 16 replies
- 3.5k views
-
-
-
நிழலாடும் நினைவுகள் ஒரு மே மாத நினைவு எண்பதுகளின் ஆரம்பம் ஊரில் தமிழ் இளையதலைமுறையினர் இலங்கை அரசிற்கெதிராக வன்முறை போராட்டங்களை ஆரம்பித்திருந்த நேரம் வட கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொலிசார் மற்றும் அரசாங்கத்திற்கு வால்பிடிக்கிறவை மீது தாக்குதல்களும் நடக்க தொடங்கியிருந்தது. ஆனாலும் எனக்கு அந்த காலகட்டத்தில் இந்த பேராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை அது மட்டுமல்ல எனது ஊரில் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட தெரிந்த ஒரு சில இளைஞரை காவல் துறை அடிக்கடி தேடிதிரிந்ததால் அவர்களுடன் பேசவோ பழகவோ கூடாது என்கிற எனது வீட்டு காரரின் கண்டிப்பு வேறை சும்மா கோயிலடியிலை கொஞ்சநேரம் சினேகிதங்களோடை மாலையிலை போய் கதைசிட்டு வாறதுக்கே எனக…
-
- 16 replies
- 2.8k views
-
-
எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலை
-
- 16 replies
- 5.1k views
-
-
ஒரு நாட்டிலை ஒரு சின்ன கிராமம் இருந்திச்சாம். அந்த கிராமத்திலை ஒரு ஆச்சி இருந்தாவாம். அவாக்கு கருணை உள்ளமாம். ஆர் கஸ்டப்பட்டாலும் அவவாலை பாத்துக் கொண்டிருக்க ஏலாதாம். இப்படி இருக்கேக்கை பக்கத்து;க கிராமங்களிலை எல்லாம் சரியான வறுமை வந்திட்டாம். அதாலை அந்த ஊர் ஆக்கள் தாங்கள் வளத்த நாய்களை எல்லாம் கலைச்சு விட்டிட்டினாம். அந்த நாய்கள் எல்லாம் எங்கை போற எண்டு அந்தரிச்சுக் கொண்டு நிண்டுதுகளாம். இப்படி இருக்கேக்குள்ளை பக்கத்து ஊரிலை இருந்த அந்த ஆச்சி இப்படி அந்தரிச்சு அந்த ஊருக்கு வந்த நாய்களை எல்லாம் அரவணைச்சு தன்ரை தோட்டத்திலை வாழ விட்டாவாம். தானும் இந்த ஊருகளுக்கு போகேக்கை றோட்டிலை நாய்களைக் கண்டால் தூக்கிக் கொண்டு வந்து தன்ரை தோட்டத்திலை விடுவாவாம். அப்படி ஒரு…
-
- 16 replies
- 1.7k views
-
-
மகளும் மருமகனும் இப்பதான் கிளம்பி வீட்டை போறாங்க. ரண்டுபேரையும் அனுப்பிட்டு மரத்தடியில கிடந்த சாய்மனைல வந்து உக்காந்தன். என்ட மகளோட நான் பழகிற வாய்ப்பு எனக்கு கிடைச்சதில்லை. அது எனக்கு ஒரு கவலையாகப்பட்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினதுக்காக நான் சந்தோசப்படுறன். அதுக்காக 'இந்தவாய்ப்பை எனக்கு தந்தது கடவுள் தான், கடவுளுக்கு நன்றி' என்று சொல்ல மாட்டன். எனக்கு கடவுளை எனக்கு பிடிக்கிறதில்லை. அப்படி நன்றி சொல்லுறது என்றால் ஆமிக்காரங்களுக்கு சின்ன நன்றி சொல்லலாம். மகள்ட இடத்தில ஆமிபிரச்சினையாம். ஆமி உள்ள வந்தால் இளமாக்களுக்கு பிரச்சினை என்று இடம் பெயர்ந்ததால தான் எனக்கு இந்த குறுங்கால சந்தோசம் என்றாலும் கிடைச்சுது. மகளும் மருமகனும் மகள்ட குட்டி மகனும் இங்க இருந்த 6.…
-
- 16 replies
- 3.6k views
-
-
தொடரும் துயரங்கள்…..! இரவு ரண்டு மணியிலிருந்து அந்த அழைப்பு வந்து வந்து கட்டாகிக் கொண்டிருந்தது. சத்தத்தை நிறுத்தி வைத்திருந்த தொலைபேசியின் வெளிச்சம் அடிக்கடி மின்னி மின்னி மறைந்தது. இரவு பகல் என வித்தியாசம் பாராமல் இப்படித்தான் இப்போது வீட்டுத் தொலைபேசியும் கைபேசியும் புதியபுதிய குரல்களால் நிறைகிறது. பகல் பலரது இலக்கங்களுக்கு அழைத்து அவர்களது தேவைகள் அவசரங்களை பதிவு செய்து கொண்டேன். ஆனால் அந்த இலக்கத்தை மறந்து போனேன். அன்று மாலை 17.44மணிக்குத் திரும்பவும் அந்த இலக்கம் வந்தபோதுதான் ஞாபகம் வந்தது. 000 000 000 எதிர்முனையில் ஒரு பெண்குரல்... நான் யேர்மனியிலிருந்து***……என நான் ஆரம்பிக்க….. நான் உங்கடை ******* பெறாமகள் *****…. அவள் தன்ன…
-
- 16 replies
- 2.2k views
-
-
எழும்படி பெண்பாவாய் ஒரு பேப்பரிற்காக மார்கழி மாதம் ஊரில் திருவெண்பாவை காலம் தொடங்கினாலே பதின்ம வயதுகளில் இருந்தஎங்களிற்கு பக்தி பாதி பம்பல் பாதி கலந்த கொண்டாட்டம்.மயிர்க்கால்கள் குத்திட்டு நிக்கும் மெல்லிய மார்கழி மாதத்து குளிரிர். இப்ப ஜரோப்பா குளிரோடை ஒப்பிடேக்கை அதெல்லாம்ஒரு குளிரா என்று தோன்றுது. அதிகாலை நாலுமணிக்கு எழும்பி சில்லென்ற கிணத்து நீரை அள்ளி நடுக்கியபடி தலையில் ஊற்றிக்கொண்டு முன் ஜாக்கிரதையாக ஒரு காற்சட்டையை உள்ளை போட்டு மேலை அப்பாவின் பட்டுச்சால்வையை வேட்டியாக்கி கட்டிக்கொண்டு என்னிடம் இருந்த மிருதங்கத்தையும் தூக்கிக்கொண்டு கோயிலடிக்கு ஓடுவேன். மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை ப…
-
- 16 replies
- 3.4k views
-
-
பதுங்குகுழியும் பட்டினி வாழ்வும் “எங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடூர வாழ்க்கை” அவள் மீண்டும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள். “அழாதையம்மா கண்ணைத் துடை…என்ன செய்யிறது தமிழராய் பிறந்து துலைச்சிட்டோம் அதுதான்…” “அதுக்கு கடவுளுக்குக் கூடக் கண்ணில்லைத்தானேயப்பா” என்றபடி அவள் மேலும் விம்மத் தொடங்கினாள். பதுங்கு குழிக்குள் இருந்து இன்றுடன் வெளியுலகு பார்த்து மூன்று நாட்கள் ஆகி விட்டிருந்தது. நேற்றும் முந்தநாளும் பிள்ளைகள் நித்திரை கூடக் கொள்ளவில்லை. ஒரே செல்லடி… இன்றுதான் செல்லடி கொஞ்சம் குறைந்து பிள்ளைகள் நித்திரை கொள்கிறார்கள். பாவம் அவள் என்னதான் செய்வாள் வாழ வேண்டிய வயதில் கணவனை யுத்தத்தின் கோரப் பற்களுக்கு இரையாக்கிவிட்டு… தனிமையில் மூன…
-
- 15 replies
- 2.4k views
-
-
காதலில் காதல்.! அம்மா வீட்டிற்கு வந்திருந்தா எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல, ஒரு கடிதம் போட்டிட்டு வந்திருக்கலாம். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறா. இன்னும் நாலைஞ்சு நாளைக்கு ஒரே புராணமாய் போப்போது. வர வர நின்மதியில்லாமல் போச்சு என்ர அறைக்கதவை பூட்டி திறப்பைக்கொண்டு போகவேணும். இல்லை என்றால் மனிசி அறையை ஒரு கை பாத்திடும். போனமுறை வந்து செய்த வேலை காணும். படங்கள் எல்லாத்தையும் பொறுக்கி ஒழிச்சுப்போட்டா. வந்த கோவத்திற்கு வேறை யாரும் என்றால் நடக்கிறதே வேறை அம்மா என்டதால விட்டிட்டு இருந்தனான். அவாக்கு இதே வேலையாப்போச்சு எத்தனை வருசமாச்சு சொன்னாக்கேக்கமாட்டன் என்கிறா. அவாவும் பாவம் தானே. என்ர காதல் புனிதம் அவவுக் எப்படிப்புரியும். பாவம் வந்தவ சந்தோசமாய்…
-
- 15 replies
- 3.1k views
-
-
முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்தில் காட்டுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதையில் முதலில் கிச்சின் பிறகு பிள்ளைகளின் (பெட்டைகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட்) காம்ப் என்று கடந்து தொங்கலில் மூன்று நான்கு, சீற்றுகளால் கூரைவேயப்பட்ட கூடாரங்கள் ஒன்றிலிருந்து இவன் யோசித்துக் கொண்டிருந்தான். “ச்சே.. மெடிக்ஸ்ஸில் நின்ற என்னைத் தூக்கி சிவராசண்ணை மெஸ்ஸில் போட்டுட்டாரே..” இப்பொழுதுதான் மெஸ்ஸில் வேலைகளை முடித்து வந்தான். நேற்றிரவு ஓடிப்போன இருவரைத் தவிர்த்து இன்றைய காலைக் கணக்குக்கு நூற்று நாற்பத்து இரண்டு பேர் முகாமில் இருந்தார்கள். தனிய இவன்தான் மெஸ்ஸில் நிற்கவேண்டியதாய்ப்போனது. சிவராசண்ணை சொல்லியி…
-
- 15 replies
- 2.5k views
-
-
அலாரச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தேன். அசதியுடன் எழுந்து நேரத்தைப் பார்த்தேன். மணி ஐந்தரை என்றது கடிகாரம். எழும்ப மனமில்லை. எரிச்சலாய் உணர்ந்தேன். உலகமே இருட்டுப் போர்வைக்குள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. எப்படியும் எழும்பித்தானாக வேண்டும். வேறு வழியில்லை. மெதுவாக எழுந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைக்கு விழுந்தடித்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடத்தேவையில்லை. அண்ணாவுடன் வாகனத்தில் செல்லலாம். சற்றே நிம்மதியாக உணர்ந்தேன். அப்படியே பல் தேய்த்து முகம் கழுவி தயாரானபோதும், அண்ணா எழுந்திருக்கவில்லை. நேரம் போய்விட்டது. இனி அண்ணாவை எழுப்ப வேண்டியதுதான். ஏனோ தெரியவில்லை..!! வழமைக்கு மாறாக, இன்று அண்ணாவை எழுப்புவது அவ்வளவு சுலபமாயில்லை. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு …
-
- 15 replies
- 2.1k views
-
-
காலம் செய்த கோலம் . தாயகத்தில் இருந்து அதிகம் பேர் உள நாட்டுக் குழப்பங்களால் அகதிகளாக் வெளி நாடு சென்றனர். ராஜ சுந்தரம் குடும்பமும் விதி விலக்கல்ல . அவரும் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இரு மகன்களும் பள்ளியில் பயின்றனர. பிள்ளைகளின் தேவைகளை சமாளிக்க் முடியாமலும் வாடகைப்பணம் அதிகமானதாலும் இரண்டு வேலைக்கு சென்றார். ராஜ சுந்தரம். . பகலில் ஒரு கார் கம்பனியிலும் மாலை நேரங்களில் ஒரு உணவு விடுதியிலும். வேலை செய்து இரவு பத்து மணியாகும் வீடு வந்து சேர .அத்தோடு வெளி நாட்டு வாழ்வுக்கே உரிய கால நிலை மாற்றங்களும் அவருக்கு வாழ்வில் வெறுப்பை தந்தது. இருந்தாலும் மகன்களின் எதிர்கால் வாழ்வை எண்ணி சகித்து கொண்டார். ஒரு நாள் தாயகத்தில் உள்ள ஒரு மூத்த சகோதரி . தன…
-
- 15 replies
- 2.4k views
-
-
அவன் வெற்றிமனையை அடைந்த போது நேரம் பதினோரு மணியை தாண்டி இருந்தது. கொளுத்தும் வெய்யிலின் வெம்மையினால் வழிந்த வியர்வையினை துடைத்து கொண்டு அந்த கட்டட முனையை தாண்டும் போது தான் அவளைக் கண்டான். எங்கிருந்து வந்தாள் என்று தெரியவில்லை. அவன் எதிர் பார்க்கவும் இல்லை. அவனை கட்டி அணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள். "சிவா நேற்று அல்லவா வாறதாக சொன்னீர்கள். ஏன் இவ்வளவு தாமதம். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்ற எண்ணம் கூட இல்லாத அளவுக்கு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்". இவனை அவள் பேசவே விடவில்லை. "நாளைக்கு கல்யாணம் என்றீர்கள் ..இப்படியா தாமதமாக வாறது. நான் பயந்தே போய்விட்டேன் தெரியுமா" அவள் பேசி கொண்டே இருந்தாள். என்ன செய்வது என்றே புரியாமல் விழித்தான் கார்த்த…
-
- 15 replies
- 4.9k views
-
-
காலத்துடன் தொலைந்துபோன பயணத்தோழன்... மிதிவண்டியைப்பற்றி பலரும் பலநூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருப்பார்கள் ஆனாலும் மிதிவண்டியுடனான எனது நினைவுகளை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வார நாட்கள் முழுவதும் கலகலத்துக்கொண்டிருந்த பாரிஸ் புறநகரின் ஆரவாரம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டிருந்தது.அந்த நகரின் ஓயாத இரைச்சலை விழுங்கிவிட்டு அமைதி எங்கும் படர்ந்திருந்தது.தெருக்களில் வேலைநாளின் அவசரமின்றி அங்கங்கு ஆறுதலாகப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு மோட்டார் வண்டிகளைத்தவிர தார்வீதியின் கருமையும் அமைதியுமே வழிநெடுக நிறைந்திருந்தது.யாழ்ப்பாணத்து வீதிகளில் மாலைப்பொழுதுகளில் முகத்திலடிக்கும் அதே மெல்லிய மஞ்சள் நிறவெய்யில் அன்று பாரிஸிலும் எட்டிப்பார்த்துக்கொண்டி…
-
- 15 replies
- 2.6k views
-
-
குழைத்த சாதம் ......... ராசம்மா அன்றுமிகவும் பரபரப்பாக இருந்தாள். மகன் வரப்போகிறான் என்று விதம் விதமாக் சமைத்தாள். ஆம் அவள் மகன்" ராசன் .....மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து ஐந்து வருடங்களிற்கு பின் வருகிறான். அவளது நினைவலைகள் ஐந்து வருடங்கள் பின்னோக்கி சென்றன. அவனுக்கு வயது இருபத்தொன்று , அப்போது தான் படிப்பை முடித்தவன் . கிழக்கு மாகாண படையினரின் கெடு பிடிகளுக்கு மத்தியில் வாழ முடியாதென்று முடிவெடுத்து . வீட்டையும் நிலத்தையும் அடகு வைத்து .மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றான். அவனுக்கு மேலும் படித்து பல்கலைக் கழகம் செல்லும் ஆவல் இருந்தாலும் ஊரின் நிலை அதற்கு இடங் கொடுக்க வில்லை . இராணுவத்தினரின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கிய வேளை .அங்கு சென்றவனுக்கு அதிகம் பட…
-
- 15 replies
- 2.3k views
-
-
பகுதி ....1 என்ன இவள் இப்படிச் சொல்லிக் கொண்டு வாறள் எண்டு எல்லாரும் நினைக்கிறது எனக்கு விளங்குது..என்ன செய்யிறது..?நானும் எனது ஆக்கத்துக்கு பல தரப் பட்ட பெயர்களை வைத்துப் பார்த்தேன் இது தான் தற்போதைய நிலையில் புலம் பெயர்ந்து இருக்கும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பொருந்தும் போல இருந்துச்சு "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" எண்ட பெயரை வைச்சுட்டன்..எனது எழுதுக்கு பச்சை புள்ளி தராட்டிக்கும் பறவாயில்லை...சிவப்பு மட்டும் குத்திப் போடாதியள்..எனக்கு சிவப்பை கண்டாலே அலர்ஜி..எனது முன்னேற்றத்துக்கு தட்டிக் கொடுப்பதும் தள்ளி விழுத்துவதும் உங்கள் கைகளில் தான் இருக்கு.இனி விடயத்துக் வாறன்.. எல்லோரும் அறிந்த விடயம் பெருவாரியாக 1983,1984 ஆண்டுப் பகுதியிலிருந்து வெளிநாடுகள…
-
- 15 replies
- 3.9k views
-
-
மறையாது பிரவாகம்! சீனபெரும் சுவரும், இத்தாலி சாய்ந்த கோபுரமும்,,, இந்திய தாஜ்மஹாலும் ,,பாபிலோனிய தொங்குதோட்டம் என்னு போய்கிட்டு இருக்குறவயா உலக அதிசயம்? இல்லை! அதிசயம் என்னு என் மனசில் எப்போதும் ஆணியாய் அறைபட்டு கிடப்பது பிரபாகரன் என்ற ஒரு பெயரே! அது சத்திர சிகிச்சையாலொண்ணும் அகற்றிவிடமுடியாதது! இழுத்து எடுக்கமுயன்றால் அதோடு சேர்ந்து இதய திசுக்களும் சேர்ந்து இழுபட, என் மரணம் சம்பவிக்கலாம்! அவர் ஒரு அதிசயம் ! ஏன்? குழந்தைப்பருவத்திலிருந்து முதுமை எட்டிபார்க்கும் வயசுவரை வளைந்தே கொடுக்காத ஓர் வாழ்க்கை வாழ்ந்தாரே..அதனாலயா? இல்லை! அவர் ஓர் அதிசயம்! எதுக்காக? கொஞ்சம் தன்மானத்தை கூறுபோட்டு விற்றிருந்தால் தெற்காசியாவின் கோடிகளுடனும் ,குட்ட…
-
- 15 replies
- 3.6k views
-
-
அப்பா மன்னாரில் இருந்த தன் வேலையிடத்தில் இருந்து ஒரு வார கால லீவோட யாழ்ப்பாணத்தில் இருந்த.. எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். வரும் போது.. வழமை போலவே.. இந்த முறை.. கருவாடு.. பாலைப்பழம்.. இதரை வாழைப்பழம்.. அப்பிள்.. ஜாம்.. பிஸ்கட்.. என்று எல்லாம் வாங்கி வந்திருந்தாரு. அதோட ஒரு சுமாரான அளவு காட்போட் பெட்டி.. அங்கும் இங்கும்.. சில தூவரங்களோட..! அப்பா.. இதென்ன கோழிக்குஞ்சா.. சத்தமே வரேல்ல...??! நான்.. பெட்டியின் தோற்றத்தை பார்த்திட்டு.. கேட்டன்.. திறந்து பார்... அப்பா கட்டளையிட.. ஆவலோடு.. பெட்டியை திறக்க முயன்றன். ஆனால் முடியல்ல..... விடு நானே திறந்து விடுறன். பெட்டியை திறக்க முடியாமல் நான் திணறுவதை பார்த்திட்டு அப்பாவே வந்த களைப்பு தீர முதல்.. திறந்துவிட்ட…
-
- 15 replies
- 1.6k views
-
-
மறதி.....மறதி...எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைக்குச் சாமான்கள் வாங்கப்போனால், சாமானை வாங்கிக்கொண்டு, சைக்கிளை கடையிலேயே மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன். ரேஷன் கடைக்குப் போனால், சாமான் வாங்கி விட்டு, ரேஷன் காட்டை கடையிலேயே வைத்து விட்டு வந்து விடுகிறேன்....நண்பனிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, அவன் அருமையான யோசனை ஒன்றைச் சொன்னான். சிரமத்தைப் பார்க்காமல் என்னென்ன சாமான்களை விட்டிலிருந்து கொண்டு போகிறோம் என்பதை எழுதிக்கொண்டு, வரும்போது அதைச் சரி பார்' என்று. அப்படிச் செய்தபோது, இரண்டு நாட்களாக எதையும் மறக்கவில்லை. என் மனைவியே ஆச்சரியப்பட்டாள். அன்றும் அப்படித்தான். கடைக்குப் போனேன் போய் விட்டு வந்தவன், நடுவழியிலேயே வீட்டில் எழுதிக் கொண்டு வந்த த…
-
- 15 replies
- 3.8k views
-