கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
பேயோட்டி வினையூக்கி முதலில் சாமியார் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். இத்தாலியில் சாமியார் வேடங்களுக்கு வங்காள தேசத்தவர்களும் ஹரே கிருஷ்ணா குழுமமும் பிரபலம் ஆகிவிட்டதால் , சொகுசா இருக்கிற ஒரு வேலை என்ன என தேடிய பொழுது சிக்கிய தொழில் தான் 'பேயோட்டி' ... ஆங்கிலத்தில் Ghost Buster , Exorcist எனச் சொல்லுவார்கள். ஸ்டைலாக பில்டிங் காண்டிராக்டர் என்பது போல நான் எனக்கு வைத்துக் கொண்ட தொழில் பெயர் Para Normal Scientist. பேய் வீடுகளில் இருக்கும் பேய்களை ஒட்டுவதற்குத்தான் என் முதல் முன்னுரிமை. மனிதர்களுக்குப் பேய் பிடித்ததாக சொன்னால் நான் எதுவும் செய்ய மாட்டேன், நல்ல மன நல மருத்துவரைப் பரிந்துரைப்பேன். என்னுடைய பாட்டி ஒரு முறை தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும் அந்த செய்…
-
- 1 reply
- 868 views
-
-
மண்மேடாகிற நகரம் ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.---…
-
- 1 reply
- 1.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் நெருக்கடி நடந்துபோனால், அரைமணி நேரத்துக்குள் போய்விடும் அலுவலகத்துக்கு ஒரு மணி நேரம் ஊர்ந்தபடியே காரில் போனான் ராகுல்! - கே.சதீஷ் புரிதல் ``ஹாய் டாட்!’’ என்ற வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து மகளுக்கு `டாப் அப்’ செய்தார் அப்பா! - கி.ரவிக்குமார் சுறுசுறுப்பு “ஹோம் ஒர்க் எழுத முடியல...தூக்கம் வருதும்மா...” என்றவனிடம், மொபைலை நீட்டியதும் எழுந்து உட்கார்ந்தான்! - சி.சாமிநாதன் பிரார்த்தனை படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேயின் ஆசை நிறைவேற கடவுளை பிரார்த்தித்தது குழந்தை! - பெ.பாண்டியன் தனிமை ஆயிரமாவது ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்துவிட்டு, ஃபீலிங் லோன்லி …
-
- 0 replies
- 1.4k views
-
-
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. "போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது. தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனு…
-
- 0 replies
- 923 views
-
-
மனோரஞ்சிதம்! வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை மனோரஞ்சிதம்! நான் மனோரஞ்சிதத்தை மீண்டுமொரு முறை சந்திப்பேனென்று எண்ணியிருக்கவேயில்லை. அதுவும் இவ்விதம் எதிர்பாராமல். இருபது வருடங்களாவதிருக்கும் அவளைக் கடையாகச் சந்தித்து..முன்பை விட இன்னும் தளதளவென்று பூசி மெழுகி மின்னிக் கொண்டிருந்தாள். அழகென்றால் அப்படியொரு அழகு. சங்ககாலக் கவிஞர்கள் வர்ணிப்பதைப் போல் பணை, வன, தட, பருத்த, அகன்ற போன்ற வார்த்தைகளைத் தாராளமாகவே பாவிக்கலாம் அவளை வர்ணிப்பதற்கு. அவ்விதமானதொரு உருவ அமைப்பு. அப்பொழுது நான் மிகவும் கட்டுப்பெட்டி என்று சொல்வார்களே அவ்விதமானதொரு குண அமைப்பு எனக்கு. என் வாழ்வில் எப்பொழுதுமேயே நிதானமானதொரு வளர்ச்சி தான் ஏற்பட்டு வந்திருக்கின்றது. நிதானமென்றால் அப்படியொரு நி…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பயம்! பு றப்படும்போதுதான் கடிகாரத்தைப…
-
- 0 replies
- 1.3k views
-
-
மூன்றாம் திருநாள்! மூன்றாம் திருநாள்! சி.முருகேஷ் பாபு ‘‘அ வனை ஏன்டே கூட்டிட்டு வந்தீங்க... படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் என்னத்துக்கு..?’’ என்னோடு வந்த முத்துக்குமாரையும் சுப்பிரமணியையும் கடிந்துகொண்டார் சித்தப்பா. எல்லோரும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தோம். எங்கள் ஊர் அம்மன் கோயிலில் கொடைவிழாவுக்கு காப்புக்…
-
- 1 reply
- 1k views
-
-
காட்டில் புலி ஒன்று கழுதையிடம் வாதிட்டுக் கொண்டிருந்தது: “நீ சொல்றது பொய். புல் எப்பவுமே பச்சை நிறம்தான்.” “இல்லவே இல்லை புல்லின் நிறம் நீலம” என்றது கழுதை. விவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில்.. தீவிரமாகி, “சரி.. நாம அரண்மணைக்குப் போய் சிங்கராஜாட்ட கேட்கலாம்” என்று முடிவானது. கழுதையும் புலியும் அரண்மணைக்குள் சென்று சிங்கராஜா முன் நின்றனர். புலி பேசத்துவங்குமுன், கழுதை “ராஜா.. புல்லின் நிறம் நீலம்தானே.. இந்தப் புலி பச்சைனு சொல்லுது” என்றது. உடனே ராஜா.. “ஆமாம்.. புல்லின் நிறம் நீலம்தான். தவறாகச் சொன்ன இந்தப் புலிக்குத் தண்டனை.. ஓராண்டு காவல்” என்றது. கழுதை மகிழ்ச்சியாக வெளியேற, காவலர்கள் புலியை கைது செய்தனர். புலி பரிதாபமாக சிங்கராஜாவைப் பார்த்துக் கேட்டது. “யோவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்…
-
- 13 replies
- 1.6k views
-
-
சனல் – 4 – வெற்றிச்செ்ல்வி (”காணாமல் போனவனின் மனைவி” சிறுகதை தொகுப்பு, சோழன் படைப்பகம், 2012, இந்தியா) சனல்-4 கானொளியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் முகுந்தாவிடம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. அவள், அறியாத, காணாத, கேள்விப்படாத மரணங்களா அதில் புதிதாக இருந்துவிடப் போகின்றன? யுத்தம் முடிந்ததாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டாலும்; அவள் கண்ட பிணங்களின் கோலங்கள் மட்டும் நினைவில் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. அழிக்க முடியாத பதிவுகளாய் மூளையில் பதிந்துவிட்ட அவை மரணம் தாண்டியும் அந்த ஆத்மாவை அமைதியாக வாழ விடுமா தெரியவில்லை; மறந்துவிட வேண்டும். கொஞ்ச நாட்களுக்காகவாவது மனதை அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளின் விருப்பம். முடிகிறதா? இதோ நிமலன் தொலைப…
-
- 0 replies
- 2.2k views
-
-
என்ன ஆதங்காக்கா ...? இண்டைக்கு இரண்டு போத்தல் தயிர் எடுக்கலாமா, சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த எருமைகளை தா ...தா என்று தள்ளிக்கொண்டு வந்த ஆதமிற்கு இடது காது ஸ்பீக்கர் கொஞ்சம் அவுட், ஆதமும் ங்கே என்று முழுச.. இரண்டு போத்தல் தயிர் ....தயிர் என்று பலங்கொண்டமட்டும் கத்தினார் கணேஸ், கணேசின் கதறலை கேட்டு பக்கத்துவீட்டு ராஜன் தெருவிற்கு வேடிக்கை பார்க்க ஓடிவர, கணேசின் குரல் ரகசியம் பேசுவதை போல் ஆதமிற்கு கேட்டது, எப்படியோ கணேஸ் சொல்லவந்ததை விளங்கிக்கொண்ட ஆதம், ஓவ் ...ஓவ்வ் ...கொண்டாரன்...ஹா என்று விட்டு பட்டியை விட்டு விலக எத்தனித்த எருமை கன்று ஒன்றை கையிலிருந்த இப்பில் கம்பைவைத்து தட்டி மீண்டும் பட்டியை மேய்த்துக்கொண்டு தெரு முனை சந்தியை நோக்கி முழு எருமை பட்டியையும் …
-
- 1 reply
- 1k views
-
-
நித்திலா .....தாயாகிறாள் . மானிட வாழ்வில் ஒரு பெண் ,திருமணமாகி தாய்மையடைவது இயற்கை தான் இதில் நித்திலா .......என் கதாநாயகி , அப்படி என்ன சாதித்து விடாள் என்று பார்க்கிறீர்களா ? அது தான் கதை ........கதையை வாசிக்க என்னுடன் தொடர்ந்து வாருங்கள். அழகான அமைதியான அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு செல்லமாக வளர்ந்தவள் தான் நித்திலா .....தாய் ...தலைமை ஆசிரியரான தந்தை இவர்களுக்கு குழந்தையாக சிறுமியாக ..செல்லமாக வளர்ந்தவள் தான் இந்த நித்திலா.....காலத்தின் கட்டளையோ , விதிவசமோ , கிராமத்தில் இருந்து ... இடம் பெயர்க்க பட்டு இலங்கையின் கொழும்பு மா நகரின் , ஒரு தொடர் மாடியில் வாழ்வை அமைத்து கொண்டார்கள். யாழ் இளம்பெண் கால ஓட்டத்தில் கல்வியில் தேர்ச்சி பெற்று ,வரு நாள் …
-
- 27 replies
- 5.8k views
-
-
ஓவியாவின் கனவுகள் மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை. நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு க…
-
- 4 replies
- 614 views
-
-
இன்ஜினீயரம்மா!' ஒரு வைராக்கிய தாயின் வெற்றிக் கதை 'இந்தக் குடும்பத்தோட பாரத்தை முழுக்க நான் என் தலையில சுமக்கிறேன்’ - இது காலங்காலமாக நம்மூர் ஆண்கள் வாடிக்கையாக உச்சரிக்கும் வார்த்தை. இந்த வார்த்தைக்கு வலுசேர்க்கும் விதத்தில் 28 வருடங்களாக சித்தாளாக 'கல்லையும் மண்ணையும்’ தன் தலையில் சுமந்து, பிள்ளைகளை இன்ஜினீயராகவும், பார்மசிஸ்டாகவும் ஆக்கும் முயற்சியில் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறார் வைராக்கிய தாய் ஒருவர். சென்னை பூந்தமல்லியில் வசித்துவரும் 38 வயதான 'சித்தாள்’ ஜெயந்தி, தான் கடந்துவந்த முள்பாதையை தானே விவரித்தார். ''அஞ்சாவது படிக்கும்போதே படிப்பை ஏறக்கட்டிட்டு பாண்டு (சிமென்ட் சட்டி) தூக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு அப்பவே என் குடும்பம் கூ…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஒரு காட்டில் வாத்து குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது. பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப் பாகவும் இருந்தன. ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது. உடன் பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக் குஞ்சைக் கண்டாலே பிடிக்க வில்லை. ஒரு கட்டத்தில் அதன் தாய் வாத்தே கூட அதை வெறுத்து, அதை மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது. அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது. நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமா…
-
- 2 replies
- 1.2k views
-
-
என் உயிர் உன்னிடம் ❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது. ❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்... ❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது. ❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான். அதேபோல, அவளும் கிராமத்து.,. அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்..., ❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர். ❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அ…
-
- 3 replies
- 999 views
-
-
ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்! சுகுணா திவாகர் ஓவியங்கள் : இளையராஜா, சிவபாலன் ''எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?'' கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப் பொசுங்கல்களுக்கு நடுவில் அவளது கண்கள் மட்டும் வெள்ளையாக அலைபாய்ந்தன. ஜீவா மூலம்தான் கார்த்திகா எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் நவீன இலக்கியம், அரசியல் பேசித் திரிந்து டீமாக மாறியவர்கள். டீம் என்றால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய டீம் இல்லை. நான், ஜீவா, அக்தர் உசேன், என் பெயர் கொண்ட இன்னொரு செந்தில் என்கிற கவிஞர் நவயுகன்... அவ்வளவுதான். ஓஷோ, பாலகுமாரன் என்று அலைந்து திரிந்து, ஒரு வழியாக எங்கள் இலக்கிய…
-
- 1 reply
- 1k views
-
-
போராளி காந்தா இறுதிச்சமர் முடிவில் தனது பிள்ளைகளோடு இராணுவக்கட்டுப்பாட்டை நோக்கி வந்த நேரம் எறிகணைபட்டு வீரச்சாவடைந்துவிட்டார். கையில் சரிந்த காந்தாவின் உடலை அவரது போராளிக்கணவன் தனது மனைவியின் உடலை நாய்களுக்கு இரையாகாமல் புதைத்துவிட்டு வருவதாக உறவுகளிடம் சொல்லிவிட்டு இரண்டு பிள்ளைகளையும் உறவுகளிடம் கொடுத்தனுப்பிவிட்டு காந்தாவின் உடலைப்புதைத்துவிட்டுப் போகப்போனவர். இன்றுவரையும் திரும்பி வரவில்லை. காந்தாவின் மகளும் மகனும் ஓர் உறவினால் வளர்க்கப்பட்டு வருகிறார்கள். தாயையும் தந்தையையும் இழந்த அந்தப்பிள்ளைகளுக்க எல்லாமுமாக அந்த உறவு அவர்களைத் தனது சொந்தப்பிள்ளைகளுக்கும் மேலாக கவனிக்கிறார். காந்தாவின் மகளோடு கதைக்கிற போது காந்தா வெளிநாட்டில் இருப்பதாக நம்புகிற அவளது குழந்தைக் கன…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=6]நமக்கு வேண்டாம் கொலைத் தொழில் [/size] [size=2][size=4]கோடை வெயிலும் குளிர் காற்றும் குழைந்து கிடந்தன…[/size][/size] [size=2][size=4]அவசர உலகில் அவன் அவசரமாக நடந்து கொண்டிருந்தான்…[/size][/size] [size=2][size=4]” பொத் பொத் .. ” என்ற ஓசையுடன் அவன் சப்பாத்துக்கள் தரையில் மோதின.. அவசரம்..[/size][/size] [size=2][size=4]கீழே பார்த்தான்..[/size][/size] [size=2][size=4]ஒரு பூச்சி..[/size][/size] [size=2][size=4]சாணத்தின் நிறம்.. சிறக்கைகளில் கருமையாக கோலங்கள்..[/size][/size] [size=2][size=4]அதனுடைய அசைவு சாதாரணமாகப்படவில்லை… ஏராளம் பிரச்சனைகளை சுமந்து அந்தரப்படுவது தெரிந்தது..[/size][/size] [size=2][size=4]பூச்சிகளின் உலகில் அத…
-
- 8 replies
- 865 views
-
-
ஊர் திரும்புதல் கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன. “தம்பி குகன்… வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்” மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா – திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன். நேரம் : காலை 9.20, திகதி :…
-
- 3 replies
- 766 views
-
-
இப்பொழுது எல்லாம் வீடு கலகலப்பு குறைந்து போகிறது.மகளின் பிரிவுடன் ஏதோ எழுததொடங்கிவிட்டேன்.எனக்கு ஒரே பிள்ளை ஜான்சி . ஜான்சி இப்போது போலந்தில் மருத்துவ படிப்பு படிக்கிறாள்.ஜான்சிக்கு இப்ப பத்தொன்பது வயது.நல்ல துடியாட்டம்.தமிழ் கதைப்பாள் ஆனால் எழுத வாசிக்கமாட்டாள்.நானும் தமிழ் பாட்டுகளைப்போட்டு கேள் கேள் எண்டாள். போங்க அப்பா நல்லா இல்லை அப்பா என்னுறாள்.கிறிஸ்மஸ் லீவில இரண்டு கிழமை நின்றவள் இப்ப மனிசி அவளைக்கூட்டிக்கொண்டு போலந்துக்கு போயிட்டுது.மனிசி வாற கிழமைதான் வரும்.இன்றைக்கு ஒரு கதையை யாழில வாசிச்சன் எனக்கும் ஏதோ எழுதோணும் மாதிரி கிடக்குது. நானும் யாழ்ப்பாணம்தான். பள்ளிக்கூட படிப்பு எனக்கு சரிவரயில்லை. ஒரு மினி பஸ்சில கொண்டட்டறாய் வேலை செய்தன்.அப்பதான் விக்…
-
- 15 replies
- 1.5k views
-
-
என் மனைவி என்னை பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் பல்லி அடிக்க என்று அர்த்தம். சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம். கல்யாண வீட்டில் ”என்னங்க” என்றால் தெரிந்தவர் வந்திருக்கிறார் வா என்று அர்த்தம். துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம். வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால் பூவாங்க வேண்டும் என்று அர்த்தம். மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால் மருத்துவரிடம் என்ன பேசவேண்டும் என்று அர்த்தம். வெளியே பார்த்து ”என்னங்க” என்றால் அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம். …
-
- 30 replies
- 4.9k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
ரொறொன்ரோ பெண் - அ.முத்துலிங்கம் முதலில் ஒரு கடிதத்துடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். 50 வருடத்திற்கு முந்திய கடிதம். ஒரு கனடிய இளம் பெண் எழுதியது. மானுடவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிக்காக அவர் தெரிவு செய்த இடம் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பிற்பட்ட கிராமம். கோவை, காங்கேயம் அருகில் உள்ள ஓலைப்பாளையம். கனடாவில் உள்ள அவருடைய தாயாருக்கு எழுதிய முதல் கடிதம். (சில இடங்களில் சுருக்கப்பட்டுள்ளது.) ‘நான் வசிக்கும் சிறிய வீடு. ஒரு முற்றமும், பூட்டக்கூடிய சாமான் அறையும், வெளியே சமைக்கவும் குளிக்கவும் வசதிகள் கொண்டது. வெள்ளையடித்த உள் சுவருக்கு மேல் சாய்ந்து கிடக்கும் கூரை மழைத் தண்ணீரை முற்றத்தில் கொட்டும். வீட்டின் முழுப்பரப்பும் 18 X 30 அடி இருக்கலாம். தெற்குப…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமயந்தியைத் தேடுகிறேன். அவளைச் சந்தித்ததும், அச்சந்திப்பு பின்பு தொடர்கதையாகியதும் அதுவே எனது இளமைக்காலத்தில் பல இராசாயண மாற்றங்களை என்னுள் கொண்டுவந்ததும் தற்செயலானதே ஆனால் அதன்பின்பான நினைவுகள் மட்டும் நிரந்தரமானவை . யாழ் மத்திய கல்லூரியின் விளையாட்டுமைதானத்தில் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டி நடக்கும்போது வேம்படிமகளிர் கல்லூரி உட்பட யாழ்நகரப்பகுதி தவிர குடாநாட்டின் முண்ணணிப்பாடசாலைகள் கலந்துகொள்ளும் போட்டியாதலால் எம்போன்ற இளவட்டப் பாடசாலை மாணவர்கள் அங்கு ஆயராவதில் தவறேதும் இருப்பதாக அப்போது மட்டுமல்ல இப்போதும் எனக்குத்தோன்றவில்லை. ஓரிரு நாள் நடைபெறும் பெண்களுக்கான விளையாட்டுப்போட்டியில் அவ்வேளைய ரோமியோக்கள் நாங்கள் அழையா விருந்தாளிகள…
-
- 8 replies
- 1.4k views
-