கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சுடும் நிலவு சுடாத சூரியன் “இன்று சனிக்கிழமை காலநிலை பூச்சியத்துக்குக் கீழே பத்துப் பாகை என்று வானிலை அவதானநிலைய அறிவிப்பைக் கேட்ட வண்ணம் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தி வீட்டைப் பூட்டியபின் தன் குளிருடைகளை எல்லாம் சரிபார்த்தபடி காரை வீதியில் இறக்கினாள் மனோகரி. வீதி ஓரம் எங்கும் பனிக்குவியல். இந்தக் குளிரிலும் வீதியில் ஆள் நடமாட்டத்துக்கு குறைவில்லை. அவரவர் தத்தமது கடமைகளைச் செய்வதற்கு குளிரோ மழையோ இங்கு ஒரு தடையாக இல்லை. காரை வெகு கவனமாகச் செலுத்திய மனோகரி பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி விட்டு பாடசாலைக்குள் நுழைந்தாள். அப்பொழுது நேரம் ஒன்பது மணி. தமிழ் வகுப்புகள் ஆரம்பமாக இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. பெற்றோர் தமது பிள்ளைகள் தாய் மொழியைப் …
-
- 10 replies
- 2.4k views
-
-
மான்டேஜ் மனசு 7 - அழகல்ல காதல்... காதலே அழகு! வஸந்த் இயக்கும் படங்கள் மனசுக்கு நெருக்கமானவை. ஒவ்வொரு படமும் செதுக்கி வைத்த சிற்பம் போல இருக்கும். மிக மென்மையாக கடந்துபோகும் அந்த கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் நம் நிஜ வாழ்வில் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி சந்திக்கும் நபர்கள் சிலாகிக்கும் உறவாக மனதில் பதியமிடும். பொதுவாக வஸந்த்தின் படங்களில் பெண் கதாபாத்திரத்துக்கு தனித்துவம் இருக்கும். ஹீரோ - ஹீரோயின் கதாபாத்திர வடிவமைப்பு, லாஜிக் மீறல் பற்றிப் பேசப்படும் இந்த தருணத்தில் வஸந்த் பட ஹீரோயின்கள் அதை அநாயசமாக கடந்து போவார்கள். 'ஆசை' சுவலட்சுமி, 'ரிதம்' மீனா, 'சத்தம் போடாதே' பத்மப்ரியா என்று அந…
-
- 0 replies
- 2.4k views
-
-
எதிர்ப்பு "...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..." காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம். அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது. காகங்களின் கூடு மரத்தின் …
-
- 2 replies
- 2.4k views
-
-
http://www.lexpress....n-mars-2010.jpg கார் து லியோன் (Gare de lyon ) புகையிரத நிலையம் காலையின் அமைதியை இழந்து காணப்பட்டது . புகையிரத நிலையம் நவீன வடிவமைப்புடன் முற்றுமுழுதாகவே மாறியிருந்தது . நான் 89களில் பார்த்த தகரக்கொட்டகை போலில்லாமல் முற்றுமுழுதாகவே கார் து லியோன் அசுர வளர்சியடைந்திருந்தது . நாங்கள் புகையிரத மேடை 6 ஐ நோக்கி மக்கள் வெள்ளத்தில் மிதந்தோம் . அங்கு பிறான்சின் வெளியிடங்களுக்குச் செல்ல ரீ ஜி வி ( T g v ) க்கள்* அணிவகுத்து நின்றன . நான் ரீ ஜி வி யைப் பற்றிக் கேள்விப் பட்டாலும் இதுவே எனக்கும் குடும்பத்திற்கும் முதல் பயணம் . பிள்ளைகள் ரீ ஜி வி யைப் புதினமகப் பார்தார்கள் . நான் எங்களுக்கான பெட்டியை தேடுவதில் மும்மரமாக இருந்தேன் . http://upload.wiki…
-
- 27 replies
- 2.4k views
-
-
ஓனர் - சிறுகதை சிறுகதை: கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி, ஓவியங்கள்: ஸ்யாம் ‘`விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும்’’ ‘`சூப்பர்டா… எப்பக்குள்ள அனுப்பச் சொல்லிக் கேட்ருக்காங்க?’’ இன்றுவரை அவன் அந்தக் கேள்வியை சீரியசாகக் கேட்டானா இல்லை கிண்டலுக்காகக் கேட்டானா என்று தெரியவில்லை. செய்யும் வேலையில் அவ்வப்போது சிற்சில சாதனைகள் செய்துவந்தாலும், அதற்கான பாராட்டுகள், அங்கீகாரங்கள், கைத்தட்டல்கள் கிடைக்கப்பெற்றாலும், இந்த ஆசை மட்டும் தீரவே இல்லை. ஆனந்த விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். கதை விகடனில் பிரசுரமாக வேண்டும் என்பதைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. முதலில் விகடனுக்கு அனுப்ப ஒரு கதை எழுத வேண்டும். இதுதான் மனதில…
-
- 1 reply
- 2.4k views
-
-
காலம் செய்த கோலம் . தாயகத்தில் இருந்து அதிகம் பேர் உள நாட்டுக் குழப்பங்களால் அகதிகளாக் வெளி நாடு சென்றனர். ராஜ சுந்தரம் குடும்பமும் விதி விலக்கல்ல . அவரும் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இரு மகன்களும் பள்ளியில் பயின்றனர. பிள்ளைகளின் தேவைகளை சமாளிக்க் முடியாமலும் வாடகைப்பணம் அதிகமானதாலும் இரண்டு வேலைக்கு சென்றார். ராஜ சுந்தரம். . பகலில் ஒரு கார் கம்பனியிலும் மாலை நேரங்களில் ஒரு உணவு விடுதியிலும். வேலை செய்து இரவு பத்து மணியாகும் வீடு வந்து சேர .அத்தோடு வெளி நாட்டு வாழ்வுக்கே உரிய கால நிலை மாற்றங்களும் அவருக்கு வாழ்வில் வெறுப்பை தந்தது. இருந்தாலும் மகன்களின் எதிர்கால் வாழ்வை எண்ணி சகித்து கொண்டார். ஒரு நாள் தாயகத்தில் உள்ள ஒரு மூத்த சகோதரி . தன…
-
- 15 replies
- 2.4k views
-
-
சற்றிங் சாலையில்.... காலை நேரம் பல்கலைக்கழக வாசலில் ஒரே கூட்டம். பஸ்ஸில் இருந்து இறங்கிய சங்கர் ஓட்டமும் நடையுமாய் அவசரமாய் போய்க் கொண்டிருந்தான். அவனை வாசலில் கண்டுவிட்டு ஓடி வந்த துசி " டேய் சங்கர் எங்க போறா... ஒப்படை (அசைன்மெண்ட்) கொடுக்கிறதுக்கோ, நில்லு நானும் வாறன்". அதுக்கு சங்கர்.. இல்லையடாப்பா, சின்னப் பிரச்சனை ஒன்று, என்ர நண்பிகள் அவசரமா வரச் சொல்லி போன் பண்ணிச்சினம் அதுதான் போறன். "இன்று ஒப்படைக்கு இறுதி நாள் எல்லோ.. சரி சரி நீங்கள் போய் அவைக்கு விலக்குப் பிடியுங்கோ.. நான் ஒப்படை கொடுக்கப்போறன்" சங்கர் பல்கலைக்கழகம் வந்த புதிதில் அப்பாவியாகத்தான் தெரிந்தான். பின்னர் நாட்கள் போகப்போக நண்பிகளோடு சுற்றுவதும் அவர்களோடு கடலை ( அரட்டை) போடுவதும் "காட்ஸ்" வி…
-
- 16 replies
- 2.4k views
-
-
இரவு வேளையில்.. எனக்கு பரப்புரைக் கூட்டங்கள் இல்லாத வேளையில், நான் வீட்டில் இருந்து கவிதையோ கட்டுரையோ எழுதிக் கொண்டிருப்பேன்.. அந்த வேளைகளில் அவள் என் காலடியில்தான் அனேகமாக இருப்பாள்! உடனே நீங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, நான் ஏதோ என் பழைய காதலியைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நினைத்தால்… ஏமாறப் போவது நிச்சயம் நீங்கள்தான்! அவள் ஓர் சிறுமி..! தூரத்து.. உறவு முறையில் அவள் எனக்கு மகள்தான்..! அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்..! நிறம் கறுப்புத்தான்.. ஆனால்.. அவளிடம் எனக்கு எப்போதுமே பிடித்தது அவளது அந்த கருவிழிகளும் கூரிய நாசியும் நீண்ட கூந்தலும்தான்.. “சித்தப்பா”.. என்றுதான் எப்போதும் என்னை கூப்பிடுவாள்!.. வகுப்பில் கொஞ்சம் மக்கு!.. அதனால், தா…
-
- 11 replies
- 2.4k views
-
-
யுத்தம்- லூய்கி பிரண்ட்லோ (luigi pirandello) தமிழில் நிருத்தன் ரோமிலிருந்து இரவு நேர பெரு ரயிலில் புறப்பட்டவர்கள் இந்த பழைய ஃபாப்ரியனோ புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கி, சல்மோனாவுக்கு அந்த பழங்கால இணைப்பு ரயில் பெட்டியில் விடியல்வரை – பயணத்தை தொடர காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த விடியலில், புகை அப்பி நெடி அடிக்கும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் – ஏற்கனவே ஐந்துபேர் தங்கள் இரவை கழித்து இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் துக்கம் அனுஷ்டித்தபடிவந்த அந்த பருமனான பெண்மணி நிமிர்த்தி திணிக்கப்பட்டு ஒரு துணிமூட்டையைப்போல வந்து விழுந்தாள். அவளைத் தொடர்ந்து குட்டியான மெலிந்திருந்த வெறைத்து செத்த முகமும், பேயறைந்தவர்களுக்கான சுவாசமும்.. பளிச்சென மின்னும் விழிகளோடும் அவள…
-
- 0 replies
- 2.4k views
-
-
புத்தனிற்கு ஒரு ஆசை யாழ்கள உறவுகள் நிறைவேற்றுவார்கள் என்று ஒரு நம்பிக்கை அதாவது படைபாளி என்று ஓர் கட்டுரை அல்லது தொடர்கதை ஆரம்பிக்க உள்ளேன் உங்களது ஆதரவை நாடி நிற்கிறேன். அன்று வெள்ளிகிழமை வார இறுதி சஞ்சிகைகளிற்காக படைப்புகளை படைத்து கொண்டிருந்தான் சிவா இயற்கை தனது இயற்கையான குணங்களை வெளிபடுத்தியது திடிரேன மனிதர்கள் போல மணம் மாறியது வெயில் அடித்தது திடிரேன மழை கொட்டியது அத்துடன் பனிசாரலும் தூவின சிட்னியில் சிவா ஒரு சிறந்த எழுத்தாளன்,இலக்கியவாதி பலராலும் போற்றபடும் ஓர் படைபாளி சொந்த பெயரிலும் எழுதுவார் புனைபெயரிலும் எழுதுவார் பாடசாலையில் படிக்கும் போதே அவனிற்கு கதை,கட்டுரைகள் எழுதுவது என்றால் அவனுக்கு ரொம்பவே பிடித்த விடயம் அதிலும் புராண கதைகள்,ஆத்மீக கதைகள் என்றால…
-
- 11 replies
- 2.4k views
-
-
ஆற்றாமை கு-ப-ராஜகோபாலன் ‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள். ‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா. ‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’ அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான். ‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள். சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, ‘அதற்குள் நாழியாகிவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டே பின்னால் …
-
- 1 reply
- 2.4k views
-
-
நேற்றுக் காலையில் என்னோடு கதைத்த கவிஞர் ஒருவர் "பிரபாகரனைப் பிடித்துவிடப் போவதாகச் செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள
-
- 0 replies
- 2.4k views
-
-
கன்னியம்மாள் - சிறுகதை க.வீரபாண்டியன் - ஓவியங்கள்: ஸ்யாம் “இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிச்சுக்கிறது என்னன்னா... நம்ம ஊரு முன்னாள் பெரசிடென்ட் பெரியசாமி, இன்னிக்குக் கோழிகூவுற நேரத்துல காலமானாரு... அன்னார் தகனம், இன்னிக்கி சாயங்காலம் 5 மணிக்கு நம்ம ஊரு கெழக்க இருக்கிற குடியானவுக சுடுகாட்டுல நடக்குமுங்கோ...ஓஓஓ...’’ பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்காலம் முடிந்து 15 வருடம் ஆகியிருந்தும், அதற்குப் பிறகு மூன்று பேர் அந்தப் பதவியை அலங்கரித்திருந்தாலும்கூட இன்றைக்கும் அதியங்குடி கிராமத்துக்காரர்களின் பிரசிடென்ட் பெரியசாமிதான். கன்னியம்மாள் மாதிரியான சிலருக்கு `பெரசன்ட்டு’. `பிரசிடென்ட் பெரியசாமி இறந்துவிட்டார்’ என்று பன்றிமலையில் பட்டு எதி…
-
- 0 replies
- 2.4k views
-
-
சுவையான தேநீர் போடுவது எப்படி? சீன மகாராஜா ஷெனொங் 'சுடுதண்ணி' குடித்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக அரண்மனையில் இல்லை. வெளியில் எங்கோ காட்டில் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று குடித்துக் கொண்டிருந்த சுடுதண்ணி சுவையாக மாறியது. அதன் நிறமும் மாறிவிட்டது. மாண்புமிகு ஷெனொங் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாகக் கடவுள் நம்பிக்கை அல்லது பேய்,பிசாசு நம்பிக்கை இல்லைப் போல. தேத்தண்ணிப் பேணிக்குள்ளே மெதுவாகப் பார்வையை விட்டார். எங்கிருந்தோ மரத்தில் இருந்து உதிர்ந்து பேணிக்குள் விழுந்திருந்த இலைகளைக் கவனித்தார். வேறு பேர்வழிகள் எனில் உடனே கவிதை எழுதத் தொடங்கியிருப்பார்கள். மகாராஜா புத்திசாலி. ஆராய்ந்து பார்த்து அந்த இலைகள் எந்த மரத்தில் இருந்து உதிர்ந்தன என்று கண்டுபிடித்தார். இதுத…
-
- 2 replies
- 2.4k views
-
-
இறைச்சி வாங்க வழக்கமாக போகும் தமிழ் கடைக்கு போனேன்.கல்லாவில் நின்ற முதலாளி என்னை சிரித்து வரவேற்றதுடன் அப்போது கடையால் வெளியேறிக்கொண்டிருக்கும் வயது போன ஒரு மனுசியை பார்க்குமாறு கண்ணால் ஜாடை காட்டினார்.கையில் ஒரு பையுடன் போய்கொண்டிருந்த ஒரு அம்மாவை .இடைக்கிடை இதே கடையில் பார்த்ததாக ஞ்பகம். "என்ன விடயம் என்று" முதலாளியைக் கேட்டேன் . "மீனோ இறைச்சியோ போய் சொல்லிப்போட்டுவாரும் ஒரு அலுவல் காட்டுகின்றேன் " என்றார். திரும்பி வர செக்குரிட்டி கமரா எடுத்த படத்தை ரீவைன் பண்ணி போட்டுக்காட்டினார். அந்த மனுசி வந்து ஆறு இராசவள்ளிக் கிழங்குகளை மேசையில் வைக்க முதலாளி எடுத்து நிறுத்து பின்னர் இரண்டு கிழங்கை வெளியே எடுத்து மீண்டும் நிறுத்து காசையும் வாங்கிக்கொண்டு விட,மனுசி…
-
- 11 replies
- 2.4k views
-
-
வதனியின் இதயத்தில் இனந்தெரியாதவொரு படபடப்பு. தான் செய்தது சரியா பிழையா என்பதை அவளால் தீர்மானிக்க முடியாமலிருந்ததே அதற்குக் காரணம். "நானுந்தான் எத்தனை எத்தனை வழிகளிலெல்லாம் முயன்றேன். ஒன்றுமே சரிவரவில்லை என்பதால்தானே இதைச் செய்யத் துணிந்தேன். அதனால் இது தவறே அல்ல!" அவள் மனதின் ஒரு பக்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தது. "உன்னைப் போலவே மற்றவர்களும் நடந்துகொள்ள முயன்றால்? அதன் விளைவுகளை எண்ணிப்பார். தெரியாமல் செய்திருந்தால் அது பிழை. நீ திருந்திக் கொள்ள வாய்ப்புண்டு. நீயோ தெரிந்தே செய்துவிட்ட பிழையிது. இது பிழையென்றல்ல குற்றமென்று நீ சரியாகப் புரிந்து கொள்." வதனியின் மனச்சாட்சியின் மறுபக்கம் இவ்வாறு வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தது. தான் தங்கிய…
-
- 15 replies
- 2.4k views
-
-
தொலைபேசி மணி அடித்ததும் பாய்ந்து விழுந்து எடுத்தா மறு பக்கத்தில் சிவா டென்மார்க் இல் இருந்தது கதைத்தான். , என்ன மாதிரி நாளைக்கு எங்கடை ஆக்கள் உங்கடை பக்கம் வருகினம் நீயும் வாறியா என்றான்,நானும் ஓமென்று சொல்லி விட்டு வைத்தேன்.பல மாதங்களுக்கு முன்னர் நோர்வே போக ஆசைப்பட்டு அவனிடம் கேட்டிருந்தேன்.அதை ஞாபகம் வைத்திருந்து எனக்கு உதவி செய்ய வந்ததையிட்டு மகிழ்ந்தேன். அடுத்த நாள் விசாவும் இல்லை ஒரு கோதாரியும் இல்லை நான் டென்மார்க்கில் நின்றேன். எப்படா நோர்வே போவது என்று நான் சிவாவை நச்சரிக்க அவனும் வந்தனி நின்று ஒரு கிழமை டென்மார்க்கை சுற்றிப் பார்த்து விட்டுப் போகலாம் என்றான். எனக்கென்றால் ஒரே பயம் எப்ப போலீஸ்காரன் வந்து அப்பிக் கொண்டு போகப்போகின்றானோ என்று. வ…
-
- 11 replies
- 2.4k views
-
-
சாந்தமு லேகா - சிறுகதை “ராத்திரி 10 மணிக்கு மேல கேட்டைப் பூட்டிருவோம். கரன்ட் பில் யூனிட்டுக்கு இவ்வளவு குடுக்கணும். வெஜிட்டேரியன்ஸ்க்கு மட்டும்தான் வீடு. சினிமாக்காரங்களுக்கு வீடு கிடையாது. அபார்ட்மென்ட்ல நாய் வளர்க்கக் கூடாது.” இதுபோன்ற எந்த கண்டிஷனும் இல்லாத வீடு சென்னையில் வாடகைக்குக் கிடப்பது கனவிலும் நடக்காத விஷயம். வீடு என்றால் ஃபிளாட். பல மாடிக் கட்டடத்தில் ஒரு ஃபிளாட். சின்மயா நகரிலுள்ள ‘சாந்தலேகா அபார்ட்மென்ட்ஸ்’க்குக் குடிவந்த புதிதில் ஷைலஜாவுக்கு இந்த சுதந்திரத்தை முதலில் நம்பவே முடியவில்லை. முகப்பில் வரையப்பட்டிருந்த வீணை ஓவியத்தைப் பார்த்ததுமே அவள் சௌந்தரிடம் சொல்லி விட்டாள். ‘எனக்கு இதைப் பார்க்கும் போதே நல்லதா தோணுது.’ நல்லதாகத்தான் நட…
-
- 0 replies
- 2.4k views
-
-
சென்ற வாரம் **** அழுகுரல்கள் வானளவு எழுந்தது. ஆனால் அந்த குரல்கள் எந்த வல்லரசுக்கும் கேட்கவே இல்லை… தொடர்ந்து கொண்டிருந்தது அந்த இடத்தை துடைத்தழிப்பதற்கான தாக்குதல்கள் …. அப்போது தான் அண்ணா……. அந்த குரல் தேய்ந்து கொண்டிருந்தது.. தொடர்ச்சி**** இரத்த வெள்ளம் அந்த காட்டு மண்ணை சிவப்பாக்கி கொண்டிருந்தது. என் உடலும் அந்த குருதியில் குழித்தது. டேய் கவி அண்ணா இங்க ஓடி வாடா எல்லாருமே காயம்டா என் தம்பி கத்துகிறான். யாரை தூக்குவது யாரை தவிர்ப்பது என்பது புரியவில்லை. சுமார் என் உறவுகள் முப்பது பேருக்கு மேலானவர்கள் அந்த இடத்திலே சூழ்ந்திருந்தோம். அதில் குறித்த சிலரைத்தவிர அனைவருக்கும் படு காயம். கட்டு போடுவதற்கு எந்த அவகாசமும் கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை சிங்கள தேசம் எம…
-
- 1 reply
- 2.4k views
-
-
இரவு பத்தரை இருக்கும் இங்கு வீ்ட்டின் பின் பக்கம் அவல குரலுடன் கீச்சிடும் சத்தம் கேட்டு தேய்ந்து .ஓய்ந்தது இந்த குரலை எங்கையோ கேட்டிருக்கிறன். ஆ..அது ஒரு பறவையின் குரல் இந்த வினோதமான குரலை நீண்ட காலத்துக்கு பிறகு கேட்டிருக்கிறன்.ஆ..இதை சுடலை குருவி என்று சொல்லுவினம்..நாடு கடல் மைல்கள் காலங்கள் தாண்டி ஒலித்த இந்த குரல் திரும்ப திரும்ப ஒலித்து பேயறைந்தவன் போல் என்னை ஆக்கி கொண்டிருந்தது. நீண்ட பரந்த செவ்வக வடிவமுள்ள வயல் பரப்பு பகுதியின் வடகிழக்கு மூலையில் அந்த ஊர் சுடலையும் அடர்ந்த பனங்காணியும், வட மேற் மூலையில் வேப்பமரத்துடனூன வைரவர் கோயிலும் இருக்கு தென் மேற்கு மூலையில் தனித்து விடப்பட்ட மாமரத்து உடனனா பழங்கால வீடும் அதன் பின் சில இடை வெளி விட்டு தான் நெருங்கிய ஊர்…
-
- 9 replies
- 2.4k views
-
-
நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சி ஒன்று கணமும் நில்லாது மேல் எழுந்து கீழ் விழுந்து அலைந்து சீர்க்கரையில் எற்றுண்டு கிடந்த செயல் நோக்கின் சிந்திக்கின் மானிடர்தம் வாழ்க்கை இது என்றேன்! -கங்கையில் விடுத்த ஓலை வணக்கம், இது மனித வாழ்க்கையிண்ட மறுபகுதி. பலர் சிந்திக்க விரும்பாத, அறிஞ்சுகொள்ள விரும்பாத பகுதி. மரணத்தின் பின்னர் இடுகாட்டுக்கு போவதுவரை என்ன நடக்கிது எண்டு கீழ் உள்ள விபரணச்சித்திரம் சொல்லிது. ஏழு பகுதிகள் இதில இருக்கிது. மொத்தமாக சுமார் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் நீளமான கதை இது. நேரம் கிடைக்கும்போது இவற்றை முழுமையாக பார்ப்பது எங்கட குடும்பங்களில, உறவினர்கள், நண்பர்களிற்கு... அகாலமான காலம் வரும்போது அதை தாங்கிக்கொள்ள, சரியான முறையில செயற்பட்டு இறுதிக்க…
-
- 4 replies
- 2.4k views
-
-
பதுங்குகுழியும் பட்டினி வாழ்வும் “எங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடூர வாழ்க்கை” அவள் மீண்டும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள். “அழாதையம்மா கண்ணைத் துடை…என்ன செய்யிறது தமிழராய் பிறந்து துலைச்சிட்டோம் அதுதான்…” “அதுக்கு கடவுளுக்குக் கூடக் கண்ணில்லைத்தானேயப்பா” என்றபடி அவள் மேலும் விம்மத் தொடங்கினாள். பதுங்கு குழிக்குள் இருந்து இன்றுடன் வெளியுலகு பார்த்து மூன்று நாட்கள் ஆகி விட்டிருந்தது. நேற்றும் முந்தநாளும் பிள்ளைகள் நித்திரை கூடக் கொள்ளவில்லை. ஒரே செல்லடி… இன்றுதான் செல்லடி கொஞ்சம் குறைந்து பிள்ளைகள் நித்திரை கொள்கிறார்கள். பாவம் அவள் என்னதான் செய்வாள் வாழ வேண்டிய வயதில் கணவனை யுத்தத்தின் கோரப் பற்களுக்கு இரையாக்கிவிட்டு… தனிமையில் மூன…
-
- 15 replies
- 2.4k views
-
-
ஜெர்மன் விசா - சிறுகதை அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம் ஒருவன் வீட்டைவிட்டு ஓடுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பரீட்சையில் சித்தியடையாதது, காதல் தோல்வி, அம்மா ஏசியது, அப்பா அடித்தது, கடன் தொல்லை, விரோதிகளின் சதி... இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். நான் வீட்டைவிட்டு ஓடியதற்குக் காரணம் ஓர் ஆடு. வீட்டைவிட்டு மட்டும் அல்ல; நான் நாட்டைவிட்டே ஓடினேன். அதைச் சொன்னால் ஒருவருமே நம்புவது இல்லை. ஆகவே, அது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா? வருடம் 1979. எனக்கு வயது 15. நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பில் முதலாவதாக வராவிட்டாலும், ‘நீ சுயமாகச் சிந்திக்கிறாய்’ என்று வாத்தியார் என்னைப் பாராட்டியி…
-
- 1 reply
- 2.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் மன்னிப்பு நேரில் சண்டை போட்டுக்கொண்ட கணவனும் மனைவியும் ஸாரி கேட்டுப் பேசிக்கொண்டார்கள் வாட்ஸ்அப்பில்! - கிருஷ்ணகுமார் புகார் “நேற்று ரேவதி மிஸ் ஹோம் வொர்க் எதுவும் கொடுக்கல” ஹெட்மிஸ்டரஸிடம்புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனாவின் அம்மா. - விகடபாரதி ஹவுஸ்மேட்ஸ் ``சண்டை போட்டுக்காம விளையாடுங்க’’ என்ற அம்மாவிடம் குழந்தைகள் சொன்னது ``இது பிக்பாஸ் விளையாட்டும்மா!’’ - ரியாஸ் முதலும் முடிவும் “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!” என்ற ராகவன் ஹாஸ்பிட்டல் பில்லைப்பார்த்ததும் சண்டை போடத் தயாரானான். - விகடபாரதி என்னாச்சு? பைக்கில…
-
- 0 replies
- 2.4k views
-
-
சத்தியவானுக்கு ஒரு சாவித்திரி இந்த சத்திய பாமாவிற்கோ தினம் சாவே ராத்திரி விரைவில் யாழ் இணையத்திற்காய் .. . . . ஈழத்துக் கருவாச்சி நேற்று கருவறையில் நாளை கல்லறையில் இன்றைய வாழ்க்கையை இனிதே வாழ்ந்திடு என்ற வாசகத்தை பொய்யாக்கி கருவறை தொடக்கம் கல்லறை வரை கந்தையாய் கசங்கியவளின் உண்மைக்கதை. . . விரைவில் . . . . அன்று காதலுடன் எங்கிருந்தாய் மண்ணில் பிறக்கையிலே என்று வந்தேன்.. . . இன்று ஈழத்துக் கருவாச்சியுடன் வருகின்றேன். . . . கரவையில் தோன்றி நீர்வேலியில் மறைந்த கருவாச்சிதான் இவள். . .ஆம் ஈழத்துக் கருவாச்சி. . . இழப்புகளையே எருவாக்கி விருட்சமாக எழ நினைத்தவள். . . வேரறுந்த போது விசமருந்தி மாண்டு விட்டாள்.. . .
-
- 8 replies
- 2.4k views
-