கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
எதுவரைக்கும் எழுதுவது...:. குருணாகல் என்ற சிங்கள ஊரின் அழகு அற்புதமானது. பாறைகள் மலையாகவும், குளங்கள் ஓடைகள் போன்று நீண்டும், வயல்கள் பேராறு போன்று விரிந்தும் இருக்கும் அழகிய சிங்கள விவசாய பெரும் கிராமம். நகரம் என்று சொல்லப்பட்டாலும் கிராமியமே எங்கும் பரவி இருக்கும் ஒரு பிரதேசம் பெரும் பாறைகள் மலையாக எழுந்தும் 'வெவ' என்று சிங்களத்தில் அழைக்கப்படும் பெரும் குளங்கள் பல கொண்டும் இருக்கும் அந்த அழகிய சிங்கள அப்பாவி கிராமவாசிகளால் நிரம்பிய நகரத்தில் நான் குருணாகல் ஸகிரா பாடசாலை எனும் தமிழ் மொழியிலான முஸ்லிம் பாடசாலைக்கு போய்க்கொண்டு இருந்த 1983 இன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் என் அப்பா அவசரமாக தன் 'ரலி' சைக்கிளை உழக்கிக் கொண்டு மத்தியானத்துக்கு சற்று பிந்திய ஒரு ந…
-
- 58 replies
- 6.7k views
-
-
பழுத்த கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தின் மஞ்சள் நிறத்தில் அவள் மேனி..! அழகிய வதனம்.. ஒல்லியான உடல்.. எல்லாமே என் விருப்புக்குரிய அம்சங்களுடன் அவள். வீதியால்.. துவிச்சக்கர வண்டியை உருட்டிக் கொண்டு வந்தவள் மீது என் பார்வை...யன்னலால் அவளைக் காண்கிறேன். முதல் பார்வையிலேயே என் கண்களுக்கு அவளைப் பிடித்து விடுகிறது. அத்தனை அழகு அவள். என் கண்களோ அவளை விடுவதாக இல்லை..மேலும்.. ஆளை நோட்டமிடுகின்றன..! கழுத்தில்... ஒரு கயிறு. அது தாலிக் கயிறா இருக்குமோ.... என்ற சந்தேசகம் எழ.. கண்கள் அவளிடம் இருந்து விலக்கிக் கொள்கின்றன.. மனம் ரசிப்பதை நிறுத்தி.. இயல்புக்குத் திரும்புகிறது..! கால்கள் யன்னலை விட்டு அப்பால் நடையைக் கட்டுகின்றன. சற்று நேரத்தின் பின்.. மனதை அடக்க முடியாமல்.. கால்…
-
- 58 replies
- 6.1k views
-
-
நின்றறுத்த தெய்வம் இது ஒரு உண்மைக் கதை - சில பெயர்கள் மாறி உள்ளன. பப்பிலிருந்து வெளியே வந்தாள் சமந்தா. நல்ல தோர் பார்ட்டி, நல்ல தோர் டான்ஸ், நல்ல மப்பு. பரவாயில்லை, கருமியாய் இருப்பாள் என்று நினைத்தேன், ஜோ தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு நன்றாக பணத்தினை வீசி செலவு செய்தாள் என்று நினைத்துக் கொண்டாள், சமந்தா. 1983 ம் ஆண்டின் டிசம்பர் மாதத்து குளிர் சில்ரென்று முகத்தினைத் தாக்கியது. காரின் அருகே சென்றாள் சமந்தா. 5 நிமிடத்தில் வீடு செல்லாம், அசட்டுத் துணிவுடன் கார்த்திறப்பினை எடுத்தாள். 'ஏ..ஏய், சாம்... முட்டாள் தனமாயிராமல் காரை அங்கேயே விட்டு விட்டு நடந்து போய் விடு'. திருப்பிப் பார்த்தால், தள்ளாடியபடியே போய் கொண்டிருந்தாள், சூசன் தனது ஆண் நண்பனுடன். …
-
- 57 replies
- 6.7k views
-
-
நிலா அக்காவின் குடும்பம் பெரிய குடும்பம். நிலா அக்காவுக்கு அப்பா, அம்மா , நான்கு அண்ணன்மார்கள்.இரண்டு அண்ணன்மார் திருமணம் ஆனவர்கள்.இரண்டு பேர் படித்து முடித்து விட்டு வேலை செய்கிறார்கள்.. நிலா அக்காவும் ஒரு பட்டதாரிதான்.... இரண்டு தினத்துக்கு முன் நான் நிலா அக்கா வீட்டிற்குப் போயிருந்தேன் நிலா அக்காவைக் கண்டதும் எனக்கு சந்தோசமாய் இருந்தது.. ”என்னக்கா இந்த பக்கம்.?. குழந்தை பிறக்கப் போகுது போல? என்ன குழந்தை” என்று ஆவலாய்க் கேட்டேன்... ”ஏன்டி நான் என்ர அம்மா வீட்டுக்கு வரக் கூடாதோ? ம்ம்ம்ம் இன்னும் இரண்டு மாதம் தான் இருக்கு.. குழந்தை பிறந்து விடும்.. ஆனால் என்னை மாதிரி பெண்ணாய் பிறக்காமல் இருந்தால் சரிதான்” என்றார் சோகமாக.... பதிலுக்கு நானும்..”ஏன் அக்கா…
-
- 57 replies
- 31.1k views
-
-
அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது. எனது தந்தை ஜெர்மனிக்குப் பயணம் போவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். அவரை வழியனுப்ப நாங்கள் எல்லோரும் கொழும்பு சென்றோம். அப்பாவைத் தவிர ஒருவரும் முன்னர் கொழும்பு சென்றிருக்கவில்லை. எனது சித்தப்பாவும் எம்முடன் வந்திருந்தார். அவர் அப்போது யாழ் பல்கலைக் கழக மாணவர். ஆனாலும் யாழ்ப்பாணம் தாண்டி வேறு எங்கும் செல்லாத பட்டிக்காடு. அப்பா மிகவும் துணிவானவர் என்னைப்போல். ஆனால் சித்தப்பா பயந்தவர். தனிய எங்கும் போகமாட்டார்.எந்த நேரமும் புத்தகங்களுடன் கிடப்பார். எங்களுடன் வந்து ஏதாவது பம்பலாகக் கதைப்பது என்று ஒருநாளும் செய்ததில்லை. எனக்கு அவரைப் பார்த்தால் எரிச்சல் தான் வரும்.எங்கள் குடும்பத்தில் இப்படி ஒன்று வந்து பிறந்திருக்கிறதே என்று. கொழு…
-
- 57 replies
- 15.5k views
-
-
[17] போனை வைத்துவிட்டு உட்கார்ந்தவனின் நெஞ்சம்.... இப்பொழுது மிகவும் கலங்க ஆரம்பித்தது. அவளுக்கு வீஸா கிடைத்ததை அறிந்ததும்... இன்னும் சில நாட்களில் அஞ்சலி தன்னை விட்டு தூரமாக பிரிந்து செல்லப் போகின்றாள் என்பதனை அவனால் தாங்கிக்கொள்ள இயலாமல் எண்ணங்கள் அல்லாடியது. "போக வேண்டாம் என்று சொல்லுவமோ..." என்றுகூட ஒருகணம் யோசித்துவிட்டு, "இல்லையில்லை... அவள் படிக்கட்டும்....! என்ர சின்னத்தனமான ஆசைக்காக அவளின்ர படிப்பைக் குழப்பக் கூடாது" என முடிவெடுத்தவனால்... அவளின் பிரிவினைத் தாங்கும் மனநிலைக்கு இலகுவில் வர முடியாமல்.... தவித்தான். அவனிற்கு அப்போது தேவைப்பட்டது 'தனிமை' ஒன்றுதான். சற்று நேரத்துக்கு எங்கேயாவதுபோய் தனிமையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டும்ப…
-
- 56 replies
- 11.8k views
-
-
ஆவணி 4, 2003 யாழ் இணையத்துக்காக 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?' என்றொரு தொடர் கதையை யாழ்- முற்றம் பகுதியில் இருபது அங்கங்களாக தொடராக எழுதினேன். http://www.yarl.com/articles/2003/icecream...iye-1/#more-656 ஏறக்குறைய 3 ஆண்டுகள் கழிந்துவிட்டன. என்றாலும், அந்தத் தொடர் எழுதும் நேரத்தில் அப்போதைய யாழ் கள உறவுகள் தந்த உற்சாகத்தையும் வரவேற்பையும் மறக்க முடியாது. ஒவ்வொரு அங்கத்துக்கும் பொருத்தமாக 'பனர்'களை அவர்களே உருவாக்கியும் தந்தார்கள். அது ஒரு கனாக் காலமோ எனும் புளகாங்கிதம் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக..!! மீண்டும்... பல பிரச்சினைகளையும் ரோதனைகளையும் மூட்டைகட்டி தள்ளிப் பிடித்தவாறு.. இன்னொரு தொடர்கதையை யாழ் கருத்துக் களத்தில் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்…
-
- 56 replies
- 8.6k views
-
-
-
இணையத்தள நண்பர் வட்டம்: சில எண்ணப்பகிர்வுகள் வணக்கம், நாங்கள் அண்மையில யாழ் மூலம் அறிமுகம் ஆகின சில உறவுகள் டொரண்டோ - கனடாவில ஓர் ஒன்றுகூடலை நிகழ்த்தி இருந்தம். இதுபற்றிய ஓர் பதிவை யாழில போடச்சொல்லி பலர் என்னை ஆர்வத்தோட கேட்டு இருந்திச்சீனம். எமது இணையத்தள நண்பர் வட்டத்தின் நட்புறவுக்கு நான் எழுதும் பதிவு மூலம் களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக நான் இதுபற்றி எழுதுவதை தவிர்ச்சு இருந்தன். ஆயினும், பலருக்கு இந்த ஒன்றுகூடல் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டதாலையும், இந்த ஒன்றுகூடல்பற்றிய திரிவுபடுத்தப்பட்ட பல செய்திகள், நையாண்டிகள் வலையில தாராளமாக கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளதாலையும் அண்மையில நடைபெற்ற இணையத்தள நண்பர் வட்ட ஒன்றுகூடல் பற்றிய எனது சில எண்ணங்களை உங்கள…
-
- 54 replies
- 9k views
-
-
போதமும் காணாத போதம் – அறிவிப்பு மெய்த்தலம் மூண்டெழுகிறது நெருப்பு முடுகி முடுகி எரிகின்றது ஒருபொறிதான் உள்விழுந்தது உலகே பற்றி எரிவதென ஓங்கி எரிகின்றது கீழிருந்து மேலெழுகிற சோதி ஆளுகின்றதா ?எனது போக்கும் வரவும் புணர்வுமெரிகின்றதா? சிற்றறிவாளும் நினைவுகளை சீண்டியழித்துச் செயலை முடுக்கி தூண்டும் சுடரொளியான சுதந்திரப் பிழம்பாய் மூண்டெழுகிறது நெருப்பு மேலே மேலே இன்னும் மேலே வாலின் நுனியை ஊன்றியெழுந்து வளர்பிறை நிலவைக் குறிவைத்து தூவெளி வானில் சோதி சுடர்த்தி நீலநிறத்துச் சுவாலையை வீசி சீறியெழுகின்ற அரவென நெளிதரு நடனம் நடனம் தீயளி நடனம்! நர்த்தனமாடும் அக…
-
-
- 54 replies
- 7.2k views
- 2 followers
-
-
சிமிக்கி மனோகரா தியேட்டர் முதலாவது வகுப்பு இருக்கையில் நாதனும் சாவித்திரியும் படத்தில் மூழ்கிப்போருந்தனர்.மடமடக்கும் பட்டுச்சேலையில் அவளும் . வெள்ளைச் சட்டை வெள்ளைக்காற்சட்டையில் அவனும்.அவர்களை பார்த்ததுமே புதிதாய் கலியாணமானவர்கள் என்று சொல்லிவிடலாம்.வெள்ளி விழா படத்தில் ஜெமினிகணேசனை ஒட்டி உரசியபடி ஜெயந்தி காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான்நான் பேசுவேன் என்கிற பாடலை பாடிக்கொண்டிருந்தார். எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் அனைவருமே சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். நாதனின் விரல்கள் சாவித்திரியின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொள்ள திரை வெளிச்சத்தில் நாணத்துடன் நாதனை திரும்பிபிப்பார்தாள். நீரும் அசல் அந்த கீரோயின் மாதிரித்தான் இருக்கிறீர் யாரோ புது ஆள். …
-
- 54 replies
- 9.5k views
-
-
உணர்வுகள் உறவுகள் அம்மம்மா இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி காலைச்சூரியன் எழும்போதே சேர்ந்து எழுந்து முற்றம் கூட்டி தண்ணீர் தெளிக்கும் போது அந்தத் தண்ணியை கொஞ்சம் அவன் மீதும் தெளித்து எழுப்பிட்டு குளித்து நெற்றி நீளத்திற்கும் இழுத்த விபூதிக்குறியோடு மாட்டில் பால்கறந்து போட்ட தேனீர் பித்தளை மூக்குப்பேணிகளில் ஊற்றி ஒன்றை அவனிடம் கொடுத்து இதை கொண்டுபோய் தாத்தாட்டை குடு என்று நீட்டி விட்டு காலைச்சாப்பாடு தயாரிப்பில் இறங்கி விடுவார்.அவனிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மம்மாவும் தாத்தாவும் நேருக்கு நேர் கதைத்ததை அவன் பார்ததேயில்லை ஏதாவது அவர்கள் கதைப்பதென்றாலும் இதைபோய் அங்கை சொல்லு என்று அவன்தான் இடையில் மாறி மாறி கதைகாவி. இவங்கள…
-
- 54 replies
- 6.8k views
-
-
நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது ஆழ்வாப்பிள்ளை ஆனைவிழுந்தான் சந்தியில் இருந்தது அந்த மயானம். மயானத்தை ஒட்டி இருந்த வீதி எப்பொழுதும் அமைதியாகவே இருக்கும். அந்த வழியாக தனியாகப் போகும் போது ஒரு வித அச்சம் இருக்கும். ஆனாலும் நண்பர்களோடு வல்லிபுரக் கோவிலுக்குப் போகும் பொழுது அந்த மயானத்துக்குள் ஒரு தடவை போய் வலம் வந்து விட்டே போவோம். வாய்க்கரிசி போடும் பொழுது வீசப் படும் அரிசியோடு கலந்திருக்கும் ஐந்து, பத்து சத நாணயக் குற்றிகளோடு, சில சமயங்களில் ஐம்பது சத நாணயங்களும் யார் கண்களிலும் படாமல் எங்களுக்காக ஒளித்துக் காத்திருக்கும். வல்லிபுரக் கோவில் கேணியில் குளித்த பின்னர் மரத்தடிகளில் ஆச்சிகள் சுட்டுக் கொண்டிருக்கும் சூடான தோசைகளை புசிக்கவும், துரைசிங்கத்தின் தமை…
-
- 53 replies
- 5.4k views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்..(உறக்கத்தை தொலைத்த காதல்)..ஜம்மு பேபியின் "மெளனித்த சந்திப்பு"..(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது)..கவுஸ்புல
-
- 53 replies
- 6.2k views
- 1 follower
-
-
" என்ன கண்ணன் இங்கை தனிய இருக்கிறியள் ?" எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன . என்னிடம் வந்தது பாமினியே . "வா.....வா.... பாமினி உன்னைத் தான் யோசித்துக் கொண்டிருந்தன் ". கலகலவென்று கள்ளமில்லாது சிரித்தாள் பாமினி .ஏனோ தெரியவில்லை போனகிழமை பாத்ததை விட இந்தமுறை கொஞ்சம் தெளிவாக இருந்தாள் . "நான் வீட்டடியால வரக்கை உங்கடை தங்கைச்சி சொன்னா நீங்கள் இங்கையெண்டு , அது தான் சும்மா பம்பலடிக்க வந்தனான் ". பாமினியும் எனக்குப் பக்கத்தில் கேணிகட்டில் இருந்துகொண்டாள் . "பாமினி எனக்குக் கொஞ்சம் கதை சொல்லன்". "என்னகதை ?" "இல்லை , முக்கியமான கட்டங்களில நான் இங்கை இல்லை . நீ வன்னீல இருந்தனி , இங்கையும் இருந்தனி , நீயாவது உள்ளதைச் சொல்லன் எனக்கு . ஏன் எங்க…
-
- 52 replies
- 6.6k views
-
-
நீராலானது உலகு! கன்னியாகுமரியில் என்னவோ இருக்கிறது. முக்கடல் சங்கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள். ஒரே ஆரவாரமும் கொண்டாட்டமும். அலைகள் பாறைகளில் மோதுவதும் பாறைகளைத் தழுவுவதும் பாறைகளைத் தாண்டுவதுமாக இருக்கின்றன. பார்வை நீள்கிறது. தூரத்தில் இரு படகுகள். தவிர, நீலம், நீலம், எங்கும் நீலம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும் என்றார் நண்பர். நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி…
-
- 52 replies
- 19.6k views
-
-
வசந்திக்கு மனசெல்லாம் ஒரே படபடப்பு. இந்த இரவுக்குள்ள, இருட்டுக்குள்ள என்ன நடக்கப் போகுதோ என்ற ஏக்கமும் பீதியும் அவளிடம் குடி கொண்டிருந்ததே படபடப்புக்கு காரணமாயிருந்தது. "வசந்தி.. ரெடியா இரும்மா.. துணிவோட இரு.. அப்பதான் இந்த உலகத்தில பெண்கள் நாங்கள் நினைச்சதைச் சாதிக்கலாம்." சக தோழியின் வார்தைகள் தெம்பாய் காதில் இறங்கினும் படபடப்புத் தீரவே இல்லை. அதற்குள்.. அவனிடமிருந்து சிக்னல் வந்தது. இஞ்ச வாங்கோ என்று வாயசைக்காது கைகளால் சைகை செய்து வசந்தியை அழைத்தான். ஆரம்பத்தில் தயங்கியவளாய் பின் துணிவை வரவழைத்துக் கொண்டு அவனை நோக்கி நகர்ந்து சென்றாள். அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாய், என்ன பயப்பிடுறீங்கள் போல... முதல் அனுபவம் எல்லோ.. ஆரம்பத்தில கொஞ்சம் படபடப்பும…
-
- 52 replies
- 17.4k views
-
-
கி-பி 17ஆம் நூற்றாண்டு - தமிழ்நாட்டில் ஒரு கிராமம் அந்த மூன்று பெண்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் சிலர் குதிரைகளில் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்களில் தாடி வளர்ந்திருந்தது. தமிழ் மண்ணிற்கு அந்நியமான ஆடைகளையும் மொழியையும் கொண்டிருந்தார்கள். கைகளில் வாளோடும் கண்களில் காமவெறியோடும் அவர்கள் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். குதிரைகளின் வேகத்திற்கு அந்தப் பெண்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் அந்தப் பெண்களை பிடித்து விட்டார்கள். ஒரு பெண் அழுது கொண்டு ஏதோ சொல்ல அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும் தூக்கிக் கொண்டு போனார்கள். இதை எல்லாம் தொலைவில் இருந்து இரண்டு அழகான விழிகள் மிரட்ச…
-
- 50 replies
- 8.3k views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் மற்றுமொரு திரைகாவியம் "புதிய சிவப்பு ரோஜாக்கள்"... (கண்டிப்பா வயது வந்தவர்களிற்கு மட்டுமே குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்...) கதாநாயகன் - இளைய தளபதி சுண்டல் (டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன்) இவருடன்..... *மக்கள் திலகம் திரு.கலைஞன்.. *நடிகர் திலகம் திரு.கந்தப்பு.. *கெளரவவேடத்தில் கனவுநாயகன் மருமோன்.. மேலும் புதுமுக நடிகர்களின் அட்டகாசமான நடிப்பில் மலர்ந்துள்ள திரைகாவியம்... வெளுறிய முகபரப்பில் உறைந்து போனது விழி! பூக்களும்,நிலவும்,கனவுகளும் கையூடு உதிர்ந்து கொட்ட கிடிநடுங்கி ஒரத்தே ஒதுங்கி உயிருக்காய் இறைஞ்சியது வாழ்க்கை!! "புதிய சிவப்பு ரோ…
-
- 50 replies
- 7.6k views
-
-
அதிகாலை லண்டனில் இருந்து ரவிராஜ் போன் ,அடுத்த கிழமை கனடா வருகின்றேன் ஒரு வார இறுதி நாளை ப்ரீ ஆக வைத்திரு,மற்றது உன்ரை பழைய ஆளின் கணவர் மண்டையை போட்டுவிட்டார் ,எனக்கும் துரத்து சொந்தம் தானே போக இருக்கின்றேன் என்றான் . நான் போனை வைத்துவிட்டு திரும்ப படுத்துவிட்டேன்.பின்னர் அதுபற்றி மறந்தும் விட்டேன். ஏனோ பின்னேரம் போல பழைய படம் ஓடத்தொடங்கியது.அப்போ தான் O/L PASS பண்ணி A/L போன காலம், சோட்ஸ்சும் பான்ஸ்சும் மாறி மாறி போட்ட வயது.பாடசாலை முடிந்ததும் எந்த அலுவல் இருந்தாலும் அதைவிட்டு ஓடிவந்து 3.45 பஸ்ஸை பிடித்து வீடு வந்து ஊரில் இருக்கும் மைதானத்திற்கு ஓடும்காலம்.என்னால் ஏழு நாட்களும் அந்த மைதானத்திற்கு போகாமல் இருக்க முடியாது .CRICKET,FOOTBALL இதுவே எனது LIFE .இரவு வந்து ப…
-
- 50 replies
- 7.4k views
-
-
இடைவெளி.......................... நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்குது வாழ்க்கை. 25 வயதில் திருமணம். 2 வருடங்கள் சந்தோசமான திருமணவாழ்க்கை. அதைத்தொடர்ந்து 2 பிள்ளைகள் ஒருவருட இடைவெளியில். பின்னர் 4 வருடத்தால் இன்னொரு ஆண் பிள்ளை. இப்படியே நன்றாகத்தான் போகுது வாழ்க்கை. மூத்த பெண் பிள்ளை கேட்டாள் அவர்கள் இருவரும் ஆண் பிள்ளைகள் சேர்ந்து விளையாடுகிறார்கள் நான் தனியே ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கு துணையாக ஒரு தங்கச்சி வேண்டும். ஒருவாறு பெத்தாச்சு. அதுவும் பெண்ணாக. சரி பிரச்சினை முடிந்தது. அந்த பிள்ளைக்கு 3 வருடமாகும் வரை நிம்மதியாக இருந்தது. அதன் பின் தான் சிக்கல் வரத்தொடங்கியது. தங்கச்சி தங்கச்சி என தோழிலும் மார்பிலும் போட்டு தாலா…
-
- 49 replies
- 4.4k views
-
-
இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்.. சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது.இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிற சந்தர்ப்பம் இன்று எனக்கு வாய்த்தது.அதால நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொ…
-
- 49 replies
- 11k views
-
-
[08] அஞ்சலி எங்கே உட்கார்ந்திருக்கின்றாள் என்று ஒரு பார்வையை விட்டபடி... அந்த கொஃபி சொப்பிற்குள் நுழைந்த இருவரும் அஞ்சலியும் றிஷானாவும் இருக்கும் இடத்தை நெருங்கவும்... அவனும் விமலும் வருவதைப் பார்த்த அவர்கள் இருவரும் எழுந்து ஹாய் என்று புன்னகையுடன் வரவேற்றார்கள். விமலுக்கு வாய் சும்மா கிடக்காமல்.... மச்சான் நீ 'வாத்தி' எண்டுறதை இவையள் இன்னும் மறக்கேலப் போல கிடக்கு... என அவனுக்கு மட்டும் கேட்கக்கூடியமாதிரி கிசுகிசுத்தான். இது எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாத அவன்... "ஹாய்... ஹலோ..! இவன் என்னுடைய பெஸ்ட் பிறண்ட் விமல்" என்று விமலை அறிமுகப்படுத்தியவன் புன்னகைத்தபடி உட்கார... விமலும் ஒரு "ஹாய்... ஹலோ " சொல்லிவிட்டு அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்…
-
- 48 replies
- 10.7k views
-
-
[size=5]வருடம்: 1976, [/size] [size=5]மாதம்: ஜூன்[/size] [size=5]நாள்: 27 [/size] குவைத் நாட்டில் இருந்து பகரைன் வழியாக வந்த, SQ763 இலக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் கிரேக்க நாட்டின் ஏதன்ஸ் விமான நிலையத்தில் தரை இறங்கிய நேரம் காலை 6 மணி 45 நிமிடங்கள். விமானத்தில் இருந்து வெளியேறிய ஐந்து பயணிகளில் நால்வர் நேராக transit பகுதிக்கு சென்று சென்று பாரிஸ் நோக்கிச் செல்லும் Air France AF139 விமானதிற்க்கான check in முடித்து, அங்கிருந்த இருக்கைகளில், ஒருவருக்கொருவர் தெரியாதவர் போல் வெவ்வேறு இடங்களில், அமர்ந்தார்கள். அதே காலை 8:59 மணியளவில் Air France 139 விமானத்தின் பைலட், கப்டன் Michel Bacos, இஸ்ரேலிய நாட்டின் Ben Gurion விமான நிலையத்தில் இருந்து ஏதன்ஸ் வழிய…
-
- 47 replies
- 11.7k views
-
-
கமக்காரன் நட்சத்திரன் செவ்விந்தியன் தைப் பொங்கலுக்கு முதல்நாள் காலையில் கொடிகாமம் வீதியில் நெல்லியடிச்சந்தை நோக்கி மடித்துக் கட்டிய சாரம் மட்டுமே கட்டியிருந்த ஒல்லியன் ஒருத்தன் தோளில் அரைச்சாக்கு நிறைந்த பயறோடு போய்க்கொண்டிருந்தான். ஆயம் என்ற சிற்றூரில் வசிக்கும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக உவர் ஏறி தரிசாக மாறிவரும் தன்னுடைய சிறு தோட்டத்தில் கடுமையாக மாரடித்து அறுவடை செய்தது அந்தளவுதான். வீட்டில் கொஞ்சம் பழஞ்சோற்றை மனுசிக்கு ஆரோ கொடுத்தது என்ற அருமையான பச்சை மிளகாய்த் துண்டுகளோடும் வழமையான வெங்காயத்தோடும் சாப்பிட்டிருந்தான். மனுசி இஞ்சி போட்டுத்தந்த பிளேன் டீயையும் உள்ளங்கையில் போட்ட ஒரு சொட்டு சீனியில் நக்கி நக்கிக் குடித்திருந்தான். நெல்லு வெட்டிய வெற்று வயல்…
-
- 47 replies
- 10.1k views
-