கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
இந்தவார ஒரு பேப்பரில் வெளியான சுதந்திராவின் ஞாபகப்பதிவுகளில் வெளியான கதை இது. எங்கள் ஊர் அழகியின் மரணம்...மறைபட்ட மரணமாய்....... ! மழையில் நனைந்த நிலமும் மாரியில் கரைந்த புழுதியுமாக அந்தநாள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒவ்வொருவரையும் விசாரித்தபடி பூசனியக்கா போனதும் , அதன் பின் அவரது வீட்டிலிருந்து கேட்ட அழுகையும் அதன் பின்னால் நடந்த பூசனியக்காவின் சாவும் அந்தச் சிறுவயதில் அழுவதைத்தவிர வேறெதையும் செய்யத் தெரியவில்லை. நஞ்சருந்தி தற்கொலை பண்ணிய பூசனியக்காவின் இழப்பானது அவரது குடும்பத்தைவிட மற்றவர்களுக்கு வளமையான ஒரு மரணவீடு. சில தசாப்தங்களைக் காலம் அள்ளிக் கொண்டு போன பின்னர் என் ஞாபகங்களுக்குள் பூசனியக்கா..... எங்கள் ஊரின் அன்றைய அழகி பூசனியக்கா. இராமநாதன் கல்லூரியில் ப…
-
- 6 replies
- 2.1k views
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 12) உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கும் என்னுடைய கேள்விகள் தொடர்கின்றது. கேள்வி 18: ''நீதிபதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; அவர்களும் மனிதர்களே!'' - சட்டரீதியான, நீதி வழியிலான அற்புதமான இந்தக் கருத்தை பல வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதிவு செய்து இருக்கிறார்கள். மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்ச் சாட்சியங்களின் அடிப்படையில் அப்பாவிகள் தண்டிக்கப்பட வாய்ப்பு துளி அளவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. போதுமான அடிப்படைகளும், ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளையும், நீதிபதிகளின் முடிவுகளையும் மறுக்கவோ, விமர்சிக்கவோ சம்பந்…
-
- 6 replies
- 2k views
-
-
-
தம்பியவ.... கோட்டைப் பக்கம் வெடி கேட்குது.. ஆமிக்காரன் வெளிக்கிடுறான் போல.. பங்கருக்குள்ள ஓடுங்கோ.... செல்லடிக்கப் போறாங்கள். அம்மாவின் குரல்.. யாழ் மணிக்கூட்டு வீதியில்.. எங்கள் வீட்டு வளவினில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களை விரட்ட.. நாங்களோ.. வழமை போல.. அதைப் புறக்கணிக்கிறம். கிட்டு மாமா இருக்கும் வரை ஆமியாவது வாறதாவது. ஷெல்.. ஆஸ்பத்திரி தாண்டி வராது. கிட்டு மாமா.. செஞ்சிலுவையோட கதைச்சிருப்பார். சும்மா இருங்கோம்மா. பதிலுக்கு நானும் நண்பர்களும் சேர்ந்து.. குரல் கொடுத்திட்டு.. அடுத்த ஓவரைப் போட நான் தயாராக... வாகனங்கள் எங்கள் வீதியால ஓடும் சத்தம் கேட்டிச்சுது. ஓடிப் போய் கேற்றடில நின்று பார்த்தால்.. இலை குழையெல்லாம் கட்டிக் கொண்டு.. 50 கலிபர் பூட்டின …
-
- 6 replies
- 1.5k views
-
-
அளவோடு ஆசைப்படு......... ஆசையே அலை போல நாமேலாம் அதன் மேலே........ ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டு…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஒரு மூன்றுவருடங்கள் இருக்கும். இருள் கெளவ்விய மாலைப் பொழுதில் ஆயிரக் கணக்கானவர் மத்தியில் ஒழுங்காகக் அடுக்கப்பட்டிருந்தன அவை. சாம்பலும், கறுப்புடன் இடையிடையே வெள்ளையும் கொண்டு பூசப்பட்ட கல்லறைகள். ஒவ்வொரு கல்லறையின் தலையிலும் மண்ணுக்காக மரித்துப் போன தெய்வங்களின் திருவுருவப் படங்கள். நானும் மாவீரர் குடும்பம்தான், ஆனால் எதற்கு முன்னால் போய் நிற்பது?அங்கிருந்த எல்லோருக்கும் மலர்தூவ எனக்கு ஆசைதான், ஆனால் ஒவ்வொரு படத்தினதும் முன்னால் அந்ததந்தக் குடும்பங்கள் அழுதுகொண்டிருக்க நான் எப்படி...........முடியவில்லை. முகவரி தெரியாத கல்லறை தேடிக் கண்களும், கூடவே கால்களும் சேர்ந்துகொள்ள அடுக்கப்பட்டிருந்த கல்லறைகளிலே அதனைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு ஓரத்தில் அது இருந்தது. படம…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஒரு மகன், தாயிடம் கேட்கக் கூசும் கேள்வி தான். ஆனாலும், வேறு வழியில்லை. இன்னும், எத்தனை நாள் தான் பொறுத்திருப்பான்? நாளை அவனுக்கென்று ஒருத்தி வந்தால், அவள் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், விழிக்கக் கூடாது பாருங்கள். அதற்கு முன்னதாகவாவது கேட்டுத்தானே ஆக வேண்டும். ஆம்... முடிவு செய்தான் ரமேஷ். இன்று, அம்மாவிடம் கேட்டே விடுவதென்று. அதற்காகவே, இன்று ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, வீட்டிலேயே இருந்தான். அப்பா வெளியில் போகும்வரை பொறுமை காத்தான். ""ஏம்பா ரமேஷ்... இன்னிக்கு ஆபீஸ் போகலையா?'' பார்வதியின் கேள்விக்கு பதிலே சொல்லாமல், காதிலேயே அதை வாங்காதவன் போல், தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான். ""நான் கேட்டுட்டேயிருக்கேன்... ஏம்ப்பா பதிலே சொல்லாம போயிட்டு இருக்கே?…
-
- 6 replies
- 1.2k views
-
-
நாங்கள் படிக்கிறம் எண்டு அம்மா அப்பாவப் பேக்காட்டிகொண்டு திரிஞ்ச காலத்தில விடியக்காலையில நாலரை மணிக்கு டியுசனுக்குப் போவது வழக்கம். தனியப் போவதற்குப் பயம் ஆனபடியால் இரண்டு மூன்று பேராகப் போவோம். எங்கள் ஊரிநூடாக மூன்று நான்கு இளஞர்கள் சீமெந்துத்தொழிற்சாலைக்கு வேலைக்குப் போவார்கள். கொஞ்ச நாள் பேசாமல்ப்போனவர்கள் பின்னர் தங்கள் குரங்குச் சேட்டையை ஆரம்பித்தார்கள். நக்கலடிக்கிறது, சயிகிளை இடிப்பதுபோல் எமக்குக் கிட்டக் கொண்டு வருவது இப்பிடிப் பல.நான் உதுக்கெல்லாம் பயப்பிடும் ஆள் இல்லை எனினும் எனது நண்பி சரியான பயந்தாங்கொள்ளி. எடி நீ அவங்களத்திட்டாத பிறகு அவங்கள் வேற ஏதும் செய்தாலும் ஏன் வீண் பிரச்சனை என்றாள். அப்ப அம்மாட்டச் சொல்லட்டோ என்றேன். உன்ரை அம்மா பிரச்சனை இல்லை உன்ரை…
-
- 6 replies
- 1.9k views
-
-
திருந்தி விட்டான் ஓர் தமிழன்...... சிறு கதை.... கிருபாவும், ஜீவனுமாக அவசர அவசரமாக வெளிக்கிட்டுக் கொண்டிருக்க தொலைக்காட்ச்சியில் 6 மணி செய்தி தொடங்கும் சத்தம் கேட்க கிருபா... '' ஜீவன் நேரமாச்சு பொம்பிள்ளைபோல வெளிக்கிடாம கெதியென்று வெளிக்கிடடா..'' என்று கிருபா அவனை அவசரப்படுத்தினான். '' மச்சான் தெரியும் தானே... நீ ஏன் அவசரப் படுகிறாய் எண்டு...அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுப் போடு பெட்டையளோடையும் சேட்டைவிட்டுட்டு... வந்து பிரண்டு கிடக்கிறத்துக்குத் தானே..'' என்றான் ஜீவன் சிரித்தபடி. '' தெரிஞ்சாய் சரி..அனுபவிக்கத்தானே போறது வேற என்னத்துக்கு மச்சான் போறது சரி..சரி இறங்கு மச்சான்...'' என்று சொல்லியவண்ணம் கிருபா காரை நோக்கி நடக்க ஜீவனும் அவனைத் தொடர்…
-
- 6 replies
- 1.9k views
-
-
[size=6]காலச்சூரியன்களும் சிறைக்கம்பிகளும் [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, November 3, 2012 சூரியனின் பெயர்களின் ஒன்று அவனுக்கானது. பெயருக்கு ஏற்ப சூரியனின் வேராகவே அவனிருந்தான். 1995 சூரியக்கதிர் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் இடம்பெயர அவனும் வன்னிக்கு வீட்டோடு இடம்பெயர்ந்தான். சொந்த ஊரைப்பிரிந்த துயரும் அவனும் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத்தை அக்கால வீதிநாடகங்களும் பரப்புரைக்கூட்டங்களும் உணர்த்தியது. 14வயதில் அவன் ஆயுதமேந்தி விடுதலைப் போராளியானான். அடிப்படைப்பயிற்சி முடித்து சமர்க்களம் போனவனின் ஆற்றலும் திறமையும் அவனைப் புலனாய்வுப் பிரிவிற்கு பணிமாற்றம் செய்தது. பகைகுகையில் இறங்கிப் பணி செய்ய அவனுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வரியுடை …
-
- 6 replies
- 1.3k views
-
-
அக்கா கேக்குத….ஓம் கேக்குது சொல்லுங்கோ…..அவள் தன்னை முதலில் அறிமுகம் செய்து கொண்டாள். ஞாபமிருக்கோ…? தன்னைப்பற்றி இன்னும் நினைவு கொள்ள வைக்கும்படியான நாட்களை ஞாபகப்படுத்தினாள். அக்கா….நான் முகாமிலயிருந்து வெளிய வந்திட்டன்….அவரைத்தானக்கா காணேல்ல…..தேடலாமெண்டு சொல்லீனமாக்கள்…ஆனா நான் எல்லா இடத்திலயும் தேடீட்டன் ஒரு தொடர்புமில்லை….இஞ்சை ஆக்கள் சொல்லீனமக்கா கனபேர் வெளிநாட்டிலை இருக்கினமாமெண்டு….இவரும் உங்கினேக்கை எங்கையும் இருப்பரோண்டு தேடேலுமேக்கா…..? அவளது அப்பாவித்தனமான கேள்விக்கு எந்தப்பதிலைச் சொல்ல…..? ஆரிட்டையும் விசாரிச்சுப் பாப்பம்….அப்ப ஆரோடை இப்ப இருக்கிறீங்கள்……? எத்தினை பிள்ளையள் ? ஒரு தோட்டக்காணியில என்ரை பாவத்தைப்பாத்து ஒரு கொட்டிலொண்டு போ…
-
- 6 replies
- 2.3k views
-
-
முருகா நீ ஏன் இப்படிக்... இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரங்கன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன்று தைக்கப்பட்டு …
-
- 6 replies
- 1.8k views
-
-
ஒரு மரண வீட்டிற்கான அறிகுறி எதுவும் அங்கே இருக்கவில்லை. ஊரே திரண்டு வந்திருந்தாலும்கூட அழுகையோ ஒப்பாரியோ வேறு ஆரவாரச் சத்தமோ இல்லாமல் ஊசி விழுந்தால் கேட்குமளவிற்கு அமைதி உறைந்து போய் இருந்தது. இடையிடையே விசும்பி விசும்பி அழுகின்ற அம்மாவின் மெல்லிய அழுகையொலியைத் தவிர வேறு சத்தமே இல்லை. வீட்டின் பெரிய விறாந்தையில் உயரமான ஒரு வாங்கின் மேல் அக்கா கிடத்தப்பட்டிருந்தாள். கால்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்தபடி கைகளிரண்டையும் நீட்டிக்கொண்டு தலை இடதுபுறமாகச் சரிந்து போயிருக்க அக்கா கிடந்தாள். முழங்கால்களிலிருந்தும் முழங்கைகளிலிருந்தும் இரத்தம் வழிந்து காய்ந்து போயிருந்தது. உடல் முழுவதும் துப்பாக்கிச் சன்னங்களால் தசை கிழிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. கூந்தல் இரத…
-
- 6 replies
- 1.9k views
-
-
தோட்டம் எனது பிள்ளைகள் அடிக்கடி, தோட்டத்தைப் பற்றியும் மரங்கள் நடுவது, பழங்கள் பிடுங்குவுது, வளர்ப்பு மிருகங்களுக்கு தண்ணீர் வைப்பது எனப் பலவாறு பேசிக்கொண்டே இருப்பார்கள். கேட்க எனக்கு சந்தோசமாகத்தான்; இருக்கும். தாய்தகப்பன்ரை காசை செலவளிச்சுக்கொண்டு. வேலை வெட்டியில்லாமல் சும்மா ஊர் சுத்திக்கொண்டு பெடியள் பெட்டையள் இருக்கேக்கை என்ரை பிள்ளையள் இப்படியெண்டாலும் கஸ்டப்படுகுதுகளே என எண்ணும்போது சந்தோசம்தானே… எண்டாலும் இப்படித் தோட்டம் செய்யிறவை… ஒருநாள் பார்தது ஒருநாள் தாய் தகப்பன் இருக்கிறார்கள் என்று ஒரு பழமாவது கொண்டுவந்து தாறதுமில்லை. கூட்டிக்கொண்டுபோய் காட்டுறதுமில்லை… இதை நினைச்சால்தான் எங்களுக்கு உள்ளாற வருத்தம்.;… என்ன செய்வது பிள்ளையளை என்னண்டு கேட்கிறது,.. அத…
-
- 6 replies
- 1.3k views
-
-
சிறுகதை - இளங்கவி தந்தையை 5 வயதிலேயே இழந்த குடும்பச்சுமை, திருமணமாகத மூன்று சகோதரிகள், ஊரெல்லாம் கடன்பட்டு வளர்த்தெடுத்த அம்மா இப்படிச் சொல்லொண்ணாத் துயரங்களை புலம்பெயர்தேசத்திலே வந்த புதிதில் அனுபவித்துக்கொண்டிருந்தான் கணேஸ். வேலையும் பல மாதங்களாய்க் கிடைக்காமல் இருந்த கஸ்ரத்திலிருந்தவனுக்கு ஓர் வேலை கிடைத்தது ஏதோ கடவுள் செயல் போல இருந்தது... எப்ப முதல் சம்பளம் வரும், கொஞ்சமென்றாலும் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு சம்பளமும் வர அதை எவரெவருக்கு எப்படிப் பிரிக்கலாம் என்று கணக்குப் பார்த்து முடிந்து தூக்கத்துக்குப் போனவனுக்கு அதிகாலை வேளை ஓர் தொலைபேசி அழைப்பு. அதிகாலை தொலைபேசியென்றாலே அது இலங்கையில் இருந்துதான் என்று நினைத்து பதறியட…
-
- 6 replies
- 1.2k views
-
-
'என் ஞாபகப்பதிவிலிருந்து - தியாகி திலீபன்' ஒரு பேப்பருக்காக சுதந்திரா எழுதிய பதிவு http://www.orupaper.com/issue55/pages_K__34.pdf
-
- 6 replies
- 2.3k views
-
-
இது கதையா? அல்லது கடிதமா என்பதற்கு அப்பால், பேசப்படும் பொருள், தற்போதைய ஈழத்து நிகழ்வுகள் தனிமனிதர்களிடம் ஏற்படுத்தும் உணர்வோட்டாங்கள் என்பவற்றை திறம்பட எழுத்தில் வடித்திருப்பதாக நான் கருதுகிறேன். ஈழத்தில் ஏற்படும் போரியல் மாற்றங்கள் ஏன் ஒருவரை மனதளவில் துவண்டுவிடச்செய்கிறன, ஏன் அதீத மகிழ்ச்சியில் திழைக்கச்செய்கிறன என்பதை தமிழ்நதி சொல்லியிருக்கிறார். அன்பு நித்திலா, நலம். போர்சூழ்ந்த இந்நேரத்தில் நீயும் அவ்விதம் இருப்பாயென்றே இன்னமும் நம்புகிறேன். “இப்போது எங்கே இருக்கிறாய்…?”என்ற கேள்வியுடன் தொடங்கி எனது நாடோடித்தன்மையைக் குறித்துப் பரிகசித்திருந்தாய். ‘நான் உன்னுடன் தான் இருக்கிறேன்’ என்று நாடகத்தன்மையுடன் பதிலளிக்கவே விருப்பம். அக்கணத்தில் பொங்கும் நெகி…
-
- 6 replies
- 1.7k views
-
-
இது கதையில்லை அக்கா வணக்கம் ! நான் இந்தியாவிலயிருந்து கதைக்கிறன். ஆதவன் உங்களோடை கதைக்கச் சொன்னவர்....என்னெண்டா அக்கா இங்கை ஒருத்தர் கால்காயம் பிரச்சினையாகி ராமச்சந்திராவில ஒப்பிறேசன் செய்திருக்கிறார்....லண்டனிலயிருந்து ஒராள் உதவி செய்யிறனெண்டு கனமுறை கதைச்சு ஒப்பிறேசனை செய்யுங்கோ காசனுப்பிறனெண்டு சொன்னதை நம்பி ஆளும் செய்திட்டார். உதவிறனெண்டவர் ஒளிச்சிட்டாரக்கா....ஒரு தொடர்புமில்லை....பாவம் இந்தாள் படுக்கையில கிடக்குது.....தெரிஞ்சாக்களிட்டை கடன்வாங்கி காசைக்கட்டீட்டு வீட்டை வந்து கிடக்கிறார்.....கடன் குடுத்தவை பொலிசில குடுத்திருவமெண்டு நிக்கினமக்கா....ஏதும் உதவேலுமோக்கா.....? வியாழமாற்றம் எனக்கும் சரியில்லப்போல.... கடந்த 4நாளா இப்படித்தான் ஆசுப்பத…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ! எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும். அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்? ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன். உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வாழலாம். எப்பவாவது அதைப்பற்றி யோசிச்சனிங்களே? இன்றைக்கு நேற்றே! முதன்முதலா அரும்பின மீசையைத் தினத்துக்கும் நூறுவாட்டி கண்ணாட…
-
- 6 replies
- 1.5k views
-
-
முள்முருக்கை: நெற்கொழுதாசன் நீண்டு கிடந்த தெருவில் நாய் தன்பாட்டில் படுத்துக்கிடந்தது. கண் எட்டும் தொலைவு மட்டும் வேறு எந்த உயிரினங்களையும் காணமுடியவில்லை. பாலை வெய்யில். தொலைவில், தெருவின்மேல் நிரலைகள் தோன்றியது. புளுதி உறைந்த ஓரங்களில் அனல்காற்று மெல்ல மண் துணிக்கைகளை அங்குமிங்குமாக உருட்டிக் கொண்டிருந்தது. தெருவில் ஊற்றியிருந்த தார் நைந்து செருப்பை உள்வாங்கியது. மெதுவாக நடக்கத் தொடங்கினேன். மறைவுகளிலிருந்து யாரோ கூர்ந்து பார்ப்பதுபோல உணர்ந்தேன். என்னையறியாமல் மனம் கூனிக்கொண்டது. திரும்பிப்போ என்று ஒரு குரலும், இல்லை உன் பாட்டில் நீ போ. அன்றும் இப்படித்தான். சிறு அசைவுகூட எழவில்லையே. எதற்காக நீ தயங்குகிறாயென்று, ஒரு குரலும் எதிரெதிராக ஒலித்துக் கொண்…
-
- 6 replies
- 1.1k views
-
-
நேற்று, எனது அப்பாவின் அழகிய ராட்சசியும் எனது அம்மாவுமாகிய சோதிராணியுடன் பேசிக்கொண்டிருந்தேன் . எங்கள் சம்பானையின் சில பகுதிகளை பதிவிடுகிறேன். ரிங் போகிறது... " ஹலோ சோதி ஹியர்" "நான் சோதின்ட லவ்வரின் மூத்தமகன் கதைக்கிறேன்" சிரிக்கிறார்... "சஞ்சயன் ... தம்பி சாப்பிட்டாச்சா?" "ம்" "என்ன சாப்பாடு" "பாண்" "கறி?" "முட்டை" "வேலைக்கு போறியடா இண்டைக்கு?" "இல்லை" "அப்ப என்ன செய்யப் போறாய்?" " ஒரு தீபாவளி விழாவும், ஒரு partyம் இருக்கிறது அங்கு போய் தண்ணியடிக்க யோசிக்கிறேன்" "டேய், நீ தண்ணியடிப்பியா" "கொஞ்சம், ஏன் தண்ணியடிச்சா என்ன கூடாதோ?" ".." "உங்கட புருசன் அடிக்கேக்க மட்டும் பேசாடமல் இருப்பியள் நாங்கள் அடிச்சா பிரச்சனையே?" "டேய்…
-
- 6 replies
- 2.2k views
-
-
" ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்" பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவள் இராணுவ போலீஸ்காரியின் அழைப்பைக்கேட்டு திரும்பினாள். “மிஸ்டர் குமார ஓயாவ பலன்ட அவிள்ள இன்னவா” ( திரு குமார உன்னை பார்க்க வந்தி…
-
- 6 replies
- 2.9k views
-
-
உடைந்த போத்தல்கள் ஏனோ அவள் மனம் மீண்டும் மீண்டும் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பொன் கிரகணங்களை மெதுவாக வீசி வந்த சூரியன் தன் கைகளை தென்னம் கீற்றுகளுக்கிடையில் விட்டு அவள் கன்னத்தை தொட்டதைகூட அவளால் உணர முடியாமல் இருந்தது. அருகே கொட்டிலில் கட்டியிருந்த ஆடு கட்டையில் சுற்றி சுற்றி வர அதன் சின்னஞ்சிறு குட்டிகள் இரண்டும் " ம்...மே... ம்...மே..." என்று தங்கள் கிச்சுகுரலில் தாயை கூப்பிட்டபடி பின்னே ஓடின. இவளைக் கண்டதும் ஏதாவது தீனி போடுவாளோ என்ற நினைப்பில் தன் புதிய குஞ்சுகளை "கொக்... கொக்..." என அழைத்துக்கொண்டு ஓடி வந்த அடைக்கோழி (அதுதான் அதற்கு அவள் வைத்த பேர்)அவள், அதனைக் கவனிக்காத ஏமாற்றத்துடன் அவளை தலையை சரித்து ஒரு பார்வை பார்த்த பின்னர் தன் குஞ்சுகளுடன் மீண்ட…
-
- 6 replies
- 4.3k views
-
-
ராங் காலும் ரங்கமணியும் (டெலிபோன் மணி அடிக்கிறது) தங்கமணி : காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன்… ச்சே… ஒரு வேலை செய்ய விடறாங்களா (என முணுமுணுத்தபடி வந்து போன் எடுத்து) ஹெலோ (என்றாள் ஸ்டைலாய்) எதிர்முனையில் ஒரு பெண் : சத்ஸ்ரீஅகால்ஜி தங்கமணி : என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க (ச்சே… இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு என முணுமுணுக்கிறாள்) எதிர்முனை : நை நை தங்கமணி : (ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி) என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல… பிச்சுபுடுவேன் பிச்சு எதிர்முனை : நை நை ஜி… (என அந்த பெண் ஏதோ சொல்ல வருவதற்குள்) தங்கமணி : என்ன நெனச்சுட்டு இருக்க உ…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஆறாங்குழி கதைகள் இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் பெரிய மீன்பிடிக் கப்பலில் வேலை செய்கிறேன். கப்பலோடு சமுத்திரத்திற்குள் இறங்கினால், ஒரு வாரம் முழுவதும் சமுத்திரத்திற்குள்ளேயே இருந்து, தொன் கணக்கில் …
-
- 6 replies
- 1.6k views
-