கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சன் என்று மனைவி விஜி அழைக்க திடுகிட்டு தன் சிரிப்பை நிறுத்தினான,ஏன் இப்ப உங்கள்பாட்டில் சிரித்து கொண்டு இருந்தனீங்கள் யாராவது பார்த்தால் விசர் என்று நினைக்க போறார்கள் என்றவல் அது சரி இப்ப ஏன் சிரித்தனீங்கள்.அதுவோ சும்மா என்ன நினைத்தேன் சிரித்தேன்,அப்படி என்ன பெரிசாக கிழித்து போட்டீங்கள் இப்ப உங்களை நினைத்து சிரிக்க என்றவளை பார்த்த சன்,அதற்கு காரணமே நீர் தான் விஜி என்றான். 25 வருடங்களிற்கு முன் நீர் எப்படி என்னை கூப்பிடுறனீர் என்பதை யோசித்தேன் அது தான் சிரித்தேன்.ஏன் எப்படி கூப்பிட்டனான் என்று சொல்லுங்கோ எனக்கு இப்ப எல்லாம் மறந்து போய் விட்டது.அது சரி இப்ப உமக்கு ஒன்றும் நினைவு இருக்காது ஏன் என்றா நீர் இருகிற இடம் அப்படி."இஞ்சாருங்கோ"."இங்கேயப்ப…
-
- 11 replies
- 2.6k views
-
-
கவரேஜ் பிள்ளையார் கோவிலும் காதல் நினைவுகளும்! வணக்கம் உறவுகளே! என் தமிழ் மொழியையும் என் தாய் மண்ணையும் வணங்கி ஈழவயலில் என் முதல் பதிவை ஆரம்பிக்கின்றேன். நானும் ஒரு பொடிப்புள்ள என்பதால் பொடிப்புள்ளைகளின் சங்கதிகள் சிலதை சொல்லுறன் கேளுங்க. வன்னியில் காதலர்கள் போவதற்கு கடற்கரைகளோ இல்லை,பூங்காக்களோ,தியேட்டர்களோ இல்லை கடற்கரைகள் இருந்தது ஆனால் அங்கே காதலர்கள் போவது கிடையாது. இதற்கான காரணம் நீங்கள் அறிவீங்கள் தானே.இதனால் பெரும்பாலும் காதலர்கள் சந்திக்கும் இடங்களாக ஊரில் உள்ள குச்சு ஒழுங்கைகள் ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொடிப் பிள்ளைகள் தான் அதிகமாக இந்த குச் ஒழுங்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
கவிஞர் நாவண்ணனுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. நான் தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னைச் சந்திக்க வந்துவிடுவார். 2003இல் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கென்று தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களுடன் நாவண்ணனும் இணைந்திருந்தார். யேர்மனியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். யேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்திலும் அவரது நிகழ்ச்சி இருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சி நடந்த பொழுது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதுதான் எங்களது கடைசிச் சந்திப்பாக அமைந்தது. யேர்மனிக்கு வரும் பொழுது அவர் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் குடும்பத்துக்குத் தருவதற்காகக் கொண்டு வந்திருந்தார். கட்டுநாயக்காவில் இருந்து பயணிப்பதால் பிரச்சினைகள் வந்து விட…
-
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
இரண்டாம் திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.."உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"இதைகேட்ட தகப்பன் கேட்டான்."அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் ....."நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்.ஆனால்.."இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்…
-
- 1 reply
- 6k views
-
-
1976 அதிகாலை வேளை சிலிர்ப்புடன் தொடங்கியது . இலேசான மார்கழி மாதத்து குளிரும் , பிள்ளையார் கோயிலடி மணியோசையும் , அம்மாவின் அடுப்படிச் சண்டை ஒலியும் , மாட்டுக் கொட்டிலில் நந்தினியிடம் இருந்து அண்ணை பித்தளைச் செம்பில் பால்கறக்கும் சர்..... என்ற ஒலியும் படுக்கையில் கிடந்த சிறுவனான வர்ணனுக்கு இதமாகவே இருந்தன . அப்பொழுது அவனிடம் சிறு வயதுக் குழப்படியும் கற்பனைகளுமே அதிகம் . தும்பிக்கு வாலில் கயிறு கட்டி பறக்க விடுவதும் , கோயில் கேணியடியில் பேத்தை மீன்கள் பிடிப்பதும் , தரவைக்குள் மாடுகள் மேயப் புதினம் பார்ப்பதும் அவனின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தன . இன்று என்ன செய்யலாம் என்று கற்பனை பண்ணியவாறே மீண்டும் போர்வையைக் குளிருக்கு இதமாகப் போர்த்தியவாறே படுக்கையில் குப்பறக் கவிண்டு பட…
-
- 25 replies
- 2.9k views
-
-
நாகராஜின் மகனுக்கும், செல்லையாவின் மகளுக்கும் திருமணப்பேச்சு. நாகராஜ் குடும்பம் அவுஸ்திரேலியாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். நாகராஜ் தம்பதியருக்கு ஒரே செல்ல மகன் நிமலன். செல்லையா குடும்பத்தினர் 1995 ல் இடப்பெயர்விலிருந்து கொழும்பில் வசிக்கிறார்கள். செல்லையாவுக்கு 2 பெண்பிள்ளைகள். மூத்தவளுடைய திருமணப்பேச்சு தான் இப்போது நடைபெறுகிறது. அதற்காக நாகராஜ் கொழும்பு வந்திருக்கிறார். பேச்சுவார்த்தை நன்றாக தான் நடைபெற்றது, சீதனப்பேச்சை செல்லையர் ஆரம்பிக்கும் வரை. 'எங்களிடமிருந்து என்னதை எதிர்பார்க்கிறீர்கள்?' என்ற செல்லையரின் கேள்விக்கு, கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நாகராஜ் சொன்னார். 'மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் வீடு வாங்கிற எண்ணம் இருக்கு. அதற்கு கொஞ்ச தொகை உங்களிடமிருந…
-
- 24 replies
- 4.3k views
-
-
உடற்பயிற்சி நிலையம் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது. மிகச் சிலரே அந்நேரம் வந்திருந்தார்கள். காதிற்குள் இளையறாஜா ஒலிக்க காடியோவில் மூழ்கியபோது, பாடல் ஒவ்வொன்றையும் சிற்றுவேசன் பாடலாக ஆக்கி, மனம் பழைய சீன்களை மனத்திரையில் ஓடவிட்டுக்கொண்டிருந்தது. காடியோ முடித்த கையோடு வெயிற்சிற்கு சென்றபோதும், இன்று ஏனோ மனமும் உடலும் பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைபோல் முரண்டு பிடித்தன. ஒன்றுமே செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் முப்பது வீதமாவது செய்தோமே என்று திருப்த்திப்படுத்திக்கொண்டு லொக்கர் நோக்கி நடந்துகொண்டிருக்கையில் கடைப்பார்வை கைப்பற்றிய, இலிப்ற்றிக்கல் உபகரணத்தில் உழன்றுகொண்டிருந்த, பெண் பரிட்சயமான முகமாகத் தெரிந்தது. எனவே மீண்டும் பார்த்தபோது மிகப் பரிட்சயமானதாகத் தெரிந்த…
-
- 25 replies
- 3.4k views
-
-
உன் பேர் சொல்லுஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. . "உன் பேர் சொல்லு" "பழனி" "உன் அப்பா பேரு" "பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி" "உன் அப்பா பேரு" "மாரியப்பா" அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி. "உன் பேர் சொல்லு" "பிச்சை" "உன் அப்பா பேரு" "பிச்சையப்பா" இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்…
-
- 1 reply
- 1.7k views
-
-
சாரி டார்லிங் கொஞ்சம் லேட்டாயிட்டு..... அவன் கெஞ்சிக் கொண்டே நின்றான். டிலோ.. பார்க்கின் பெஞ்சில்.. கோபத்தின் உச்சியில் இருந்து கொண்டிருந்தாள். என்ன.. வழமையா டார்லிங் என்றாள் கூலாகி குலாவுவாளே.. இன்றைக்கு என்ன காறாரா இருக்கிறாள்... என்று நினைத்த நிலோசன்.. அவளை நெருங்கி.. என்ர செல்லமெல்லே.. பப்புச்சுக்குட்டியில்ல.... என் கூட என்னம்மா கோவம்.. என்று வானத்தை அங்கலாய்த்திருந்தவளின் முகத்தை தொட்டு.. தன்னை நோக்கி திருப்ப முயல.. கோபத்தில் அவன் கையை தட்டிவிட்டாள் டிலோ. என்ன பண்ணுறது.. இன்றைக்கென்று கடுப்பேத்திறாளே.. ம்ம்.. கொஞ்சம் மெளனமா இருப்பம். அடங்கிடுவாள். வீட்டில அம்மா அப்பா முன்னாடி நான் தான் ராஜா.. இவ முன்னாடி இப்படி ஜீரோவா இருக்க வேண்டி இருக்கே.. என்று தன்…
-
- 33 replies
- 2.9k views
-
-
இது மிஷின் யுகம் - புதுமைபித்தன் சிறுகதை நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட - ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே - ஹோட்டலுக்குச் சென்றேன். உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். 'அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா!' என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு. போய் உட்கார்ந்தேன். "ஸார், என்ன வேண்டும்?" "என்ன இருக்கிறது?" என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன். அவ்வளவுதான்! கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன. "சரி, சரி, ஒரு ப்ளேட் பூரி கிழங…
-
- 0 replies
- 2.3k views
-
-
புரொபசர் சகல சந்தேக நிவாரணி! புரொபசர் சகல சந்தேக நிவாரணி! பாக்கியம் ராமசாமி ப க்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் - ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி நடையா கால்மணி நடந்து, சரியா 11 மணிக்கு காலேஜை அடைந்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
உயிர்ப்பு கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர் செய்யும் நடவடிக்கைக்கு இடம் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரையில் நோயில் படுத்ததிலிருந்து தன் மகன் மாதவனுக்கு, தான் ஒரு பாரமாக ஆகிவிட்டோம் என்ற எண்ணம் விழுந்து விட்டது. ஆனால், இது குறித்த கவலை எதுவுமில்லாமல் மாதவன் பேச்சில் கிண்டலும் உற்சாகமும் குறையாமல் வளைய வந்து கொண்டிருக்கிறான். இது அவனுடைய இயல்பு. இந்த உற்சாகமும் அடுத்த பொழுதைப் பற்றிய கவலையின்மையும்தான் அவனை மட்டுமல்ல, அவன் தாயாரையும், மற்றும் இரண்டு…
-
- 1 reply
- 1.6k views
-
-
சமரசம் மலர்ஸ் by நெற்கொழு தாசன் July 31, 2022 என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை. குரல் கொட்டாவியோடு கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய புன்னகையோடு திருப்திப்பட்டுக்கொண்டார். இருந்தபடியே தோளில் கொழுவியிருந்த பைக்குள் கையைவிட்டு யாருக்கும் தெரியாமல் விரல்களை மடித்து எண்ணிப் பார்த்தார். திரும்பி எங்கோ பராக்கு பார்ப்பவர் போலப் பாவனை செய்தபடி மீண்டும் ஒருமுறை மனதால் கணக்கிட்டார். மெதுவாகத் தலையாட்டி இதுவரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. ஆள் வந்தவுடன் காசைக் கொடுத்துவிட்டு …
-
- 3 replies
- 986 views
-
-
ருசி - சிறுகதை ஷங்கர்பாபு, ஓவியங்கள்: ஸ்யாம் “செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... அது உண்மையா?” என்றாள் மாலினி. இப்படிக் கேட்கும்போது அவள் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை. வெட்கமோ தயக்கமோ கொண்டிருந்தாலும் அதைத் தப்பாகக் கருத இடமில்லை. காரணம், அவளுக்கு 43 வயது ஆகியிருந்தது; கல்யாணமாகிக் குழந்தைகளும் இருந்தன. மேலும் தமிழ்ப்பண்பாடு, தமிழ்ப்பெண்கள்... குறிப்பாக, செக்ஸ் பற்றிப் பேசக்கூடாது என்று தடுத்துவைத்துள்ளது என்று பொதுவாக நம்பப்படுவதாலும், அச்சம், மடம், பயிர்ப்பு வகையறாக்களுக்குள்தான் அவள் புழங்கியாக வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாலும், அவள் வெட்கப்பட்டிருந்தால் அது சரியான காரணமாகவே கருதப்பட்டிருக்கும்.எல்லாவற்றையும்விட, கணவ…
-
- 5 replies
- 4.4k views
-
-
உயிர்தரிப்பு – ப.தெய்வீகன் 01 மூண்டு அணைந்த காட்டுத்தீயினால் எரிந்த பெருமரங்களின் எச்சங்கள் தூரத்தில் தெரிந்தன. கம்பீரமற்ற தரவை நிலத்தைக் கிழித்து பல கிலோ மீற்றர்களுக்கு நீண்டிருந்த புறநகர் நெடுஞ்சாலையில் நாங்கள் பயணித்தோம். மெல்பேர்னின் மேற்குத் திசை வழியாகச் சென்று பண்ணைப்பகுதிகளை தொட்டுவிட்டால், நாம் செல்லும் இடம் வந்துவிடுமென வரைபடத்தில்ஏற்கனவே பார்த்திருந்தேன். வாகனத்துக்குள்ளிருந்த மூன்று பேரையும்விட பேரச்சம்தழும்பிக்கொண்டிருந்த என்னுள் இறுக்கம் கூடியது. கண்ணாடி வழியாகத் தெரியும் பூமியை பார்க்கத்தொடங்கினேன். அடர்பசுமை நிறைந்த பண்ணை நிலங்கள் தெரியத்தொடங்கின. அடுத்து வந்த வயல்களில் அறுத்த புல்லுக்கட்டுகள் பெரும் எண்ணிக்கையில் சுர…
-
- 0 replies
- 968 views
-
-
எப்போதும் வரும் ஒரு கனவு. கண்ணருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று… கண்ணருகே வந்ததும் வெளீர் சிவப்பாக மாறி அப்படியே அரக்கு நிறம் கலந்து கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, விரிந்து, விரிந்து அதன் இதழ்கள் அண்ட பெருவெளியை மறைத்து எழுந்து நிற்கும்போது, அதனுள் இருந்து வெளி வரும் ஒரு கசப்பின் மணம், என்னை கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு முட்ட முட்ட முட்ட வைத்து… அது தாங்காமல், அலறி எழும் நான், அந்த கனவு தந்த பயத்தில் இருந்து மீளாமல் கண்ணீர் வடிய நெடு நேரம் படுக்கையில் அமர்ந்திருப்பேன். “கெனா”ல இப்படி கெதக்’குனு பயப்படாதட்டி, யட்சி பிடிசுக்குவா”. ஒவ்வொரு முறை அலறி எழும்போது அம்மாச்சியின் இந்த வார்த்தைகள் மனசுக்குள் வந்து மேலும் பயத்தை அதிகரிக்கவே …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரே விகிதம்! "உங்களுக்கு யார் யாரிடம் என்னென்ன பேசணுமென்று தெரிவதே இல்லை!'' என்று குற்றம் சாட்டினாள் சுபத்ரா - ஓய்வு பெற்ற பேராசிரியை. அவள் பெயருடன் இணைந்து வரும் பட்டங்கள் கொஞ்சம் நீளமானவை. (இடத்தை அடைக்கும்) சொன்னதோடு இல்லாமல் அசோக்கை உறுத்துப் பார்த்தாள். "எல்லாம் உன்னால தான்' என்று அவள் பார்வை சொல்லியது. அவள் கணவர் பாலகோபால் எங்கோ யோசித்தபடியிருந்தார். "ஏன்தான் பேச்சை ஆரம்பித்தோமோ?' என்று அவருக்குத் தோன்றிற்று. இருந்தாலும் அசோக்கின் நிலைமை உறுத்திக் கொண்டுதானிருந்தது. ஏதோ எம். ஏ., படிக்கிறேனென்று தொடர்ந்து பயிற்சிக்குப் போனான். ஒரு "குரூப்' தேர்வு பெறுவதற்குள் போது…
-
- 0 replies
- 684 views
-
-
கவுரவக் கவசம் – றொமிலா ஜெயன் கட்டிலில் சோம்பல் முறித்தபடி புரண்டு கொண்டிருந்த, தேவகியின் காதுக்குள் “அம்மா…. அவளைக் காணயில்லை” என பதட்டத்துடன் ஓடி வந்து கிசு கிசுக்கிறாள் மகள் தனுஷா. திடுக்கிட்டுப்போகிறது தேவகியின் மனம் திகைப்புடன் மகளின் முகத்தைப்பார்க்கிறாள். “வடிவா வளவு முழுக்க தேடிப்பாத்தனீயே பிள்ளை” “கிணத்தடி, கக்கூசடி எல்லா இடத்தையும் தேடிப்பாத்திட்டன். கனதரம் கூப்பிட்டும் பாத்திட்டன், அவவின்ர ரூமுக்குள்ள போயும் பாத்தனான், போட்டுக் கொண்டு வந்த சல்வாரும், அவா கொண்டு வந்த சின்ன பாக்கையும் கூட காணயில்லை.” “என்ன பிள்ளை சொல்லுறாய்” என்றவாறு தனது பெருத்த தேகத்தை புரட்டி, கட்டில் சட்டத்தை பிடித்தவாறு எழும்பிக் குந்தினாள் தேவகி. சுவா் மணிக்கூட்டின் மு…
-
- 0 replies
- 885 views
-
-
சுகமே….. சுவாசமே…….. ஆப்பிள் பூக்களின் நறுமணத்தைச் சுமந்தபடி இதமான தென்றல் சாளரத்தினூடாக அந்த அறைக்குள் நுழைந்துகொண்டிருந்த்து. சாளரத்தின் திரைச்சீலைகளை ஒதுக்கிய மைதிலி முகிலுக்குள் ஒளிந்தும் தெரிந்தும் விளையாடும் வெண்ணிலவை இரசித்தபடி ஆப்பிள் பூக்களின் நறுமணத்தில் சொக்கிப் போய் நின்றாள். மைதிலி என்னை நேசித்த ஒரே காரணத்திற்காக தனக்கான அனைத்தையும் துறந்தவள். பெற்றோர் கூடப்பிறந்தவர்கள், மதம் , அந்தஸ்து ஆகிய அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வசதிகள் குறைந்த என்னை மட்டுமே ஏற்று இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவள். கடந்த ஆறு ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த மழலைச் செல்வம் இன்னும் சில மாதங்களில் எங்கள் கைகளில் தவழும். உப்பி மேடு கட்டிய வயிற்றைத் தடவியப…
-
- 35 replies
- 4k views
-
-
"துரத்தப்பட்டவர்களின் மீள் பயணம்" ஒரு பேப்பரிற்காக அல்விற் வின்சன் எழுதியது [size=4]எத்தனையோ காலச் சிக்கல்களுக்குப் பிறகு நிம்மதியாக(?) நாட்டுக்குச் சொந்த பந்தங்களைப் பார்க்கவென்று போன நிறையப் பேரில் செல்வாவும் அடக்கம். முன்பு நிலைமை லேசான இறுக்கத்தில் இருந்த போது மாமா மோசம் போன செய்தி கிடைத்ததும் மனதுக்குள் குறுகுறுக்க கடினமான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தாள் கணவனுடன்.பிள்ளைகள் கேள்விப்பட்ட விடையங்களை வைத்துக் கொண்டு வரவே முடியாது என்று சொல்லி விட்டதால் கணவனும் மனைவியும் தனியே சென்றிருந்தார்கள். போன இடமெல்லாம் பயத்தில் கண் முழி பிதுங்கப் பிதுங்க பார்த்துப் பார்த்து மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இங்கே வந்து சேர்ந்ததும் தான் ஒழுங்காக விட முடிந்திருந்தது…
-
- 9 replies
- 971 views
-
-
'இஞ்சரப்பா இவ போன்வீட்டக்கா குரல் போல கிடக்கு. என்னென்டு ஒருக்கா போய் பாருங்கோவன்' பக்கத்தில் நித்திரையிலிருந்த கணவனை எழுப்பினார் லதா. லதாவிற்கு பக்கத்து வீட்டு அக்காவின் மேல் எப்போதுமே தனி அன்பு. லதாவிற்கு தென்மராட்சியில் பிறந்த வீடு, வாழ வந்ததோ வடமராட்சியில். வந்த புதிதில் தங்கை போல அனைத்து கொண்டவர் தான் இந்த போன் வீட்டு அக்கா. வசதியில் எந்தவொரு குறையும் இல்லாத குடும்பம். ஊரிலேயே முதன் முதலில் தொலைபேசி வைத்திருந்தவர்கள் என்பதால் 'போன்வீட்டுக்காரர்' ஆகிப்போன குடும்பம். 'இவன் ராஜாவையும் எழுப்பணை. ராத்திரில வந்து கூப்பிடுறா என்ன பிரச்சனையோ' என மகனையும் எழுப்ப சொன்னபடி படி படுக்கையில் இருந்து எழும்பி வாசலுக்கு வந்தார் லதாவின் கணவர் திருநாவுக்கரசு. 'என்னக்கா …
-
- 7 replies
- 2k views
-
-
இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ஒரு பழைய மஞ்சள் கடித உறையின் பின்னால் எழுதியிருந்த எண்ணை அவள் படித்தாள். அந்த எண் அவளுடைய வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பது அவளுக்குத் தெரியாது. அவள் அப்பாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை அவள் இதற்கு முன்னர் கண்டதே இல்லை. துபாயில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர் ஒருவரின் மகன், அவளுடன் பேச வேண்டுமாம். மணமுடிக்க விரும்புகிறான். அந்தச் சின்னக் கிராமத்தில் தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது. போரில் பல சனங்கள் வெளியேறிவிட்டார்கள். அப்பா அவளை ஒரு கடைக்கு அழைத்துச் சென்று, முதலிலேயே காசை எண்ணிக் கொடுத்துவிட்டு, அந்த எண்ணை அழைத்துப் பேசினார். அவர…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஃபுளோராவின் காதல் - சிறுகதை சிறுகதை: எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு விஜயா, தனது கழுத்தைப் பிடித்து நெரித்து, குளத்தில் தள்ளி விடுவதாகக் கண்ட கனவில் இருந்து பயந்து எழுந்தான் சரவணன். அவனது உடம்பு வியர்த்திருந்தது. படுக்கையைவிட்டு எழுந்தவன், தனது கைலியை இறுக்கிக் கட்டிக்கொண்டான். யாரோ அறைக்குள் இருந்து தன்னைக் கவனிப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. யார் எனத் தெரியவில்லை. சுற்றிலும் பார்த்துக்கொண்டான். இருட்டான அறை. கதவைத் திறந்துவைத்தாலும் பூட்டினாலும் வந்துவிடும் வெள்ளை நிறப் பூனையைத் தவிர வேறு யாரும் இல்லை. இரவில் மட்டும் வரும் பூனை பகலில் எங்கு இருக்கிறது, எந்த வீட்டில்…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஒரு மகன், தாயிடம் கேட்கக் கூசும் கேள்வி தான். ஆனாலும், வேறு வழியில்லை. இன்னும், எத்தனை நாள் தான் பொறுத்திருப்பான்? நாளை அவனுக்கென்று ஒருத்தி வந்தால், அவள் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், விழிக்கக் கூடாது பாருங்கள். அதற்கு முன்னதாகவாவது கேட்டுத்தானே ஆக வேண்டும். ஆம்... முடிவு செய்தான் ரமேஷ். இன்று, அம்மாவிடம் கேட்டே விடுவதென்று. அதற்காகவே, இன்று ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, வீட்டிலேயே இருந்தான். அப்பா வெளியில் போகும்வரை பொறுமை காத்தான். ""ஏம்பா ரமேஷ்... இன்னிக்கு ஆபீஸ் போகலையா?'' பார்வதியின் கேள்விக்கு பதிலே சொல்லாமல், காதிலேயே அதை வாங்காதவன் போல், தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான். ""நான் கேட்டுட்டேயிருக்கேன்... ஏம்ப்பா பதிலே சொல்லாம போயிட்டு இருக்கே?…
-
- 6 replies
- 1.2k views
-
-
வேண்டியது வேண்டாமை அம்மா வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து வேதனையாக இருந்தது. காலையில் மாயா இறந்ததாக செய்தி கிடைத்து அப்பா அவசரமாக கிளம்பிச் சென்றதிலிருந்தே அம்மா இப்படித்தான் வருத்தத்தைச் சுமக்கிறாள். ‘‘அம்மா, எதுக்காக துக்கப்படறீங்க? பீடை ஒழிஞ்சதுன்னு நிம்மதியா இருங்க...’’ என்றேன். என்னை உற்றுப் பார்த்தாள். நான் கூறியது மனிதாபிமானம் குறைந்த வாக்கியம் என்பது எனக்கே தெரிந்ததுதான். ஆனால், கடந்த பல வருடங்கள் எங்களுக்குத் தொடர்ந்து கிடைத்து வந்த வலியும், ஏளனப் பார்வைகளும் என்னை அப்படிக் கூற வைத்தன. ஆனால், இப்போது அம்மாவிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் திகைப்பை அளித்தன. ‘‘உங்க அப்பாவை நினைச்சால் பாவமாய் இருக்குடா. இதிலி…
-
- 0 replies
- 2.3k views
-