கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
மிக உள்ளக விசாரணை - ஷோபாசக்தி ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம். எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது. யாழ்ப்பாணப் பட…
-
- 3 replies
- 2.5k views
-
-
சுவர் முகம் August 4, 2025 ஷோபாசக்தி பாரிஸ் நகரக் காவல்துறைத் தலைமையகத்தில் அந்தச் சுவர் இருக்கிறது. சுவரோடு சேர்த்து அய்ந்து மனிதர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய மேலங்கியிலும் வட்டமாக இலக்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது இலக்கத்தின் பெயரை ‘டேவிட்’ என வைத்துக்கொள்வோம். வயது 46. கருப்பு நிறம். உயரம் 5 அடி 8 அங்குலம். தலைமுடி படிய வாரப்பட்டுள்ளது. நரையேறிய தாடி. ஒல்லியான உடல்வாகு. இலங்கையைச் சேர்ந்தவர். 2009-இல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். டேவிட் இதற்கு முன்னரும் சிலதடவை இவ்வாறு சுவரோடு நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் பிரான்ஸுக்கு வந்து ஆறு வருடங்கள் முடிந்திருந்தபோது, காவல்துறையிடமிருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்திருந்தது. அந்த அழைப்பு தனது …
-
-
- 3 replies
- 633 views
-
-
செல்போன் அதிர்ந்ததுமே புரிந்தது. ராதாதான். ‘‘சொல்லும்மா...’’ ‘‘நீதான்பா சொல்லணும்...’’ குரல் ஒடுங்கியிருந்தது. எதிர்பார்த்ததுதான். தவிப்பை கட்டுப்படுத்த கீழ் உதட்டை கடித்துக் கொண்டிருப்பாள். ரத்தம் பூக்காமல் இருக்க வேண்டும். நிச்சயம் மொட்டை மாடியின் ஓரத்தில் கைப்பிடி சுவரை பிடித்தபடிதான் நின்று கொண்டிருப்பாள். தன் அறையிலிருந்து இப்படி பேச வாய்ப்பில்லை. துவளும் கால்களுக்கு பிடிப்புத் தர எந்தக் காலையாவது அழுத்தமாக ஊன்றியிருப்பாள். மறு கால் குழைந்து நெகிழ்ந்திருக்கும். சுருட்டை முடி பறக்க தென்னங்கீற்றை ஊடுருவும் அதிகாலை சூரியனை வெறித்துக் கொண்டிருப்பாள். செல்போனை ஏந்தியிருப்பது வலது கையா இடது கையா? அது ஊன்றி நிற்கும் காலை பொறுத்தது. ஆனால், கைப்பேசி இல்லாத கை ந…
-
- 3 replies
- 985 views
-
-
ஒரு வயதான அம்மா துவக்கால் சுட்டுவிட்டா. இதுதான் பரபரப்பாக பொலிசுக்கு வந்த தொலைபேசி. அதைவிடப் பெரிய அதிர்ச்சி... அவ சுட்டுக் கொன்றது, அவவின் சொந்தக் கணவனை.😳 பொலிசாருக்கு டென்ஷனால் தலை கிறுகிறுத்தது. ஏனென்றால் அவ கொன்ற காரணம்......🥶 அவ தனது வீட்டில், தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த போது, வெளியே சென்ற கணவன் கழுவிய தரையில் காலடி எடுத்து வைத்து விட்டார் என்பதற்காக.🧐🥺 அதிர்ச்சி அடைந்த பொலீஸ் அதிகாரி, உடனே ரேடியோ தொலைபேசி மூலம் தனது பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பொலிசாரை அங்கு சென்று அந்த அம்மாவை கைது செய்யும் படி உத்தரவிட்டார்.😉🧐 நீண்ட நேரமாயும் போன பொலிசாரைக் காணவில்லை. குழம்பிப் போன பொலீஸ் அதிகாரி, தொலைபேசியில் கோபமாக..... " இன்னுமா கைது செய்யவில்லை என்று உறும…
-
-
- 3 replies
- 588 views
-
-
எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர். அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தா…
-
-
- 3 replies
- 563 views
-
-
ஒரு நிமிடக் கதை: மருமகள் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான். ஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம் கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான் அடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டில…
-
- 3 replies
- 1.6k views
-
-
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் குறுங்கதைகள். http://www.kaasi.info/pages/kathai.htm
-
- 3 replies
- 2.4k views
-
-
Sunday, November 20, 2011 என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன்! “டேய் கீர்த்தி .. அந்த பொண்ணு தாண்டா .. உடன திரும்பாதடா .. பொறு” “யாரடா? அந்த தேர் முட்டி மூலையில நிக்குதே அதா?” “அவளே தாண்டா, கொல்றாடா!” “டேய் அது கஜன்ட ஆளுடா” “அண்ணியை பற்றி பிழையா சொல்லாத, அவ இல்லடா, பக்கத்தில, பச்சை சாரி” “யாரு, கனகாம்பர பூ ஜடை போட்டதா”<a href="http://lh4.ggpht.com/-YmxaeNF98eo/TshHrnc5YHI/AAAAAAAAAik/NFeGz35pehQ/s1600-h/Picture%252520022%25255B6%25255D.jpg"> “அவளே தாண்டா, என்னா பொண்ணுடா!” “கண்ணாடி போட்டிருக்காளே மச்சான்” “அது தான் இன்னும் கொல்லுதடா!” “என்கிட்ட சொல்லீட்ட இல்ல? இப்ப பாரு” முருகன் கிழக்கு வாசலால் வெளியே…
-
- 3 replies
- 1.7k views
-
-
கல் சிலம்பம் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: அனில் கே.எஸ். செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு, கூடிவருவது போல கேட்டது. மேற்கில் இருந்து கெண்டைக்கால் அளவு நீரோடு வரும் உப்பாறு, தெற்கில் இருந்து இடுப்பு அளவு நீரோடு வரும் அமராவதியுடன் கலக்கும் கூடுதுறை இது. இவர் கைத்தடியை ஈரமண்ணில் ஊன்றிவிட்டு, ஆற்று நீரில் கால் வைத்தார். நீர் குளிர்ந்துகிடந்தது. சிப்பிலி மீன்கள் கலைந்து ஓடின. நீரை அள்ளி முகத்தில் அடித்தார். உள் ஒடுங்கிய கண்களில் கட்டியிருந்த பீழையைத் தேய்த்துக் கழுவினார். நீண்ட வெள்ளைத்தா…
-
- 3 replies
- 3k views
-
-
by யோகு அருணகிரி. by யோகு அருணகிரி. பாரிஸ் வந்து பலவருடம் ஆகிட்டு இன்னும் முசு ..சவாவுடன்(தமிழில் வணக்கம்,எப்பிடி இருக்கிறியள் என்று அர்த்தப்படும்) வாழ்க்கை சிரிச்சு கையை காலை காட்டி ஓடுது.வெளியில நிண்டு பார்க்குறவனுக்கு அவன் நல்லா பிரெஞ்ச்சு கதைப்பான் என்கிற எண்ணம் வரும் நாங்க கண்ணாடி ரூமில நிண்டு செய்யும் கைஅசைவு ஒரு கோலிவுட் பட டைரட்டர் கணக்கா அக்க்ஷன் போட்டு கதைப்பம். காரணம் சைகையிலதான் நம்ம பாசையே கதைக்குறம் என்பது எப்படி புரியும் வெளியில் நிக்கும் நபருக்கு. இப்படியே ஊரை பேய்க்காட்டி கொண்டு திரியிற நமக்கு ஒரு சூப்பர் மாக்கெட் வேலை. சரி எவளவோ பண்ணிட்டம் இதை சமாளிக்க மாட்டமா எண்டு தலையை ஆட்டி எனக்கு வேலை தெரியும் மொழி அத்துப்படி எண்டு உள்ள போயாச்சு. முதல்நா…
-
- 3 replies
- 1.4k views
-
-
அவர் பூபாலசிங்கம் உதயகுமார். அவரது மனைவி ப்ரியா உதயகுமார். ‘தாய்’ எனும் கிரீடத்துக்கு உரிமை கொண்டாட அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தன. உதயகுமாரின் சாயலையொத்த அழகிய பிஞ்சுக் குழந்தையொன்றை உதயகுமாருக்குப் பரிசளிக்க அவர் கனவு கண்டார். அக் குழந்தையினதும் ப்ரியாவினதும் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே உதயகுமாரின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர்கள் நிறைய கனவுகள் கண்டார்கள். அவர்களது அழகிய அக் கனவுகள் மேல் ஷெல் மழை பொழிகையில் அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோட வேண்டியிருந்தது. எனினும், தமது பாதுகாப்புக்காகத் தப்பியோடுவதைக் கூட அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ஏனெனில், விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் அந் நேரம் மனிதக் கேடயங்களாக ஆக்கப்பட்டிருந்தனர்.…
-
- 3 replies
- 1.8k views
-
-
ரயிலில்… - ஜெயமோகன் ரயில் ஐந்து நிமிடம் நிற்கும் அந்த ஸ்டேஷனில் ஒரு பெட்டியில் பதினைந்து பேருக்குமேல் ஏறி பார்த்ததே இல்லை. ஒழுங்காக நிதானமாக ஏறினால் அத்தனை பேரும் அவரவர் இருக்கைக்கு சென்று சேர்ந்தபிறகும் இரண்டு மூன்று நிமிடம் மிச்சமிருக்கும். ஆனால் அத்தனை பேரும் பெட்டிகளும் மூட்டைகளும் வைத்திருப்பார்கள். சிலர் கைக்குழந்தைகள் இடுக்கியிருப்பார்கள் சின்னப்பிள்ளைகள் கிறீச்சிட்டு துள்ளிக்கொண்டிருக்கும். உள்ளிருந்து தேவையில்லாமல் இறங்குபவர்கள் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள்.ஆனால் எல்லாவற்றையும் விட ஏறுபவர்களின் பதற்றமும், ஒவ்வொருவரும் முதலில் ஏறிவிடுவதற்காக முண்டியடிப்பதும் இரண்டு வாசல்களிலும் ஒரு சின்ன சுழிப்பை உருவாக்கும். மனிதர்களாலான ஒரு கார்க்கை வைத்து வாசலை அடைத்த…
-
- 3 replies
- 2.2k views
-
-
நித்தியா...... சிறுகதை -இளங்கவி சில மைகள் நடந்து வந்த களைப்பில், அவளுக்குப் பரிச்சயப்பட்ட இடமான அந்த இடத்தில் புதிதாக முளைத்திருந்த அந்தப்பெட்டிக்கடையடியில் வந்து நின்று கொண்டாள் நித்தியா..... நாவெல்லாம் வறண்டு தலைசுற்றுவது போல வர உடனடியாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டவள் கடைக்காரரைப் பார்த்து ''அண்ணை கொஞ்சம் தண்ணி தாறியள...கொஞ்சம் தலைச்சுத்துது....'' எனவும் கடைக்காரர் அவளைப்பார்த்து '' தங்கச்சி இங்க போத்தல் தண்ணி விக்குறத்துக்குத்தான் இருக்கு, இந்த சின்னப்பபோத்தல் தான் குறைஞ்ச்ச விலை... நூறு ரூபாய் மற்றதெல்லாம் விலை கூட...'' என்றார். தன்னிடம் காசில்லாத நிலமைய அவரிடம் கூறவும், ''இப்படிப் பார்த்துப்பார்த்து எல்லாருக்கும் சும்மா கொடுத்தால்…
-
- 3 replies
- 1.3k views
-
-
பாதி – ஷக்திக சத்குமார தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் பிக்கு ஹல்வெல்ல கஸ்ஸப ஹிமி, கஸான் பலிஹவடனவாக மாறியது சமூக வாழ்க்கையின் மீதிருந்த பற்றினால் அல்ல. தவிரவும் அவருக்கு துறவு வாழ்க்கையிலும் பற்றேதுமிருக்கவில்லை. துறவு ஜீவிதத்தைக் கை விட்ட பிறகு தொடர்ந்தும் அப் பல்கலைக்கழகத்தின் பிக்குகளுக்கான விடுதியில் தங்கியிருக்க அவர் விரும்பவில்லை. பல்கலைக்கழகத்துக்குள் பிக்குவாகப் பிரவேசித்து துறவு ஜீவிதத்தைக் கை விட்ட பலரும் அப்போதும் கூட பிக்குகளுக்கான விடுதியில் தங்கியிருந்தார்கள். பிக்கு தம்மஸ்ஸர ஹிமி, கஸான் அருகில் வரும்போது அவர் பழைய குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். “தப்பிச்சுட்டான்… தப்பிச்சுட்டான்… கஸான் என்றால் தப்பிச்சுட்டான். நீ விடுதியில் தொட…
-
- 3 replies
- 1.5k views
-
-
விகடன் தாத்தாவா? காந்தி தாத்தாவா? விகடன் குழும சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் (28.12.1935 – 19.12.2014) அவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்கியவான்கள். அப்படியொரு மகோன்னத மனிதர் அவர். எங்கோ குக்கிராமத்தில், நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, கடையில் தொங்கும் ஆனந்த விகடன் பிரதிகளை அண்ணாந்து பார்த்து வியந்த சிறு துரும்பு நான். பின்னாளில் ஆனந்த விகடனில் பணியில் சேருவேன், அவரைச் சந்திப்பேன், பழகுவேன், அவரின் அபிமானத்தைப் பெறுவேன் என்றெல்லாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தவன். அவரோடு பழகக் கிடைத்த வாய்ப்பால் ஆசீர்வதிக்கப்பட்டவனானேன். இன்று அவரின் முதலாண்டு நினைவு நாள். அவரைப் பற்றி எழுத விரும்புகிறேன். எழுத வேண்டும். எழுத எத்தனையோ உண…
-
- 3 replies
- 2.1k views
-
-
'தோழர் இரும்பு' என்னும் இச் சிறுகதை ஜான் சுந்தர் அவர்களால் எழுதப்பட்டு 'அகழ்' இதழில் வெளிவந்திருக்கின்றது. 'தோழர்கள்' எப்போதுமே கொஞ்சம் 'இரும்பு' போன்றவர்கள்தான். கொள்கை, கோட்பாடுகள், இலட்சியம் என்று உறுதியாக, வளைந்து கொடுக்காமல் வாழ்பவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்வதில்லை, அவை ஒவ்வொன்றும் தனித்தனியே முக்கியமானவையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை போலும். இச் சிறுகதை தோழர்களின் இன்னொரு பக்கத்தை, இளகிய மனங்களை, காட்டுகின்றது. இதை வாசித்த போது இது ஒரு சாதாரண கதையாகத் தான் தெரிந்தது. ஆனாலும் பின்னர் இது தினமும் மனதில் வந்து போகின்றது. கதையில் நிகழும் பிரதான விடயங்களுக்கு பெரிதாக சம்பந்தம் இல்லாமல் இருக்கும் இந்த ஒரு வசனம் எங்களில்…
-
-
- 3 replies
- 1.5k views
-
-
பூரணம் - சயந்தன் May 8, 2019 பதுங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ எனக்கும் ஒரு வெடி பட்டிருந்தால் என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். ‘சின்னக்காயம் எண்டால் ஏத்த மாட்டார்கள்..’ ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது என்றாள். எட்டிப்பார்த்தால் ஆழ் கிணறு மாதிரி.. அதிஷ்டக்காரி, அழுது குழறாமலேயே ‘காயக்காரக் கப்பலில்’ இடம் பிடித்துவிட்டாள். இனி குண்டுச் சத்தங்களைக் கேட்க மாட்டாளென்று பொறாமையாய் இருந்தது என்றாள். வானத்தைப்போன்ற பிரமாண்டமான தகரக்கூரையில் இடி உரசுமாற்போல ஒரு ஷெல் கூவி…
-
- 3 replies
- 1.3k views
-
-
<iframe frameborder="0" height="400" src="https://www.mixcloud.com/widget/iframe/?feed=https%3A%2F%2Fwww.mixcloud.com%2FThayagam%2Fsathurangam-290216%2F&light=1" width="100%"></iframe> <i> </i><br /> மறைந்த பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது. எனது வகுப்பு தோழனும் பிரபல எழுத்தாளருமான ரஞ்சகுமார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர் அந்த நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலில் தொடக்க நேயராக இந்த சின்னக்குட்டியும் வானலைகளில் சிறிது நேரம் கலந்து கொண்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சே…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார் . விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் . ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் . ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் . அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் .. அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் "இந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
வன்னிச்சி அம்மன் கோவிலடியில் பஸ்சுக்காக காத்திருந்த குமார்,நேரத்தை பார்க்க முழுக்கை சேட்டின் முன்பக்கத்தை இழுத்த போது கையில்கட்டியிருந்த கறுத்த மணிக்கூட்டை பார்த்தான். மிகவும் பழுதாகி விட்டாலும் எதோ ஒரு ஈர்ப்பின் காரணத்தால் இன்னும் எறியாமல் வைத்திருப்பதை எண்ணி தனக்குள் மலர்ந்து உற்சாகமானவன், எப்படியும் இன்னும் ஒருபத்து நிமிடமாவது செல்லும் பஸ் வர, என முனுமுனுத்த படி சேட் பொக்கற்றை தட்டிப் பார்த்து ஒரு சீக்கரட்டை எடுத்து வாயில் வைத்தவன், திருப்ப எடுத்து பார்த்தான். இதையெலாம் பத்தி பழகவேண்டி வந்ததே என சலித்துக்கொண்டவன், கசக்கிபோடவும் முடியாமல் திருப்ப வாயில் வைத்து பத்தவும் முடியாமல் தடுமாறிய கணத்தில் இரைச்சல் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க முடக்கில் பஸ் வருவதைக்கண்டான்.சிவப…
-
- 3 replies
- 935 views
-
-
அதிகாலை டொன்வலியில் பனிமழைக்குள் எனது வாகனம் மெதுவாக ஊர்ந்துகொண்டிருக்க ஏதும் தமிழ்பாட்டு கேட்பம் என்று CMR ஐ தட்டினால் ஒரு பெண் ஒலிபரப்பாளர் நீங்களும் போய் CMR முகபுத்தகத்தில் இந்த வருட ஆஸ்காரில் சிறந்த படம் எது என்பதை வாக்கிடுங்கள் என அறிவிக்கின்றார். ஆஸ்கார் ? ACADAMY AWARDS . எனது கார் சயிக்கிளாகி யாழ் ரீகல் தியேட்டரை சுற்ற ஆரம்பித்துவிடுகின்றது . ரீகல் தியேட்டர் அமைந்திருக்கும் இடம் தான் யாழ்பாணத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒருபகுதி.யாழ் கோட்டை,முனியப்பர் கோவில்,துரையப்பா விளையாட்டு அரங்கு ,யாழ் நூலகம்,மணிக்கூட்டு கோபுரம் என்று ஓ/எல் பாஸ் பண்ணிவிட்டு படிப்பு ,டியுஷன் என்று பெல்போட்டத்துடன் அலைந்த இடங்கள்.வீட்டிற்கு தெரியாமல் கள்ளமாக பார்க்க ஆங்கிலப்…
-
- 3 replies
- 722 views
-
-
தெய்வானை-சிறுகதை-கோமகன் February 8, 2020 நான்கு புறமும் அமைந்திருந்த சுற்று மதிலின் பின்னே நிரை கட்டியிருந்த கமுகம் பிள்ளைகளும் பாளை தள்ளிய தென்னை மரங்களும் ஆங்காங்கே இருந்த பப்பா மரங்களும் முற்றத்தின் மத்தியிலே சடைத்து நின்ற அம்பலவி மரமும் அதிலே துள்ளி விளையாடிய அணில் பிள்ளைகளும் என்று ஐந்து பரப்பில் அமைந்திருந்த அந்த நாற்சாரவீட்டில் சிங்கராயர் குடும்பத்தின் பவிசுகளைச் சொல்லி நின்றன. அந்தக்காலத்தில் ஊரில் நாற்சார வீடுகள் வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையில் மால் ஒன்று இருந்தது. அந்த மாலின் அகன்ற சுவர்கள் மண்ணினால் கட்டப்பட்டு, இடையில் வெளிச்சமும் காற்றும் வருவதற்காகப் பனை மட்டை வரிச்சுக்களால் கிராதி அடித்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
மறதி என்பது பெரிய வரம் என்று சிலர் சொல்வதுண்டு. அதிலும் குறிப்பாக தேவையில்லாத குப்பைகளை மனச்சிறையில் பூட்டி வைத்துக்கொண்டு கவலைப்படுவதை விட மறப்பது மேல். வெகு சிலருக்கு மட்டுமே இந்த மறதி என்பது ஒரு வரமாக அமைகிறது. எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டு குழப்புவதை விட மறந்து விடுவது மேல் தானே. ஆனால் அது அத்தனை சுலபம் அல்ல. தேவையான விஷயங்கள் மறந்து விடுவதும் தேவையற்ற விஷயங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடுவதும் இயல்பு தானே. படம்: இணையத்திலிருந்து…. நண்பரின் தாயார்: நாங்கள் எப்போது நண்பரின் வீட்டிற்குச் சென்றாலும் அவரது தாயார் எங்களையும் அவரது மகன் போலவே பாவித்து, "சாப்பிட்டு போடா கோந்தே" என்று ச…
-
- 3 replies
- 891 views
- 1 follower
-
-
வடக்கு வீதி அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் அலமேலுவின் நடை என்றால் மத்து கடைவது போன்ற ஓர் அழகு. இடைக்கு கீழே நேராக இருக்க மேலுக்கு மாத்திரம் இடமும் வலமும் அசைந்து கொடிபோல வருவாள். அந்த நேரங்களில் சோதிநாதன் மாஸ்ரர் மனசை என்னவோ செய்யும். மனசை தொடுவது ஒன்று; ஆனால் துளைப்பது என்பது வேறு. இப்ப கொஞ்சக் காலமாக இந்த எண்ணம் அவர் மனசைத் துளைத்து வேதனை செய்தது. தலையிடி வந்து போதுபோல இதுவும் விரைவில் போய்விடும் என்றுதான் எதிர்பார்த்தார். போவதற்கு பதிலாக …
-
- 3 replies
- 873 views
-
-