கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
[size=6]வண்டிற்சவாரி![/size] அ.செ.முருகானந்தன் 1 இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது. ஒரு …
-
- 3 replies
- 1.5k views
-
-
நீ எங்கிருந்து வருகிறாய்?' வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஒரு நிமிடக் கதை தங்கக் கோடாலி! தங்கக் கோடாலி! ஏ ழை விறகுவெட்டி ஒருவன் காட்டுக்குச் சென்று, ஒரு மரத்தை வெட்டிக்கொண்டு இருந்தபோது, அவன் கையிலிருந்த கோடாலி கை நழுவிப் பக்கத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது. ‘‘கடவுளே! இனி நான் பிழைப்புக்கு என்ன செய்வேன்? என் கோடாலி எனக்குத் திரும்பக் கிடைக்கும்படி செய் யுங்கள்’’ என்று கண்ணீர் மல்க வேண்டினான். ஒரு தேவதை அவன் முன் தோன்றி, ‘‘கவலைப் படாதே! நான் எடுத்துத் தருகிறேன்’’ என்று அந்தக் கிணற்றில் மூழ்கி, ஒரு தங்கக் கோடாலியுடன் வெளியே வந்து, அவனிடம் நீ…
-
- 3 replies
- 2.8k views
-
-
ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது. எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது. சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் க…
-
- 3 replies
- 5.1k views
-
-
நான் தூங்கப்போவதற்கு முன் என்னைக் கட்டிக்கொண்டுப் படுத்து இருந்தவள், விடியற்காலையில் அடுத்த அறையில் இருந்த சோஃபாவில் சுருட்டிக்கொண்டுப் படுத்திருந்தாள். எனக்கு இது புதிதில்லை. இரவில் இந்தக் கட்டிலில் படுக்கும் பெண்கள், விடியலில் அடுத்த அறையில்தான் விழிப்பார்கள். அடுக்களைக்குச் சென்று அவளுக்கும் சேர்த்து காப்பி . போட்டு எடுத்துக் கொண்டு அவளை எழுப்பினேன். படுத்தோம் எழுந்தோம் என்றில்லாமல் , என் வீட்டிற்கு வருபவர்களை, அவர்கள் ஒரு நாள் இருந்தாலும், ஒரு வாரம் இருந்தாலும் இளவரசிக்களைப் போலக் கவனித்துக் கொள்வேன். பெண்கள் உறங்கும்பொழுதும் கூட தேவதைகளாகத்தான் தெரிகிறார்கள். தேவதையாய் உறங்கிக் கொண்டிருந்தவள் எழுந்தபின் பத்ரகாளியைப்போல என்னை முறைத்தாள். வெடுக்கென காப்பி கோப்பையை …
-
- 3 replies
- 1.2k views
-
-
சொக்கனுக்கு ... வாய்த்த சுந்தரி ..... புலம் பெயர் நாடொன்றில் சொக்கனும் சுந்தரியும் , ஆணும் பெணுமாக இரண்டு பிள்ளைகள் ,காலையில் கணவனை வேலைக்கு .. அனுப்பி விட்டு .... ,ஒரு குட்டி தூக்கம் . பின் ..எட்டு மணியளவில் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையில் விட்டு ..வந்து தொலைகாட்சியில் ஒரு நாடகம் அது முடிய ,சமையல். பின் மதியம் இரண்டு மணிக்கு ஒரு படம் . மாலை பிள்ளைகள் வந்ததும் ..படம் முடியும் வரை எதுவும் நடவாது . அதற்கிடையில் ஐஸ் பெட்டியில் உள்ளது எல்லாம் காலி செய்து விடுவார்கள் ..மாலை ஐந்து மணிக்கு சொக்கன் ஒரு வைன் போத்தலுடன் தொலை காட்சிக்கு முன் .. இடை ..இடை உறுக்கள்... என்ன இங்க இருக்கு ,, ,இது குப்பை.. என்ன செய்த்நியடி .....இரவு சாப்பாடு …
-
- 3 replies
- 1.8k views
-
-
கர்ப்பம்: நொயல் நடேசன் நான் ஒரு மிருகவைத்தியர். சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.” என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே. ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா? எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால் சில நேரத்தில் மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கலாம். அதன்பின் அவை மயக்கம் தெளியும்வரை காத்திருக்கவேண்டும். நான்கு மணி நேரத்தில் இவை நடக்குமா? “என்னத்திற்காக எக்ஸ்ரே?” “பெண் நாய், கர…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
சிவா கத்திக் கொண்டிருந்தான்.. 'என்னம்மா பொண்ணு இவ நாம் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பியது கண்டவனையும் லவ் பண்ணவா..... என்ன நினைசிட்டுருக்கா இவ மனசில தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன்... வெட்டி போட்டுடுவேன் ....' நம்ம சாதி சனம் என்ன பேசும்.... அப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி.. சிவாவின் மனைவி கல்யாணம் ஆகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஒரே சாதியில் நடந்த திருமணம்....' ''என்ன இவன் கூட பிறந்த தங்கையின் மனதை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறானே மனதில் நினைத்துக் கொண்டாள். உள்ளே சிவாவின் தங்கை அழுது கொண்டிருந்தாள். அப்போது சங்கரி உள்ளே வந்தாள்.. அண்ணியை பார்த்தவுடன் கண்களை துடைத்து கொண்டாள். ''அழாதே கண்ணை துடைச்சுக்கோ...காதலிக்கறது தப்பில…
-
- 3 replies
- 1.4k views
-
-
நினைப்பும்...... நடப்பும்..!!! கொற்றவை நினைப்பு.......... என்னடா உனக்குள்ள சிரிக்கிறாய்? “இங்க பாரன் கூத்தை….மெலிந்த நீண்ட கூந்தல் உள்ள அழகான குடும்ப பாங்கான பெண்தேவை…..” “ம்…..அதுக்கென்ன?சாதாரணம் தானே….” “ஏன்டா….மண்டேக்க சரக்குதேவையில்லயோ…?” “இதுகள வெளியில கூட்டிக்கொண்டு நாலு இடத்துக்கு பேறதில்லையே…?” “ஓ…..உங்கட மனிசி எண்டு எல்லாருக்கும் உடம்ப காட்டி அறிமுகப்படுத்ததான் விருப்பம்…ம்….” “டேய்….டேய்…பைத்தியம் மாதிரி கதைக்காத… “.என்ர மனிசி….இவா இந்த ஒப்பீசில…இன்ன வேலையில இருக்கிறா இன்னது படிச்சிருக்கிறா.. எண்டு சொல்லுக்களன்டா…பெருமையா இருக்கும்…” “பாக்கிறவன் வடிவான மனிசியா எண்டுதான் பாப்பான்...” “அடேய்…..நீங்கள் கறுப்பா குண…
-
- 3 replies
- 767 views
-
-
பரிசு .............. அந்த சிறு கிராமத்தில் . வாழ வந்தவள் தான் , சாவித்திரி . தபாற்காரன் சோமுவுக்கு மனைவியாக , இனிதே இல்லறம் நடத்தி வந்தாள் . மூத் தவள் , .சோபனா , சுதா ..இருவரும் படிப்பில் கெட்டிகாரி கள். . கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து . தானும் தன பாடுமாக வாழ்ந்து வந்தாள் . சோமுவும் கம்பீரமான தோற்றம் கொண்டவள். அந்த ஊர் மக்களால் மிகவும் விரும்ப பட்டவன் . காதலர்களுக்கு தெய்வமானவன். வழியில் மறித்து தபாலை பெற்று கொள்ளவதில் அந்த ஊர் இளையவர்கள் பலே கிலாடிகள். வீடில் வந்து எதுவுமே சொல்ல மாட்டான் தபால் அதிபர் இருவருடதுக்கு ஒரு முறை மாற்றம் பெறுவார்கள். இடையில் அவர்களது குடும்பத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கவும் அனுப்ப படுவான் . காலையில் , காக்கி சட்டையுடன…
-
- 3 replies
- 1.1k views
-
-
எழுதியவர் ஷண்முகி tanilamutham அன்று அதிகாலை வேளை கண்கள் மூடியபடியே இருக்க நினைவுகளை அசைபோட்டுக் கொண்டேஇ படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். அதில் நினைவுகள் வெற்றி பெற்றுக்கொள்ளஇ நித்திரை மெல்லென விடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று எனக்கு பதினெட்டாவது வயது. என் மனம் ஏனோ என் அம்மாவை நினைத்துக் கொண்டு ஏங்கியது. என் சின்னச் சின்ன தேவைகள்இ என் அன்பை முழுவதுமாக கொட்டிக்கொள்ள... அம்மா என்னுடன் இருந்திருந்தால்இ எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்ன செய்வது. ம்... அன்று செய்ய வேண்டிய கடமைகள் ஒவ்வொன்றையும் மனதினுள் எடைபோட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வந்த அப்பா "இனிய பிறந்த நாள் வாழ்த்த…
-
- 3 replies
- 2.5k views
-
-
தினம் - (சிறுகதை) - முருகபூபதி . " கழுத்தில் சயனைற் குப்பி, கரத்தில் ஏ.கே. 47 கொண்டு திரிந்தவன், இப்போது எதுவுமே இல்லாமல் காற்றுப்போல் அலைகிறான்." சில நிமிடங்களில் எனது உடலை - இதற்குத்தானா 'பூதவுடல்' என்கிறார்கள் - எடுத்துச்சென்றுவிடுவார்கள். என்னுடல் இறுதியாத்திரைக்குத் தயாராகிறது. இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களும் மலர்வளையங்களுடன் வந்தவர்களும் மகள் - மருமகனிடம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்தவர்களும் நான் பயணிக்கவிருக்கும் நீண்ட அழகிய காருக்குப்பின்னால் தத்தம் கார்களில் அணிவகுத்து வருவார்கள். மயானத்திற்குச்சென்றபின…
-
- 3 replies
- 660 views
-
-
நாணயம் சில வருடங்களுக்கு முன் நண்பரொருவர் மூலம் அறிமுகமான சுந்தரம் பத்தர் அயல் ஊரில் வசிப்பவர் . அந்த குடும்பத்தில் இருந்த மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க ஆரம்பித்த பொது ..அயல் ஊரில் பெண் கிடைக்கவே ...திருமணம் நிச்சயமாகி கலியாணத்துக்கு நாள் குறித்தார்கள். மாப்பிள்ளை வீடடார் நகைகள் செய்வது சுந்தரம் பத்தரிடம். பெண் வீட்ட்ருக்கும் அறிமுகமாகி அவர்களும் அங்கு ஓடர் கொடுத்தனர். திருமணம் இனிதே நடந்தது . வாழ்க்கையும் ஆரம்பமாகியது . காலம் உருண்டோடியது . நாட்டில் ஏற்படட இன அழிப்பின் போது பல் கஷ்டங்களை தாண்டி .வெளிநாட்டுக்கு அகதியானார்கள் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும். அங்கம் காலங்கள் உருண்டோடின ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் அவர்களுக்கு கிடைத்தனர். மிகுந்த கஷ்ட பட…
-
- 3 replies
- 993 views
- 1 follower
-
-
யாழ் சுமந்த சிறுவன் - தீபச்செல்வன். சன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள் வசித்திராத நகரில் தானியங்களுக்காய் அலைந்து தோற்றுப் போன இன்னும் சில புலுனிகள் சிறு கொப்புக்களில் வந்தமர்ந்தன. கிளிநொச்சியின் பேருந்து நிலையம் என்பது பெரிதாக கொப்புகள் இல்லாத ஒரு பாலைமரம்தான். அது காயம்பட்ட பறவையைப் போல நெளிந்து நின்றது. அதன் சிறு நிழலில் பேருந்துகள் வந்து தரிப்பதுவும் போவதுமாய் இருந்தன. தமிழீழப் பேருந்து நிலையத்தின் வெட்டி வீசப்பட்ட மஞ்சள் தகரங்களில் ஒரு பெட்டிக்கடை. மணிக்கூட்டையும் வழியையும் மாறி மாறிப் பார்க்கும் சத்தியனை கவனித்துக் கொண்டே தோள் துண்டினால் தண்ணீர் போத்தல்களை துடைத்துக் கொண்டிரு…
-
- 3 replies
- 1.6k views
-
-
கள்ள வீசா – ஒரு கனவு May 10, 2022 — அகரன் — பாரிசுக்கு வந்து ஒன்பது வருடமும் 25 நாட்களும் கடந்தபோது எனக்கு அகதி அடைக்கலம் கிடைத்தது. அன்று வெள்ளிக்கிழமை. ஊரில் தூக்கத்தின்போதுநாளொரு கனவு வருவது உண்டு. எப்போது நாடுகளிள் எல்லைகளை கடக்கும் இலட்சியத்தில் இறங்கினேனோ அன்றில் இருந்து எனக்கு கனவு வந்ததாக நினைவில்லை. விதிவிலக்காக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைகனவு ஒன்று எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. கனவிற்கும் விசாகிடைத்ததற்கும் சாமி சம்மந்தம் இருக்குமோவென்று யோசித்தேன். ஒரு சாமியுமில்லை. சம்மந்தமுமில்லை. கனவு கண்டெழும்பி அதன் நினைவுகளோடு காலை பத்துமணிக்கு வேலைக்குச் சென்றேன். கனவைப்பற்றி ஏன் சொல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அதுவல்ல நான் சொல்ல…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஈழத்தில் உருவகக்கதையின் மூலவர் நாவற்குழியூர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப்பகிர்வுநிகழ்வு கடந்த 4ம் திகதி (04.08.2007) அன்று கனடா நாட்டின் ரொரன்ரோ மாநகரில் இடம் பெற்றது. பண்டிதர் சு.வேலுப்பிள்ளையின் (சு.வே) இழப்பு தமிழ்ச் சமூகத்திற்குமான ஒரு வெற்றிடம் “சிறுகதை எழுத்தாளனைவிட ஒரு உருவகக் கதை எழுதுபவன் ஆழமான சிந்தனையாளனாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்டதொரு ஆழமான பார்வை பண்டிதர் சு.வேயிடம் காணப்பட்டதினால்; அவரை உருவகக் கதையின் பிதாமகராக ஈழத்து இலக்கிய உலகம் இன்றும் மதிக்கின்றது. அத்தோடு ஆசிரியராக, வகுப்பறை கற்பித்தலுடன் மட்டும் நின்றுவிடாமல் கல்வி வெளியீட்டு திணைக்களத்தினூடாக முழுத் தமிழ் தேசியத்திற்கும் கல்வி கற்பித்த பெருமை உடையவர…
-
- 3 replies
- 1.4k views
-
-
கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்... இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம். மனதுக்குள் ஆயிரமாயிரம் கற்பனைகள். சினிமா காதலுக்கே உரிய கனவுகளைப் போல் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், கொஞ்சி மகிழவும் ஆசைப்பட்டோம். ஆனால், தலைப்பிள்ளையைத் தக்கவைக்கக்கூட போராட வேண்டிய நிலை வரும் என்பதை எந்த சொப்பனமும் எங்களுக்குச் சொல்லவில்லை. அதிகாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நானும் நளினியும் மசியாத நிலையில்... அவர்களின் கவனம் எங்களின் இரண்டரை மாத சிசுவின் மீது திரும்பியது. 'இதுவரை நடந்த விசாரணைகள் எல்லாம் சாதாரணம்தான்... இனிதான் மொத்தச் சித்ரவதைகளும் இருக்கு. மரியாதைய…
-
- 3 replies
- 1.3k views
-
-
கொலையுதிர்காலம் http://www.mediafire.com/?w93xkvto8y3x88q
-
- 3 replies
- 2.3k views
-
-
என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி! சிறுகதை என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி! ஜ.ரா.சுந்தரேசன் உ றுத்தறதை அவர்கிட்டே சொல்லிடலாமா? இதுவரைக்கும் அவர்கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ஆனா, எங்க மாமி ஒருத்தி சொல்லுவா, சிலதை மறைக்கறதிலே தப்பில்லே... சிலதை மறைச்சுத்தான் ஆகணும்னு! அந்த ரெண்டிலே இது எந்…
-
- 2 replies
- 2.9k views
-
-
கயிறு இழுத்தல் போட்டி அன்று யாழில், அந்த கல்லூரியில், வருடாந்த மெய்வல்லுனர் போட்டி இறுதிநாள். வள்ளுவர், கம்பன், இளங்கோ, பாரதி என நான்கு இல்லங்கள். நான்கு வீடுகளிலும் தமது இல்லமே வெல்லவேண்டும் என பல மாதங்களாக எடுத்த முயற்சிகள், பயிற்சிகள்... இவற்றின் இறுதி பலாபலனை அடையும் நாள் இன்று. இல்லங்கள் நாலாக இருந்தாலும் போட்டி இரண்டு இல்லங்கள் இடையேதான் என ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. ஆனால் அதில் மூன்றாவதாக இருந்த இல்லத்தில் பலத்த முயற்சிகள் இருந்தும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. ஏன் சலிப்பும் இருந்தது. என்ன தான் முயன்றும் முடியவில்லையே என....இத்தனை வருடங்கள் முயன்றோமோ ...ம் ம் என சலித்தவர்களும் அந்த இல்லத்தில் இருக்கத்தான் செய்தனர் 'முயற்சி உடையான் இகழ்ச்சி …
-
- 2 replies
- 2.6k views
-
-
ஈசாப் கதைகள் என்ற நூலில் இருந்து .... கழுதை வீரம் பூனைக்கு யார் மணி கட்டுவது? என்ற குட்டிக்கதைகள்.
-
- 2 replies
- 5.6k views
-
-
சீனாவில் அந்த ஏழு நாட்கள் லியோ நிரோச தர்ஷன் இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர்கள் குழு கடந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்தது. இதனை கொழும்பில் உள்ள சீன தூதரகம் ஒழுங்குபடுத்தியிருந்தது. முற்றிலும் மாறுபட்ட சூழல், உணவு மற்றும் மனிதர்கள் என பல்வேறு வேறுபாடுகளுக்கு மத்தியில் புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இந்த விஜயம் அமைந்திருந்தது. குறிப்பாக உணவு விடயத்தில் கிடைத்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகவே அங்கு சென்ற தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணப்பட்டது. எவ்வாறாயினும் சீன அரசின் நோக்கம் அந்த நாட்டின் பல்துறைசார் வளர்ச்சியை எமக்கு காண்பிப்பதாகும். அதனடிப்படையில் மெய்சிலிர்க்க கூடிய பல கட்டுமானங்கள் எம்மை ஆச்சரியப்படுத்தியது மாத்திரமல்லாது தனது த…
-
- 2 replies
- 1.6k views
-
-
என் நண்பனின் கல்யாண ரிசப்ஷன். தாமதமாக சென்றேன்.மண்டபம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. மணமக்களின் குடும்பத்தினர் இருந்தார்கள்."இப்போ தான் சாப்பிட்டோம். நீங்க சாப்பிட்டு வாங்க"மாடியை காட்டினார்கள். மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோக்கு நின்றுவிட்டு படி ஏறிச்சென்றேன். வரிசைகள் காலியாக இருந்தது. கேட்டரிங் பணியாளர் ஒருவர் இலை போட்டார்.போட்டோ , வீடியோக்காரர்கள் 4 பேர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்."சும்மா வெக்கப்படாம வாடா "ஒரு சிறுவனை அழைத்தார்கள். அவன் தயங்கி தயங்கி உட்கார்ந்தான்.அவன் வய…
-
- 2 replies
- 753 views
- 1 follower
-
-
பயணம்: கேரளா/தமிழகம் சில தெறிப்புகள் இளங்கோ-டிசே கொச்சியில் இருக்கும் கலைக்கூடங்கள் என்னை எப்போதும் வசீகரிப்பவை. கடந்தமுறை கொச்சியிற்குச் சென்றபோது Kochi-Muziris Biennale நடைபெற்ற காலம் என்பதால் கலைகளின் கொண்டாட்டமாக இருந்தது. இம்முறை அந்தக் காலம் இல்லாதபடியால் நிரந்தரமாக அங்கே இருக்கும் கலைக்கூடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒருநாள் முழுதும் அவற்றைத் தேடித் தேடிப் பார்த்தேன். இந்தக் கலைக்கூடங்களில் பொதுவாக முன்பக்கத்தில் இவ்வாறான ஓவியங்கள் பார்ப்பதற்கும்/ (சிலவேளைகளில்)விற்பதற்கும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதைத்தாண்டிச் சென்றால் cafeக்கள் உள்ளே இருக்கும். இந்த இடங்களில் தனியே ஓவியங்கள் என்றில்லாது இசை, இன்னபிற விடயங்களும் நிகழ்ந்தபடி இருக்கும்…
-
- 2 replies
- 1.4k views
-
-
விளையும் பயிர்... லா சப்பலிலிருந்து கடைக்கு வருவதற்காக Bus க்காக காத்திருந்தேன். நான் எடுக்கவேண்டிய Bus வந்து பயணிகள் ஏறக்கூடியவாறு வந்து திரும்பியது அம்மா பாருங்கள் முன் சில்லுகள் திரும்ப மட்டுமே பின் சில்லுகள் தான் Bus யை தள்ளும் என்று ஒரு சிறு குரல் கேட்டது ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்த்தேன். சொன்னவருக்கு ஆகக்கூடியது 6 வயதிருக்கலாம். அவரது தாயார் இவருடன் இன்னும் ஒரு ஆண்பிள்ளை மற்றும் தள்ளுவண்டியில் ஒரு பெண்பிள்ளை அவர்களுக்கு முறையே நாலு மற்றும் 2 வயதிருக்கலாம். எனக்கே பல வண்டிகளை ஓட்டியும் பல காலம்வரை தெரியாத இந்த விடயத்தை இந்த வயதில் புரிய ஆரம்பித்திருக்கும் அவனை வாழ்த்தவேண்டும் என்று நினைத்தேன். அவனது இ…
-
- 2 replies
- 2k views
-