கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
இன்னொரு நந்தினி - சிறுகதை ஆத்மார்த்தி, ஓவியங்கள்: ஸ்யாம் பெருமழைக் காலத்தின் ஆரம்பக் கணங்களை, பெரிய கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ். `பார்க்கணும்டா!' - ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக்கொண்டு, மழையைப் பார்க்க மறுபடி வந்தேன். இன்னும் மழை ஆரம்பிக்கவில்லை. மழைக்கு முந்தைய காற்றும் லேசாகத் தெறிக்கும் தூறலும் மட்டுப்பட்டாற்போல் தோன்றியது. அடுத்த விநாடி மீதான அறியாமைதான் எத்தனை அழகு! நகரத்தின் முக்கியமான சாலையில் அவ்வளவாகப் பரபரப்பு இல்லை. இன்று ஏதோ லோக்கல் விடுமுறை. இல்லாவிட்டால், சாலையை இந்நேரம் விழுங்கியிருக்கும் பள்ளிக்கூடக் கூட்டம். காது அருகே, ``இன்னிக்கு மழ…
-
- 0 replies
- 2.6k views
-
-
குலசாமியைக் கொன்றவன் சிறுகதை: கணேசகுமாரன்ஓவியங்கள்: ஸ்யாம் திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை 'கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு 'க்’ இன்னும் கொஞ்சம் இடைவெளி 'கி’ இடைவெளி 'ரா’ இடைவெளி 'ம’ இடைவெளி 'ம்’... அவ்வளவுதான் கிராமம் முடிந்துவிட்டது. அந்த ஊரில்தான் மலை காத்த அய்யனார் இருக்கிறார். அவர் எந்த மலையைக் காத்தாரோ, அவர் காத்த மலைக்கு என்ன கேடு வந்ததோ, அது நமக்கு முக்கியம் அல்ல. திருப்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள அத்தனை போலீஸ்காரர்களும் அய்யனார் கோயில் வாசலில் குழுமியிருப்பதன் காரணம் நமக்கு முக்கியம். பூட்டப்பட்ட கோயில் வாசலில் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்ட…
-
- 0 replies
- 3.3k views
-
-
ஒரு நிமிடக் கதை வாய்ப்பு ‘‘ஓவியம் வரையறதை விட்டுட்டு வேற ஏதாவது உருப்படியான வேலையைப் பாரு!’’ என்று அப்பா திட்டியபோதெல்லாம் வராத ஞானோதயம் மகேந்திரனுக்கு இப்போதுதான் வந்தது.வந்து என்ன புண்ணியம்? அவனுக்கு ஓவியம் தவிர வேறு எதுவும் தெரியாது. ‘இதற்கு மேல் பட்டினியைத் தாங்க முடியாது’ என்ற நிலையில் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு ஐம்பது ரூபாய் எப்படித் திரட்டுவது எனத் தீவிரமாக யோசித்தான்.‘எந்த நேரத்திலும் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது’ என்ற அவன் தாத்தாவின் வார்த்தைகள் மனதுக்குள் வந்து போயின. தான் வரைந்த ஓவியத்தை எடுத்து, அதன் கீழ் எதையோ கிறுக்கிக்கொண்டான். இருப்பதிலேயே நல்ல உடையை எடுத்து அணிந்து கொண்டவன், பெரிய பங்களாக்கள் இருந்த ஏரியாவில் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினான்…
-
- 0 replies
- 564 views
-
-
கிழவனின் உயிர் சயந்தன் “பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..” மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில் கதைகளை – ஏழு மலை, தாண்டி ஒரு குகைக்குள் கிளியின் உடலில் உயிரைப் பதுக்கி வைத்திருக்கும், மந்திரவாதிகளின் கதைகளை – வெள்ளை இறகுகள் முதுகில் முளைத்த கேட்ட வரம் தரும் தேவதைகளின் கதைகளை இப்பொழுது யாரும் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. “வாயைத் திற.. அல்லது ஆமிக்காரனிடம் பிடித்துக்கொடுப்பேன்” என்று நேற்றுப்பி…
-
- 3 replies
- 1.1k views
-
-
வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன் ஓவியங்கள் : ரமணன் வாப்பா தன்னுடைய ஆறாவது மகளின், அதாவது என்னுடைய வீட்டை அபீர் தெருவின் கடைக்கோடியில் கட்டி முடித்தார். அப்போது வாப்பாவுக்கு இன்னும் ஒரேயொரு வீடு மிச்சமிருந்தது. தங்கை பஷீராவின் வீட்டைக் கட்டி அவளுக்கொரு துணை தேடிக் கொடுத்துவிட்டால் வாப்பா சந்தோஷமாக ஹச்சுக்குப் புறப்பட்டுப் போய்விடுவார். அந்தப் புனிதமான யாத்திரையைக் காட்டிலும். கடமையைக் காட்டிலும் தன்னுடைய மகள்களுக்கு நல்ல ஒரு வரனும் ஒரு வீடும் அமைத்து கொடுப்பதைத்தான் வாப்பா தன்னுடைய வாழ்வின் அர்த்தமென்று கருதியிருந்தார். நான் இவரை மணமுடித்த பிறகு, வாப்பாவைப் பார்க்க அபீர் தெருமுனையிலிருந்த எங்களுடைய வீட்டுக்கு மூன்று மாதங்கள் கழித்து போயிருந்தப…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈரம். வவுனியா முகாமிலிருந்து விடுதலையான லட்ச்சுமி அத்தையையும் மகள் கவிதாவையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் முருகனின் அம்மா. பிடிவாதமாக யாழ்ப்பாணத்திற்கு வரமறுத்து பாலியாத்திற்க்குப் பக்கத்தில் இருந்த அவர்கள் வீட்டிற்க்குப்போக இருந்தவர்களை முருகனின் அம்மாதான் மிகுந்த வாக்குவாதத்தின் பின்னர் மனதை மாற்றிக் கூட்டிவந்திருந்தார். முருகனின் அம்மாவின் ஆக்கினையால்தான் லட்ச்சுமி அத்தை அந்த ஊரிற்க்கே வருவதில்லை என்ற தனது கொள்கையை விட்டுக் கொடுக்கவேண்டியிருந்தது. எவ்வளவோ துன்பங்களைச் சந்தித்தும் நம்பிக்கையை இழ…
-
- 6 replies
- 2.2k views
-
-
ஆமிக்காறருக்கு நாங்களோ உதவி…? சொல்லட்டோ ? சுரேன் கேட்டான். ஓம்...! சொந்த இடம்…..3பிள்ளைகள் ..மூத்த பிள்ளை 19வயது , 2வது பிள்ளை 17வயது….3வது பிள்ளை 11வயது….எழுதிக்கொண்டு வர சுரேன் அவர்களது பெயர்களை வாசித்தான். ஐஞ்சும் கெட்டு அறிவும் கெடுறதெண்டு சொல்றவையெல்லோ அந்த நிலமைலதான் நானும். அண்ணை நீங்களெனக்கு ஆக்களிட்டை அடிவாங்கித்தரத்தான் நிக்கிறியளென்ன…? எங்களுக்கு உதவாட்டிலும் பறவாயில்லை இந்தக் குடும்பத்துக்கு கட்டாயம் உதவுங்கோ….நாங்கல்லாம் நாட்டை நேசிச்சுத்தான் வெளிக்கிட்டனாங்கள். எங்களுக்கு கொள்கை லட்சியமெண்டு எல்லாமிருந்தது…நாங்க உள்ளையிருக்கிறதிலயும் ஞாயமிருக்கு…! ஆனா இந்த 50வயது மனிசன் எங்கடையாக்களுக்கு உதவப்போய்த்தான் இண்டைக்கு இந்தச் சிறையில காய…
-
- 7 replies
- 1.9k views
-
-
கதையல்லாத கதைகள் 02-யோ.கர்ணன் “ரைகர்ஸ்” யாழ்ப்பாணத்திலிருக்கும் நாற்பதினாயிரம் சிங்களப்படைகளையும் உயிருடன் பிடித்து வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா அல்லது நாற்பதினாயிரம் சிங்களச் சிப்பாய்களின் சடலங்களை வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா என உலகின் திசையனைத்திலுமிருந்த தமிழ் ஆய்வாளர்கள் அனைவரும் தலையைப்பிய்த்துக் கொண்டிருந்த பொழுதது. உச்சபட்சமாக, வன்னியிலிருந்த ஆய்வாளரொருவர் ஈழநாதம் பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்- ‘நமது குறைநிர்வாக இராச்சியத்தை சில வல்லரசுகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. நல்ல கூடைப்பந்து விளையாட்டு வீரன்தான் பந்தை எப்பொழுதும் தனது கையில் வைத்திருக்க வேண்டும். சாணக்கியம் மிக்க இரா…
-
- 4 replies
- 920 views
-
-
திரும்பி வராத குரல் – யோ.கர்ணன் ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூறுகளின் மத்திய பகுதியில் அது நடந்தது. யாழ்ப்பாணத்தின் இருபாலையிலுள்ள முகாமொன்றின் சமையல்கூடத்திற்கு பக்கத்தில், ஒரு பின்மதியப் பொழுதில் சத்தியப்பிரமாணத்தை சரியாக நினைவில் கொண்டுவர முடியாமல், நானும் என் வயதையொத்த இன்னும் இரண்டு நண்பர்களுமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தோம். அது நாங்கள் இயக்கத்திற்கு சேர்ந்த புதிது. சத்தியப்பிரமாணத்தை மனனம் செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடெல்லாம் அப்பொழுதில்லை. எங்களைத்தான் ஆர்வக் கோளாறு விடவில்லை. முகாமிலிருந்த சீனியர்கள் காலையில் சத்தியப்பிரமாணமெடுப்பதைப் பார்த்ததும் பெரும்பாலானவர்களிற்கு இருக்க முடியாமல் போய்விட்டது. சீனியர்களின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் கவனித…
-
- 6 replies
- 1.1k views
-
-
இணைவு - ஜெயமோகன் [1 ] கொல்லம் படகுத்துறையில் இறங்கி நேராக என் சாரட் நோக்கி ஓடினேன். ஸ்காட் மிஷனில் இருந்து எனக்காக அனுப்பப் பட்டிருந்த வண்டி.என்னுடன் என் பெட்டியை தூக்கியபடி மாத்தன் ஓடிவந்தான். நான் மூச்சிரைக்க ஏறி அமர்ந்ததும் அவன் பெட்டியை என் அருகே வைத்தான். வண்டிக்காரன் மாத்தனிடம் “எங்கே?” என்றான். நான் உரக்க “பன்னிரண்டாம் ரெஜிமெண்ட்… பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் தலைமை அலுவலகம்” என்றேன். அவன் திரும்பி “பொதுவான வண்டிகளை உள்ளே விடமாட்டார்கள்” என்றான். “என்னிடம் கர்னல் மெக்காலேயின் ஆணை இருக்கிறது… போ” என்று நான் சொன்னேன். மாத்தன் “டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்று முறைப்படி அழைத்தான்.“நான் இப்போது என்ன செய்யவேண்டும்?” “நீ மெதுவாக அங்கே வா…
-
- 4 replies
- 1.8k views
- 1 follower
-
-
பாடசாலை விட்டு வந்த சுஜீவன் அறையின் மேசையில் கிடக்கும் கடிதத்தைப் பார்க்கிறான். இது அண்ணன் கையெழுத்தாச்சே என்று எதிர்பார்ப்பை வளர்த்தபடி அவசர அவசரமாக கடிதத்தை பிரித்துப் படிக்கிறான். படித்தவன் கண்களில் நீர் வடிய மூலையில் சாய்கிறான். சுஜீவன் 12 வயசுச் சிறுவன். போரின் விளைவால் அனாதையாகிவிட்டவன். உறவினரோடு தங்கித்தான் வாழ்கிறான். எதிர்காலம் என்பது அவனைப் பொறுத்தவரை நிச்சயமில்லாததாகி விட்டது. சசி சுஜீவனின் அண்ணன். அவர்கள் இருவருமே குடும்பத்தில் மிஞ்சி உள்ளனர். தாயும் தகப்பனும் சில ஆண்டுகள் முன்னர், யாழ் குடாவில் கிளாலிக் கடற்பரப்பில் பயணிக்கும் போது, சிங்களக் கடற்படை பயணிகள் படகுமீது நடத்திய தாக்குதலில் படகோடு காணாமல் போனவர்கள் தான். இன்று வரை அவர்களின் கதி என்னவென்று யாருக…
-
- 2 replies
- 762 views
-
-
சின்னத்துரையரிண்ட கொம்பனிக்கு நியூ யோற்கில இருக்கிற ஒரு நாலு பில்லியன் டாலர் நிறுவனத்தில ஒரு இருபது மில்லியன் பவுண்ட்ஸ் கொன்ராட் பிடிக்கவேண்டும். சின்னத்துரையிரிண்ட பாஸ் நாலு பேரை இந்த முக்கிய வியாபர குழுவில் போட்டுவிட்டார். மற்றைய மூன்று பேரும் இந்த டீலை தவறவிட்டால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் சின்னத்துரையரை முன்னுக்கு தள்ளிவிட்டார்கள். பாஸ் வேற சின்னா குழறுபடி செய்துபோடாதை என்று சொல்லி வெருட்டிப்போட்டார். நியூ யோற்க்கில சின்னத்துரையர் இறங்கியவுடனேயே கையில் ஏனோ ஒரு சிறு நடுக்கம். ரூபன்ஸ்டைன்: வெல்கம் சின்னா. சின்னா: நன்றி திருவாளர் ரூபன்ஸ்டைன். ரூபன்ஸ்டைன்: நான் நினைத்தேன், இலண்டனில் இருந்து ஒரு பெரிய குழுவே வரும் என்று. சின்னா: ஒ அதுவா…
-
- 2 replies
- 889 views
-
-
அழகி - க.கலாமோகன் நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு எமது திருமணம் வலிந்தே நடத்தப்பட்டதை ஓர் காரணமாகச் சொல்லலாம். எனக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை எல்லாம் கிடைத்தபோதும் இந்தத் திருமணக் கேள்வியில் உண்மையிலேயே ஓர் குருடனாக இருந்துவிட்டேன். ஆம், திருமணத்துக்கு முன்னர் எனக்கு அவளது முகம் தெரியாது. அவளது மனத்தின் ஆசைகளும் தெரியாது. ஆம், என்னைப் பெற்றவர்கள் கேட்ட சீதனத் தொகை என்னைக் குருடனாக்கியது என்பதுதான் உண்மை. அவள் அழகி என்பதுகூட திருமண முதல் நாளில்தான் எனக்குத் தெரியும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
என்னுயிர் நீதானே... - ஒரு நிமிடக்கதை சுபாகர் என்னுயிர் நீதானே... ''சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன். …
-
- 1 reply
- 1.2k views
-
-
‘சாத்தானின் மைந்தன்’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்) 29.04.1945 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும் பயப்படுத்திவிட்டது. வெளியில் ஓடியாடித்திரிந்த அந்த அல்ஸேஸியன் நாய் கடந்த சில மாதங்களாக இந்த பங்கரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இயற்கை வெளிச்சத்தைக் கண்டே எத்தனையோ மாதங்களாகி விட்டன. பங்கரின் குறுகிய பாதைகளில் அங்குமிங்குமாகத்தெரியும் சின்ன வெளிச்சங்கள் ஏதோ ஒரு குகையில் இருட்டில் அகப்பட்ட உணர்வையே கொடுப்பதால் அந்த அல்ஸேஸியன் நாய் என்னேரமும் ஏதோ ஒரு பயத்தில் மனமுடைந்து போயிருக்கிறது. வெளிச்சமற்ற சவப்பெட்டியில் வாழ்வது போலிருப்பதாக அந்த நாய் உணர்கிறது. வெள…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி நகரம் வரவேற்கிறது பெருநிலத்தின் கதைகள் : 01 - நவராஜ் பார்த்தீபன் பெருநிலத்தின் கதைகள் என்ற இந்தப் பகுதியை குளோபல் தமிழ் ஊடகத்தில் இணைத்திருக்கும் அன்பர்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆறுதல் கொள்ளுகிறேன். பாரிய யுத்தம் ஒன்று நிகழ்த்தப்பட்டு அழிவுகளால் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட வன்னிப் பெரு நில மக்களின் வாழ்வை அவர்கள் மீட்கும் விதத்தில் தங்கள் நிலத்திற்கு திரும்பிக்கொணடிருக்கிறார்கள். இந்த மக்களுக்குள் இருக்கும் வலியுறைந்த கதைகளையும் அவர்களைச் சுற்றியிருக்கும் அழியாத நினைவுகளையும் இழந்த கனவுகளையும் அவர்களது அழகான சூழல் தகர்ந்து போனதையும் அவர்கள் வாழ்வையும் வலி கிளர்த்தும் வழிகளையும் பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்தப் பகுதி உங்களிடம் கொண…
-
- 2 replies
- 943 views
-
-
உலகச் சந்தியில்… விமானம் யேர்மனியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. எனது மனைவி தலையை என்மேல் சாய்த்தபடி நித்திரையாகி இருந்தாள். எனக்குமட்டும் நித்திரை வரவில்லை. விமானம் எமது நாட்டை விட்டு வெகுதூரம் விலகி, வேகமாக வரவர, என் நினைவு மட்டும், எதிர் திசையில் அதைவிட வேகமாகத் தாயகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நான் நித்திரைப் பாயில் எதை எதையோ யோசித்தபடியே கிடப்பன். "அம்மா, வெய்யில் குண்டியில படும்வரைக்கும் படுத்துக்கிட, என்ன பொறுப்பிருக்கு… பகல் பகலா ஊர் சுற்றுறது… இரவிரவாக காவாலியள் கடப்புளியள் மாதிரி சந்தியில நிண்டு வம்பளக்கிறது,,," என்று பேசியபடி என்னைக் கடந்து சென்றுவிடுவார். சிறிது நேரம் செல்ல… "டே... தேத்தண்ணி வைக்கவா…." "ஓமணையம்மா வை…" என்றபடி…
-
- 5 replies
- 1.4k views
-
-
வெந்த புண்ணில்... பிராங்போட் விமான நிலையத்தில், இலங்கையிலிருந்து புறப்பட்ட விமானம் தரை இறங்கிவிட்டதற்கான அறிவிப்பு மின்திரையில் எழுத்தில் ஒடீக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்த ஜெகன் 'எல்லாப் பரிசோதனையும் முடிந்து பயணிகள் வெளியேற ஒன்றரை மணித்தியாலங்களாவது செல்லும்' என்ற கணிப்பில், குட்டி போட்ட பூனைமாதிரி அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தான். இதனை அவதானித்த, விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் ஜெகனின் அடையாள அட்டையை வேண்டி, பரிசோதித்து, அதனைக் குறிப்பெடுத்த போது, ஜெகனுக்குப் பயம் ஏற்பட்டதுடன். அவனது இதயம் மேலும் படபடக்கத் தொடங்கியது. இந்நிலையில், சிறிது நேரம் செல்ல, பயணிகள் வெளியேறியபோது, தான் அழைத்துச் செல்ல வந்த ஆள் அதற்குள் வருகிறாரா என்று அவதானித்துக…
-
- 11 replies
- 1.5k views
-
-
உலகத்துக்கானவர்கள் ஒவ்வொரு நாளையும் வருத்ததுடனும் சோகத்துடனும் தொடங்கி அன்றைய நாளுக்கான அலுவல்களில் மூழ்கி (அலுவல்களில் பின்னால் ஒளிந்து கொண்டு என்பதே பொருந்தும்) சிறிது மறந்திருந்து உறங்கச் செல்லுகையில் மனதின் பாரம் பாதியாய்க் குறைந்து, மறுநாள் காலை தினமும் மறதியைக் காரணம் காட்டித் தப்ப முயலும் அக்குற்றவுணர்வு முழுவதுமாக என்னை ஆட்கொள்வதுமாகக் கழிந்த சில பல நாட்களின் முடிவாகிப் போன ஏதோ ஒரு நாளில்தான் நான் அம்முடிவை எடுத்திருக்க வேண்டும். ‘உலக நடப்புகளை இனி கவனிப்பதில்லை’ – கண்களை இறுக மூடிக் கொள்ளும் முட்டாள்தனத்தைச் செய்ய எத்தனித்தேன்…. உலகம் இருண்டு விட்டது என்று நினைக்க அல்ல; உலகமெங்கும் உவகையும் வெளிச்சமுமே நிறைந்து இருக்கிறது என்று நம்புவதற்கு…
-
- 0 replies
- 957 views
- 1 follower
-
-
சில நாட்களுக்கு முன் லா சப்பலில் வீதியில் சென்று கொண்டிருந்தேன். போகும் பாதையில் ஒரு கூட்டமாக இருந்தது. நடுவில் இரு பெண்கள் (பிரெஞ்சுக்காரர்கள்) வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். காதுக்கு எட்டியவரையில் அவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்பதும் நீண்டநாளாக அவர்களுக்குள் பிரச்சினை இருப்பதும் தெரிந்தது. அனைவரும் ஒரே அலுவலகததில் வேலை செய்பவர்கள் என்பதும் அலுவலகத்தை விட்டு வீதியில் நின்று பிரச்சினைப்படுகிறார்கள். மீதிப்பேர் சமாதானப்படுத்துகிறார்கள் என்பதும் தெரிந்தது. அவர்களைக்கடந்து போய் சில செக்கன்களில் பெரும் அவலக்குரல் கொண்டு ஒரு பெண் கத்துவது கேட்டது. தானாடாவிட்டாலும் சதையாடும் அல்லவா?. திரும்பி வந்தேன். ஒரு பெண் மேலாடை கி…
-
- 10 replies
- 2.6k views
-
-
"உயில்" - சிறுகதை - ஆக்கம்- ஆதவி 22/12/2008 -------------------------------------------------------------------------------- என்னடா.... ஊருக்குப் போறதாச் சொல்லீட்டு, வேலைக்கு வந்து நிக்கிறாய்? என்ன நடந்தது?' - வசந்தன்தான் ஆதங்கத்துடன் கேட்டான். 'என்னத்தையடா சொல்றது..?அப்பா இப்படிச் செய்வாரெண்டு கனவிலையும் நான் நினைக்கேல்லையடா... இந்தா....இதை வாசி; விளங்கும்......' என்றபடி, நேற்றைய தினம் பதிவுத் தபாலில் வந்திருந்த மடலினை அவனிடம் கொடுத்து விட்டு நான் அப்பால் நகர்ந்தேன். குளிர் காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. அதை விட வேகமாக என் மனதில் நினைவுப்புயல் அடித்துக் கொண்டிருந்தது. வேலை தொடங்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. சரியாக இதே நேரத்துக்கு இன்று வானில பறந்து…
-
- 1 reply
- 1.4k views
-
-
காலத்துயர் காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தனிமை உணர்வைச் சதா புதுப்பித்துக்கொண்டே இருந்தது... உலகின் ஏதோ ஒரு மூலையில்... எங்கோ ஒரு நாட்டில்... தன்னுடைய வாழ்வு இப்படிப் போகுமென்று அவன் கனவு கூடக் கண்டதில்லை. ஒரு காகத்தின் கரைதல்... சேவலின் கூவல்... குருவிகளின் சங்கீத ஓசை... குயில்களின் இனிய பாடல் எதுவுமேயற்ற ஒரு பாலைவனச் சிறையில் அவனுடைய வாழ்வு... வெளிச்சமென்றால் என்னவென்று புரியாத யன்னலற்ற நான்கறைச் சுவரினுள் ஒவ்வொரு இரவுகளும் பேரிரைச்சலாக விரட்ட... மௌனப் பூதங்களுடன் அவனுடைய வாழ்வு... இனம்புரியாத ஒரு மரணப் பீதியுடன் வேற்…
-
- 3 replies
- 1.2k views
-
-
எழுத்தாளர் முனிராஜின் S பட்டன் - சிறுகதை அதிஷா, ஓவியங்கள் ஸ்யாம் இது ஒரு கணினியின் கதை. ஒரு கணினிக்காக எழுதப்படும் கதை. அதே கணினியில்தான் இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தக் கணினி என்னுடையது அல்ல… பிரபல எழுத்தாளர் முனிராஜுடையது. என்னைப் போலவே 90-களில் வளர்ந்த இளைஞர்கள் பலருக்கும் எழுத்தாளர் முனிராஜ் மிகப்பெரிய ஆதர்சம். அவருடைய துள்ளலான கதைகளும், தீராத இளமைத்துடிப்புமிக்க எழுத்து நடையும் வாசிக்கிற யாரையுமே உள்ளே இழுத்து, நான்கு சாத்து சாத்தி, கை வாயைப் பொத்தி, அடிமையாக்கி உட்காரவைத்துவிடும். அப்படி உட்காரவைக்கப்பட்ட பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன். முனிராஜ், முழுநேர எழுத்தாளர் எல்லாம் இல்லை. மருந்து ஆராய்ச்சி நிறுவன அதிகாரி. அவரின…
-
- 0 replies
- 2.1k views
-
-
சுகுணாவை கேட்காதே ரிஷபன் சுகுணாவைப் பார்க்கவே தயங்கினேன். என்ன பதில் சொல்லப் போகிறேன் "ஹலோ ரவி.." என்றாள் "ஹலோ.." என்று முனகினேன் "என்ன.. உடம்பு சரியில்லையா" "நத்திங். சும்மா" அவள் போய் விட்டாள் பக்கத்து இருக்கை முகுந்தன் என்னைப் பார்த்து கண்ணடித்தான் "என்னடா அமுக்கமா இருந்துகிட்டு அவ வலையிலே மாட்டிகிட்டியா..." போச்சு இனி அலுவலகம் முழுக்க இவனே செய்தியைப் பரப்பி விடுவான். நான் பதில் சொல்லத் தயங்குவது அவனுக்கு வேறு யூகங்களைக் கொடுத்திருக்கும் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தானே தெரியும் சுகுணாவைப் பற்றி எங்கள் மத்தியில் பரவலாய் ஒரு பேச்சு உண்டு. யாராவது மாட்டினால் விடமாட்டாள். சுத்தமாய் 'மொட்டை'யடித்து விடுவாள…
-
- 1 reply
- 604 views
-
-
ஒரு நிமிடக் கதை: அதுதான் காரணம் ‘‘இதப் பாரு விஜி. என்ன சொல்லுவியோ தெரியாது. உங்க அம்மாவை ஊருக்கு கிளம்பச் சொல்லு’’ - கத்தினான் ரமேஷ். ‘‘எங்க அம்மான்னா உங்களுக்கு இளக்காரமா போச்சோ?’’ - பதிலுக்கு கேட்டாள் விஜயா. வெளியே சென்று தண்ணீர்ப் பானையை தூக்கி வந்த விஜயாவின் அம்மா கங்கா, இவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ந்து போனாள். விஜயாவுக்கு தலைப் பிரசவம் முடிந்து பச்சை உடம்புக்காரி என்பதால் அவளுக்கு சில நாட்கள் துணையாக இருக்கலாம் என்று கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தாள். தான் இங்கே இருப்பது மருமகனுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்த…
-
- 3 replies
- 733 views
-