கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
நானும்... எனக்கும், நீயும்... உனக்கும் என்ரை வீட்டுக்கிச்சின் ஜன்னலை முறுக்கி விட்டா முன்வீட்டு முற்றத்திலே நடக்கிறது எல்லாம் அப்படியே தெரியும். இப்ப நல்ல வெயில் காலம் முன்வீட்டு மனுசி வெளியிலே வந்து பூக்கண்டுகளுக்குள்ளே புல்லுப்புடுங்கும், மரங்களை வெட்டும், சாடிகளை மாற்றும, கொத்தும். புரட்டும் வெயில் வந்தா மனசி சும்மா இருக்க மாட்டாது. அதிகாலை வேலைக்குப் வீடு திரும்ப எப்படியும் ஒரு எட்டு மணியாகும். தோட்டத்திலே நிண்ட மனுசி எனக்கு கையைக் காட்டியது. என்ன இவ்வளவு வேளைக்குத் தொடங்கிவிட்டாய்.... கிறேற்ரா, என்று பக்கத்தில் போய் விசாரித்த போது.... இந்த வீக்கன் என்ரை மகன் தன்ரை ஆளோடு வாறான் அது தான் கொஞ்சம் வடிவா இருக்க வேண்டும்.... நல்ல வெய்யில்........தானே, வேளைக்கே தொ…
-
- 4 replies
- 1.6k views
-
-
மாற வேண்டாம்! சாரு தன் கணவர் மாதவனைப் பற்றி இப்படித்தான் புலம்புவாள்...‘பெரிய கம்பெனியில் ஜெனரல் மேனேஜர்னு பேர். என்ன சம்பளம் வாங்கி என்ன புண்ணியம்? மனுஷன் எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டார். வீட்டுக்கு அரிசி, பருப்பு கூட கெமிக்கல் பேலன்ஸில் அளந்து அளந்து வாங்குவார்... தரித்திரம்! மாப்பிள்ளை, பொண்ணுங்க விசேஷம்னு வந்தா கூட இருக்கறதுலயே மலிவான ரகத்துல துணிமணி வாங்கித் தருவார்.’ ‘‘ஏங்க, போகும்போது பணத்தை தலையில கட்டிக்கிட்டா போகப் போறோம்? கொஞ்சம் தாராளமாத்தான் செலவழியுங்களேன்!’’ என்றாள் ஒரு நாள்.மாதவன் புன்னகைத்து பதில் சொன்னார்... ‘‘என் குடும்பம் ரொம்பப் பெருசு!’’‘‘இருந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. இதுக்கு மேல யாருக்கு சம்பாதிக்கணும்? …
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரபு (எ) பிரபாகரன்! Wednesday, 17 September 2014 10:52 தொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி பிரபாகரன் முதன்முறையாக இறந்து போயிருந்தார். உலகில் மிகச்சிலரைத்தவிர ஏனைய மனிதர்கள் எப்போரும் முதற்தடவையிலேயே இறுதியாகவும் இறந்துபோய்விடுகிறார்கள். பிரபு என அழைக்கப்பட்ட பிரபாகரனும் அப்படித்தான் முதலும் கடைசியுமாக இறந்திருந்தார். செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதாக இருந்திருக்கலாம். சாகிற வயதா இது என்றெல்லாம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏராளமான மரணச் செய்திகள் தாக்கியவாறிருந்த காலப்பகுதி அது. சின்னட்டித் தாத்தாவைப் பார்க்கும்தெல்லாம் அப்படியே இவருக்கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
இத்தாலிய சியாமா செட்டி குண்டு வீச்சு விமானங்கள் குத்தியடிச்சு குண்டு போட்ட காலமெல்லாம்.. போய் ரஷ்சிய மிக்-27 லேசர் வழி பாதை காட்ட உயர இருந்தபடி குண்டு வீசும் காலமெல்லாம் கண்ட அந்தக் கவிஞனின் ரங்குப்பெட்டியும் முள்ளிவாய்க்கால் மணல்களிடை அநாதை பிணங்களோடு பிணமாய்க் கிடந்திருக்க வேண்டும். அதற்குச் சாட்சியாய் இரத்தக் கறைகளோடு கறள் கட்டி இருந்தது அது. காலில் தட்டுப்பட்டதற்காய் அதன் கவனம் என்னைக் கவர... திறந்து பார்த்தேன்.. செக் குடியரசின் மல்ரி பரல்கள் வீசிய எரிகுண்டுகளின் கந்தக வாசம் மூக்கை எரித்தது. இத்தாலிய தயாரிப்பில் ராஜீவின் ஊழலில் கிடைத்த போர்பஸ் பீரங்கிகள் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் வெடித்துத் தள்ளிய எறிகணைகளின் சிதறல்கள் பட்டு ஏற்பட்டிருந்த துவாரங்கள் வழி ம…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார் . விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் . ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் . ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் . அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் .. அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் "இந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
பிறந்த மண் அப்பா, நான் இந்தியாவுக்கு வரமாட்டேன். வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது இருளப்பன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மாணிக்கத்தேவரை நிலைகுலையச் செய்தன. இலங்கைக்கு வந்து நாற்பது வருட காலமாக மரகதமலைத் தேயிலைத் தோட்டத்தில் தனது வாழ்நாளின் முக்கிய பகுதியைக் கழித்துவிட்டு இப்போது தாய்நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்ட மாணிக்கத்தேவர், கடைசி நேரத்தில் தன் மகன் இப்படியான அதிர்ச்சி தரும் முடிவுக்கு வருவானென எதிர்பார்க்கவேயில்லை. மாணிக்கத்தேவர் இந்நாட்டிலே வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடவில்லையென எண்ணும்படியாக அவரிடம் இருந்த ஒரேயொரு செல்வம் அவரது மகன் இருளப்பன்தான். …
-
- 4 replies
- 1.6k views
-
-
உதவி ‘‘பத்மா, இந்த ‘பேன்ட் ஷர்ட்டெல்லாம் பழசாயிடுச்சு.. அக்கம் பக்கத்து ஏழைங்களுக்குக் குடுத்துடு!’’‘‘என்ன பீரோவுல பழைய புடவை நிரம்பி வழியுது? ஒவ்வொண்ணா எடுத்து வேலைக்காரிக்குத் தந்துட வேண்டியதுதானே!’’ - இப்படித்தான் சொல்வார் கார்த்திகேயன். ஆனால் இன்று அவரே சொல்கிறார்... வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துணிமணிகள் கொடுக்க வேண்டாமாம்!பத்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்னாயிற்று இவருக்கு?’ கேட்டே விட்டாள். ‘‘என்னங்க... கட்டின துணியோட உயிர் பிழைச்சா போதும்னு நடுரோட்டுல வந்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க ஜனங்க. சாப்பாடு இல்ல... குடிக்கிற தண்ணி இல்ல... பலவீனப்பட்டு வேதனையோட நிக்கிறாங்க. எப்பவும் பழைய துணிகளைக் கொடுக்கச் சொல்ற நீங்க இப்ப வேண்டாம்ங்கறீங்களே ஏன்?’’ …
-
- 1 reply
- 1.6k views
-
-
கனகுராசா கக்கூசுக்குப் போகிற வழியில், கையில் வைத்திருந்த தண்ணீர் வாளி முழுவதுமாகத் துருப்பிடித்திருந்தது. அதன் ஓரங்களிலும் உள்ளேயும் பாசி பரவி பச்சைக் கலரிலிருந்தது. அவர் வெறும் மேலுடன் நின்றார். பழைய சவுதி சாரமொன்றை துாக்கிக் கட்டியிருந்தார். கக்கூசு வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்தது. பழைய காலக் கக்கூசு, யாழ்ப்பாணத்திற்கு கக்கூசுக் கலாச்சாரம் வந்தபோது அவரது ஐயா ஊரில் முதலாவதாகக் கட்டிய கக்கூசு அது. கிணற்றடியில் இருந்து இத்தனை முழத்திற்கு அப்பால் இருக்க வேண்டுமென சுகாதார அலுவலர்கள் அப்போது அறிவுறுத்தினார்கள். அருகாக இருந்தால் தண்ணீரில் மலக்கிருமிகள் பரவுமாம். கனகுராசரின் ஐயா அதற்கேற்ப பின்கோடியின் மூலையில் அதனைக் கட்டினார். அதற்குப் பின்புறத்தே வேலியிருந்தது. வேலிக்கு …
-
- 14 replies
- 1.6k views
-
-
புதிதாக வாங்கிய ·பியட் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நான் போய்க் கொண்டிருப்பது சசிதரின் வீட்டிற்கு. கார் வாங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. வேலைமெனக்கெட்டு அவன் வீட்டுக்கு போவதற்கான காரணம், நான் கார் வாங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரிய வேண்டுமென்று தான். அதனால் நண்பர்களை, எடிட்டர்களை, என் நலனில் அக்கறை கொண்டவர்களை எல்லோரையும் விட்டுவிட்டு முதல் முதலில் அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். ஏன் என்றால் அவன்தான் என்னுடைய முதல் எதிரி என்பதால். நாங்கள் இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொள்வோம். இலக்கியக் கூட்டங்ளில் சொற்பொழிவு ஆற்றுவோம். அவன் என்னைப் புகழ்ந்து பேசுவான். நான் அவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் உள்ளூர நான் அவனை வெறுத்துக் கொண்டிருந்ததேன். அவனும் என்னை வெறுக்…
-
- 5 replies
- 1.6k views
-
-
வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன் ஓவியங்கள் : ரமணன் வாப்பா தன்னுடைய ஆறாவது மகளின், அதாவது என்னுடைய வீட்டை அபீர் தெருவின் கடைக்கோடியில் கட்டி முடித்தார். அப்போது வாப்பாவுக்கு இன்னும் ஒரேயொரு வீடு மிச்சமிருந்தது. தங்கை பஷீராவின் வீட்டைக் கட்டி அவளுக்கொரு துணை தேடிக் கொடுத்துவிட்டால் வாப்பா சந்தோஷமாக ஹச்சுக்குப் புறப்பட்டுப் போய்விடுவார். அந்தப் புனிதமான யாத்திரையைக் காட்டிலும். கடமையைக் காட்டிலும் தன்னுடைய மகள்களுக்கு நல்ல ஒரு வரனும் ஒரு வீடும் அமைத்து கொடுப்பதைத்தான் வாப்பா தன்னுடைய வாழ்வின் அர்த்தமென்று கருதியிருந்தார். நான் இவரை மணமுடித்த பிறகு, வாப்பாவைப் பார்க்க அபீர் தெருமுனையிலிருந்த எங்களுடைய வீட்டுக்கு மூன்று மாதங்கள் கழித்து போயிருந்தப…
-
- 0 replies
- 1.6k views
-
-
புலம் பெயர் ஆரம்ப காலகட்டத்தில் ஊரிலிருந்து யாருக்காவது கலயானமாம் என்று கடிதம் போட்டால் அந்தக்கடிதம் இங்கு வந்து சேரும் போது அவருக்கு குழந்தை பிறந்திருக்கும். தொலை பேசுவதானால் யாரும் கொழும்புக்கு வந்தால்தான் உணடு அப்படி ஒரு தொடர்புகள் குறைந்த காலகட்டத்தில் வாழ்ந்த எமக்கு ஊருக்கு போய்வரக்கூடிய ஒரு நிலமையை உருவாக்கியது சமாதன காலம். இந்த வாய்ப்பு பலருக்கு தங்கள் ஏக்கங்களை தீர்க்க ஓரளவாவது உதவியது.தம் பெற்றோர்,சொந்தங்கள்,நன்பர்கள்,தவழ்ந்து திரிந்த முத்தம் தொடக்கம் காதல் கடிதம் கொடுக்க காத்திருந்த ஒழுங்கைவரை என பார்க்க பழக என ஊர் போய் வந்தார்கள். ஆனால் இந்த வாய்ப்பை எல்லாரும் மேற்ச்சொன்ன காரனங்களுக்காக மட்டும்தான் பயன்படுத்தினார்கள் என்று சொல…
-
- 12 replies
- 1.6k views
-
-
. என்ரை பிள்ளையளை எடுங்கோ நான் அவரோடை போப்போறன். அவளுக்கு வயது 28. 3குழந்தைகள். மூத்த குழந்தைக்கு வயது 11. கடைசிக் குழந்தைக்கு வயது 5. அவளைவிடவும் 12வயதால் மூத்த அவளது கணவன் தடுப்பில் இருக்கிறான். பிள்ளைகளை உறவினருடன் விட்டுவிட்டு…., வவுனியாவில் பெண்கள் சிலருக்காக ஒரு நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அவள் வேலையில் இணைத்துக் கொள்ளப்பட்டாள். வாரத்தில் 2நாட்கள் வேலை வழங்கிய இடத்திலிருந்து விடுமுறை அவளுக்கு. அந்த நாட்களில் ஊருக்குப் பிள்ளைகளைப் பார்க்கப் போய்விடுவதாகப் போய்விடுவாள். திங்கள் காலை அல்லது ஞாயிறு இரவு திரும்பும் போது தனது வளவு மரக்கறிகள் என பெரிய சுமையோடு திரும்புவாள். திங்கள் முதல் வெள்ளி வரை வேலையில் இருப்பாள் பொழுது இருண்டா…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒரு நிமிடக் கதை பொண்டாட்டிதாசன் ‘ஏய், ரமா! பேங்க்ல நம்ம ஜாயின்ட் அக்கவுன்ட்ல இருந்து என்னைக் கேக்காம பத்தாயிரம் பணம் எடுத்திருக்கே... என்ன நீயும் சம்பாதிக்கிறேங்கற திமிரா?’’ - கோபம் கொப்பளிக்கக் கேட்டான் மாதவன்.‘‘ஆமா, எடுத்தேன். அதுக்கு எதுக்கு கேக்கணும்? தாலியைக் கட்டிட்டா நான் உங்க அடிமையா? ஈக்வல்-ஈக்வல் பார்ட்னர்!’’ - வெடுக்கென்று பதிலளித்தாள் ரமா. அவன் பேச, இவள் பேச, வாக்குவாதம் வளர்ந்துகொண்டே போனது.எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருந்த ரமாவின் மாமியார் செல்லம்மாள், ‘‘என்ன நீ! புருஷன்னு கொஞ்சம்கூட மரியாதையில்லாம சரிக்கு சரியா வாயாடிட்டு இருக்கே?’’ என்றாள் அதட்டலாக! இருவரையும் முறைத்துவிட்டு வேகமாய் உள்ளே போனாள் ரமா. அன்றிரவு படுக்கையறையில்.‘‘ரமா,…
-
- 1 reply
- 1.6k views
-
-
உயிருக்காய் தன் உயிரை........ சிறுகதை.... எம் தாய் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நடந்துவிட்ட, நடந்து கொண்டிருக்கும் நடக்கப்போகும் இது போன்ற தியாகங்களால் நடந்தேறும் உண்மைச் சம்பவங்களை சிறிது கற்பனை கலந்து தந்திருக்கிறேன் ''எவ்வளவு நேரமாய் இவவை பார்த்துக்கொண்டு நிக்கிறது ஒரு நாளைக்கு ரியுசனுக்குப் போகாட்டி என்ன செத்தாபோயிடுவ'' என்று தனக்குள்ளே யாழினியைப் பேசிக்கொண்டான் ஆதவன். அந்த ஒடுங்கிய ஒழுங்கையில் இருபக்கமும் உள்ள பனை வடலியொன்றில் தனது சயிக்கிலை சாத்திவிட்டு வெள்ளை மணலில் தனது சயிக்கிலுக்கு பக்கத்தில் உட்கார்ந்தான் அவன். சிறிது நேரம் செல்ல பொறுமையிழந்தவனாய் சயிக்கிலையும் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் சென்றதும் யாரோ கூப்பிடுவது கே…
-
- 6 replies
- 1.6k views
-
-
கவனம் வங்கியில் ரொம்பவே கூட்டம்... நெரிசல் குறையட்டும் என்று ஓரமாக நின்ற மைதிலியை நெருங்கினார் ஒரு டிப் டாப் ஆசாமி. ‘‘என் மூக்குக் கண்ணாடியை கார்ல விட்டுட்டு வந்துட்டேன்... கொஞ்சம் இந்த சலானை பூர்த்தி செய்து தர முடியுமா?’’ என பணிவாகக் கேட்டார். ‘‘சாரி சார்! நான் பேங்க்ல பணம் கட்ட வந்திருக்கேன். இப்ப உங்களுக்காக செலான் எழுதிக்கிட்டிருந்தா என் கவனம் சிதறும். அதைப் பயன்படுத்தி யாராவது பணத்தை அடிச்சிடலாம். மன்னிச்சிடுங்க... என்னால முடியாது!’’ - உறுதியான குரலில் மறுத்தாள். மறுநாள்... இன்டர்வியூ ஹால்... தன்னுடைய முறை வந்தவுடன் உள்ளே நுழைந்த மைதிலி, வங்கியில் சந்தித்த அதே டிப் டாப் ஆசாமி இன்டர்வியூ குழுவில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். நிச்சயம் தனக்கு வேலை …
-
- 0 replies
- 1.6k views
-
-
நல்லவர் ‘‘அப்பா, நான் ஆபீஸ்ல ஒருத்தரை லவ் பண்றேன். அவர் ரொம்ப நல்லவர்!’’‘‘ம்...’’‘‘முதல்ல கோயிலுக்குப் போகலாம்னு சொல்லிட்டு என்னைக் கூட்டிட்டுப் போனார். போன் பண்ணி அவர் அம்மாவையும் வரச்சொல்லியிருக்கார். அவ்வளவு டீசென்ட்டான டைப் அவர்...’’‘‘ம்...’’ ‘‘சினிமாக்குப் போகலாம்னு சொல்லிட்டு அவர் தங்கையையும் கூட கூட்டிட்டு வந்து எங்க ரெண்டு பேர் சீட்டுக்கும் நடுவுல அவளை உட்காரச் சொன்னார். ஹி ஈஸ் எ ஜென்டில்மேன்!’’ ‘‘ம்ம்...’’ ‘‘நீ முதல்ல உங்க அப்பாகிட்ட பேசு! அவர் ஒத்துக்கிட்டா முறைப்படி எங்க வீட்ல எல்லாரையும் கூட்டிக்கிட்டு முறைப்படி வந்து பேசறேன்னு கண்ணியமா சொன்னார், தெரியுமா?’’‘‘ம்ம்ம்...’’ ‘‘என்னப்பா இது? நான் பாட்டுக்கு அவரைப் பத்தி சொல்லிக் கிட்டே போறேன்.…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்...... சிறுகதை: யோ.கர்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் ஆதிரைக்குவிரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே. வாறவன் எப்படிப்பட்டவனோ? இவள் படிக்கிற காலத்தில ரைப்பிங் பழகின வள்தான். அப்போது எல்லாம் இல்லாத வேகம் ரைப்ரைற்றர் இல்லாத இந்த நேரத்தில வருது. என்ன இருந்தாலும், இவள் லேசாகப் பயந்த பெட்டைதானே. இப்படி ஒரு காட்டுக்குள் முந்திப்பிந்தி பெட்டை உள்ளட்டதே கிடையாது. இவளின்ர இடம் முள்ளியவளை. முள்ளியவளை யில் இருந்து நெடுங்கேணிப் பக்கம் போனாலோ, குமுழ முனைப்பக்கம் போனாலோ, அல்லது காட்டுவிநாயகர் கோயிலடி கழிந்தாலோ காட்டைப…
-
- 6 replies
- 1.6k views
-
-
Thursday August 2, 2007 கௌசல்யா மட்டுவில் ஞானக்குமாரன் அவள் ...! இவளைப் போல பெண் மணிகளை ஊர் உலகிலே கண்டிருப்பீர்களா ? இவளைப் பற்றி பேசும் போதெல்லாம் இப்படியே எனக்கு எண்ணத் தோன்றும். எனது முதல்ப் பார்வையிலே எந்த விதமான அலைகளையும் என் கவனக் குளத்திலே அவள் ஏற்ப்படுத்தவில்லை ஆனால் பின்னொரு நாளிலே இந்தக் குளத்திலேயே சுனாமியை வரவளைத்தவள். ஆனாலும் இவள் வித்தியாசமானவள். யாராவது அவளுக்காக பரிந்து பேசினால்க் கூட அதைப்பற்றி எள்ளளவும் அக்கறையும் பட மாட்டாள.; அதே போல சினம் வந்து அவள் மீது யாராயினும் சுடு சொல் கொண்டு திட்டினாலும் கூட எக் குறையும் படமாட்டாள். என்னடா இவள் பாலுக்கும் கள்ளுக்கும் பாகுபாடு தெரியாமல் எல்லோரையும் நம்ப…
-
- 4 replies
- 1.6k views
-
-
விடுதலை வேட்கை கொந்தளிக்கும் ஒரு தேசத்தின் வெறுமனே காற்றில் ஆடும் ஒரு போராளியின் குண்டு துளைத்த சட்டை, விலைமதிப்பற்றது. அது காணும் எண்ணற்ற இதயங்களில் புரட்சியின் விதைகளைத் தூவிச் செல்லும். சே குவேராவின் திறந்த விழிகளும் அங்கே அப்படித்தான் இருந்தன! தென் கிழக்கு பொலிவியாவின் வாலேகிராண்டேவில், ஒரு பள்ளிக்கூட வளாகத்தில், 1967, அக்டோபர் 9-ம் தேதியன்று குண்டுகளால் துளைக்கப்பட்ட சேகுவேராவின் உடல் கிடத்தப்பட்டது. திறந்துகிடந்த அவரது விழிகளில் இரண்டு நட்சத் திரங்கள் இடையறாது மின்னுவதைப்போல உணர்ந்ததாகச் சொன்னார்கள். தான் இங்கே விதையாகக் கிடத்தப்பட்டுள்ளோம் என்ற அவரது பேருணர்வின் மிச்ச ஒளியாகக்கூட அது இருந்திருக் கலாம்! இன்றும் பெருநகரச் சாலைகளில் எதிர்ப்படும் ஏராளமா…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஆறாங்குழி கதைகள் இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் பெரிய மீன்பிடிக் கப்பலில் வேலை செய்கிறேன். கப்பலோடு சமுத்திரத்திற்குள் இறங்கினால், ஒரு வாரம் முழுவதும் சமுத்திரத்திற்குள்ளேயே இருந்து, தொன் கணக்கில் …
-
- 6 replies
- 1.6k views
-
-
கம்பியூட்டர் மவுசை பிடிக்க தெரியாத ஒரு கால கட்டம் 2001 அல்லது 2002 ஆண்டு என்று நினைக்கிறேன் . தட்டி தடுமாறி கஸ்டப்பட்டு தடுமாறி இணைய பக்கங்களில் வலம் வந்த பொழுது யாழ் இணையம் அகப்பட்டது . அதில் அழகு தமிழில் விவாதம் செய்து கொண்டிருந்தனர் .அதை ரசித்து ஆச்சரிய படுவதுடன் எப்படி என்று ஆவல் மேலோங்கியது . முயன்று பார்க்க முடியாமா என்ற ஆதங்கமும் இயலாமாயுமே முதலில் ஏற்பட்டது . அவ்விணையத்தில் குழந்தை பிள்ளை கூட தமிழில் எழுத கூடிய மாதிரியான பொறிமுறையை அவர்கள் அமைத்து வைத்திருந்தமையால் வாழ் நிலை ஓட்டத்தில் இந்த கம்பியூட்டருடன் எதுவும் சம்பந்த படாத இதுவும் தமிழ் எழுதி பார்த்தது ..அவ் இணையத்தின் சக நண்பர்களுடன் கதைத்து பார்த்தது ..மெல்ல மெல்ல தயக்கத்துடன் விவாதித்து பார்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
அன்றொரு நாள் ஒருவன் தனிவழிப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்க, அப்பொழுது ஆங்கொரு பாறையின் கீழொரு பாம்பு சிக்கிக்கொண்டிருக்க, அவனதைக் காக்க, பாறையை நகற்றினால் பாம்பு கடிக்குமா அன்றி நன்றி சொல்லி நகருமாவென யோசித்து, பின் அப்பாறைதனை நீக்கி பாம்பைக் காப்பற்ற, அப்பாம்பானது அவனை நோக்கி, "இவ்வளவு நேரம் எனைக் காப்பாற்றாமல் ஏன் சிந்தித்தாய்? நானுன்னை கடிக்கப்போகிறேன்!" எனக் கூறி அவனை நெருங்க, அவனோட, அது விரட்ட, அவ்வழிவந்த நரியொன்று, "ஏனய்ய ஓடுகின்றனை? அரவமே ஏனவரைத் துரத்துகின்றனை?" என வினவ இருவரும் தங்கள் வழக்கை முறையிட, தனக்கு விளங்கவில்லை ஆரம்பமுதல் தெளிவாகச் செய்து காட்டுங்கள் என கேட்க, அவனோ மறுபடியும் பாம்பை அந்தப் பாறையின் இடுக்கில் வைத்து விட்டு தான் முதலில் வந்த பாதைவழியே…
-
- 4 replies
- 1.6k views
-
-
கருப்பி என்ட உடனே எங்கட கருப்பி என்டு நினைக்க வேண்டாம் இத வேற கடவுளே, இன்னைக்காவது வேலை கிடைக்கணும்...' மனதுக்குள் உருக்கமான வேதனையுடன் அவன் வேண்டுதல்.. அது கடவுளை சென்றடைந்ததா என்று காத்திருந்து பார்ப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. இடது கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தவன் மேலும் அவசர அவசரமாக .. நடக்கலானான்.. கோயில் வாசல்.. கழற்றிவைத்த பாதணிகளை பெறுவதற்கு அந்தப் பையனை வேறு காணவில்லை.. 'எங்க போனான் இவன்?' என்று யோசித்துக்கொண்டிருந்தவனி
-
- 6 replies
- 1.6k views
-
-
-
அண்மைக்காலச் சிறுகதைகள் இமையம் மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும். மனித சமூகம் பல்வேறு நிலைகளைக் கடந்து படிப்படியாகப் பல வளர்ச்சிகளைப் பெற்று இன்றும் பெரும் நம்பிக்கையுடன் பூமியில் காலூன்றி நிற்பதற்குக் கற்பனையும் கதை சொல்லும் முறையும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. கதையில்லை என்றால் கற்பனை இல்லை. கற்பனை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. வாழ்க்கைக்கு உயிர்ச்சத்தாக இருப்பது கற்…
-
- 0 replies
- 1.6k views
-