Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. பருப்பு கோமகன் குரங்கு அப்பம் பிரித்த கதையாக சமாதானம் பேசவந்தோம் என்று அந்நியப்படைகள் ஈழ மண்ணில் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்த காலத்தில் எல்லரோரையும் போல பருப்பின் வாழ்கையிலும் இரண்டு பெரிய சூறாவளிகள் அடித்து பருப்பின் வாழ்கையையே புரட்டிப்போட்டன. கோண்டாவிலிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெடியளுக்கு கதிரவேலர் ஓர் கடவுளாகவே இருந்தார். அந்த நேரத்தில் அமைதிப்படைகள் நடத்தும் சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகும் பெடியளை, கதிரவேலர் தனது ஆங்கில அறிவாலும், பிரைஜைகள் குழுவின் தலைவர் என்ற முறையிலும் அமைதிப்படை முகாம்களுக்கு சென்று கைதான பெடியளை மீட்டு வருவதுண்டு. இந்த தொடர்பால் அமைதிப்படைக்கும் கதிரவேலருக்கும் ஓர் சிநேகபூர்வமான தொடர்புகள் இருந்தது. கதிரவேல…

    • 2 replies
    • 1.2k views
  2. Started by nunavilan,

    கெட்ட குடி! இன்று காலையில் எழுந்ததிலிருந்து எத்தனை தடவைதான் பாக்கியம் சாமியறைக்குட் சென்று தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை வணங்கிவிட்டாள். இதற்குமுன் எத்தனையோ தடவைகள் நடந்துபோன சம்பவங்கள் எல்லாம் அவள் மனதில் அலையலையாக வந்து திரும்பிக்கொனண்டிருந்தன.படலையருகில் நின்று நோட்டமிட்டுக்கொண்டிருந்த பாக்கியம் சலித்துப் போனவளாய் மீண்டும் சாமியறைக்குட் செல்கின்றாள். "அப்பனே பிள்ளையாரே! இந்தத் தடவையெண்டாலும் எந்தத் தடங்கலுமில்லாமல் இந்த வரன் அமைஞ்சி என் மகள் கீதாவோட வாக்ழ்கைக்கு ஒரு வழி பிறக்க நீதானப்பா துணை செய்ய வேணும்" என்றிவ்வாறாக பிரார்த்தித்துக்கொண்டாள் பாக்கியம். மீண்டும் படலையண்டைச் செல்கின்றாள். வீதியில் சென்று தன் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்வையைச்செலுத்துகின்றாள்.ஏம…

    • 2 replies
    • 866 views
  3. சீனாவில் எப்படி பாட்டி வடை சுட்ட கதை! - பேரா.பர்வீன் சுல்தானா https://www.facebook.com/video/video.php?v=10202785308383005

    • 2 replies
    • 3k views
  4. Started by KULAKADDAN,

    கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திர…

    • 2 replies
    • 1.2k views
  5. புறாப்பித்து - சிறுகதை சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது. இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். புறா என்றாலே காதலுக்குத் தூது விடுவது என்ற கற்பனையில் அமிழ்ந்து போயிருப…

  6. பிரபு போட்ட திட்டம் பலிக்கத் தொடங்கியது, இருவரும் ஒரு நன்நாளில் கடை திறந்தார்கள் வியாபாரமும் நன்றாக நடந்தது காலங்கள் ஓடிக்கொண்டே இருந்தன விஷ்ணுவுக்கு அவனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள், திருமணம் முடிந்து ஆறுமாதம் கூட ஆகவில்லை விஷ்ணுவின் மனைவி வைதேகி உன் பெற்றோருடன் இருக்க முடியாது ஒன்றில் நான் இருக்க வேணும் இல்லாட்டி அவை இருக்க வேணும் என்றாள் விஷ்ணு என்ன செய்வதென்று யோசித்தான் மோகம் அவன் கண்களை மறைத்தது தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவெடுத்தான், ஒரு அநாதையான தன்னை எடுத்து வளர்த்து ஆளாக்கிப் பார்த்த தன் பெற்றொருக்கு துரோகம் செய்தான் அவர்கள் எவ்வளவு சொல்லியும்,கெஞ்சியும் கேட்காமல் மனைவி சொல்லே மந்திரம் என்று அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து …

    • 2 replies
    • 1.8k views
  7. நன்றி: விகடன் இணைப்பு: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90628 எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால்... அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும். 35 வருஷங்களுக்கு முன்னால் அங்கே அந்தத் தெருவில் ஒரு பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிரகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, 25 வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங…

  8. பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்... 300-ரூபாய் 200-ரூபாய்க்கு வருமா ? சற்று யோசித்த ஆட்டோ டிரைவர் சரி 250-ரூபாய் கொடுங்க... பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது. அண்ணே இந்த வழியா போனா நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...? ரோட்டுக்கடைதான் சார் அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே, நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு விட்டு போகலாம். இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது. ஒரு நடுத்தரவயது அம்மா, …

    • 2 replies
    • 1.4k views
  9. கதை சொல்லவா? 10/ தியா காண்டீபன் - பவா செல்லத்துரை அவர்கள் எழுதிய "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" சிறுகதை.

    • 2 replies
    • 917 views
  10. [size=3] பெண்களை விளங்கிக் கொள்ள முடியாது என்பார்கள். எனாக்கு சின்ன விடயங்களையே விளங்கிக் கொள்ள முடிவதில்லை, இந்த லட்சணத்தில் பெண்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கூடத்தில் வாத்திமார்கள் உனக்கு படிப்பை தவிர மிச்சம் எல்லாம் ஏறும் என்று அடிக்கடி அன்பாக ஆசிர்வாதங்களை வாரி வழங்குவார்கள்.[/size][size=3] எங்களது கல்லூரி ஆண்களால், ஆண்களிற்கு, ஆண்களிற்காக நடத்தப்பட்ட ஒரு காய்ஞ்சு போன பூமி. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரு ஆசிரியையோ, ஒரு பெண் ஊழியரோ கிடையாது. கல்லூரி விடுதியில் கூட பெரியபண்டா, சின்னபண்டா என்று சிங்கள தொழிலாளிகள் தான் வேலை செய்தார்கள்.[/size][size=3] இது இப்படி என்றால் ஊரிலே இருந்த பெட்டைகள் ரொம்ப விவரமா இருந்தாளுகள். முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பா…

  11. பூஞ்சிறகு ரிஷபன் திரையரங்கின் சுவர் ஒட்டிய கடைசி இருக்கையில் நான். பக்கத்தில் புஷ்பா. வரிசையாய் இரு தம்பிகள். மணமான அவள் அக்கா, அவள் கணவன். "பாபு.. நீயும் வா" அழைப்பை ஏற்று உடன் வந்தவனுக்கு புஷ்பா பக்கத்தில் அமர்வாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை. எல்லோரும் திரையில் பிம்பங்களின் பொய் சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது என் மீது மெத்தென்ற விரல்கள் படிந்தன. திடுக்கிட்டு திரும்பினேன். புஷ்பாவின் கவனமும் திரையில்தான். விரல்கள் மட்டும் சுதந்திரம் பெற்று என் கை விரல்களுடன் கூட்டணி தேடின. ஜுரம் வந்தபோது கூட இத்தனை நடுக்கம் வந்ததில்லை. தயக்கம், பயம், ஆசை என்று உணர்ச்சிக் கலவையின் மத்தியில் சுத்தமாய் படம் என்ன என்பதே புரிபடாமல் போனது. …

  12. றாகிங் – ஒரு வன்முறை “நான் இனி பல்கலைக் கழகம் போகாமல் இருந்துவிடுகிறேன். அவர்களை தண்டிக்க வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்” சொன்னவன் இப்போ இறந்து போய்விட்டான். பல நூற்றுக் கணக்கான தோப்புக்கரணங்கள் போட்டே செத்துப்போனான் அவன் என்றால், அதிர்ச்சியடையாதார் யார்?. இதற்குப் பெயர் “பகிடிவதை”. “பகிடிப்பட்டவன்” வரப்பிரகாஷ். “எனது மகனின் மரணச் சடங்கில் எந்த மாணவனும் பங்குபற்றக்கூடாது”. தட்டியில் துயரமும் கோபமும் கலந்து எழுதிவைத்தார் விதுரா இன் தந்தை. சிறுநீரகம் சிதைக்கப்பட்டு செத்துப்போனவன் விதுரா. செயற்கைச் சிறுநீரகம் பொருத்தி இயங்கவைக்க செய்யப்பட்ட முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிந்தது. இவன் பலியாகியதும் “பகிடிவதைக்குத்தான்”. இவையெல்லாம் அண…

  13. காயாத கண்ணீர் (சிறுகதை) பதிந்தவர்: ஈழப்பிரியா திங்கள், 18 ஜூலை, 2011 பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்தவ உபகரணங்களையும் இழந்து வன்னிப்போரின் இறுதிநாட்களிலும் இயங்கிக்கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனை அது. அங்கு மண்போட்டால் மண் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து வழிந்தனர். ஆனாலும் அதனை சமாளிக்கும் அளவிற்கு மருத்துவ ஊழியர்களோ, வைத்தியர்களோ.மருந்துகளோ இருக்கவில்லை. பீரங்கி வாயினில் புறா கூண்டினைக்கட்டி குடிபுகுந்து வாழ்வதைப்போலவே மருத்துவமனையின் சூழலும் இருந்தது. மருத்துவமனையின் அமைதி காணாமல்போயிருந்தது. மக்களின் அலறல் ஒலிகள் காதைப்பிய்த்துக்கொண்டிருதன. அந்த சோகத்தணல் பீரங்கி வேட்டுக்களைவிட மோசமாக மனதைத் தாக்கின. அப்போது மருத்துவ உதவியாளர் நிலா சத்திர …

  14. நண்பர்களே, வருடங்கள் பல தாண்டி வீடு வருதல் என்பது ஒரு துன்பகரமான அனுபவம். பிறந்த வீடு மட்டுமே வீடு என எண்ணும் ஒரு உணர்வு என்னுடன் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது. பல வீடுகளைக் கடந்து போக வாழ்க்கை எம்மைத் தண்டிக்கிறது என்பது உண்மைதான். இருப்பினும் இளமையும், பெற்றார் அரவணைப்பும் சகோதரர்துவ வாழ்க்கையும் கனவுகளும் எனச் செறிந்த குழந்தை பருவம் எமது வாழ்வின் தலைநகரம். நாம் எங்கு சென்ற போதும் எம்மைத் தொடருவதும் அதுதான். "நான் பயணிப்பதற்கு ஏறி அமர்ந்த எல்லாத் தொடரூந்து வண்டியுடனுடம் சமாந்தரமாக யாழ்தேவியும் ஓடிக்கொண்டிருக்கிறது" என ஒரு கவிதையில் நான் எழுதியிருக்கிறேன். இவ்வகையில் மிகப்பிந்திய காலங்கடந்து நான் எனது நாட்டுக்கும் வீட்டுக்கும் செல்ல நேர்ந்த அனுபவத்தை தங்களு…

    • 2 replies
    • 1.4k views
  15. பென்னாம் பெரிய டிரக் வண்டி, மெதுவாக வந்து ‘Cul-de-sac’இல் நின்றது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் ‘பெரிசை’க் கணம் பண்ணும் பவ்வியத்தில் நடைபாதையில் ஏறிக்கொண்டார்கள். ஆஸ்திரேய குடியிருப்புக்களின் உள்வீதிகள் சில ‘Cul-de-sac’ எனப்படும் முட்டுச் சந்தாக முடிவடையும். அது அரிசி மூட்டையொன்றின் அடிப்பாகம் போல வளைந்தும் பெருத்தும் காணப்படுவதால் இப்பெயர் வந்திருக்கலாம். இத்தகைய வீதிகளின் அந்தலையில் வாகன நடமாட்டம் குறைவு. இதனால் அப்பகுதியில் வாழும் சிறார்கள், அதனை விளையாட்டு மைதான மாகப் பாவிப்பார்கள். சாரதியின் இருக்கைப் பகுதிக்கும் பின் பெட்டிக்குமிடையில் செங்குத்தாக, வானை எட்டிப்பார்த்து நிமிர்ந்து நிற்கும் இரும்புக் குழாய், புகையை வளையங்களாகக் கக்கிக் கொண்டிருந்தது…

    • 2 replies
    • 1.2k views
  16. போராளிக் கணவனோடு மகளையும் பிரிந்த அவலம் **பிரபாஅன்பு** அக்கா என்ன சொன்னாலும் ஓம் என்று கேட்டு மறுப்பு சொல்லாது கேட்டுக்கொண்டிருப்பவள்தான் நான்,போராட்டமும் அழிஞ்சு போச்சுது கட்டிய கணவனும் இல்லை. சிறு பிள்ளைகளோடு நான் கஸ்ரப்படுகிறேன் என்றுதான் அக்கா இப்படியொரு முடிவெடுத்தா என்பது புரிகிறது.ஆனால் பெண் பிள்ளைகள் இருவரை வைச்சிருக்கிற நான் இப்படிஒரு முடிவெடுத்தது சரியா..? பிழையா என்பதற்கு அப்பால் என் கணவனோடு நான்வாழ்ந்த நினைவுகள் இன்னும் ஈரம் உலராமலே பசுந்தளிராக இருக்கும்போது எப்படி இன்னொரு வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியும்..? உடலும் உள்ளமும் ஒருவனுக்கு என்று மட்டும் நினைத்து வாழ்பவள்தான் நான்,அதுவும் போராடப்போய் மண்ணின் விடிவிற்காக இலட்சியத்தோடு இறுத…

    • 2 replies
    • 1.5k views
  17. சத்திய போதிமரம்!… ( சிறுகதை ) கே.கணேஷ். November 05, 2018 in: கதைகள் சிறப்புச் சிறுகதைகள் (17) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – கே.கணேஷ் எழுதிய ‘சத்திய போதிமரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். அன்று திங்கட்கிழமை ஆனதால் பஸ்ஸில் அதிகமான நெருக்கடி. சந்தை நாளானபடியாலும் ‘கோடு கச்சேரி’ என்று போனவர்கள் நிறைந்திருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பதிரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டிய பஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவது ஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில் இரண்டு பேர்தான் உட்கார வேண்டியது. ஆனால் மூன்று பேரை அமர்த்தி இருந்தான் கண்டக்டர். என…

    • 2 replies
    • 1.2k views
  18. இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல! இணையத்தினூடே, இப் புதிய தொடரைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இந் நேர வணக்கம்; உலகில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட வெள்ளையின மக்களால் ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து எனப் பல தேசங்கள் உருவாக்கப்பட்டன. அங்கிருந்த பூர்வீக குடிகள் பலர் வெள்ளையர்களின் அத்துமீறல்களினால் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் சில பகுதிகளில் வாழ்ந்ததற்கான எச்சங்களும் அழிக்கப்பட்டன. ஆனாலும் பிற்காலத்தில் ஜனநாயகப் பண்பாட்டிற்குள் தம்மை உட்புகுத்திக் கொண்ட வெள்ளையின மக்கள் திருடப்பட்ட சந்ததியின் வரலாறுகள் வருசக் கணக்கில் அழிவுறாது இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து ஆவணப்படுத்தல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சக மனிதர்களையும…

    • 2 replies
    • 1.8k views
  19. மல்லாவி மத்திய கல்லூரியின் மயில்வாகனம் மண்டபம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. கண்களில் நீர் சொரிய உணர்ச்சிப் பெருக்கோடு மக்கள் குழுமியிருந்தனர். தன் மன உணர்வுகள் யாவற்றையும் ஒன்று திரட்டி விடுதலை வீரர்களின் பெருமையினையும், தியாகத்தினையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் சுடரவன். "மானத்தின் திருநாள் கார்த்திகையே! மாவீரத்தின் பெரு நாள் கார்த்திகையே! கார்த்திகை மாதம் கறுப்பு. இந்த கார்த்திகை மாதம் நெருப்பு! கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்! அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்!" என மாவீரர் பெருமை சொல்லும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளை தன் சிறப்புரைக்கு வலுச் சேர்க்கும் வகையில்…

    • 2 replies
    • 1.2k views
  20. ONE WAY – ஷோபாசக்தி அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு இரவில் நான் அலைபேசியை அணைத்து வைக்க மறந்து தூங்கிவிட்டேன். அதிகாலை நான்கு மணிக்கு என்னை அலைபேசி அலறி எழுப்பி,…

  21. சலனம்! - சிறுகதை கமலி பன்னீர்செல்வம், ஓவியம்: பிரேம் டாவின்ஸி மணி ஐந்தைத் தொட மூன்று நிமிடம் இருந்தது. கம்ப்யூட்டர் திரையைச் சுருக்கிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றாள் மேரி. மீண்டும் தன் இருக்கைக்கு வரவும், மணி ஐந்தாகவும் சரியாக இருந்தது. ``மணி அஞ்சாய்டுச்சுனா டான்னு கிளம்பிடுங்க” என்று சற்றே நக்கல் கலந்த தொனியில் மேனேஜர் கோவிந்தராஜ் சொல்ல, மேரி பல்லைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். கோப்புகளில் இல்லாத பிழைகளை அவர் பொறுப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். கோவிந்தராஜுக்கு வயது 63. பிள்ளைகள் இருவரும் மேற்படிப்புக்காக வெளியூரில் தங்கி இருக்க, மனைவி வேறு ஒரு நிறுவனத்தில் உயரதிகாரியாக பணிபுரிகிறார். மனைவி வீடு திரு…

    • 2 replies
    • 2.4k views
  22. ஓத்துழைக்க மறுக்கும் கணணியுடன் மல்லுக்கட்டியபடியே எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்கு ரெலிக்கொம்மை திட்டிக்கொண்டிருந்தேன் இணையத்தொடர்புக்கான வசதிகளில் அவர்கள் குளறுபடிகளுக்கு அவர்கள் இடம் கொடுத்திருந்தனர் அதுவும் வேலையை முடித்து வீடுதிரும்பும் நேரத்தில்! நேரம் அபாயக்கட்டத்தினை தாண்டியிருந்தாலும் அப்படியே விட்டு விட்டுப்போகமுடியாது. அலுவலகத்தில் இரவுப்பணியாளர்கள் போட்டுத்தாக்கி விடுவார்கள்! dOWNLOAD1 dOWNLOAD2

  23. மழை பெய்து வெள்ளம் வந்தால் அதை கடலுக்குள் கொண்டு சேர்ப்பதற்கான வாய்க்கால் எங்கள் ஊரிலே இருந்தது. எங்கள் ஊர் கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த மதவின் கீழாக அந்த வெள்ளவாய்க்கால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கனமழை பெய்தால் அந்த வெள்ளவாய்க்காலில் வெள்ளம் கரைபுரளும். பலவிதமான பொருட்கள் அந்த வெள்ளத்தில் மிதந்து வரும். கூடைகள், பெட்டிகள், பாய்கள் என்று ஏகப்பட்ட பொருட்களுடன் சிலவேளைகளில் கோழிகள், பாம்புகளைக் கூட அந்த வெள்ள ஓட்டத்தில் காணலாம். கோடைகளில் தண்ணீர் இன்றி வாய்க்கால் காய்ந்திருக்கும். உடைந்த போத்தல் துண்டுகள், கற்கள் என பல குப்பைகள் அங்கே குவிந்திருக்கும். வெள்ளவாய்காலின் மேலே இருந்த சந்தி மதவை எப்பொழுது பார்த்தாலும் அழுக்காகவே தெரியும். எங்கள் ஊர் இளம் காளையர்கள் அதாவத…

  24. நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும் சாராது இருத்தலல்ல இலங்கையிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் 150வது இதழில் (நவம்பர் 2012) வெளியாகிய எனது நேர்காணல். மின்னஞ்சல் வழியே நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி. 1. தங்களது படைப்புகளின் ஊடாகவே தங்களது சிந்தனைகளை வாசகர்கள் தெரிந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் தாங்கள் மிகவும் துணிச்சலுடன் கருத்தாடலில் ஈடுபடுபவர். தங்களுடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட தங்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பதாக அறிகின்றோம். ஈழத்து வாசகர்களுக்கு தங்களது எழுத்துலகப்பிரவேசம் பற்றிய தகவல்களை சொல்லுங்கள்? மிகச் சிறிய வயதிலேயே எனக்குத் தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுவி…

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.