Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. நிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அப்பா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்ததை எல்லாம் காதில் சரியாக வாங்கினேனா என்பது, எனக்கே புரியவில்லை. இருந்தும் அவர் நான்கைந்து முறை அழைத்ததாகச் சொன்னார். போக, ``இப்படி உன்னை அடிக்கடி நான் பார்த்துட்டே இருக்கேனேம்மா'' என்றார். ``ஒண்ணும் இல்லைப்பா, சும்மா ஒரு யோசனையில் இருந்துட்டேன்'' என்றபடி சாப்பிட அமர்ந்தேன். வழக்கம்போல அப்பா உப்புமாதான் செய்திருந்தார். `இன்னிக்கும் உப்புமாவாப்பா?' எனக் கொஞ்சம் சிணுங்கட்டாம் போடலாம்போல் இருந்தது. இருந்தும் `பி.எஸ்ஸி கடைசி வருடம் சென்றுகொண்டிருக்கும் பெண், சாப்…

  2. உரத்துக் கேட்கும் மௌனம்: சக்கரவர்த்தி ஓவியம் எஸ். நளீம் மெக்சிக்கோ வளைகுடாவில் உருவாகிய தாழ் அமுக்கம் மூன்று நாட்களுக்கு முன்பு அலபாமா பகுதிக்குள் பெரும் புயலாக மாறிக் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. கரோலினா கரையோரமாக நகரும் டகோடா புயல், நியூயோர்க் மாநிலத்தைக் கடந்து, ஒன்டாரியோவில் எங்கள் பகுதியூடாகச் சற்று வலுவிழந்து வடபுலம் போகப் போகிறது. ரொறன்டோவில் பலத்த காற்றுடன் கூடிய பெருமழைப் பெய்யுமென எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். சிறிதான காற்றுடன் காலையில் இருந்தே தூறல் தூவிக் கொண்டிருக்கிறது. சிகப்பியை எண்ணித்தான் கவலையாக இருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்புதான் கோதுடைத்துக் குஞ்சுகள் வெளிவந்தன. அவள் கூடு சிறு காற்றைத் தாங்கும். டகோடா போன்ற பெரும்புயலை எதிர்த்த…

  3. வாசகர்களுக்கு வணக்கங்கள் கதையும் சம்பவங்களும் முழுமையான கற்பனையே. நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக தெரிந்தாலும் உண்மை சம்பவவங்கள் அல்ல. எங்கேயோ எதையோ முடிச்சு போட்டு வேறு விளக்கம் தேடவோ தவறான கற்பித முயற்சியோ வேண்டாம். ஏனெனில் இது கதை மட்டுமே. மெருகூட்டல் எனப்படும் சீர்படுத்துதல் முறை வரவேற்கப்படுகிறது . கதையின் போக்கு மற்றும் ஆலோசனைகள் எழுதினால் மிக்க மகிழ்ச்சி எவர் மனதெனும் புண்படும் படி கருத்துக்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் . நீக்கி விடுகிறேன் . ஆனால் எந்த கருத்தையும் எவர் மீதேனும் திணிக்க இது கருத்துக்களம் அல்ல . கதைக்களம் உரைநடை மற்றும் கதையின் கோணம் முற்றிலும் மாறுபட்டு இருக்க வாய்ப்புள்ளது . ஏனெனில் இது தமிழ் நாட்டை சேர்ந்த எழுத்துமுறைகள் ( …

  4. அம்மா பசிக்குது... அந்த பிஞ்சு குழந்தையின் பசிக்கான அழுகை சாரதாவின் நெஞ்சை பிழிந்தது. இரண்டு நாளாக தானும் சாப்பிடாமல் பிள்ளைக்கு மட்டும் ஒரு நேரம் கஞ்சி கொடுத்த அந்த திருப்தியும் காணாமல் போய் இருந்தது. அவளிடம் ஒன்றும் இல்லை. சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தை கூட வித்து சாப்பிட்டாச்சு . இனி என்னதான் செய்வாள் அந்த குழந்தை அருணனின் அழுகையை நிறுத்த...? சர்வதேச அரசியலையும், மகிந்தவின் இனவாத போரையும், போராளிகளின் மனஉறுதி தளாராத வீரத்தையும் சொல்லி அருணனுக்கு புரியவைக்க முடியாது. காலையில் இருந்து இது எட்டாவது தடவை அவன் பசிக்காக அழுவது. அவன் அழும்போது இவளும்தான் அழுவாள் மனசுக்குள்ளே. பசிக்காக அழும் தனயனின் குரலை கேட்கவா ஆண்டவா, இன்னும் என் உயிரை எடுக்காமல்…

    • 25 replies
    • 5.3k views
  5. கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்தார் கலியமூர்த்தி. ஒரு வாரம் ஓயாமல் அடித்த டைபாய்டு காய்ச்சல் அவர் உடம்பை உருக்குலைந்துப் போட்டிருந்தது. தலை விண்ணென்று தெறித்தது. காலைக் குளிருக்கு மதிக்கடைக்கு போய் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. எல்லாவற்றையும்விட அடுத்தவாரம் ஆத்தங்கரை நாச்சிக்கு எப்படி நீர் மோர் வார்த்து ஊற்றப்போகிறோம் என்று நினைத்த போது, கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. கலியமூர்த்தியின் சொந்த கிராமத்தில் இருக்கும் ஆத்தங்கரை நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வருடந்தோறும் ஆடித்திருவிழா ஏக விசேஷமாக இருக்கும். ஏழு ஊர் கூடுகிற விழா அது. விழாவிற்கு முந்தின நாள் இரவே பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். நாற்பது வருடமாக அந…

  6. புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று… ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால் நவீனச்சிறுகதை ஆகிவிடும்.” ஆம்,சொற்றொடர்ச்சிக்கல்களை உருவாக்குவதே நவீனச்சிறுகதை என்ற எண்ணம் எழுத்தாளர்களில் ஒருசாராரிடம் வலுவாகவே இருந்தது. உண்மையில் சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட படைப்புகள் உருவாவதற்கான காரணங்கள் பல இருந்தன. ஏராளமான எழுத்தாளர்களுக்கு தமிழில் போதிய பயிற்சி இல்லை. எளிய நேரடிச் சித்தரிப்பை அளிக்கவே திண்டாடக்கூடியவர்கள். திடீரென்று மனம் செயல்படும் சிடுக்குகள…

  7. Started by நவீனன்,

    நேர்வழி! வாசலில் தன் பழைய, டி.வி.எஸ்., 50ஐ நிறுத்தி வீட்டிற்குள் நுழைந்தார், ரங்கநாதன். களைத்துப் போயிருந்த அவர், முகத்தை கழுவி, துணியை மாற்றி, ஹாலில் வந்து அமர்ந்தார். பேன் காற்று அவருக்கு ஆசுவாசம் தர, தன்னையறியாமல் ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டார். மாவட்டக் கல்வித் துறையில் அதிகாரியாக பணியாற்றும் ரங்கநாதன், அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருக்கிறார்; சம்பளத்தை தவிர வேறு எந்த பணத்தையும் வாங்க மாட்டார். அவரிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், விஷயத்தில் நியாயம் இருந்தால் மட்டுமே உதவுவார். அதற்கு எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார். அதேபோல தவறான காரணங்களுக்கு, யாராவது ஆதாயம் தேடி வந்தால், சம்மதிக்க …

  8. வேதாளத்திற்கு சொன்ன கதை - யோ.கர்ணன் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாளம், மீண்டும் அந்த விசாரணைக் குறிப்பைப் புரட்டியபடியிருந்தது. அந்த அறிக்கையிலிருக்கும் ஏதாவது ஒரு சொல் அல்லது வசனம் தனக்குரிய துப்பைத் தருமென்றோ அல்லது அவனது பொய்யை அம்பலப்படுத்துமென்றோ அது நினைத்திருக்க வேண்டும். விக்கிரமாதித்தன் என்ற அவனது பெயரை ஆங்கிலம், சிங்களம், தமிழ் என தனக்குத் தெரிந்த மொழிகளில் எழுத்துக்கூட்டி வாசித்து உறுதி செய்துகொண்டது. விக்கிரமாதித்தன் என்ற பெயரில் எந்தக் குழப்பமும் இல்லை. போதாததற்கு அவனது வாயாலும் பெயரை உச்சரிக்க வைத்தது. பிறகு பிறந்த ஆண்டு, மாதம், திகதி, விலாசம் எதிலும் பிசகில்லை. தனது வலது கையில் தூக்கி வந்த அந்த பெரிய விசாரணை அறிக்கைக்குள்ளிருந்…

    • 15 replies
    • 2.7k views
  9. வடமாகாணத்தின் யாழ் மக்களின் வாழ்வை முன்னிலை படுத்தும் ஒரு விடயம் கல்வி . என்ன கஸ்ட படடாலும் குழந்தை களுக்கு கல்வி மிகவும் முக்கியம் என என்னும் சமுதாயமாக வாழ்ந்தார்கள் .பள்ளிச் சீருடை முதல் கொப்பி பென் பென்சில் என தேவையான அத்தனையும் கடன் பெற்றாவது வாங்கி கொடுத்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் ஐந்துக்கு மேற்படட பிள்ளைகள் இருப்பார்கள். குடும்ப வறுமையிலும் கல்வியை கைவிடுவதில்லை. பாலர் வகுப்பு முதல் உயர் வகுப்பு வரை கிராமத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட் பாடசாலைகளிருக்கும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுபோல சமூகத்தில்,ஆசிரியர்களை கல்விமான்களை மதித்தர்கள். நகருக்கு சற்று தொலைவில் பெண் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் பெண் ஆசிர்யர்களை கொண்ட அந்த பெண்க…

  10. இலங்கையில் நான் இருந்தபோது போலீஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கேள்விப்​பட்டதுகூட இல்லை. காரணம், அங்கே அந்தக் கட்டமைப்புகள் அரிது. ஆனால் ராஜீவ் வழக்கில் சிக்கி, அனுதினமும் போலீஸின் கையில் நான் அனுபவித்த சித்ரவதைகளும், ஏறி இறங்கிய நீதிமன்ற அவஸ்தைகளும் கொஞ்ச நஞ்சம் அல்ல. 'குற்றம் சாட்டுபவர்கள் அதற்குரிய தகுந்த, நம்பகமான உண்மைகளை சாட்சியச் சான்றுகளை முன்வைத்து நிரூபணம் செய்ய வேண்டும்!’ என்பதுதான் உலகம் முழுக்கப் பின்பற்றப்படும் குற்ற நடைமுறைச் சட்டங்களின் அடிப்படைக்கூறு! ஆனால், எமது விடயத்தில் இந்த அதிமுக்கியமான மனித சமூக விழுமியத்தினைப் பாதுகாக்கும் இந்த சட்டக் கோட்பாடு, கருணை இன்றி தவறாகக் கையாளப்பட்டது. சட்டக் கோட்பாடு மீறப்பட்டதற்கும், அதன் குரூர நாக்குகள்…

  11. http://tinyurl.com/7ra25wl ரஞ்சகுமார் -ஒரு முக்கிய எழுத்தாளர். அதிகம் எழுதியதில்லை. மேலேயுள்ளதுதான் நான் அறிந்த ஒரே தொகுப்பு. கதைகளைக் copy/paste செய்ய முடியவில்லை காரணம்: கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். ----------------------------- முழுக்க வாசிக்க நேரம் இல்லாவிடின் வாசிக்கவும் "கோசலை"

  12. “ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான். “உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி, “சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்…

  13. [size=4]தமிழனும் நோ இங்கிலீசும் .....................[/size] [size=4] இலங்கையின் வடபகுதியின் விவசாயக் கிராமத்தில் இருந்து அண்மையில் கனடா நாட்டுக்கு குடும்ப ஒன்றிணைவின் மூலம் வந்திருந்தார்கள் திரு தமிழனும் திருமதி தமிழனும ... வந்து மூன்று மாதங்கள் தான் இருக்கும் . அவர்களது மகள் வழிப் பேரப்பிள்ளைகளுடன் பொழுது இனிமையாக் கழிந்தது. ஒரு நாள் மகள் தனது இரு குழந்தைகளையும் நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று இருந்தார். இவர்கள் காலாற நடக்க அந்த தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்றலில் உலாவிக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அறுபதின் இறுதி வயதுகளில் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. திரு தமிழன் முன்னே செல்ல திருமதி பின்னே சென்று கொண்டு இருந்தார். ஒரு (சீயேன்னா )ரக வாகனத்தில் வெள…

  14. அவன் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன்.கிரிக்கட் விளையாட்டு என்றால் அவனுக்கு நிகர் அவனேதான். பாடசாலை முடிந்து வீடு வந்து உணவு உட்கொண்டபின்பு மீண்டும் அதே பாடசலைக்கு விளையாடுவதற்காக சென்றுவிடுவான்.பாடசாலை அவனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்தமையால் மிகவும் வசதியாக இருந்தது .விளையாட்டு ஆசிரியரும் அவனோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்.தேனீர் ,சிற்றூண்டிகள் போன்றவைகளை கொடுப்பான்.ஆசிரியரும் சில விளையாட்டு நுட்பங்களை கற்றுகொடுத்தார். படிப்பில் அவ்வளவு சுட்டி என்று சொல்ல முடியாது.ஆனால் ஆங்கிலத்தில் அவனுக்குத்தான் அதிக புள்ளிகள் கிடைக்கும் அவனது பெற்றோர்களும் ஆங்கிலத்தில்தான் இவனுடன் உரையாடுவார்கள் இவனும் நன்றாகவே ஆங்கிலத்தில் அந்த வயசில் பேசுவான். பாடசாலை கிரிக்கட் அணியில் தெறிவு…

  15. காதல் 2086 பயணி, ஓவியங்கள்: ஸ்யாம் சிவா குடும்பத்து அப்பார்ட் மென்ட்டுக்கும் கௌரி குடும்பத்து அப்பார்ட்மென்ட்டுக்கும் நடுவே இருந்த குறுகிய நடையில் பலர் கூடியிருந்தனர். சிவா அவனது பாட்டியின் முகத்தின் மேல் தலையணையைப் போட்டு மூச்சு நிற்கும்படி அழுத்திப் பிடித்திருந்தான். சிவாவின் வீட்டு முன்னறையில், சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்ட்ரெட்ச்சர் போன்ற படுக்கையில்தான் சிவாவின் பாட்டியைக் கிடத்தியிருந்தார்கள். அவர் மீது கறுப்பு நிறத்தில் ஒரு போர்வை போத்தியிருந்தது. அவளது கைகளும் கால்களும் அதற்காகவே செய்யப்பட்ட பட்டைகளால் கட்டப்பட்டிருந்தன. பாட்டியின் அசைவு நின்றிருந்தது. பாட்டியின் தலை பக்கத்தில் தலையணையைப் பிடித்தபடி சிவா நின்றிருந்தான். கால் பக்கத்த…

  16. Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்….. அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான். ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாத…

    • 22 replies
    • 3.4k views
  17. Started by நிலாமதி,

    லிவிங் டு கெதர் ..............திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல் .படித்ததில் பகிர்ந்தது. கடவுள் என்ற மூட நம்பிக்கையில் உங்கள் காலத்தைவீணடிக்காதீர்கள்.நமக்கெல்லாம் பகுத்தறிவு எதற்கு இருக்கிறது.அதை கொஞ்சமாவது உபயோகப்படுத்திவாழுங்கள் .கடவுளை விட உங்களுக்கு அதிகம் சக்தி கிடைக்கும்...` பலத்த கரகோசத்துடன் பேசி முடித்தான் ஆகாஷ். ஆகாஷ் இன்றையத் தேதியில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவன்.அவனது பகுத்தறிவுக் கொள்கை மற்றும் பின்னவீனத்துவமான எழுத்துக்களில் கிறங்கிப்போய் அவனுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.அவனது புகழ் பெருகக் காரணம் அவனது பேச்சுத் திறனும் எழுத்து நடையும் மட்டுமல்ல.நிஜ வாழ்க்கையில் கூட அவன் பகுத்தறிவுவாதியாக தனக்குப் …

  18. அது ஒரு மீன் பிடிக்கிராமம் எனைய எழுத்தாளர்கள் போல அழகிய மீன்பிடிகிராமம் என்று புகழமாட்டேன்,மீன் மணமும்,காகங்கள் மீன்களின் குடல்களை கொத்தி திண்றுகொண்டிருக்கும்,படகுகள் ,இயந்திர படகுகள் நிறைந்த அந்த கிராமம் .அதில் நானும் வாழ வேண்டிய சூழ்நிலை ,காரணம் அந்த மீன்பிடி வாசிகள் குடிசைகளில் வாழ்ந்து கொண்டு தங்களது கல்லால் கட்டிய வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தார்கள்,எனது உறவுகாரர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்.அவர் கொழும்பில் பணிபுரிந்தாலும் அங்கு வீட்டு வாடகை அதிகம் என்ற படியால் நீர்கொழும்பை தெரிவு செய்தார் ,மற்றும் அங்கு தமிழ் பேசக்கூடியவர்கள் வாழ்ந்தமை .அந்த கிராமத்தில் பெற்றோர்கள் தமிழில் பேசுவார்கள் ஆனால் பிள்ளைகள் சிங்களத்தில் பேசுவார்கள் ,சிங்கள பாடசாலையில் கல்வி கற்…

  19. மின்னல் - இசையும் கதையும் எழுதியவர் - லண்டனிலிருந்து வீ.எஸ்.குமார் தயாரிப்பு - தமிழ்வெப்றேடியோ தமிழ்வெப்றேடியோ.கொம்

  20. "நினைவில் நின்றவள்" நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பரீடசை எழுதிவிட்டு, மறுமொழிக்காக காத்திருந்த காலம் அது. மறுமொழிக்கு பின்புதான் முறையாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.என்றாலும் அந்த இடைவெளி காலத்தை வீணாக்க விரும்பவில்லை. எனவே உயர் வகுப்பு கணித பயிற்சி வகுப்புக்கள் நடத்த தீர்மானித்தேன். அப்படி சேர்ந்தவர்களில் அவளும் ஒருவள். அவள் கொஞ்சம் நவீனமாக, அந்த கால பாணிக்கு ஏற்றவாறு, தன்னை அலங்கரித்தும் அதற்கு பொருத்தமான ஆடையும் அணிந்து வருவாள். கொஞ்சம் பணக்கார குடும்பமும் கூட. நாள் செல்ல செல்ல அவள், கொஞ்சம் கொஞ்சமாக தனிப்பட்ட முறையிலும் என்னுடன் பழக தொடங்கினாள். அந்த நட்பு ஒரு எல்லைக்குள் இருந்தாலும், அதில் ஒரு பிடிப்பு எம்மை அறியாமலே வளர…

  21. நேற்று, எனது அப்பாவின் அழகிய ராட்சசியும் எனது அம்மாவுமாகிய சோதிராணியுடன் பேசிக்கொண்டிருந்தேன் . எங்கள் சம்பானையின் சில பகுதிகளை பதிவிடுகிறேன். ரிங் போகிறது... " ஹலோ சோதி ஹியர்" "நான் சோதின்ட லவ்வரின் மூத்தமகன் கதைக்கிறேன்" சிரிக்கிறார்... "சஞ்சயன் ... தம்பி சாப்பிட்டாச்சா?" "ம்" "என்ன சாப்பாடு" "பாண்" "கறி?" "முட்டை" "வேலைக்கு போறியடா இண்டைக்கு?" "இல்லை" "அப்ப என்ன செய்யப் போறாய்?" " ஒரு தீபாவளி விழாவும், ஒரு partyம் இருக்கிறது அங்கு போய் தண்ணியடிக்க யோசிக்கிறேன்" "டேய், நீ தண்ணியடிப்பியா" "கொஞ்சம், ஏன் தண்ணியடிச்சா என்ன கூடாதோ?" ".." "உங்கட புருசன் அடிக்கேக்க மட்டும் பேசாடமல் இருப்பியள் நாங்கள் அடிச்சா பிரச்சனையே?" "டேய்…

  22. Started by nunavilan,

    பூசணிப்பழம் - விஜயாலயன் பருத்தித்துறைச் சந்தை சதுரமான நாற்சார் கட்டிடத்தில இயங்கிய காலம்.... நாற்சார் கட்டடத்தினுள்ள நடுவில காய்கறிச் சந்தையும், உட்புறமா சுத்திவர பலசரக்கு சாமான்கள் விக்கிற சில்லறைக்கடைகளும், வெளிப்பக்கத்தில மற்றக் கடைகளும், சுத்திவர மூண்டு பக்கமும் விசாலமான ஒரு வழி தார் ரோட்டுகளும், நாலாவது பக்கத்தில பஸ்ராண்டும், மீண்டும் சுத்திவர கடைகளும், அலுவலகங்களும், ஒதுக்கமா மீன்சந்தையும் எண்டு சுத்தமான, அழகான, சிறிய நகரம் பருத்தித்துறை. பருத்தித்துறையில இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடற்கரை ஓரமா 751 ஆம் இலக்க பஸ்களும், வடமராட்சியை ஊடறுத்து 750 ஆம் இலக்க பஸ்களும் எண்டு 10 நிமிசத்திற்கொரு பஸ் வெளிக்கிடும். இன்னும் யாழ்ப்பாணத்திற்குள்ளேயே தாளையடி, காங்கே…

    • 0 replies
    • 1.2k views
  23. கானகி - அகரமுதல்வன் கானகி என்னைப் பத்து மணிக்கெல்லாம் வவுனியா நீதிமன்றத்துக்கு வரச் சொன்னவள். இப்ப அரை மணித்தியாலம் பிந்திட்டுது. நேற்று இரவு பொலிஸ்காரியிட்ட நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் குடுத்து போனில கதைக்கும் போதே பிந்தாமல் வரச் சொன்னவள். நீதிமன்றத்தில விடுதலையான பிறகும் தேவையில்லாமல் நிற்க கூடாது. நான் இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவன், மன்னிச்சுக் கொள்ளும் கானகி. என்னோட தாமதம் உமக்குத் தெரியும் தானே. ஆனால் நான் இண்டைக்கும் கொஞ்சம் முந்தியே வந்து நின்றிருக்கலாம். நீர் என்னைக் கோபிக்க மாட்டீர், ஆனாலும் எனக்கே என் மேல கோபம் வருது. பிள்ளையள் யாரோடையாவது அம்மாக்களோட நில்லும். நான் வந்திடுவன். வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இப்ப தான் இறங்கிறன். இரண்டு நாள…

  24. அப்பாவா இப்படி? கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைத்தொகுப்பு: குடும்பம் என்னோட பெயர் ப்ரியா. வயது பதினெட்டு. பெங்களூர் மவுண்ட்கார்மல் காலேஜ்ல படிக்கிறேன். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரேகுழந்தை. தினமும் காலையில் என்னோட அப்பாதான் என்னை அவரோட கார்ல காலேஜுக்கு கூட்டிகிட்டுப் போவார். என்னை செல்லமா ‘டுப்பி’ன்னு கூப்பிடுவார். நானும் அப்பாவும் பிரண்ட்ஸ் மாதிரிதான் பழகுவோம். எனக்கு அப்பான்னா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அம்மா என்னிடம் ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. ப்ரதோஷம், சங்கஷ்ட சதுர்த்தி, அமாவாசை, ஆடின்னு அடிக்கடி கோவிலுக்குப் போவாங்க. பூஜை, புனஸ்காரம் என்று நேம நிஷ்டைகள் அதிகம். கோபம் வந்தா ஹிஸ்டீரியா வந்தமாதிரி கத்துவாங்க. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.