Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. (கிட்டத்தட்ட முடியக்காத்திருக்கிற எழுதிக்கொண்டிருக்கிற என் நாவலொன்றிலிருந்து சில குறிப்புக்கள் ) ஆபிரிக்கா ஒரு இருண்டகண்டமென்று தனபாலன் வாத்தி படிப்பித்தபோது அந்தக்கண்டத்திலேயே தானும் வந்து இருண்டுகிடக்க வேண்டுமென்று நிமலன் நினைச்சுக்கூடப் பாத்திருக்கமாட்டான். ஆபிரிக்காவில்த்தான் இருக்கிறது என அறிந்தேயிராத ஸ்நேகலில் அவன் வந்து விழுந்து ஒரு வருசமும் சொச்ச மாதங்களுமாகிவிட்டது. ஸ்நேகலை வெளிநாடு என்று இவன் ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டான். வெளிநாடென்றால் சிங்கப்பூர்மாதிரி இருக்கோணும், ஓம் இவன் சிங்கப்பூரிலும் ஆறுமாசம் அடைபட்டுக்கிடைந்த கதையும் உள்ளது. ஸ்நேகலில் வீடென்ற பெயரில் ஒரு மரக்கூட்டுக்கை நிமலனும் இன்னும் பதினாறு பேரும் அடைந்து கிடைந்தார்கள். உண்மையைச் சொ…

  2. Started by கோமகன்,

    கச்சாமி கண்டி நகரத்திலிருந்து வடமேற்காக நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்த புராதன புத்த விகாரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நானும் கெய்லாவும் வெளியே வந்தபோது எங்களையே பார்த்துக்கொண்டு இரண்டு பொலிஸ்காரர்கள் வீதியில் நிற்பதைக் கண்டேன். நானும் கெய்லாவும் செருப்புகளை அணிந்துகொண்டு வீதிக்கு வந்தபோது, வீதியில் சனங்களும் கூடிநின்று எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவொரு மிகச் சிறிய நகரம். புத்த விகாரையைச் சுற்றியே அந்த நகரம் அமைந்திருந்தது. விகாரையின் முன்னால் ஏழெட்டுக் கடைகள் இருந்தன. அந்தப் பொலிஸ்காரர்கள் இருவரும் ஏதோ காரியமாகத்தான் எங்களையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என எனது உள்ளுணர்வு சொல்லியது. வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே அனுமானிக்கும் எ…

  3. பிரபஞ்ச கானம் – மௌனி அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது. அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான். சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்…

  4. சிபாரிசு ‘‘போப்பா, என்னை ரொம்ப ஏமாத்திட்டியே!’’ என்றபடியே வந்தார் நீண்ட நாள் நண்பர் சண்முகம்.‘‘என்னப்பா... வரும்போதே குறை சொல்லிக்கிட்டு வர்றே..?’’ என்றார் ரமணி.‘‘என் உறவினர் பையன் ஒருத்தனை சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு உன்கிட்ட அனுப்பினேன். பார்க்கலாம்னு சொல்லி அனுப்பிட்டியாமே. இதுதான் நீ எனக்குக் கொடுக்குற மரியாதையா?’’ - படபடத்தார் சண்முகம். ‘‘நீ அனுப்பின பையன் எம்.ஏ படிச்சவன், அழகா டிப் டாப்பா இருக்கான், நாகரிகமா டிரஸ் பண்றான். அதெல்லாம் சரி... ஆனா, எனக்கு ஒத்து வர மாட்டானே!’’‘‘எப்படிச் சொல்றே?’’‘‘இன்டர்வியூவுக்கு வந்தவன் நெத்தியில விபூதி, குங்குமம் எதுவும் இல்ல. என் அறை முழுக்க இருந்த படங்களைக் காட்டி, ‘இங்குள்ள சாமி படங்களைப் பத்தி என்ன நினைக்கிறே?’னு…

    • 1 reply
    • 1k views
  5. தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க..... ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்... அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்... வட்டியும் கட்ட மாட்டான்... பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்... கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்... இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல... இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல... சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல... பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்... இதெல்…

  6. காலப்பயணம் காதலை வாழ வைக்குமா? - சயின்ஸ் ஃபிக்‌ஷன் சிறுகதை #LetsLove இப்போது மட்டும் வாழ்வோம்! ஒரு படைப்பு தன்னைத்தானே படைத்துக் கொள்ளுமா? ஒரு கதை தன்னைத்தானே எழுதிக் கொள்ளுமா? ஒரு நிகழ்வு தன்னைத்தானே நிகழ்த்திக் கொள்ளுமா? பிரபஞ்ச இருள் சூழ, முப்பத்து முக்கோடி கோள்கள் சுழல, காலம் மட்டும் தன்னைத்தானே கடத்திக்கொண்டிருக்கிறது! காலந்தானே கடவுள்? அந்த அறையின் ஜன்னல் அரைகுறையாக மூடப்பட்டிருந்தது. வெளியே மண்டி கிடக்கும் இருள், அந்த ஜன்னல் வழியே வெளிச்சத்தைப் போலவே அந்த அறைக்குள் பரவியதா, இல்லை அந்த இருள் அந்த அறைக்குள் முன்னரே இருந்ததா என்பதெல்லாம் அறிவியலாளர…

  7. நான் ரசித்த ஒரு அருமையான பதிவு..விண்வெளியின் அதிசயங்களை ஒரு எழுத்தாளனின் பார்வையில் எங்கள் கண்முன் கொண்டுவந்துதந்திருக்கிறார் இந்தக்கட்டுரையாளர்..எல்லைகளற்ற வானம்போலவே மனிதனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் ஏது...பிரபஞசத்தை பற்றி நான் கேட்டு வாசித்து படித்து அறிந்து கொண்டவைகளால் ஏற்பட்ட பிரமிப்பால் வானவியல் சம்பந்தமான பல அறிவியல் புத்தகங்களை தேடித்தேடி வாங்கி வாசித்துள்ளேன்..ஆனாலும் தமிழ்ச்சுவையோடு தீட்டப்பட்டுள்ள இந்தக்கட்டுரையை வாசித்து முடித்தபொழுது ஒரு தனி சுகம் இருந்தது... வாசித்து முடித்த பொழுது விண்வெளிக்கு ஒரு இலக்கியப் பயணம் போய் வந்தது போன்றதெரு உணர்வு...இதோ உங்களுக்கும் அவரின் அனுமதியுடன் அந்த அநுபவம் கிடைக்கட்டும்... ஒரு எல்லைகளற்ற பயணம்-கை.அறிவழகன் …

  8. எனக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பப்பட்டிருந்தது... கீழ் உள்ள விபரங்களுள்ளவரை யாருக்கும் தெரிந்தால் தகவலை தெரிவித்து விடுங்கள்...வலைபதிவுயூடாக இந்த செய்தியை பார்ப்பவர்கள் சம்பந்த பட்டவர்களை அடையாளம் கண்டு சில நேரம் உதவுவார்கள் என்ற நோக்கி இதை பிரசுரிக்கிறேன் அன்பு உறவுகளே கனடாவில் இருந்து இந்தியாவுக்கு சென்றிருக்கும் திரு திருமதி செல்வதுரை இளையதம்பி ( ஆனந்தலச்மி ) தம்பதியர்களின் Passport மெட்ராஸ் இல் கண்டு எடுக்கப்பட்டுள்ளது . இவர்கள் பளையை சேர்ந்தவர்கள் நல்லுரிலும் இருந்திருக்க வேண்டும் இவர்களை தெரிந்தவர்கள் அவர்களுக்கு அறிவித்து எங்களுடன் தொடர்பு கொள்ளவும் . சிவா 416 493 6117 SIVA RATNASINGAM VERICO The Mortgage Practice SENIOR MORTGAGE CONSULTANT TEL:…

    • 9 replies
    • 2.5k views
  9. கதை சொல்லவா? (06)/ சிறுகதை/ யாழ் சுமந்த சிறுவன்- தீபச்செல்வன்/ திரு தியா காண்டீபன் தீபச்செல்வன் எழுதிய "யாழ் சுமந்த சிறுவன்" சிறுகதை

    • 0 replies
    • 690 views
  10. Started by நவீனன்,

    ஜான்ஸி மலையகம் வாசகத்திற்கு ஏற்பவே சூழவும் மலைகளைக் கொண்டு விளங்கியது. அதிலும் சிறப்பு என்னவென்றால் அம்மலைகள் பார்ப்போர் கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு இன்ப மகிழ்ச்சியையும் அள்ளித்தெளிக்கும் பச்சைப்பசேல என்ற தேயிலைச் செடிகளால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டு இருந்ததுதான். இதனைத் தவிர மரக்கறித் தோட்டங்கள், மெய்சிலிக்கும் நீர்வீழ்ச்சிகள், பனிமூட்டங்கள் என பல வகைப் பண்புகளையும் சிறப்புக்களையும் கொண்ட பண்டாரவளையில் அம்பிட்டிய என்பது ஒரு சிறிய தோட்டக் கிராமம். அதில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்தனர். அதிலும் பெண்கள் தான் பெரும்பான்மையாக இருந்தது. அவர்களின் ந…

  11. புதிய தலைமுறை..... நான் குடியிருக்கும் மாடிப்பகுதியில் எங்கள் வீட்டிற்க்குப் பக்கத்து வீட்டில் புதியதாக ஒரு தமிழ் ஜயர்க் குடும்பம் வந்திருப்பதாக றூமில் இருந்த நண்பர்கள் கதைத்தது கட்டிலில் படுத்திருந்த எனது காதில் விழுந்தது. ஜயர் என்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கு எப்பொழுதும் ஜோசப்பினதும் சுமதியினதும் நினைவுதான் வரும்.ஜோசப்பினது திருமணத்தின்போது என்னைச் சோகமாகப் பார்த்த அவனது பார்வை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.சுமதியைப் பற்றிய கவலை இன்றுவரைக்கும் என் மனதில் ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.எங்கு போகப் போகிறார்கள் பக்கத்து வீட்டில்தானே இருக்கிறார்கள் ஆறுதலாக சந்திக்கும்போது விசாரிப்போம் என்று …

  12. ராங் காலும் ரங்கமணியும் (டெலிபோன் மணி அடிக்கிறது) தங்கமணி : காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன்… ச்சே… ஒரு வேலை செய்ய விடறாங்களா (என முணுமுணுத்தபடி வந்து போன் எடுத்து) ஹெலோ (என்றாள் ஸ்டைலாய்) எதிர்முனையில் ஒரு பெண் : சத்ஸ்ரீஅகால்ஜி தங்கமணி : என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க (ச்சே… இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு என முணுமுணுக்கிறாள்) எதிர்முனை : நை நை தங்கமணி : (ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி) என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல… பிச்சுபுடுவேன் பிச்சு எதிர்முனை : நை நை ஜி… (என அந்த பெண் ஏதோ சொல்ல வருவதற்குள்) தங்கமணி : என்ன நெனச்சுட்டு இருக்க உ…

  13. கர்ப்பப்பை - அனோஜன் பாலகிருஷ்ணன் “இது என்ன?” அமலா சுட்டிய திசையில் மிருதுவான உடலைக் கொண்ட சிலிக்கன் பொம்மை கிடையாக வீழ்ந்திருந்தது. செயற்கையான பிளாஸ்டிக் கேசம் அலையாக கலைந்து அதன் முகத்தை மறைத்தது. அமலாவை நோக்க இயலாமல் என் கண்கள் வளைந்து சரிந்தன. எனக்குள் அவமானத்தை மீறி பயமும் கிளர்ந்ததை உணர்ந்து துணுக்குற்றேன். “இது செக்ஸ் டோல் தானே?” என் நாடியைத் தன் சுட்டு விரலால் நீட்டித் தொட்டு கேட்டாள். அவளின் கைகளை தட்டிவிட்டேன். “சொல்லு” “ஓம்” என் கண்களை வெறித்துப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் விறுவிறுவென்று நடந்து சென்று தன் குளிரங்கியை அணிந்துகொண்டு புறப்பட்டாள். அவளைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான சமாதானத்தையும் என்னால் சொல்ல இயலவில்லை. …

  14. ஸ்டீயரிங் வீல் சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அந்தப் பாதை, வண்டிக்குப் பழகிப்போன ஒன்று. அவள் ஸ்டீயரிங் வீலில் கையை வைத்திருக்கக்கூடத் தேவை இல்லை என்று தோன்றும். தினமும் காலை 7 மணிக்கு அவள் அமர்ந்து, காரேஜ் பொத்தானை அமுக்கி அது திறந்துகொண்டதும், வண்டி சிலிர்த்துக்கொண்டு தன்னிச்சையாகக் கிளம்புவதுபோல இருக்கும். வேடிக்கை... அதற்கும் ஓர் ஆன்மா உண்டு; உணர்வு நிலை உண்டு என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அவள் சோர்ந்திருந்தால், அது வண்டியையும் தொற்றிக்கொள்ளும். லேசில் கிளம்பாது. ஆனால் கிளம்பிவிட்டால், பாதி வழியில் என்றும் நின்றது இல்லை. சரியாக அவள் வீட்டை அடையும் வரை காத்திருக்கும். பிறகு ஆளைவிடு என்பதுபோல பெர…

  15. மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை “சிவா எங்கே இருக்கீங்க?” கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம். “வீட்லதான் சார்” “நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. உங்ககிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.” “இதோ வர்றேன் சார்.” ‘அடடா.. நாம பணக்கஷ்டத்தில் இருக்கோம்னு கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவி செய்ய அனுப்பியிருக்கார்’ என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு ரத்த வெள்ளத்தி…

  16. எச்சரிக்கை!!! பயந்த சுபாவம் உள்ளவர்கள், தயவு செய்து... இதை படிக்க வேண்டாம். கிளிநொச்சி நகரில் உள்ள ஒரு கிராமம்... தென்னந்தோப்புகளும் பாக்கு தோட்டங்களும், மாமர தோட்டங்களும் நிறைந்தபகுதி அது! நிலத்தை ஒட்டிய பகுதியில் வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்துகொண்டு இருந்தது! நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி, அவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை! ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடு களுக்கு புல் அறுப்பதற்காக தென்னந்தோப்புக்கு செல்கிறாள்! அவள்…

    • 24 replies
    • 2.6k views
  17. எதை மாற்ற முடிந்தாலும் அவரவர் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான சம்பவங்களை சுருக்கமாக எழுத நினைக்கின்றேன். 80 களில் யாழ் இந்துவில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் ஓரளவான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டேன்.அப்போது அடுத்து என்ன துறையில் படிப்பைத் தொடர்வது என்று வீட்டில் எல்லோரிடமும் ஒரு ஆதங்கம். காரணம் ஏற்கனவே எனது மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உயர்தரம் கற்றவர்கள் அல்லது கற்றுக் கொண்டு இருப்பவர்கள். மூத்த அக்கா அதிகம் படித்து வைத்தியராக வர நினத்து எல்லாத்தையும் கோட்டை விட்டு விட்டார். 24 மணி நேரமும் புத்தகமும் கையுமாக அலைந்து கடைசியில் நாலு பாடத்திலும் சித்தி அடையவில்லை. சின்னக்கா கலைத்துறையிலும் இரு சகோதரர்கள் வர்த்தகத் த…

  18. ஃபாதியா - சிறுகதை சிவகுமார் முத்தய்யா - ஓவியங்கள்: ஸ்யாம் பாலக்காடு ரயில்வே நிலையத்தில் இறங்கி மூர்த்தி செல்லைப் பார்த்தான். பின்னிரவு மூன்று மணியைக் கடந்திருந்தது. பயணிகள் சிலர் அங்கங்கே இருக்கும் சிமென்ட் பெஞ்சுகளில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் குடும்பத்துடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஸ்டேசனை விட்டு இறங்கி எதிரேயிருந்த டீக்கடையில் ஒரு சாயா குடித்தான். மீண்டும் ஸ்டேசன் வந்து கடைசியில் இருந்த வடக்குப் பார்த்த இருக்கையில் அமர்ந்தான். குழப்பம், பதற்றம், பயம் மாறி மாறி ஆட்கொண்டன. முடிவு எடுக்க முடியாத ஒரு மனக் குலைவு. இவற்றையெல்லாம் தாண்டி ஃபாதியா ஒரு பறவையைப் போல தோளில் அமர்ந்தாள். மூர்த்தி வேங்கரையில் நின்று திரும்பி…

  19. கூகிள் மப்பும் எனது கனவுகளும்....... ஒரு பதினாறு வருடங்களிருக்கும், எனது தாயகம் என்று மனது பதிந்த வீ திகளை இறுதியாகத் தரிசித்து. அயல் தேசம் வந்தபின்னும் , தாயகம் பற்றிக் கனவுகள் கண்டு, வேர் கொள்ளா ஒரு ஊரில் அடைக்கலமாகி, தமிழ் நெ ட்டும் , புதினமும் எம்வீரர் செயல் கூற, வெல்வோம் இனியென்று விறுமாப்பாய் இருந்துவிட் டேன். 2009 இல் பேரிடிச் செய்தியாய் முள்ளிவாய்க்கால் வீழ்ந்திட, தாயகம் பற்றிய கனவுகளைக் கலைத்தேன். ஆக்கிரமிக்கப்படட என் தேசமும், அடிமை வாழ்வில் என் உறவுகளும் எனக்கு வேண்டாச் செய்தியாக மனதை இறுக்கிக் கொண்டேன் . எதிரியிடம் தாயகம் கிடைக்க, மனம் புரண்டு அழுதது,ஏதாவது செய்ய வேண்டும் என்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்கிறார்கள், மகிழ்ச்சியாய்ப் போனேன…

  20. ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் 1. மீண்டும் சிவகாமியின் சபதம் கே.என்.சிவராமன் இந்த இடம்தான். இங்குதான் தன்னைச் சந்திக்க ஒரு நபர் வருவார் என்றும் அவர் சொற்படி நடக்கும்படியும் புலவர் தண்டி கட்டளையிட்டிருந்தார். அதை ஏற்றே மல்லை கடற்கரைக்கு கரிகாலனும் நடந்து வந்திருந்தான். ஆனால், எப்போதும் மனதை ஆற்றுப்படுத்தும் அந்த இடம் அன்று ஏனோ அலைக்கழித்தது. நிச்சயம் சந்திக்கப்போகும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வியின் அழுத்தத்தால் இந்த உணர்வு விளையவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கையே அது. என்னவாக இருக்கும்? மேடான பகுதியில் அழுத்தமாகக் கால்களை ஊன்றியபடி புருவங்கள் முடிச்சிட சுற்றும்முற்றும் அலசத் தொடங்கினான். வைகாசி மாத சுக்கில ப…

  21. நானும் என் ஈழமும் - 4 தினமும் ஏதோ ஒரு செயல், ஒரு பொருள், ஒரு மனிதர்...என் நினைவுகளை ஊருக்கு கொண்டு செல்ல தவறுவதில்லை. எதிலும் சொந்த ஊரை காண்பது எம்மவருக்கு புதிதல்லவே. "சொர்க்கமே வந்தாலும் அது நம்மூரை போல வருமா" என்ற பாடலை கானாபிரபா அண்ணாவே எத்தனை தடவை வானொலியில் போட்டிருப்பார். அடுத்த மாதம், என் பல்கலைக்கழக நண்பன் ஒருவருக்கு திருமணம். அதே நண்பன் 3 வருடங்களுக்கு முன்னர் வந்த காதலர் தினத்திற்கு எனக்கு தந்த வாழ்த்து மடலை பார்த்தே ஆக வேண்டும் என அவரின் வருங்கால துணைவியார்ஆசைப்பட்டார். என் விலை மதிக்க முடியாத கடிதப்பெட்டியை எடுத்த பொழுது கண்ணில்பட்ட ஒரு மடல்..... இந்த பாகத்தை எழுத தூண்டியது! --------------------------------------------------------…

  22. Started by nunavilan,

    ஆறாங்குழி கதைகள் இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் பெரிய மீன்பிடிக் கப்பலில் வேலை செய்கிறேன். கப்பலோடு சமுத்திரத்திற்குள் இறங்கினால், ஒரு வாரம் முழுவதும் சமுத்திரத்திற்குள்ளேயே இருந்து, தொன் கணக்கில் …

    • 6 replies
    • 1.6k views
  23. கண்ணன் காட்டிய வழி ஆர் வி சுப்பிரமணியன் துச்சாதனன் கீழ்ஸ்தாயியில் உறுமினான். “நீ சொல்வது பொய்யாக – வேண்டாம் தவறாக இருந்தால் உன் தலை இருக்காது”. அனுகூலன் நிமிர்ந்து துச்சாதனனை நோக்கினான். அவனது கண்கள் கலங்கி இருந்தன. “தங்களிடம் நாற்பது ஆண்டுகளாக அணுக்க ஒற்றனாக பணி புரிகிறேன். இது வரை நான் தங்கள் வரை கொண்டு வந்த எந்த செய்தியும் தவறாக இருந்ததுண்டா?” என்று தழுதழுத்த குரலில் வினவினான். “ஆம் அதனால்தான் உன்னிடம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறேன். உன் தலை இன்னும் உடலில் இருக்கிறது. நீ அலர் உரைப்பது யாரைப் பற்றி? கர்ணன் என் தமையனுக்கு அடுத்த நிலையில் உள்ளவன், என் தமையனுக்கு மட்டுமல்ல எனக்கும் உயிர் நண்பன்!” என்று மீண்டும் கடுமையான குரலில் சொன்னான். ஆனால் தன் குரல் அனுகூலனைத் தவிர …

  24. இன்னுமொரு வரலாற்று தொடர் இப்பிடியான தொடர்களுக்கு இங்கு ஆதரவு கிடைப்பது மிக குறைவு எனினும் நான் படிப்பதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்துடன் இதனையும் இணைக்க தொடங்குகிறேன்....... எங்கே புதியதொடர் ஒன்றையும் காணலையே என அன்புடன் விசாரித்த ராஜவன்னியன் அண்ணாவுக்கும் மற்றும் பழையதொடர்களுக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கிய புன்கையூரான் அண்ணா ஈஸன் அண்ணா தமிழ் சிறி அண்ணா ரதி அக்கா சுபேஷ் சுண்டல் துளசி.. ஆகியோருக்கு நன்றியுடனும்..................... ******************************************************************************************************* Becoming Che என்னும் நூலை எழுதிய கார்லோஸ் ‘கலிகா’ ஃபெரர் (Carlos ‘Calica’ Ferrer) முதல் முத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.