கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள். உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான் 31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல். அவர், எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள…
-
- 5 replies
- 995 views
-
-
[size=3] ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.[/size] [size=3] அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.[/size][size=3] [/size][size=3] இந்தக் கடுமையான சட்டத்துக்கு ப…
-
- 0 replies
- 995 views
-
-
அசுரன் மைசூரில் இருந்து கிளம்பும்போதே முதல் வகுப்புப் பெட்டியில் மூன்று பேர்களுடன் காற்றுதான் பிரயாணம் செய்தது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் விடுவது பற்றி எழுந்த உணர்ச்சிப் பிழம்பு கார்களையும், பஸ்களையும், கடைகளையும் எரித்துத் தள்ளி விடும் தீவிரத்தில் இருந்ததுதான் காலி வண்டிக்குக் காரணம். சுமாராக நடந்த அறிமுகப் பேச்சில் மற்ற இருவரும் சகோதரர்களென்றும் அவர்கள் பெங்களூரில் இறங்கி விடுவார்களென்றும் தெரிந்தது. சென்னை வரைக்கும் காலி வண்டியில் ஒற்றை ஆளாகப் பிரயாணம் செய்யும் பாக்கியம் பெற்றவன் என்பதை விட பயம்தான் அதை மீறி நின்றது. பெங்களூரில் கொஞ்சம் கூட்டம் சேர்ந்து கொண்டால் நன்றாயிருக்கும் என்று மனது அடித்த…
-
- 0 replies
- 995 views
-
-
' காற்றோடு போன கனவுகள்’ விமர்சன உரையில் கவிஞர் கு.கிலேசன் நாவிதன்வெளி இளம் எழுத்தாளர் வை.கே.ராஜீ எழுதிய காற்றோடு போன கனவுகள் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா நாவிதன்வெளியில் கவிமணி கௌரிதாசன் தலைமையில் நடைபெற்றது. நூல் அறிமுக உரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.விஜயராஜாவும் நூல் விமர்சன உரையை கவிஞர் கு.கிலசனும் நூல் ஆய்வுரையினை கலைஞர் ஏ.ஓ.இ.அனல் ஆகியோரும் நிகழ்த்தினார்கள். நூல் விமர்சன உரை நிகழ்த்திய கவிஞர் கு.கிலேசன் தமதுரையில்: சிறுகதை என்பது ஒரு சம்பவத்தையோ ஒரு கருத்தையோ தெளிவாக ஒருவர் சம்பந்தப்பட்டோ அல்லது ஒரு கூட்டத்துடன் தொடர்புபடுத்தியோ முழுமையாக் கூறுதலே அன்றி நாவலின் ஒரு பகுதியைத் தருதல் சிறுகதையல்ல. காற்றோடு போன கனவுகள் ஒரு காதல் ஊற்றாக மலர்ந…
-
- 0 replies
- 994 views
-
-
*******என்னுடைய இந்தச் சிறுகதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள் http://www.panippookkal.com/ithazh/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/ இதழின் இன்றைய பதிப்பில் வெளிவந்துள்ளது. ***** விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள். “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்” “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…” “ரெண்டு நாளோ… அப்ப இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை …
-
- 0 replies
- 993 views
-
-
சமரசம் மலர்ஸ் by நெற்கொழு தாசன் July 31, 2022 என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை. குரல் கொட்டாவியோடு கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய புன்னகையோடு திருப்திப்பட்டுக்கொண்டார். இருந்தபடியே தோளில் கொழுவியிருந்த பைக்குள் கையைவிட்டு யாருக்கும் தெரியாமல் விரல்களை மடித்து எண்ணிப் பார்த்தார். திரும்பி எங்கோ பராக்கு பார்ப்பவர் போலப் பாவனை செய்தபடி மீண்டும் ஒருமுறை மனதால் கணக்கிட்டார். மெதுவாகத் தலையாட்டி இதுவரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. ஆள் வந்தவுடன் காசைக் கொடுத்துவிட்டு …
-
- 3 replies
- 993 views
-
-
வெந்துருதி தி(த்)றைஸ் – ( சிறுகதை ) – கோமகன். முடிவு. ஹொப்பித்தால் ஃவிஷா(L’hôpital Bichat): அந்த ஆஸ்பத்திரியின் அவசரப்பிரிவு பலரின் அழுகுரலில் திணறியது. மதுமிதா செய்வதறியாது அழுதவாறே நின்றிருந்தாள். இந்த அல்லோல கல்லோலத்திற்குள்ளும் ஆஸ்பத்திரியின் அந்தப்பிணவறையில் அமைதியின் ஆட்சி அள்ளித்தெளிந்திருந்தது. அந்த நீண்ட அறையின் மாபிள் பதித்த தரையின் மேல் பலவகை அடுக்குகளில் லாச்சிகள் இருந்தன. லாச்சிகளின் முனையில் இருந்து மைனஸ் 20பாகை உறை குளிரின் வெண்புகை கசிந்து கொண்டிருந்தது. சிறிது மணித்துளிகளுக்கு முன்பு ஆயிஷா, சுலைமான், டோலி, ரத்தினசிங்கம் என்ற ரட்ணா என்று நால்வராக இருந்த நாங்கள் இப்பொழுது ‘அவைகளாக’ இலக்கங்களுடன் லாச்சிகளில் உறைந்து போயிருந்தோம். இந்த இலக…
-
- 0 replies
- 993 views
-
-
தாழ்ப்பாள்களின் அவசியம் அ.முத்துலிங்கம் அம்மாவுக்குக் கனடாவில் நம்ப முடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்குப் பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்குப் பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்குப் பூட்டு இருந்தது. பெட்டகத்துக்குப் பூட்டு. வாசல் கதவுக்குப் பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாகப் பூட்டு மயம். ஆனால் கனடாவில் குளிர்சாதனப் பெட்டிக்குக்கூடப் பூட்டு இல்லாதது மன்னிக்க முடியாத குற்றமாக அம்மாவுக்குப் பட்டது. எல்லாக் குளிர்சாதனப் பெட்டிகளும் பூட்டோடு வரும் என்றுதான் அவர் நினைத்தார். கொழும்பில் இருந்தபோது அவர் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே வர…
-
- 1 reply
- 991 views
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 10) நன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் என்கிற காரணத்துக்காகவே நளினி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். சம்பவ இடத்தில் நளினி எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்தாலே, இது அவரைச் சிக்கவைப்பதற்காகவே புனையப்பட்ட கதை என்பது புலனாகும். அரசுத் தரப்பு ஆவணத்தில் 77-வது பக்கத்தில், ‘சிவராசன் தமிழ்நாட்டுக்காரர் போல் பேசக்கூடிய ஆற்றல்கொண்டவர்’ என எழுதப்பட்டு உள்ளது. அவரே நன்கு தமிழ் பேசும்போது, மொழிப் பிரச்சினைக்காக ஏன் நளினியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? அரசுத் தரப்பு சான்றுகளின்படி, குற்றமுறு சதியின் உறுப்பினர் ஹரிபாபுவும் (பத்திரிகைப் புகைப்பட…
-
- 0 replies
- 991 views
-
-
-
- 2 replies
- 991 views
-
-
வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை ! திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள் . ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. "நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்கா…
-
- 0 replies
- 991 views
-
-
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்! கம்பார்ட்மென்ட் முழுக்க நிலக்கடலைத் தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்குப் பீலியும் தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொருத்து கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம். டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி... திர்னெலி எப்பொ வரும்’ எனக் கடுப்பைக் கிளப்பியிருப்பார். சீட்டு நம்பர், பெர்த் நம்பர் என இரண்டு எண்கள் எல்லா ரயிகளிலும் இருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்று பொருந்தினால் போதும் என்பது பயணிப்பவர்களின் பொது அபிப்பிராயம். இதுதான் என் பெர்த் என வாதிடும் எவரும் வென்ற தில்லை. ‘‘ரெண்டு நம்பர் போட்டு வெச்சவன்ட போயிக் கேளுலெ... எங்கிட்ட ஏன் எழவு எடு…
-
- 1 reply
- 990 views
-
-
பொழுது விடிந்து நெடு நேரமாகியும் மலரினால் படுக்கையை விட்டு எழும்ப முடியாதபடி மனம்மிக சோர்வாக இருந்தது. சூரியக்கதிர்கள் பூமியைச் சூடாக்க ஆரம்பித்த வேளையது. அறையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தவள் மெல்ல பார்வைத் திருப்பி தனதருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்வையால் வருடினாள். தம்மை மறந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை பார்க்கையில் கணவன் நினைவு எழுந்து கண்களில் நீர் படலமிட்டது. மனம் விரும்பி வாழ்ந்தவனை இழந்து, வன்னியிலிருந்து தப்பிப் பிழைத்து பிள்ளைகளுடன் வந்தவளை ஊர் மட்டுமல்ல உறவுகளே ஒதுக்கித்தான் வைத்தன. பெற்றோரை மீறி தன் வாழ்வைத் தீர்மானித்தவள் என்ற காரணம் மட்டுமல்லாது, அtவளுடன் கதைத்தாலே தமக்கு ஆபத்து என்ற காரணமும் கற்பித்து அவளை ஒதுக்கியே வைத்தன…
-
- 7 replies
- 989 views
-
-
பழைய பறணிலிருந்து (மாவீரர் வாரத்தையொட்டிய நினைவு தாங்கிய சிறுகதை) "எதிர்பார்ப்பு" இசையும் கதையும். " அம்மாளைக்கும்பிடுறான்கள்" சிறுகதைத் தொகுப்பிலிருந்து 8வருடம் முதல் இசையும் கதையுமானது. எதிர்பார்ப்பு இசையும் கதையும்
-
- 0 replies
- 988 views
-
-
இன்னும் சரியாக மூன்று மணித்தியாலங்களில் பூமி தூள் தூளாக வெடித்து அழியப்போகிறது என்று காலை ஐந்து மணிக்கு எழும்பி சுருட்டை பற்றவைக்கும் கந்தசாமிக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. கந்தசாமிக்கென்ன? நல்லூர் கந்தசாமிக்கு கூட தெரியாது. அவன் கோயிலுக்கு மேலாக மெல்ல மெல்ல உதித்துக்கொண்டு இருக்கும் சூரியனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று மணிநேரமே அவகாசம் இருந்தாலும் கந்தசாமி பற்றி தெரியாமல் கலக்ஸி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஸோ இரத்தின சுருக்கம்! யாழ்ப்பாணம், வைமன் றோட்டு சந்தியில் இருக்கும் பாரதியார் சிலையிலிருந்து கந்தர்மடம் நோக்கி போகும் அரசடி வீதியில், ஒரு ஐந்து ஆறு வீடுகள் தள்ளிப்போனால் ஒரு இராணுவ முகாம் வரும். அந்த முகாமுக்கு பக்கத்து வீட்டில் தான் கந்தசாமி வசிக்கிறார். …
-
- 4 replies
- 987 views
-
-
https://www.youtube.com/watch?v=SHI_aTAVwGI மனதை தொட்ட பதிவு . நேரம் உள்ள போது பார்க்கவும்
-
-
- 3 replies
- 987 views
- 1 follower
-
-
ஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை ஊரே அந்த வீட்டின் முன் கூடி யிருந்தது. பூங்கோதைக் கும்கூட அவள் கணவன் மேல் சந்தேகம் இருக்கவே செய்தது. கோபமாய் அமர்ந்திருந்த சின்னராசுவை நெருங்கிய அவள், “இப்போ ஊரே கூடிவந்து நிக்குது. இவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்றாள். அதற்கு சின்னராசு, “இங்க பாரு…. நான் முன்ன மாதிரி எல்லாம் இல்ல. திருடிப் பொழைக்கிறதை விட்டுட்டேன். கட்டுன பொண்டாட்டி, நீயே என்னை நம்பலை... அவங்களால என்ன பண்ணமுடியுமோ அதை பண்ணிக்கச் சொல்லு” என்றான் முடிவாக. அவன் பேசியதைக் கேட்ட ஊராரும் போலீஸில் புகார் கொடுப்பதாய் சொன்னார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் காவல்துறை ஜீப் புழுதியைக் கிளப்பிவி…
-
- 0 replies
- 987 views
-
-
கடல் யோசித்தது…! - செ.டானியல் ஜீவா ‘எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கென வாழாத் தலைவன்!’ என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான ஒன்று. இந்தப் பாடலின் வரிகளை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது எடுத்து விடுவேன். அதை நான் பாடும் போதெல்லாம் அவன் பதிலுக்கு என்னை கேலியும் கிண்டலும் செய்வதோடு, என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டவும் செய்வான். குமாருக்கு நாற்பத்திரண்டு வயதிருக்கும். பொது நிறமும், நல்ல உடல் கட்டோடு உயரமாகவும் இருப்பான். ரொம்பவும் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக்கொள்வான். நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும்படியாக சேர்ட்டின் மேற்பக்கப் பட்டனைத் திறந்து விட்டபடியே எப்போதும் வலம் …
-
- 0 replies
- 987 views
-
-
பூதக்கண்ணாடி ஜே.பி. சாணக்யா ஓவியங்கள்: அனந்தபத்மநாபன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு …
-
- 2 replies
- 986 views
-
-
அன்று போராளி இன்று போர்க்குற்றவாளி ? "இறுதியுத்தத்தின் போது தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாக புலிகள் பயன்படுத்தினார்கள். கட்டாய ஆட்சேர்ப்பை நடாத்தினார்கள். கட்டாயமாக களத்தில் கொலை செய்தார்கள் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்தினார்கள்.இப்படியான மனிதகுலத்துக்கு எதிரான காரியங்களை புலிகள் செய்தார்கள்.அதனால் அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அந்த அமைப்பில் இருந்ததற்காக இவை எதிலும் அவன் சம்மந்தப்பட்டது கூறப்பட்ட குற்றங்கள் ஒன்றுகூட நிரூபிக்கப்படாதிருந்தும் அந்த இளைஞன் ஜனநாயகத்தின் வாசலான நாடு ஒன்றில் அகதித்தஞ்சம் கோரியபோது போர்க்குற்றவாளியாக்கப்பட்டு அகதியாக ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த நாட்டில் இவனுக்கு மருத்துவம் இல்லை , உணவுக்கான உதவியில்லை , தொழில் செய்ய மு…
-
- 8 replies
- 986 views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் தாய்+அம்மா தாயம்மா செத்துட்டா. ஊரே திர…
-
- 0 replies
- 985 views
-
-
முன்னர் அவன் நாமம் கேட்டாள் May 31, 2020 காலம் செல்வம் பெயர் என்ன..? பெயர் தானே எண்டிட்டு எங்கட பெயரைச் சும்மா சொல்லிப்போட்டு போகேலாது. அகதியாய் வெளிநாட்டிக்கு வந்த பிறகு, வெளிநாட்டு அதிகாரிகள் எங்கடை பெயரை சொல்லத் தெரியாமல் நக்கலும் கலந்து பிழையாய்ச் சொல்ல, எங்கட தாழ்வுச் சிக்கல் அங்கேயே தொடங்கிடும். இத்தனைக்கும் அவங்கடை பெயரைப் பார்த்தால் ஸ்ரோன், பிறவுன். பிளாக், வூட் என்ற மாதிரி மனிசருக்கு ஏத்த பெயரா இருக்காது. கல், கறுப்பு, மரம் எண்டு தமிழில கூப்பிட்டா எப்பிடியிருக்கும்? பெயராலையும் சண்டை வரும் எண்டு நான் அறிஞ்சது லோறன்சின்ர இரண்டு தம்பிமாரும் “பனியன் “கிறிஸ்தோப்பனை அடிச்ச நேரத்திலைதான். இந்தப் பிரச்சனை கோவில் சபை வரைக்கும் போச்சுது. த…
-
- 0 replies
- 983 views
-
-
சுய தண்டனை அவளை நான் இறுதியாகப் பார்த்து ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இருக்கலாம். எனது நினைவுகளில் நான் அவள் குறித்து பதித்து வைத்திருந்த கோலங்களையெல்லாம் கண்ணீர்கொண்டு அழித்து முழுவதுமாகத் துடைத்து வைத்திருந்தாள். வசீகரமான புன்னகை, கவிதைபாடும் கண்கள், மழலைகளின் மொழிபேசும் அவளது இனிமையான குரல் என்று எல்லாமுமே அவளிடமிருந்து முற்றாக மறைந்துபோயிருக்க என் முன்னே அவள் நின்றிருந்தாள். கண்கள் தொலைவில் இல்லாதவொன்றை வெறித்துப் பார்த்திருக்க எனது பேச்சைக் கேட்பதுபோல் ஏப்போதாவது ஓறிருமுரை தலையை மெதுவாக அசைப்பதுடன் எனது சம்பாஷணையில் அவளது பங்களிப்பு முற்றுப்பெற்றுவிடுகிறது. ஆறு வருடங்களுக்கு முன்னர் அவளிடமிருந்த ஆசைகள், நம்பிக்கைகள், எதிர்…
-
- 8 replies
- 983 views
-
-
[size=4]பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான். காரணம், எங்கள் கூட்டத்திலிருந்த ஒருவன் கூடப் படித்தவளொருத்தியைக் காதலித்திருந்தான். எங்கள் மூவரையும் துணைக்கழைத்துச் சென்று, அவளது சைக்கிள்க் கூடைக்குள் காதல்க் கடிதத்தை போட்டுவிட்டான். அவள் வாத்தியாரது மருமகள் முறையானவள். வாத்தியார் இப்படித் தான். சாதாரணமாக திட்டமாட்டார். நல்ல உவமான உவமேயங்களுடன்தான் திட்டுவார். தமிழ் படிப்பித்த நடராசா வாத்தியார்கூட பிச்சை வாங்க வேண்டும். வகுப்பில் தூங்கி விழுபவனை நிற்க வைத்து ‘இஞ்ச பாரும் ஐசே கும்பகர்ணன்’ என செம்மொழியிலான திட்டலை ஆரம்பிப்பார். சற…
-
- 3 replies
- 982 views
-
-
பிரியாவின் கன்னத்தில் பளார்...பளார் என்று அறைகிறார் அவள் அம்மா லட்சுமி ஏண்டி இப்படி குத்துக்கல்லாய் நிக்கிறாய் எத்தனை மாப்பிள்ளையை பார்த்தாச்சு வேண்டாம் என்றாய் இந்தப்பொடியன் நல்ல பொடியனடி நல்ல குணம்,நடை அதோடை சீதனம் ஒன்றும் வேண்டாமாம் நல்ல சம்பந்தம் வரும்போது ஏனடி மறுக்கிறாய்? நீ கட்டினால் தானேடி அவள் இளையவளையும் கட்டிக்கொடுக்கலாம். அப்பா இருந்தாலும் பரவாயில்லை அவரும் போய்ச் சேர்ந்திட்டார் நானும் சாகிறதுக்குள்ளை உங்களைக் கரையேத்திட்டுப் போவம் என்றால் ஏனடடி அடம்பிடிக்கிறாய்? உன் மனசிலை யாராவது காதலிக்கிறியா அதையாவது சொல்லேண்டி? கண்ணீரைத்துடைத்தவாறே தன் கதையை சொல்கிறாள் பிரியா... பிரியா உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது அதே கலைப்பிரிவில் தான் மயூரனும் படி…
-
- 0 replies
- 982 views
-